தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 20.
ஆதலால்... மன்னிப்போம்!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
19 –வது நோன்பை நோற்று, 20 – வது தராவீஹை
நிறைவு செய்து,
20 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஹாமீம் அஸ் ஸஜ்தா, அஷ் ஷூரா, அஸ் ஸுஃக்ருஃப், அத் துஃகான், அல் ஜாஸியா
ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு 294 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது. இன்றைய தராவீஹ் தொழுகையோடு அல்குர்ஆனின் 25 ஜுஸ்வுகள், 45
அத்தியாயங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!.
இன்று தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட ஹாமீம் அஸ் ஸஜ்தா அத்தியாயத்தின் 40 – ம் வசனத்தில் அல்லாஹ் மன்னிக்கும் குணம் குறித்தும், அதற்கு கிடைக்கும்
நற்பலன் குறித்தும் பேசுகின்றான்.
وَجَزَاءُ
سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى
اللَّـهِ ۚ ( الشورى 40)
இன்னும்
தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி
அல்லாஹ்விடம் இருக்கிறது –
நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
நம்மில் இரு ரகமான மனிதர்கள் இருக்கின்றோம். ஒரு ரகம்...
இனி
ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”, “செத்தாலும் சரி, அவள் முகத்தில் முழிக்க மாட்டேன்.”, “அவர்கள்
செய்திருக்கிற காரியத்திற்கு நான் செத்தாலும் மன்னிக்க மாட்டேன்.”
சொல்லிடு அவன்ட்ட
நான் செத்தால் என் ஜனாஸாவிற்கு அவன் வரக் கூடாது. அவன் செத்தால் நானும் அவன்
ஜனாஸாவுக்கு போக மாட்டேன்.
நம்மில் பலரும்
கேட்கிற,
சொல்லிய, சொல்கிற பலப் பிரயோக
வார்த்தைகள் இவை.
சில போது
பெற்றெடுத்த தாய் தந்தையரோடு, சில போது தாய் தந்தையின்
உடன் பிறப்புகளோடு,
சில போது உடன் பிறந்த ரத்த உறவுகளோடு, சில போது மனைவி மக்களோடு, அண்டை அயலரோடு, குடும்ப உறவுகளோடு,
நட்போடு நாம் பரிமாறுகிற வார்த்தைகள் இவை.
இன்னொரு ரகம்...நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன்
; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.” என்று சிலர்.
இந்த இரண்டு ரக மனிதர்களிலும் படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், ஆலிம் சாமானியர், ஹாஜி தொழுகையாளி, என எவ்வித பாகுபாடும் கிடையாது.
சக மனிதர்களுடனான
வாழ்வில் ஏற்படும் மனக் கசப்புகளின் போதும், புரிந்து கொள்ளாமல் நடைபெறும்
சம்பவங்களின் போதும்,
கொடுக்கல் வாங்கலின் போதும், வாக்குறுதிகள் பொய்த்துப் போகும் போதும், நம்பிக்கைகள்
சிதைக்கப்படுகிற போதும்,
கவனக் குறைவாக ஏற்படும் சிற்சில தவறுகளின் போதும் நாம்
பாதிக்கப்பட்டதாக உணரும் போது நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் இவை.
உண்மையில் நாம்
மனிதனாக நடந்து கொள்கிறோமா?
ஒரு உண்மை முஃமினாக நாம் நடந்து கொள்கிறோமா? என்பதை அறிவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
மனிதன் என்றாலே
தவறு செய்பவன் தான். இயல்பாகவே அவன் பல்வேறு குறைபாடுகளோடே படைக்கப்பட்டுள்ளான் என
இஸ்லாம் கூறுகின்றது.
எனவே, அந்த தவறும் குறைபாடும் நம்மிடமும் இருக்கிறது. நாமும் பிறர் விஷயத்தில்
தவறிழைத்து விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, சக மனிதர்கள் செய்கிற
தவறுகளை நாம் மன்னிக்க,
மறக்க பழகிக் கொள்ள வேண்டும். நாம் சறுகிடும் போது நம்மை
பிறர் மன்னிக்க வேண்டும் அத்தோடு அவர் அதை மறக்க வேண்டும் என நாம் ஆசைப்படத்தானே
செய்கிறோம் என்பதை நாம் முதலில் மனதின் ஆழத்தில் பதிந்திட வேண்டும்.
சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது நான்கு வழிப் பாதைகளை கொண்ட வார்த்தை என இஸ்லாம் வகுக்கிறது.
நாம் செய்த
தவறுகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவது ஒரு வழி. நாம் பிறருக்கு செய்த
தவறுகளுக்காக பிறரிடம் மன்னிப்புக் கோருவது ஒரு வழி. பிறர் செய்த தவறுகளை நாமே
பெருந்தன்மையாக மன்னிப்பது ஒரு வழி. பிறர் தாம் செய்த தவறுகளுக்காக நம்மிடம்
மன்னிப்பு கோரினால் மன்னிப்பது ஒரு வழி.
இந்த நான்கு
வழிகளுமே இறுதியில் சென்று சேர்கிற\சேர்க்கிற இடம் சொர்க்கம் தான்.
இனி நாம் தான்
முடிவெடுக்க வேண்டும் சொர்க்கத்தின் பாதையில் பயணிப்பதா? இல்லை..?
வேண்டாம்! எதிர்
மறையான சிந்தனை வேண்டாம்!
நாம் சொர்கத்தின்
பாதையில் பயணிப்பதையே தேர்ந்தெடுப்போம்.
இன்ஷா அல்லாஹ்.. சொல்லுங்க!!
மன்னிப்பை மனைவி, மக்களிடம் இருந்து துவங்கச் சொல்கிறது குர்ஆன்.
يٰۤاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ
فَاحْذَرُوْهُمْۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ
غَفُوْرٌ رَّحِيْمٌ
ஈமான்
கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியாிலும், உங்கள் மக்களிலும்
உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி
நீங்கள் எச்சாிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின்
குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப்
பொருட்படுத்தாமலும்,
சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் – நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)
மன்னிப்பை நம்மோடு இயங்குகிற, நம் ஏற்றத்திற்கு உதவுகிற, நம் உயர்வை விரும்புகிற நம் பணியாளர்களிடம் தொடரச் சொல்கிறது நபிமொழி.
عَنْ
عَبْدِاللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ:
يَارَسُوْلَ اللهِﷺ كَمْ اَعْفُوْ عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ عَنْهُ النَّبِيُّ ﷺ
ثُمَّ قَالَ: يَارَسُوْلَ اللهَﷺ كَمْ اَعْفُوَ عَنِ الْخَادِمِ؟ قَالَ: كُلَّ
يَوْمٍ سَبْعِيْنَ مَرَّةً.
ஹஜ்ரத்
அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் நபி {ஸல்} அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே!, நான் (என்னுடைய) பணியாளரின் தவறை எத்தனை தடவை மன்னிப்பது?” என வினவினார்,
நபி {ஸல்} அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் மீண்டும்
அவ்வாறே,
அல்லாஹ்வின் தூதரே!,, நான் (எனது)
பணியாளரின் தவறை எத்தனை முறை மன்னிப்பது?” எனக் கேட்க, தினமும் எழுபது முறை”
என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். [திர்மிதீ, அபூதாவூத் 5164]
சக மனிதர்களின் குறைகளை மன்னிக்கத் தூண்டுகிறது நபிமொழி.
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَقَالَ مُسْلِمًا عَثْرَتَهُ اَقَالَهُ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ.
எவர், ஒரு முஸ்லிமுடைய குறைகளை மன்னித்துவிடுகிறாரோ, அவருடைய குறைகளை கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா மன்னித்து விடுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். (இப்னு ஹிப்பான்)
மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்கக் கூடாது என வலியுறுத்துகிறது, எச்சரிக்கிறது.
عَنْ جَوْدَانَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنِ اعْتَذَرَ اِلَي اَخِيْهِ بِمَعْذِرَةٍ فَلَمْ يَقْبَلْهَا، كَانَ عَلَيْهِ مِثْلُ خَطِيْئَةِ صَاحِبِ مَكْسٍ.
ஜவ்தான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "யாரேனும் ஒரு மனிதர் தன் சக முஸ்லிம் சகோதரரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க, இவர் அவரை மன்னிக்கவில்லையென்றால், அநியாயமாக வரி வசூலிப்பவருக்குரிய பாவம் இவருக்குக் கிடைக்கும்” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா )
حَدَّثَنِي
هِشَامُ بْنُ عَمَّارٍ ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ ، حَدَّثَنَا زَيْدُ
بْنُ وَاقِدٍ عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عَائِذِ اللهِ أَبِي إِدْرِيسَ
، عَنْ أَبِي الدَّرْدَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
كُنْتُ
جَالِسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَ أَبُو بَكْرٍ آخِذًا
بِطَرَفِ ثَوْبِهِ حَتَّى أَبْدَى عَنْ رُكْبَتِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله
عليه وسلم أَمَّا صَاحِبُكُمْ فَقَدْ غَامَرَ فَسَلَّمَ وَقَالَ إِنِّي كَانَ
بَيْنِي وَبَيْنَ ابْنِ الْخَطَّابِ شَيْءٌ فَأَسْرَعْتُ إِلَيْهِ ثُمَّ نَدِمْتُ
فَسَأَلْتُهُ أَنْ يَغْفِرَ لِي فَأَبَى عَلَيَّ فَأَقْبَلْتُ إِلَيْكَ فَقَالَ
يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ ثَلاَثًا ثُمَّ إِنَّ عُمَرَ نَدِمَ
فَأَتَى مَنْزِلَ أَبِي بَكْرٍ فَسَأَلَ أَثَمَّ أَبُو بَكْرٍ فَقَالُوا لاَ
فَأَتَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمَ فَجَعَلَ وَجْهُ
النَّبِيِّ صلى الله عليه وسلم يَتَمَعَّرُ حَتَّى أَشْفَقَ أَبُو بَكْرٍ فَجَثَا
عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللهِ وَاللَّهِ أَنَا كُنْتُ أَظْلَمَ
مَرَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ بَعَثَنِي
إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ وَوَاسَانِي بِنَفْسِهِ
وَمَالِهِ فَهَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي مَرَّتَيْنِ فَمَا أُوذِيَ
بَعْدَهَا
அபுத்தர்தா (ரலி)
அறிவிக்கின்றார்கள்: "அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம்
கூறிவிட்டு,
“அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும்
இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு
(என் செய்கைக்காக) நான் வருந்தி அவரி டம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர்
என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை
கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் – ரலி –
அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி
அபூபக்ர் (ரலி) அவர்கன் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர்
(ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்க, அவர்களின் வீட்டார்,
“இல்லை” என்று பதிலத்தார்கள்.
ஆகவே, அவர்கள் நபி {ஸல்} அவர்க டம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாற லாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள்
பயந்துபோய் தம் முழங்காலின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை
தொடங்கியதால் உமரைவிட) அதிகம் அநீதி இழைத்தவனாகி விட்டேன்.” என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர்’ என்று நீங்கள் கூறினீர்கள்.
அபூபக்ர் அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும்
அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக
நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?” என்று இருமுறை
சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக் குள்ளாக்கப்படவில்லை.
( நூல் : புகாரி )
قال ابن إسحاق: “ولما قدم رسول الله صلى الله عليه وسلم من منصرفه عن
الطائف.
كتب بجير بن زهير بن أبي سلمی إلى أخيه كعب بن زهير يخبره أن رسول الله
صلى الله عليه وسلم قـ.ـتل رجلا بمكة، ممن كان يهجوه ويؤذيه.
وأن من بقي من شعراء قريش، ابن الزبعرى وهبيرة بن أبي وهب قد هربوا من
كل وجه، فإن كانت لك في نفسك حاجة فطر إلى الرسول صلى الله عليه وسلم.
فإنه لا يقـ.ـتل أحدا جاءه تائبا، وإن أنت لم تفعل فانج إلى نجاتك من
الأرض.
ثم قال ابن إسحاق: فلما بلغ كعتا الكتاب ضاقت به
الأرض، وأشفق على نفسه، وأرجف به من كان في حاضره من عدوه.
فقالوا: هو مقتـ.ـول، فلما لم يجد من شيء بذا، قال قصيدته التي يمدح
فيها رسول الله صل الله عليه وسلم.
وذكر فيها خـ.ـوفه وإرجاف الوشاة به من عدوه، ثم خرج حتى قدم المدينة
فصلى مع رسول الله صل الله عليه وسلم۔
فذكر لي أنه قام إلى السول الله، حتى جلس إليه فوضع يده في يده وكان
رسول الله لا يعرفه.
فقال: يا رسول الله إن كعب بن زهير قد جاء ليستأمن منك تائبا مسلفا،
فهل أنت قابل منه إن أنا جئتك به؟
قال رسول الله: نعم، قال: أنا يا رسول الله، كعب بن
زهير
قال ابن إسحاق: فحدثني عاصم بن عمر بن قتادة: أنه وثب عليه رجل من
الأنصار، فقال: يا رسول الله، دعني وعدو الله أضرب عنقه.
فقال: رسول الله: دعه عنك، فإنه قد جاء تائبا نازعا عما كان عليه
فأقبل به عليه وآمن وأنشد قصيدته المشهورة (بانت سعاد)، فعفا عنه النبي، وخلع عليه
بردته فسميت قصيدته ب (البردة)
கஅப் இப்னு சுஹைர்
இவர் ஒரு பரம்பரை கவிஞர். நபிகளார் மீது இட்டு கட்டி கவிதை புனைந்து அவதூறு
பரப்பிக் கொண்டிருந்தவர். இவரது சகோதரர் புஜைர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராய்
இருந்தார்.
எனவே கஅபிற்கு, புஜைர் சகோதர வாஞ்சையுடன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘கஅபே,
துர் கவிதைகளாலும், அதனை பரப்புவதாலும் உன்
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தன்னிடம் மன்னிப்புக்கேட்கும் எவரையும் நபிகளார்
தண்டிப்பது இல்லை. எனவே,
தூய இதயத்தோடு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபிகளாரை கண்டு
மன்னிப்புக்கேள். நீ மன்னிக்கப்படுவாய்’ என்று அவர் குறிப்பிட்டு
இருந்தார்.
கடிதம் கண்டவுடன் பதறிப்போன கஅப் மதீனா விரைந்தார். ஒரு
தொழுகைக்கு பின் நபிகளாரை சந்தித்தார். அப்போது அவர் தன்னை கஅப் என்று நபிகளாரிடம்
காட்டிக் கொள்ளவில்லை.
அவர் ஒரு மூன்றாம்
மனிதர் போல பேச்சை தொடங்கினார். ‘அல்லாஹ்வின் தூதரே, கஅப் மனம் வருந்தியவராக உங்களிடம் வந்து ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்க
விரும்புகிறார். அவரை நான் உங்களிடம் அழைத்து வந்தால் நீங்கள் கஅபை ஏற்றுக்
கொள்வீர்களா?’
என்றார்.
அண்ணலார் ‘ஆம்’
என்று சொன்னது தான் தாமதம், ‘அல்லாஹ்வின் தூதரே,
நான் தான் அந்த கஅப்’ என்று நபிகளாரின் கரம்
பற்றிக் கொண்டு கூறினார்.
அருகிலிருந்த நபித்தோழர்கள் கஅபை தண்டிக்க விரைந்தனர். அதனை
தடுத்த நபிகளார்,
‘கஅபை விட்டு விடுங்கள், அவரை நான் மன்னித்து
விட்டேன். அவர் முன்பு இருந்த கஅப் அல்ல இப்போது’ என்றார்கள்.
மன்னிப்பின்
மகத்துவத்தையும் அதன் உயர்வையும் உணர்ந்து கொண்ட கஅப் மகிழ்ச்சி பொங்க, மன்னிப்பின் மாண்பை மையமாக கொண்டு கவிதை பாடினார். அதன் பரிசாக போர்வையைப்
போர்த்தி கஅப் (ரலி) அவர்களைக் கவுரவித்தார்கள்.
மன்னிப்புக் கேட்க மறக்கக் கூடாது எனவும் இஸ்லாம் தூண்டுகிறது....
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ
، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ
عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
مَنْ
كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ ، أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ
مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ ، وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ
لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ
حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ
அபூஹுரைரா (ரலி)
அறிவிக்கின்றார்கள்: " ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது
மானத்திலோ,
வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ
இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப் படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ,
வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை
நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட் டும்.)
(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு
அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு
வைக்கப்பட்டு) விடும். அநீதி யிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால்
அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து)
எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்" என்று நபி ஸல்
அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
மன்னிப்பு கடந்த
காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். பல்வேறு சோபனங்களின் சோலைவனமாய்
மாற்றிவிடும். இதோ! இஸ்லாம் கூறும் சோபனங்கள்...
மன்னிப்பது சுவனத்துக்கான பாதை...
وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن
رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ
لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء وَالضَّرَّاء
وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ
الْمُحْسِنِينَ ( آل عمران 134)
இன்னும் நீங்கள்
உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் சுவனபதியின் பக்கமும் விரைந்து
செல்லுங்கள்;.
அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள் பூமியைப் போலுள்ளது. அது
பயபக்தியூடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்பமான
(செல்வம்) நிலையிலும் துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்)
செலவிடுவார்கள்;.
தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யூம்
பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ்
நேசிக்கின்றான்.
மன்னிப்பவர்களுக்கு அல்லாஹ்வே நற்கூலி வழங்குகின்றான்..
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ
فَأَجْرُهُ عَلَى اللَّـهِ ۚ ( الشورى 40)
இன்னும்
தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி
அல்லாஹ்விடம் இருக்கிறது –
நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
மன்னிப்பது மகத்தான பண்பு...
وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ
﴿٤٣﴾
ஆனால் எவரேனும்
(பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக அது மிக்க
உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
மனிதர்களை மன்னித்தால் அல்லாஹ் எம்மை மன்னிப்பான்
وَلْيَعْفُوا
وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّـهُ لَكُمْ ۗوَاللَّـهُ غَفُورٌ
رَّحِيمٌ ﴿٢٢﴾ النور 22
அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவூம்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
إِن تُبْدُوا خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا عَن سُوءٍ فَإِنَّ اللَّـهَ كَانَ عَفُوًّا قَدِيرًا ﴿١٤٩﴾النساء
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை
மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும்
(அது உங்களுக்கு மிகவும் நல்லது) – ஏனெனில் அல்லாஹ்
நிச்சயமாக மன்னிப்பவனாகவும் பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்வின் அன்பு கிடைக்கும்...
فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
}المائدة 13
எனவே நீர் அவர்களை
மன்னித்து புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
கண்ணியம் கிடைக்கும்...
” وما زاد الله عبدا بعفو إلا عزا ، وما تواضع أحد لله إلا رفعه الله ”
رواه مسلم
மன்னிக்கும் அடியார்களின்
கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கின்றான். யார் அல்லாஹ்வுக்காக பணிவாக நடந்துகொள்கின்றாரோ
அல்லாஹ் அவரது அந்தஸ்தை உயர்த்துகின்றான்.
வியப்பூட்டும் ஆராய்ச்சி முடிவுகள்...
மன்னிக்கும் பழக்கமுடைய
மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி
முடிவுகள். 'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை
விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும்
மனிதர்கள் உடலிலும்,
உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.
ஸ்டான்போர்ட் பல்கலைக்
கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்'
(மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும்,
அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.
மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும்
வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக
ஆய்வுக் கட்டுரைகள். மேலும்,
மன்னிக்கும்
மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது.
ஆதலால் மன்னிப்போம்!! மகத்தான சோபனங்களைப் பெற்று மகிழ்வுடன்
வாழ்வோம்!!!
No comments:
Post a Comment