அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக்
தக்பீரும்…
மகத்துவமும்
சிறப்பும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான துல்ஹஜ் மாதத்தின் துவக்க
முதல் பத்து நாட்களின் சிறப்பு வாய்ந்த ஜும்ஆ நாளில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.
துல்ஹஜ் மாதத்தின்
முதல் பத்து நாட்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்.
وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ
“காலத்தின் மீது சத்தியமாக
மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக” என்று 89 அல் ஃபஜ்ர் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
எனவே, படைத்த இறைவனே சத்தியமிட்டுக்கூறிய கண்ணியமிக்க அந்த நாட்களில் நாம் இருக்கின்றோம்.
பத்து இரவுகள்
என்று இங்கு குறிப்பிடுவது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். என இமாம்
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு சுபைர் (ரஹ்),
முஜாஹித் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றை
ஆதாரமாக குறிப்பிடுகின்றார்கள்.
( இப்னு கஸீர் : 8 / 413 )
நாம் சங்கையான இந்த மாதத்தின் அரஃபா நாளையும், தியாகத் திருநாளையும், அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களையும் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அந்த நாட்களின்
சங்கையை மகத்துவத்தை நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம்.
இந்த ஜும்ஆ உடைய
நாளில் நாம் அந்த சங்கையை மகத்துவத்தை ஒரு முறை நினைவு
படுத்திக் கொள்வோம்.
அரஃபா நாளின் சிறப்பு:-
அரஃபா நாள் என்பது
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருக்கிறது.
1) அல்லாஹ் புகழ்ந்து பேசும் நாள்..
அபூஹுரைரா மற்றும்
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) ஆகியோர் போன்றோர் அறிவிக்கிறார்கள் :
عن ابن
عمر أن النبي صلى الله عليه وسلم قال: إن الله تعالى يباهي ملائكته عشية عرفة بأهل
عرفة، فيقول: انظروا إلى عبادي أتوني شعثا غبرا. رواه أحمد وصححه الألباني.
'நிச்சயமாக அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் அரஃபா தினத்தின் மாலையில் அரஃபாவிற்கு வந்திருக்கக்கூடிய மக்களை
குறித்து மலக்குமார்களிடம் புகழ்ந்து பேசுகிறான். "எனது மலக்குமார்களே! எனது
அடியார்களை நோக்கி பாருங்கள். அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்" என்று அல்லாஹ்
கூறுகிறான் என்று நபி ﷺ
கூறினார்கள். நூல்: (முஸ்னத் அஹ்மத்)
2) அடியார்கள் நரக விடுதலை பெறும் மகத்தான நாள்:-
عن
عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: ما من يوم أكثر من أن يعتق
الله فيه عبدا من النار من يوم عرفة،
ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:'அல்லாஹ் அதிக அதிகமாக தனது அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய தினம் அரஃபா தினத்தை
விட வேறு தினம் இருக்க முடியாது' என்று நபி ﷺ கூறினார்கள்.
நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்)
3) சிறந்த துஆ இடம் பெற்றுள்ள நாள்..
அப்துல்லாஹ் இப்னு
அம்ர் இப்னு ஷுஐபு (ரலி) அறிவிக்கிறார்கள் :
وروى
الترمذي عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال: خير
الدعاء دعاء يوم عرفة، وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا
شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
'துஆக்களில் மிகவும்
சிறந்த துஆ அரஃபா தினத்தில் செய்யப்படக்கூடிய துஆ நானும் எனக்கு முன் வந்த
நபிமார்களும் கூறிய கூற்றுகளில் மிகச் சிறந்த கூற்று லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா
ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும் என்று நபி
ﷺ கூறினார்கள். ( நூல்: (திர்மதி, முஸ்னத் அஹ்மத்)
4) சன்மார்க்கம்
இஸ்லாம் பரிபூரணமாக்கப்பட்ட நாள்...
அன்றைய தினத்தில்
தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான்.
உமர் (ரலி)
அறிவிக்கின்றார்கள்:
عن عمر
بن الخطاب رضي الله عنه أن رجلا من اليهود قال له: يا أمير المؤمنين، آية في
كتابكم تقرءونها، لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال أي آية؟
قال: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا المائدة:3.
قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم:
وهو قائم بعرفة يوم الجمعة
'யூதர் ஒருவர் உமர் (ரலி)
அவர்களிடம் வந்து,
"யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம்
இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை
நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்" என்று கூறினார். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் "அது எந்த வசனம்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதன்
இன்றைய தினம்
உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.
[சூரா அல் மாயிதா: 3]
என்ற வசனத்தை ஓதிக் காட்டினான்.
அதற்கு உமர் (ரலி)
அவர்கள்,
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த வசனம் எப்பொழுது நபி ﷺ மீது அல்லாஹ் இறக்கி வைத்தான் என்று எனக்குத் தெரியும்.
நிச்சயமாக இந்த வசனமானது நபி ﷺ அரஃபா தினத்தன்று
அரபாவில் நின்று கொண்டு இருந்த பொழுது அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா நபி ﷺ மீது இறக்கி வைத்தான். அந்த அரஃபா தினம் ஜும்ஆ தினமாக
இருந்தது" என்று கூறினார்கள். நூல்கள்: (ஸஹீஹ்
அல்-புஹாரி,
ஸஹீஹ் முஸ்லிம்)
அரஃபா நோன்பு...
இன்று சமூகத்தில்
சில அரஃபா நோன்பு குறித்து பெரும் குழப்பத்தை உண்டு பண்ணி வருகிறார்கள்.
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ
وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ
عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ
وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى
اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு
மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) ( நூல் : முஸ்லிம் )
மேற்கண்ட ஹதீஸில்
அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
ஹாஜிகள் அரஃபா
நாளில் நோன்பு நோற்பது நபிவழி அல்ல.
حَدَّثَنَا
يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَوْ قُرِئَ عَلَيْهِ قَالَ
أَخْبَرَنِي عَمْرٌو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ
عَنْهَا أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلَابٍ وَهُوَ وَاقِفٌ فِي
الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ رواه البخاري
மைமூனா (ரலி)
அவர்கள் கூறுகிறார்கள் : "அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு
நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில்
தங்கியிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக்
கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் குடித்தார்கள்.
( நூல் : புகாரி )
ஹாஜிகள் அல்லாத
மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு முதலில் கூறிய செய்தி ஆதாரமாக
அமைந்துள்ளது.
அரஃபா நாள் எது?
துல்ஹஜ் மாதம்
பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு
எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே
அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து
நடைமுறையாக இருந்தது.
நபி (ஸல்) அவர்கள்
மதீனாவில் பத்தாண்டு வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான்
மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறியதாக வரலாற்றில்
எந்த ஒரு சான்றும் இல்லை .
அப்படி
இருக்குமேயானால்,
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி
ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு
கூறியிருப்பார்கள். அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.
ஆனால் ஹதீஸ்களில்
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை.
முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாட்கள் இடைவெளி உள்ளன. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில்
மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு ஆளனுப்பி விசாரித்து ஊர்ஜிதப்படுத்த வாய்ப்புகள்
இருந்தும் கூட நபி ஸல் அவர்கள் அப்படி செய்தார்களா? என்றால் அப்படியான எந்த முயற்சியிலும் மாநபி ஸல் அவர்கள் ஈடுபட்டதாக எந்த
தரவுகளும் நபிமொழிகளில் இடம் பெற வில்லை.
ஹாஜிகள் அரபாவில்
கூடும் நாள் தான் உலகம் முழுமைக்கும் அரஃபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த
விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று நபி ஸல் அவர்கள் மீது
அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எப்படி அரஃபா நாளை முடிவு செய்தார்களோ அப்படி முடிவு செய்வதைத் தவறு
என்று சொல்லும் எந்தக் கருத்தும் வழிகேடான, பிழையான கருத்தாகும்
என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.
ஒரு பேச்சுக்கு
இவர்கள் சொல்வது போன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே உலகின் அனைத்து பகுதி
மக்களுக்கும் அரஃபா நாள் என்று நாம் வைத்துக் கொண்டால் உலகில் பல பகுதி மக்களுக்கு
அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடும்.
ஹாஜிகள் சுப்ஹுக்குப்
பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு
அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.
அமெரிக்காவைப்
பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள்
அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள்.
அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால்
அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.
அல்லாஹ் கூறுவது
போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?
இஸ்லாம் உலகளாவிய
மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க
முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும். அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப்
பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும்.
மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ்
நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும்.
அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள்
அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள்.
அமெரிக்க
முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா
நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.
நோன்பு நோற்பது
ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப்
போகிறார்களா?
ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க
வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது.
அமெரிக்க
முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று
ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள்
அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க
வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில்
நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக
உள்ளது.
நபி (ஸல்)
அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி
மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம்
விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
நாம் புரிந்து கொள்ள இலகுவான ஒரு வழி....
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ
وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ
فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ
أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இந்தக் குர்ஆன்
ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்
வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில்
யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (திருக்குர்ஆன் :
2:185)
பிறை சம்பந்தமான
முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது.
இந்த
வசனத்தில் கூறப்பட்டுள்ள ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர என்ற பதத்தை ஆராய்ந்து
பார்த்தால். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து
"உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே
கிடைத்து விடும். அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே
பயன்படுத்துவதில்லை.
ஃபமன்
ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர – உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ ரமளான்
மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த
வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
ஏனெனில்
தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன். உங்களில் யார்
அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூறவரும் செய்தி என்ன என்பதை இப்போது
ஆராய்வோம்.
இதைப்
புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை
முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற
நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம்.
أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى
سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ
طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا
خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
நம்பிக்கை
கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது
கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு
கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ
அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர்
ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது.
நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (திருக்குர்ஆன் : 2:184)
உங்களில்
யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில்
நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். உங்களில் யார்
நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற
கருத்து அதில் அடங்கியுள்ளது.
எல்லோருமே
நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது. இந்த
வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற
வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில்
அமைந்த சொற்றொடர்களாகும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில்
அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
இந்த
வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ
யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித்
தான் புரிந்து கொள்ள முடியும். நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது
வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.
فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا
جِدَالَ فِي الْحَجِّ
ஹஜ்ஜை
மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை
மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.
فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ
الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ
وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ
குர்பானிப்
பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக்
கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக்
கொள்ளவில்லையோ (திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.
இந்த
நடையில் இன்னும் பல வசனங்களைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும்
இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம்.
அல்லாஹ்வின்
வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இருக்காது என்பதை நெஞ்சிலிருத்தி ஆராய
வேண்டும்.
அம்மாதத்தை
ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார். ஒருவர் ரமளானை அடைந்த
பின் இன்னொருவர் ரமளானை அடைவார். இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ
என்று கூற முடியும். அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக்
கொள்வோம். எல்லோருமே அடைந்திருக்கும் போது உங்களில் யார் அடைகிறாரோ எனக் கூறுவது
வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும்.
மரணித்தவர்
ரமளானை அடைய மாட்டார்; உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவா? இதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவா? என்று கூற முடியாது. ஏனெனில் குர்ஆன் உயிருள்ளவர்களைப்
பார்த்துப் பேசக் கூடியது. உயிருள்ளவர்களை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது.
உங்களில்
என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித் தான். எனவே
உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும் அடையாதவர்களும் இருப்பார்கள். நோன்பு
மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிரோடு உள்ளவர்களுக்குத்
தான். எனவே நுண்ணறிவாளனாகிய அல்லாஹ், உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானா? யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்பதைக் கண்டு கொள்ளாமல்
செல்பவர்களை விட இப்படி விவேகமற்ற விளக்கம் தருபவர்கள் தான் குர்ஆனை அதிகம்
அவமதிப்பவர்கள்.
அதாவது
உலகில் உயிரோடு வாழக் கூடிய மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம்.
அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது
அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.
ஒருவர்
அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? அறிவியல் அறிவு வளராத காலத்தில் இவ்வாறு கேட்கலாம். உலகம்
தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க
முடியாது. யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான
அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை தெரிந்து
கொண்டோம்.
மாதத்தை
அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும்.
எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு
துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள்.
நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த
ஹதீஸின் பொருள்.
எந்த
ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே
பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி
நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில்
ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன்
அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய
பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத்
தீர்மானித்தார்கள். ( நன்றி:https://aleemqna.blogspot.com/2014/10/blog-post.html?m=1 )
அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் தக்பீர் சொல்வது....
قال
الله تعالى : {وَاذْكُرُواْ اللّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ ( البقرة 203 )
“அல்லாஹ்வின் பெயரை
எண்ணப்பட்ட நாட்களில் நீங்கள் கூறுங்கள் …. 22:203 என்ற வசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள்: ”எண்ணப்பட்ட நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் 9,10,11,12,13 அஸர் வரையிலான அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் ஆகும். என்று கூறுகின்றார்கள் (
நூல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர் )
இது தஷ்ரீக்
நாட்கள் ஆகும். இது இப்னு உமர் மற்றும் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. (:நூல்:
லதாயிஃபுல் மஆரிஃப் ப: 500
)
وَعَنْ
نُبَيْشَةَ الهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنهُ قالَ: قالَ رَسُولُ الله صلى الله عليه
وسلم: «أيَّامُ التَّشْرِيقِ أيَّامُ أكْلٍ وَشُرْبٍ، وَذِكْرٍ؟». أخرجه مسلم.
நுபைஸத்துல் ஹுதலீ
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அய்யாமுத் தஷ்ரீக்
(11, 12,
13 வது தினம்) ஆகிய இந்த அனைத்து தினங்களும் (பெருநாள்
தினங்களாகும்). மேலும் இந்த நாட்களில் உணவுகளை உண்டு, நீராதாரங்களை குடித்து சந்தோஷமாக இருக்க கூடிய நாளாகவும், திக்ர் (தக்பீர்) உடைய நாளாகவும் இருக்கிறது" என்று நபி ﷺ கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
حَدَّثَنَا
سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا خَالِدٌ
عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ نُبَيْشَةَ الْهُذَلِيِّ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَّامُ التَّشْرِيقِ
أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ
بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ عَنْ
خَالِدٍ الْحَذَّاءِ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ عَنْ أَبِي
الْمَلِيحِ عَنْ نُبَيْشَةَ قَالَ خَالِدٌ فَلَقِيتُ أَبَا
الْمَلِيحِ فَسَأَلْتُهُ فَحَدَّثَنِي بِهِ فَذَكَرَ عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ هُشَيْمٍ وَزَادَ فِيهِ
وَذِكْرٍ لِلَّهِ
“அய்யாமுத் தஷ்ரீக் (எனும்
ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும்
பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நுபைஷா பின் அம்ரிப்னு
அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி)
குறிப்பு :
அபூகிலாபா வழி அறிவிப்பில்,
“எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச்
சந்தித்தபோது,
அவர்களிடம் இந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அப்போது
மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்ததோடு, கூடுதலாக, ‘இறைவனை நினைவுகூர்(ந்து திக்ரு செய்)வதற்கும் உரிய நாளாகும்’ என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்” என்று காலித் அல்ஹத்தா
(ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.
உக்பா இப்னு ஆமிர்
(ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில், "நிச்சயமாக அரஃபா தினம் ( ஒன்பதாவது தினம்), யவ்முந் நஹ்ர் (பத்தாது
தினம்), அய்யாமுத் தஷ்ரீக் (11,
12, 13 வது தினம்) ஆகிய இந்த அனைத்து தினங்களும் பெருநாள்
தினங்களாகும். மேலும் இந்த நாட்களில் உணவுகளை பெற்று சந்தோஷமாக இருக்க கூடிய
நாளாகவும்,
தக்பீர் உடைய நாளாகவும் இருக்கிறது" என்று நபி ﷺ கூறினார்கள். ( நூல்கள்: ஸுனன் அபுதாவூத், திர்மிதி,
நஸாஈ)
يكبر من
صبح يوم عرفة إلى العصر من أخر أيام التشريق ، وهذا قول عمر وعلي وابن عباس وابن
مسعود وجابر وعمار والزهري وكحول وسفيان وأحمد وأبو ثور ،وحكى ابن قدامة إجماع
الصحابة على ذلك
منها :
ذكر الله عزَّ وجل عقب الصلوات المكتوبات بالتكبير في أدبارها ، وهو مشروعٌ إلى
آخر أيام التشريق عند جمهور العلماء
.
ومنها :
ذُكره بالتسمية والتكبير عند ذبح النُسك ، فإن وقت ذبح الهدايا والأضاحي يمتدُّ
إلى آخر أيَّام التشريق .
ومنها :
ذكر الله عزَّ وجل على الأكل والشرب ، فإن المشروع في الأكل والشرب أن يُسمي الله
في أوله ، ويحمده في آخره ، وفي الحديث عن النبي صلى الله عليه وسلم : " إن
الله عزَّ وجل يرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها ، ويشرب الشَّربة فيحمده
عليها " رواه مسلم ( 2734
)
ومنها :
ذِكره بالتكبير عند رمي الجمار أيام التشريق ، وهذا يختصُّ به الحجاج .
ومنها :
ذكر الله تعالى المطلق ، فإنه يُستحب الإكثار منه في أيام التشريق ، وقد كان عُمر
رضي الله عنه يُكبر بمنىً في قبته ، فيسمعه الناس فيُكبرون فترتج منىً تكبيراً ،
وقد قال تعالى : ( فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آبائكم أو أشد ذكراً .
فمن الناس من يقول ربَّنا آتنا في الدنيا وماله في الآخرة من خلاق ومنهم من يقول
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
) .
1) தக்பீர் ஓதுவதன்
மூலம் பரிந்துரைக்கப்பட்ட தொழுகைக்குப் பிறகு உடனடியாக அல்லாஹ்வை நினைவு கூர்தல்.
பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, தஷ்ரிக் நாட்கள் முடியும்
வரை இது பரிந்துரைக்கப்படுகிறது.
2) பலியிடும்
பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் என்றும் அல்லாஹு அக்பர் என்றும் கூறி அவனை
நினைவு கூர்தல். ஹதி மற்றும் உதியாவை அறுப்பதற்கான நேரம் தஷ்ரிக் நாட்கள் முடியும்
வரை நீடிக்கும்.
3) உண்ணும் போதும்
குடிக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்தல். சாப்பிடும்போதும் குடிக்கும்போதும்
ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என்றும், இறுதியில் அல்லாஹ்வைப்
புகழ்வதும் (அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லுங்கள்) என்றும் விதிக்கப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஹதீஸின் படி:
"அல்லாஹ் தனது அடிமையைப் புகழ்ந்து ஏதாவது சாப்பிடும்போதும், அதற்காக எதையாவது குடிக்கும்போதும் அவரை விரும்புகிறான்." (முஸ்லிம்
விவரித்தவர்,
2734)
4) தஷ்ரீக் நாட்களில்
ஜமாரத்தின் மீது கல்லெறியும் போது தக்பீர் கூறி அவரை நினைவு கூர்தல் . இது ஹஜ்
யாத்ரீகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பொதுவாக அல்லாஹ்வை நினைவு கூர்தல். தஷ்ரிக் நாட்களில் அதிக திக்ர்
செய்வது முஸ்தஹப் ஆகும்.
وقال
البخاري كان ابن عمر وأبو هريرة رضي الله عنهما يخرجان إلى السوق في أيام العشر
يكبران ويكبر الناس بتكبيرها. وقال: وكان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد
فيكبرون، ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً. وكان ابن عمر يكبر بمنى تلك
الأيام وخلف الصلوات وعلى فراشه، وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً
அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரழி),
அபூஹுரைரா (ரழி) ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்)பத்து
நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் தக்பீர்
கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ( நூல்: புகாரி : 1/ 339 )
உமர் (ரழி)
அவர்கள் மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும், கடைத்தெருக்களில்
உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.
இப்னு உமர் (ரழி)
அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும்,
மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும்
தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123.
وقد
استحب كثيرٌ من السلف كثرة الدعاء بهذا في أيام التشريق
.
பல சலஃப்கள்
தஷ்ரிக் நாட்களில் நிறைய துஆச் செய்வதை முஸ்தஹப் என்று கருதினர். ( நூல்: இப்னு
ரஜப் ஹம்பலீ (ரஹ்) எழுதிய லதாயிஃப் அல்-மஆரிஃப், ப. 500
)
தக்பீர்
வாசகத்தின் வடிவமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:-
فقال
الإمام الشافعي رحمه الله :
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ لَا إلَهَ
إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ الله اكبر ولله الحمد
اللَّهُ
أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ
كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ وبحمده بُكْرَةً وَأَصِيلًا لَا إلَهَ إلَّا اللَّهُ
وَلَا نَعْبُدُ إلَّا اللَّهَ مُخْلِصِينَ له الدَّيْنَ وَلَوْ كَرِهَ
الْكَافِرُونَ لَا إلَهَ إلَّا اللَّهُ وَحْدَهُ صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ
عَبْدَهُ واعز جنده وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ لَا إلَهَ إلَّا اللَّهُ
وَاَللَّهُ أَكْبَرُ الله اكبر ولله الحمد
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து…
அல்லாஹு அக்பர்
கபீரா
வல் ஹம்து லில்லாஹி கசீரா
வ சுபஹானல்லாஹி வபிஹம்திஹீ புக்ரதவ் – வ அ-சீலா
லா இலாஹ
இல்லல்லாஹு வலா நஃعபுது இல்லா இயாஹு முخஹ்லிசீன லஹுدத்தீன
வலவ் கரிஹல் كகாஃபிரூன்
லா இலாஹ
இல்லல்லாஹு வஹ்தா , வ சதக வعஅதா,
வ நசர அப்தா
வ அزஸ்ஸ ஜு(ன்)ந்தா – வ ஹزஸமல் அஹ்زஸாப வحஹ்தா
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் , வ லில்லாஹில் ஹம்து.
தக்பீர் சொல்வது எதற்காக:-
وَلِتُکَبِّرُوا
اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ
உங்களுக்கு
நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி
செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
(
அல்குர்ஆன்: 2: 185 )
ஒரு முஸ்லிமுடைய
வாழ்வில் தக்பீர் அதிகம் தொடர்புடைய மகத்தான வார்த்தையாகும்..
பிறந்த குழந்தையாக
இருக்கும் நிலையில் காதுகளில் ஒலிக்கப்படுவதில் இருந்து குழிக்குள்
அடக்கம் செய்யப்படும் முன்பு ஜனாஸா தொழுகை வரை வாழ்வில் தக்பீர்
தொடர்ந்து வருகிறது.
மகிழ்ச்சியின்
அடையாளமாக,
வீரத்தை பறைசாற்றும் முகமாக, வெற்றி வாகை சூடும் போது எழுச்சிக் குரலாக, எதிரிகளின் அச்சத்தின்
போது அபயக்குரலாக,
தொழுகைக்கான அழைப்பாக, தொழுகையின் அணிகலனாக, ஹஜ்ஜின் கம்பீர முழக்கமாக, குர்பானியின் ஓர் அங்கமாக
என்று தக்பீரின் முழக்கம் என்பது நீண்ட பட்டியலைக் கொண்டதாகும்.
நாளொன்றுக்கு ஒரு
இறைநம்பிக்கையாளர் கடமையான மற்றும் உபரியான தொழுகை மூலம் மட்டுமே 342 முறையும் அத்தோடு ஐந்து நேர தொழுகைக்குப் பிறகு, தூங்கும் முன்பு என அவர் 6×34=204 தடவை அத்தோடு அவர்
பாங்குக்கு வழக்கமாக பதில் சொல்பவராக இருந்தால் 30 முறை என மொத்தமாக 596
முறை தக்பீர் சொல்கிறார்.
இந்த உலகில் இந்த
பெரும் பாக்கியம் தொழுகையில் இஃக்லாஸாக ஈடுபடும் ஒரு இறைநம்பிக்கையாளரைத் தவிர
வெறெவருக்கும் கிடைப்பதில்லை.
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் அபிவிருத்தியை தருவானாக
ReplyDeleteما شاء الله
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete