தராவீஹ் சிந்தனை:- 10. உங்களில் சிறந்தவர்
தொடர்:- 9.
முதலில் ஸலாம் கூறுபவரே சிறந்தவர்!!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் உடைய மகத்தான கருணையால் ஒன்பதாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, பத்தாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம்.
பெருமானார் {ஸல்}
அவர்கள் பல சந்தர்ப்பங்களில் “ஃகியாருக்கும்,
ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் (
மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு
சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.
அப்படி பெருமானார்
(ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம்
தொடராகப் பேசியும் கேட்டும் வருகின்றோம்.
ஒன்பதாவதாக இன்றைய
அமர்வில் முந்தி ஸலாம் சொல்பவரே உங்களில் சிறந்தவர் என்ற நபிமொழி
குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.
وهو ما أخرجه البخاري في "صحيحه" (6077) ، ومسلم في "صحيحه" (2560) ، من حديث أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ ، يَلْتَقِيَانِ: فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا ، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ .
அபூஅய்யூப் அல் – அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘ஒருவர் தன் சகோதரனை
மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக் கொள்ளக் கூடாது. இருவரும் சந்திக்கும் போது
ஒருவரை ஒருவர் புறக்கணித்துச் செல்லக் கூடாது. அவ்விருவரில் யார் முதலில் ஸலாம்
சொல்கிறாரோ அவரே சிறந்தவர்’
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
أخرجه أحمد في "المسند" (22192) ، وأبو داود في "سننه" (5197) ، والترمذي في "سننه" (2694) ، من حديث أبي أمامة رضي الله عنه ، قال : إنَّ أولى النَّاسِ بالله مَنْ بَدَأهُمْ بِالسَّلام
.
وفي لقظ : مَنْ بَدَأَ بِالسَّلَامِ فَهُوَ أَوْلَى بِاللهِ وَرَسُولِهِ
.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதல்
ஸலாம் கூறுபவரே ஆவார்”
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : அபூதாவூத் (4522)
وفي لفظ
: " قِيلَ يَا رَسُولَ اللهِ الرَّجُلاَنِ يَلْتَقِيَانِ أَيُّهُمَا يَبْدَأُ
بِالسَّلاَمِ؟ فَقَالَ: أَوْلاَهُمَا بِاللَّهِ
" .
وإسناده
حسن ، وحسن إسناده النووي في "روضة الطالبين" (10/234) ، وابن الملقن في
"تحفة المحتاج" (1624) ، وصححه الشيخ الألباني في "السلسلة
الصحيحة" (3382) .
”இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால்
அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ”அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)” என நபி(ஸல்) பதில் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்
858
ஆகவே
முந்திக்கொண்டு ஸலாம் சொல்ல ஆசைப்பட வேண்டும்.
அல்லாஹ் விரும்பும் ஸலாம்!
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا
إِنَاءٌ فِيهِ إِدَامٌ، أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ
فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا وَمِنِّي وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي
الجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ، وَلاَ نَصَبَ
(ஒரு முறை) நபி(ஸல்)
அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு
பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக்
கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
அவர்
உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என்
தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக
நற்செய்தி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா
(ரலி), நூல் : புகாரி-3820
வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் ஸலாம்!
وفي
الصحيحين:- عن عائشة رضي الله عنها قالت: (قال لي رسول الله صلى الله عليه وسلم:-
هذا جبريل يقرأ عليك السلام – أي: يسلم عليك – قالت: قلت: وعليه السلام ورحمة الله
وبركاته، وقالت: ترى ما لا نراه) أي: أنك ترى الذي لا أراه
وهو جبريل عليه السلام.
ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) என்னிடம்,“(இதோ வானவர்)
ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்மத்
துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும்
இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர்
அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நபி (ஸல்) அவர்களின்
துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு நாள் என்னிடம்)“ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று
சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம்
வரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும்
இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்)
சொன்னேன். நான்
பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )
நபி (ஸல்) அவர்கள் முந்தி ஸலாம் சொல்லும் பழக்கம்
உடையவர்களாக
جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم
فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ
عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ
يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ
فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ
يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ
اللَّهِ: قَدْ
سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ سَلَامِكَ، فَقَالَ
لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟»
قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ،
ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ
حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ
فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو
الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا الْهَيْثَمِ، فَقَالَ: يَا
رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ،
ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ،
ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ
أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا
فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ بَيْنَ أَيْدِيهِمْ
فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو الْهَيْثَمِ
بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى الله عليه
وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ لَنَا فَقَالَ:
«أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ
عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:“ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன்
நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும்
வருகை தந்திருக்கின்றார்கள்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள்“அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும்
வரவைத்தது” என்று பதில் கூறினார்கள்.
சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள்
“அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்” என்று கூறினார்கள்.
கொஞ்ச நேரம் அண்ணலார் {ஸல்} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலி –அன்ஹுமா)
ஆகியோரோடு உரையாடி விட்டு “தோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!” என்று கூறினார்கள்.
நபி {ஸல்} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள்,
அபூபக்ர் மற்றும் உமர் (ரலி - அன்ஹுமா) இருவரையும்
முந்திக்கொண்டு ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை .
இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி{ஸல்} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது,“வஅலைக்குமுஸ்ஸலாம்… யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்கள் குரல் கொடுத்தார்கள்.உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா?
தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம்நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது
தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.
நபி {ஸல்} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வின வினார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்” உம்மு ஸஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே
மரத்தின் நிழலில் மாநபி {ஸல்} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வர வேற்றார்கள்.
உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டு “அல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது” என்றுகூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.
மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி)
அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்கள்.நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ஸல்}
அவர்கள் “இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்” இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!
சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.
மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள்.
சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ஸல்}
அவர்களின் முன் கொண்டுவைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.
கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால்முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!
எங்களுக்காக துஆ செய்யுங்கள்!” என்று கூறினார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில்
நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்! ஆகையால், இறைவன் தன்
வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ!
வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்”என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
பிள்ளைகளை
பெற்றோர் காணும்போதும்
எழுந்து நின்று ஸலாம் கூறி வரவேற்கவும் வேண்டும். இதுசுன்னத்தான
ஒரு நற்பண்பாகும்.
كانت إذا دخلت عليه
قام إليها فأخذ بيدها فقبلها وأجلسها في مجلسه، وكان إذا
دخل عليها قامت إليه
فأخذت بيده فقبلته وأجلسته في مجلسها
ஆயிஷா ரலி அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:-நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
ஃபாத்திமா ரலிஅவர்கள் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எழுந்து அவர்களின்
கரத்தைப் பற்றி,அவர்களுக்கு அன்பு முத்தம் கொடுத்து தன்
சபையில் அவர்களை அமர்த்திவைப்பார்கள். ஃபாத்திமாரலி அன்ஹா அவர்களிடம் நபிகள் நாயகம்வந்தால் (தந்தையின்) திருக்கரத்தைப் பற்றி தந்தைக்கு
அன்பு முத்தம் சொரிந்து தன் சபையில் (மகள்) ஃபாத்திமா (ரலி)அமரச்செய்வார்கள்.. ( நூல்: அபூதாவூத், திர்மிதி, நஸாயீ )
வீட்டில் நுழைந்ததும் முதலில் ஸலாம் சொல்வோம்!
عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ:
ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ
مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ
ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي
اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ.
رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢
மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால்
அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில்
புறப்பட்டவர்”
என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான் )
No comments:
Post a Comment