தராவீஹ் சிந்தனை: 19. சிறந்த அமல் & சிறந்த காரியம்
தொடர்:- 9.
நஜ்ஜாஷி (ரஹ்) அவர்களும்,
உவைஸுல் கர்னீ (ரஹ்) அவர்களும்...
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 18 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு,
19 -ம் நாள் தராவீஹ்
தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக்
கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள் குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.
அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில்
"தாபியீன்களில் சிறந்த மனிதர் யார்?"
என்ற கேள்விக்கு
நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.
பெருமானார் (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திய, கண்ணியம் செய்த மனிதர்களில், அதுவும் நபி ஸல் அவர்கள் வாழும்
காலத்தில் வாழ்ந்து, நபி ஸல் அவர்களை ஈமான் கொண்டு, நபி ஸல் அவர்களைப் பார்க்கும் பாக்கியத்தை இழந்த இரண்டு மனிதர்களை இந்த
உம்மத்திற்கு அடையாளம் காட்டினார்கள்.
ஒருவர் அபீசீனியாவின் நஜ்ஜாஷி மன்னர், இன்னொருவர் உவைஸுல் கர்னீ (ரஹ்) ஆகியோர் ஆவார்கள்.
عُمرُ
بنُ الخطَّابِ رضِيَ اللهُ عنه عن النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ أنَّه قال:
"إنَّ خيرَ التَّابعينَ رجُلٌ يُقالُ له: أُويسٌ"، وهو أُويسُ بنُ عامرٍ
القَرَنيُّ، فمُروه فلْيَسْتَغْفِرْ لكم
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராவார்கள். அவர்களைக் கண்டால்
அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக்கொள்ளுங்கள். ( நூல்: முஸ்லிம்,
மிஷ்காத் 582 ) நீண்ட
ஹதீஸின் சிறு பகுதியாகும்,
صحيح
مسلم - (7 / 189) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِىُّ
وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ - قَالَ إِسْحَاقُ
أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى -
حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِى أَبِى عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ
بْنِ أَوْفَى عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ
إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ سَأَلَهُمْ أَفِيكُمْ أُوَيْسُ
بْنُ عَامِرٍ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ أَنْتَ أُوَيْسُ بْنُ عَامِرٍ
قَالَ نَعَمْ . قَالَ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ قَالَ نَعَمْ.
قَالَ فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلاَّ
مَوْضِعَ دِرْهَمٍ قَالَ نَعَمْ. قَالَ لَكَ وَالِدَةٌ قَالَ نَعَمْ. قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « يَأْتِى عَلَيْكُمْ
أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ
قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ لَهُ
وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ
اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ». فَاسْتَغْفِرْ لِى.
فَاسْتَغْفَرَ لَهُ. فَقَالَ لَهُ عُمَرُ أَيْنَ تُرِيدُ قَالَ الْكُوفَةَ. قَالَ
أَلاَ أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا قَالَ أَكُونُ فِى غَبْرَاءِ النَّاسِ
أَحَبُّ إِلَىَّ. قَالَ فَلَمَّا كَانَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ حَجَّ رَجُلٌ
مِنْ أَشْرَافِهِمْ فَوَافَقَ عُمَرَ فَسَأَلَهُ عَنْ أُوَيْسٍ قَالَ تَرَكْتُهُ
رَثَّ الْبَيْتِ قَلِيلَ الْمَتَاعِ. قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله
عليه وسلم- يَقُولُ « يَأْتِى عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ
أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ
مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ
عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ».
فَأَتَى أُوَيْسًا فَقَالَ اسْتَغْفِرْ لِى. قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا
بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِى. قَالَ اسْتَغْفِرْ لِى. قَالَ أَنْتَ
أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِى. قَالَ لَقِيتَ عُمَرَ قَالَ
نَعَمْ. فَاسْتَغْفَرَ لَهُ. فَفَطِنَ لَهُ النَّاسُ فَانْطَلَقَ عَلَى وَجْهِهِ.
قَالَ أُسَيْرٌ وَكَسَوْتُهُ بُرْدَةً فَكَانَ كُلَّمَا رَآهُ إِنْسَانٌ قَالَ
مِنْ أَيْنَ لأُوَيْسٍ هَذِهِ الْبُرْدَةُ.
கலீஃபா) உமர் பின்
அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்)
இருக்கிறாரா?''
என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்)
அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி)
அவர்கள்,
"முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?'' என்று
கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி)
அவர்கள்,
"உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள்.
உமர் (ரலி)
அவர்கள்,
"உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள்,
"யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்.
அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம்
அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார்.
அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்திய
மிட்டால்,
அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். (உமரே!) அவர் உமக்காகப்
பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப்
பிரார்த்திக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்)
அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித் தார்கள். பிறகு உமர்
(ரலி) அவர்கள்,
"நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு'
என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறிவிட்டார்கள்.
அடுத்த ஆண்டில்
"கரன்'
குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச்
சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம்
உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள்.
அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச்
சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்'' என்று கூறினார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் "யமன் வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்.
அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற் பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத்
தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு
உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக்
கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச்
சொல்லுங்கள் என்று கூறினார்கள்'' என்றார்கள்.
ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்'' என்றார்கள்.
"நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' என்றார். பிறகு
அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும்
உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர்.
பிறகு உவைஸ்
அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள். தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி)
அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக்
கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் "உவைஸ் அவர்களுக்கு
இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?'' என்று
கேட்பார்கள். முஸ்லிம் 4971 உசைர் பின் ஜாபிர் (ரலி)
خرج
أويس القرني مع سيدنا علي كرم الله وجهه في موقعة صفين، وتمنى الشهادة ودعا الله
قائلاً: اللهم ارزقني شهادة توجب لي الحياة والرزق. وقاتل بين يدي سيدنا علي حتى
استشهد فنظروا فإذا عليه نيف وأربعون جراحة، وكان ذلك سنة 37 هـ في وقعة صفين.
உவைஸுல் கர்னீ
(ரஹ்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுடன் ஹிஜ்ரி 37 -ல் ஸிஃப்ஃபீன்
போரிலே கலந்து கொண்டார்கள். போருக்கு செல்லும் முன்பாக ஷஹீதாக வேண்டும் என்று
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு சென்றார்கள். அவர்கள் விரும்பியது போன்றே அந்த யுத்தத்தில் 40 சொச்சம் காயங்களோடு ஷஹீதாகி இருந்தார்கள்.
حَدَّثَنَا
يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ،
عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ أَنَّهُمَا حَدَّثَاهُ: عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: نَعَى لَنَا رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَّ صَاحِبَ الحَبَشَةِ، يَوْمَ
الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ»
அபீஸீனிய மன்னர்
நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது உங்கள் சகோதரருக்காகப்
பாவமன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1327
عن
عمران بن حصين، رقم الحديث: 1039، ولفظه: «إن أخاكم النجاشي قد مات، فقوموا فصلوا
عليه، قال: فقمنا، فصففنا كما يصف على الميت، وصلينا عليه كما يصلى على الميت»
நபி ஸல் அவர்கள்
நஜ்ஜாஷி மன்னரின் மரணம் தொடர்பாக கூறும் போது “ இன்றை தினம்
அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை
நடத்துவோம்'
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள்
அணிவகுத்தோம். மற்ற ஜனாஸாவில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்பதைப்
போன்றே அணிவகுத்து நின்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை
நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) (நூல்: புகாரி 1320, 3877 )
இன்னொரு
ரிவாயத்தில்...
நபி (ஸல்) அவர்கள்
கூறும் போது “நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள்
சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான்
பின் ஹுஸைன் (ரலி)
நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561,
நஜ்ஜாஷி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
ذكر
البيهقي أيضاً عن الحاكم، عن أبي الحسن محمد بن عبد الله الفقيه - بمرو - حدثنا
حماد بن احمد، حدثنا محمد بن حميد، حدثنا سلمة بن الفضل، عن محمد بن اسحاق قال:
بعث رسول الله صلى الله عليه وسلم عمرو بن أمية الضمري إلى النجاشي في شان جعفر بن
أبي طالب وأصحابه، وكتب معه كتاباً
"بسم الله الرحمن الرحيم، من محمد رسول
الله إلى النجاشي الأصحم ملك الحبشة، سلام عليك فاني احمد إليك الله الملك القدوس
المؤمن المهيمن، واشهد أن عيسى بن مريم روح الله وكلمته ألقاها إلى مريم البتول
الطاهرة الطيبة الحصينة، فحملت بعيسى فخلقه من روحه ونفخته، كما خلق ادم بيده
ونفخه.
واني
ادعوك إلى الله وحده لا شريك له، والموالاة على طاعته، وان تتبعني فتؤمن بي وبالذي
جاءني، فاني رسول الله وقد بعثت إليك ابن عمي جعفراً، ومعه نفر من المسلمين فإذا
جاءوك فاقرهم ودع التجبر، فاني ادعوك وجنودك إلى الله عز وجل، وقد بلغت ونصحت
فاقبلوا نصيحتي، والسلام على من اتبع الهدى".
فكتب
النجاشي إلى رسول الله صلى الله عليه وسلم: بسم الله الرحمن الرحيم، إلى محمد
رسول الله من النجاشي الأصحم بن ابجر، سلام عليك يا نبي الله من الله ورحمة الله
وبركاته لا اله إلا هو الذي هداني إلى الإسلام، فقد بلغني كتابك يا رسول الله فيما
ذكرت من أمر عيسى، فورب السماء والأرض إن عيسى ما يزيد على ما ذكرت.
وقد
عرفنا ما بعثت به إلينا وقرينا ابن عمك وأصحابه، فاشهد انك رسول الله صادقاً
ومصدقاً، وقد بايعتك وبايعت ابن عمك وأسلمت على يديه لله رب العالمين.
وقد
بعثت إليك يا نبي الله باربحا بن الأصحم بن ابجر، فاني لا املك إلا نفسي، وان شئت
أن أتيك فعلت يا رسول الله فاني اشهد أن ما تقول حق".
நபி (ஸல்)
அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம்
ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக்
கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து,
ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார்.
பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின்
தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின்
புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு
யாருமில்லை.
அல்லாஹ்வின்
தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம்
பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள்
கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு
அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம்.
உங்கள் தந்தையின்
சகோதரன் மகனுக்கும்,
உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக
நீங்கள் உண்மையானவர் உண்மைப்படுத்தப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று
சாட்சி கூறுகிறேன் நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய
வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை
ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.”
ஜஅஃபர் (ரழி)
அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு
நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா ழம்யுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி
வைத்தார். அம்ர்,
அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து
சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)
தபூக் போர்
நடைபெற்ற பின் ஹிஜ்ரி 9,
ரஜப் மாதத்தில் இந்த நஜ்ஜாஷி மன்னர் இறந்தார். அவர் இறந்த
தினத்திலேயே அவன் மரணச் செய்தியை நபி (ஸல்) மக்களுக்கு அறிவித்தார்கள். அவருக்கு
ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இரண்டு மேன்மக்களையும் பொருந்திக் கொண்டு பெருமானார் {ஸல்} அவர்களின் சந்திப்பையும், அவர்களுடன் சுவனப் பிரவேசத்தையும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment