ஆன்லைன் மோசடி! ஆபத்தும்….. விழிப்புணர்வும்….
இன்றைய டிஜிட்டல்
காலத்தில்,
ஆன்லைன் மோசடிகள் என்பது உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாக
உருவெடுத்துள்ளது. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல.
நாளுக்கு நாள்
ஆன்லைன் பணப் பரிவர்த்தனையும் இணையம் வழியாக தொடர்பு கொள்வதும் அதிகரித்து வரும்
நிலையில்,
பலரும் இதிலுள்ள ஆபத்தை உணராமல் சைபர் மோசடியில் சிக்கி
இரையாகி வருகிறார்கள்.
வீட்டிலிருந்தே
வேலை பார்க்கலாம்,
பகுதி நேர வேலை, யூடுயூப் வீடியோ பார்த்து
சம்பாதியுங்கள் என பல வகைகளில் இந்த மோசடிகள் நடைபெறுகிறது.
கடந்த சில
மாதங்களாக இந்தியாவிலும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து
வருகின்றன.
ஆன்லைன் மோசடிகள்
தனிநபர் பிரச்சினை மட்டும் அல்ல, இன்று சமுதாய
பிரச்சினையாகவும் இருக்கிறது.
இந்தியாவில், கடந்த ஓர் (2023
- 2024) ஆண்டில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேலான ஆன்லைன் மோசடி
புகார்கள் பதிவாகியுள்ளன. ஏறக்குறைய 17,000 கோடி ரூபாய்
மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி-ஏப்ரல் 2024 இடையே உள்ள 4
மாத இடைவேளையில், "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடிகளால் இந்தியர்கள் ₹120.30 கோடியை
இழந்துள்ளனர் என்று இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் தரவு வெளிப்படுத்தியுள்ளது
2022-23 நிதியாண்டின் முதல் பாதியில், ரூ.19,485 கோடி மதிப்புள்ள 5,406
மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021-22 நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.36,616 கோடி மதிப்புள்ள 4,069 மோசடி வழக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ்
வங்கியின் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கைபடி, வங்கி மோசடியில்
ஈடுப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு குறைந்திருந்தாலும், மறுபக்கம் பிற மோசடிகள் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளது.
நீண்ட காலமாகவே
கண்டுகொள்ளாமல் தான் இருந்தது மத்திய அரசு. ஆனால், அரசியல் ரீதியிலும் இது அதிர்வலைகளைக் கிளப்பவே, பிரதமர் அலுவலகமே நேரடியாக தலையிட வேண்டியதாகிவிட்டது.
களத்தில் இறங்கிய
இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்புக் குழு, ஆன்லைன் மோசடிகளில்
ஈடுபடுபவர்கள்,
கொள்ளயைடித்த பணத்தை, சம்பந்தமில்லாத நபர்களின்
பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, நிர்வகிப்பதைக்
கண்டறிந்தது. பெரும்பான்மையான வங்கிக் கணக்குகள், பொதுத்துறை வங்கி களில் தொடங்கப்பட்டவையே. பாரத ஸ்டேட் வங்கியில் 40,000 கணக்குகள்,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10,000 கணக்குகள்,
கனரா வங்கியில் 7,000 கணக்குகள் மற்றும்
தனியார் வங்கிகள் சிலவற்றில் மொத்தமாக 11,000 கணக்குகள் எனக்
கண்டறிந்து முடக்கப்பட்டுள்ளன.
இன்னொரு பக்கம்
ஆன்லைன் மோசடியை அரங்கேற்ற வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்தப்படும் 5,000 சிம்கார்டுகளை முடக்க தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு சைபர்
கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
லாவோஸ், கம்போடியா,
தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து
தமிழ்நாட்டு மக்களை குறிவைத்து சைபர் குற்றங்கள் பெருமளவு அரங்கேற்றப்படுவதாக
புகார் எழுந்துள்ளதையடுத்து
சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தாண்டு
துவக்கம் முதல் ஆக.,
மாதம் வரை 73 கோடி ரூபாயை கோவை
மக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.
கோவையில் கடந்த
ஜன., முதல் ஆக.,
26ம் தேதி வரை (எட்டு மாதங்களில்) சுமார், 73 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. மொத்தம், 5319 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 217 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு,
31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆறு குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. சுமார் எட்டு கோடி ரூபாய்
மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த எட்டு மாதங்களின்
ஒன்றறை மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, 2021ம் ஆண்டு ரூ.2.99 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது, 2,251 புகார்கள் பெறப்பட்டுள்ளன, 44 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் ரூபாய்
மீட்கப்பட்டது. 2022ம் ஆண்டு சுமார் 4516
புகார்கள் பெறப்பட்டன, அதில் 13.87 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. 68 எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. 11
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 81 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு, 48 கோடியே 32
லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் மோசடி
நடந்துள்ளது. 6396
புகார்கள் வந்ததில் 206 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. 44 பேர் கைது
செய்யப்பட்டனர். ஆறு பேர் குண்டாசில் அடைக்கப்பட்டுள்ளனர். ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் குறைந்த
விலையில் பொருட்கள் கிடைப்பதாக நம்பி தாங்கள் ஏமாந்து விட்டதாக புதுச்சேரி மக்கள்
இதுவரை 830
புகார்களை அளித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.2.32
கோடியை புதுச்சேரி மக்கள் இழந்திருப்பதாக சைபர் க்ரைம்
போலீஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...
46 கோடி இந்தியர்கள்
இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் சுமார் 4 கோடி பேர் நேரடியாகவோ,
மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறார்கள்.
“லோக்கல்
சர்க்கிள்ஸ்’
என்ற ஆய்வு அமைப்பு, நாட்டின் 331 மாநிலங்களில் சுமார் 32
ஆயிரம் பேர் மத்தியில் மேற்கொண்ட ஆய்வு மேற்கொண்டது. இதில்
இந்தியாவின் 39
சதவீத குடும்பங்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகி உள்ளதாக கடந்த 2023 மே 2
அன்று வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 3 ஆண்டு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் அடிப்படையிலான தரவுகள்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 24% கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
வணிக தளங்கள்
வாயிலான மோசடிக்கு 13%
பேர் சிக்கியுள்ளனர். ஏடிஎம் கார்டு மோசடி மற்றும் வங்கி
கணக்கு சார்ந்த மோசடிக்கு தலா 10% பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர்த்த இதர ஆன்லைன் மோசடிகளுக்கு 16% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு
மேற்கொள்ளப்பட்டவர்களில் 30%
இந்திய குடும்பங்களில், குறைந்தது ஒருவரேனும்
ஆன்லைன் மோசடிக்கு ஆளாகி இருக்கின்றனர். 9% குடும்பங்களில்
ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த ஆய்வில்
கிடைத்த மிக முக்கியமான உண்மை இதுதான்: ‘ஆன்லைன் மோசடிக்கு
ஆளானவர்களில் 24%
பேர் மட்டுமே தங்களது பணத்தை மீளப் பெற்றுள்ளனர். ஏனையோர்
தீர்வு ஏதும் கிட்டாது,
இழந்த பணத்தை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்’. எனவே ஆன்லைன் மோசடிகளில் சிக்காது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ( நன்றி:
காமதேனு,
2023/5/3 )
சைபர் குற்றங்கள்..?
சைபர்’ என்ற வார்த்தையை 1962-ம் ஆண்டு “நேக்ரோ மான்சன்”
என்னும் நூலின் ஆசிரியர் கார்டன் ஸி.டிக்சன் என்பவர்
பயன்படுத்தினார். ஏமாற்றியவனும், ஏமாந்தவரும் வேறு வேறு
நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் சந்தித்தது இல்லை. ஆனால் அவர்கள் பரிமாறிய
செய்திகள் ஆகாயத்தில் சந்தித்திருக்கின்றன. பிரபஞ்சத்தில் பரந்திருக்கும்
மின்காந்த அலைகளைத்தான் அவர் சைபர் பரப்பு என்றார்.
சுருக்கமாகச்
சொன்னால் கம்ப்யூட்டர்,
அலைபேசி போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களை
சைபர் குற்றங்கள் என்கிறோம். கம்ப்யூட்டரில் உள்ள தகவலை திருடுவதும், அவற்றை அழிப்பதும் கூட சைபர் குற்றங்கள்தான். அப்படி அழித்துவிட்டால் விமான
நிலைய பாதுகாப்பு,
வங்கி கணக்கு பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறியாகிவிடும்.
இந்த சைபர் குற்றங்களில் கைதேர்ந்தவர்கள் நைஜீரியர்கள்.
ஆனால், இன்று நைஜீரிய குற்றவாளிகளை மிஞ்சும் வகையில் பல உள்ளூர் இணையதள மோசடி
கும்பல்கள் உருவாகிவிட்டன.
பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் புகார்களின் அதிகரிப்பு...
NCRP சைபர் கிரைம்
தொடர்பான புகார்களில் கூர்மையான உயர்வையும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) முழுவதும் 15.56
லட்சம் புகார்கள் வந்த நிலையில், ஜனவரி 1
முதல் ஏப்ரல் 30 வரை, போர்ட்டலுக்கு 7.4
லட்சம் புகார்கள் வந்துள்ளன.
இது 2022ல் பதிவான 9.66
லட்சம் புகார்களிலிருந்தும் அதற்கு முந்தைய ஆண்டில் (2021) 4.52 லட்சத்திலிருந்தும் பெரிய அதிகரிப்பு.
ஆகவே, மக்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடனும்
இருக்க வேண்டும்.
( நன்றி: தமிழ் திசை இந்து, தினத் தந்தி, தினமலர்,
கல்கி, விகடன் )
ஆன்லைன் மோசடியில் மக்கள் சிக்குவதன் காரணம் என்ன?
ஆன்லைன் மோசடியால்
பாதிக்கப்படுபவர்கள் ஒன்று பண ஆசை காட்டி மோசடி செய்யப்படுகின்றார்கள். இன்னொன்று
விலையுயர்ந்த பொருட்களை குறைவான விலைக்கு தருவதாக கூறும் விளம்பரங்களைப் பார்த்து
பணத்தை இழக்கின்றனர்.
முதலாவது
மோசடியில் வீழ்வதற்கு பண ஆசையும், பண மோகமும் காரணமாகும்.
ஒரு மனிதன் பிறந்த
நாள் முதல் அவன் இறந்து போகும் நாள் வரைக்கும் பணம் அத்தியாவசிய தேவையாய்
இருக்கிறது.
அந்த வகையில் நம்
அன்றாட வாழ்க்கைக்கு நிலம்,
நீர், காற்று எவ்வளவு முக்கியமோ
அதேப்போல பணமும் முக்கியம்.
ஆக
இவையெல்லாவற்றையும் சமாளிப்பதற்கு பணம் தேவைப்படுவதால், தேவையான பணம் வைத்திருப்பது தவறொன்றுமில்லை. ஆனால்,
இரண்டாவது மோசடி
வலையில் சிக்குவதற்கு நுகர்வு கலாச்சாரம் அடிப்படை காரணமாகும்.
இன்று மக்களிடையே
நுகர்வு கலாச்சாரம் பெருகி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம் வீடுகளிலும்
தற்போது இது அதிகரித்து வருகிறது.
நுகர்வு
கலாச்சாரம் என்றால்
தேவையில்லாமல் பொருட்களை வாங்குவது அல்லது பிறர்
மெச்ச வேண்டும் என்ற புகழுக்காகவும், பெருமைக்காகவும்
வாங்குவது.
அல்லது பிறரைப்
பார்த்து ஒன்றன் பின் ஒன்றாக மாற்றிக் கொண்டே இருப்பது.
பெரியவர்கள், இளைஞர்கள்,
பள்ளி/கல்லூரி மாணவர்கள் குடும்பத் தலைவிகள், சிறுவர்கள்,
குழந்தைகள் என எல்லாமட்டத்திலும் இந்த நுகர்வு
கலாச்சாரம் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது.
1) பேராசையை தவிர்ப்போம்!
عن عبد
الله بن عباس وأنس بن مالك وعبد الله بن الزبير وأبي موسى الأشعري رضي الله عنهم
أن رسول الله صلى الله عليه وسلم قال: «لو أن لابنِ آدمَ واديًا من ذَهَبٍ أَحَبَّ
أن يكونَ له واديانِ، ولَنْ يملأَ فَاهُ إلا الترابُ، ويَتُوبُ اللهُ عَلَى مَنْ
تَابَ
ஆதமின் மகனுக்குத்
(மனிதனுக்கு) தங்கத்திலான ஒரு நீரோடை இருந்தால், தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் பேராசைப்படுவான். அவனுடைய
வாயை மண்ணைத் (மரணத் தை) தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இதுபோன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின்
கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்' என நபி (ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
( ألهاكم التكاثر حتى زرتم المقابر )
'நீங்கள் மண்ணறைகளைச்
சந்திக்கும் வரை செல்வத்தைப் பெருக்கும் பேராசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்)
பராக்காக்கி (திருப்பி) விட்டது'. ( அல்குர்ஆன்: 102: 1,2 )
وقال
الإمام أحمد : حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة : سمعت قتادة يحدث عن مطرف - يعني
ابن عبد الله بن الشخير - عن أبيه قال : انتهيت إلى رسول الله صلى الله عليه وسلم
وهو يقول : " ( ألهاكم التكاثر ) يقول ابن آدم : مالي مالي . وهل لك من مالك
إلا ما أكلت فأفنيت ، أو لبست فأبليت ، أو تصدقت فأمضيت ؟
" .
நபி(ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத்
திசை திருப்பி விட்டது”
என்று தொடங்கும் (102 ஆவது)
அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன்.
அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்),
எனது செல்வம், எனது செல்வம்” என்று கூறுகிறான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக்
கிழித்ததையும் “தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அஷ்ஷக்கீர் (ரலி), ( நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ )
عن حكيم
بن حِزَام رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم فأعطاني، ثم
سَألته فأعطاني، ثم سألته فأعطاني، ثم قال: «يا حكيمُ، إن هذا المال خَضِرٌ
حُلْوٌ، فمن أخذه بِسَخاوَة نفس بُورِك له فيه، ومن أخذه بإشراف نفس لم يُبَارَك
له فيه، وكان كالذي يأكل ولا يَشَبَع،.
ஹகீம் பின் ஹிஸாம்
(ரலி) கூறுகிறார்: 'நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும்
கேட்டேன்,
கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே,
இச்செல்வம் (பார்க்க) பசுமையானதும், (சுவைக்க) இனிமையானதும் ஆகும். இதை தாராள மனதுடன் (பேராசையின்றி) எடுத்துக்
கொள்பவருக்கு இதில் அபிவிருத்தி வழங்கப்படுகிறது. இதை பேராசையுடன் எடுத்துக்
கொள்பவருக்கு இதில் அபிவிருத்தி வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும், வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்)
கூறினார்கள்". ( நூல்: புகாரி )
عن عمرو
بن عوف الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن
الجراح رضي الله عنه إلى البحرين يأتي بِجِزْيَتِهَا، فَقدِم بمالٍ من البحرين،
فسمعت الأنصار بقدوم أبي عبيدة، فَوَافَوْا صلاة الفجر مع رسول الله صلى الله عليه
وسلم فلما صلى رسول الله صلى الله عليه وسلم انصرف، فَتَعَرَّضُوا له، فتَبسَّم
رسول الله صلى الله عليه وسلم حين رآهم، ثم قال: «أَظُنُّكُمْ سَمِعتم أن أبا
عبيدة قَدِم بشيءٍ من البحرين؟» فقالوا: أجل، يا رسول الله، فقال: «أبشروا
وأمِّلوا ما يَسُرُّكُم، فوالله ما الفَقرَ أخشى عليكم، ولكني أخَشى أن تُبْسَط
الدنيا عليكم كما بُسِطَت على من كان قبلكم، فتَنَافسوها كما تَنَافسوها،
فَتُهْلِكَكُم كما أهْلَكَتْهُمْ».
[صحيح] - [متفق عليه]
அம்ர் இப்னு அவஃப்
(ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின்
அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை,
“ஜிஸ்யா” (காப்பு)வரி வசூலித்துக்
கொண்டுவரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம்
செய்துகொண்டு,
அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக
நியமித்திருந்தார்கள்.
அபூஉபைதா (ரலி)
அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு)
வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத்
தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள்
தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தொழுகை முடிந்து
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம்
எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள்.
அதற்கு அன்சாரிகள், “ஆம்;
அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின்,
ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி
நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான்
அஞ்சவில்லை.
ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச்செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப்
போன்று, உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள்
ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று
உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
2) போதுமென்ற மனம் அமைப்போம்!
حَدَّثَنَا
زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ
عُيَيْنَةَ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ
الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ.
வாழ்க்கை வசதிகள்
அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ( நூல் : முஸ்லிம் )
حَدَّثَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ
الْمُقْرِئُ عَنْ سَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ حَدَّثَنِى شُرَحْبِيلُ – وَهُوَ
ابْنُ شَرِيكٍ – عَنْ أَبِى عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىِّ عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ.
யார் இஸ்லாத்தை
ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப்
போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார் என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: முஸ்லிம் )
أَنَّ
اللَّهَ يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ، فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ
لَهُ، بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ، وَوَسَّعَهُ، وَمَنْ لَمْ يَرْضَ لَمْ
يُبَارِكْ لَهُ
அல்லாஹ் தன்னுடைய
அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி
கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி
கொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : பனூ ஸுலைம் கூட்டத்தை சார்ந்த ஒருவர் (ரலி), (நூல் : அஹ்மத் )
3) அவசியத் தேவைகள்
அறிந்து பொருள் வாங்குவோம்!
கண்டதையும்
வாங்குகிற, தகுதிக்கும் தேவைக்கும் மீறி வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம் தற்போது
மக்களிடையே பெருகி வருகிறது.
ஸஹீஹ் முஸ்லிம்
கிரந்தத்தில் ஆடை அலங்காரம் தொடர்பாக பேசுகிற பாடத்தில் "தேவைக்கு அதிகமாக
ஆடைகளையும்,
விரிப்புகளையும் வாங்கிக் குவிப்பது மக்ரூஹ் -
வெறுக்கத்தக்க செயல் எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள நபிமொழி.
عن جابر
بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال له فراش للرجل وفراش لامرأته
والثالث للضيف والرابع للشيطان
ஜாபிர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒரு மனிதருக்கு தமக்கென்று ஒரு விரிப்பும், தம் குடும்பத்தாருக்கு என்று ஒரு விரிப்பும், வீட்டிற்கு வருகை தரும் விருந்தாளிக்கென்று ஒரு ஒரு விரிப்பு இருப்பதென்பது போதுமாகும்.
நான்காவதாக ஒரு விரிப்பு வைத்திருப்பதென்பது ஷைத்தானுக்கு உரியதாகும்" என்று
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
4) ஆடம்பரம் அனுமதியோம்!
عَنْ
مُعَاذِ بۡنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَمَّا بَعَث معاذ بۡنِ جَبَلٍ ليمن، إِيَّاكَ وَالتَّنَعُّمَ فَإِنَّ عِبَادَ
اللَّهِ لَيْسُوا بِالْمُتَنَعِّمِينَ مسند أحمد بن حنبل
முஆத் இப்னு ஜபல்
(ரலி) அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஆத் இப்னு ஜபல் (ரலி)
அவர்களை ஏமனுக்கு அனுப்பிய போது "முஆதே! ஆடம்பர வாழ்க்கை விஷயத்தில்
ஜாக்கிரதையாக இருக்குமாறு உம்மை எச்சரிக்கை செய்கிறேன், ஏனெனில்,
அல்லாஹ்வின் அடியார்கள் ஆடம்பரமாக வாழ மாட்டார்கள் "
என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )
5) வீண் விரயம் தவிர்ப்போம்!
இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ்
நேசிக்க மாட்டான்.”
( அல்குர்ஆன்: 6: 141 )
“(செல்வத்தை) அளவு கடந்து
வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய
சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி
செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன்: 17: 26, 27 )
வீண் விரயம்
என்றால் என்ன என்பது பற்றி அர்ராகிப் (ரஹ்) கூறும் போது:
“மனிதன் புரியும் அனைத்து காரியங்களிலும் எல்லை மீறுதலாகும்” என்கிறார். ( நூல்: அல்முப்ரதாத் பீ கரீபில் குர்ஆன் )
வீண்விரயத்தைச் சுட்டிக்காட்டும்
முகமாக அரபு மொழியில் இரு வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவை الإِسْرَاف ، التَّبْذِيْر ஆகியனவாகும். இவற்றுள் الإسْرَاف என்பது தனக்கு அவசியமான விஷயங்களில்
அளவுக்கதிகமாகச் செலவிடுவதைக் குறிக்கும்.
மற்றும் التَّبْذِيْر என்பது அவசியமற்ற விஷயங்களில்
ஒன்றைச் செலவு செய்வதாகும்.
இமாம் ஷாபி (ரஹ்)
அவர்கள் நவின்றார்கள்: “தனக்கு உரிமையில்லாதவற்றில் பணத்தை செலவு செய்தல் التبذير ஆகும்.” ( நூல்: அல்ஜாமிஉ
லிஅஹ்காமில் குர்ஆன் )
6) பிறர் போல் வாழ வேண்டும் என்ற ஆசையை விட்டொழிப்போம்!
إِذَا نَظَرَ
أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ
إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ
”செல்வத்திலும்
தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ( நூல் : புகாரி )
انْظُرُوا
إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ،
فَهُوَ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللهِ عَلَيْكُمْ
உங்களுக்கு கீழ்
நிலையில் உள்ளவர்களை நீங்கள் பாருங்கள்; உங்களுக்கு மேல் நிலையில்
உள்ளவர்களை நீங்கள் பார்க்காதீர்கள்; அல்லாஹ்வுடைய அருட்கொடையை
குறைத்து மதிப்பிடாமல் இருப்பதற்கு ஏற்ற முறையாகும்." என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (நூல்: முஸ்லிம் )
7) சிக்கனமாக செலவு செய்வோம்!
وَالَّذِينَ
إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ
قَوَامًا
அவர்கள் தர்மம்
(அல்லது செலவு) செய்தால் அளவு கடந்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் செய்வார்கள். (அல்குர்ஆன்: 25:
67 )
وَلَا
تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ
فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا
(உமது பொருள்களில்
ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம்
இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர்
நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர். ( அல்குர்ஆன்: 17:
29 )
حَدَّثَنَا
عَبْدُ اللهِ، حَدَّثَنِي هَارُونُ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا جَعْفَرٌ،
حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ زِيَادٍ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، «يَحْلِفُ
بِاللهِ مَا عَالَ مُقْتَصِدٌ قَطُّ
இமாம் ஹஸன் பஸரீ
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சிக்கனமாக செலவு செய்பவர் ஒரு போதும் ஏழ்மை அடைய
மாட்டார். ( நூல்: அஜ் - ஜுஹ்து லிஇமாமி அஹ்மத் )
8) ஏமாற்ற வேண்டாம்! ஏமாற வேண்டாம்!
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ غِرٌّ كَرِيْمٌ، وَالْفَاجِرُ خَبٌّ لَئِيْمٌ. رواه ابوداؤد،
ஒரு முஃமின்
கள்ளம் கபடமற்றவராகவும்,
கண்ணியமானவராகவும் இருப்பார், ஆனால்,
பாவியோ, ஏமாற்றுபவனாகவும், கீழ்த்தரமானவனாகவும் இருப்பான்” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )
عَنْ
أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ
قَالَ “ لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ ”.
"ஒரு
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில்( பொந்தில்) இரண்டு முறை தீண்டப்படமாட்டார்"
(கொட்டு பெறமாட்டான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் புகாரி ) இமாம்
நவவீ (ரஹ்) அவர்கள் இந்த நபிமொழிக்கு விளக்கம் தருகிற போது...
أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم أسر أبا غرة الشاعر يوم بدر فمن عليه وعاهده أن
لايحرض عليه ولايهجوه وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ ثُمَّ رَجَعَ إِلَى
التَّحْرِيضِ وَالْهِجَاءِ ثُمَّ أَسَرَهُ يَوْمَ أُحُدٍ فَسَأَلَهُ الْمَنَّ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ لايلدغ مِنْ
جُحْرٍ مَرَّتَيْنِ
(شرح النووي علي مسلم)
அபூ கிர்ரா
என்பவன் நபி (ஸல்) அவர்களை தவறான கொச்சையான கவிதைகளால் பத்ரு போரில் திட்டி கவி
பாடினான். அவனை நபி (ஸல்) சிறைபிடித்தார்கள். தன்னுடைய ஏழ்மையை எடுத்துக்
கூறினான். மாநபி (ஸல்) அவர்கள் அவனை மன்னித்தார்கள். மீண்டும் உஹது போரில் கலந்து
கொண்டு தவறான வார்த்தைகளால் நபியவர்களை வசைபாடினான். மறுபடியும் அவனை நபி (ஸல்)
சிறைபிடித்தார்கள். இப்போதும் தன் ஏழ்மையை அவன் கூறிய போது நபியவர்கள் ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரண்டு முறை கொட்டு பெறமாட்டான் என்று
கூறினார்கள்.
9). செல்வத்தைக் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்!
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ أَبِى
الأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ
كَانَ يَقُولُ « اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ
وَالْغِنَى ».
இறைவா!
நல்வழியையும்,
இறையச்சத்தையும், சுயக் கட்டுப்பாட்டையும், பொருளாதாரத் தன்னிறைவையும் உன்னிடம் வேண்டுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பிரார்த்தித்து வந்தார்கள். ( நூல் : முஸ்லிம் )
இஸ்லாத்தின்
ஏராளமான கடமைகள் பொருளாதாரம் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற வகையில்
அமைக்கப்பட்டுள்ளன.
ஜகாத் இஸ்லாத்தின்
கடமைகளில் ஒன்றாகும். பொருளாதாரம் இருந்தால்தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும்.
செல்வத்தைச் தேடவோ,
சேர்த்து வைக்கவோ கூடாது என்றால் இந்தக் கடமையை நிறைவேற்ற
முடியாது.
இஸ்லாத்தின்
மற்றொரு கடமை ஹஜ். இந்தக் கடமையைச் செய்ய மக்காவில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவில்
பொருளாதாரம் தேவைப்படாது என்றாலும் மற்றவர்கள் ஹஜ் செய்வதாக இருந்தால் பொருள் வசதி
அவசியம்.
முஸ்லிம்கள் மீது
இஸ்லாம் சுமத்தியுள்ள இன்னும் பல பொறுப்புகளை நிறைவேற்ற பொருளாதாரம் அவசியமாக
உள்ளது.
பெற்றோரையும், உறவினர்களையும் கவனிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. இந்தக் கடமையைப்
பணம் இல்லாமல் செய்ய முடியாது.
திருமணம்
செய்யும்போது மஹர் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
திருமணத்துக்குப்பின் மனைவிக்கு உணவும், உடையும் அளிக்க வேண்டும்
எனவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது. இந்தக் கடமையைச் செய்வதற்கும் பணம் தேவை.
குழந்தை பிறந்தால்
அதற்காக அகீகா கொடுக்க வேண்டும். குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க
வேண்டும். இந்தக் கடமையைச் செய்யவும் பொருளாதாரம் தேவை.
இப்படியாக இன்னும்
பல்வேறு தேவைகளுக்கு பொருளாதாரம், செல்வம் தேவை ஆகையால்
செல்வ வளத்தை அல்லாஹ்விடம் கேட்பதும் மார்க்கம் வலியுறுத்தியுள்ள வழியில் ஹலால்
ஹராம் பேணி பொருளாதாரத்தை திரட்டுவதும் நம் மீது கடமையாகும்.
10) ஹலால் ஹராம் பேணி பொருளாதாரத்தை ஈட்டுவோம்!
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ» .
رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
கடமையான
தொழுகைகளுக்கு பிறகு சிறந்தது எது? என்று நபி ﷺ அவர்களிடத்தில் கேட்கப்பட்டது அதற்கு நபி ﷺ அவர்கள் ஹலாலான வழியில் சம்பாத்தியத்தை தேடுவது என்று
நபி ﷺ அவர்கள் பதிலளித்தார்கள்.
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ،
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ
سَيَّارٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه أَنَّ مُكَاتَبًا،
جَاءَهُ فَقَالَ إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ كِتَابَتِي فَأَعِنِّي . قَالَ أَلاَ
أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَوْ
كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ قَالَ “
قُلِ اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ
عَمَّنْ سِوَاكَ ” . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
அல்லாஹ்ஹும் மக்كஃபினி பிஹலாலிக அன் ஹராமிக வ அغக்னினீ பி ஃபள்லிக அعம்மன் ஸிவாக்.
பொருள் : யா
அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் (தவிர்ந்து) நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு
போதுமாக்குவயாக! மேலும் உனது அருளைக் கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தை விட்டும்
என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!" என்று நபி ﷺ அவர்கள் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். (
நூல்: திர்மிதி )
حَدَّثَنَا
آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ
أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ، يُبَالِي المَرْءُ بِمَا أَخَذَ
المَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ»
தாம் சம்பாதித்தது
ஹலாலா? ஹராமா?
என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்"
என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். ( நூல்: புகாரி )
11) உலக மோகம் கைவிடுவோம்!
நாம் இந்த
உலகத்தில் எவ்வளவு காலம் வாழ்ந்துவிட போகிறோம்? நாம் இந்த உலகத்தில்
நிரந்தரமானவர்கள் இல்லை.
இந்த உலகமும்
நமக்கு நிரந்தரமானது இல்லை. நாம் மாறக்கூடியவர்கள். நாம் வாழும் உலகமும்
மாறக்கூடியதே! என்பதை நாம் மனதில் நிறுத்தினாலே எந்த பணத்தை தேடி நாம் அலைகின்றோமோ
எந்த பணத்தின் ஓடுகின்றோமோ அதன் பின்னால் ஓடுவதை நாம் நிறுத்தி விடுவோம்.
ஏனெனில், பணம்,
செல்வம், பொருளாதாரம் எதுவுமே
நமக்கு சொந்தமானது இல்லை.
அல்லாஹ்
அல்குர்ஆனில் பல இடங்களில் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றான்.
وَأَنفِقُوا
مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ
இன்னும், உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில்
இருந்து (நல்ல வழிகளில்) செலவு செய்யுங்கள். ( அல்குர்ஆன்: 63:
10 )
قُل
لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُواْ يُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُواْ مِمَّا
رَزَقْنَٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ
فِيهِ وَلَا خِلَٰلٌ
(நபியே! என் மீது)
நம்பிக்கைகொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்யட்டும்! ( அல்குர்ஆன்: 14: 31 )
يَٰٓأَيُّهَا
ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ
يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَٰعَةٌ ۗ وَٱلْكَٰفِرُونَ هُمُ
ٱلظَّٰلِمُونَ
நம்பிக்கையாளர்களே!
ஒரு நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம்
புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இருக்காது.
(மறுமை நாளை) நிராகரிப்பவர்கள்தான் (பெரும்) அநியாயக்காரர்கள் ஆவார்கள். (
அல்குர்ஆன்: 2 : 254 )
"நாம்
வழங்கியது" என்று தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது பொருளாதாரம் என்று நாம்
நினைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகின்றான்.
தேவைக்கு அதிகமான எதுவும் ஆபத்தே!
عن انس
بن مالك قال:- أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلم خرج ، فرأى قبَّةً مشرفةً ،
فقال : ما هذه ؟ قال له أصحابهُ : هذه لفلانٍ – رجلٍ من الأنصارِ – قال فسكتَ ،
وحملها في نفسِهِ ، حتَّى إذا جاء صاحبُها رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلم
يسلِّمُ عليه في الناسِ ، أعرض عنه – صنع ذلك مرارًا - حتَّى عرف الرجلُ الغضبَ
فيه ، والإعراضَ عنه ، فشكا ذلك إلى أصحابِهِ ، فقال واللهِ إني لأنكرُ رسولَ
اللهِ صلَّى اللهُ عليه وسلم ، قالوا خرج فرأى قبَّتَك ! قال : فرجعَ الرجلُ إلى
قبَّتِه فهدمَها ، حتَّى سوَّاها بالأرضِ ، فخرج رسولُ اللهِ صلَّى اللهُ عليه
وسلم ذاتَ يومٍ فلم يرَها ، قال : ما فعلتِ القُبَّةُ ؟ قالوا : شكا إلينا صاحبُها
إعراضَك عنه ، فأخبرناهُ ، فهدمَها ، فقال : أما إنَّ كلَّ بناءٍ وبالٌ على صاحبِه
إلَّا ما لا ، إلا ما لا – يعني : ما لا بدَّ منه
-
الراوي
: أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة
أو الرقم: 5237 | خلاصة حكم المحدث : صحيح
அனஸ் இப்னு மாலிக்
(ரலி) அறிவிக்கின்றார்கள்:- "நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை மதீனாவின் தெருவுகளில்) வெளியே சென்றார்கள். அங்கு உயரமான
ஒரு கோபுரத்தை பார்த்தார்கள். இது என்ன என்று கேட்டார்கள். நபியவர்களின் தோழர்கள், இது இன்ன அன்ஸாரித் தோழருக்குச் சொந்தமானதாகும் என்று கூறினார்கள். நபியவர்கள்
அமைதியாகி விட்டார்கள். அதை தமது மனதில் நிறுத்திக்கொண்டார்கள். அந்த கட்டிடத்தின்
உரிமையாளர் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் இருக்கும்போது வந்து
நபியவர்களுக்கு ஸலாம் கூறினார். நபியவர்கள் பதில் கூறாமல் அவரை புறக்கனித்தார்கள்.
நபியவர்கள் கோபத்தில் இருப்பதை அந்த மனிதர் அறிந்து கொண்டார். அவர் இதை தமது
தோழர்களிடம் முறையிட்டார். என் மீது நபி (ஸல்) அவர்கள் வெறுப்பாக
இருப்பதாக நான் கருதுகிறேன் என்று கூறினார். அதற்கு, தோழர்கள் கூறினார்கள்: "நபியவர்கள் ஒரு முறை வெளியே சென்றபோது உமது
கோபுரத்தை பார்த்தார்கள். உடனே அந்த மனிதர் திரும்ப சென்று அந்த கோபுரத்தை இடித்து
தரைமட்டமாக அதை ஆக்கிவிட்டார். மற்றொரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே சென்றபோது அந்த கோபுரத்தை அவர்கள் பார்க்க முடியவில்லை.
இங்கிருந்த கோபுரம் என்ன ஆனது என்று கேட்டார்கள். தோழர்கள் கூறினார்கள்: அதன்
உரிமையாளர் நீங்கள் அவரை பார்க்காமல் புறக்கணித்ததைப் பற்றி எங்களிடம்
முறையிட்டார். நாங்கள் அவருக்கு நடந்த செய்தியை கூறினோம். ஆகவே அவர் அதை
இடித்துவிட்டார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: எல்லா கட்டிடமும் அதன்
உரிமையாளருக்கு நாசமாகவே அமையும். மிக அவசியமானதை தவிர. ( நூல்: அபூதாவூத் )
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ضَمْرَةُ، عَنِ
ابْنِ شَوْذَبٍ قَال، قَالَ الْحَسَنُ: مَنْ بَنَى فَوْقَ مَا يَكْفِيهِ طُوِّقَهُ
يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ
"
இமாம் ஹஸன் அல்
பஸரீ (ரஹ்) கூறினார்கள்: யார் தமக்கு போதுமான அளவிற்கு மேல் கட்டிடம் கட்டுவாரோ
மறுமையில் ஏழு பூமியிலிருந்து அதை அவருடைய கழுத்தில் அரிகண்டமாக மாட்டப்படும். (
நூல்: அஜ் - ஜுஹ்து லி இமாமி அஹ்மத் இப்னு ஹன்பல் )
மேன் மக்களின் பற்றின்மை!
قال ابن
عيينة ـ رحمه الله ـ: دخل هشامٌ الكعبة، فإذا بسالم بن عبد الله فقال: «سَلْنِي
حاجةً»
قال:
«إنِّي أستحي مِن الله أن أسأل في بيته غيرَه»، فلمَّا خرج قال: «الآن فسَلْني
حاجةً» فقال له سالمٌ: «مِن حوائج الدنيا أم مِن حوائج الآخرة؟» فقال: «مِن حوائج
الدنيا»، قال: «واللهِ ما سألتُ الدنيا مَن يملكها، فكيف أسأل مَن لا
يملكها». [«سير أعلام النبلاء» للذهبي (٤/ ٤٦٦)]
இமாம் உயைனா (ரஹ்)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "உமைய்யா கலீஃபாவாகிய ஹிஷாம் பின் அப்துல்
மலிக் (ரஹ்) கஃபாவினுள் நுழைந்தார்கள், அங்கு உமர் (ரலி)
அவர்களின் பேரர்,
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார் ஸாலிம்
இப்னு அப்துல்லாஹ் (ரலி) இருந்தார்கள்.
கலீஃபா அவரிடம்
"உமக்கு தேவை ஏதும் இருப்பின் என்னிடத்தில் கேட்பீராக!",என்றார்கள்.
அதற்கு, "அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து கொண்டு வேறொருவரிடம் கேட்பதை நான்
வெட்கப்படுகிறேன் என்று" பதில் கூறினார்கள்.
அங்கிருந்து
ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) வெளியேறும் வரை காத்திருந்த கலீஃபா ஹிஷாம் பின்
அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் "இப்பொழுதாவது என்னிடம் உங்கள் தேவையை கேளுங்கள்
என்று கேட்க ,
அதற்கு ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உலகத்
தேவையா? மறுமை பற்றிய தேவையா?
என்று கேட்டார்கள்.
அப்போது, "உலக காரியங்களில் தேவை குறித்து" என்று கலீஃபா பதில் கூற... "இந்த உலகத்தை தன் வசம் வைத்திருப்பவனிடமே நான் உலகத்தைப் பற்றி கேட்கவில்லை இவ்வாறு
இருக்க இவ்வுலகத்தை சொந்தம் கொள்ளாத ஒருவரிடம் எவ்வாறு நான் கேட்க முடியும் !!?
என்று
பதில் கூறினார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா-4/466 )
இவ்வளவு தான் உலகம்!
عن جابر
بن عبد الله قال:- أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَرَّ بِالسُّوقِ، دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَهُ،
فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ
قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟» فَقَالُوا: مَا نُحِبُّ
أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟ قَالَ: «أَتُحِبُّونَ أَنَّهُ
لَكُمْ؟» قَالُوا: وَاللهِ لَوْ كَانَ حَيًّا، كَانَ عَيْبًا فِيهِ، لِأَنَّهُ
أَسَكُّ، فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ؟ فَقَالَ: «فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ
عَلَى اللهِ، مِنْ هَذَا عَلَيْكُمْ»
ஜாபிர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ‘ஆலியா’வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப்
பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த,
காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப்
பிடித்துக்கொண்டு,
“உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்குப் பகரமாக
வாங்கிக்கொள்ள விரும்புவார்?’’ என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?’’ என்று
கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது
உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’’ என்று கேட்டார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும்போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’’ என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
“அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக!
இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்‘’ என்று சொன்னார்கள்.
( நூல்: முஸ்லிம் )
கலீபா ஹாரூன்
அர்ரஷீத் அவர்கள் மிகப் பெரும் ஆட்சியாளர்களுள் ஒருவர். பெரும் சாம்ராஜ்யத்தின்
சொந்தக்காரர். இஸ்லாமிய சாம்ராஜ்யத் தின் தலைவராக விளங்கிய அவர் நோயுற்று
மரணப்படுக்கையில் இருக்கின்ற சமயத்தில் தனது மகனைப் பார்த்து ஓர் அல்குர்ஆன்
வசனத்தை ஓதுகிறார்.
“ஆனால் எவனுடைய பட்டோலை
அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே! (நான் இறந்தபோதே) இது
முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வாக்கும் அதிகா
ரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே! (என்று அரற்றுவான்).” ( அல்குர்ஆன்: 69: 25-29
)
وعن عبد
العزيز بن عمران بن عمر بن عبد الرحمن بن عوف، عن أبيه عن جده قال: «لما حضرت عبد
الملك بن مروان الوفاة، نظر إلى غسال بجانب دمشق يلوي ثوبا بيده ثم يضرب به
المغسلة، فقال عبد الملك: والله ليتني كنت غسالا أكلي كسب يدي يوما بيوم وأني لم
أل من أمر الناس شيئاً»، قال عبد العزيز، عن أبيه: فأخبر بذلك أبو حازم فقال:
«الحمد لله الذي جعلهم إذا حضرهم الموت يتمنون ما نحن فيه، وإذا حضرنا الموت لم
نتمن ما هم فيه».
ஆட்சியாளர்
அப்துல் மலிக் பின் மர்வான் மரணப் படுக்கையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் எழுந்து
தனது வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று வெளியே பார்க்கிறார். அப்போது துணி துவைத்து
வாழ்வை ஓட்டிவரும் ஒரு சலலைத் தொழிலாளியைக் காண்கிறார். அப்போது அவர், "நான் அந்த சலவைத் தொழிலாளியைப் போல இருந்திருக்கக் கூடாதா! நாளாந்தம் துணியைத்
துவைத்து எளிமையாகவும் ஹலாலாகவும் சம்பாதித்து வாழ்க்கை நடத்தியிருக்கக் கூடாதா!
பெரும் ஆட்சி,
அதிகாரங்கள் எல்லாம் எனது கைக்கு வராமல் இருந்திருக்க
வேண்டுமே! இதற்கெல்லாம் நான் எப்படி மறுமையில் பதில் சொல்வேன்!” என்று அவர் ஆதங்கப்பட்டார்கள்.
இதனைக்
கேள்வியுற்ற இமாம் அபூ ஹாதிம் (ரஹ்) அவர்கள், “அல்ஹம்துலில்லாஹ்.
ஆட்சியாளர் அப்துல் மலிக் மர்வான் அவர்கள் தனது கடைசிக் காலத்தில் எங்களைப் போன்று
வாழ்ந்திருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். நாம் எமது மரணத் தறுவாயில்
நிச்சயமாக அவர்கள் இருந்த நிலையில் நாம் இருந்திருக்க வேண்டுமே என்று கைசேதப்பட
மாட்டோம். இந்த நிலையை எமக்கு அமைத்துத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள். ( நூல்: அல் பிதாயா வன் நிஹாயா )
எப்போதுமே
மரணத்தின் விளிம்பில் தான் மனிதன் பாடம் பெறுகின்றான். ஆனால், அந்த பாடம் எந்தளவு அந்த மனிதனுக்கு பயன் தரும் என்று உறுதி கூற முடியாது.
ஆகவே, உலக வாழ்க்கையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு தந்திருக்கும் வாழ்க்கையை
பொருந்திக் கொண்டு வாழ்வோம்!
உலக மோகம், பொருளாதார மோகம்,
செல்வாக்கு, அதிகார மோகம் ஆகியவற்றில்
இருந்து தவிர்ந்து மோசடி வலையில் வீழாமல், பிறரை ஏமாற்றாமல், பிறரிடம் ஏமாறாமல் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம்!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் மோசடி மற்றும் ஏமாறுவதில் இருந்து நம் அனைவரையும் பாதுகாத்து அருள்
புரிவானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteகாலத்திற்கேற்ப இன்றைய மனிதர்களின் மனோநிலைக்கேற்ப குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அருமையான தொகுப்பினை வழங்கியுள்ளீர்கள்.
جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 🎉💖🤝
This comment has been removed by the author.
ReplyDeleteகடந்த வாரமே இது குறித்து எம்மிடம் தெரிவிக்கப் பட்டது. எனினும் நமது மஸாபீஹுல் மிஹ்ராப் கட்டுரை பதிவு செய்ய பயன்படுத்துகிற லேப்டாப் மற்றும் மொபைலில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
Deleteமாறாக, சிலரின் மொபைலில் நாம் பயன்படுத்தும் லதா யூனிகோட் Font சப்போர்ட் ஆவதில்லை என்று தெரிய வருகிறது.
அல்ஹம்துலில்லாஹ் நல்ல அருமையான காலத்திற்கு ஏற்ற கட்டுரை,
ReplyDeleteஇந்தப் ஃபான்டு என்னுடைய மொபைலில் இதுவரைக்கும், நாம பயன்படுத்திய மொபைல்ல அருமையாக பயன்படுகிறது, எந்த விதமான குளறுபடியும் இல்லையே!
جزاك الله خيرا
ReplyDeleteபாரக்கல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ் காலத்திற்கு தகுந்த அருமையான பதிவு
ReplyDelete