ரமழானைப் பாழாக்கிட வேண்டாம்!!
மகத்துவமும், அருள்வளமும் நிறைந்த ரமலான் மாதம் இதோ நம்மிடம்
இன்னும் சில தினங்களில் வர இருக்கின்றது.
ரஜப் மாதத்திலிருந்தே அல்லாஹ்விடம் “யாஅல்லாஹ் எங்களுக்கு நீ ரஜபிலும், ஷஅபானிலும் பரக்கத் செய்வாயாக! மேலும், எங்களுக்கு ரமலானை அடையும் பாக்கியத்தை அருள்வாயாக!” என்று பிரார்த்திக்குமாறு நபி {ஸல்} அவர்கள்
பணித்தார்களே அந்த பிரார்த்தனையை ஆசையோடு கேட்டவர்களாக
எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
கடந்த இரண்டு
ஆண்டுகளாக கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி பாக்கியமான ரமழானின் பரக்கத்தான
பல்வேறு அமல்களை செய்ய முடியாமல் பரிதவித்து வந்தோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த ஆண்டின் ரமழானை பரிபூரணமாக அடைந்து, முப்பது நாட்களும் நோன்பு நோற்று,
அனைத்து வகையான இபாதத்களையும் மன நிறைவோடு, இன்பத்தோடு நிறைவேற்றிடும் பாக்கியத்தை
உங்களுக்கும் எனக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் குடும்பத்தாருக்கும்
நஸீபாக ஆக்கியருள்வானாக!
முன்னோர்களான மேன்மக்கள் ரமழானை அடைய
வேண்டும் என்ற ஆசையையும், அதில் அமல் செய்ய வேண்டும் என்ற பேராவலையும் வெளிப்படுத்தி இப்படி பிரார்த்தித்து இருக்கின்றார்கள்.
قال معلى ابن الفضل : كانوا
يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان ، ثم يدعونه ستة أشهر أن يتتقبل منهم رمضان .
முஅல்லா இப்னு அல்
ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ”மேன்மக்களான
முன்னோர்கள் ஆறு மாத காலத்திற்கு முன்னரே ரமழானை அடைந்திட அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்.
பிந்திய ஆறு மாத காலம் அந்த ரமழானில் செய்த இபாதத்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்.”
وقال
يحيى ابن كثير كان من دعائهم : اللهم سلمني إلى رمضان ، وسلم لي رمضان ، وتسلمه
مني متقبلاً يا رب الأنام .
யஹ்யா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: முன்னோர்களான மேன்மக்கள் ”ரமழான் என்னை சாந்தியோடு
சந்திக்கவும், ரமழானை நான் சாந்தியோடு சந்திக்கவும் இறைவா நீ அருள்
புரிவாயாக! மேலும், ரமலானில் நான் செய்கிற
வணக்கங்களை பூரணமாக ஏற்றுக் கொள்வாயாக!” என்று துஆ செய்யும் பழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள்.
எனவே, இந்த ரமலானை பாக்கியமாக பயன் படுத்துவோம்.
அல்லாஹ் தௌஃபீக் செய்தருள்வானாக!
ரமழானை அடைகிற நாம் பின் வரும் எச்சரிக்கையை நம்
கவனத்தில் வைத்து செயல் பட வேண்டும்.
عن أبي هريرة رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم صعد المنبر ،
فقال : " آمين آمين آمين " . قيل : يا رسول الله ، إنك حين صعدت المنبر
قلت : آمين آمين آمين . ، قال : " إن جبريل أتاني ، فقال : من أدرك شهر
رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن أدرك
أبويه أو أحدهما فلم يبرهما ، فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت :
آمين . ومن ذكرت عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ،
فقلت : آمين "
حسن صحيح
رواه ابن خزيمة و ابن حبان في صحيحه و ابي يعلى الموصلي
في مسنده و الطبراني في المعجم الأوسط و البيهقي في الشعب.
صححه الالباني رحمه الله في صحيح الترغيب و الترهيب
(997) و الله أعلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே” என வினவப்பட்டது.
என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். வந்தவர், “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன்.
“யார் தன்னுடைய பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் அவர்களுக்கு நன்மை செய்யாமல் இறந்து விட்டாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் இரண்டாவது முறையாக “ஆமீன்” கூறினேன்.
மேலும்,“யாரிடம் தங்களது பெயர் கூறப்பட்டும் தங்களின் மீது ஸலவாத் சொல்லாத நிலையிலேயே மரணித்து விடுகின்றாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் மூன்றாவது முறையாக “ஆமீன்” கூறினேன்” என்று பதில் கூறினார்கள்.
( நூல்: இப்னு குஸைமா )
ரமழானை அடைந்து அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பு
கிடைக்காமல் போகும் முஸீபத்தில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!
இந்த ரமழானில் நம்மை நன்மைகளை விட்டும் தூரமாக்குகிற,
நம்முடைய நன்மைகளை அழித்து நம் ரமழானை பாழாக்குகிற, நாம் மிகவும் துச்சமாக கருதுகிற
சில விஷயங்களில் இருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
1.
புதிய தொழுகையாளிகள் விஷயத்தில்
கவனம் வேண்டும்..
ரமழானில் புதிதாக
சிலர் பள்ளிக்கு வருவார்கள். தொழுவார்கள். ரொம்ப பேணுதலோடு இருப்பார்கள்.
அவர்களின் தொழுகை
முறைகளில் சில தவறுகள் இருக்கலாம். அவர்களின் செயல்பாடுகளில் குறைகள் இருக்கலாம்.
அவர்களின் நடைமுறைகளில் பிழைகள் இருக்கலாம். அவர்களை கேலி செய்வதும் கேவலமாக கருதுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
ரமழான் முடிந்து
அவர்கள் வெளியே செல்லும் போது அவரின் பிழைகளும் தவறுகளும் திருத்தப்பட்டு, அவரின் குறைகள் சரி செய்யப்பட்டு சரியான ஒரு முஸ்லிமாக உருவாகிட நாம் முயற்சி
செய்ய வேண்டும்.
ஆனால் நாம்
அவர்களை கேலி செய்கிறோம். விமர்சனம் செய்கிறோம்.
அதே போன்று சிறுவர்களும்
ஏராளமாக வருவார்கள். அங்கும் இங்கும் ஓடுவார்கள். விளையாடுவார்கள். அவர்களை நாம்
விரட்டுவோம். ஏசுவோம். பேசுவோம்.
23 ஆண்டு கால
நபித்துவ வாழ்வின் போதனைகளை, இஸ்லாமிய மார்க்கத்தின்
சான்றுகளை சாறு பிழிந்து,
அதனுடைய முக்கியமான சாராம்சங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஹஜ் எனும் கடமைக்காக,
புனித மக்காவில் ஒன்று குழுமியிருந்த லட்சத்திற்கும்
மேற்பட்ட மக்களுக்கு மத்தியில்
நினைவூட்டும் பொருட்டு, மிக அவசியமான சட்ட
திட்டங்களைத் தம் உரையில் சேர்த்துக் கொண்ட நபி ஸல் அவர்கள் மக்களிடம் கூறிய
அடிப்படையான விஷயம்,
"சக மனிதர்களுடைய உரிமைகள் விஷயத்தில் பொடு போக்காக இருந்து
விடாதீர்கள்" என்பது தான்.
فَإِنَّ
دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ
يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا»، فَأَعَادَهَا
مِرَارًا
“நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களில் ஒவ்வொருவரின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று பல தடவை கூறினார்கள். நூல்: புகாரி-1739
இன்னொரு அறிவிப்பில்...
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَقَالَ: «فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا؟»، قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «بَلَدٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَيُّ شَهْرٍ هَذَا؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” شَهْرٌ حَرَامٌ، قَالَ: فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا
நபி (ஸல்) அவர்கள்
மினாவில் இருந்த போது “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள்.
அதற்கு மக்கள்,
“அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள்,
“இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள்
அறிவீர்களா?”என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!”என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?”என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர்.
அதற்கு நபி (ஸல்)
அவர்கள் “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித
மாதத்தில்,
உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ்
உங்கள் உயிர்களையும்,
உடைமைகளையும், உங்கள் மானம்
மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள். நூல்:
புகாரி-1742
இறைவனுக்கு மனிதன்
செய்ய வேண்டிய கடமைகளில் எந்த அளவிற்கு அவன் பேணுதலாக இருக்க வேண்டுமோ அதே
அளவிற்கு,
சக மனிதர்கள் விஷயத்திலும், அவர்களுடைய உரிமைகளைக் காக்கின்ற விஷயத்திலும் பேணுதல் காட்ட வேண்டும் என்பதை
உணர்த்தினார்கள்.
நாம் ஆண்டாண்டு
காலமாக தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், இபாதத்கள் செய்கின்றோம், குர்ஆன்
ஓதுகின்றோம், தராவீஹ் தொழுகின்றோம் என்ற நினைப்பில் புதிதாக பள்ளிக்கு வருபவர்களை
வார்த்தைகளால் துளைத் தெடுக்கின்றோம். சாடை பேசுகின்றோம்.
இதைத் தாண்டி
அவர்களின் தீனின் நலனுக்காக நாம் என்ன செய்திருக்கின்றோம்.
பின்வரும்
எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ
لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ
بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ
مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ،
وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ
أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ»
ஒரு முறை நபி
(ஸல்) அவர்கள்,
(மக்களிடம்) ‘திவாலாகிப் போனவன் யார் என்று
உங்களுக்குத் தெரியுமா?’
என்று கேட்டார்கள். அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ,
பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களை பொறுத்தவரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போன ஒருவர் உண்டு.
அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு,
ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அந்நேரத்தில்) அவர் ஒருவரை
திட்டியிருப்பர்;
ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார்; ஒருவரின் பொருளை (முறைகேடாக) புசித்திருப்பார்; ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளில்
இருந்து சிலவற்றை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கப்படும்.
இன்னும் சிலவற்றை
மற்றவருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளில் இருந்து எடுத்து கொடுப்பதற்கு
முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட)
மக்களின் பாவங்களில் இருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும் பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவர். (அவரே
திவாலாகிப்போனவர்).
( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-5037 )
தொழுகை, நோன்பு என ஆன்மீகப் பாதையில் நெறி தவறாமல் வாழ்ந்த ஒருவர் நமது பார்வையில்
சொர்க்கத்திற்குரியவர் போல் காட்சியளிக்கலாம். ஆனால், அந்த மனிதரால் இவ்வுலகில் சக மனிதர்களுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பின், அவற்றை இவ்வுலகிலேயே அவர் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அல்லாமல், அந்த நிலையிலேயே அவன் மரணத்தைத் தழுவி விட்டார் எனில், அவருடைய இறைத்தொண்டு முழுமை பெற்றதாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது.
சக மனிதர்களின்
உரிமை சார்ந்த விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியப் போக்கு என்பது சமயத்தில் நரகப்
படுகுழியிலே நம்மைத் தள்ளி விடும் என்பதை உணர வேண்டும்.
நாம் செய்யும்
கேலியும், கிண்டலும், சாடைப் பேச்சும் ரமழானைத் தொடர்ந்து அவர் தொழுகையாளியாக
மாறுவதற்கு தடையாகி விடக்கூடாது. பள்ளிவாசலின் தொடர்புக்கு முட்டுக்கட்டையாகி
விடக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக நாளை மறுமையில் நம்மை திவாலானவர்களாக
ஆக்கிவிடக்கூடாது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
மாநபி {ஸல்}
அவர்களின் பண்பை கையிலெடுத்து அவரின் தவறை, குறையை திருத்த வேண்டும்.
فَبِمَا
رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا
مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ
فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
(நபியே!) அல்லாஹ்வுடைய
அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள்.
நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம்
கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி
இருப்பார்கள். ஆகவே,
அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்)
அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்!
(யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள்.
ஏனென்றால்,
நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை
நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 3:159)
عن معاوية بن الحكم السُّلمي، قال: بينا أنا أُصلِّي مع رسول
الله - صلَّى الله عليه وسلَّم - إذ عَطَس رجلٌ من القوم، فقلتُ: يرحمك الله،
فرماني القومُ بأبصارهم، فقلت: واثُكل أُمِّياه! ما شأنكم تنظرون إليَّ؟! فجعلوا
يضربون بأيديهم على أفخاذهم، فلمَّا رأيتهم يُصمِّتونني، لكنِّي سكت، فلمَّا صلَّى
رسول الله - صلَّى الله عليه وسلَّم - فبأبي هو وأمي، ما رأيتُ معلِّمًا قبلَه ولا
بعدَه أحسنَ تعليمًا منه، فوالله ما كَهَرني ولا ضَرَبني ولا شتمني، قال: ((إنَّ
هذه الصَّلاةَ لا يصلح فيها شيءٌ من كلام الناس، إنَّما هو التسبيحُ والتكبير،
وقراءة القرآن))، أو كما قال رسول الله - صلَّى الله عليه وسلَّم - قلت: يا رسول
الله، إنِّي حديثُ عهد بجاهلية، وقد جاء الله بالإسلام، وإنَّ منَّا رجالًا يأتون
الكُهَّان؟ قال: ((فلا تأْتِهم))، قال: ومنَّا رجال يتطيَّرون؟ قال: ((ذاك شيءٌ
يجدونه في صدورهم، فلا يَصدنَّكم))، قال قلت: ومنَّا رجال يخطُّون؟ قال: ((كان
نبيٌّ من الأنبياء يخطُّ، فمَن وافق خطَّه فذاك))، قال: وكانت لي جاريةٌ ترعى
غنمًا لي قِبل أُحد والجوانية، فاطلعتُ ذات يوم، فإذا الذِّئبُ قد ذهب بشاة من
غنمها، وأنا رجلٌ من بني آدم، آسَفُ كما يأسفون، لكنِّي صككتُها صكَّة، فأتيتُ
رسولَ الله - صلَّى الله عليه وسلَّم - فعظَّم ذلك عليَّ، قلت: يا رسولَ الله،
أفلا أعتقها؟ قال: ((ائتني بها))، فأتيتُه بها، فقال لها: ((أينَ الله؟)) قالت: في
السَّماء، قال: ((مَن أنا؟)) قالت: أنت رسول الله، قال: ((أعْتِقْها، فإنَّها
مؤمنة))
முஆவியா பின்
அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு நாள்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது
(தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்”
(அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி)
கூறினேன்.
உடனே மக்கள் என்னை
வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள்
ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள்
அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு
அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.
அவர்களுக்கு
முன்னரோ,
பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும்
ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.
அல்லாஹ்வின்
மீதாணையாக!
அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை.. அடிக்கவுமில்லை.. திட்டவுமில்லை…
(மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது,
மக்களின்
பேச்சுகளுக்கு உரிய நேரமன்று” “தொழுகை என்பது இறைவனைத்
துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு
நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம்
செல்கிறார்களே?”
என்றேன்.
அதற்கு அவர்கள் “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள்.
நான் “எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?” என்றேன். அதற்கு நபியவர்கள் “இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது “அவர்களை”
அல்லது”உங்களை” (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்” என்று கூறினார்கள்.
நான், “எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு
முறையை மேற்கொள்)கின்றனர்”
என்றேன். அதற்கு அவர்கள், “நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு
வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்” என்றார்கள்.
அடுத்து என்னிடம்
ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள)
உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து
வந்தாள்.
ஒரு நாள் நான்
சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு
சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன்.
ஆயினும்,
அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை
என்னிடம் அழைத்துவாருங்கள்!” என்று சொன்னார்கள்.
நான் அவளை
அழைத்துச் சென்றபோது அவளிடம், “அல்லாஹ் எங்கே
இருக்கின்றான்?”
என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள்,
“வானத்தில்” என்று பதிலளித்தாள். நபி அவர்கள்,
“நான் யார்?” என்று கேட்டார்கள். அவள்,
“நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள்.
அவர்கள்
(என்னிடம்),
“அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ்
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 935.
يروى عُمر: كنت غلاماً في حجر رسول الله صلى الله عليه وسلم،
وكانت يدي تطيش في الصحفة - إناء الأكل -، فقال لي رسول الله: «يا غلام سم الله
وكل بيمينك وكل مما يليك»، فما زالت تلك طعمتي بعد.
நான் நபி (ஸல்)
அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும்
பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பையனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால்
சாப்பிடு,
உனக்குப் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடு, என எனக்குக் கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி,
முஸ்லிம்
عَنْ عبدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عنهما
سأل رجل رسولَ الله صلَّى الله عليه وسَلَّم، فقال: ما يَلبَسُ
الْمُحْرِمُ؟ فقال: لا يَلْبَسِ القميصَ، ولا السَّراويلَ، ولا البُرْنُسَ، ولا
ثوبًا مَسَّه الزَّعفرانُ، ولا وَرْسٌ، فمَن لم يجِدِ النَّعْلينِ فلْيَلْبَسِ
الخُفَّينِ
ஒருவர் நபி (ஸல்)
அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சட்டை,
தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த
ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்)
அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை
அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை
அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 134.
மேற்கூறிய மூன்று செய்திகளில் முஆவியா இப்னு அல்ஹகம்
(ரலி) அவர்கள் புதியவர், தொழுகையில் உள்ள சட்டத்தை அறியாதவர், மாநபி {ஸல்} அவர்களின்
அணுகுமுறையால் கவரப்பட்ட அவர் தம்முடைய பல சந்தேகங்களுக்கு விடையைப் பெற்றதோடு சபையை
விட்டுச் செல்லும் போது ஒரு அடிமையை உரிமை விட்ட பெரும் பாக்கியத்தோடு விடை பெற்றுச்
செல்கின்றார்.
உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் சிறுபிராயத்தில்
நபி {ஸல்} அவர்கள் திருத்திய அடிப்படையில் காலம் முழுதும் கடைபிடித்ததாகக் கூறுகின்றார்கள்.
எனவே, ரமழானுக்கு புதிதாக பள்ளிவாசலுக்கு வருகை
தருபவர்களிடமும், சிறுவர்களிடமும் நளினமாக நடந்து கொள்வோம். அவர்களுக்கு தெரியாத மஸாயில்களை
தெளிவு படுத்துவோம். காலம் முழுவதும் பள்ளிவாசலோடு தொடர்புடையவராக மாற்றுவோம்.
2. பழங்கால நடைமுறைக்கு விடுதலை கொடுப்போம்..
இன்று முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் தலை நோன்பு தலைப் பெருநாள் என்ற பெயரில் தனது
மகளை திருமணம் செய்து கொடுத்த வீட்டிற்கு சீர் செய்வதும் சீதனம் கொடுப்பதும்
வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக
நோன்பு காலத்தில் மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தாருக்கு நோன்பு திறப்பதற்கு
உணவு வழங்குவது உயர்தர இனிப்பு பலகாரங்களை வழங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
ஏழைகளாக இருக்கிற பல முஸ்லிம்கள் ரமழான்
வந்துவிட்டால் சீர் கொடுக்க வேண்டும் என்கிற கவலை அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. கடன் படுகிறார்கள் வட்டிக்கு பணம்
வாங்குகிறார்கள்.
ரமழான் விடைபெற்று அடுத்த ரமழான் வரும் வரை
கடனாளியாகவே அவர்களின் காலம் கழிகிறது.
மேலும் திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிற
மாப்பிள்ளைக்கு புத்தாடை எடுத்துக் கொடுப்பதும் பெண்ணுக்கு சேலை மற்றும் நகைகள்
எடுத்துக் கொடுப்பதும் இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஊர்களில்
சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது காலம் காலமாக கடைபிடித்து வருகிற இந்த பழக்க
வழக்கங்களில் இருந்து நாம் விடைபெற வேண்டும்.
ஏனெனில் பிறரை சிரமப்படுத்தி கஷ்டப்படுத்தி
வாங்குகிற எந்த ஒன்றிலும் பரக்கத் இருப்பதில்லை. மேலும், இஸ்லாம் இது போன்ற
காரியங்களை பிறருக்கு செய்கிற அல்லது பிறருக்கு இழைக்கிற அநீதியாகவே பார்க்கிறது.
நான் கேட்கவில்லை, நான் நிர்பந்திக்கவில்லை, அவர்களாக விருப்பப்பட்டு
தந்தார்கள் நான் வாங்கிக் கொண்டேன் என்று நாம் நமக்குக் கிடைத்த ஒரு
பொருளையோ பணத்தையோ ஆகுமானதாகக் கருதினால் அதைக் கூட இஸ்லாம் நுணுக்கமாக
வேறுபடுத்துகிறது.
நமக்குத் தந்தவர், மனம் விரும்பித் தந்தாரா
அல்லது மனம் வெதும்பி,வேறு வழியின்றி தந்தாரா என்பதை வைத்து தான் அந்தப் பொருள் நமக்கு ஆகுமானதா
இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்கிறது இஸ்லாம்.
وَمَنِ اقْتَطَعَ مَالَ أَخِيهِ الْمُسْلِمِ
بِيَمِينٍ
மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல. அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வல் (ரலி), நூல்: திர்மிதி (
அவர்கள்
தருகிறார்கள்,
எனவே நாங்கள் பெறுகிறோம் என்று சால்ஜாப்பு சொல்வதை இஸ்லாம்
ஏற்காது. அவர்கள் அந்த சீதனப் பொருளைத் தரவில்லை யெனில், தங்கள் வீட்டுப் பெண் மணமகன் வீட்டில் நிம்மதியாகக் காலம் தள்ள முடியாது
என்கிற அச்சத்தின் காரணமாகவே அதைத் தருகின்றனர்.
அதை சொல்லிக் காட்டி, காலமெல்லாம் தன் மகளின்
உள்ளத்தை நோகடிப்பதற்குப் பதில் கடனோ, வட்டியோ வாங்கி கொடுத்து விடுவோம் என்பதே
பெண்களைப் பெற்ற,
பெரும்பாலான பெற்றோரின் எண்ணமாக இருக்கிறது.
எனவே, ரமழானின்
பெயரால் ஆண்டாண்டு காலமாக நடைபெறும் இந்த அநாச்சாரத்தை, தீய நடைமுறையை
விட்டொழிப்போம்.
நாமும் பாவம்
செய்து, பிறரையும் பாவம் செய்யத் தூண்டுகிற, பாவத்தில் தள்ளுகிற ”சீர் கொடுக்கும்,
சீர் வாங்கும்” இந்த தீய நடைமுறைக்கு இந்த ரமழானோடு விடை கொடுப்போம்.
3. நோன்பை காரணமின்றி விடுவதை தவிர்ப்போம்...
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு
நோற்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا
كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183 شَهْرُ
رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ
الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ
كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ
بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ
وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (185)
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது
நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்;ளது (அதன்
மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு
(முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை -
தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில்
எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும்
எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின்
நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு
சிரமமானதை அவன் நாடவில்;லை குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப்
போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின்
மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம்
நாடுகிறான்) (2:185)
நோன்பு
கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப் பட்டிருந்தது.
நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால்
நோன்பை விட்டுவிட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பதுதான் அந்த சலுகை.
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள்கூட நோன்புக்கு பகரமாக
ஏழைக்கு உணவளித்து வந்தனர். பின்னர், ''யார்
ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்"" என்ற
வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டுவிட்டது. சக்தியுள்ளவர்கள்
கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத்தான்
இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம்
சக்தியுள்ளவர்களைப் பொருத்தவரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொருத்தவரை
மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்!.
1.தற்காலிக
சலுகை அளிக்கப்பட்டவர்கள்
1.பயணிகள்
أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى
سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ
طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا
خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (184)
(இவ்வாறு விதிக்கப் பெற்ற
நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும்
நோயாளியாகவோ, அல்லது
பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும்
நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான
நோய், முதுமை
போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக
- ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும்
எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள்
(நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை
உணர்வீர்கள்). (2:184)
1. நான் பயணத்தில் நோன்பு
நோற்கலாமா? என்று
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரலி) கேட்டார், அதற்கு
நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை
விட்டுவிடு என விடையளித்தார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. பயணத்தின் போதும் நோன்பு
நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என் நான்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அது
அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயண்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே, யார்
நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை, என்றார்கள்.
- ஹம்ஸா பின் அம்ரு (ரலி) : முஸ்லிம்
3. நபி(ஸல்) அவர்கள் மக்கா
வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்ப நோற்றவர்களாக போருக்கு
ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டு விட்டார்கள்.
பின்னர் அம்மாதம் (ரமலான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள். - இப்னு
அப்பாஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
2,3 கர்ப்பிணிகளும், பாலூட்டும்
அன்னையரும்
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும்
நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள் அனஸ்பின்
மலிக்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா
2.தடுக்கப்பட்டவர்கள்:
1.மாதவிடாய்
ஏற்பட்ட பெண்கள்
1.நாங்கள் நபிகள்
நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம்.
அப்போது விடுபட்டிருந்த நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக்
கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைச் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.
- ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
2.ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்
ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான்
மார்க்கத்தில் அவளுக்(பெண்ணுக்)குள்ள குறைபாடாகும் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். - அபூ ஸயீத்(ரலி) : புகாரி
3.நிரந்தர
சலுகை அளிக்கப்பட்டவர்கள்:
1,2 தள்ளாத
வயதினர் மற்றும் நோயாளிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற
நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும்
நோயாளியாகவோ, அல்லது
பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும்
நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்
(கடுமையான நோய், முதுமை போன்ற
காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக -
ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும்
எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள்
(நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை
உணர்வீர்கள்). (2:184)
மேற்கூறப்பட்ட மூன்று வகையினர் மட்டுமே நோன்பை விடுவதற்கும்,
ஃபித்யா கொடுப்பதற்கும் ஷரீஅத்தால் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
فعن أبي أمامة رضي الله عنه
أن النبي صلى الله عليه وسلم قال
بينا أنا نائم
أتاني رجلان، فأخذا بضبعي فأتيا بي جبلا وعرا، فقالا: اصعد. فقلت: إني لا أطيقه.
فقال: إنا سنسهله لك. فصعدت حتى إذا كنت في سواء الجبل إذا بأصوات شديدة. قلت: ما
هذه الأصوات؟ قالوا: هذا عواء أهل النار، ثم انطلق بي فإذا أنا بقوم معلقين
بعراقيبهم، مشققة أشداقهم، تسيل أشداقهم دماً. قال: قلت: من هؤلاء؟ قال: الذين
يفطرون قبل تحلة صومهم..... صححه الحاكم والذهبي، وقال الهيثمي: رجاله رجال الصحيح،
தக்க காரணமின்றி ரமழானில் நோன்பு பிடிக்காமலிருப்பது, அல்லது இடையில் விடுவது ஹராமான பெரும்பவாங்களில்
ஒன்றாகும். அவ்வாறு நோன்பை விட்டு விட்டு பாவமன்னிப்புக் கோராவிடின் ஆயுள்
முழுதும் நோன்பு நோற்றாலும் ஈடாகமாட்டாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «அல்லாஹ் வழங்கிய சலுகைக்காகவன்றி யார் ரமழானில் நோன்பை
விடுகின்றரோ அதற்காக அவர் காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் ஈடாக மாட்டாது».(ஆதாரம் அபூதாவுத்)
இவ்வாறு நோன்பு விடுதற்கான தண்டனை விபரீதமானது. நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத்
தான் கேட்டதாக அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : “நான் தூங்கிக் கொண்டிகுக்கும் போது கனவில் இருவர்
என்னிடம் வந்து எனது
தோள்புயத்தைப் (சந்துப் பகுதி – முழங்கையிலிருந்து கக்கம் வரையிலுள்ள
பகுதி..) பிடித்து என்னை கரடுமுரடான ஒரு மலைக்குக் கொண்டு சென்று
அதில் ஏறுமாறு என்னிடம் கூறினார்கள். நான் “என்னால் முடியாது” என்றேன். அதற்கு அவ்விருவரும் “நாம் உமக்கு இலகுவாக்கித் தருகின்றோம் (ஏறுங்கள்)
என்றார்கள்”. நான் ஏறி, உச்சியை அடைந்ததும் பாரிய சத்தங்களைக் கேட்டேன். “இது என்ன சத்தம்?” என வினவிய போது “இது நரகவாதிகள் ஊளையிடும் (அலறல் சத்தம்.) சத்தம்” எனக் கூறினர். பின்பு என்னை அழைத்துச் செல்லப் பட்டது, அங்கு கணுக்கால்களில் (கரண்டைக் காலோடு இருக்கும் எலும்பு) விலங்கிடப்பட்ட, தாடைகள் (வாயினை நெருங்கியுள்ள பகுதிகள்) கிழிக்கப்பட்டு இரத்தம் வழியும் நிலையில் ஒரு
கூட்டத்திற்கு அருகாமையில் இருந்தேன். “இவர்கள் யார்?” என்று கேட்க, “இவர்கள்தான் நோன்பு திறக்கும் நேரம் வரமுன் நோன்பை(அவர்களுடைய நோன்பு பூரணமாகுவதற்கு முன்னால் நோன்பை
திறந்தார்கள்)விட்டவர்கள்” என்றார்கள். (ஆதாரம் இப்னு ஹிப்பான்)
எனவே, பாக்கியம் நிறைந்த ரமழானை பாழாக்கிடும் எந்த
காரியத்திலும் ஈடுபடாமல் பாதுகாப்போம்!
மாஷா அல்லாஹ் நிறைவான பதிவு
ReplyDeleteMashallah
ReplyDeleteபயன் perakkudiya arumayana கட்டுரை
ReplyDeleteAl hamthu illaah
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteAlhamdhilillah
ReplyDeleteஅருமையான உணர்வூட்டும் பதிவு ஹஜ்ரத். جزاكم الله خيرا حضرت
ReplyDeleteMashallah
ReplyDelete