குர்ஆனின் தொடர்பைத் தொடர்ந்திடுவோம்!
அல்லாஹ்வின் சன்மானங்களும் வெகுமதிகளும் நிறைந்த புனித ரமழான் நம்மை விட்டும் சென்று விட்டது.
இத்தோடு இறைத்தொடர்பை நிறுத்திடாமல் தொடர்ந்து ரமழானில் கடைபிடித்த கட்டுப்பாடுகளையும், அமல்களின் மீதான பேரார்வத்தையும், தொடர்பையும் தொடர்ந்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ரமழானில் ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தும் குர்ஆன் ஓதுவதிலும், குர்ஆன் ஓதக் கேட்பதிலும் அதிகமதிகம் தம்மை ஈடுபடுத்தி குர்ஆனோடு ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தியிருந்தமையை நாம் அறிந்திருக்கின்றோம்.
அதன் தாக்கமும் தொடர்பும் வாழ்வின் இறுதி வரை நீடித்திட குர்ஆனின் தொடர்பைத் தொடர்ந்திடுவோம்!
உலகில் பார்த்தாலே நன்மை கிடைக்கும் என மாநபி {ஸல்}
அவர்களால் பாராட்டப்பட்ட பாக்யங்களில் அல்குர்ஆனும் ஒன்றாகும்.
குர் ஆனோடு தொடர்பு கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரையும் அது
ஒவ்வொரு விதத்திலே மேன்மை படுத்துவதாக மாநபி {ஸல்} அவர்கள் சிறப்பித்துக் கூறிய
நபி மொழிகள் ஏராளம் தாராளம்.
அல்குர்ஆனை நேசிப்பது, வாசிப்பது, ஆசிப்பது,
சிந்திப்பது, போதிப்பது அதன் படி செயலாற்றுவது என ஒவ்வொன்றுமே இபாதத் வணக்கம்
என்பதாக இஸ்லாம் வர்ணிக்கின்றது.
நேசிப்பதும், வாசிப்பதும்...
توفي في حياة رسول الله صلى الله عليه وسلم.
روى حديثه محبوب بن هلال المزني، عن ابن أبي ميمونة، عن أنس بن مالك
قال: نزل جبريل على النبي عليهما السلام وهو بتبوك، فقال: يا محمد، مات معاوية بن
معاوية المزني بالمدينة، فيجب أن نصلي عليه: قال: نعم، فضرب بجناحه الأرض، فلم تبق
شجرة ولا أكمة إلا تضعضعت، ورفع له سريره حتى نظر إليه، فصلى عليه وخلفه صفان من
الملائكة، في كل صف ألف ملك، فقال النبي صلى الله عليه وسلم لجبريل عليه السلام:
يا جبريل، بم نال هذه المنزلة ؟ قال بحبه " قلْ هُوَ الله أَحَدٌ " ،
وقراءته إياها جائياً وذاهباً، وقائماً وقاعداً، وعلى كل حال.
وقد روى: في كل صف ستون ألف ملك.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு
தபூக்கிலே இருந்த தருணம் அது..
என்றைக்கும் இல்லாத அளவு சூரியனின் ஒளி
வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருந்தது.
அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தருகின்றார்கள்.
நபிகள் {ஸல்} அவர்கள் ஆச்சர்யம் மேலிட ”ஜிப்ரயீலே!
என்றைக்கும் இல்லாத அளவிற்கு சூரியனின் பிரகாசம் இன்று மிகவும் வெண்மையாய் அமைந்திருக்கின்றதே
காரணம் தான் என்னவோ?” என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினார்கள்.
அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இன்று தங்களின்
தோழர் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யி (ரலி) மதீனாவில் இறந்து விட்டார்கள்.
(இன்னா லில்லாஹ்..)
அவருக்காக நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்த
விரும்புகின்றீர்களா?” என அண்ணலாரிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
ஆம் என நபிகளார் பதில் அளித்ததும், ஜிப்ரயீல் (அலை)
அவர்கள் தங்களது இறக்கையை பூமியில் அடித்தார்கள்.
தபூக்கில் இருந்தவாரே அண்ணலார் மக்காவையும்
மதீனாவையும் கண்டார்கள்.
பின்பு, அண்ணலார் தோழர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி
ஜனாஸா தொழுகைக்குத் தயாராகுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜனாஸா
தொழவைத்தார்கள். நபிகளாரோடு ஜிப்ரயீல் (அலை) அவர்களும், இரண்டு ஸஃப் நிறைய
வானவர்களும், (ஒவ்வொரு ஸஃப்ஃபிலும் எழுபதினாயிரம் வானவர்கள் நின்றனர்),
நபித்தோழர்களும் கலந்து கொண்டார்கள்.
தொழுது முடித்த பின்னர், ஜிப்ரயீலை நோக்கிய நபிகளார்
“ஜிப்ரயீலே! எதன் காரணத்தினால் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யீ இந்த உயர்
அந்தஸ்தை அடைந்தார்” எனக் கேட்டார்கள்.
அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “உலகில் வாழும்
காலங்களில் அவர் அல் இஃக்லாஸ் அத்தியாயத்தை மிகவும் நேசித்தார்; அமர்ந்த நிலையில்,
நின்ற நிலையில், பசித்திருந்த நிலையில், படுத்த நிலையில், நடந்த நிலையில் என
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை ஓதியும் வந்தார்” ஆதலால் அல்லாஹ் அவருக்கு
இந்த அந்தஸ்தை வழங்கி கௌரவித்துள்ளான்” என பதில் கூறினார்கள்.
இந்தச் செய்தி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின்
வாயிலாக முஸ்னத் அபூ யஃலா வில் 4268 –வது ஹதீஸாகவும், இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள்
தங்கள் சுனனில் பாகம்: 4, பக்கம்:50 –லும், அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்களின்
வாயிலாக இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் முஃஜமுல் கபீரில் 7537 –வது ஹதீஸாகவும் பதிவு
செய்திருக்கின்றார்கள்.
அல்லாமா இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் தங்களின்
அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் எனும் நூலில் மேற்கண்ட மூன்று
அறிவிப்புக்களையும் பதிவு செய்து விட்டு இந்தச் செய்தி வலுவான அறிவிப்புத்
தொடர்களின் மூலம் இடம் பெற வில்லையென்றாலும் இது முன்கர் வகையைச் சார்ந்த ஹதீஸ்
அல்ல என்றும் சான்று பகர்கின்றார்கள்.
மேலே தரப்பட்டிருக்கின்ற அரபி வாசகம் உஸ்துல் ஃகாபா
நூலில் இடம் பெற்றுள்ளது.
(நூல்:
அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:364,365. மற்றும் உஸ்துல் ஃகாபா)
புனித குர்ஆனின் ஒரு பகுதியை நேசித்த, வாசித்த
ஒருவருக்கு கிடைத்த உயரிய அந்தஸ்து இது வென்றால்...
மரியாதையும், மதிப்பும்....
சில போது குர்ஆனோடு தொடர்வில் இருக்கின்ற ஒருவருக்கு
மரியாதையும், மதிப்பும் அளிக்கின்ற போது கூட, அதன் வாயிலாகவும் உயர் அந்தஸ்தையும்
புகழாரத்தையும் வழங்கி அல்லாஹ் கௌரவிக்கின்றான்.
ولما أبطل الاسلام عادة التبني، صار أخا ورفيقا، ومولى للذي كان
يتبناه وهو الصحابي الجليل: أبو حذيفة بن عتبة..
وبفضل من الله ونعمة على سالم بلغ بين المسلمين شأوا رفيعا وعاليا،
أهّلته له فضائل روحه، وسلوكه وتقواه.. وعرف الصحابي الجليل بهذه التسمية: سالم
مولى أبي حذيفة.
ذلك أنه كان رقيقا وأعتق..
وآمن باله ايمانا مبكرا..
وأخذ مكانه بين السابقين الأولين..
அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள். இவர்களின் இயர்ப் பெயர்
ஆமிர் இப்னு உத்பா. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை எதிர்த்த மாபெரும் குறைஷித்
தலைவர்களில் ஒருவரான உத்பா வின் மகன் தான் அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள்.
ஆனால், வரலாற்றில் ஓரிடத்திலும் கூட அவர்கள் அப்படி
அழைக்கப் பெற்றதில்லை. ஸாலிம் மவ்லா அபூ ஹுதைஃபா (ரலி) என்றே
அறியப்படுகின்றார்கள்.
காரணம் அவரால் உரிமை விடப்பட்ட அவரின் அடிமையான
ஸாலிம் (ரலி) அவர்களுக்கு அவர்கள் வழங்கிய மரியாதை மற்றும் மதிப்பு தான்.
குர்ஆனுடைய ஞானமும், தொடர்பும் மிகுதியாக இருந்த
ஸாலிம் (ரலி) அவர்களை அந்த ஒரே காரணத்திற்காகவே உரிமை விட்டார்கள் அபூ ஹுதைஃபா
(ரலி) அவர்கள்.
أوصى رسول الله صلى الله عليه وسلم أصحابه يوما، فقال:
" خذوا القرآن من أربعة:
عبدالله بن مسعود..
وسالم مولى أبي حذيفة..
وأبيّ بن كعب..
ومعاذ بن جبل.."
ஒரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தோழர்களிடத்தில் கூறினார்கள். “குர்ஆனுடைய அறிவை
நான்கு மனிதர்களிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத் (ரலி), ஸாலிம் மவ்லா அபீ
ஹுதைஃபா (ரலி), உபை இப்னு கஃபு
(ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி) ஆகியோர் ஆவார்கள்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}
)
இந்த உம்மத்திற்கு இந்த நற்பேற்றினை பெற்ற நவமணிகள் நால்வரில்
ஒருவரை தந்தவர்கள் அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் ஆவார்கள்.
ஆய்ந்தறிவதும்...
மனித சமூகத்தின் எல்லா காலங்களிலும் ஏற்படுகிற எல்லா விதமான
பிரச்சனைகளுக்கும் உண்டான முழுமையான தீர்வை அல்லாஹ் அல்குர்ஆனில் புதைத்து வைத்திருக்கின்றான்.
ஆழமான பார்வையோடும், தீர்க்கமான சிந்தனையோடும் அல்குர்ஆனை
அணுகும் போது தீர்வெனும் புதையலை வெளிக்கொணர்ந்து பிரச்சனைகளிலிருந்து மனித சமூகத்தை
காப்பாற்றிட இயலும்.
மனித சமூகத்தை பிரிவினை வாத பிரச்சனை சமீப காலமாக மிக
அதிகமாக ஆட்கொண்டு இரத்த மோதல்களை உருவாக்கி இருப்பதை பார்த்து வருகின்றோம்.
குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் ஜமாஅத், முஹல்லா,
இயக்கம், பேரவை, அமைப்பு,
கட்சி என பல்வேறு கூறுகளாக பிரிந்து ஒற்றுமை, ஐக்கியம்
இன்றி முச்சந்தியில் நின்று முழக்கம் இட்டுக் கொண்டு வேறுபட்டு நின்று கொண்டிருப்பதை
வேதனையோடு அனுபவித்து வருகின்றோம்.
அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், முஸ்லிம்கள் அணிகளாக பிரிந்து போயிந்த தருணம் அது.
உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்தவர்களை
கண்டு பிடித்து தண்டித்தால் மட்டுமே பைஅத் செய்வோம் என சில முஸ்லிம்கள்.
அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் என்கிற போர்வையில்
நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு ஸபா தலைமையில் சிலர்.
வெளிப்படையாக விமர்சித்த கவாரிஜிய்யாக்கள் சிலர்.
ஆதரவு, எதிர்ப்பு திருப்தி, அதிருப்தி
என்று சிலர்.
இஸ்லாமிய தலைமையின் கனத்தை மிகவும் கவனத்தோடும், பொருப்போடும் தங்களது
சீர்மிகு அறிவாற்றலால் நகர்த்திக் கொண்டிருந்தார்கள் “கலீஃபா
அலீ (ரலி) அவர்கள்.
இந்த தருணத்தில் ஃகலீஃபா அலீ (ரலி) அவர்களை நிலை குலையச் செய்திடும் ஓர் சம்பவம் அரங்கேறியது.
ஆம்! அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் பெரும் திரளானவர்கள் தங்களது
ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
وما كاد ينتهي النقاش بينهم حتى نهض منهم عشرون
ألفا،
ومعلنين خروجهم من خصومة الامام عليّ..!!
அல்லாமா தஹபீ, அல்லாமா தபரீ, இமாம் சுல்லாபீ,
(ரஹ் – அலைஹிம்) ஆகியோரின்
கூற்றுப்படி ஆதரவாளர்கள் சுமார் 20,000 –க்கும் மேற்பட்டவர்கள்.
ஏன் அவர்கள் விலகிச் சென்றார்கள்? என்பதை வரலாற்றுப்
பிண்ணனியோடு விளங்கி, உள்வாங்கினால் மட்டுமே மக்கள் விளங்கும்
அளவுக்கு எளிதாக நாம் விவரிக்க முடியும்.
பின் வரும் தகவலை நாம் மக்கள் மன்றத்திலே விவரிக்கத் தேவையில்லை
என்றாலும் ஆலிம்களாகிய நாம் விளங்கும் பொருட்டு வரலாற்று நூற்களான தாரீகே தபரீ, பத்வு வத் தாரீக்,
அல் பிதாயா வன் நிஹாயா, ஸியர் அஃலா மின் நுபலா
ஆகியவைகளின் ஒட்டு மொத்த திரட்டுகளில் இருந்து சுருக்கமாக இதோ உங்களின் மேலான பார்வைக்கு…
உஸ்மான்
(ரலி) அவர்களின் உயிரை சிதைத்தவர்களை பழிவாங்கியே
ஆக வேண்டும் என்கிற எண்ணம் மதீனாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் கண்டு தல்ஹா (ரலி)
அவர்களும், ஜுபைர் (ரலி)
அவர்களும் கவலையுற்றனர்.
இருவரும் அலீ (ரலி) அவர்களை சந்தித்து
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட கலீஃபா முன்வர வேண்டும் என்றும் தங்களது ஆலோசனையை
வெளிப்படுத்தினார்கள்.
قدم طلحة والزبير إلى مكة ولقيا عائشة - رضي الله عنهم جميعًا - وكان
وصولهما إلى مكة بعد أربعة أشهر من مقتل عثمان تقريبًا، أي في ربيع الآخر من
عام36هـ(1)، ثم بدأ التفاوض في مكة مع عائشة، رضي الله عنها، للخروج، وقد كانت
هناك ضغوط نفسية كبيرة على أعصاب الذين وجدوا أنفسهم لم يفعلوا شيئًا لإيقاف عملية
قتل الخليفة المظلوم، فقد اتهموا أنفسهم بأنهم خذلوا الخليفة وأنه لا تكفير لذنبهم
هذا - حسب قولهم- إلا الخروج للمطالبة بدمه، علمًا بأن عثمان هو الذي نهى كل من
أراد أن يدافع عنه في حياته تضحية في سبيل الله، فعائشة تقول: إن عثمان قُتل مظلومًا والله
لأطالبن بدمه(2)، وطلحة يقول: إنه كان منى في عثمان شيء ليس توبتي إلا أن يسفك دمي
في طلب دمه(3)، والزبير يقول: نُنهض الناس فيدرك بهذا الدم لئلا يَبْطل، فإن في
إبطاله توهين سلطان الله بيننا أبدًا، إذا لم يُفطم الناس عن أمثالها لم يبق إمام
إلا قتله هذا الضرب(4).
__________
(1) تاريخ الطبري (5/469).
(2) تاريخ الطبري (5/485).
(3) سير أعلام النبلاء (1/34).
(4) تاريخ الطبري (5/487).
அத்தோடு நின்றிடாமல் உம்ராவிற்க்குச் சென்றிருந்த அன்னை
ஆயிஷா (ரலி)
அவர்கள் ஊர் திரும்பும் வரை காத்திராமல் நேரிடையாகச் சென்று விஷயம் விபரீதம்
ஆகுவதற்குள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச்
சந்தித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் எனக் கருதி மக்கா நோக்கி பயணமானார்கள்.
உம்ரா முடிந்ததும் அன்னையவர்களைச் சந்தித்து மதீனாவின்
நிலவரத்தை விளக்கினார்கள்.
(
நூல்: ஸீரத் அமீருல் முஃமினீன் அலீ பின் அபூ தாலிப்
(ரலி) லி இமாமிஸ் ஸுல்லாபீ )
فاجتمع فيها خلق من سادات الصحابة، وأمهات المؤمنين، فقامت عائشة رضي الله عنها في الناس
تخطبهم وتحثهم على القيام بطلب دم عثمان، وذكرت ما افتات به أولئك من قتله في بلد
حرام وشهر حرام، ولم يراقبوا
جوار رسول الله صلى الله عليه وسلم وقد سفكوا الدماء، وأخذوا
الاموال.
فاستجاب الناس لها، وطاوعوها على ما تراه من الامر بالمصلحة، وقالوا
لها: حيثما ما سرت سرنا معك، فقال قائل نذهب إلى الشام، فقال بعضهم: إن معاوية قد
كفاكم أمرها، ولو قدموها لغلبوا، واجتمع الامر كله لهم، لان أكابر الصحابة معهم
وقال آخرون: نذهب إلى المدينة فنطلب من علي أن يسلم إلينا قتلة عثمان فيقتلوا،
وقال آخرون: بل نذهب إلى البصرة فنتقوى من هنالك بالخيل والرجال، ونبدأ بمن هناك
من قتلة عثمان.
فاتفق الرأي على ذلك وكان بقية أمهات المؤمنين قد وافقن عائشة على
المسير إلى المدينة، فلما اتفق الناس على المسير إلى البصرة
__________
(1)
في فتوح ابن الاعثم
ஆலோசனையின் இறுதியாக ”நாம் மூவரும், இந்தக்
கருத்தில் உடன்பாடுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து முஆவியா (ரலி)
அவர்களைச் சந்தித்து விவரத்தை எடுத்துச் சொல்லி இந்தக் கருத்துள்ள ஒட்டு
மொத்த ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி மதீனா வந்து அலீ (ரலி)
அவர்களைச் சந்தித்து உஸ்மான் (ரலி) அவர்கள் விவகாரத்தில் உடனடித் தீர்வை மேற்கொள்ள நெருக்கடி தருவோம்.”
என்று முடிவெடுக்கப்பட்டு முஆவியா (ரலி)
கவர்னராக இருந்த ஷாம் நோக்கிச் செல்லலாம் என சிலர் ஆலோசனை கூற அது
நிராகரிக்கப்பட்டது.
பின்னர் ஏகோபித்த கருத்தாக அனைவரும் பஸராவிற்குச் செல்லலாம்
என முடிவாகி பஸரா நோக்கி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
(நூல்: அல் பிதாயா வன் நிஹாயா)
அலீ (ரலி) அவர்களுக்கு இந்தச் செய்தி முஆவியா
(ரலி) அவர்களை அழைத்து வந்து அன்னை ஆயிஷா
(ரலி), தல்ஹா (ரலி),
ஜுபைர் (ரலி) (அன்ஹும்)
சேர்ந்து போர் செய்யப்போகின்றார்கள் என்று தவறாகத் தரப்படுகின்றது.
அலீ (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையிலான அவரின் ஆதரவாளர்கள் பஸராவிற்கு
போவதற்கு முன்னால் தடுத்து நிறுத்திட தங்களது தலைமயில் ஓர் படையை திரட்டிச் சென்றார்கள்.
இந்த தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்த அப்துல்லாஹ்
இப்னு ஸபா மற்றும் அவனது ஆதரவாளர்கள் தங்களையும் அலீ (ரலி) அவர்களின் படையோடு இணைத்துக் கொண்டனர்.
ஜமல் எனும் இடத்தில் வைத்து அன்னை ஆயிஷா, ஜுபைர்,
தல்ஹா (ரலி – அன்ஹும்)
ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்கள் அலீ (ரலி)
அவர்கள்.
மூவரும் அலீ (ரலி) அவர்களிடம்
“ நாங்கள் உங்களுக்கு எதிராக போரிட இந்த அணியை ஒன்று திரட்டவில்லை.
மாறாக, முஆவியா (ரலி)
அவர்களை வைத்து உங்களுக்கு உஸ்மான் (ரலி)
அவர்களின் விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக”
விளக்கம் தந்தனர்.
”இன்ஷா அல்லாஹ்.. மதீனா
சென்றதும் நிச்சயம் நான் உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்தவர்களைக் கண்டு பிடித்து கடும் தண்டணை கொடுப்பேன்”
என்று நான் உங்களுக்கு வாக்கு தருகின்றேன்.
நீங்கள் இத்தோடு உங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு மதீனா
திரும்பிட வேண்டும்”
என அலீ (ரலி) கேட்டுக் கொண்டார்கள்.
இரு பிரிவினரிடையே சமாதானம் ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரவு தங்கி
விட்டு காலையில் செல்வதாக முடிவெடுத்து இரு அணியினரும் அவரவர்களின் இடத்திலேயே டெண்ட்
அடித்து தங்கிக் கொண்டனர்.
எதிர் பார்த்த இழப்புகள் ஏதும் நடை பெறாததால் அப்துல்லாஹ்
இப்னு ஸபா ஏமாற்றம் அடைந்தான்.
இரவோடு இரவாக இரகசிய திட்டம் தீட்டி மிகப் பெரிய சதியை
அரங்கேற்றினான்.
அதன் விளைவாக ஏற்பட்ட கலகத்திலே கிட்டதட்ட இரு தரப்பிலும்
சேர்த்து 10,000 முஸ்லிம்கள்
கொல்லப்பட்டார்கள்.
ஒரு வழியாக கலகம் நிறைவுற்றது. ஆனால்,
அடுத்த கனமே அலீ (ரலீ) அவர்களின்
அணியிலிருந்து அவர்களை நிலை குலையச்செய்திடும் அந்த சம்பவம் அரங்கேரியது.
ஆம்! பெரும் திரளான ஆதரவாளர்கள் விலகிச் சென்றனர்.
بعث به الامام عليّ كرّم الله وجهه ذات يوم الى طائفة كبيرة منهم
فدار بينه وبينهم حوار رائع وجّه فيه الحديث وساق الحجة بشكل يبهر الألباب..
ومن ذلك الحوار الطويل نكتفي بهذه الفقرة..
سألهم ابن عباس:
" ماذا تنقمون من عليّ..؟"
قالوا:
" ننتقم منه ثلاثا:
أولاهنّ: أنه حكّم الرجال في دين الله، والله يقول ان الحكم الا
لله..
والثانية: أنه قاتل، ثم لم يأخذ من مقاتليه سبيا ولا غنائم، فلئن
كانوا كفارا، فقد حلّت أموالهم، وان كانوا مؤمنين فقد حرّمت عليه دماؤهم..!!
والثالثة: رضي عند التحكيم أن يخلع عن نفسه صفة أمير المؤمنين،
استجابة لأعدائه، فان لم يكن امير المؤمنين، فهو أمير الكافرين.."
ஒரு நாள் அலீ (ரலி) அவர்கள் மிகவும்
கவலையோடு அமர்ந்திருக்கும் போது, அங்கே வருகை தந்த அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் “
நான் வேண்டுமானால் பிரிந்து சென்ற அவர்களிடம் சென்று சமரச பேச்சு வார்த்தை
நடத்தட்டுமா?” என்று கேட்டார்கள்.
வேண்டாம்! அவர்களால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ?
என நான் அஞ்சுகிறேன்” என அலீ (ரலி) அவர்கள் பதில் கூற..
”எதுவும் நேராது, நான் கவனமாக
நடந்து கொள்கின்றேன்” என்று கூறி நேராக அவர்களிடம் சென்றார்கள்.
அவர்களை ஒன்று திரட்டி ஓரிடத்தில் அமர வைத்து, எழுந்து நின்று
ஏன் அலீ (ரலி) அவர்களை நீங்கள் நிந்திக்கின்றீர்கள்?
பலிக்கின்றீர்கள்? அவர்களை விட்டும் விலகி வந்து
விட்டீர்கள்?”
அக்கூட்டத்திலிருந்து இப்படி பதில் வந்தது. நாங்கள் மூன்று
காரணங்களுக்காக அவர்களை நிந்திக்கின்றோம்! பலிக்கின்றோம்!
விலகி வந்திருக்கின்றோம்!
தொடர்ந்து அந்த காரணங்களை வரிசையாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
முதலாவது: மார்க்க விவகாரங்களில் மனிதர்களைக் கொண்டு தீர்ப்பளிக்கின்றார்.
இரண்டாவது: (ஜமல் கலகத்தை மையப்படுத்தி) யுத்தத்திற்கு அழைக்கின்றார்; ஆனால், தோற்றவர்களின் பொருட்களை ஃகனீமத்தாக எடுக்கக்கூடாது என்றும், எதிரணியில் உள்ளவர்களை கைதிகளாக பிடிக்கக்கூடாது எனவும் கூறுகின்றார்.
மேலும், எதிரிகள் காஃபிர்களாக இருந்தால் அவர்களின் பொருட்கள்
(ஹலால்) ஆகுமாகும் என்றும், அதுவே முஸ்லிம்களாக இருந்தால் அவர்களின் உயிரும், பொருட்களும்
(ஹராம்) ஆகுமாகாது என்றும் கூறுகின்றார்.
மூன்றாவது: அரசு மற்றும் நிர்வாக சம்பந்தப்பட்ட விவகாரங்களில்
கையெழுத்து இடுகிற இடங்களில் தம் பெயருக்கு முன்னால் “அமீருல்
முஃமினீன்” என்று குறிப்பிடுவதில்லை.
நாங்கள் கேட்கின்றோம்! அவர் (அலீ
–ரலி) முஃமின்களின் தலைவரா? அல்லது காஃபிர்களின் தலைவரா?, முஃமின்களின் தலைவரென்றால்
அவர் ஏன் தம் பெயருக்கு முன்னால் அமீருல் முஃமினீன் என்று குறிப்பிடுவதில்லை?
وأخذ ابن عباس يفنّد أهواءهم فقال:
" أما قولكم: انه حكّم الرجال في دين الله، فأيّ بأس..؟
ان الله يقول: يا أيها الذين آمنوا، لا تقتلوا الصيد وأنتم حرم، ومن
قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوا عدل منكم..
فنبؤني بالله: أتحكيم الرجال في حقن دماء المسلمين أحق وأولى، أم
تحكيمهم في أرنب ثمنها درهم..؟؟!!
”சொல்லுங்கள்! அதற்கான தீர்வை நான் குர்ஆனில் இருந்தும்,
மேலான நபிகளாரின் சுன்னாவில் இருந்தும் தருகின்றேன்!
அது உங்களை திருப்திபடுத்தும் வகையில் இருந்தால் அதை ஏற்று
உங்கள் முடிவை நீங்கள் மாற்றி மீண்டும் அலீ (ரலி) அவர்களோடு இணைந்து
விட வேண்டும்! என்கிற நிபந்தனையை முன்வைத்தவர்களாக ஒவ்வொன்றுக்கும்
விளக்கம் தர ஆரம்பித்தார்கள்.
உங்களின் முதலாம் குற்றச்சாட்டுக்கான பதில் இது தான், அலீ (ரலி) அவர்கள் மார்க்க விவகாரங்களில் ஏன் மனிதர்களைக்
கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது? அதில் என்ன குற்றம் இருக்கின்றது?
ஏனென்றால், அல்லாஹ் தன் திருமறையில்…
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا
الصَّيْدَ وَأَنْتُمْ حُرُمٌ وَمَنْ قَتَلَهُ مِنْكُمْ مُتَعَمِّدًا فَجَزَاءٌ مِثْلُ
مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ
”இறைநம்பிக்கை கொண்டவர்களே!, நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடிப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்!
மேலும், உங்களில் யாரேனும் வேட்டையாடிப் பிராணிகளைக்
கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியைக் கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க
வேண்டும்.உங்களில் இரு நீதியாளர்கள் அதனைத்தீர்மானிக்க வேண்டும்.”
என்று கூறுகின்றான். தோழர்களே! நன்கு
கவனியுங்கள், இங்கே திர்ஹத்தின் மதிப்பு கூட பெறாத முயலுக்கே
மனிதர்களில் இரு நீதியாளர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றால், மார்க்க விவகாரங்களில் மனிதர்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதில் என்ன தவறு
இருக்கின்றது.
அலீ (ரலி) அவர்களின் நிலைப்பாடு அல்குர்ஆனின்
வழிமுறைப்படி சரியானது தான் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?
ஆம்! நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம்! என்று அவர்கள்
கூறினர்.
"
وأما قولكم: انه قاتل فلم يسب ولم يغنم، فهل كنتم تريدون أن يأخذ عائشة زوج الرسول
وأم المؤمنين سبيا، ويأخذ أسلابها غنائم..؟؟
وهنا كست وجوههم صفرة الخحل، وأخذوا يوارون وجوههم بأيديهم..
அடுத்து உங்கள் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான பதில் இது
தான். அல்லாஹ்
தன் திருமறையில்…
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ
أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ
أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُهَاجِرِينَ إِلَّا
أَنْ تَفْعَلُوا إِلَى أَوْلِيَائِكُمْ مَعْرُوفًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ
مَسْطُورًا
“திண்ணமாக! நம்பிக்கையாளர்களுக்கு
அவர்களின் உயிரை விட நபி தான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும்,
நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவார்.”
என்று கூறியிருக்கும் பட்சத்தில்… நீங்கள் அன்னை
ஆயிஷா (ரலி) அவர்களை கைதியாக பிடிக்கச்
சொல்கின்றீர்களா? அவர்களின் உடமைகளை ஃகனீமத்தாக கருதுகின்றீர்களா?
அப்படியே கைதியாக பிடித்தாலும், அன்னை அவர்களை
திருமணம் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?
அடுக்கடுக்கான இந்த கேள்விகளால் அவர்கள் அப்படியே ஆடிப்போய்
விட்டனர்.
அவர்களின் முகம் மஞ்சரித்துப் போய் விட்டது. தங்களின் கைகளை
முகத்தின் மீது அடித்தவர்களாக…
”நாங்கள் இந்த இரண்டாவது விளக்கத்தையும் ஏற்றுக்
கொள்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
وانتقل ابن عباس الى الثالثة:
" وأما قولكم: انه رضي أن يخلع عن نفسه صفة أمير المؤمنين، حتى
يتم التحكيم، فاسمعوا ما فعله الرسول يوم الحديبية، اذ راح يملي الكتاب الذي يقوم
بينه وبين قريش، فقال للكاتب: اكتب. هذا ما قاضى عليه محمد رسول الله. فقال مبعوث
قريش: والله لو كنا نعلم أنك رسول الله ما صددناك عن البيت ولا قاتلناك..
فاكتب: هذا ما قاضى عليه محمد بن عبدالله..
فقال لهم الرسول: والله اني لرسول الله وان كذبتم.. ثم قال لكاتب الصحيفة: أكتب ما
يشاءون: اكتب: هذا ما قاضى عليه محمد بن عبدالله"..!!
அடுத்து உங்களின் மூன்றாவது குற்றச்சாட்டுக்கான பதில்
இது தான். அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் வாழ்வில் நடைபெற்ற
ஓர் செய்தியை கூறுகின்றேன். நன்றாக செவிதாழ்த்திக் கேளுங்கள்!
”ஹுதைபிய்யா உடன்படிக்கை – குரைஷிகளுக்கும் நபிகளாருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தத்தில்
எழுதும் போது இது! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது {ஸல்} அவர்களும் உடன்படுகின்ற ஒப்பந்தம்! என்று எழுதுமாறு கூறிய அண்ணலாரை நோக்கி, அதை நாங்கள்
ஏற்றுக் கொண்டிருந்தால் தான் இந்த நிலையே ஏற்பட்டிருக்காதே! என்று
விமர்சித்த போது..
நபி {ஸல்} அவர்கள் “முஹம்மது
இப்னு அப்துல்லாஹ்” என்று எழுதுமாறு ஆணையிட்டார்கள்.
பின்பு சபையினரை நோக்கி நபி {ஸல்} கூறினார்கள்: “ நீங்கள் ஏற்றுக் கொண்டாலும், பொய்ப்படுத்தினாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான்
அல்லாஹ்வின் தூதர் தான்.”
இங்கிருந்து தான் தமக்கான செயல்பாட்டில் அலீ (ரலி) அவர்கள் முன் மாதிரியை பெற்றிருக்கின்றார்கள்.
உங்களின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான பதில்
இவைகள் தாம் என்று கூறி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முடித்த
போது கிட்டத்தட்ட சுமார் 18,000 –க்கும் மேற்பட்டோர் மீண்டும்
அலீ (ரலி) அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.
கொஞ்சம் பேர் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து
அலீ (ரலி)
அவர்களுடன் இணைய மறுத்து விட்டனர்.
பின் நாளில் இவர்கள் தாம் அலீ (ரலி) அவர்களுக்கு எதிரானவர்களில் மாபெரும் தீய சக்தியாக விளங்கினார்கள்.
(நூல்:
ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}..)
அன்றைக்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அத்தகைய ஆய்வு நோக்குடன் குர்ஆனை அணுகியிருக்க வில்லை என்றால் மிகப்பெரும்
பிளவும், பிரிவினையும் தோன்றியிருக்கும்.
இன்று
சமூகத்தில் நிலை கொண்டிருக்கின்ற பிரிவினைகளுக்கான தீர்வையும் அல்குர்ஆன் பொதிந்து
வைத்திருக்கின்றது. ஆனாலும், ஒருங்கிணைக்கும்
ஆற்றலும், ஆய்வறிவும் கொண்டிருக்கின்ற, அத்தகைய அணுகுமுறைகளைத் தாங்கி நிற்கின்ற “குர்ஆனின்
தொடர்புடையவர்கள்” மிகவும் சொற்பமானவர்களே!
அல்லாஹ் இந்த உம்மத்தை ஒன்று படுத்துவானாக! ஆமீன்!
விளக்கத்தை பெறும் முயற்சியில் கடும் சிரத்தை மேற்கொள்வது….
إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ
قُلُوبُكُمَا وَإِنْ تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ
وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرٌ (4)
“ நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்
கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்களுடைய உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்திருக்கின்றன.
மேலும், இறைத்தூதருக்கு எதிராக நீங்கள் அணி சேர்ப்பீர்களானால்
அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்
அவருடைய பாதுகாவலனாக இருக்கின்றான்.”
وفي صحيح مسلم عن ابن عباس قال: مكثت سنة وأنا
أريد أن أسأل عمر بن الخطاب عن آية فما أستطيع أن أسأله هيبة له، حتى خرج حاجا
فخرجت معه، فلما رجع فكنا ببعض الطريق عدل إلى الأراك «1» لحاجة له، فوقفت حتى
فرغ، ثم سرت معه فقلت: يا أمير المؤمنين، من اللتان تظاهرتا على رسول الله صلي
الله عليه وسلم من أزواجه؟ فقال: تلك حفصة وعائشة. قال فقلت له: والله إن كنت
لأريد أن سألك عن هذا منذ سنة فما أستطيع هيبة لك. قال: فلا تفعل، ما ظننت أن عندي
من علم فسلني عنه، فإن كنت أعلمه أخبرتك ...
__________
(1). الأراك: الشجر، واحدته أراكة.
மேற்கூறிய இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள “நபிகளாரின் இரண்டு
மனைவியர்கள்” யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
வேண்டி நான் உமர் (ரலி) அவர்களோடு சுமார்
ஓர் ஆண்டு காலம் தங்கியிருந்தேன். அவர்களின் மீது எனக்கிருந்த
பயத்தின் காரணமாக இது பற்றி கேட்பதற்கு எனக்கு தயக்கம் இருந்தது.
பின்னர், ஒருவாராக நாங்கள் இருவரும் ஹஜ்ஜுக்கு சென்றிருந்த
தருணத்தில் கேட்டு தெரிந்து கொண்டேன்.
அப்போது தான் அல்லாஹ் குறிப்பிடும் இருவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் என்றும், ஹஃப்ஸா (ரலி)
அவர்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.” என்பதாக அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:
9)
ஆகவே, குர்ஆனோடு உண்டான நம்முடைய தொடர்பை தொடர்ந்திடுவோம்!
நம்முடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் அருளுக்கும்,
நெருக்கத்திற்கும் பாத்தியமானவர்களாக ஆகிடுவோம்!
அல்லாஹ் அத்தகைய நல்ல நஸீபை உங்களுக்கும் எனக்கும் தந்தருள்
பாளிப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
இன்ஷா அல்லாஹ்…..
தொடர்ந்து நம்முடைய வலைப்பூவில் பதிவுகள் வழக்கம் போல்
போடப்படும்.
சங்கை மிகு ஆலிம்களாகிய நீங்களும், வாசகர்களும் துஆ
செய்யுங்கள்.
என்றென்றும்
உங்கள் துஆவின் ஆதரவில்…
இப்னு மஸ்வூத் உஸ்மானி
No comments:
Post a Comment