விடுமுறை நாட்களை நமதாக்குவோம்!!
நம்மில் பலர்
அவ்வப்போது சந்திக்கும் போது கவலையோடும், வருத்தத்தோடும் பகிர்ந்து
கொள்வது “என்ன செய்யச் சொல்றீங்க? என் பசங்க காலையில
பள்ளிக் கூடம் போனா ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து இரவு தான் வீட்டுக்கு வருகின்றான்.
வந்ததும் வராததுமா டியூசன்,
அடுத்து புராஜக்ட் இப்படியே நேரம் போயிடுது
இதுல எப்படிங்க தொழ சொல்றது? ஓத மதரஸா அனுப்புறது?
எங்கங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்குது?” என்று.
ஆனாலும், மற்ற மற்ற காரியங்களுக்கு
நாம் இப்படியெல்லாம் பேசுவது கிடையாது. பிள்ளைகள் விஷயத்தில் உலக கல்வி, உலக லாபத்தை தரும் விஷயங்களுக்காக ஷெட்யூல் (அட்டவணை) செயல் படுகிறோம்.
நம்முடன் அவர்கள் வாராந்திர விடுமுறை நாட்கள், பண்டிகை கால விடுமுறை நாட்கள், தேர்வு கால விடுமுறை
நாட்கள்,
கோடை கால, மழை கால விடுமுறை நாட்கள்
என நம்மோடு பல ஓய்வு நாட்களை
அவர்கள் கழித்துக் கொண்டு இருக்கின்றார்களே நாம்
அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்திருக்கின்றோம்?
விடுமுறை நாட்களில் இப்போதெல்லாம் நம் மழலைகள் மோசமாகவே
நடந்து கொள்கின்றார்கள். காலை 9, 10, 11 மணி வரை தூக்கம். இரவு 12 மணிக்கு மேல் தான் தூக்கம் இடையில் விளையாட்டு, கேம்,
இன்ஸ்ட்டா ரீல்ஸ், வீடியோ என வீணாக கால
நேரங்களை வீணடித்து கொண்டிருக்கின்றார்கள்,
விதிவிலக்காக சில பெற்றோர்கள் இந்த விடுமுறை
நாட்களைபயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை ஹாஃபிழாக உருவாக்கி இருக்கின்றார்கள்.
இன்னும் சிலர் தங்களின் பிள்ளைகள் விஷயத்தில் அக்கறையோடு நடந்து
கொண்டிருக்கின்றார்கள்.
நமக்கு அமானிதங்களாக வழங்கப்பட்ட நம் சந்ததிகளோடு நமக்கு
வாய்ப்பாக தரப்பட்ட இது போன்ற விடுமுறை நாட்களை நாம் எப்படி பயன் படுத்திக்
கொண்டோம்?
என்பது சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
சுவனத்தில் வழங்கப்படுகிற அந்தஸ்துகளில் ஒரு அந்தஸ்து ஓய்வு காலங்களை நன்முறையில் பயன்படுத்தியதற்காகவே வழங்கப்படுவதாக அல்லாஹ் தன்
அருள்மறையில் குறிப்பிடுகின்றான்.
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي
الْأَيَّامِ الْخَالِيَةِ
“உலகின் ஓய்வு நாட்களில் (மறுமைக்காக நன்மைகளை) நீங்கள் முற்படுத்தி வைத்த
செயல்களின் காரணமாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள், பருகுங்கள்!” என்று அவர்களுக்கு கூறப்படும்”.
எனவே, விடுமுறையின் பெயரால்
ஓய்வாக இருக்கும் இந்த நாட்களை நம் குழந்தைகளின் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை
மறு சீரமைப்பு செய்வதற்காக பயன்படுத்திக் கொள்வோம்.
பத்து வயதான நமது குழந்தைகள் விஷயத்தில் முத்து முஹம்மது நபி {ஸல்} இந்த உம்மத்தின் பெற்றோர்கள் கவனத்திற்கு இட்ட முத்தான
கட்டளைகள் இரண்டு.
ஒன்று ஆன்மீகம் (Spiritual Ethics) சார்ந்தது.
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ – يَعْنِى
الْيَشْكُرِىَّ – حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ سَوَّارٍ أَبِى حَمْزَةَ – قَالَ
أَبُو دَاوُدَ وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ الْمُزَنِىُّ
الصَّيْرَفِىُّ – عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ
وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ
عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ
உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது
அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது அவர்களை
அதற்காக அடியுங்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு
(ரலி), (
நூல் : அபூதாவூத் )
இன்னொன்று (psychological Ethics) உளவியல் மற்றும் ஒழுக்கம் சார்ந்தது.
قال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فيما
رواه عنه عبد الله بن عمرو بن العاص : ( مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين
واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع ) رواه أحمد (6689) ، وأبو
داود (495)
அப்துல்லாஹ் இப்னு அம்ர்
இப்னு ல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், “ உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும்போது தொழுகைக்குக் கட்டளையிடுங்கள், பத்து வயதானால் அதற்காக அவர்களை அடிக்கவும். ) மேலும் அவர்களுக்கு பத்து
வயதாகும்போது; படுக்கைகளில் இருந்து அவர்களை பிரித்து விடுங்கள். ” [அபு தாவூத்]
இன்றைய உம்மத்தின் தலைமுறையினருக்கு
பெற்றோர்கள் இந்த இரண்டு அம்சங்களையும் கவனப்படுத்தாதன் விளைவை இன்று நாம் பாரிய
அளவில் அனுபவித்து வருகின்றோம்.
5 வயதில் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது முதல்
பத்தாம் வகுப்பு (எனில் 15 வயது) வரை ப்ளஸ் டூ (
எனில் 17 வயது) வரை ரமழான்
மற்றும் பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் அவர்கள் மஸ்ஜிதோடும், ஜும்ஆவோடும் தொடர்பில் இருப்பது மிகவும் குறைந்த அளவே.
தவற விடும் அல்லது பாழ்பட்டு போகும் மஸ்ஜித்
தொடர்பு ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகை, உபதேசம் என்பது தோராயமாக சுமார் 10 ஆண்டுகளில் 500 ஜும்ஆக்களையும், 12 ஆண்டுகளில் 580 ஜும்ஆக்கள் பாழ்பட்டு போகிறது.
ஐவேளைத் தொழுகையை கணக்கில் எடுத்தால்
பாழாகும் தொழுகையின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாகும்.
நாம் தேர்ந்தெடுக்கும் (கிருஸ்தவ, வித்யாலயா, செவன்த்டே)
பள்ளிக்கூடங்களும் ஒரு காரணம்.
மனித வாழ்க்கையில்
ஐந்து அம்சங்கள் மிகவும் முக்கியமானது.
1)
இறை நினைவு
ஆனால், பல் நேரங்களில் நாம்
மறப்பது படைத்த இறைவனத் தான். அவன் அருட்கொடைகளை
அனுபவிக்கின்றோம். ஆனால்,
அவனுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகின்றோம்.
இக்கட்டான
நிர்கதியான நேரத்தில் அவனை அழைப்பதற்கு மறந்து விடுகின்றோம்.
பொருளீட்டும் ஆசையில், மனம் விரும்பும்
காரியங்களில் ஈடுபடும் போது இறைவன் விதித்த வரம்புகளான ஹலால் ஹராமை மறந்து
விடுகின்றோம்.
இறைவனை மறப்பது மிகவும் ஆபத்தானது. இறை நினைவின்றி வாழ்வது
மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ
مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى
“எவன் என்னை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான
வாழ்க்கையே இருக்கும்;
மேலும், நாம் அவனை கியாம நாளில்
குருடனாவே எழுப்புவோம்”.
قَالَ
رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا
وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى
(அதற்கு இறைவன்,)
“இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள்
உன்னிடம் வந்தன;
அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான். ( அல்குர்ஆன்: 124 - 126 )
ஆனால் இந்த ஆபத்தில் இருந்து காப்பது தொழுகை மட்டுமே.
اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا
فَاعْبُدْنِىْ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ
“நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே,
என்னையே நீர் வணங்கும், என் நினைவு உமக்கு
இருக்கும் பொருட்டு தொழுகையை நீர் நிலைநிறுத்துவீராக. ( அல்குர்ஆன்: 20: 14 )
2)
வாழ்வாதாரம்..
மனித சமூகத்திற்கு இன்றைய உலகில் பெரும் பிரச்சனையாக, சவாலாக இருப்பது வாழ்வாதாரமே!
ஒரு மனிதனுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்துமே
வாழ்வாதாரம் தான்.
மனிதனுக்கு மனிதன் பயன்பாடுகள் மட்டுமே மாறுபடும். ஆனால்
தேவைகள் மாறுபடாது.
அத்தகைய வாழ்வாதாரம் மிகவும் சுலபமாக கிடைக்கும் வழி தொழுகை
தான்.
وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ
عَلَيْهَا لَا نَسْــٴَــلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ
لِلتَّقْوٰى
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின்
மீது) நீர் பொறுமையும்,
உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை
பயபக்தி(யுடையோரு)க்குத் தான். ( அல்குர்ஆன்: 20: 132 )
3)
இறையச்சத்துடன் கூடிய இறுதி முடிவு.
இந்த உலகில் மனிதனோடு தொடர்புடைய எல்லா காரியங்களின்
முடிவுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதர்களின் வசம் கொடுக்க வில்லை. மனிதனின்
இறுதி முடிவு உட்பட அல்லாஹ்வே தன் வசம் வைத்துள்ளான்.
وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ
عَلَيْهَا لَا نَسْــٴَــلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ
لِلتَّقْوٰى
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின்
மீது) நீர் பொறுமையும்,
உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதி முடிவு
பயபக்தி(யுடையோரு)க்குத் தான். ( அல்குர்ஆன்: 20: 132 )
4,
5) தடுக்கப்பட்ட, ஆபாசமான,
அருவெருப்பான செயல்கள் செய்வதில் இருந்து பாதுகாப்பு .
ஏதாவது ஒரு நேரத்தில் இறைவனால் தடுக்கப்பட்ட ஒன்றை செய்யும்
சூழலுக்கு தள்ளப்பட்டு அதில் வீழ்வதும்,
நம்மையும் அறியாமல் இறைவன் வெறுக்கின்ற ஆபாசத்திலும், அருவெருப்பான செயல்களிலும் ஷைத்தானால் கவரப்பட்டு பிறழ்வு ஏற்பட்டு அதில்
மூழ்குவதும் ஒரு வகையில் நம்மை நாமே இறைவனை விட்டு இறை நெருக்கத்தை விட்டும் தூர
மாகுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் தொழுகை இத்தகைய அசுத்தமான அழுக்குகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்
என்று குர்ஆன் அறிவுறுத்துகிறது.
اُتْلُ
مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ اِنَّ الصَّلٰوةَ
تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ وَاللّٰهُ
يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ
(நபியே!)
இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை
(மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். ( அல்குர்ஆன்: 29:
45 )
சிறு வயது முதலே
தொழுகையின் மூலம் பக்குவம் அடைகிற ஒரு குழந்தை, ஒரு சிறுவன் வளர்ந்து
வாலிபன் ஆகிற போது இத்தகைய தீமைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதோடு, இறை நினைவோடு வாழ்ந்து,
திருப்திகரமான வாழ்வாதரத்தைப் பெற்று இறையச்சத்துடன் கூடிய
இறுதி முடிவை வாழ்வின் இறுதிப் பகுதியில் பெறுகின்றார்.
ஆகவே, தொழுகையின் மீது எந்த
சிறுவனின் வாழ்வு கட்டமைக்கப்படுகிறதோ அந்த சிறுவனின் முழு வாழ்வும் பரக்கத்தான
பாக்கியமான வாழ்வாக அமைந்து விடுகிறது.
சிறு பிராயத்தில் பெறும் மார்க்க வழிகாட்டல் வாழ்வின் இறுதி
வரை பிடிப்போடு வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கிறது.
குடும்பத்தலைவனின் பொறுப்பு....
இஸ்மாயீல் (அலை) அவர்களை சிலாகித்து கூறும் இறைவன்
அவர்களின் வாழ்க்கையை "நினைவு கூர்ந்து" பார்க்குமாறு தூண்டி விட்டு, அவர்களின் பிரதான பண்புகளை அடையாளப்படுத்தும் போது
கஅபாவை தம்
தந்தையோடு இணைந்து கட்டியதையோ,கனவில் காட்சிப்படுத்தியதை தம்
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிட கழுத்தை நீட்டியதையோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடாமல்
وَاذْكُرْ
فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا
نَّبِيًّا
(நபியே!) இவ்வேதத்தில்
இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில்
உண்மையாளராக இருந்தார்;
இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
وكَانَ
يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوة وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார். (
அல்குர்ஆன்: 19:
54, 55 )
என்று தம் குடும்பத்தாரை தொழ ஏவினார் என்று புகழ்ந்து
கூறுகின்றான்.
தந்தையின் பொறுப்பு....
يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ
بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَؕ اِنَّ
ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِۚ
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி,
தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். ( அல்குர்ஆன்: 31:
17 )
எனவே, நாம் நமது சந்ததிகளுக்கு
தொழுகையின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கையைப் பிடித்து தொழுகைக்கு அழைத்து வர வேண்டும்.
ஏனெனில், சிறு பிராயத்தில் மேற்கொள்ளப்படும் மார்க்க வழிகாட்டல் தான் வாழ்வின் இறுதி
வரை அவர்களை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்யும்.
عن عمر بن أبي سلمة رضي الله عنه قال: (كنت غلاماً في
حجر النبي صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة، فقال النبي صلى الله عليه
وسلم: يا غلام، سمِّ الله، وكل بيمينك، وكل مما يليك، فما زالت طعمتي بعد) رواه
البخاري. قال ابن حجر: "أي لزمت ذلك وصار عادة لي .. وفيه منقبة لعمر بن أبي
سلمة لامتثاله الأمر، ومواظبته على مقتضاه".
அம்ர் இப்னு அபூ ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நான் சிறுவனாக இருக்கும் போது நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்தேன். ஒரு நாள்
நபி (ஸல்) அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கை தட்டில் அங்கும்
இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிறுவனே!
அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடு! வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்பிருந்தே
சாப்பிடு! என்றார்கள். அதன் பின்னர் என் வாழ்நாளில் ஒரு போதும் நான் அப்படி
சாப்பிட்டதே இல்லை". ( நூல்: புகாரி )
இந்த அம்ர் இப்னு ஸலமா (ரலி) அவர்கள் சிறு வயது முதலே
அவர்களின் ஒட்டுமொத்த கோத்திரத்தாலும் கொண்டாடப்பட்டார்கள்.
حَدَّثَنَا
حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلاَبَةَ ، عَنْ عَمْرِو بْنِ
سَلِمَةَ ، قَالَ: قَالَ لِي أَبُو قِلاَبَةَ : أَلاَ تَلْقَاهُ فَتَسْأَلَهُ ،
قَالَ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ ، فَقَالَ :كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ ،
وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ ، فَنَسْأَلُهُمْ : مَا لِلنَّاسِ ، مَا
لِلنَّاسِ ؟ مَا هَذَا الرَّجُلُ ؟ فَيَقُولُونَ : يَزْعُمُ أَنَّ اللَّهَ
أَرْسَلَهُ ، أَوْحَى إِلَيْهِ ، أَوْ أَوْحَى اللَّهُ بِكَذَا ، فَكُنْتُ
أَحْفَظُ ذَلِكَ الْكَلاَمَ ، وَكَأَنَّمَا يُغْرَى فِي صَدْرِي ، وَكَانَتْ
الْعَرَبُ تَلَوَّمُ بِإِسْلاَمِهِمُ الْفَتْحَ ، فَيَقُولُونَ : اتْرُكُوهُ
وَقَوْمَهُ ، فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهُوَ نَبِيٌّ صَادِقٌ ، فَلَمَّا
كَانَتْ وَقْعَةُ أَهْلِ الْفَتْحِ ، بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ ،
وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلاَمِهِمْ ، فَلَمَّا قَدِمَ قَالَ : جِئْتُكُمْ
وَاللهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَقًّا ، فَقَالَ : صَلُّوا
صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا ، وَصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا ،
فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ ، فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ ، وَلْيَؤُمَّكُمْ أَ
كْثَرُكُمْ
قُرْآنًا ، فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي ، لِمَا
كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ ،
وَأَنَا ابْنُ سِتٍّ ، أَوْ سَبْعِ سِنِينَ ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ، كُنْتُ
إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الْحَيِّ : أَلاَ
تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ ، فَاشْتَزَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا ،
فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ الْقَمِيصِ.
ஆறு வயதில் இமாமத்
செய்த அம்ரு பின் சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மக்கள் கடந்து
செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில்
பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
நாங்கள்
அவர்களிடம்,
“”மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக்
கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “”அந்த மனிதர் தன்னை
அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ்
அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்”
என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்)
கூறுவார்கள்.
உடனே நான் அந்த
(இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல
ஆகிவிட்டது. அரபுகள்,
தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க
தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே அவர்கள், “”அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று
நிரூபணமாகிவிடும்)”
என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம்
நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்)
அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து
உங்களிடம் வந்துள்ளேன்.
நபி (ஸல்) அவர்கள், “”இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள்.
இன்ன வேளையில்
இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு
சொல்லட்டும்;
உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர்
உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக் கட்டும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.
ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான்
பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை
அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு
அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன்.
நான் ஒரு
சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு
நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப்
பெண்மணியொருவர்,
“”உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க
மாட்டீர்களா?”
என்று கேட்டார்.
ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள்.
என் வாழ்நாளில் நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல
வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (அறி: அம்ர் பின் சலமா (ரலி), நூல்: புகாரி )
عَنِ
ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ
يَا
غُلَامُ أَوْ يَا غُلَيِّمُ أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ
بِهِنَّ فَقُلْتُ بَلَى فَقَالَ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ
تَجِدْهُ أَمَامَكَ تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ فِي الشِّدَّةِ
وَإِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ
قَدْ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ فَلَوْ أَنَّ الْخَلْقَ كُلَّهُمْ جَمِيعًا
أَرَادُوا أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ
يَقْدِرُوا عَلَيْهِ وَإِنْ أَرَادُوا أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ
اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَاعْلَمْ أَنَّ فِي الصَّبْرِ عَلَى
مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ وَأَنَّ
الْفَرَجَ مَعَ الْكَرْبِ وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் நான்
நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.
அப்போது
நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத்
தரட்டுமா?!
அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்!” என்று கேட்டார்கள். நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!
அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்}
அவர்கள்
“1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்!
(பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ
பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும்,
செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்!
உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.
4. நீ ஏதாவது
கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால்
அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள்
உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ
அவைகள் எல்லாம் உண்டாகி விட்டன.
6. அறிந்து கொள்!
முழு மனித சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும்
அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது!
7. அவ்வாறு தான் முழு
மனித சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ்
உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது!
8. அறிந்துகொள்
சிறுவனே! நீ வெறுக்கின்ற பல காரியங்களில் பொறுமை மேற்கொண்டால் பல நல்ல விளைவுகளைக்
காண்பாய்!
9. திண்ணமாக!
அல்லாஹ்வின் உதவி என்பது பொறுமை கொள்வதில் தான் இருக்கின்றது!, திண்ணமாக,
மகிழ்ச்சி என்பது சிரமத்தை ஏற்றுக் கொள்வதில் தான்
இருக்கின்றது! திண்ணமாக,
இலகு என்பது கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வதில் தான்
இருக்கின்றது!”
என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
இது
சிறுவராயிருந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கற்றுத்தந்த
வார்த்தைகள் அன்னாரை வாழ்க்கையின் உச்சத்திற்கே கொண்டு வந்து நிறுத்தியது.
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் கற்றார்;
உயர்ந்தார்; பெரும் அறிஞராக
உருவானார். அவருக்கு வந்து இணைந்த பட்டம் – ‘நம் சமூகத்தின்
அறிஞர்’.
இத்தனைக்கும் நபியவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கியபோது இப்னு அப்பாஸின் வயது ஏறத்தாழ பதின்மூன்று மட்டுமே. ஆனால் அவர்
மனனம் செய்து அறிவித்து,
ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற
தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள ஹதீத்களின் எண்ணிக்கை 1660. அவரது கல்வி ஞான மேன்மை அறிய இது போதாது?
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் பிற்காலத்தில் பெரும் பெரும் நபித்தோழர்கள் மற்றும்
தாபிஈன்களால் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தின் அனைத்து மக்களாலும்
கொண்டாடப்பட்டார்கள்.
பஹ்ருல் இல்ம் -
கல்விக்கடல் என்றும்,
தர்ஜுமானுல் குர்ஆன் - வேத நூலின் விரிவுரையாளர் என்றும், சுல்தானுல் முஃபஸ்ஸிரீன் - திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் அரசர் என்றும், ரயீஸுல் முஃபஸ்ஸிரீன் - திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என்றும்
போற்றப்பட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் ரலி அவர்களின் வீடு எப்போதும் கல்வி கற்க வருபவர்களால் நிரம்பி வழிந்த
வண்ணம் இருக்கும்.
ஒரு நாள்
திருக்குர்ஆன் விளக்கங்கள்,
அடுத்த நாள் ஃபிக்ஹு சட்டங்கள், அடுத்த நாள் வாரிசுரிமை சட்டங்கள், அடுத்த நாள் இலக்கணம், அடுத்த நாள் கவிதை,
இலக்கியம், அடுத்த நாள் அரபுகள்
வரலாறு, அடுத்த நாள் சொற்பொழிவு என அவர்களின் வீடு சன்மார்க்க கல்வி ஞானப் பெருக்கால்
நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும்.
கலீஃபா உமர் (ரலி)
அவர்களின் ஆட்சி காலத்தில் அரசியல் ஆலோசகராக, அந்தரங்க காரியதரிசியாக, முஃப்தியாக,
ஷூரா ஆலோசனை மன்றத்தில் முக்கிய ஆலோசகராக என்று பல்வேறு
தளங்களிலும் முத்திரை பதித்தார்கள்.
சிறுவயதில்
பெருமானார் (ஸல்) அவர்களின் சீரிய அறிவுரையால் கவரப்பட்டு, கவனப்படுத்தப்பட்ட அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் பிற்காலத்தில் இந்த
உம்மத்துக்கே பயன் தருபவர்களாய் மாறிப்போனார்கள்.
ஆகவே, நாம் நமது சந்ததியினரை நல் வழிப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு
முனைப்புடன் ஈடுபட்டு இந்த உம்மத்திற்கு சிறந்த தலைமுறையினரை அன்பளிப்பாக
அர்ப்பணம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு விஷயத்தை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில்
மூன்று காரணங்களுக்காக நாம் நமது சந்ததியினரை மிகத் தூய்மையாக உருவாக்க
கடமைப்பட்டிருக்கின்றோம்.
1) முன்மாதிரி பெற்றோர்களாக ஆக வேண்டும் என்ற நோக்கில்....
وَالَّذِيْنَ
يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ
وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும்
இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும்
பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று
பிரார்த்தனை செய்வார்கள். ( அல்குர்ஆன்: 25: 74 )
2) நமக்குப் பின்னர் நமக்காக துஆச் செய்கிற நல்ல சந்ததிகளாக நமது சந்ததிகள் ஆக
வேண்டும் என்ற எண்ணத்தில்....
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله تعالى عنه: أَنَّ رَسُولَ
اللَّهِ ﷺ قَالَ: إِذَا مَاتَ ابنُ آدم انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ
ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أو عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو
لَهُ. رَوَاهُ مُسْلِمٌ.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்.
(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு
விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்”
1)
நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
2)
பயனளிக்கக் கூடிய அறிவு
3)
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை ( நூல் :
முஸ்லிம் )
அபூஹுரைரா (ரலி)
அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் (3:1631), அபூதாவூத் (3:2880),
ஸுனன் அத்திர்மிதி (3:1376), ஸுனன் அந்நஸாயீ (6:3549),
முஸ்னத் அஹ்மத் (2:316) ஆகிய நூல்களிலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது
3) எல்லாவற்றுக்கும் மேலாக கட்டாயம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற
காரணத்திற்காக....
عن عبد الله بن عمر -رضي الله عنهما- قال: سمعت رسول الله ﷺ
يقول: كلكم راع وكلكم مسئول عن رعيته، الإمام راع ومسئول عن رعيته، والرجل
راع في أهله ومسئول عن رعيته، والمرأة راعية في بيت زوجها ومسئولة عن رعيتها،
والخادم راع في مال سيده ومسئول عن رعيته؛ فكلكم راع ومسئول عن رعيته .
நீங்கள்
ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள்
விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப்
பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.
பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை
(பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்)
குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும்
பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள்
விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ( நூல்: புகாரி : 2554 )
இது போன்ற
விடுமுறை நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்தி நமது சந்ததிகளை சீராக்குவோம்!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் எல்லோருக்கும் நம் காரியங்கள் அனைத்திலும் நமக்கு துணை
நிற்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteஇன்றைய மாணவச் செல்வங்களை பெற்றோர்கள் எவ்வாறு வார்த்தெடுக்க வேண்டும்..?! என்ற ஒழுக்க விழுமியங்களை அழகாக கூறியுள்ளீர்கள். جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💞
08.11.24 jumma bayan nots wene coming
ReplyDelete