இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்வு தரும்
பாடங்களும்.. படிப்பினைகளும்…
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சங்கைப்படுத்தி இருக்கின்ற புனிதமான நான்கு மாதங்களில் ஒன்றான துல்கஅதாவின் நிறைவுப்பகுதியை நெருங்கி இருக்கும் நாம் புனிதமான நான்கு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
துல்ஹஜ் மாதம் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது லட்சக்கணக்கானோர் ஒன்று கூடி நிறைவேற்றுகிற ஹஜ் வழிபாடும், குர்பானிக் கடமையும், தியாகத் திருநாளும் தான்.
நூற்றாண்டுகளைக் கடந்து இன்னும் நினைவு கூறப்படுகிற இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வும் தியாகமும் தான்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆவும், ஆசையும், செயலும் தான் ஹஜ் என்கிற வழிபாடு, இப்ராஹீம் (அலை) அவர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் தான் குர்பானி என்கிற வணக்கம்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் மீது அல்லாஹ் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தினான்? அப்படி அவர்களின் வாழ்வில் என்ன தான் நடந்து விட்டது? என நாம் வியந்து கேட்டால், இந்த வினாவிற்கான விடையை இந்த உரையின் நிறைவில் நாம் உணர்ந்து கொள்வோம்.
ஒரு முஸ்லிம் நபி {ஸல்} அவர்களின் வாழ்க்கை வரலாறுகளுக்குப் பின்னர் வாழ்நாளில் அதிகம் கேட்பதும், படிப்பதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றைத் தான் என்றால் அது மிகையல்ல.
ஒவ்வொரு முறையும் நாம் படித்து விட்டு, கேட்டு விட்டு உச்சுக் கொட்டி விட்டு எளிதாக கடந்து விடுகின்றோம்.
ஆனால், இன்று அப்படியல்ல. கேட்டு விட்டு இன்ஷா அல்லாஹ்.. இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வியல் வழிமுறைகளை பின்பற்றுவேன் என்ற ஒரு உறுதி மொழியோடு இந்த சபையை விட்டும் நாம் கலைந்து செல்வோம்.
இப்ராஹீம் (அலை) அவர்கள்?
சுமார் 69 இடங்களில் அல்லாஹ் அவர்களின் பெயரை அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அவர்களின் பெயரை ஒரு அத்தியாயத்துக்குச் சூட்டி அல்லாஹ் அழகு பார்க்கின்றான். பல்வேறு இடங்களில் அவர்களின் பல்வேறு காலகட்ட வரலாற்றை பகிர்கிறான்.
இப்ராஹீம் (அலை)
அவர்களைப் புகழ்ந்தது போன்று இறைத்தூதர்களில் வேறு எந்த இறைத்தூதரையும் புகழவில்லை
என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு புகழாரங்களுக்கு சொந்தக்காரராக இப்ராஹீம் (அலை)
அவர்களை அல்லாஹ் அடையாளப்படுத்துகின்றான்.
إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا
النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ
“இப்ராஹீம் (அலை)
அவர்களுடன் தமக்கும் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலேயே
மிகவும் அருகதையானவர்கள் யாரெனில், அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், இப்போது
இந்த நபியும் {முஹம்மது ஸல்} இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே
ஆவர். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும்
இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 3: 68 )
وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ
مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللَّهُ
إِبْرَاهِيمَ خَلِيلًا (125)
“எவர்
அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு
ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றுகிறாரோ அவரை விடச் சிறந்த நெறி
(மார்க்கம்) உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத்
தேர்ந்தெடுத்துக் கொண்டான்”. ( அல்குர்ஆன்: 4: 125 )
وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ
نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ
الصَّالِحِينَ
“இப்ராஹீமின்
வழிமுறையை எவன் புறக்கணிக்கின்றானோ அவன் மூடனாக அன்றி வேறு யாராக இருப்பான்?
இப்ராஹீமையோ நாம் திண்ணமாக இந்த உலகில் (இறைத்தூதுக்காக) தேர்ந்தெடுத்தோம்.
இன்னும், நிச்சயமாக! மறுமையில் அவர் நல்லடியார்களில் ஒருவராக இருப்பார்”. (
அல்குர்ஆன்: 2: 130 )
ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ
حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
“பின்பு நாம்
(நபியே) உமக்கு இவ்வாறு வஹீ அனுப்பினோம். நீர் இப்ராஹீமின் மார்க்கத்தை
ஒருமனப்பட்டவராய்ப் பின்பற்றுவீராக! அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவப்பவராய்
இருந்ததில்லை”. ( அல்குர்ஆன்: 16: 123 )
قُلْ صَدَقَ اللَّهُ فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا
كَانَ مِنَ الْمُشْرِكِينَ
“நபியே! மக்களிடம்
சொல்லுங்கள்! அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின்
வழிமுறையைப் பின்பற்றுங்கள். அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவப்பவராய்
இருந்ததில்லை”. ( அல்குர்ஆன்: 3: 95)
மேற்கூறிய
இறைவசனங்கள் ”இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் நமக்கும் இடையேயான தொடர்பு எப்படி
இருக்க வேண்டும்? என்பதை உணர்த்துகின்றன.
நாம் சரியான
பாதையில் பயணிப்பதற்கான அளவு கோலாக இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் அமைத்து
வைத்துள்ளான்.
நபி {ஸல்}
அவர்களுக்கு எந்த கட்டளையை அல்லாஹ் பிறப்பித்தானோ அதே கட்டளையையே நமக்கும்
பிறப்பித்துள்ளான்.
பிரான்ஸின்
செக்குலரிசம், சீனாவின் கம்யூனிஸம், அமெரிக்காவின் கேப்டலிஸம், ரஷ்யாவின்
மார்க்கிஸம், இங்கிலாந்தின் ஏகதிபத்தியம், இந்தியாவின் ஃபாஸிசம், இலங்கையின்
புத்திட்இஸம் சவூதி மற்றும் இதர இஸ்லாமிய நாடுகளின் மேற்கத்திய மாடலிஸம், ஐ.
நாவின் நடிப்பிஸம் என சர்வதேச அரங்கில் முஸ்லிம் உம்மத் சந்தித்து வரும்
நெருக்கடியான இந்த கால கட்டத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை நம்முடைய
ஈமானிய வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.
ஏன் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை, வழிமுறையைப்
பின்பற்றுங்கள்? என நமது நபி {ஸல்} அவர்களுக்கும், நமக்கும் கட்டளையிட்டான் என்பதை
இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையின் ஊடாக நாம் விளங்கிக் கொள்ள
கடமைப்பட்டுள்ளோம்.
மிகப்பிரதானமாக
மூன்று அம்சங்கள் அவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்றதை அல்லாஹ் அல்குர்ஆனில்
பிரஸ்தாபித்து பதிவு செய்கின்றான்.
1.எல்லா நிலையிலும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற எந்தக் கேள்வியும் இல்லாமல்
இறைவனின் கட்டளைக்கு கட்டுப்படுவது.
إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ
الْعَالَمِينَ
“அவருடைய நிலை
எத்தகையதாக இருந்தது என்று (நபியே!) நீர் நினைவு கூர்ந்து பார்ப்பீராக! “ நீர்!
இறைவனின் கட்டளைக்கு கட்டுப்படுவீராக!” என்று அவருடைய இறைவன் அவரிடம் கூறிய போது
“அகிலமனைத்தின் அதிபதியாகிய இறைவனுக்கு முற்றிலும் நான் (கீழ்ப்படிந்து) கட்டுப்படுகிறேன்”
என்று உடனடியாக கூறினார்”. ( அல்குர்ஆன்: 2: 131 )
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
“மேலும்,
இப்ராஹீமை அவருடைய அதிபதி சில விஷ்யங்கள் மூலம் சோதித்ததை நீங்கள் நினைவு கூர்ந்து
பாருங்கள்! இன்னும், அவர் அந்த சோதனைகளில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்து
விட்டார்”. ( அல்குர்ஆன்: 2: 124 )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் மனைவி, மகனை யாருமே இல்லாத, எதுவுமே கிடைக்காத பொட்டல் பூமியில்
பாலைவனத்தில் விட்டு வருமாறு கட்டளையிட்டான்.
ஏன்? எப்படி?
எதற்கு? என எந்தக் கேள்வியும் கேட்காமல் அல்லாஹ் சொன்ன படியே செய்தார்கள்.
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي
زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ
“எங்கள் அதிபதியே!
நிச்சயமாக நான் என் மனைவி மற்றும் என் சந்ததியை வாழ்வாதாரம் எதுவும் இல்லாத
பள்ளத்தாக்கில், கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்தி
விட்டேன்”. என்று இப்ராஹீம் பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 14: 37 )
رَبِّ
هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (100) فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ (101)
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي
أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ
سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ (102) فَلَمَّا أَسْلَمَا
وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَنْ يَاإِبْرَاهِيمُ (104) قَدْ
صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105) إِنَّ هَذَا
لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106)
“என் இறைவா! ஒரு
சந்ததியை வழங்குவாயாக! அந்த சந்ததி உத்தமர்களில் ஒருவராக இருக்க வேண்டும்” என்று
இப்ராஹீம் பிரார்த்தித்தார். (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்தகுணம்
கொண்ட ஒரு ஆண்மகனைப் பற்றி நாம் சோபனம் அறிவித்தோம். அம்மகன் அவருடன் சேர்ந்து
உழைக்கும் (பருவ) வயதை அடைந்த போது “இப்ராஹீம் ஒரு நாள் தம் மகனிடம் “என் அருமை
மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய்க் கனவு கண்டே. உனது அபிப்பிராயம் என்ன?
என்று சொல்” என்று கேட்டார்.
அதற்கவர், “என்
தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகின்றதோ, அதைச் செய்து விடுங்கள். அல்லாஹ்
நாடினால் என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்!” என்றார். இறுதியில்
அவ்விருவரும் இறைவனின் கட்டளைக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்து விட்டார்கள்,
மேலும், இப்ராஹீம்
மகனை முகங்குப்புற கிடத்தினார். அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்!
“இப்ராஹீமே! நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி
வழங்குகின்றோம். திண்ணமாக! இது ஓர் மகத்தான சோதனையாய் இருந்தது”. ( அல்குர்ஆன்: 37: 100- 106
)
2. ஏகத்துவக் கொள்கையில் உறுதி..
1.
தந்தை மிரட்டிய போது…
اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ
مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــًٔـا
"என் தந்தையே! செவியுறாததையும், பார்க்காததையும், உமக்கு எந்தப் பயனும் அளிக்காததையும் ஏன் வணங்குகிறீர்?'' என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ
مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا
"என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்'' (என்றும் கூறினார்.)
يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ
ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ
لِلرَّحْمٰنِ عَصِيًّا
"என் தந்தையே!
ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு
மாறுசெய்பவனாவான்''
(என்றும் கூறினார்.)
يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ
يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا
"என் தந்தையே!
அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்'' (என்றார்.)
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ
اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ
لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِىْ مَلِيًّا
"இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!'' என்று (தந்தை) கூறினார்.
قَالَ سَلٰمٌ عَلَيْكَۚ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْؕ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا
"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக
என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக
இருக்கிறான். (அல்குர்ஆன்: 19: 41-47 )
2.
சமுதாய மக்கள் பயமுறுத்திய போது...
وَحَآجَّهٗ قَوْمُهٗ ؕ قَالَ اَتُحَآجُّٓونِّىْ فِى
اللّٰهِ وَقَدْ هَدٰٮنِؕ وَلَاۤ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖۤ اِلَّاۤ اَنْ
يَّشَآءَ رَبِّىْ شَيْـًٔـا ؕ وَسِعَ رَبِّىْ كُلَّ شَىْءٍ عِلْمًاؕ اَفَلَا
تَتَذَكَّرُوْنَ
”அவரது சமுதாயத்தினர்
அவரிடம் விவாதித்தனர். "அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப்
பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை
கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும்
நேராது.) என் இறைவன்,
அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர
மாட்டீர்களா?''
وَكَيْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ عَلَيْكُمْ سُلْطٰنًا ؕ فَاَىُّ الْفَرِيْقَيْنِ اَحَقُّ بِالْاَمْنِۚ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۘ
"அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள்
அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர்
யார்?'' என்று
சொல்லுங்கள்”.என்றும் அவர் கூறினார். ( அல்குர்ஆன்: 6: 80-81 )
3.
ஆட்சியாளன் அச்சுறுத்திய போது…
وَ تَاللّٰهِ
لَاَكِيْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ
“இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர்,
அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு
ஒரு சதி செய்வேன்!” (என்றும்
கூறினார்.)
فَجَعَلَهُمْ جُذٰذًا
اِلَّا كَبِيْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَيْهِ يَرْجِعُوْنَ
அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற)
எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு
விட்டார்).
قَالُوْا مَنْ فَعَلَ
هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِيْنَ
“எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்?
நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக
இருப்பான்” என்று கூறினார்கள்.
قَالُوْا سَمِعْنَا
فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهۤ اِبْرٰهِيْمُ ؕ
“அதற்கு
(அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்)
குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்,
அவருக்கு இப்ராஹீம் என்று பெயர்
சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰى اَعْيُنِ
النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ
“அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்;
அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு”
என்று சொன்னார்கள்.
قَالُوْا ءَاَنْتَ
فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰۤاِبْرٰهِيْمُؕ
“இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?”
என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
قَالَ بَلْ فَعَلَه ۖ كَبِيْرُهُمْ هٰذَا فَسْــٴَــلُوْهُمْ اِنْ
كَانُوْا يَنْطِقُوْنَ
அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ
இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்;
எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின்,
இவற்றையே நீங்கள் கேளுங்கள்”
என்று கூறினார்.
فَرَجَعُوْۤا اِلٰى اَنْـفُسِهِمْ
فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْـتُمُ الظّٰلِمُوْنَۙ
(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி,
(ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக
நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.
ثُمَّ نُكِسُوْا عَلٰى
رُءُوْسِہمْۚ لَـقَدْ عَلِمْتَ مَا
هٰؤُلَاۤءِ يَنْطِقُوْنَ
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள்
தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்;
“இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக
அறிவீரே!” (என்று
கூறினர்).
قَالَ اَفَتَعْبُدُوْنَ
مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـٴًـــا وَّلَا يَضُرُّكُمْؕ
“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு
தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
اُفٍّ لَّـكُمْ وَلِمَا
تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِؕ اَفَلَا تَعْقِلُوْنَ
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும்
கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?”
(என்று இப்ராஹீம் கூறினார்).
قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا
اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ
(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது
செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
( அல்குர்ஆன்: 21: 57-68 )
பெற்றெடுத்த தந்தை
கொல்வேன் என்கிறார். வீட்டை
விட்டு வெளியேற்றுவேன் என்கிறார்.
கல்லால் அடிப்பேன் என்கிறார்.
சொந்த சமுதாய
மக்கள் தெய்வம் அப்படி
செய்து விடும் இப்படி
செய்து விடும் என்று
பயம் காட்டுகின்றது.
ஆட்சியாள்னோ நெருப்பில்
தூக்கி வீசுவேன் என்று
அச்சுறுத்தினான். அச்சுறுத்தியது போன்றே
பெரும் நெருப்புக் குண்டத்தில்
வீசவும் செய்தான். இத்தனைக்குப்
பிறகும் இப்ராஹீம் (அலை)
அவர்கள் ஏகத்துவக் கொள்கையில்
மிகவும் உறுதியாக இருந்தார்கள்.
3. சத்தியத்தில் சமரசம் கிடையாது…
1.
வீட்டை விட்டு வெளியேற்றிய
தந்தையிடம்..
وَ
اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ ۖ عَسٰى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ
شَقِيًّا
உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றையும் விட்டு நான் விலகிக்
கொள்கிறேன். என் இறைவனிடமே பிரார்த்தனை செய்வேன். எனது இறைவனிடம் பிரார்த்தனை
செய்வதில் துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பேன்'' (என்று இப்ராஹீம் கூறினார்.) ( அல்குர்ஆன்: 19: 48 )
2. நெருப்புக்குண்டத்தில் வீசியெறிந்த ஆட்சியாளனிடம்..
اَلَمْ تَرَ اِلَى
الَّذِىْ حَآجَّ اِبْرٰهمَ فِىْ
رَبِّهۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَۘ اِذْ قَالَ اِبْرٰهمُ
رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُؕ قَالَ اِبْرٰهمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ
الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَؕ وَاللّٰهُ لَا يَهْدِى
الْقَوْمَ الظّٰلِمِيْنَۚ
”அல்லாஹ் தனக்கு
அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய
இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும்
செய்கிறானோ,
அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று;
அதற்கவன், “நானும் உயிர்
கொடுக்கிறேன்;
மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்;
(அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப்
போனான்; தவிர,
அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி
காண்பிப்பதில்லை.
( அல்குர்ஆன்:
2: 258 )
முன்மாதிரிக்கு முன்மாதிரியாக….
حدَّثَنَا قُتَيْبَةُ: حدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو
بْنِ دِينَارٍ: أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ أَنَّهُ سَمِعَ
عُبَيْدَاللَّهِ بْنَ أَبِي رَافِعٍ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: بَعَثَنِي
رَسُولُ اللَّهِ ﷺ أَنَا وَالزُّبَيْرُ وَالْمِقْدَادُ فَقَالَ
انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ
خَاخٍ، فَإِنَّ بِهَا ظَعِينَةً مَعَهَا كِتَابٌ فَخُذُوهُ مِنْهَا، فَانْطَلَقْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى أَتَيْنَا
الرَّوْضَةَ، فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ، فقلنا: أخرجي الكتاب، فقالت: ما معي
كتاب، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ، قَالَ:
فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا، فَأَتَيْنَا بِهِ رَسُول اللَّهِ ﷺ، فَإِذَا
فِيهِ: مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى نَاسٍ بِمَكَّةَ مِنَ
الْمُشْرِكِينَ، يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ رَسُولِ اللَّهِ ﷺ، فَقَالَ
يَا حَاطِبُ، مَا هَذَا؟
فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَا تعجل عليَّ، إني كنتُ امرأً
مُلْصَقًا فِي قُرَيْشٍ
يَقُولُ
كُنْتُ حَلِيفًا- وَلَمْ أكن من أنفسها، وكان
مَن معك من المُهاجرين مَن لهم قرابات يحمون بها أهليهم وأموالهم، فأحببتُ إذا
فَاتَنِي ذَلِكَ مِنَ النَّسَبِ فِيهِمْ أَنْ أَتَّخِذَ عندهم يدًا يحمون
قَرَابَتِي، وَلَمْ أَفْعَلْهُ ارْتِدَادًا عَنْ دِينِي، وَلَا رِضًا بِالْكُفْرِ
بَعْدَ الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكُمْ»،
فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا
الْمُنَافِقِ؟ فَقَالَ
إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْرِيكَ
لَعَلَّ اللَّهَ قَدِ اطَّلَعَ عَلَى مَنْ شَهِدَ بَدْرًا فَقَالَ: اعْمَلُوا مَا
شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’
என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம்
இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள்.
(அவ்வாறே) நாங்கள்
சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ‘ரவ்ளா’
எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்)
பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘கடிதத்தை வெளியே
எடு” என்று கூறினோம். அவள்,
‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘ஒன்று நீயாகக் கடிதத்தை
எடுத்து (கொடுத்து) விடு;
இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு)
விடுவோம்”
என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை
நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே
எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம்.
அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள
பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை
(முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஹாத்திபே! என்ன இது?’ என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்)
அவர்கள்,
‘இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை
எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து
வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின்
வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர்
இருக்கிறார்கள்.
எனக்கு
அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம்
எதையாவது செய்து,
அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற
வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத்
தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர்
(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்?
ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப்
பார்த்து,
‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான்
மன்னித்து விட்டேன்’
என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள். ( நூல்: புகாரி )
பெருமானார் {ஸல்}
அவர்களுக்கும் தோழர்களுக்கும் தெரியாமல் நடைபெறுகிற ஒரு நிகழ்வை அல்லாஹ் ஜிப்ரயீல்
(அலை) அவர்கள் மூலமாக மாநபி {ஸல்} அவர்களுக்கு அறிவித்துத் தருகின்றான்.
அதனடிப்படையில்,
நபி {ஸல்} அவர்கள் மூன்று நபித்தோழர்களை அனுப்பி அந்த திட்டத்தை முறியடித்து
விடுகின்றார்கள்.
பின்னர்,
சம்பவத்தோடு தொடர்புடைய நபித்தோழரை அழைத்து விசாரித்து உண்மை நிலையை அறிந்து கொண்ட
நபி {ஸல்} அவர்கள் “அந்த நபித்தோழர் உண்மையே சொல்லி இருக்கின்றார்” என்று
கூறியதோடு, துரோகம் செய்து விட்டதாகக் கூறி அந்த நபித்தோழரை கொல்ல வேண்டும் என்று
ஆவேசமாக இருந்த உமர் (ரலி) அவர்களை “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார்.
மேலும், உமக்கென்ன தெரியும்?
ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப்
பார்த்து,
‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான்
மன்னித்து விட்டேன்’
என்று கூறி விட்டிருக்கலாம்” என்று ஆறுதல்
படுத்தினார்கள்.
இத்தோடு இந்த சம்பவம் நிறைவு பெற்றிருந்தால் பரவாயில்லை;
இதன் பின்னர் அங்கு வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல் மும்தஹினா அத்தியாயத்தை
ஓதிக் காண்பித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த அத்தியாயத்தை உங்களிடம் ஓதிக் காண்பிக்கச்
சொன்னான் என்று கூறினார்கள்.
அந்த அத்தியாயத்தின் வசனங்களை ஓதிப்பருங்கள்; அதன்
பொருளை, அதன் கருத்தை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.
“உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகிற போது என்னை
பகைத்துக் கொண்டவர்களை நேசமானவர்களாகக் கருதி அவர்களோடு நெருக்கம் காண முற்படுகின்றீர்கள்.
இன்றல்ல, அவர்கள் எப்போதும் உங்களுக்கு விரோதமாகவே
செயல்படுவார்கள் என்பதை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்.
இதே போன்றதொரு சூழ்நிலை நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும்,
அவர்களின் சமூகத்திற்கும் ஏற்பட்டது. அவர்களின் குடும்பமும், அவர்களின் சமூகமும் அவர்களை
தனித்து நிராயுதபாணிகளாக விட்ட போது இப்ராஹீம் (அலை) அவர்களும், அவர்களைக் கொண்டு இறைநம்பிக்கை
கொண்டிருந்த சமூகமும் என்ன சொன்னது தெரியுமா? என்று சொல்லி அவர்கள் கூறியதை நினைவு
படுத்தி “இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்விலும், அவர்களைக் கொண்டு இறைநம்பிக்கை கொண்டிருந்த
சமூக மக்களின் வாழ்விலும் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கின்றது” என்று கூறினான்.
இதோ…. அந்த வசனங்களை நானும் கொஞ்சம் வாசித்துப்
பார்ப்போம்! நம் சிந்தையில் வைத்து ஆழமாக சிந்தனை செய்வோம்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ
اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّىْ وَعَدُوَّكُمْ اَوْلِيَاءَ تُلْقُوْنَ
اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَاءَكُمْ مِّنَ الْحَـقِّ ۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ اَنْ
تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْـتُمْ خَرَجْتُمْ
جِهَادًا فِىْ سَبِيْلِىْ وَ ابْتِغَاءَ مَرْضَاتِىْ ۖ تُسِرُّوْنَ اِلَيْهِمْ
بِالْمَوَدَّةِ ۖ وَاَنَا اَعْلَمُ بِمَاۤ
اَخْفَيْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْؕ وَمَنْ يَّفْعَلْهُ
مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيْلِ
“ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும்
இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும்
உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்)
உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும்,
உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும்
நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி
விடுகிறீர்கள்;
ஆனால், நீங்கள்
மறைத்துவைப்பதையும்,
நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற
விட்டுவிட்டார்.
اِنْ يَّثْقَفُوْكُمْ
يَكُوْنُوْا لَـكُمْ اَعْدَاءً وَّيَبْسُطُوْۤا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ
وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَؕ
அவர்களுக்கு
உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு
விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும்
உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள்; தவிர,
நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.
لَنْ تَـنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ
اَوْلَادُكُمْ ۚ يَوْمَ الْقِيٰمَةِ ۚ يَفْصِلُ بَيْنَكُمْؕ وَاللّٰهُ بِمَا
تَعْمَلُوْنَ بَصِيْرٌ
உங்கள் உறவினரும்; உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்; அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
قَدْ كَانَتْ لَـكُمْ
اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰؤُا
مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا
بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا
بِاللّٰهِ وَحْدَهۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ
لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ
الْمَصِيْرُ
“இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர்
அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம்
சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும்
அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்;
அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள்.
ஆனால் இப்ராஹீம்
தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க
எனக்குச் சக்தி கிடையாது;
ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக
மன்னிப்புத் தேடுவேன்”
எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன்
மாதிரியிருக்கிறது,
அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” ( அல்குர்ஆன்:
60: 1-4 )
இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையை எவ்வளவு முறை
கேட்டிருக்கின்றோம், படித்திருக்கின்றோம் நம் வாழ்வில் நாம் கடைபிடிக்க முயற்சி செய்திருக்கின்றோமா?
இன்றைய நம் கொள்கையின் உறுதிப்பாடு எப்படி இருக்கின்றது?
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிகிற விஷயத்தில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றோம்?
சத்திய சன்மார்க்கமும், தீமையும் நேரெதிராக இருக்கும் விஷயத்தில் சமரசம் செய்கின்றோமா?
அல்லது சத்தியத்தில் நிலைத்து நிற்கின்றோமா?
எனவே, இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து
பாடங்களும், படிப்பினைகளும் பெற்று இறை நெருக்கத்தை அடைவோம்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அருள்
புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
ஆக்ரோஷமாமான ஆரம்பத்திற்கு முடிவு பொருத்தமாக இல்லையே என்ற வருத்தம் மனதில் பட்டது
ReplyDeleteமுடிவில் வரும் முன்மாதிரிக்கு முன்மாதிரியாக என்கிற தலைப்பு தான் முத்தாய்ப்பே!
Deleteமாஷா அல்லாஹ் அற்புதம் இப்ராஹிம் நபியைப் பற்றி அல்லாஹ்வுடைய கூற்
ReplyDeleteறை அற்புதமாக தொகுத்து உள்ளீர்கள்
جزاك الله خيرا
ReplyDeleteஆரம்பம் சூப்பர் போகப் போக சொதப்பிரிச்சே ஆலிம் ஷா
ReplyDeleteஎங்கே சொதப்பியது என்று குறிப்பிட்டு இருந்தால் நலம் பயக்கும்.
Deleteமாஷாஅல்லாஹ்
ReplyDeleteமாபெரும் முயற்சிசெய்து நல்ல தலைப்புகளை வழங்கிவரும் தங்களுக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் அள்ளி வழங்கட்டுமாக (ஆமீன்)
ReplyDelete