Thursday, 29 August 2024

அல்குர்ஆனை அரணாக்குவோம்!!

 

அல்குர்ஆனை அரணாக்குவோம்!!


இந்த உம்மத்திற்கு இன்றைய நவீன உலகில் பல தேவைகள் இருக்கின்றது.

நிறைவேறாத பல ஆசைகள் இருக்கின்றது. பல இலட்சியங்களும், கனவுகளும் இருக்கின்றது.

அகதிகளாக ஆக்கப்படுவதில் இருந்து இந்த உம்மத்தை காப்பாற்ற பெரும் ஆற்றல் தேவைப்படுகின்றது. பயங்கரவாத முத்திரையை அகற்ற பேராண்மை தேவைப்படுகின்றது.

கொத்து கொத்தாய் கொல்லப்படுவதில் இருந்து இந்த உம்மத்தை காத்திட அரண் தேவைப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல், அதிகாரத்தின் தேவை இருக்கின்றது.

இத்தனை தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பயணத்தில் இந்த உம்மத் தொலைந்து கொண்டிருக்கிறது.

யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா? என்று அபயம் தேடி அலைகின்றது. 

எங்கே அந்த அபயம்? எங்கே அந்த பேராண்மை? எங்கே அந்த அரண்? இந்தக் கேள்வியை முன் வைத்த தேடலில் இந்த சமுதாயம் விடையாக பெற்றது "கல்வியறிவில் முன்னேற்றம்" வேண்டும் என்ற ஒற்றை மந்திரத்தை தான்.

கடந்த நாற்பதாண்டுகளாக இந்த சமூகம் மாங்கு மாங்கு என்று படிக்கின்றது.  உயர் கல்வியில் உழன்று கொண்டிருக்கின்றது. 

அரசியல் அதிகாரம் கையில் கிடைத்து விட்டதா? என்றால் அதை மட்டும் கேட்க கூடாது.

இந்திய அளவில் மத்திய மற்றும் மாநில அளவிலான எந்த உயர்ந்த பொறுப்புகளிலும் முஸ்லிம் சமூகம் இல்லை.

அப்ப நீங்க கேட்கலாம். இந்த உம்மத் படித்துக் கொண்டு தானே இருக்கிறது? கல்வியில் முன்பை விட முன்னேற்றம் அடைந்து கொண்டு தானே இருக்கிறது? உயர் கல்வியில் உயர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

ஆம்! எல்லாம் உண்மை தான்! ஆனால், அந்த படிப்புக்காக, கல்வியின் முன்னேற்றத்திற்காக இந்த உம்மத் விலை கொடுத்திருப்பது குர்ஆனை.

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக குர்ஆனின் தொடர்பு குறைந்த அல்லது முற்றிலும் குர்ஆனின் தொடர்பு இல்லாத ஒரு தலைமுறை இன்று இந்த உம்மத்தில் உருவாகி வருகிறது.

குர்ஆனை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்த சமூகம் முன்னுக்கு வந்து விடுமா என்ன?

குர்ஆனை பின்னுக்குத் தள்ளி விட்ட எந்த சமூகமும் ஒரு காலத்திலும் முன்னுக்கு வராது.

குர்ஆனின் பரக்கத்தை இழந்து விட்டு எந்தக் கல்வியை கற்றாலும் அது பரக்கத் இல்லாத கல்வியே!

ஆகவே தான் இன்றைய கல்வியைக் கொண்டு சமூகமாக எந்த முன்னேற்றத்தையும் இந்த உம்மத் அடையவில்லை.

தாம் செய்யும் தவறுகளை தவறுகளாகவே எண்ணாத, அதை அழகிய செயலாக கருதுகிறவர்களே நஷ்டவாளிகள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். 

قُلْ هَلْ نُـنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا 

“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

اَلَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا‏

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். ( அல்குர்ஆன்: 18: 103, 104 )

மாநபி (ஸல்) அவர்களை இந்த உம்மத்துக்கு பேருபகாரமாக வழங்கியதாக குறிப்பிடும் அல்லாஹ் அவர்களுடைய மகத்தான சேவைகளில் ஒன்றாக அல்குர்ஆனை ஓதிக் காண்பிப்பது, அதைக் கற்றுத் தருவது, அதன் மூலம் வாழ்வை தூய்மை படுத்துவது ஆகியவற்றையே பிரதானமாக குறிப்பிடுகின்றான். 

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். ( அல்குர்ஆன்: 3: 164 )

ஆகவே தான் பெருமானார் (ஸல்) அவர்களால் தாம் வாழும் காலத்திலேயே தம்மைக் கண்ணால் கண்டு தோழமை கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனித சமூகத்தை "இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட" சமூகமாக அமைக்க முடிந்தது.

குர்ஆன் என்பது இந்த உம்மத்தின் அஸ்திவாரம். குர்ஆனை கையில் எடுத்த எல்லா காலத்தின் சமூகமும் வானளாவிய வெற்றிகளை குவித்தது.

குர்ஆனை கை விட்ட சமூகம் இந்த உலகில் கேள்விக்குறியானது. இது தான் வரலாறு.

இந்த உலகில் சாதனை படைத்தவர்கள், இந்த உம்மத்திற்காக வெற்றி வாகை சூடியவர்கள் என அனைவரின் வாழ்விலும் இடம்பெற்ற ஒரே அம்சம் அல்குர்ஆன் தான். 

في طفولته المبكرة، تأخذه لصلاة الفجر لتريه أسوار القسطنطينية، وتقول له في ثقة: "يا محمد، أنت القائد الذي ستفتح هذه الأسوار، اسمك محمد وهو ما ينطبق على قول رسول الله، فأنت ستكون نعم الأمير".

 

ஒருநாள் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தமது மகன் முஹம்மதை தமதருகே அமர வைத்து "முஹம்மதே! பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன கான்ஸ்டான்டி நோபிளை வெற்றி வாகை சூடும் தளபதி நீயாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அந்த தளபதியின் பெயர் முஹம்மது என்று கூறியிருக்கின்றார்கள். உனது பெயரும் முஹம்மது" தான். ஆகவே, பெருமானார் (ஸல்) அவர்களின் புனித வாயால் போற்றிப் பாராட்டப்பட்ட அந்த தளபதி நீயாக இருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.    

وكان الطفل الصغير ينظر في عيني أمه ويردُّ مستغربًا: "كيف يا أمي أفتح هذه المدينة الكبيرة؟!".

அதற்கு, அந்த பாலகர் "தாயே! இவ்வளவு பெரிய கோட்டையை நான் எப்படி வெற்றி வாகை சூட முடியும்?" என்று கேட்டார்.

فترد عليه الأم: "بالقرآن والقوة والسلاح وحب الناس"، وتمسك يديه وترفعهما إلى السماء داعية: "يا رب، يا عظيم، يا مجيب الدعوات، يا قادر على كل شيء، اجعل ابني هذا الأمير الذي يفتح القسطنطينية، اجعل البركة في هاتين اليدين، واجعل نصر المسلمين يأتي من خلالهما".

அப்போது, அந்த தாயார் "மகனே! அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனைக் கொண்டும், எல்லா வகையான ஆற்றலை கொண்டும், நீ பார்த்து வளரும் உன் மக்களின் நேசத்தை கொண்டும்" நீ வெற்றி பெறுவாய்! என்றார்கள்.

பின்னர், தமது மகனின் இரு கரங்களையும் தமது கரத்தோடு கோர்த்துப் பிடித்து வானை நோக்கி உயர்த்தி "இறைவனே! மகத்தான ஆற்றல் கொண்டவனே! அடியார்களின் அழைப்புகளுக்கு பதிலளிப்பவனே! அனைத்து வஸ்துக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துபவனே! பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய காண்ஸ்டான்டி நோபிளின் வெற்றித் தளபதியாக என் மகனை நீ ஆக்குவாயாக! 

இறைவனே! எனது மகனின் இரு கரங்களிலும் நீ பரக்கத் செய்வாயாக!

இந்த இரு கரங்களின் ஊடாக இந்த உம்மத்தின் நீண்ட கால கனவாகிய காண்ஸ்டான்டி நோபிளின் வெற்றியை வழங்கியருள்வாயாக!" என்று துஆச் செய்தார்கள்.

أمر السلطان محمد الفاتح الجيش الانكشاري برفع السفن القتالية من البسفور 

ورفعها علي جبل غلطه وانزالها إلى مضيق القرن الذهبي .

وهو ما سبب ذهول للرومان . لأنه لم يستطع أي جيش مهما بلغت قوته أن 

يعبر هذا المضيق بسبب سلسلة القرن الذهبي المشهورة التي تغلق المضيق 

ومن ثم يرمونها بالنار الاغريقية وبالتالي عدد السفن لا يهم أمام تلك الأسطورة 

فخر روما ..وقد استطاع محمد الفاتح بفكرته العظيمة التغلب على أمجاد

 روما وتاريخ روما الذي دام 1700 عام .

حتى قال عنه المؤرخ دوكاس وهو أحد الفرسان القسطنطينية

" ما رأينا ولا سمعنا من قبل بمثل هذا الشيء الخارق، مُحمَّد الفاتح

 يُحوِّلُ الأرض إلى بحارٍ وتعبرُ سُفنهُ فوق قمم الجبال بدلًا من الأمواج.

 لقد فاق مُحمَّد الثاني بهذا العمل الإسكندر الأكبر "..

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பையும், தமது தாயின் ஆசையையும் நிறைவேற்றுவதற்காக . கி.பி 1453ல் சுல்தான் முஹம்மத் தலைமையில் சுமார் 2,65,000 பேரைக் கொண்ட இஸ்லாமியப் படை பைஸாந்தியப் பேரரசின் கோட்டை காண்ஸ்டாண்டிநோபிளை நோக்கி புறப்பட்டது.  

அவருக்கு, “கான்ஸ்டான்டினோபிளை வெற்றிகரமாகப் பெற வேண்டுமானால் எல்லா திசைகளிலும் அதனை முற்றுகையிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தது.

ஏற்கனவே, தரைவழி எல்லைகளை முற்றுகையிட்டிருந்தார். ஆனால், 'அல்கர்னுத் தஹபீ' என்ற நெருக்கடி மிகுந்த நீர்வழியை முற்றுகையிட இயலவில்லை. அது மிகவும் சிரமமான பகுதி.

இதற்கு முன்னரும் எந்த இராணுவமும், எவ்வளவு முயற்சித்தும், அந்தப் பகுதியை கடந்ததில்லை. (இந்த இயற்கையான பாதுகாப்புச் சூழல் காரணமாக நம்மை யாராலும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பைப் பெற்றிருந்தனர் ரோமப் பைசாந்தியர்கள்) அந்த 'அல்கர்னுத் தஹபீ' பகுதியை யாரேனும் நெருங்கினால், ரோமர்கள் பெரும் சங்கிலிகளை பயன்படுத்தி அந்த வளைகுடாவையே மூடி விடுவார்கள், பின்னர் கிரேக்க நெருப்பால் எதிரிப்படையை ரோமர்கள் தாக்குவார்கள். அதனால் எந்தக் கப்பல்களும் அந்தப் பகுதியைக் கடக்க முடியாமல் இருந்தன.

ஆனால் கலீஃபா முஹம்மத் அல்ஃபாத்திஹ் அவர்கள் தனது மகத்தான போரறிவால் திட்டங்களை தீட்டினார். 1700 ஆண்டு காலமாக நீடித்த ரோமின் வரலாற்றையும் அதன் புகழையும் வீழ்த்தினார். 

அல்கர்னுத் தஹபீ என்ற நீர்வழியாக கப்பல்களை செலுத்தாமல் பாஸ்போரஸ்லிருந்து தரைவழியாக போர்க்கப்பல்களை ஓட்டினார். ஆம். 

இந்த செயற்கரிய செயலைச் செய்திட அல்இன்கிஷாரிய்யாஎன்ற முரட்டுப் படையினரைப் பயன்படுத்தினார்.

போர்க் கப்பல்களை கலத்தாஎன்ற மலை வழியாக ஏற்றி, அல்கர்னுத் தஹபீ என்ற நெருக்கடி மிகுந்த நீர்வழிப் பாதையில் இறக்கினார். இப்படி நடக்கும் என்று ரோம பைசாந்தியர்கள் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அதிர்ந்தனர் ரோமர்கள்.

கான்ஸ்டாண்டிநோபிளின் குதிரைப்படை வீரர்களில் ஒருவரும் வரலாற்றாசிரியருமான டூக்காஸ் என்பவர் கூறுகிறார்: இது போன்ற அற்புதத்தை இதற்கு முன்னர் நாங்கள் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. முஹம்மத் அல்ஃபாத்திஹ், தரையைக் கூட கடலாக மாற்றுகிறார்.

நீரலைகளின் மேல் ஓட்டுவதற்கு பதிலாக மலைமுகட்டின் மேல் போர்க் கப்பல்களை ஓட்டுகிறார். இந்த இரண்டாம் முஹம்மத் என்ற முஹம்மத் அல்ஃபாத்திஹ் மகா அலெக்ஸாண்டையும் தன் செயல் திறத்தால் விஞ்சி விட்டார். ( நூல்: தாரீஹுத் தவ்லத்தில் உஸ்மானிய்யாஇந்த ஒரு குறிப்பு மட்டும் கா.மு இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் முகநூல் பதிவில்இருந்து...)

மகத்தான இந்த வெற்றியின் பின்னால் அந்த மாவீரனுக்கு உதவியாய் அமைந்தது அல்குர்ஆன் தான்.

காஸாவின் ஓர் குடிசையில் பிறந்த தன் மகனை உலகறியும் அறிஞராக, புகழ்மிக்க வாழ்க்கைக்குச் சொந்தமானவராக மாற்ற வேண்டும் என்ற வேட்கையோடு இரண்டு வயது பாலகனை தூக்கிக் கொண்டு மக்காவிற்கு வருகின்றார்கள்.

இமாம் ஷாபிஈ அவர்களை உருவாக்குவதில்தில் அவரது தாய் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பரியது. இமாம் ஷாஃபிஈ அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் மிகச் சரியான திட்டத்தை வகுத்து வளர்த்தார்கள்.

ஏழு வயதில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்ய வைத்து ஹாஃபிளாக உருவாக்கினார்கள்.

இமாம் ஷாஃபிஈ அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தார்கள். அதுவும் அம்பெறியும் விளையாட்டில் பெரும் வீரராக உருவெடுத்தார்கள்.

وأقبل على الرمي ، حتى فاق فيه الأقران ، وصار يصيب من عشرة أسهم تسعة

இமாம் ஷாஃபிஈ அவர்களே கூறுவார்கள்: நான் இலக்கை நோக்கி குறி வைத்து பத்து அம்புகளை எய்கிறேன் என்றால் ஒன்பது அம்புகள் மிகச் சரியாக இலக்கை சென்று அடைந்து விடும், ஒரு அம்பு தான் இலக்கில் இருந்து தவறும்”.

மாபெரும் அறிஞராக உருவெடுக்க வேண்டும் என்கிற கனவைச் சுமந்து நிற்கிற அவரது தாய்க்கு இது கவலையைத் தந்தது.

وجعلت أطلب العلم ، فتقول لي : لا تشتغل بهذا ، وأقبل على ما ينفعك ، فجعلت لذتي في العلم

ஒரு நாள் தனது மகனை அமர வைத்து மகனே! இது போன்ற உனக்கு பயன் தராதவைகளில் கவனம் செலுத்தாதே! உனக்கு பயன் அளிக்கும் விஷயத்தில் உன் கவனத்தைத் திருப்பு!இமாம் ஷாஃபிஈ அவர்கள் கூறுவார்கள்: அதன் பின்னர் எனக்கு அறிவு ஞானத்தைப் பெறுவதில் இன்பம் ஏற்பட்டது.

ثم أقبل على العربية والشعر 

فبرع في ذلك وتقدم . ثم حبب إليه الفقه ، فساد أهل زمانه

பின்பு அரபு மொழியிலும், அரபி இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றார்கள். பின்னர் ஃபிக்ஹ் கலையில் கவனம் செலுத்தி அதிலும் தேர்ச்சி பெற்று சம காலத்து பெரும் அறிஞர்களுக்கு நிகராக விளங்கினார்கள்.

அப்போது இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? வெறும் 9 வயது தான்.

இமாம் ஷாஃபிஈ அவர்கள் இந்த கல்வியறிவைப் பெற்றுக் கொண்ட கால கட்டம் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

ஏனெனில், படிக்கும் ஆர்வம் இருந்த அவரிடத்தில் படிப்புக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் இல்லை.

ஆசிரியர் நடத்துகின்ற பாடத்தை எழுதி வைத்திட பேப்பர் கூட இல்லை. அவரது தாயாரிடம் முறையிட்ட போது அரசுக் கருவூலத்தில் பயன்படுத்தப்பட்டு வெளியே வீசப்பட்ட பேப்பர்களை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து எழுதப்படாத மற்றொரு பகுதியிலே எழுதச் சொன்னார்களாம் அவர்களது தாயார்.

இப்படியாக ஒருவாராக படிக்க வைத்தார்கள். தங்களின் மகனை மதீனாவில் பிரபல்யமாக இருக்கும் இமாம் மாலிக் அவர்களிடம் ஹதீஸ் கலையைக் கற்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அதற்காக அடுத்தக் கட்ட முயற்சியாக இமாம் மாலிக் ரஹ் அவர்கள் எழுதிய முஅத்தாவை மனனமிட வைத்தார்கள்.

حدثنا المزني ، سمع الشافعي يقول : حفظت القرآن وأنا ابن سبع سنين ، وحفظت " الموطأ " وأنا ابن عشر 

        فكان أول ما فعله قبل سفره هو حفظ الموطأ، فحفظه في تسع ليالٍ

இமாம் முஸ்னீ (ரஹ்) அவர்கள் இமாம் ஷாஃபிஈ அவர்கள் வாயிலாக அறிவிக்கின்றார்கள்: நான் ஏழு வயதில் குர்ஆனை மனனம் செய்தேன். பத்து வயதாக இருக்கும் போது முஅத்தாவை மனனம் செய்தேன்என்று இமாம் ஷாஃபிஈ கூறினார்கள். முஸ்னீ ரஹ் அவர்கள் இமாம் ஷாஃபிஈ அவர்கள் வெறும் 9 நாட்களில் மனனம் செய்தார்கள்.

பின்னர் 14 –ஆம் வயதில் இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் அழைத்துச் சென்று மாணவராகச் சேர்த்து சுமார் 9 ஆண்டுகள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மரணமாகும் வரை அங்கேயே இருந்தார்கள்.

அதன் பின்னர் மக்கா, மதீனா, மிஸ்ர், பக்தாத் என அரபுலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இமாம் ஷாஃபிஈ அறியப்பட்டார்கள்.

அரபுலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மார்க்கல்வியை பயிற்றுவித்தார்கள்.

இறுதியாக, ஹிஜ்ரி 198 –இல் மிஸ்ரின் மஸ்ஜித் அம்ர் இப்னுல் ஆஸில் ஆசிரியராகப் பணியாற்றி பல்லாயிரக்கணக்கான அறிஞர் பெருமக்களை உருவாக்கினார்கள்.

இஸ்லாமிய உலகின் அறியப்பட்ட பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் அது எந்தத் துறை அறிஞர்களாக இருந்தாலும் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் மதஹபைப் பின்பற்றக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

 

குறிப்பாக, இமாம் பைஹகீ, ஹாகிம் அன்னய்ஸாபூரி, ஜலாலுத்தீன் சுயூத்தி, இமாம் தகபீ, இமாம் கஸ்ஸாலி, இமாம் நவவி, இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி, ஹாபிழ் இப்னு கஸீர், இமாம் புகாரி ஆகியோர்.  ( நூல்: அத் தபகாத்துஷ் ஷாஃபிஈ )

வெறும் அம்பெய்யும் வீரராக அறியப்பட இருந்த ஓர் வீரரை உலகறியும் அறிஞராக, ஃபிக்ஹ் எனும் அறிவுச்சுடரை உலகெங்கிலும் பிரகாசிக்கச் செய்ய இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் தாயார் செய்தது 7 வயதிலேயே முழு குர்ஆனையும் இதயத்தில் நிறைத்து ஹாஃபிழாக ஆக்கியது தான்.

21 –ம் நூற்றாண்டின் சாட்சி..

இன்ஸ்­டா­கிராம், யூட்யூப் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களில் அவரை பல இலட்சம் பேர் பின்­தொ­டர்­கி­றார்கள்.

இளம் தொழில்­மு­னை­வோ­ரான அவர், ‘காரிஸாஎன்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறு­வனம் ஒன்றை நடத்­து­கிறார். இன்று ஆறு கிளைகள் மற்றும் 60 பணி­யா­ளர்­க­ளுடன், இந்­நி­று­வனம் வெளி­நா­டு­க­ளிலும் வளை­குடா முழு­வதும் விரி­வ­டைந்­துள்­ளது.

தேசிய அள­விலும், சர்­வ­தேச அள­விலும் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு அவர் நல்­லெண்ணத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

மற்­ற­வர்­க­ளுக்கு தன்­னம்­பிக்­கை­ய­ளிக்கும் உரை­களை நிகழ்த்­து­ம் Motivational speaker ஆக திகழ்கிறார். 

ஸ்கூபா டைவிங், கால்­பந்து, ஹைகிங் மற்றும் ஸ்கேட்­போர்டிங் உள்­ளிட்ட பல்­வேறு தீவிர விளை­யாட்டு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கிறார். 

எதிர்­கா­லத்தில் இரா­ஜ­தந்­தி­ரி­யாக வர வேண்டும் என்ற இலட்­சி­யத்­துடன் அர­சியல் விஞ்­ஞா­னத்தில் தனது கல்­லூரிப் பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

இத்தனைக்கும் அவர் ஒரு மாற்றுத்திறனாளி. இன்னும் சொல்லப் போனால் அவர் ஒரு அரை மனிதர். 

உடலில் குறை­பாடு இருந்­தாலும் அதைப் பொருட்­ப­டுத்­தாமல் தான் விரும்­பிய துறை­களில் முன்­னே­றி­யதால் அவ­ரது வாழ்க்கை இன்று மற்­ற­வர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் வகையில் பிர­ப­ல­மாகி இருக்­கி­றது என்றால் அது மிகையல்ல. 

யார் அவர்? அவர் தான் 220 பில்லியன் டாலர்கள் செலவளித்து கடந்த நவம்பர் 20, ஞாயிற்­றுக்­கி­ழமை, கத்தாரின் அல் பைத் ஸ்டேடி­யத்தில் நடந்த 2022 -ம் ஆண்டு உலகக் கோப்­பையின் தொடக்க விழாவில் சூரா அல்- ஹு­ஜுராத் வசனம் 13 ஐ ஓதி துவங்கி வைத்த ஃகானிம் அல் மிஃப்தாஹ் என்ற (தற்போது 22 வயது) இளைஞர் ஆவார்.

Ca­u­d­al Re­g­r­e­s­sion Sy­nd­r­o­me எனப்­படும் மரபு ரீதி­யி­லான குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டவர். 

உலகில் பிறக்கும் 25000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த குறைபாடு இருக்கும் என்று மருத்துவ உலகம் குறிப்பிடும் குழந்தையாக பிறந்தவர். 

இந்தக் குறை­பாட்டைக் கொண்­டோ­ருக்கு பிறக்­கும்­போதே உடலின் கீழ்­பாதி பகுதி இருக்­காது. சக்­கர நாற்­காலி மூல­மா­கவும், கைகளைத் தரையில் ஊன்­றி­ய ­ப­டியும் தான் நடக்க வேண்டும்.

 

ஃகானிம் வயிற்றில் கரு­வாக இருந்­த­போது கலைத்­து­ வி­டும்­படி அவ­ரது தாயிடம் மருத்துவர்கள் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும், ஆனால் அதற்கு அவர் சம்­ம­திக்­க­வில்லை எனவும் கானிம் அல்-­மிஃப்­தாஹின் இணை­ய­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

قال لها الأطباء وأنه حتما سيموت، وإن عاش فستكون حياته شقاء

எந்த அளவுக்கு மருத்துவர்கள் கூறினார்கள் என்றால்... "ஒரு வேளை குழந்தை பிறந்தாலும் கண்டிப்பாக இறந்தே பிறக்கும். தப்பித்தவறி அந்த குழந்தை பிழைத்தாலும் அந்த குழந்தை இந்த உலகில் மிகவும் சிரமத்துடனே வாழும்" என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால், "நான் இடது காலா­கவும் எனது கணவர் வலது காலா­கவும் இருந்து அந்த குழந்தையை வளர்ப்போம்என்று ஃகானிமின் தாய் தனது கூறி­ய­தா­கவும் அந்த இணை­ய­தளம் குறிப்­பி­டு­கி­றது.

அந்த தாய் அந்த குழந்தைக்கு இரண்டு விஷயங்களை மிகவும் கவனத்தோடு செய்தார்.

ஒன்று தேர்ந்தெடுத்து அழகிய பெயர் வைத்தார்.

ஆம்! ஃகானிம் (غانم) சன்மார்க்கப் போரில் பங்கேற்று வெற்றியோடும், வெகுமதிகளுடனும் திரும்புபவன். அல் மிஃப்தாஹ் (المفتاح) திறவுகோல்.

இரண்டாவதாக அந்த குழந்தையின் கரங்களில் அல்குர்ஆனைக் கொடுத்தது. ஆம்! அந்த குழந்தையை சிறு வயதிலேயே அல் குர்ஆனை அழகிய முறையில் மனனம் செய்த ஹாஃபிழாக உருவாக்கினார் அந்த தாய்.

அவர் வரலாற்றில் மிகவும் ஆச்சரியமான இரண்டு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

ஒன்று, வளை­குடா பகு­தியில் உள்ள மிக உய­ர­மான, கரடுமுரடான மலைச் சிக­ர­மான ஓமனில் உள்ள ஜபல் அஷ் ஷம்ஸில் கூட ஃகானிம் ஏறி­ சாதனை படைத்துள்ளார்.

இன்னொன்று, 2016 -ம் ஆண்டில் உம்ரா செய்யச் சென்ற அவர் உடல் குறைபாடுகள் இருக்கவே, வீல் சேரில் அமர்ந்து உதவியாளர் ஒருவருடன் தவாஃப் செய்ய ஷரீஆ ரீதியாக அனுமதி இருந்தும் தம் கைகளை ஊன்­றி­ய நிலையில் தவாஃப் செய்ய சவூதி மன்னரிடம் அனுமதி பெற்று கைகளை ஊன்­றி­ய நிலையிலேயே தவாஃபும் செய்தார்.

பாக்கியம் நிறைந்த அல்குர்ஆனை ஒருவர் கையில் எடுத்தால் அவரை அல்லாஹ் எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்கிறான் என்பதற்கு 21 -ம் நூற்றாண்டின் சாட்சியாக மிளிர்கிறார் ஃகானிம் அல் மிஃப்தாஹ். 

ஆகவே, அல்குர்ஆனை கையில் எடுத்து இந்த உம்மத்தின் அரணாய் அமைப்போம்!! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment