Sunday, 25 May 2014

விதிகள் மாற்றப்படலாம்!!

விதிகள் மாற்றப்படலாம்!!




  
விதிகள் இது மனித சமுதாயத்திற்கு மாத்திரம் சொந்தமானது மட்டும் அல்ல. உலகில் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொதுவானதே!

எப்படி மனிதனுக்கு நடைபெறுகிற அனைத்தும் தலைவிதிகளின் படியே நடக்கின்றது என்று நாம் நம்புகின்றோமோ, அது போன்றே எல்லா படைப்பினங்களுக்கும் ஓர் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படியே அவைகளும் இயங்குகின்றன என்று நம்புவதும் ஓர் இறை நம்பிக்கையாளனின் தலையாய கடமையாகும்.

அது மாத்திரமல்ல படைத்தோனாம் அல்லாஹ்வும் தனது ஆற்றலின் விதிகள் குறித்து கூறும் போதுஅது மாற்றத்திற்கு உள்ளாகாததுஎன்று கூறுவான்.

என்றாலும் சில நேரங்களில், சில பொழுதுகளில் சிலருக்காக அல்லாஹ் அவைகளில் சில மாற்றங்களை செய்திருக்கின்றான்.

மிஃராஜும் அது போன்று தான். அல்லாஹ் தனது ஹபீப் முஹம்மது {ஸல்} அவர்களுக்காக தமக்கான விதிகளை மாற்றியமைத்தான்.

இன்றைக்கு சமூகத்தில் விமர்சனத்திற்குள்ளான ஏராளமான விஷயங்களில் நபிகளாரின் விண்ணேற்றப் பயணமும் - மிஃராஜும் ஒன்று.

அதிலும் குறிப்பாக அல்லாஹ்வோடு பேசினார்களா? அல்லாஹ்வை தரிசித்தார்களா? என்பன போன்றவற்றில் பன்னெடுங்காலமாகவே இந்த சமூகம் இரு வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளதையும், அதை நிரூபிக்க பல்வேறு பிராயச்சித்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் கண்டு வருகின்றோம்.

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.”

காற்று..

 நைட்ரஜன் 78.09 சதவீதமும், ஆக்ஸிஜன் 20.95 சதவீதமும், ஆர்கான் 0.93 சதவீதமும் உள்ள வாயுக்களின் மொத்த கலவையே காற்று எனப்படும்.

மீதமுள்ள 0.03 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு, ஹீலியம், கிரிப்டான் போன்ற வாயுக்கள் ஆகும்.

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் 500 கோடி டன்கள் எடை கொண்ட காற்று இருக்கின்றது. தூய்மையான காற்று கண்களுக்கு புலப்படாது. காற்றுக்கு சுவையோ, வாடையோ கிடையாது.

பூமிக்கு மிக அருகில் உள்ள அடுக்கில் தான் மொத்த காற்று மண்டலத்தின் 80 சதவீத காற்று இருக்கின்றது.

இதுவரை 1.75 மில்லியன் (பெயரிடப்பட்ட உயிரினங்கள் மனிதன் உட்பட) உயிரினங்கள் இந்த உலகில் வாழ் (ந்த) வதாகவும், 12 மில்லியன் (பெயரிடப்படாத) உயிரினங்கள் வாழ்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக (Catalog Of The Programe) எனும் தளத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றது.

இந்த உயிரினங்கள் அனைத்தும் காற்றைச் சார்ந்தே உயிர்வாழ்கின்றன. மனிதன் உயிர் வாழ இன்றியமையாத மூன்று அடிப்படை பொருட்களில் (நீர், காற்று, உணவு) காற்றும் ஒன்று.

ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு ஏறத்தாழ 16 கிலோ கிராம் காற்றும், 2.5 லிட்டர் தண்ணீரும், 1.5 கிலோ கிராம் உணவும் தேவை.

ஆனால், நீரின்றி ஐந்து நாட்கள் வரையிலும், உணவின்றி ஐந்து நாட்கள் வரையிலும் உயிர் வாழ இயலும் ஆனால், காற்று இன்றி ஐந்து நிமிடங்கள் கூட உயிர் வாழ முடியாது.
ஒரு மனிதன் உட்கொள்ளும் பொருட்களில் 80 சதவீதம் காற்றாகவே இருக்கின்றது. காற்றை உட்கொள்வதற்கு சராசரியாக ஒரு மனிதன் நாளொன்றுக்கு 22,000 தடவை சுவாசிக்க வேண்டி இருக்கின்றது.

மனிதன் உயிர் வாழ மட்டும் அல்ல காற்று பயன்படுவதில்லை. நாம் பயன்படுத்துகிற எரி பொருளுக்கும் காற்றின் பணி மிக முக்கியம்.

நாளொன்றுக்கு உலகம் முழுவதிலும் மின்சக்திக்காக 7*106 டன்கள் நிலக்கரி எரிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் உலக மின் நிலையங்களில் எரிக்கப்படுகின்ற அளவு 88.9*106 டன்களாகும்.

இதே போன்று பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், இயற்கைவாயு, விறகு ஆகிய எரி பொருட்கள் பயன்படுத்துவதற்கும் காற்றின் துணை வேண்டும்.

நமது நாட்டில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் 90 கோடி கிலோ கிராம் காற்று தேவப்படுகின்றது.

இது போக கிணறு, குளம், ஆறு போன்ற நீர் நிலைகளிலும் நிலங்களிலும் ஏற்படுகிற மாசுகளைத் தூய்மை படுத்தும் ஆற்றலும் காற்றுக்கு உண்டு.

(நூல்: .கான் பாக்கவி அவர்கள் எழுதியஅருள் மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்”)

அல்லாஹ் காற்றின் மூலம் இத்தகைய நலவுகளை, நன்மைகளை மனித சமூகத்திற்கு வழங்குகின்றான்.

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ

அல்லாஹ் கூறுகின்றான்: “வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்கு பயன் தருபவற்றை சுமந்து கொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியைஅது இறந்து போன பின்னர் கூட உயிர்பித்து மேலும், அதில் எல்லா விதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், ”காற்றுகளைச் சுழலச்செய்வதிலும்,” வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு தாராளமான சான்றுகள் இருக்கின்றன.
وَمِنْ آيَاتِهِ أَنْ يُرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَلِيُذِيقَكُمْ مِنْ رَحْمَتِهِ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ


அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், நற்செய்தி கூற்வதற்காக காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்; எதற்காகவெனில், அவனுடைய அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருளை தேடுவதற்காகவும், அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழ்வதற்காகவும் தான்!”

மேலே நாம் சொன்ன புள்ளி விவரங்களை விவரிப்பதாக மேற்கூறிய இறை வசனங்கள் அமையப் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.

ஆனால், அல்லாஹ் காற்றிற்கான விதிகளை மாற்றியமைத்தான் என்று குர்ஆன் சான்று பகர்கின்றது.

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ (18) إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُسْتَمِرٍّ (19) تَنْزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ (20) فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ (21) وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)

(அல்லாஹ் கூறுகின்றான்: பார்க்க: 54:18 – 22, 51: 41,42, 69:6, 41: 15,16)

அதே காற்றை அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான் என்று அல்குர்ஆனின் 34:12, 21:81. ஆகிய வசனங்களிலும், அஹ்ஸாப் யுத்தத்தின் போது எதிரிகளின் மீது வீசிய புயற்காற்று முஃமின்களை கடந்து சென்ற போது இதமான காற்றாக வீசிச்சென்றதாக 33:9 –ஆம் வசனத்தின் விளக்கத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் கூறுவார்கள்.

சூரியனும் சந்திரனும்

அதி வெப்பமான வாயுக்களினாலான ஒரு கோளம். சூரியனுடைய மேல் பரப்பு வெப்ப நிலை 6000 கோடி சென்டிகிரேட் ஆகும். அதன் உள்பரப்பு வெப்ப நிலை 2 கோடி டிகிரி செ.கிரேட் ஆகும். சூரியனிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 300 கோடி யூனிட் சக்தி வெளிப்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது.

1917 – ல் சூரியனின் வட்டப்பாதையை ஆராய்ந்த நவீன வானவியல் ஆய்வாளர் ஷேப்லி என்பவர்சூரியனுக்கும் நமது பால் மண்டலத்துக்கும் இடையே உள்ள தூரம் 10 கிலோ பார் செஸ் அதாவது 2 என்கிற எண்ணோடு 17 சைபர்களை சேர்த்தால் வரும் எண்ணிக்கையுள்ள மைல்கள்எனக் கணக்கிட்டுள்ளார்.

சூரியன் உமிழ்கிற இத்துணை பெரும் வெப்பமும் அப்படியே பூமியில் இறங்கினால் இப்பூமியில் ஒரு உயிரினமும் வாழாது.

ஆனாலும், பூமியின் வெப்ப நிலை (k.) 287 டிகிரி செண்டிகிரேட் ஆகும். சூரியனின் வெப்பக் கதிர்களில் இருந்து காத்திடவே அல்லாஹ் ஓசோன் எனும் ஃபில்டர் படலத்தை வான் மண்டலத்தில் நீந்த விட்டிருக்கின்றான்.

சூரிய வெப்பத்தின் மூலம் அல்லாஹ் மனித சமூகத்திற்கு பல்வேறு பயன்பாடுகளை தந்திருக்கின்றான்.

சந்திரன் சூரியக்குடும்பத்தின் மூன்றாவது கோளும், பூமியின் துணைக் கோளுமாகும்.

பூமி சூரியனைச் சுற்றிவருகிறது. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 365 கால் நாட்கள் ஆகும். பூமி ஒரு முறை தன்னைத் தானே சுற்றிவர 24 மணி நேரங்கள் ஆகும்ஆனால், சந்திரனோ பூமியைச் சுற்றி வருகின்றது.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் மூன்றரை லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.

பகல் இரவு என்கிற ஒழுங்கு முறையை அல்லாஹ் இந்த பிரம்மாண்டமான இரு படைப்புக்களை வைத்தே இயக்கிக் கொண்டு இருக்கின்றான்.

மனித வாழ்வில் பிரிக்கவே முடியாத இந்த ஒழுங்கு முறைகள் தான் அவன் இந்த பூமியில் சுபிட்சமாய் வாழ்வதற்கு வழிகோலுகின்றது.


وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ

அல்லாஹ் கூறுகின்றான்: “வானங்களையும், பூமியையும் தக்க காரணங்களுடன் படைத்தவன் அவனே.”

وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் இந்த வானத்தையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ளவற்றையும் வீணுக்காக படைக்க வில்லை.”

وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ

அல்லாஹ் கூறுகின்றான்: “சூரியனையும் சந்திரனையும் அவை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் வண்ணம் அவனே உங்களுக்கு வசப்படுத்தி தந்தான்.”

وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (38) وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ (39) لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ (

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், சூரியனும் பிரிதொரு சான்றாகும். அது தனக்குரிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் விதியாகும்.

மேலும், சந்திரன் இன்னொரு சான்றாகும். அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது அவற்றையெல்லாம் கடந்து உலர்ந்து வளைந்து போன பேரீச்சங்காம்பு போல மீண்டும் ஆகி விடுகின்றது.

சூரியன் சந்திரனைச் சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்தி விட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக்கொண்டிருக்கின்றன.”

ஆனால், இவ்வுலகில் ஒரு சமயம் சந்திரன் இரண்டாக பிளக்கப்பட்டது. மற்றொரு சமயம் சிறிது நேரம் சூரியன் நிறுத்தி வைக்கப்பட்டது.

من حديث ابن مسعود وابن عمر وأنس وجبير بن مطعم وابن عباس رضي الله عنهم. وعن أنس قال: سأل أهل مكة النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آية، فانشق القمر بمكة مرتين فنزلت: (اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ) إلى قوله: (سِحْرٌ مُسْتَمِرٌّ) يقول ذاهب قال أبو عيسى الترمذي: هذا حديث حسن صحيح. ولفظ البخاري عن أنسى قال: انشق القمر فرقتين. وقال قوم: لم يقع انشقاق القمر بعد وهو منتظر، أي اقترب قيام الساعة وانشقاق القمر، وأن الساعة إذا قامت انشقت السماء بما فيها من القمر وغيره. وكذا قال القشيري. وذكر الماوردي: أن هذا قول الجمهور، وقال: لأنه إذا انشق ما بقي أحد إلا رآه، لأنه آية والناس في الآيات سواء. وقال الحسن: اقتربت الساعة فإذا جاءت انشق القمر بعد النفخة الثانية. وقيل: (وَانْشَقَّ الْقَمَرُ)

قال الإمام أحمد: حدثنا محمد بن كثير، حدثنا سليمان بن كثير، عن حصين بن عبد الرحمن، عن محمد بن جبير بن مطعم، عن أبيه، قال: انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فصار فرقتين: فرقة على هذا الجبل، وفرقة على هذا الجبل، فقالوا: سحرنا محمد. فقالوا: إن كان سحرنا فإنه لا يستطيع أن يسحر الناس كلهم.


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு நாள் அபூ குபைஸ் மலை மீது, முழு பௌர்ணமி இரவில் அமர்ந்திருந்த போது அபூ ஜஹ்லும், அபூ லஹபும் வந்துமுஹம்மதே! நீர் இதோ தெரிகிற பூரணச் சந்திரனை இரண்டு துண்டுகளாக பிளந்து காட்டினால் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றோம்என்று கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து விட்டு அவ்வாறு பிளந்து காட்டினார்கள்.

ஆனால், அந்த அற்புத காட்சியைக் கண்ட அபூஜஹ்லும், அபூ லஹபும் நபிகளாரைக் கொண்டு ஈமான் கொள்வதற்குப் பதிலாக, நபிகளாரை சூனியக்காரன் என்று கூறி விமர்சித்தனர்.

                            (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் குர்துபீ)

ஆனால், நமது அண்டை மாநிலமான கேரளாவை அன்று ஆண்டுகொண்டிருந்த சேரமான் பெருமான் இந்தக் காட்சியைக் கண்டு ஈமான் கொண்டதாக பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட மலபார் வரலாற்றிலும், அல்தாஃப் . காசி அவர்கள் எழுதியComprehensive guide book of islam” எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருகிலிருந்து பார்த்த அபூ ஜஹ்லுக்கோ, அபூ லஹபிற்கோ கிடைக்காத அரும் பாக்கியம் சேரமான் பெருமானுக்கு கிடைத்தது.

خرج بهم "يوشع بن نون" عليه السلام، أو بمن بقي منهم وبسائر بني إسرائيل من الجيل الثاني، فقصد (1) بهم بيت المقدس فحاصرها، فكان فتحها يوم الجمعة بعد العصر، فلما تَضَيَّفَتِ الشمس للغروب، وخَشي دخول السبت عليهم قال (2) "إنك مأمورة وأنا مأمور، اللهم احبسها عليَّ"، فحبسها الله تعالى حتى فتحها، وأمر الله "يوشع بن نون" أن يأمر بني إسرائيل، حين يدخلون بيت المقدس، أن يدخلوا بابها سُجّدا، وهم يقولون: حطّة، أي: حط عنا ذنوبنا، فبدلوا ما أمروا به، فدخلوا (3) يزحفون على أستاههم، وهم يقولون: حَبَّة في شَعْرة، وقد تقدم هذا كله في سورة البقرة.

في الحديث الصحيح عن أبي هريرة عن رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (غزا نبي من الأنبياء) الحديث أخرجه مسلم وفية قال: (فغزا فأدنى للقرية «3» حين صلاة العصر أو قريبا من ذلك فقال للشمس أنت مأمورة وأنا مأمور اللهم أحبسها «4» على شيئافحبست عليه حتى فتح الله عليه-


வசிப்பதற்கு நாடின்றி நாடோடிகளாய் அலைந்து திரிந்த பனூ இஸ்ரவேலர்களை ஒன்றிணைத்து அமாலிக்காவினரை எதிர்த்துப் போராட ஓர் உன்னதமான வலிமையை ஏற்படுத்தினார்கள் நபி யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

குறிப்பிட்ட நாளில் போராடக் கிளம்பிய அவர்களுக்கு அல்லாஹ் ஒரு சோதனை ஏற்படுத்தினான். அதாவது சனிக்கிழமை அவர்களின் ஜும்ஆ நாள் அந்த நாளில் அவர்கள் இறை வணக்கத்தைத் தவிர வேறெதிலும் ஈடுபடக்கூடாது.

ஆகவே, போரில் வெற்றியை வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சோதனை.

வெற்றியின் சமீபத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் சூரியனும் அஸ்தமிக்க நெருங்கிக்கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் நபி யூஷஃ இப்னு நூன் {அலை} அவர்கள் சூரியனின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

அல்லாஹ்வும் அவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் சூரியனை அஸ்தமிக்க வைத்தான்.

                              (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் குர்துபீ)

மேகம்..

மேகங்கள் மனித சமூகத்திற்கான மிக பயன் மிக்க ஒரு படைப்பு. அதன் மூலம் வெயிலின் கொடூரத்திலிருந்து பாதுகாப்பும், மழை நீர் உருவாகுவதற்கான அறிகுறிகளையும் மனிதன் அடைந்து கொள்கின்றான்.

மனித சமூகத்திற்கு வாழ்வாதாரமாக திகழக்கூடிய நீர் என்பது மேகங்களால் தான் உருவாக்கப்படுகின்றது.

(பார்க்க அல்குர்ஆன்: 24:43, 15: 21,22)

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (57) (وَظَلَّلْنا عَلَيْكُمُ الْغَمامَ) أي جعلناه عليكم كالظلة. والغمام جمع غمامة كسحابة وسحاب قال الأخفش سعيد. قال الفراء: ويجوز غمائم وهي السحاب لأنها تغم السماء أي تسترها وكل مغطى فهو مغموم ومنه المغموم على عقله.

ஆனால், அல்லாஹ் மேகத்தின் இயல்புத் தன்மைகளில் இருந்து அதை மாற்றி பனூ இஸ்ரவேலர்களுக்கு அவர்களது தலைக்கு மேல் நிழல் தருகிற குடையாக மாற்றினான் என்று குர்ஆன் சான்றுரைக்கின்றது.

                                               (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)

வானவர்கள்

அல்லாஹ்வின் அற்புத படைப்பு மலக்குமார்கள். அல்லாஹ்வின் நிர்வாகத்தின் கீழ் மிகச் சிறப்பாக ஊழியம் செய்கிற ஊழியக்காரர்கள்.

குறிப்பாக ஓர் இறை நம்பிக்கையாளனின் கருவறை தொடங்கி சுவனம் வரை அவர்களின் பணி விரிவடைந்தது.

அல்லாஹ் அவர்களை நூர் எனும் ஒளியால் படைத்திருப்பதாக சொல்கின்றான்.

حدثنا محمد بن رافع ، وعبد بن حميد - قال عبد : أخبرنا ، وقال ابن رافع : حدثنا - عبد الرزاق ، أخبرنا معمر ، عن الزهري ، عن عروة ، عن عائشة ، قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " خلقت الملائكة من نور ، وخلق الجان من مارج من نار ، وخلق آدم مما وصف لكم " *

ஆனால், மலக்மார்களில் ஒரு மலக்கை அல்லாஹ் விதி விலக்காக ஒரு பாதி ஒளியாகவும், மறு பாதி உருகும் பனிக்கட்டியாகவும் படைத்திருக்கின்றான்.


حدثنا محمد بن إبراهيم بن داود ، حدثنا أبو أمية محمد بن إبراهيم ، حدثنا حفص بن عمر ، حدثنا ثور بن يزيد ، حدثنا خالد بن معدان ، عن معاذ بن جبل ، والعرباض بن سارية رضي الله عنهما ، أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " إن لله عز وجل ملكا نصفه من نور ، ونصفه من ثلج ، يسبح يقول : سبحانك يا مؤلف الثلج إلى النور ، ولا يطفئ النور برد الثلج ، ولا برد الثلج حر النور ، ألف بين قلوب عبادك المؤمنين

العظمة لأبي الشيخ
الأصبهاني  - باب الأمر بالتفكر في آيات الله عز وجل وقدرته وملكه وسلطانه
 ذكر خلق الملائكة وكثرة عددهم - حديث : ‏326
" *
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் ஒரு மலக்வானவர் இருக்கின்றார். அவர் சதா என் நேரமும் பின் வருமாறு தஸ்பீஹ்ஒளியோடு பனிக்கட்டியை இணைத்த மா தூயவனே! உருகும் பனியால் ஒளியை அணைத்திடும் ஆற்றலை நீ வழங்க வில்லை! ஒளியின் சுடரால் பனியை உருக்கிடும் ஆற்றலை நீ வழங்க வில்லை! இறைவா! இறை நம்பிக்கை கொண்ட உன் அடியார்களின் இதயங்களையும் நீ ஒன்றிணைப்பாயாக!” என்று தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கின்றார்.

அல்லாஹ் ஒரு அடியானுடன் பேச நினைத்தால்

وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவது இல்லை. ஆயினும், வஹ்யின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை வானவரை அனுப்பி வைத்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை. அவர் அவனுடைய அனுமதி கொண்டு அவன் நாடுவதை அறிவித்து விடுகின்றார். திண்ணமாக! அவன் உயர்வுமிக்கவனும், நுண்ணறிவாளனும் ஆவான்.”

நாற்பது நாள் தொலைவு உள்ள பைத்துல் முகத்திஸிற்கு நொடிப்பொழுதில் அழைத்துச் சென்று, அங்கிருந்து மிஃராஜ் எனும் விண்ணுலக பயணத்தை மேற்கொள்ள வைத்த அல்லாஹ் வெறுமெனே சுவர்க்கம் நரகம் ஆகியவைகளை காட்டுவதற்காகவோ, தொழுகையை கடமையாக்கி கையில் கொடுத்தனுப்புவதற்காகவோ, ஸலாம் உரைப்பதற்காகவோ, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முழு உருவில் பார்ப்பதற்காகவோ அழைத்துச் சென்றிருப்பானா?

எல்லா விதிகளையும் மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்ற அல்லாஹ் ஓர் அடியானுடன் பேசுவதற்கு தான் விதித்திருக்கின்ற விதியை ஏன் மாற்றியிருக்க மாட்டான்?

அப்படி அவன் மாற்றியமைத்து விட்டால் ஏன் நீ மாற்றியமைத்து விட்டாய் என கேள்விதான் கேட்டு விட முடியுமா?

 நபிகளாரின் அந்த உரையாடலையும், இறைவனை தரிசித்தார்கள் என்பதிலும் மிகவும் கடுமை காட்டுபவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

أخبرنا أبو محمد عبد الله بن علي بن سويدة التكريتي، أخبرنا أبو عبد الله بن الحسين بن الفرحان، إجازة، أخبرنا أبو الحسن علي بن أحمد الواحدي، أخبرنا " أبو بكر أحمد الواحدي أخبرنا " أبو بكر أحمد بن محمد بن الحارث، أخبرنا أبو الشيخ الحافظ، أخبرنا أحمد بن الحسين الحذاء، أخبرنا علي بن المديني، حدثنا موسى بن إبراهيم بشير بن الفاكه الأنصاري، أنه سمع طلحة بن خراش الأنصاري قال: سمعت جابر بن عبد الله قال: نظر إلي رسول الله صلى الله عليه وسلم فقال: " ما لي أراك " منكسراً " مهتماً " ؟ قلت: يا رسول الله، قتل أبي وترك ديناً وعيالاً. فقال: ألا أخبرك؟ ما كلم الله أحداً قط إلا من وراء حجاب، وإنه كلم أباك كفاحاً، فقال: يا عبدي، سلني أعطك. قال: أسألك أن تردني إلى الدنيا فأقتل فيك ثانية! قال: إنه قد سبق مني أنهم لا يردون إليها ولا يرجعون. قال: يا رب، أبلغ من ورائي، فأنزل الله تعالى: " ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتاً بل أحياءٌ " . . " آل عمران 169 " الآية.

                                                 (நூல்: உஸ்துல் காபா)

ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தையிடம் அல்லாஹ் எவ்வித திரையும் இன்றி பேசினான் என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த உம்மத்திற்கு அறிவிக்க வில்லையா?

 நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ் உம் தந்தையோடு உரையாடினான் என்று கூறினார்களே தவிர, மறுமையில் அல்லாஹ் இப்படியெல்லாம் உரையாடுவான் என்று கூற வில்லை.

வானலோகத்திற்கு என தனி விதி இருக்கிறது அல்லாஹ் அந்த விதியின் அடிப்படையில் அண்ணலாரிடம் உரையாடினான் என விளங்கிக்கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்து நேரிடையாக உரையாடியிருப்பது சாத்தியமே!

         அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக!

சிறு முயற்சி செய்திருக்கின்றேன். இந்த கட்டுரையில் பிழைகள் இருந்தால் அல்லாஹ் மன்னித்து அருள் பாளிக்க வேண்டும் என்று ஆதரவும் வைக்கின்றேன்.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

                       வஸ்ஸலாம்!!!


    

  





4 comments:

  1. நல்ல முயற்சி! அறிவியலின் ஆதிக்கம் அதிகமாக தெரிகிறது! புள்ளி விவரங்கள் அதிகம் என்பதால் நீங்கள் புள்ளி ராஜா இல்லை! வாரந்தோறும் நல்ல தகவல்களை தருவதாதருவதால் நீங்கள் வெள்ளி ராஜா! அல்லாஹ்வின் துணையுடன் தொடர்ந்து பணி செய்ய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. விதியை விதவிதமாக விளக்கினீர்கள் بارك الله

    ReplyDelete
  3. மிஃராஜை மறுப்பவர்களின் விதி இதன் மூலம் மாற்றப்படும் ...... இன்ஷா அல்லாஹ் ....

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்.. இது போன்ற சிறந்த சிந்தனைகள் இறை அருட்கொடை.. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete