Thursday, 4 September 2025

முன் மாதிரி பேராசிரியர் பெருமானார் {ஸல்}!

 

முன் மாதிரி பேராசிரியர் பெருமானார் {ஸல்}!



 

ஆங்கிலத்தில் Interpersonal Intelligence என்றொரு வார்த்தை உண்டு.

அதன் பொருள் "பிறரை உணர்ந்து விளங்கும் நுண்ணறிவு" என்பதாகும்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் வித்தியாசமான திறமைகளை, மன மாற்றங்களை, மனநிலைகளை, உற்சாகப்படுத்தக்கூடிய வழிமுறைகளை , விருப்பங்களை, அபிலாசைகளை, நோக்கங்களை எல்லாம் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பது.

இந்த ஆற்றல் மேலோங்கி இருப்பவர்கள் மற்றவர்களில் மறைந்து கிடக்கும் ஆற்றலை அறிந்து அவர்களை இந்தப் பூமிப்பந்தின் மிகப் பெரும் மனிதர்களாக உருவாக்கிவிடுவார்கள்.

அத்தகைய மகத்தான ஆற்றல் கொண்ட பேராசிரியர் தான் நமது நபி ஸல் அவர்கள்.

நபி ஸல் அவர்கள் தமது மாணவர்களை உருவாக்கியதில் தான் மகத்தான வெற்றி அடங்கியிருந்தது என்றே கூறலாம்.

வெறுமனே அவர்களை உருவாக்கியதுடன் மட்டும் நிற்கவில்லை. 

மாறாக, உலகம் உள்ள வரை பின்பற்றத்தக்க தலைசிறந்த முன்மாதிரிகளாகவும் அவர்களை மிளிரச் செய்தார்கள். 

عن جابر قال: قال رسول الله صلى الله عليه وسلم: «أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم»

ஆகவேதான், ‘எனது தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள் என்று கூறினார்கள்’.( நூல்: தாரமி, தாரகுத்னி)

உலகில் கற்றுக் கொடுத்த, கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற எந்த ஆசிரியரால் தம்மிடம் பயின்ற ஒட்டுமொத்த மாணவர்கள் குறித்தும் இவ்வாறு கூறமுடியும்

இறைவனிடம் இருந்து 23 ஆண்டு காலம் தாம் பெற்ற திருவேதத்தை இவ்வுல மக்களுக்குக் கற்றுக்கொடுத்து வழிகாட்டவே நபியர்கள் வருகை தந்தார்கள்.

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏

அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர். ( அல்குர்ஆன் : 3:164 )

 إِنَّ اللهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا، وَلَا مُتَعَنِّتًا، وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا

அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ( நூல்: முஸ்லிம்-2946 ) 

வாழும் காலெமெல்லாம் திசை மாறாத மாணவர்....

أنَّ فَتًى شابًّا أتى النَّبيَّ - صلَّى اللَّه عليهِ وعلى آلِهِ وسلَّمَ - فقالَ : يا رسولَ اللَّهِ ، إئذَنْ لي بالزِّنا ، فأَقبلَ القومُ علَيهِ فزَجروهُ وقالوا: مَهْ. مَهْ. فقالَ: أدنُهْ ، فدَنا منهُ قريبًا. قالَ: فجَلسَ قالَ: أتحبُّهُ لأُمِّكَ ؟ قالَ: لا. واللَّهِ جعلَني اللَّهُ فداءَكَ. قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لأمَّهاتِهِم. قالَ: أفتحبُّهُ لابنتِكَ ؟ قُل: لا. واللَّهِ يا رسولَ اللَّهِ جَعلَني اللَّهُ فداءَكَ قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لبَناتِهِم. قالَ: أفتُحبُّهُ لأُخْتِكَ ؟ قُل: لا. واللَّهِ يا رسول اللَّه جعلَني اللَّهُ فداءَكَ. قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لأخواتِهِم. قالَ: أفتحبُّهُ لعمَّتِكَ ؟ قُل: لا. واللَّهِ يا رسولَ اللَّه جَعلَني اللَّهُ فداءَكَ. قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لعمَّاتِهِم. قالَ: أفتحبُّهُ لخالتِكَ ؟ قل: لا. واللَّهِ يا رسولَ اللَّهِ جَعلَني اللَّهُ فداءَكَ. قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لخالاتِهِم. قالَ: فوَضعَ يدَهُ عليهِ وقالَ: اللَّهمَّ اغفِرْ ذنبَهُ وطَهِّر قلبَهُ ، وحصِّن فَرجَهُ فلم يَكُن بعدُ ذلِكَ الفتَى يَلتَفِتُ إلى شيءٍ . .

ஒரு இளைஞர் நபி அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கேட்டார். உடனே மக்கள் கூட்டம் அவரை முன்னோக்கி வந்து, ‘‘நிறுத்து நிறுத்துஎன அவரைத் தடுத்தார்கள். நபி அவர்கள் அவரை நெருங்கி வா! என அழைக்க அவர் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டார். 

அப்போது நபியவர்கள், ‘‘இதை உன் தாய்க்கு விரும்புவாயா?’’ என்று கேட்க அவரோ, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாய்க்கு இதை விரும்ப மாட்டார்கள்என்றார்.

உன் மகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்க, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் மகள்களுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

உன் சகோதரிக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்ட போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன் மக்களும் தம் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

உன் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

உன் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, அவ்வாறு நான் விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

அப்போது நபியவர்கள் தனது கரத்தை அவர் மீது வைத்து, ‘‘இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!’’ என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். 

அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எந்த தவறின் பக்கமும் செல்ல வில்லை. ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

ஆசிரியர் மதித்தவர்களை மதித்து நடந்த மாணவர்....

இன்று கற்றுத் தந்த ஆசிரியரை மதிப்பதென்பதே கேள்விக்குறியாக உள்ளது. 

ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்வதும், ஆசிரியர்களை அவமதிப்பதும் பெருகி இருக்கும் இந்த காலத்தில் "பெருமானார் ஸல் அவர்களின் பேராசிரியப் பணியின் முன்மாதிரியில்" உருவாகிய மாணவர் ஒருவரின் பணிவையும், உயர்ந்த குணத்தையும் நாம் அவதானிக்க கடமைப் பட்டுள்ளோம்.

وفادة وائل بن حجر بن ربيعة بن وائل بن يعمر الحضرمي ابن هنيد أحد ملوك حضرموت على رسول الله .

قال أبو عمر ابن عبد البر: كان أحد أقيال حضرموت، وكان أبوه من ملوكهم، ويقال: أن رسول الله بشر أصحابه قبل قدومه به، وقال: «يأتيكم بقية أبناء الملوك».

فلما دخل رحب به وأدناه من نفسه، وقرب مجلسه، وبسط له رداءه، وقال: «اللهم بارك في وائل وولده وولد ولده».

واستعمله على الأقيال من حضرموت، وكتب معه ثلاث كتب؛ منها كتاب إلى المهاجر ابن أبي أمية، وكتاب إلى الأقيال، والعياهلة، وأقطعه أرضا، وأرسل معه معاوية ابن أبي سفيان فخرج معه راجلا فشكى إليه حر الرمضاء، فقال: «انتعل ظل الناقة».

فقال: وما يغني عني ذلك لو جعلتني ردفا.

فقال له وائل: اسكت فلست من أرادف الملوك.

ثم عاش وائل بن حجر حتى وفد على معاوية وهو أمير المؤمنين فعرفه معاوية فرحب به، وقربه وأدناه، وأذكره الحديث، وعرض عليه جائزة سنية فأبى أن يأخذها، وقال: أعطها من هو أحوج إليها مني.

وأورد الحافظ البيهقي بعض هذا، وأشار إلى أن البخاري في (التاريخ) روى في ذلك شيئا.

وقد قال الإمام أحمد: حدثنا حجاج، أنبأنا شعبة عن سماك بن حرب، عن علقمة بن وائل، عن أبيه أن رسول الله أقطعه أرضا، قال: وأرسل معي معاوية أن أعطيها إياه - أو قال: أعلمها إياه -، قال: فقال معاوية: أردفني خلفك.

فقلت: لا تكون من أرداف الملوك.

قال: فقال: أعطني نعلك.

فقلت: انتعل ظل الناقة.

قال: فلما استخلف معاوية أتيته فأقعدني معه على السرير، فذكرني الحديث - قال سماك -: فقال: وددت أني كنت حملته بين يدي.

வாஇல் இப்னு ஹுஜ்ர் யமன் தேசத்தை அடுத்த ஹள்ரமௌத் என்ற பகுதியை ஆண்ட மன்னரின் மகனாவார்.

தந்தையின் மரணத்திற்குப் பின் தம் பகுதி மக்களை வழி நடத்துகிற மகத்தான பொறுப்புக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

அவர் பொறுப்பேற்றிருந்த அந்தக் காலம் இஸ்லாம் ஏகத்துவ வசந்தத்தை அரபுலகைத் தாண்டி அனைத்து நாடுகளின் கதவுகளையும் திறந்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக மணம் வீசத் துவங்கி இருந்த காலமாகும்.

அருகில் இருக்கும் எமனுக்குள்ளும் அது நறுமணம் வீசி கமழ்ந்து கொண்டிருந்தது. அந்த வசந்தம் ஹள்ரமௌத்தையும் விட்டு வைக்கத் தவறவில்லை.

ஆம்! வாஇல் இப்னு ஹுஜ்ர் ஏகத்துவ சுகந்தத்தை நேரடியாக மாநபி {ஸல்} அவர்களிடம் இருந்து நுகர்ந்திட வேண்டும் என்கிற ஆவலில் மதீனாவை நோக்கி பயணமாகின்றார்கள்.

மதீனாவின் எல்லையை வந்தடைந்த வாஇல் இப்னு ஹுஜ்ர் மஸ்ஜிதுன் நபவீயின் முகவரியைத் தெரிந்து கொண்டு அங்கே வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தச் செய்தியை அல்லாஹ் வானவர் ஜிப்ரயீல் {அலை} அவர்களின் மூலம் பெருமானார் {ஸல்} அவர்களுக்கு தெரியப்படுத்துகின்றான்.

மஸ்ஜிதுன் நபவீயில் தோழர்களோடு அமர்ந்திருந்த நபி {ஸல்} அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் ஹள்ரமௌத் என்கிற தூர தேசத்தில் இருந்து வாஇல் இப்னு ஹுஜ்ர் என்பவர் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் தூதருக்காகவும் ஆவலோடும், ஆசையோடும் பயணித்தவராக உங்களின் முன்பாக வந்து நிற்பார். அவர் யார் தெரியுமா? அரசர்களின் வாரிசுகளில் கடைசியாக இருப்பவர் அவரே!என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில் அங்கே வாஇல் இப்னு ஹுஜ்ர் நுழைகிறார். மாநபி {ஸல்} அவர்கள் அகமகிழ்வோடும், முக மலர்ச்சியோடும் வரவேற்றார்கள். தங்களோடு நெருக்கிக் கொண்டார்கள். தங்களுக்கு அருகாமையில் தங்களின் மேல் துண்டை விரித்து அதன் மீது அமரச் சொன்னார்கள்.

வாஇல் இப்னு ஹுஜ்ரும் மாநபி {ஸல்} அவர்களுக்கு மிக அருகில் நெருக்கமாக அமர்ந்தார். ஷஹாதா கூறி முஸ்லிமாக ஆனார். சில நாட்கள் மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையில் இருந்து தீனின் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டார்.

தன் பகுதிக்கு திரும்ப செல்வதாக வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் தெரிவித்த போது யாஅல்லாஹ்! வாஇல் அவர்களுக்கும், அவரின் சந்ததிக்கும், சந்ததியின் சந்ததிக்கும் உன்னுடைய அபிவிருத்தியை வழங்குவாயாக!என்று பிரார்த்தித்து விட்டு, ஹள்ரமௌத்தினுடைய பொறுப்பு தாரியாக நியமித்து அனுப்பினார்கள்.

போகின்ற போது மதீனாவின் எல்கை வரை விட்டு வருமாறு முஆவியா (ரலி) அவர்களை நபி {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

ஒட்டகையின் மீது அமர்ந்தவாறு வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் செல்ல, அந்த ஒட்டகையின் மூக்கணாங்கயிற்றை பிடித்து நடந்தவாறு முஆவியா (ரலி) அவர்கள் செறுப்பணியாத வெறுங்காலோடு செல்கின்றார்கள்.

வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாதத்தை பதம் பார்க்க, ஒட்டகையின் நிழலை ஒட்டியவாறு முஆவியா (ரலி) நடந்து செல்கின்றார்கள்.

உச்சி வெயில் உள்ளங்கால் கொதிக்கின்றது. நடக்க முடியாத சூழ்நிலை, தயங்கியவாறே முஆவியா (ரலி) அவர்கள் வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்களிடம் பாலை மணலில் சூடு குறித்து முறையிட்டு, உங்களின் பின்னால் அமர்ந்து நான் வரட்டுமா? என்று கேட்கின்றார்.

அதற்கு, வாஇல் (ரலி) அவர்கள் வாயை மூடிக் கொண்டு வா! அரசர்களுக்கு அருகே அமர்கிற அருகதை எல்லாம் உமக்கு கிடையாதுஎன்கிறார்.

வாஇல் (ரலி) அவர்களுக்கு தெரியாது ஒட்டகையின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து வருகிற இந்த கைகள் தான் வஹியை எழுதுகிற மகத்தான பாக்கியம் பெற்ற கை என்று.

ஆம்! அப்போது முஆவியா (ரலி) அவர்கள் வஹியை எழுதுகின்றவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள்.

அமைதியாக வந்து கொண்டிருந்த முஆவியா (ரலி) அவர்கள் மீண்டும் சூடு தாங்காமல் வாஇல் (ரலி) அவர்களிடம் நீங்கள் தான் ஒட்டகையில் அமர்ந்து வருகின்றீர்களே, உங்களின் செருப்பை கழற்றி எனக்குத் தாருங்களேன்! சிறிது நேரம் நான் பயன்படுத்தி விட்டு தருகின்றேன்என்றார்கள்.

அது கேட்ட வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் ஒட்டகையின் நிழலிலேயே நீர் நடந்து வாரும்!என்று கூறினார்கள்.

அவர் செல்ல வேண்டிய எல்கை வந்ததும் விடை பெற்று முஆவியா (ரலி) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

நடந்த இந்தச் செய்தியை நபி {ஸல்} அவர்களிடத்திலோ, வேறு எவரிடத்திலுமோ முஆவியா (ரலி) அவர்கள் தெரிவிக்கவில்லை.

காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. காலச்சக்கரத்தை சுழற்றுபவன் மாபெரும் ஆற்றல் நிறந்த அல்லாஹ் அல்லவா?.

முஆவியா (ரலி) அவர்கள் இப்போது கலீஃபாவாக இருக்கின்றார்கள். புதிய ஆட்சியாளரை சந்திக்கும் முகமாக வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களைக் காண சபைக்குள் வருகின்றார்கள்.

மஸ்ஜிதுன் நபவீக்குள் வாயில் இப்னு ஹுஜ்ர் (ரலி) நுழைகிற போது மாநபி {ஸல்} எவ்வாறு கண்ணியப்படுத்தி, மரியாதை செய்தார்களோ அதே போன்று முஆவியா (ரலி) அவர்களும் கண்ணியமும், மரியாதையும் கொடுத்தார்கள்.

பின்னர் கடந்த கால அந்த நீங்கா நினைவுகளை அவரோடு பகிர்ந்து கொண்டு, அன்று அரசர்களின் பின்னால் அமர்வதற்கும், அரசர்களின் செருப்பை அணிவதற்கும் தகுதி இல்லாதவன் என்று உங்களால் அடையாளம் காட்டப்பட்ட இந்த முஆவியாவை அல்லாஹ் இந்த உம்மத்தின் தலைவராக, ஆட்சியாளராக ஆக்கியிருக்கின்றான்என்று கூறினார்கள்.

அங்கிருந்து விடை பெற்ற வாஇல் இப்னு ஹுஜ்ர் அவர்களிடம் சில பண முடிப்புகளை முஆவியா (ரலி) வழங்க, என்னை விட தகுதியானவர்களுக்கு இதை வழங்குங்கள் என்று கூறி வாஇல் (ரலி) வாங்க மறுத்து விட்டார்கள்.

தங்களோடு உணவருந்திச் செல்லுமாறு கோரிய அழைப்பையும் நிராகரித்து விட்டு அங்கிருந்து தள்ளாடியபடியே கடந்து சென்றார் வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள்.

இந்தச் செய்தியை அறிவிக்கும் ஸிமாக் (ரஹ்) அவர்கள் வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் என்னிடம் முஆவியா (ரலி) அவர்களை என்னோடு நான் ஒட்டகையில் அமர வைத்திருக்கலாமே என்று இப்போது நினைக்கின்றேன்என்று கூறினார்கள்.( நூல்: அல் இஸ்தீஆப், அல்பிதாயா வன் நிஹாயா, தபகாத்துல் குப்ரா )

உலகம் போற்றும் சாதனையாளரை அடையாளப்படுத்திய பேராசிரியர் பெருமானார் (ஸல்)...

ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மக்கள் தங்களின் மழலைச் செல்வங்களை கொண்டு வந்து துஆசெய்யுமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.                                                     

எங்களின் கோத்திரத்தார்களான பனூ நஜ்ஜார்களும் தங்களின் மழலைச் செல்வங்களோடு என்னையும் அழைத்து வந்திருந்தனர். என்னை நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு நிறுத்தி நான் குர்ஆனின் சில சூராக்களை மனனமிட்டு இருப்பதாக புகழ்ந்து கூறினார்கள்.                                                    

அப்போது நபி {ஸல்} அவர்கள் என்னிடம் சில வசனங்களை ஓதிக் காட்டுமாறு கேட்டார்கள். இறுதியாக நான் சூரா அல்-கஹ்ஃபைமுழுமையாக ஓதினேன். இதனைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். அப்போது எனக்கு வயது 11 ஆகும்.                            

பின்னர் ஒரு நாள் மாநபி {ஸல்} அவர்கள் என்னை அழைத்து ஸைதே! நீர் யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொள்ளும்! யூதர்கள் எனக்காக கடிதம் எழுதுவதிலும், எனக்கு வரும் கடிதத்தை படிப்பதிலும் எனக்கு திருப்தி இல்லை. ஏனெனில், அவர்கள் தவறு செய்திடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. எனவே, நீர் யூத மொழியை கற்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்எனக் கூறினார்கள். நான் பதினைந்தே நாட்களில் ஹீப்ரு மொழியைக் கற்று அதில் புலமையும் பெற்றேன். அதன் பின் அண்ணலாரின் ஆயுட்காலம் வரை நான் தான் அவர்களது அனைத்து கடிதங்களையும் எழுதினேன், படித்தேன். ( நூல்: அஹ்மத்,பாகம்:5, பக்கம்:186, )

ஹிஜ்ரி 5-ம் ஆண்டு ஷவ்வாலில் ஃகந்தக் யுத்தம் நடைபெற்றது. எந்த யுத்தம் நடைபெற்றாலும், அந்த யுத்தத்தில் கலந்து கொள்ளும் கோத்திரத்தார்களை வழி நடத்திட அவர்களில் மிகச் சிறந்த ஒருவரை தளபதியாக நியமித்து, அவர்களின் கையில் இஸ்லாமியக் கொடியை கொடுப்பது நபிகளாரின் வழக்கம். அன்று பனூ நஜ்ஜார் கோத்திரத்தாரின் தளபதியாக உமாரா இப்னு ஹஸ்ம் {ரலி} அவர்கள் கொடியோடு வழி நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். படை புறப்படும் முன் அணி அணியாக ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த நபி {ஸல்} அவர்கள் உமாராவிடம் இருந்து கொடியை வாங்கி, முதன் முதலாக களம் காணும் ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்களிடம் கொடுத்து இவர் உங்களை வழி நடத்துவார்என்று கூறினார்கள்.                                                          

அப்போது, உமாரா {ரலி} அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எந்த விதத்தில் ஸைத் {ரலி} என்னை விட உயர்ந்தவராகி விட்டார்? எனக் கேட்டார்கள்.                                                        

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உமாராவே!அப்படி இல்லை குர்ஆன் தான் எப்போதுமே முன்னிலை பெற வேண்டும். ஸைத் உம்மை விட குர்ஆனில் அதிக பகுதியை மனனமிட்டிருக்கின்றார்ஆதலால் அவர் தலைமை வகிப்பதே தகுதியாகும். என்று மாநபி {ஸல்} அவர்கள் அவர்கள் உமாராவிடம் கூறினார்கள்.                                                      

அப்போது ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்களுக்கு வயது 15 ஆகும்.

( நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:284. )

 11-ஆம் வயதில் மாபெரும் ஆற்றல் ஒளிந்திருக்கும் சிறுவராக மாநபி {ஸல்} அவர்களால் அடையாளம் காணப்பட்ட இவர்கள் உடனடியாக இஸ்லாத்தின் செய்திப் பிரிவு மற்றும் தகவல் தொடர்புப் பிரிவு மற்றும் இறைத்தூதை {வஹீயை} பதிவு செய்யும் பணி, மொழிபெயர்ப்பாளர் பணி என செயலாற்றும் திறன் உள்ளவராக மாநபியவர்களால் மாற்றம் கண்டார்கள்.                                                      

தலைமைத் துவத்திற்கான ஆற்றலை 15-ஆம் வயதில் பெற்றுள்ளதாக நபி {ஸல்} அவர்களால் அறியப்பட்டார்கள். ஸைத் {ரலி} அவர்களின் 20-ஆம் வயதில் நபி {ஸல்} அவர்கள் இந்த உம்மத்தின் சட்ட விவகாரங்களில், வாரிசுச் சட்ட விவகாரங்களில் மிகத் தேர்ச்சி பெற்றவர் ஸைத் இப்னு ஸாபித் {ரலி} ஆவார்என புகழாரம் சூட்டினார்கள். ( நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:27,284 )

அபூபக்ர் {ரலி} அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற யமாமா யுத்தத்தில் ஏராளமான ஹாஃபிள்கள் (கொல்லப்பட்டதால்) ஷஹீதாக்கப் பட்டதால் ஆட்சியாளர் அபூபக்ர் {ரலி} அவர்கள் ஸைத் {ரலி} அவர்களை குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார்கள்.

உமர் {ரலி} அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் மூன்று முறை தங்களுக்குப் பதிலாக இடைக்கால ஆட்சியாளராக ஸைத் {ரலி} அவர்களை நியமித்தார்கள். இரண்டு முறை ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும், ஒரு முறை அரசியல் பயணமாக ஷாமுக்குச் சென்ற போதும் ஃகலீஃபாவாகநியமித்தார்கள்.

உஸ்மான் {ரலி} அவர்களும் தங்களின் ஆட்சிக் காலத்தில் ஹஜ் செய்யச் சென்ற போது இடைக்கால ஆட்சியாளராக ஸைத் {ரலி} அவர்களையே நியமித்தார்கள்.

இமாம் மஸ்ரூக் {ரஹ்} அவர்கள் கூறுகிறார்கள்: அதிகமான மார்க்க ஞானமுள்ள, மார்க்க விஷயங்களில் எவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் இருந்ததோ அப்படிப்பட்ட ஸஹாபிகளில் ஒருவராகவும் மிக உயர்ந்த நீதிபதிகள், காரிகள், சட்டவல்லுனர்களில் ஒருவராகவும், ஸைத் இப்னு ஸாபித் {ரலி} விளங்கினார்கள்.

 இதே ஸைத் {ரலி} அவர்கள் பத்ரிலும்,உஹதிலும் கலந்து கொள்ள ஆர்வப்பட்ட போது நபி {ஸல்} அவர்கள் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டார்கள். ( நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:283,284,285. )

ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் இந்த உலகை விட்டு விடை பெற்று சென்ற போது "இந்த உலகை விட்டும் கல்வியே இடம் பெயர்ந்து விட்டது" என்று அபூஹுரைரா ரலி  கூறினார்கள். 

முன்மாதிரி ஆசிரியராக மாறுங்கள்!

சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க விரும்புபவர்கள் சிறந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அப்படி சிறந்த ஆசிரியர்களாக இருக்க விரும்புபவர்கள் முன்மாதிரி ஆசிரியரான பெருமானார் {ஸல்} அவர்களின் வாழ்வில் இருந்து பாடங்களையும், படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

1.   உங்கள் பிள்ளைகளைப் போல எண்ணுங்கள்.!

மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். 

மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். 

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நபித் தோழர்களைப் பார்த்து கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَجْلَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏إِنَّمَا أَنَا لَكُمْ بِمَنْزِلَةِ الْوَالِدِ أُعَلِّمُكُمْ

நிச்சயமாக ஒருவருக்கு அவருடைய தந்தையைப் போல உங்களைப் பொறுத்தவரையில் நான் இருக்கிறேன். நான் உங்களுக்கு அவருடைய ஸ்தானத்தில் இருந்து கற்றுத்தருகின்றேன்” (அபூதாவூத், அந்நஸாஈ, இப்னு மாஜா)

ஒரு தந்தை தனது பிள்ளைகளுடன் எந்தளவு அன்பாக, அக்கறையாக இருக்கின்றாறோ அந்தளவுக்கு அல்லது அதைவிட அதிக அக்கறையுள்ளவனாக நான் உங்கள் விடயத்தில் இருக்கிறேன் என நபியவர்கள் கூறினார்கள்.

நபியே! அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களோடு நளினமாக, நயமாக, அன்பாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் படைத்தவராகவும் இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டும் விரண்டோடியிருப்பார்கள்.” ( அல்குர்ஆன்: 3: 159 )

நபி (ஸல்) அவர்களிடமிருந்த உன்னதமான பண்பே அன்புதான். மக்களோடு, மற்றவர்களோடு அன்பாக இருத்தல் எனும் உயரிய பண்பைப் பெற்றிருந்தார்கள் நபியவர்கள். தன்னோடு பணியாற்றிய எவரையும் எச்சந்தர்ப்பத்திலும் தண்டித்ததில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் 10 வருடங்கள் பணியாளராக சேவை புரிந்த அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ‏ ‏سَمِعَ ‏ ‏سَلَّامَ بْنَ مِسْكِينٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ثَابِتًا ‏ ‏يَقُولُ حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏ ‏خَدَمْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ وَلَا لِمَ صَنَعْتَ وَلَا أَلَّا صَنَعْتَ

அந்த பத்து வருடங்களில் ஒரு நாளாவது நபியவர்கள் நான் ஒரு வேலையைச் செய்ததற்காக ஏன் செய்தீர்கள் என்றோ ஒன்றை செய்யாமல் விட்டதற்காக ஏன் இதனைச் செய்யவில்லை என்றோ கேட்டதில்லை.

7 -ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் நாகரிகமற்று, பண்பாடற்று இருந்த காலத்தில் இத்தகைய உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாடுகளையுமே நபியவர்கள் கற்றுத் தந்தார்கள்.

2. மாணவர்களின் பெயரைச் சொல்லி அழையுங்கள்..!

உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ خَلَفٍ أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَدِّهِ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهُ يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ ‏ ‏دَاوُدَ

அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் அருமையாக அல்குர்ஆனை ஓதக்கூடியவர். நபியவர்கள் அவரை அழைத்து அபூ மூஸாவே! அல்குர்ஆனைக் கொஞ்சம் ஓதுங்கள். நீங்கள் ஓதுவதை நான் செவியேற்க விரும்புகிறேன் எனக் கூறுவார்கள். தாவூத் (அலை) அவர்களுடைய புல்லாங்குழல் என்று அவரை வர்ணிப்பார்கள். அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களும் நபியவர்களின் வேண்டுகோளை ஏற்று சந்தோஷமாக ஓதுவார்கள்.

عن أنس رضي الله عنه قال: كان لي أخ يقال له أبو عمير، كان إذا جاءنا رسول الله صلى الله عليه وسلم قال: «يا أبا عمير، ما فعل النُغير-طائر صغير» (رواه البخاري [6203]، ومسلم [2150]).

அபூ தல்ஹா உம்மு ஸுலைம் தம்பதிக்கு மற்றொரு மகன் பிறந்தார். அவருக்கு அபூ உமைர் என்று பெயர்! இவரும் அன்புக்குரிய குழந்தையாய் இருந்தார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைமின் இல்லத்திற்கு வருகை தந்தால் அபூ உமைர் மீது அன்பு மழை பொழிவார்கள்! அவருடன் கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவார்கள்.

ஒருமுறை அண்ணலார் வருகை தந்தபோது அபூ உமைரின் முகம் வாடியிருந்தது. என்ன விடயம்? இன்று அபூ உமைர் சோர்ந்திருக்கிறார் என்று உம்மு ஸுலைமிடம் கேட்டார்கள்!

அல்லாஹ்வின் தூதரே! அபூ உமைருக்கு நுகைர் என்று ஒரு குருவி இருந்தது. அதனுடன் விளையாடிக் கொண்டிருப்பார். இன்று திடீரென அது இறந்துவிட்டது.

அண்ணல் நபியவர்கள் அபூ உமரை அருகில் அழைத்துத் தமது அன்புக் கரத்தை அவருடைய தலை மீது வைத்துத் தடவிக் கொடுத்தார்கள்.

பிறகு மாஃப அலந் நுகைர் யா அபா உமைர் (என்னுடைய உமைர், என்னவாயிற்று நுகைர்?) என்று சொல் நயத்துடன் அண்ணலார் கேட்டதும் சிறுவர் அபூ உமைர் தம் கவலையை மறந்து சிரித்தபடி மீண்டும் விளையாடுவதில் ஈடுபட்டார்.

3.   நம்பிக்கையைக் கொடுங்கள்..! மாணவர்களிடமுள்ள திறமையைப் பாராட்டுங்கள்..!.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும் என்றார்கள். ( ஸஹீஹ் முஸ்லிம் : 5144. )

وقد صح من حديث أبي موسى قال: قال رسول الله: لو رأيتني وأنا أستمع قراءتك البارحة لقد أوتيت مزمارًا من مزامير آل داود، فقلت يا رسول الله، لو علمت أنك تسمع قراءتي لحبرته لك تحبيرًا.

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), “நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். ( ஸஹீஹ் முஸ்லிம் : 1454 ).

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

وفي هذا اليوم قال الرسول لأصحابه

 " خير رجّالتنا، أي مشاتنا، سلمة بن الأكوع " !!

(நீண்ட ஹதீஸின் சுருக்கம்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார் என்று (பாராட்டிக்) கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள். ( ஸஹீஹ் முஸ்லிம் : 3695. )

மாணவர்களிடமுள்ள திறமைகளைப் பாராட்டுவது. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பரிசுகளை வழங்குவது போன்ற பண்புகள் ஆசிரியர்களிடம் இருந்தால் திறமையான மாணவர்கள் உருவாகுவது மட்டுமல்லாமல் ஆசிரியர், மாணவர் என்ற உறவில் நல்லிணக்கம் ஏற்படவும் அது காரணமாக இருக்கும்.

உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. 

இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

4.   பாடப்புத்தகத்தை தாண்டி கற்றுக் கொடுங்கள்...

வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். 

பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள், நபி {ஸல்} அவர்களுடைய சபையை கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள். எந்தளவுக்கென்றால், ஒரு சமயம் நபி {ஸல்} சபையில் அமர்ந்திருந்த போது, நபியை ஒட்டி வலது பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்.

அந்த இடத்தில் எந்த நபித்தோழரும் அமர மாட்டார்கள். அபூபக்ருக்காக நியமித்த இடம். ஏனென்றால், நபி {ஸல்} அவர்களுடைய முதல் ஆலோசகர், முதல் மந்திரி அபூபக்கர் (ரலி) அவர்கள்.

அவர்கள் அமரக்கூடிய இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} அவர்களை பொறுத்தவரை ஒரு சபையில் யாராவது அமர்ந்து விட்டால், அவர்களை அந்த சபையிலிருந்து எழுப்பமாட்டார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்களுக்கு குடிப்பதற்கு ஒரு பானம் வந்து விட்டது. (பால் அல்லது தேன் கலந்த ஏதோ ஒரு பொருளோ வந்து விட்டது.) அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} அவர்கள் குடித்தார்கள்.

அதற்கு பிறகு, அந்த பானத்தை தங்களுடைய தோழர்களுக்கு கொடுப்பதற்காக பார்க்கும் பொழுது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். வலது பக்கத்தில் இருப்பது இந்த குட்டி பையன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

மற்றவர்களெல்லாம் பெரும் பெரும் தோழர்கள். அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} இப்னு அப்பாஸை பார்த்து உரிமையோடு கேட்டார்கள்.

«يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَهُ الأَشْيَاخَ»، قَالَ: مَا كُنْتُ لِأُوثِرَ بِفَضْلِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ، فَأَعْطَاهُ إِيَّاهُ

( உறவு முறையில் ஒரு பக்கம் சாச்சாவின் மகன்.) சிறுவரே! உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நீ விட்டுக் கொடுப்பாயா? என்று.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உடைய வார்த்தையை அல்லாஹ்வுடைய தூதரின் எச்சிலுக்கு நான் வேறு யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்என்று பதிலளித்தார்கள். ( அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : எண் : 2351, 2366, 2451, 2605. )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாம் வயதில் மூத்தவராய் இருந்தும், அல்லாஹ்வின் நபியாக இருந்தும் தங்களது பேரன் வயது கூட ஆகியிருக்காத ஒரு சிறுவரிடம் சென்று அனுமதி கேட்கின்றார்கள். ஒருவரின் உரிமையை எவ்வாறு பேண வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை உணர்த்துகின்றார்கள். தமக்கு உறவு முறை இருந்தும் கூட தங்களுக்கான உரிமையை அந்த இடத்தில் நபி {ஸல்} அவர்கள் பயன்படுத்த வில்லை. ஒரு சபையில் ஒரு சொல்லின் மூலம், ஒரு செயலின் மூலம் விசாலமான பார்வையை மாநபி {ஸல்} அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

5.   அழகிய முறையில் கற்றுக் கொடுங்கள்..!

ارِهِمْ، فَقُلْتُ: وَاثُكْلَ أُمِّيَاهْ، مَا شَأْنُكُمْ؟ تَنْظُرُونَ إِلَيَّ، فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ، فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ، فَلَمَّا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبِأَبِي هُوَ وَأُمِّي، مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ، فَوَاللهِ، مَا كَهَرَنِي وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي، قَالَ: «إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ» أَوْ كَمَا

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே  மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும் என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் (ரலி) ( நூல்: முஸ்லிம்-935 ) 

அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை என்று நபித்தோழர் கூறுகிறார். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதருடைய அணுகுமுறை எந்தளவுக்கு நன்றாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

6.   காலத்திற்கும் நினைவில் நிற்கும் படி கற்றுக் கொடுங்கள்..!

أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ

كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு! என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.  அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா (ரலி) ( நூல்: புகாரி-5376 ) 

7. சலிப்படையாதவாறு கற்றுக்கொடுங்கள்

أَتَيْنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا، فَأَخْبَرْنَاهُ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا – وَصَلُّوا  كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»

சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.

அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) ( நூல்: புகாரி-631 ) 

அல்லாஹ்வே! எங்களின் ஆசிரியர்களை மன்னிப்பாயாக! எங்களின் மாணவர்களுக்கு கல்வி ஞானத்தை அதிமாக்குவாயாக! சமூகத்தின் சிறந்த ஆளுமைகளாக ஆக்குவாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!