தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 18.
வானவர்கள் எனும்
ஆச்சர்யமான படைப்பு!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
17 –வது நோன்பை நோற்று, 18 – வது தராவீஹை
நிறைவு செய்து,
18 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஸபா, அல் ஃபாத்திர், யாஸீன், அஸ் - ஸாஃப்ஃபாத் ஆகிய சூராக்கள் நிறைவு
செய்யப்பட்டு 364
வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட 35 – ம் அத்தியாயமான
முதல் வசனத்தில் மலக்மார்களின் – வானவர்களின் பிரம்மாண்டம் குறித்து அல்லாஹ் பேசுகின்றான்.
اَ
لْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا
اُولِىْۤ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ؕ يَزِيْدُ فِى الْخَـلْقِ مَا
يَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
அல்ஹம்து லில்லாஹ்
- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்;
இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக
ஆக்கினான்;
தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
வானவர்களை நம்பிக்கை கொள்வது இஸ்லாத்தின் அடிப்படைகளில்
ஒன்றாகும். அல்லாஹ்விற்கு அடுத்து இரண்டாவதாக நம்பிக்கை கொள்ள வேண்டிய மிக முக்கியமான
அம்சமாகும்.
اٰمَنَ
الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَؕ كُلٌّ
اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ
اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا
وَاِلَيْكَ الْمَصِيْرُ
(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும்
அல்லாஹ்வையும்,
அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர்
ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும்
நாங்கள் செவிமடுத்தோம்;
(உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். ( அல்குர்ஆன்: 2: 285 )
அல்லாஹ் அல்குர்ஆனில் வானவர்கள் குறித்து பல்வேறு
இடங்களில் குறிப்பிடுகின்றான்.
’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக்,
மலாயிகா மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் என்பதாகும்.’ மலக்’
என்ற வார்த்தையை பதிமூன்று இடங்களிலும் ’மலகைன்’ இருமையாக இரு
இடங்களிலும்,
‘மலாயிகா’ என்று பன்மையில் 73 இடங்களிலும்
அல்லாஹ் இடம் பெறச் செய்துள்ளான்.
படைக்கப்பட்ட
விதமும்.. படைக்கப்பட்ட காலமும்...
மலக்குகள்
ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் படைக்கப்பட்ட காலம் குறித்து சில
நபிமொழிகள் காணப்படுகின்றன. எனினும் அறிவிப்பாளர் தொடர் பலம் இல்லாமலும் முன்பின்
முரணான ஆதாரமற்ற செய்திகளாக இருப்பதாலும் அவற்றின் அடிப்படையில் நாம் நம்பிக்கை
கொள்ள முடியாது. ஆனாலும் மலக்குகள் மனிதன் மற்றும் ஜின்கள் படைக்கப்படும் முன்
படைக்கப்பட்டவர்கள் என்கிற தகவலை அல்குர்ஆன் உறுதி செய்கின்றது.
ؕ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا
مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ
وَنُقَدِّسُ لَـكَؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ وَاِذْ قَالَ رَبُّكَ
لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில்
ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா
அமைக்கப்போகிறாய்?
இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான். ( அல்குர்ஆன்: 2: 30 )
حدثنا
محمد بن رافع ، وعبد بن حميد - قال عبد : أخبرنا ، وقال ابن رافع : حدثنا - عبد
الرزاق ، أخبرنا معمر ، عن الزهري ، عن عروة ، عن عائشة ، قالت : قال رسول الله
صلى الله عليه وسلم : " خلقت الملائكة من نور ، وخلق الجان من مارج من نار ،
وخلق آدم مما وصف لكم "
ஆயிஷா (ரலி)
அறிவிக்கின்றார்கள்: “வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்,
அஹ்மத்:2996 )
அவர்களின் பண்புகளும்.. அவர்களின் பணியும்…
அவர்கள்
ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே
நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு
இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள். எல்லா நேரங்களிலும்
அவனை அஞ்சிக் கொண்டே இருப்பார்கள்.
وَقَالُوا
اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ
அவர்கள:; “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்;
(ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின்
குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே
ஆவார்கள்.
لَا يَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ يَعْمَلُوْنَ
அவர்கள் (எந்த ஒரு
பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப்
படியே (எதையும்) செய்கிறார்கள்.
يَعْلَمُ
مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَ لَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ
ارْتَضٰى وَهُمْ مِّنْ خَشْيَـتِهٖ مُشْفِقُوْنَ
அவர்களுக்கு
முன்னால் இருப்பவற்றையும்,
அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி -
அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால்
நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள். (
அல்குர்ஆன்: 21: 26 – 28 )
வானவர்களுக்கென்று
சில பணிகளை அல்லாஹ் கட்டமைத்துள்ளான். அந்த பணிகளை மிகச் சரியாக அவர்கள்
செய்வார்கள். அவர்களின் பணியாவன:- தூதுச்செய்தியை
அறிவிப்பது,
மழைபொழிவிப்பது, காற்றை வீசச்செய்வது, இடி மின்னலை
ஏற்படுத்துவது, மனிதர்களைக் கண்காணிப்பது,
மனிதர்களைக் காப்பாற்றுவது, நன்மை தீமைகளை பதிவு செய்வது, பதிவு செய்தவைகளை சமர்ப்பிப்பது, மனிதர்களுக்காக
துஆச் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, உயிரைக்கைப்பற்றுவது,
மண்ணறையில் விசாரணை செய்வது, நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது, ஸூர் ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, சுவனவாசிகளுக்கு ஸலாம்
சொல்வது, நரகவாசிகளுக்கு தண்டனை வழங்குவது,
அர்ஷை சுமப்பது, அர்ஷை வலம் வருவது என இன்னும் பல
பொறுப்புகள் இறைவனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும்
குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இடம் பெற்றுள்ளது.
அவர்களின் தோற்றமும்.. பிரம்மாண்டமும்...
தாயின் கருவறையில் வானவர்...
عن أنس بن مالك -رضي الله عنه- مرفوعاً: «وكَّلَ اللهُ بالرَّحِم
مَلَكًا، فيقول: أيْ ربِّ نُطْفة، أيْ ربِّ عَلَقة، أيْ ربِّ مُضْغة، فإذا أراد
اللهُ أن يقضيَ خَلْقَها، قال: أيْ ربِّ، أذكرٌ أم أنثى، أشقيٌّ أم سعيدٌ، فما
الرزق؟ فما الأَجَل؟ فيكتب كذلك في بطن أُمِّه»
அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம்
செய்கிறான். கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் ஒவ்வொரு நிலை மாற்றத்தின்
போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’
(கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக
இருக்கிறது. இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை
உருவாக்க நாடினால் அது (1)
ஆணா?
பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா?
(3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே
தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை
எழுதப்பட்டு விடுகின்றன” என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல்: புகாரி: 318
)
மனிதனின் தோள்
புஜங்களில் அமர்ந்திருக்கும் வானவர்கள்..
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ
قَعِيدٌ (17) مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
மனிதன் செய்யும்
நன்மை தீமை யாவற்றையும் பதிவு செய்வதற்காக கண்ணியத்திற்குரிய வானவர்களை அல்லாஹ்
நியமனம் செய்துள்ளான்.
‘வலப்புறமும் இடப்புறமும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல்
இருப்பதில்லை. (50:
17,18) வலது பக்கம் இருப்பவர் நன்மைகளைப் பதிவு செய்வார். இடது
பக்கம் இருப்பவர் தீமைகளைப் பதிவு செய்வார்.
உருகும் பனியாகவும்... சுடர் தெறிக்கும் ஒளியாகவும்...
حدثنا محمد بن إبراهيم بن داود ، حدثنا أبو أمية محمد بن إبراهيم ،
حدثنا حفص بن عمر ، حدثنا ثور بن يزيد ، حدثنا خالد بن معدان ، عن معاذ بن جبل ،
والعرباض بن سارية رضي الله عنهما ، أن رسول الله صلى الله عليه وسلم ، قال :
" إن لله عز وجل ملكا نصفه من نور ، ونصفه من ثلج ، يسبح يقول : سبحانك يا
مؤلف الثلج إلى النور ، ولا يطفئ النور برد الثلج ، ولا برد الثلج حر النور ، ألف
بين قلوب عبادك المؤمنين
العظمة
لأبي الشيخ
الأصبهاني
- باب الأمر بالتفكر في آيات الله عز وجل وقدرته وملكه وسلطانه
ذكر خلق الملائكة وكثرة عددهم - حديث : 326
“ நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் ஒரு மலக் வானவர் இருக்கின்றார். அவர் சதா எந்நேரமும் பின் வருமாறு “ஒளியோடு பனிக்கட்டியை இணைத்த மா தூயவனே! உருகும்பனியால் ஒளியை அணைத்திடும் ஆற்றலை நீ வழங்க வில்லை! ஒளியின் சுடரால் பனியை உருக்கிடும் ஆற்றலை நீ வழங்க வில்லை! இறைவா! இறை நம்பிக்கை கொண்டஉன் அடியார்களின் இதயங்களையும் நீ ஒன்றிணைப்பாயாக!” என்று தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கின்றார்.
என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்
என இர்பாள்
இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அல் அள்மா லி இமாமி அபுஷ் ஷைக் அல்
இஸ்பஹானீ )
நான் வானவர்
ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது, ( நூல்: புகாரி,தப்ரானி )
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى (5) ذُو مِرَّةٍ فَاسْتَوَى (6)
அதன் மேல் (நரகின்
மீது)கடுமையும்,கொடுமையும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரீல்) அதைக்கற்றுக் கொடுக்கிறார்.
( அல்குர்ஆன்: 53:5,6 )
وعن البراء بن عازب رضي
الله عنه ، قال
كنا في
جنازة في بقيع الغرقد ، فأتانا النبي صلى الله عليه وسلم ، فقعد وقعدنا
حوله ، كأن على رءوسنا الطير ، وهو يلحد له ، فقال
أعوذ بالله من عذاب القبر ، ثلاث مرات ، ثم قال :
إن العبد المؤمن إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا ، نزلت
إليه الملائكة ، كأن على وجوههم الشمس ، معهم كفن من أكفان الجنة ، وحنوط من حنوط
الجنة ، فجلسوا منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ،
فيقول : يا أيتها النفس الطيبة ، اخرجي إلى مغفرة من الله ورضوان ،
அன்சாரித் தோழர்
ஒருவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக பகீஉல் ஃகர்கத் எனும் மையவாடிக்கு நபி
(ஸல்) அவர்களுடன் சென்றோம்.
மண்ணறையின் அருகே
சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு
குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.
எங்களின் தலைகளின்
மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில்
(அமைதியாக) அமர்ந்திருந்தோம்.
(திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின்
வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று
முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.
இறைவிசுவாசியான
அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக்
கொண்டிருக்கையில்,
(சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம்
கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருகை தருவார்கள்.
அவர்கள் தங்களுடன்
சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும்
வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருப்பார்கள்.
அப்பொழுது உயிரைக்
கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, ”ஓ! நல்ல ஆன்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும்
அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு!” என்று கூறுவார்.
وإن العبد الكافر إذا كان في انقطاع من
الدنيا وإقبال من الآخرة ، نزل إليه من السماء ملائكة سود الوجوه ، معهم
المسوح ، فيجلسون منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ،
فيقول : أيتها النفس الخبيثة ، اخرجي إلى سخط من الله وغضب ،
நிராகரிப்பாளன்
ஒருவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும்
தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும்.
அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் வந்து அவனருகில்
அமர்வார்.
அவர் அவனை நோக்கி, கெட்ட ஆன்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும்
அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். ( நூல்: ஷரஹ் அகீதா அத் தஹாவிய்யா, பாடம்:
அதாபுல் கப்ரி வ நயீமிஹி )
வானவர்கள் தொடர்பான சுவையான சில சம்பவங்கள்…
عن ابن
إسحاق قال: حدثني عاصم بن عمر بن قتادة أن رسول الله صلى الله عليه وسلم قال:
" إن صاحبكم لتغسله الملائكة " ، يعني حنظلة، فسألوا أهله: ما شأنه؟
فسئلت صاحبته فقالت: خرج وهو جنب حين سمع الهائعة فقال رسول الله صلى الله عليه
وسلم: " لذلك غسلته الملائكة، وكفى بهذا شرفاً ومنزلةً عند الله تعالى "
.
ஹன்ளலா (ரலி) அவர்கள். உஹத் நடை பெரும் அன்றைய
முதல் நாளில் திருமணம் செய்கின்றார்கள். புதுமாப்பிள்ளை, பல ஆயிரம் கனவுகள் சூழ இல் வாழ்க்கையில் இணைகின்றார்கள்.
மறு நாள்
விடிகின்றது. உஹதில் முஸ்லிம்கள் தோல்வியுற்று விட்டனர். பெருமானார் {ஸல்} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். எனும் செய்தி காட்டுத்தீயாய் மதினா நகரெங்கும் பரவி
விரவியது.
கடமையான
குளிப்பிற்காக வீட்டின் முற்றத்தில் கையில் தண்ணீர் குவளையுடன் நின்று கொண்டிருந்த
ஹன்ளலா (ரலி) அவர்களின் காதிலும் இந்தச் செய்தி விழுகின்றது.
தன் நிலை மறந்தார். உருவிய வாளுடன் போர்க்களம் சென்றார். தம்மால் இயன்ற வரை போராடினார். இறுதியில் இறைவழியில் அல்லாஹ்வின் சத்திய தீனுக்காக
உயிரையும் நீத்தார்.
அவரின் ஆர்வம்
அவரை ஷஹீத் எனும் அந்தஸ்திற்கு அழைத்துச் சென்றதோடு மாத்திரம் அல்லாமல் அவரின்
ஜனாஸாவை மலக்மார்கள் குளிப்பாட்டியதாக பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
எனவே, “கஸீலுல் மலாயிக்கா” எனும் சிறப்பு அந்தஸ்தை ஹன்ளலா (ரலி) அடைந்தார்கள்.
அதே போன்று ஸஅத் இப்னு முஆத் (ரலி) முஆவியா இப்னு
முஆவியா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களின் ஜனாஸா தொழுகையிலும், ஜனாஸாவைப் பின் தொடர்வதிலும்
70000 மலக்மார்கள் பங்கு பெற்றார்கள் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். குறிப்பாக
ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்மார்கள் சுமந்து வந்ததாகவும் நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
قَالَ
ابْنُ عَبَّاسٍ وَكَعْبٌ وَغَيْرُهُمَا: أَنَّهُ سَارَ ذَاتَ يَوْمٍ فِي حَاجَةٍ
فَأَصَابَهُ وَهَجُ الشَّمْسِ، فَقَالَ: (يَا رَبِّ أَنَا مَشَيْتُ يَوْمًا
فَكَيْفَ بِمَنْ يَحْمِلُهَا خَمْسَمِائَةِ عَامٍ فِي يَوْمٍ وَاحِدٍ! اللَّهُمَّ
خَفِّفْ عَنْهُ مِنْ ثِقَلِهَا. يَعْنِي الْمَلَكَ الْمُوَكَّلَ بِفَلَكِ
الشَّمْسِ (، يَقُولُ إِدْرِيسُ: اللَّهُمَّ خَفِّفْ عَنْهُ مِنْ ثِقَلِهَا
وَاحْمِلْ عَنْهُ مِنْ حَرِّهَا. فَلَمَّا أَصْبَحَ الْمَلَكُ وَجَدَ مِنْ خِفَّةِ
الشَّمْسِ والظل مالا يَعْرِفُ فَقَالَ: يَا رَبِّ خَلَقْتَنِي لِحَمْلِ الشَّمْسِ
فَمَا الَّذِي قَضَيْتَ فِيهِ؟ فَقَالَ اللَّهُ تَعَالَى:" أَمَا إِنَّ
عَبْدِي إِدْرِيسَ سَأَلَنِي أَنْ أُخَفِّفَ عَنْكَ حَمْلَهَا وَحَرَّهَا
فَأَجَبْتُهُ" فَقَالَ: يَا رَبِّ اجْمَعْ بَيْنِي وَبَيْنَهُ، وَاجْعَلْ
بَيْنِي وَبَيْنَهُ خُلَّةً.
ஒருநாள் ஹழ்ரத்
இத்ரீஸ் (அலை) அவர்கள் தேவை ஒன்றுக்காக வெளியில் சென்று
கொண்டிருக்கும்போது வெயிலின் உஷ்ணத்தால் மிகவும் அவதிப்பட்டார்கள்.
சூரியன் இவ்வளவு
தூரத்திலிருக்கும்போதே நாம் அதன் உஷ்ணத்தை தாங்க முடியவில்லையே! அதனை சுமந்து
கொண்டிருக்கும் வானவர் எப்படி தாங்குவார் என்று மனதிற்குள் எண்ணி, யா அல்லாஹ் சூரியனைச் சுமக்கும் வானவருக்கு அதன் உஷ்ணத்தால் சிரமம்
ஏற்படாதவாறு அருள் புரிவாயாக! என்று துஆ செய்தார்கள்.
அல்லாஹ் அந்த துஆவை ஏற்றுக் கொண்டு சூரியனைத் தாங்கும்
வானவர் மீது கிருபை செய்து, அதன் உஷ்ணத்தில் இருந்து அவரைக் காத்ததோடு, அவர்
சுமப்பதற்கு இலகு படுத்தியும் கொடுத்தான். திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்தை உணர்ந்த
அந்த வானவர் அல்லாஹ்விடம் இதுபற்றி கேட்டதற்கு என்னுடைய அடியார் இத்ரீஸ் (அலை) அவர்கள்
உம்மீது இரக்கம் கொண்டதால் இது நடந்தது என்று சொன்னான். உடனே அந்த வாணவர் “அல்லாஹ்வே! எனக்கும்
அவருக்கும் இடையே அன்பையும் நட்பையும் ஏற்படுத்து! அவருக்கும் எனக்கும் மத்தியில்
ஒரு இணைப்பை ஏற்படுத்து என்று துஆச் செய்தார். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
நபித்தோழர் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்த போது
فدخل
عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت
عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله
أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله
تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا
فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما
يختبر رضائي عنه،
அவர்களைச் சந்திக்கச்
சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டு விட்டேன். அவன் திருப்தி
பட்டதை நான் திருப்தி
பட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக்
காண்கிறீர்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன்.
ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா? என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக
நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.
( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}....,
உஸ்துல் ஃகாபா )
வானவர்களைப் பற்றி
நாம் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் ஏராளமாக
இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைக்கின்ற போது அவைகளைப் பற்றி
பார்க்கலாம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
நம் அறிவிலும், விளக்க ஞானத்திலும் பரக்கத் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
بارك الله فيك يا أخي الكريم.
ReplyDeleteMashallah
ReplyDeleteஉங்களுடைய பல்வேறு குறிப்புகளின் வழியாக நிறைய பயனடைந்திருக்கிறேன்
ReplyDeleteபுதிய கோணம் தேவையான ஆயத்து தேவையான ஹதீஸ் வரலாற்று நிகழ்வுகள் என அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள் அல்லாஹ் உங்களுடைய கல்வியில் பரக்கத் செய்வானாக