அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-5
நீதியின் நிழலில் இளைப்பாறுவோம்!!
அல்ஹம்துலில்லாஹ்!! நாம் நோற்ற 4 –வது நோன்பை சிறப்பாக
நிறைவு செய்து, தராவீஹ் தொழுகையை தொழுது விட்டு இறைமறையின் வசனத்தின் விளக்கத்தைப்
பெறும் பொருட்டு அமர்ந்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின்
நோன்புகளையும்,
வணக்க, வழிபாடுகளையும் எவ்வித
தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும்
நல்குவானாக!
ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அந்நிஸா அத்தியாயத்தின் 30 வசனங்களும், அல்மாயிதா அத்தியாயம்
முழுவதும் ஓதப்பட்டிருக்கின்றது. 150 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
திருக்குர்ஆன்
முழுவதிலும் நீதியை நிலைநாட்டுவது குறித்து பல்வேறு இடங்களில் அல்லாஹ்
பேசுகின்றான்.
குறிப்பாக இன்று
ஓதப்பட்ட அல்மாயிதா அத்தியாயத்தில் பல்வேறு வசனங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியதன்
அவசியத்தை உணர்த்துகிறது.
ஒவ்வொரு
உயிருக்கும் அது வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதை தடுப்பதற்கான உரிமை யாருக்கும்
வழங்கப்படவில்லை என்பதும் ஒரு உயிரை வாழவைப்பது எவ்வளவு மகத்தான செயல் என்பது
குறித்தும் உயர்த்திக் கூறப்பட்டுள்ளது.
சட்டம், சட்ட
மேலாண்மை, நீதி, நீதித்துறை, நீதிபரிபாலனம், நியாயம், நியாயத்திற்கு துணை நிற்பது
போன்ற நீதம் தொடர்பான பல்வேறு அம்சங்களை இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அதில் பின்வரும் வசனம் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ
شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا
تَعْدِلُوْا ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ ؕ
اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
இறைநம்பிக்கை
கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு
நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே
இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ்
நன்கறிந்தவன். ( அல்குர்ஆன்: 5: 8 )
இன்றைய
காலகட்டத்தில்,
அடுத்தவரின் உரிமைகள் தெரிந்தோ தெரியாமலோ இலகுவாக
பறிக்கப்படுகிறது. நாடுகளுக்கு இடையே ஏற்படும் தாக்குதல்களும் உரிமை மீறல்
பிரச்சினைதான். உரிமை என்பது, தனி மனிதனுக்கு ஏற்படுவது
மட்டுமல்ல,
நாடுகளுக்கு இடையேயும், வலியவன்-எளியவன் என்ற
பாகுபாட்டில் ஏற்படும் நிலையும் காரணம்.
தான், தன் குடும்பம்,
தன் இனம், தன் சமூகம் என நீதியை ஒரு
தலைபட்சமாக வளைத்துக் கொள்ளக்கூடாது. எங்கு நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அங்கு பிரச்சினைகள் இருக்காது.
எங்கெல்லாம் நீதி
நசுக்கப்படுகின்றதோ,
அங்கெல்லாம் அழிவு என்பது தானாகவே வந்து விடுகின்றது.
பாரபட்சமின்றி
நீதி செலுத்துவதும்,
அதனை நிலை நாட்டுவதும், உண்மைக்கு சாட்சியாக
இருப்பதும்,
அதனை நேசிக்கும் மனிதர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
அது தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ, பெரும் பாதிப்பை
ஏற்படுத்திய போதிலும் நீதி தவறக்கூடாது என்பதையும் திருக்குர்ஆன் இவ்வாறு
வலியுறுத்துகின்றது:
மேலும், சமூகத்தில் நீதியோடு வாழ்வதற்கு முன்பாக நம்மோடு இணைந்து வாழ்கிறவர்களோடு நாம்
நீதியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
வெளியே நீதியை தேடுபவர்கள், நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் தன் சொந்த மனைவிக்கும் மக்களுக்கும் அநீதி
இழைக்கிறார்.
பக்கத்து நாட்டு
அநீதியை விமர்சிப்பவர் தன் பக்கத்து வீட்டுக்காரரின் உரிமையை வழங்காமல்
பாழ்படுத்தி வருகிறார்.
எனவே, நீதியை, நீதியை வழங்கி வாழ்வதை நம்முடைய மட்டத்தில் இருந்து துவங்குவோம்.
حَدَّثَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ
قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو يَعْنِي ابْنَ
دِينَارٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ ابْنُ
نُمَيْرٍ وَأَبُو بَكْرٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَفِي حَدِيثِ زُهَيْرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ عَلَى مَنَابِرَ
مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ
الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا رواه مسلم
அப்துல்லாஹ் பின்
அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"நீதியும், நேர்மையும் உள்ளவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப் பக்கத்தில் ஒளியாலான
மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வள மிக்கதே). அவர்கள் தமது
நிர்வாகத்திலும்,
குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட
(அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). என
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம்)
பிள்ளைகளிடம் நேர்மையாக நடங்கள்
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ حَدَّثَنَا أَبُو
عَوَانَةَ عَنْ حُصَيْنٍ عَنْ عَامِرٍ قَالَ
سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ أَعْطَانِي أَبِي عَطِيَّةً فَقَالَتْ
عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً
فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَعْطَيْتَ سَائِرَ
وَلَدِكَ مِثْلَ هَذَا قَالَ لَا قَالَ فَاتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ
أَوْلَادِكُمْ قَالَ فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ رواه البخاري
ஆமிர் பின் ஷர்ஹபீல் அவர்கள் கூறியதாவது: நுஃமான் பின்
பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து
ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு
அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள்.
என் தந்தை
அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான்
அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என்
மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை
சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற
பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று
கேட்டார்கள்.
அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார்.
அப்போது நபி (ஸல்)
அவர்கள்,
“அவ் வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள்
பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக்
கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து
செய்தார். ( நூல் : புகாரி )
நீதியின் நிழலிலேயே இறைநம்பிக்கையாளர்கள் இளைப்பாறுவார்கள்.
وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ يَّهْدُوْنَ
بِالْحَـقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ
உண்மையைக் கொண்டு வழிகாட்டி, அதன்படி நீதி செலுத்தும்
ஒரு சாராரும் நாம் படைத்தவர்களில் உள்ளனர். ( அல்குர்ஆன்: 7:
181 )
خَرَجَ
عَبْدُ اللهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ، وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ،
حَتَّى إِذَا كَانَا بِخَيْبَرَ تَفَرَّقَا فِي بَعْضِ مَا هُنَالِكَ، ثُمَّ إِذَا
مُحَيِّصَةُ يَجِدُ عَبْدَ اللهِ بْنَ سَهْلٍ قَتِيلًا فَدَفَنَهُ، ثُمَّ أَقْبَلَ
إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ وَحُوَيِّصَةُ بْنُ
مَسْعُودٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ، وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ، فَذَهَبَ
عَبْدُ الرَّحْمَنِ لِيَتَكَلَّمَ قَبْلَ صَاحِبَيْهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَبِّرِ الْكُبْرَ فِي السِّنِّ»، فَصَمَتَ،
فَتَكَلَّمَ صَاحِبَاهُ، وَتَكَلَّمَ مَعَهُمَا، فَذَكَرُوا لِرَسُولِ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتَلَ عَبْدِ اللهِ بْنِ سَهْلٍ، فَقَالَ
لَهُمْ: «أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا فَتَسْتَحِقُّونَ صَاحِبَكُمْ أَوْ
قَاتِلَكُمْ»، قَالُوا: وَكَيْفَ نَحْلِفُ، وَلَمْ نَشْهَدْ؟ قَالَ:
«فَتُبْرِئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا»، قَالُوا: وَكَيْفَ نَقْبَلُ
أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ؟ فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى عَقْلَهُ
அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும்
முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு
கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு
அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை
முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய
(சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்ட வரின் சகோதரர்)
அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
வந்தார்கள்.
அப்போது அவர்கள்
அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது
பேர் சத்தியம் செய்து, நீங்கள் “உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை’ அல்லது “உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை’ எடுத்துக்கொள்கிறீர்
அதற்கு அவர்கள், “(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம்
செய்வோம்?’’ என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை
வழங்கினார்கள். ( நூல்: முஸ்லிம் )
இந்த செய்தியை
ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் தன்னுடைய முஸ்லிம் தோழர்களில் ஒருவரை கொன்று விட்டார்கள். கொன்றது யாரென்றும்
தெரியவில்லை. அந்தத் தோழரோ,
இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றார். இப்போது நபி
(ஸல்) அவர்களிடம் இந்த வழக்கு வருகின்றது. மேலும், அந்த முஸ்லிம் நபித்தோழர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடம் என்பது, சுற்றிலும் முஸ்லிமல்லாத யூதர்கள் மட்டுமே வசிக்கின்ற யூதக் குடியிருப்பு
பகுதியாகும்.
இப்போது நபி (ஸல்)
அவர்கள் தோழர்களிடத்தில் கேட்கின்றார்கள். ஐம்பது நபர்கள் சத்தியம் செய்து இன்னார்
தான் கொலை செய்தார் என்று சொல்லுங்கள்! என்று கேட்க, அதற்கு அருமை தோழர்கள் சொன்ன பதில், நம்முடைய
உரோமங்களையெல்லாம் சிலிர்க்க வைக்கின்றது.
அதாவது, நாங்கள் கொலை நடந்த இடத்தில் இல்லாத போது, இன்னார் தான் கொலை
செய்தார் என்று கண்கூடாகக் காணாத போது, எப்படி நாங்கள் சத்தியம்
செய்வோம் என்று கேட்பதன் மூலம், நாங்கள் நீதிக்குத்தான்
சாட்சியானவர்கள்! அநீதிக்கு சாட்சியானவர்கள் அல்ல என்பதை
நிரூபித்திருக்கின்றார்கள். மேற்கண்ட 7:181 ன் வசனத்தின் விளக்கவுரையாகவே நபித்தோழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை
விளங்க முடிகின்றது.
அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
أَنَّ أُخْتَ الرُّبَيِّعِ، أُمَّ حَارِثَةَ،
جَرَحَتْ إِنْسَانًا، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْقِصَاصَ،
الْقِصَاصَ»، فَقَالَتْ أُمُّ الرَّبِيعِ: يَا رَسُولَ اللهِ، أَيُقْتَصُّ مِنْ
فُلَانَةَ؟ وَاللهِ لَا يُقْتَصُّ مِنْهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللهِ يَا أُمَّ الرَّبِيعِ، الْقِصَاصُ كِتَابُ
اللهِ»، قَالَتْ: لَا، وَاللهِ لَا يُقْتَصُّ مِنْهَا أَبَدًا، قَالَ: فَمَا
زَالَتْ حَتَّى قَبِلُوا الدِّيَةَ
ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி)
அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி) காயப்படுத்திவிட்டார்கள். இதையொட்டி அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த)
நபி (ஸல்) அவர்கள்,
“பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்
கொள்க)’’ என்று கூறினார்கள்.
அப்போது உம்முர்
ரபீஉ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணை யாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது’’ என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின்
வேத(ச் சட்ட)மாகும்‘’ என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், “அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது’’ என்று கூறினார்கள்.
அப்படியே பேச்சு
தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை
ஏற்றுக்கொண்டனர். (
நூல்: முஸ்லிம் )
நபி (ஸல்)
அவர்களிடம் ஒரு வழக்கு கொண்டு வரப்படும் போது, தவறிழைத்தது ஒரு பெண்
என்று கூட பாராமல்,
பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, பழிக்குப் பழி வாங்குங்கள்! பழிக்குப் பழி வாங்குங்கள் என்று திரும்பத்
திரும்பக் கூறுகின்றார்கள்.
மேலும் பழிக்குப்
பழி வாங்கப்படாது என்று ஒருவர் குறிக்கிடும் போது கூட, அல்லாஹ்வின் வேத சட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று
தீர்ப்பளிக்கின்றார்கள். பிறகு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகை
வழங்கப்படுகின்றது.
عَنْ
سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَانَ يَبْعَثُ عَبْدَ اللهِ بْنَ رَوَاحَةَ فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَ
يَهُوَدَ , قَالَ: فَجَمَعُوا لَهُ حُلِيًّا مِنْ حُلِيِّ نِسَائِهِمْ ,
فَقَالُوا: هَذَا لَكَ وَخَفِّفْ عَنَّا وَتَجَاوَزْ فِي الْقَسْمِ , فَقَالَ
عَبْدُ اللهِ بْنُ رَوَاحَةَ رَضِيَ اللهُ عَنْهُ: يَا مَعْشَرَ يَهُوَدَ ,
وَاللهِ إِنَّكُمْ لَمِنْ أَبْغَضِ خَلْقِ اللهِ إِلَيَّ وَمَا ذَلِكَ بِحَامِلِي عَلَى أَنْ أَحِيفَ
عَلَيْكُمْ، فَأَمَّا الَّذِي عَرَّضْتُمْ مِنَ الرِّشْوَةِ فَإِنَّهَا سُحْتٌ
وَإِنَّا لَا نَأْكُلُهَا. قَالُوا: بِهَذَا قَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ
السنن الكبرى للبيهقي (4 / 206)
யூதர்களுக்கு எதிரான ஃகைபர் யுத்தம் வெற்றி பெற்று
அவர்களின் நிலம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய விளைநிலத்தை யூதர்களிடமே திருப்பி
அளித்தார்கள் நபியவர்கள். விளைச்சலில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் பங்கு செலுத்த
வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பங்கை நிர்ணயித்து
விளைச்சலைப் பாகம் பிரிக்க அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைத்தான்
நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். மிகவும் கவனமுடன் அனைத்தையும் சரிபார்த்து, விளைச்சலைப் பங்கிட்டு எது முஸ்லிம்களுக்கு எது யூதர்களுக்கு என்று இப்னு
ரவாஹா சொன்னதும்,“நீர் நியாயமாய்ப் பங்கு பிரிக்கவில்லை இப்னு ரவாஹா.” என்று சிலசமயம் யூதர்கள் குறுக்கிடுவார்கள்.
அந்த நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் “அப்படியா! ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்கு எந்தப் பங்கு வேண்டுமோ அதை
நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.” என்பார்கள். அப்படித்தான் ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) விளைச்சலின் பங்கைப் பெற்று
வரப்போயிருந்தார்கள். அப்போது அந்த யூதர்கள் தங்கள் பெண்களின் நகைகள் சிலவற்றைத்
திரட்டி அவருக்கு இனாமாய் அளிக்க வந்தார்கள். “இந்தா இது உமக்கு. இதைக்
கொண்டு சென்றால் உன் வீட்டுப் பெண்கள் மகிழ்வார்கள்; வைத்துக்கொள். ஆனால், பங்கு பிரிப்பதில் எங்கள் பக்கம் கொஞ்சம் பார்த்து
நடந்து கொள்ளுங்கள்”
வேறொன்றுமில்லை என்றார்கள். ( கையூட்டு அளித்து அவரைக்
கைக்குள் போட்டுக்கொண்டால்,
தங்களுக்குச் சாதகமாய் அவர் பங்கு பிரிப்பார் என்பது
யூதர்களது எண்ணம் )
ஆனால் அப்துல்லாஹ்
இப்னு ரவாஹா
(ரலி) அவர்களோ “ஓ யூதர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன்!
இறைவனின் படைப்பில் நீங்களே எனக்கு மோசமானவர்கள். ஆனால் அதற்காக உங்களுக்கு அநீதி
இழைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை.
கையூட்டுப் பெறுவது எங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அதை நாங்கள் தொடக்கூட
மாட்டோம்.”
அந்த பதிலைக் கேட்டுவிட்டு மறைக்க இயலாமல் உண்மையைப்
பேசினார்கள் யூதர்கள். ஆம்! “இது, இந்த நீதிதான் வானத்தையும் பூமியையும் தாங்கிப் பிடித்துள்ளது.” என்று.
( நூல்:
பைஹகீ )
ஆகவே, நீதியுடன் நடப்போம்! நீதியின் நிழலில் இளைப்பாறுவோம்!!
வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ்...நல்ல விரிவான விளக்கங்கள்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி.
மாஷா அல்லாஹ் உங்கள் ஆழிய சிந்தனை
ReplyDeleteமேலும் கூர்மையடையட்டும்