தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 13.
وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
12 –வது நோன்பை நோற்று, 13 – வது தராவீஹை
நிறைவு செய்து,
13 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் அந் - கஹ்ஃப் அத்தியாயத்தின் எஞ்சிய 36 வசனங்களையும்,
சூரத்து மர்யம் மற்றும் சூரத்து தாஹா நிறைவு செய்யப்பட்டு
சூரா அல் அன்பியாவின் 57
வசனங்கள் என 326 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்றைய தராவீஹ் தொழுகையில்
ஓதப்பட்ட மர்யம் அத்தியாயத்தின் 64 ம் வசனமும், தாஹா அத்தியாயத்தின் 53 ம் வசனமும்
ஒரு இறைநம்பிக்கையாளன் அல்லாஹ்வின் மீது எவ்வாறான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது
குறித்து பேசுகின்றது.
وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا
உமது இறைவன் மறப்பவனாக இல்லை ( அல்குர்ஆன்: 19: 64 )
لَا يَضِلُّ رَبِّي وَلَا يَنْسَى
என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” ( அல்குர்ஆன்: 20:
52)
அல்லாஹ்வைப் பற்றியுண்டான நம்பிக்கையில் இரண்டு
விஷயங்கள் பிரதானமானதாகும்.
ஒன்று. அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது. இரண்டு
அவனை படைப்புகளோடு ஒப்பிடக்கூடாது. இரண்டுமே நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும்
மிகப்பெரிய பாவங்களாகும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இரண்டையும் விட்டும்
மிகப் பரிசுத்தமானவன் ஆவான்.
لَّآ
إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَٰنَهُۥ عَمَّا يُشْرِكُونَ
அவனைத் தவிர
வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
( அல்குர்ஆன்: 9: 31 )
سُبْحٰنَ
رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَۚ
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன். ( அல்குர்ஆன்: 37: 180 )
தூய்மையானவன் எனத்
தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸுப்ஹான் என்றால் தூய்மை என்பது பொருள். நாம் தமிழில்
பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், அழுக்கு அசுத்தம்
போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் ஸுப்ஹான் என்பது அதைவிட
ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.
"இறைத் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும்
தூய்மையானவன்" என்பதே ஸுப்ஹான் என்பதன் பொருளாகும்.
"தூக்கம்,
இயலாமை, பலவீனம், தோல்வி,
இயற்கை உபாதை, மனைவி, மக்கள்,
தாய் தந்தை, பசி, தாகம், மறதி போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்" என்பது இதன்
பொருளாகும். ஸுப்ஹான் என்ற இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும்
பயன்படுத்தக் கூடாது.
அல்லாஹ்விற்கு தேவைகள் உண்டா?
அல்லாஹ் பசி, தாகம், உணவு,
உறக்கம், மலம், ஜலம் கழித்தல் போன்ற அனைத்து தேவைகளை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
قُلْ
هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ الإخلاص
நபியே! அல்லாஹ் ஒருவன்” எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். ( அல்குர்ஆன்: 102: 1,2 )
يَا
أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ
الْحَمِيدُ
மனிதர்களே! நீங்கள்
அல்லாஹ் விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ
தேவைகளற்றவன்;
புகழுக்குரியவன். (
அல்குர்ஆன்: 35: 15 )
அல்லாஹ்விற்கு பசி, தாகம் உண்டா?
அல்லாஹ் பசி, தாகம் போன்ற பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
وَهُوَ
يُطْعِمُ وَلَا يُطْعَمُ
அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” ( அல்குர்ஆன்: 6:
14 )
அல்லாஹ்விற்கு
சிறு தூக்கமோ,
ஆழந்த உறக்கமோ ஏற்படுமா?
தூக்கம் என்பது இறைத்தன்மைக்கு எதிரானதாகும். அல்லாஹ்
இத்தகைய பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
لَا
تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ
அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. ( அல்குர்ஆன்: 2: 255 )
அல்லாஹ்விற்கு பெற்றோர்கள் , மனைவி மக்கள் உண்டா?
அல்லாஹ்விற்கு பெற்றோர்கள், மனைவி ,
மக்கள் யாரும் கிடையாது. அல்லாஹ் இவற்றை ஏற்படுத்திக்
கொள்வதை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை ( அல்குர்ஆன்: 112: 3 )
وَأَنَّهُ
تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ( அல்குர்ஆன்: 72: 3 )
அல்லாஹ்விற்கு உதவியாளர்களோ, கூட்டாளிகளோ உண்டா?
அல்லாஹ்விற்கு
உதவியாளர்களோ,
கூட்டாளிகளோ யாரும் கிடையாது. அவன் தனித்தவன், இணையற்றவன். அவனுக்கு நிகராக யாருமில்லை.
وَلَمْ
يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ
ஆட்சி, அதிகாரத்தில்ல் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன்
எனும் இழிவும் அவனுக்கு இல்லை” ( அல்குர்ஆன்: 17: 111 )
وَلَمْ
يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)
அந்த வகையில் அல்லாஹ்
மறதி என்ற பலவீனத்தை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான் என்பதைத் தான் இன்று ஓதப்பட்ட
இரண்டு வசனங்களும் குறிப்பிடுகின்றன.
மறதி...
மனிதர்கள்
மறதியாளர்களாகவே படைக்கப்பட்டுள்ளதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
நாம் சில
நேரங்களில் சில விஷயங்களை அல்லது சிலரை மறந்து விடுகின்றோம். நம்மையும் சில
நேரங்களில் சிலர் மறந்து விடுகின்றார்கள். அது வாக்குறுதியாக இருக்கலாம்,
நம்பிக்கையாக இருக்கலாம்.
நம்மை மறக்கும்
சிலர், நாம் மறக்கும் சிலர் நாம் அதிகம் நம்புபவராக இருக்கலாம், நம்மிடம்
நெருக்கம் பெற்றவராக இருக்கலாம்.
நமது பெற்றோரே கூட
சில போது நமக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுகின்றார்கள். நமது மனைவி,
மக்களும் கூட நமக்கான அவர்களின் பொறுப்புகளில் நம்மை மறந்து விடுகின்றார்கள்.
முக்கியமான மனிதர்களே மறந்து இருப்பதாக குர்ஆன் கூறுகின்றது..
وَاِذْ قَالَ مُوْسٰى لِفَتٰٮهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤى اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ اَوْ اَمْضِىَ حُقُبًا
இன்னும் மூஸா தம்
பணியாளிடம்,
“இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوْتَهُمَا فَاتَّخَذَ
سَبِيْلَه فِى الْبَحْرِ سَرَبًا
அவர்கள் இருவரும்
அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்)
விட்டது.
فَلَمَّا
جَاوَزَا قَالَ لِفَتٰٮهُ اٰتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا
هٰذَا نَصَبًا
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில்
நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
قَالَ
اَرَءَيْتَ اِذْ اَوَيْنَاۤ اِلَى الصَّخْرَةِ فَاِنِّىْ نَسِيْتُ الْحُوْتَ وَ
مَاۤ اَنْسٰٮنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَه وَاتَّخَذَ سَبِيْلَه فِىْ الْبَحْرِ عَجَبًا
அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார். (
அல்குர்ஆன்: 18: 60 – 64 )
முக்கியமான விஷயத்தையே மறந்து இருப்பதாக குர்ஆன் கூறுகின்றது..
وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ
مِّنْهُمَا اذْكُرْنِي عِندَ رَبِّكَ فَأَنسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ
فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ
அவ்விருவரில் யார்
விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், "என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!" என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதவையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்)
கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்;
ஆகவே அவர்
சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியாவரானார். ( அல்குர்ஆன்: 18: 60 – 64 )
இப்படி, அன்றாடம்
வாழ்வின் பல பகுதிகளில், பல நேரங்களில் “மறத்தலால்” பாதிக்கப்படும் மனிதன் படைத்த
இறைவன் கூட தன்னை மறந்து விட்டதாக/மறந்து விடுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றான்.
1.
நம்பிக்கையை விதைத்தால் அல்லாஹ் மறப்பதில்லை...
وَاَوْحَيْنَاۤ اِلٰى اُمِّ مُوْسٰى اَنْ اَرْضِعِيْهِۚ فَاِذَا
خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْۚ
اِنَّا رَادُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ
நாம் மூஸாவின்
தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை
உன்னிடம் மீள வைப்போம்;
இன்னும், அவரை (நம்) தூதர்களில்
ஒருவராக்கி வைப்போம்”
என்று வஹீ அறிவித்தோம்.
மிக முக்கியமான
ஒரு தருணத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கு ஒரு
கட்டளையை பிறப்பித்தான். அந்த கட்டளையின் ஊடாக அவர்களின் உள்ளத்தில் ஒரு
நம்பிக்கையை விதைத்தான். அல்லாஹ் அந்த நம்பிக்கையை மறக்கவில்லை. மாறாக,
காப்பாற்றினான், நிறைவேற்றிக் கொடுத்தான் என குர்ஆன் கூறுகின்றது. இவை அனைத்தையும்
பின்னால் இறைத்தூதராக இருந்த மூஸா (அலை) அவர்களுக்கு நினைவு படுத்தினான் இறைவன்.
இதோ அல்லாஹ் தன்
திருமறையில்…
فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ
عَدُوًّا وَحَزَنًا ۗ إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا
خَاطِئِينَ
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக்
கொண்டார்கள்;
(பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும்
துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும்,ஹாமானும்,
அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّي
وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ
لَا يَشْعُرُونَ
இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது – இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன்
அளிக்கக்கூடும்;
அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்;
இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து
கொள்ளவில்லை.
وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَارِغًا ۖ إِن
كَادَتْ لَتُبْدِي بِهِ لَوْلَا أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ
الْمُؤْمِنِينَ
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை
உறுதிப்படுத்தாது இருந்திருந்தால்> அவள் (மூஸா
ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
وَقَالَتْ لِأُخْتِهِ قُصِّيهِ ۖ فَبَصُرَتْ بِهِ عَن
جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள்.
(அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை
கவனித்து வந்தாள்.
وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِن قَبْلُ
فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُ لَكُمْ وَهُمْ
لَهُ نَاصِحُونَ
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை
தடுத்து விட்டோம்;
(அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை
நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர்
நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”
( அல்குர்ஆன்: 28: 8 – 12 )
إِذْ أَوْحَيْنَا إِلَىٰ أُمِّكَ مَا يُوحَىٰ
“உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!
أَنِ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي
الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ
لَّهُ ۚ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي
அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்)
நதியில் போட்டுவிடும்;
பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்;
அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண்
முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ
عَلَىٰ مَن يَكْفُلُهُ ۖ فَرَجَعْنَاكَ إِلَىٰ أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا
وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ
فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ
يَا مُوسَىٰ
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான்
அறிவிக்கட்டுமா?”
என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல்
இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக
மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம்
தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர். ( அல்குர்ஆன்: 20:
38 – 40 )
2.
வாக்களித்தால் அல்லாஹ்
மறப்பதில்லை…
குறைஷிகளின் கையில்
புனித ஆலயம் கஅபா சிக்கிக் கொண்டிருந்த தருணம் அது. முஹம்மத் {ஸல்} அவர்கள் ஏகத்துவத்தை
எடுத்துரைக்க ஆரம்பித்த துவக்க காலத்தில் இருந்து நபியவர்களும் அவர்களது கொள்கையை
ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை
விதிக்கப்பட்டனர். மீறிச் சென்றால் தாக்கப்பட்டனர்.
குறைஷிகளின் இந்த அட்டூழியம் ஹிஜிரி ஆறாம் ஆண்டு வரை
தொடர்ந்தது. அதன் உச்சக்கட்டமாக உம்ரா செய்ய வந்த மக்காவின் மண்ணின் மைந்தர் நபி
{ஸல்} அவர்களும் தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் விளைவாக ஏற்பட்டது
தான் ஹுதைபிய்யா உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையின் பின்னர் அல்லாஹ் தந்த வாக்குறுதி
தான் மக்கா வெற்றி பெற்று உங்களின் வசமாகும் என்ற நம்பிக்கை.
لَـقَدْ رَضِىَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ
تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ
عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًا ۙ
முஃமின்கள் அந்த
மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி
(ஏற்றுக்) கொண்டான்;
அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
وَّمَغَانِمَ
كَثِيْرَةً يَّاْخُذُوْنَهَا ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا
இன்னும் ஏராளமான
போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும்
இருக்கின்றான்.
وَعَدَكُمُ
اللّٰهُ مَغَانِمَ كَثِيْرَةً تَاْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ
اَيْدِىَ النَّاسِ عَنْكُمْۚ وَلِتَكُوْنَ اٰيَةً لِّلْمُؤْمِنِيْنَ
وَيَهْدِيَكُمْ صِرَاطًا مُّسْتَقِيْمًاۙ
ஏராளமான போர்ப்
பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள்
கைப்பற்றுவீர்கள்;
இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை)
முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).
وَّاُخْرٰى لَمْ تَقْدِرُوْا عَلَيْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَاؕ
وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرًا
மற்றொரு -
(வெற்றியும்) இருக்கிறது;
அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை; ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ்
யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான். ( அல்குர்ஆன்: 48: 18 - 21 )
حَدَّثَنِي
مَحْمُودٌ ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنِي مَعْمَرٌ قَالَ :
أَخْبَرَنِي الزُّهْرِيُّ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ ، عَنِ ابْنِ
عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ فِي
رَمَضَانَ مِنَ الْمَدِينَةِ وَمَعَهُ عَشَرَةُ آلاَفٍ ، وَذَلِكَ عَلَى رَأْسِ
ثَمَانِ سِنِينَ وَنِصْفٍ مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ فَسَارَ هُوَ ، وَمَنْ
مَعَهُ مِنَ الْمُسْلِمِينَ إِلَى مَكَّةَ يَصُومُ وَيَصُومُونَ حَتَّى بَلَغَ
الْكَدِيدَ ، وَهْوَ مَاءٌ بَيْنَ عُسْفَانَ وَقُدَيْدٍ – أَفْطَرَ وَأَفْطَرُوا
قَالَ الزُّهْرِيُّ وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَمْرِ
رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الآخِرُ فَالآخِرُ
நபி (ஸல்) அவர்கள்
ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா
வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின்
தொடக்கத்தில் நடை பெற்றது.
( அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி-4276 )
عن عبدِ
اللَّهِ بنِ مغفَّلٍ قالَ : رأيتُ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يومَ
فتحِ مَكَّةَ وَهوَ علَى ناقةٍ يقرأُ بسورةِ الفَتحِ وَهوَ يُرجِّعُ
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி “அல்ஃபதஹ்’
என்னும் (48வது) அத்தியாயத்தை “தர்ஜீஉ’
என்னும் ஓசை நயத்துடன் ஓதிக் கொண்டிருந்தததை நான் கண்டேன்.
( அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) நூல்: புகாரி-4281 )
3.
கனவை கூட நனவாக்க அவன்
மறப்பதில்லை…
إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ
إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ
لِي سَاجِدِينَ
யூஸுஃப் தம்
தந்தையாரிடம்;
"என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும்,
சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே
(கனவில்) நான் கண்டேன்" என்று கூறியபொழுது.
قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَىٰ
إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا ۖ إِنَّ الشَّيْطَانَ لِلْإِنسَانِ عَدُوٌّ
مُّبِينٌ
"என் அருமை மகனே!
உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க)
சதி செய்வார்கள்;
ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 12: 4, 5 )
فَلَمَّا
دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِن
شَاءَ اللَّهُ آمِنِينَ
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக்
கொண்டார்;
இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச
மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் குறினார்.
وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ
سُجَّدًا ۖ وَقَالَ يَا أَبَتِ هَٰذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِن قَبْلُ قَدْ
جَعَلَهَا رَبِّي حَقًّا ۖ وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ
وَجَاءَ بِكُم مِّنَ الْبَدْوِ مِن بَعْدِ أَن نَّزَغَ الشَّيْطَانُ بَيْنِي
وَبَيْنَ إِخْوَتِي ۚ إِنَّ رَبِّي لَطِيفٌ لِّمَا يَشَاءُ ۚ إِنَّهُ هُوَ
الْعَلِيمُ الْحَكِيمُ
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து
வீழ்ந்தனர்;
அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்;
மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என்
சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை
கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம்
செய்துள்ளான்;
நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக
நுட்பமாகச் செய்கிறவன்,
நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 99, 100 )
மூஸா (அலை)
அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் அளித்த நம்பிக்கையை மிகச் சமீபமான நேரத்தில்
நிறைவேற்றிக் கொடுத்தான். மாநபி {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதியை
ஒன்னரை ஆண்டுகளில் நிறைவேற்றிக் கொடுத்தான். யூஸுஃப் (அலை) அவர்களின் கனவை பல
ஆண்டுகளின் பின்னால் நனவாக்கிக் கொடுத்தான்.
நாம் உடனே நமக்கு
எல்லாம் கிடைத்து விட வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால், அல்லாஹ் அவன்
விருப்பப்படி, அவன் வகுத்துள்ள நியதிப்படியே இந்த உலகத்தில் எல்லாவற்றையும்
நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வின் வாக்குறுதியில், அவன் தரும்
நம்பிக்கையில் எவ்வித மாற்றமும் செய்ய மாட்டான். அவன் மறக்கவும் மாட்டான்.
அல்லாஹ்வின் மீதான
நம்பிக்கையை மிகச் சரியாக அமைத்துக் கொள்வோம்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் விளக்கத்தைத் தருவானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
ماشاءالله. بارك الله فيك يا أخي الكريم
ReplyDelete