உளப்பூர்வமாக அமல்கள் செய்வோம்!
உயரிய நன்மைகளை
பெறுவோம்!!!
தியாகத்திருநாள் நிகழ்வின் நாயகரான இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்து, குர்பானிக்கடமையை இனிதே நிறைவு செய்து, இனியும் நிறைவேற்றக் காத்திருக்கும் நாம் அய்யாமுத்தஷ்ரீக் உடைய புனிதம் நிறைந்த நாட்களில், ஜும்ஆ உடைய நாளில் வீற்றிருக்கின்றோம்.
தியாகத்திருநாள் மூலம் நாம் பெற்ற மகத்தான சிந்தனைகளை, நம் வாழ்வில் எல்லா காலத்திலும் கடைபிடிக்க வேண்டிய கடமையும், கடப்பாடும் நமக்கு இருக்கிறது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடைபிடித்து வாழும் நல்ல தௌஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
முதலாவதாக, தொழுகையோ, குர்பானியோ,
வாழ்வதோ, இறப்பதோ எதுவாக
இருந்தாலும் படைத்த ரப்புல்
ஆலமீனுக்காக இருக்க வேண்டும்
என்கிற மகத்தான சிந்தனையை
நாம் பெற்றிருக்கின்றோம்.
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ
الْعَالَمِينَ
“நிச்சயமாக! என்னுடைய
தொழுகையும், என்னுடைய (சகல)
வணக்கமும், என்னுடைய வாழ்வும்,
என்னுடைய மரணமும் அகிலத்தாரின்
இரட்சகனாகிய அல்லாஹ்விற்கே உரியனவாகும்
என்று நீர் கூறுவீராக!”. ( அல்குர்ஆன்: 6: 162 )
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
“(நபியே!) உமது ரப்பிற்காக தொழுது, அவனுக்காக குர்பானி பிராணியை அறுப்பீராக!”. ( அல்குர்ஆன்: 108: 2 )
இரண்டாவதாக, தன்னிடம் இருப்பதை கொடுப்பது தர்மம், தனக்கு மிஞ்சியதை கொடுப்பது தானம், தனக்கு உரியதை கொடுப்பது தயாளம், தன்னையே கொடுப்பது தியாகம்.
அந்த தியாகத்தை
மேற்கொள்ள ஒரு இறைநம்பிக்கையாளன் எப்போதும் முன்னணியில்
இருக்க வேண்டும். எது
இடையில் வந்து நின்றாலும்
அதை புறந்தள்ள ஆயத்தமாக
இருக்க வேண்டும் என்கிற
மகத்தான சிந்தனையை நாம்
பெற்றிருக்கின்றோம்.
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ
وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ
تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ
وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ
بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
“(நபியே!) நீர் கூறுவீராக உங்களுடைய பெற்றோரும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைகளும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் சம்பாதித்து (சேமித்து) வைத்திருக்கும் செல்வமும், எதனுடைய நஷ்டத்தை நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அத்தகைய (உங்கள்) வியாபாரமும், எதனை நீங்கள் திருப்தி கொள்கின்றீர்களோ அத்தகைய (உங்களுடைய) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவனது வழியில் தியாகம் செய்வதையும் விட உங்களுக்கு மிக்க விருப்பமானதாக இருந்தால் அல்லாஹ் அவனுடைய வேதனையைக் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள். அல்லாஹ் பாவிகளான கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான்”. ( அல் குர்ஆன்: 9: 24 )
மூன்றாவதாக, எந்த தியாகம்
செய்தாலும் உளப்பூர்வமாக, உண்மையாக
செய்ய வேண்டும் என்கிற
மகத்தான சிந்தனையையும் நாம்
பெற்றிருக்கின்றோம்.
وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ
“(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (தியாகம்) அறப்போர் செய்ய வேண்டிய முறைப்படி (தியாகம்) அறப்போர் செய்யுங்கள்”. (அல் குர்ஆன்: 22: 78 )
பொதுவாக, இறைநம்பிக்கை
கொண்டு எந்த நல்லறங்கள்
செய்தாலும் அதற்கான பிரதிபலனை,
நன்மைகளை அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நல்லறங்களை செய்த
அந்த நல்லடியாருக்கு வழங்குவாதாக
வாக்களிக்கின்றான்.
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَا نُضِيعُ
أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا
“நிச்சயமாக! எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ நிச்சயமாக, நாம் அத்தகையோரின் நற்கூலியை நாம் வீணாக்க மாட்டோம்”. ( அல்குர்ஆன்: 18: 30 )
நல்லறங்களைப் பொறுத்து அதற்கு வழங்கப்படுகிற நன்மைகளும், கூலியும் வேறு படும் என்றும் இஸ்லாம் கூறுகின்றது
சில அமல்கள் அல்லாஹ்விடத்தில் “அஃளமு தரஜா” – மகத்தான அந்தஸ்தைப் பெற்றதாக, சில அமல்களுக்கு “அல்லாஹ்வே நேரடியாக அந்தஸ்துகளை” வழங்குவதாக, சில அமல்களுக்கு “அல்லாஹ்வே கூலியாவான்” என்றும், சில அமல்களுக்கு “பாவங்கள் கூட நன்மைகளாக மாற்றப்படும்” என்றும், இன்னும் சில அமல்களுக்கு “கணக்கின்றி கூலி வழங்கப்படும்” என்றும் அல்குர்ஆன் வாயிலாகவும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அமுத மொழியினாலும் சோபனங்கள் பல கூறப்பட்டுள்ளன.
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
“ஆகவே, எவர்
ஓர் அணுவளவு நன்மை
செய்திருந்தாலும், அவர் அதன்
பயனை கண்டு கொள்வார்”. ( அல்குர்ஆன்:
99: 7 )
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
“எவர் ஒரு
நன்மையான செயலைக் கொண்டு
வருவாரோ அவருக்கு அது
போன்று பத்து மடங்கு
(நன்மைகளின்) பயன் உண்டு”. ( அல்குர்ஆன்:
6: 160 )
وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا
مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ
“மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை ஆதரவு வைத்தே அன்றி எந்த செலவையும் செய்யாதீர்கள். மேலும், நீங்கள் எந்த நற்பொருளைச் செலவு செய்தாலும் அதன் கூலியை நிறைவாக உங்களுக்கு கொடுக்கப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்”. ( அல்குர்ஆன்: 2: 272 )
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:
ابْنِ
عَبّاسٍ عَنْ
فَمَنْ هَمّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا الله
عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا الله عَزّ
وَجَلّ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ
كَثِيرَةٍ.
“ஒருவர் ஒரு நல்லறத்தை செய்ய நாடினார் ஆனால், அவரால் அந்த நல்லறத்தை செய்ய முடியாமல் போனது. அல்லாஹ் அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகின்றான். ஒருவர் ஒரு நல்லறத்தை செய்ய நாடி, அவர் அந்த நல்லறத்தை செய்து முடிக்கின்றார் என்றால் பத்து நன்மைகளையோ அல்லது எழுநூறு மடங்கு நன்மைகளையோ அல்லது அதை விட பன்மடங்கு நன்மைகளையோ அவருக்கு வழங்குகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
ஆகவே தான்
அண்ணல் நபி {ஸல்}
அவர்களின் அருமைத் தோழர்களான
ஸஹாபா பெருமக்களின் கேள்விகள்
இப்படி அமைந்தன.
"أي الإسلام أفضل؟".
"أي العمل أفضل"؟
"أي العمل أحب إلى الله؟"
"أي الصدقة أعظم أجراً؟"
"أي الأعمال أقرب للجنة؟"
“இஸ்லாத்தில் மிகச் சிறந்த அமல் எது?”, “எந்த அமல் மிகச் சிறந்தது?”, “அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான அமல் எது?”, “எந்த தர்மம் மகத்தான கூலிக்குரியது?”, “எந்த அமல் சுவனத்திற்கு சமீபமாக்கும்?”, என்று மகத்தான கூலியைப் பெற்றுத் தருகிற அமல்களைச் செய்ய ஆர்வத்தோடு நபி {ஸல்} அவர்களை நபித்தோழர்கள் அணுகியதை வரலாறு நெடுக காண முடிகின்றது.
எந்த அமலாக
இருந்தாலும் அதற்கான நியதியும்,
நிபந்தனையும் ஒன்றே ஒன்று
தான். அந்த அமல்
உளப்பூர்வமானதாக இருக்க
வேண்டும், இறைவனின் திருப்தியை
பெறும் நோக்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ
نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
“எவர் அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தைத் தேடி
நல்லறங்களைச் செய்கின்றாரோ, அவருக்கு
மகத்தான கூலியை நாம்
கொடுப்போம்” ( அல்குர்ஆன்: 4: 114 )
ஸஹ்ல் இப்னு
ஹுனைஃப் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:
وعَنْ سهل بن حُنَيْفٍ
أنَّ رَسُول اللَّهِ ﷺ قَالَ
مَنْ سأَلَ اللَّه تَعَالَى الشَّهَادةَ بِصِدْقٍ بلَّغهُ اللهُ
منَازِلَ الشُّهَداءِ وإنْ ماتَ على فِراشِهِ
رواه مسلم.
“அல்லாஹ்விடத்தில் ஒருவர் உண்மையான இதயத்தோடு ஷஹாதா – வீரமரணத்தை வேண்டுகிறார். அவர் தன் படுக்கையில் மரணித்தாலும் அவருக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வீரமரணம் அடைந்தவர்களின் அந்தஸ்தை வழங்கி கௌரவிக்கின்றான்” என மாநபி {ஸல்} அவர்கள் அருளினார்கள். ( நூல்: முஸ்லிம்
மேலும், எந்த
ஒரு அமலானாலும் கூலியும்,
நன்மையும், பிரதிபலனும் வழங்கப்பட
வேண்டுமானால் அந்த அமல்
அல்லாஹ்விடத்தில் “கபூலிய்யத்தை” பெற
வேண்டும். அல்லாஹ்விடம் அந்த
அமல் ஏற்றுக் கொள்ளப்பட
வேண்டும் என்ற நியதியும்,
நிபந்தனையும் இருக்கின்றது. மேலும்,
அந்த அமல் இறையச்சத்தோடு
செய்கின்றவர்களிடத்தில் இருந்து
தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்றும்
இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا
قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ
لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
“(நபியே!) ஆதமுடைய இரு புதல்வர்கள் ( ஹாபீல், காபீல் ) உடைய வரலாற்றுச் செய்தியை நீர் அம்மக்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! “குர்பானியை” அல்லாஹ்விற்காக அவ்விருவரும் கொடுத்த பொழுது அவ்விருவருள் ஒருவருடைய (ஹாபீலுடைய) து ஏற்கப்பட்டது. மற்றவருடைய (காபீலுடைய) து ஏற்கப்படவில்லை. (அப்பொழுது காபீல், ஹாபீலை நோக்கி) நிச்சயமாக, நான் உன்னை கொன்று விடுவேன் என்று கூறினான். (அதற்கு ஹாபீல்) “அல்லாஹ் ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்”. ( அல்குர்ஆன்: 5: 27 )
அந்த வகையில் நாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, குர்பானி வழிபாட்டை பூர்த்தி செய்தும், இன்னும் சிலர் பூர்த்தி செய்யவும் காத்திருக்கின்றோம்.
குர்பானி வழிபாட்டிற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்குவதாக வாக்களித்திருக்கும் மகத்தான கூலி என்ன
( ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا )).
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:“ஆதமுடைய மகன் நஹ்ருடைய
நாளில் செய்யும் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது உள்ஹிய்யா பிராணியின் இரத்தத்தை ஓட்டுவது தான். நாளை மறுமையில் அது அதன் முழு உருவில் வரும்.(அதன் கொம்புடனும், அதன் முடிகளுடனும், அதன் சதைகளோடும் வரும்) திண்ணமாக, இந்தப் பூமியில் அதன் உதிரம் சேரும் முன்னரே அல்லாஹ்விடம் அது போய் சேர்ந்து விடுகின்றது. ஆகவே, நீங்கள் தூய மனதோடு உள்ஹிய்யாக் கொடுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
يا رسول
الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم
قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسن
”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும். இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ (99) رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (100) فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ (101) فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ (102) فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105) إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106) وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108) سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ (109) كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (110) إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ (111) وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ (112) وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ (113)}
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஆண் குழந்தை (இஸ்மாயீல்) பற்றி நற்செய்தி கூறினோம்.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது "என் அருமை மகனே! நான் உன்னை
அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச்
சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார். "என்
தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ்
நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்தியபோது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.
இது தான் மகத்தான சோதனை.
பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.
அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம். அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் நல்லோரும் உள்ளனர். தெளிவாக தமக்கே தீங்கிழைத்தோரும் உள்ளனர். ( அல்குர்ஆன்: 5: 27 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்ராஹீம் (அலை) அவர்கள் தியாகம் செய்ய முன்வந்த செய்தியை குறிப்பிட்ட பிறகு ஆட்டை பலியிடச் செய்தோம் என்ற தகவலைப் பதிவிட்ட பிறகு “"இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.” என்று கூறுகின்றான்.
அடுத்தடுத்த இறைவசனங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கிய கூலியைப்பற்றி அல்லாஹ் “நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம். அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம்.” என்று கூறுகின்றான்
இந்த இறைவசனத்தின் ஊடாக நாம் “நிச்சயமாக நாம் நம்முடைய குர்பானிக்காக அல்லாஹ்வால் கூலி வழங்கப்படுவோம். அதில் ஒன்று குர்பானி கொடுத்தவருக்கும் அவருடைய சந்ததிக்கும் அல்லாஹ் பரக்கத்தை நஸீபாக ஆக்குகின்றான்” என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
உளப்பூர்வமாக செய்யப்படும் அமல்களுக்கான அங்கீகாரம்...
ஒரு அமலை நாம்
உளப்பூர்வமாக செய்கிறோம் என்றால் அல்லாஹ் ரப்பூல் ஆலமீன் அந்த அமலை கபூல் செவதோடு,
கூலிகளை வழங்குவதோடு அதன் மூலம் பல்வேறு அஸராத்துகளை – நல்ல விளைவுகளை
ஏற்படுத்துகின்றான்.
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم : "قال رجل:
لأتصدقن الليلة بصدقة، فخرج بصدقته فوضعها في يد زانية، فأصبح الناس يتحدثون:
تُصُدقَ على زانية! فقال: اللهم لك الحمد على زانية، لأتصدقن الليلة بصدقة، فخرج
بصدقته فوضعها في يد غني، فأصبحوا يتحدثون: تُصُدق الليلة على غَني! فقال: اللهم
لك الحمد على غني، لأتصدقن الليلة بصدقة، فخرج بصدقته فوضعها في يد سارق، فأصبحوا
يتحدثون: تُصدق الليلة على سارق! فقال: اللهم لك الحمد على زانية، وعلى غني، وعلى
سارق، فأتي فقيل له: أما صدقتك فقد قبلت؛ وأما الزانية فلعلها أن تستعف بها عن
زناها، ولعل الغني يعتبر فينفق مما أعطاه الله، ولعل السارق أن يستعف بها عن
سرقته"
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன் சென்ற
காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் இன்று இரவு நான் (யாருக்கும் தெரியாமல்) இரசியமாக தர்மம் செய்வேன் என உறுதி பூண்டார். சொன்னது போன்றே இரவில் தர்மப் பொருளை ஒருவரின் கையில் கொடுத்து விட்டு வந்தார். மறுநாள் காலை மக்கள் ஒரு விபச்சாரிக்கு யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக்கொண்டனர்.
அன்று இரவும் அவர் தன் தர்மப் பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்து விட்டு வந்தார். மறுநாள் காலை மக்கள் ஒரு செல்வந்தர் கையில் யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார்கள் என பேசிக் கொண்டனர்.
அன்று இரவும் அவர் தன் தர்மப்பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தார்.மறுநாள் காலை மக்கள் ஒரு திருடன் கையில் யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு முறையும் இன்னொருவருடைய கையில் நான் கொடுத்துவிட்டேன். அல்லாஹ்வே உனக்கு புகழ் அனைத்தும்! என்று கூறினார்.அவரிடம் உம்முடைய தர்மம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என அசரீரி மூலம் சொல்லப்பட்டது.
மேலும், அல்லாஹ் அந்த விபச்சாரியை நல்லவளாகவும், செல்வந்தரை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் கொடையாளியாகவும், திருடனை உழைத்து சாப்பிடும் மனிதனாகவும் மாற்றினான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( நூல்: இப்னு கஸீர்: பாகம் : 1, பக்கம் : 423 )
இங்கே, அவர் அந்த அமலை உளப்பூர்வமாக செய்ததால் அல்லாஹ் அந்த அமலை ஏற்றுக் கொண்டதோடு சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி வாழ்க்கை பாதையையும் மாற்றி அமைத்தான்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக நாளொன்றுக்கு ஒரு தண்டனை எனும் விதமாக புதுப்புது தண்டனைகளை, சித்ரவதைகளை பிலால் (ரலி) அவர்களின் மீது உமைய்யா இப்னு கலஃப் கட்டவிழ்த்து விட்டிருந்தான்.
أن
النبي صلى الله عليه وسلم قال عندما بلغه ما يلقى بلال من التعذيب: ((لو كان عندنا
شيء، لابتعنا بلالاً))،.
أن أبا بكر اشترى بلالاً وهو مدفون في
الحجارة بخمس أواقٍ ذهبًا، فقالوا: لو أبيت إلا أوقية واحدة لبعناكه، فقال أبو
بكر: لو أبيتم إلا مائة أوقيه لأخذته
அப்படியாக நாட்கள் கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் பிலால் போன்று இஸ்லாத்திற்காக சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருப்பபவர்களை நம்மிடம் பணம் மட்டும் இருந்தால் எவ்விலை கொடுத்தாவது அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம்” என கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் பிலால் (ரலி) அவர்களை உமைய்யா சித்ரவதை செய்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் “என் இறைவன் அல்லாஹ்! என்று சொல்லும் ஒரே காரணத்திற்காகவா இந்த அடிமையைத் துன்புறுத்துகிறீர்கள்? கொலை செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றீர்கள்? அவருக்கான விலையைச் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
உமைய்யா, அபூபக்ர் (ரலி) அவர்களை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு விலையைச் சொன்னான். பேரம் பேசாமல், கேட்ட தொகையை மறுக்காமல் உடனே அத்தொகையைக் கொடுத்து பிலாலை வாங்கினார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
ஐந்தோ அல்லது. ஏழோ அல்லது நாற்பதோ அவாஃகின் தங்கம் விலையாகக் கொடுத்தார் என்று பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.
பிலாலை அழித்துக் கொண்டு, வா போவோம்’ என்று நடக்க ஆரம்பித்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அதிகமான விலை கொடுத்து ஏமாறி விட்டீரே. இதை விட மிகக் குறைவான ( ஒரே ஒரு காசுக்குக் ) விலைக்குக் கேட்டிருந்தாலும் பிலாலைத் தந்திருப்பேனே?” என ஏளனமாகக் கேட்டான் உமைய்யா.
“நீதான் ஏமாறி விட்டாய் உமைய்யா. இதைவிட அதிகமான விலையை நீ கேட்டிருந்தாலும் கொடுப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன்” இன்னொரு அறிவிப்பில் நூறு அவாக் தங்கம் கேட்டிருந்தாலும் அவருக்காக நான் கொடுத்திருப்பேன்” என்று பதில் அளித்து அங்கிருந்து பிலால் (ரலி) அவர்களுடன் விடை பெற்றார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
தம்மோடு அழைத்து வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்று பிலாலைத் தம் அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை. மாறாக, பெருமானார் {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு அழைத்து வந்து அல்லாஹ்வின் தூதரே! “அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவனாக நான் பிலாலை விடுதலை செய்கின்றேன்” என்று அந்த நொடிப்பொழுதே விடுதலை அளித்துவிட்டார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
அவர்கள் அளித்த அந்த விடுதலையை அடி, உதையிலிருந்து விடுதலை என்று வெறுமெனே சொல்லிவிட முடியாது. மாறாக, மகத்தான, மாபெரும் விடுதலை என்று தான் சொல்ல வேண்டும். ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் வ நிஸாவுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, ஸியரு அஃலா மின் நுபலா )
அன்றிலிருந்து பிலால் (ரலி) அவர்களின் வாழ்க்கை அடியோடு மாறிப்போனது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அண்மையைப் பெற்ற நெருங்கிய தோழர், மெய்க்காப்பாளர், இஸ்லாத்தின் முதல் (பாங்கொலி) முதல் அழைப்பாளர், இஸ்லாமிய கஜானாவின் பொறுப்புதாரி, நபி {ஸல்} அவர்களின் பயணத்தோழர், என்று பிலால் (ரலி) அவர்களின் வாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக ஏற்றம் கண்டது.
முத்தாய்ப்பாக பெருமானார் {ஸல்} அவர்களின் அமுத வாயால் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்றவர்களில் ஒருவராகவும் பிலால் (ரலி) அவர்கள் பரிணமித்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை “அடிமைத்தளையில் இருந்து விடுதலை செய்தது” அந்த காரியத்தை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, உளப்பூர்வமாக செய்தது. அதனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திய மகத்தான விளைவுகள் தான் பிலால் (ரலி) அவர்களின் பரிமாணங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை என்றால் அது மிகையல்ல.
ஆகவே, உளப்பூர்வமாக அமல்கள் செய்து உயரிய நன்மைகளைப் பெறுவோம்!!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உளப்பூர்வமாக
அமல்கள் செய்கிற நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!!!
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteநல்ல கருத்துக்கள்
வல்ல அல்லாஹ் உங்களை சிறப்பிப்பானாக
அல்லாஹ் தாங்கள் உளப்பூர்வமாக செய்யும் இந்த சேவையை கபூல் செய்வானாக!!ஆமீன்
ReplyDeleteجزاكم الله حضرت
ReplyDeletebaarakallah usthath
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் உஸ்தாத். தங்களின் மார்க்க சேவையை தொடர்ந்து பல ஆலிம் பெருமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தங்களின் சேவை இன்றைய இளம் ஆலிம்களுக்கு தேவை جزاكم الله خير الجزاء يا أستاذ
ReplyDelete