அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-7
குரோதம் களைவோம்!!
அல்ஹம்துலில்லாஹ்!!
நாம் நோற்ற 6 –வது நோன்பை சிறப்பாக நிறைவு செய்து, 7 – வது நாள் தராவீஹ் தொழுகையை
தொழுது விட்டு இறைமறையின் வசனத்தின் விளக்கத்தைப் பெறும் பொருட்டு
அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அமர்வை அருள் செய்யப்பட்ட
அமர்வாக ஆக்கியருள்வானாக! ஆமீன்!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற
நாட்களின் நோன்புகளையும்,
வணக்க, வழிபாடுகளையும் எவ்வித
தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும்
நல்குவானாக!
ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல் அஃராஃப் அத்தியாயம் துவங்கப்பட்டு 206 வசனங்கள் முழுமையாக
ஓதி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஓதப்பட்ட
அல் அஃராஃப் அத்தியாயத்தின் 43 வது வசனத்தில் சுவர்க்கவாசிகளின் அழகிய பண்பாட்டைக்
குறித்து பேசுகின்றான்.
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ
“மேலும்,
சுவனவாசிகளான அவர்களுடைய நெஞ்சங்களில் (இவ்வுலகிலுள்ள) குரோதத்தை நாம் அகற்றி
விடுவோம்”. ( அல்குர்ஆன்: 7: 43 )
குரோதமில்லா
நெஞ்சம் என்பது சுவனவாசிகளிடம் இடம் பெற்றிருக்கும் உயர் பண்பென்று அல்குர்ஆன்
அடையாளப்படுத்துகின்றது.
இதே போன்று இன்னொரு இடத்திலும்
அல்லாஹ் அதை உறுதிபடுத்துகின்றான்.
وَنَزَعْنَا
مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி
விடுவோம்;
(எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி
அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
( அல்குர்ஆன்: 15:
47 )
அன்ஸாரி நபித்தோழர்களின்
உயர் பண்பாடுகளில் ஒன்று பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு சிறப்பித்துக் கூறுகின்றது.
وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ
وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ
رَءُوفٌ رَّحِيمٌ ا (لحشر/ ١٠)
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தமக்குப் பின்னால்
வந்தவர்களுக்காக,
“எங்கள் இரட்சகனே! எமக்கும் ஈமானோடு எம்மை(ப் பிரிந்து)
முந்திய எமது சகோதரர்களுக்கும் பாவமன்னிப்புத் தருவாயாக! ஈமான் கொண்டவர்கள்
விஷயத்தில் எமது இதயங்களில் குரோதத்தன்மை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்கனே! நிச்சயமாக நீ மிகப் பெரும் அன்பாளன், மிகக் கிருபை செய்பவன்”
என்று பிரார்த்திப்பார்கள்”. ( அல்குர்ஆன்:
59: 10 )
فعن أنس بن مالك رضي الله عنه قال: كنَّا جلوسًا مع الرَّسول
صلى الله عليه وسلم فقال: ((يطلع عليكم الآن رجل من أهل الجنَّة، فطلع رجل من الأنصار،
تَنْطِفُ لحيته من وضوئه، قد تَعَلَّق نَعْلَيه في يده الشِّمال، فلمَّا
كان الغد، قال النَّبي صلى الله عليه وسلم مثل ذلك، فطلع ذلك الرَّجل مثل المرَّة
الأولى، فلمَّا كان اليوم الثَّالث، قال النَّبي صلى الله عليه وسلم مثل مقالته
أيضًا، فطلع ذلك الرَّجل على مثل حاله الأولى، فلمَّا قام النَّبي صلى الله عليه
وسلم تبعه عبد الله بن عمرو بن العاص، فقال: إنِّي لَاحَيْت أبي فأقسمت ألَّا أدخل عليه
ثلاثًا، فإن رأيت أن تُـؤْوِيَني إليك حتَّى تمضي، فَعلتَ. فقال: نعم. قال أنس:
وكان عبد الله يحدِّث أنَّه بات معه تلك الليالي الثَّلاث، فلم يره يقوم من
اللَّيل شيئًا، غير أنَّه إذا تعارَّ وتقلَّب على فراشه، ذَكَر الله عزَّ وجلَّ
وكبَّر حتَّى يقوم لصلاة الفجر، قال عبد الله: غير أنِّي لم أسمعه يقول إلَّا
خيرًا. فلمَّا مضت الثَّلاث ليال، وكدت أن أحتقر عمله، قلت: يا عبد الله، إنِّي لم
يكن بيني وبين أبي غضب ولا هَجْرٌ، ولكن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
ثلاث مِرَار: يطلع عليكم الآن رجل من أهل الجنَّة، فطلعت أنت الثَّلاث مِرَار،
فأردت أن آوي إليك لأنظر ما عملك، فأقتدي به، فلم أرك تعمل كثير عملٍ، فما الذي
بلغ بك ما قال رسول الله صلى الله عليه وسلم؟ فقال: ما هو إلا ما رأيت، غير أنِّي
لا أجد في نفسي لأحد من المسلمين غِشًّا، ولا أحسد أحدًا على خير أعطاه الله إياه.
فقال عبد الله: هذه التي بلغت بك، وهي التي لا نطيق
அனஸ் (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்
இருக்கின்ற போது நபி {ஸல்} அவர்கள் தற்போது சுவர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடத்தில் வருவார்கள்
என்று கூறினார்கள்.
அப்போது
அன்ஸாரிகளில் ஒருவர் வுழூ செய்ததன் பின்னர் தனது தாடியினால் தண்ணீர் வடிகின்ற
நிலையில் இடது கையில் தனது பாதணிகளை தூக்கிய நிலமையில் வந்தார். இரண்டாவது நாளும்
முதலாம் நாள் கூறியதைப் போன்றே நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே வந்தார். முன்றாவது நாளும் நபி {ஸல்} அவர்கள் இரண்டாவது நாள் கூறியதை போன்றே
கூறினார்கள். அதே மனிதர் முன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி
(ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அந்த
மனிதரை பின்தொடர்ந்து சென்று அவருடைய நிலவரத்தை அறிய அவரிடம் மூன்று நாட்கள்
தங்குவதற்கு அனுமதி கோரினார். அதற்கவர் அனுமதி வழங்கினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு
அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்:
மூன்று நாட்களும் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; துஆவை ஓதுவார்கள்;
பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பின்னர் பஜ்ரு வரையும் தூங்குவார்கள். பிறரைப் பற்றி நல்லவற்றையே கூறுவார்கள்; மூன்று நாட்களும் இவ்வாறே நாம் அவரை அவதானித்தேன். இதன் பின்னர் அவரின்
நல்லமல்களை குறைவாக மதிப்பிட எனக்கு நேரிட்டது. அப்துல்லாஹ் இப்னி அம்ரு இப்னு ஆஸ்
(ரலி) அவர்கள் அந்த மனிதரை பார்த்து, ‘நபி {ஸல்} அவர்கள்
எம்மைப் பார்த்து சுவர்க்கவாசிகளில் ஒருவர் வருவார் என்று கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். இதனால் நீங்கள் விஷேஷமாக எந்த நல்லமலை
செய்ய வேண்டும் என்பதனை பார்க்கவே நான் உங்களிடத்தில் தங்கினேன். ஆனாலும் எந்தவித
அமல்களையும் அதிகமாக நீங்கள் செய்ததாக காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி {ஸல்} அவர்கள் உங்களை
சுவர்க்கவாசி என்று கூறுவதற்கு காரணம் என்னவென்று’ அவரிடம் வினவினார். அதற்கு அம்மனிதர் கூறினார், “நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கவும், மோசடி செய்யவும்
மாட்டேன். அவ்வாறே என்னைவிட எவரையெல்லாம் அல்லாஹ் உயர்த்தி நல்லவற்றை
கொடுத்திருக்கின்றானோ அவற்றில் நான் குரோதமோ, பொறாமையோ கொள்ள மாட்டேன்.” என்று கூறினார்.
அப்துல்லாஹ் இப்னு
அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘இந்தவிஷயமே
எம்மால் செய்ய முடியாத காரியமாகும். (ஹதீஸின் சுருக்கம்) (
நூல்: :அஹ்மத் )
இறை மன்னிப்பைத் தடுக்கும் குரோதம்...
عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم، قال: ” تفتح أبواب
الجنة يوم الإثنين، ويوم الخميس، فيغفر لكل عبد لا يشرك بالله شيئا، إلا رجلا كانت
بينه وبين أخيه شحناء، فيقال: أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا،
أنظروا هذين حتى يصطلحا ( أخرجه الإمام مسلم في صحيحه)
பிரதி திங்கள், மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன.
அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் (பாவங்கள்)
மன்னிக்கப்படுகின்றன. யாருக்கும் தனது மற்ற (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையில்
குரோதமான நிலை காணப்படுகின்றதோ அவரைத் தவிர. அவ்விருவரும் சமஸரமாகும் வரை
காத்திருங்கள்,
அவ்விருவரும் சமஸரமாகும் வரை காத்திருங்கள். அவ்விருவரும்
சமஸரமாகும் வரை காத்திருங்கள் என (வானவர்களிடம்) கூறப்படும் என நபி ஸல் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் நபித்தோழர் அபூஹுரைரா ரழி அவர்கள். (முஸ்லிம்)
மாற்றுக்கருத்து
அனுமதிக்கப்பட்டதே! ஆனால், அதன் பெயரால் நாம் கொள்ளும் குரோதம் தவிர்க்கப்பட
வேண்டும்.
حينما وقع الخلاف المشهور بين علي بن أبي طالب -رضي
الله عنه- ومعاوية بن أبي سفيان، وكان الحقّ مع أمير المؤمنين عليّ، حاول قيصر
الروم استغلال الفرصة ليتوصّل إلى مآربه،
فأرسل إلى معاوية يقول: "من قيصر ملك الرّوم إلى
معاوية بن أبي سفيان، أمّا بعد، علِمنا بما وقع بينكم وبين علي بن أبي طالب، فلو
أمرتني أرسلت لك جيشا يأتون إليك برأسه"،
فردّ عليه معاوية: "من معاوية بن أبي سفيان إلى
هرقل، أمّا بعد: أخَوان تشاجرا فما بالك تدخل فيما بينهما، إن لم تخرس، أرسلت إليك
بجيش أوله عندك وأخره عندي، يأتونني برأسك أقدّمه لعلي بن أبي طالب".
(تاريخ الإسلام)
இஸ்லாமிய கலீஃபா அலீ (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்
அவர்களிடம் கருத்து வேற்றுமை கொண்டிருந்த அமீர் மு
في صحيح
البخاري أن عبد الله بن عمر رضي الله عنه كان يصلي خلف الحجاج بن يوسف الثقفي،
وكذا أنس بن مالك، وكان الحجاج فاسقاً ظالماً،
இப்னு உமர் (ரலி)
அவர்களும்,
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் கொடுங்கோன்மை புரிந்த
ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் பின்னால் நின்று தொழுதிருக்கின்றார்கள்.
وفي
الصحيح أن عثمان رضي الله عنه لما حصر صلى بالناس شخص، فسأل سائل عثمان: إنك إمام
عامة وهذا الذي صلى بالناس إمام فتنة؟ فقال
يا ابن
أخي، إن الصلاة من أحسن ما يعمل الناس، فإذا أحسنوا فأحسن معهم وإذا أساءوا فاجتنب
إساءتهم
அப்துல்லாஹ் இப்னு
அதீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டில் சிறைவைக்கப்பட்டு
முற்றுகையிட்டிருந்த போது உஸ்மான் (ரலி) அவர்களிடம் “இந்த கலகக்காரர்களின் பின்னால் நின்று தொழலாமா?” என்று வினவினார்.
அதற்கு உஸ்மான்
(ரலி) அவர்கள் ”என் சகோதரனின் மகனே! மனிதர்கள் செய்யும் அமல்களில் மிகவும் அழகிய அமல்
தொழுகைதான்.
உன்னோடு நல்ல
முறையில் நடந்து கொள்பவர்களோடு நீயும் நல்ல முறையில் நடந்து கொள். உன்னோடு தீய
முறையில் நடந்து கொள்பவர்களோடு நீ அவர்களுக்கு தீங்கு செய்வதில் இருந்தும்
தவிர்ந்து வாழ்ந்து கொள்! அவ்வளவு தான். மற்றபடி தொழுகையை அவர்களோடு சேர்ந்தே
நிறைவேற்று”
என்று பதில் கூறினார்கள்.
எனவே, குரோதம், பகைமை, வெறுப்பு
ஆகியற்றைக் களைந்து அனைவரிடமும் நேசம் பாராட்டுவோம்!
அல்ஹம்து லில்லாஹி....
ReplyDelete