Showing posts with label Prophet. Show all posts
Showing posts with label Prophet. Show all posts

Thursday 28 October 2021

மாநபி ﷺ அவர்களை மகிழ்விக்கும் கடமை நமக்குண்டு!!!

 

மாநபி   அவர்களை மகிழ்விக்கும் கடமை நமக்குண்டு!!!

 


 

பெருமானார்   அவர்கள் வாழும் காலத்தில் நாம் பிறக்கவில்லை. அவர்களைக் காணும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. அவர்களோடு நட்பு பாராட்டும், தோழமை கொள்ளும் பேற்றை நாம் அடையவில்லை.

பிறந்திருந்தால், காணும் பாக்கியம் கிடைத்திருந்தால், நட்பு பாராட்டும் பேற்றை நாம் அடைந்திருந்தால் நபிமார்களுக்குப் பின் இந்தப்பூமியில் நடமாடியவர்களில் நாமே சிறந்தவர்களாக ஆகியிருப்போம்.

ஆம்! நபித்தோழர்கள் எனும் அந்தஸ்தை நாம் பெற்றிருப்போம். நாயன் அல்லாஹ்வின் அருள்மறை வேதத்தின் புகழுக்கும், சோபனத்திற்கும் உரியவர்களாக ஆகியிருப்போம்.

1400 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்து இந்தப் பூமியில் ஹிதாயத் எனும் அருளைச் சுமந்து, முஸ்லிம் எனும் அடையாளத்தோடு நானும் நீங்களும் வாழ வேண்டும் என அல்லாஹ் தீர்மானித்த விதியின் அடிப்படையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் வாழ்வின் இறுதிவரை ஹிதாயத் எனும் அருளோடும், முஸ்லிம் எனும் அடையாளத்தோடும் வாழ்ந்து, மரணிக்க அருள் புரிவானாக!!

இப்போது நமக்கான கடமையும், கடப்பாடும் என்னவென்றால் மாநபி {ஸல்} அவர்கள் வாழும் காலத்தில் பிறந்து, நபி {ஸல்} அவர்களைப் பார்த்து, அவர்களோடு தோழமை கொண்டிருந்தால் எப்படியெல்லாம் நாம் வாழ்ந்திருப்போமோ அப்படியான வாழ்க்கையை இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டியது தான்.

பெருமானார் {ஸல்} அவர்களை நேசிப்பது

 ضرب أعلى مثل في حب الرسول صلى الله عليه وسلم والبر بالوالدين.. كان يشتاق إلى لقاء الرسول الكريم ليبايعه على الإسلام.. ويصبح  من الشباب المسلم الذي يجاهد بنفسه في سبيل الله وإلاء راية دينه رغم صغر سنه، وذات يوم أراد أن يحقق هذه الأمنية.. فانطلق إلى المسجد فوجده حافلا بالمهاجرين والأنصار...يستمعون إلى حبيبهم المصطفى صلى الله عليه وسلم.. فأخذ مكانه في مؤخرة الصفوف، حيث يجلس الصبية الغلمان .إنه الصحابي طلحة بن البراء رضي الله عنه.

ولما فرغ رسول الله صلى الله عليه وسلم، من حديثه، وبدأ الصحابة رضوان الله عليهم يأخذون طريقهم إلى خارج المسجد...اقترب طلحة بن البراء من رسول الله، وأخذ يقبل يديه في شغف ومحبة...ويقول له: أنا طلحة بن البراء ابن عمر.. جئت أبايعك على الإسلام....فمرني بما أحببت...لا أعصي لك أمرا...وينظر الرسول إلى هذا الغلام الذي أقبل عليه يطلب مبايعته، ويربت كتفه قائلا: " وإن أمرتك بقطيعة والديك؟". فيرد طلحة "لا".. لأن له أما يبرها أشد البر....ويحبها أعمق الحب...ولا يتصور أن يصبح عاقا لوالديه.... فيكرر عليه الرسول العبارة السابقة...ويكرر طلحة الرد نفسه.., لكنه في المرة الثالثة قال: "نعم"...

 

இளவயதைத் தொட்டிருந்த இளவல் தல்ஹா இப்னு பர்ராவு அவர்கள் பெருமானார் {ஸல்} அவர்களைக்காண மஸ்ஜிதுன் நபவீக்கு வருகை தருகின்றார்கள். அங்கே, தொழுகை முடிந்து முஹாஜிர்களும், அன்ஸாரிகளும் சூழ அமர்ந்திருக்க மாநபி {ஸல்} அவர்கள் உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.

சிறுவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் போய் அமர்ந்த தல்ஹா இப்னு பர்ராவு அவர்கள் மாநபி {ஸல்} அவர்கள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார்கள். பேசி முடித்ததும் சபை கலைந்து அவரவர்கள் தங்களின் வழியே பிரிந்து சென்று கொண்டிருந்தனர்.

அண்ணலாரின் அருகே வந்த அந்த இளவல்நான் தல்ஹா இப்னு பர்ராவு இப்னு உமர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, உங்களின் கரங்களைக் கொடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் இஸ்லாத்தின் மீது பைஅத் (பிரமாணம்) கொடுக்க வந்திருக்கின்றேன். நீங்கள் விரும்பியதை எனக்கு கட்டளை இடுங்கள்! உங்களுக்கு ஒரு போதும் நான் மாற்றம் செய்ய மாட்டேன். என்று கூறி நின்றார்.

உம் பெற்றோர்களை விட்டு விட்டு வந்து விடுஎன்று நான் உமக்கு ஏவினால் நீர் என்ன செய்வீர். நான் அப்படி செய்ய மாட்டேன் என்றார். ஏனெனில், தன் பெற்றோரின் மீது ஆழமான அன்பு வைத்திருப்பவர் தல்ஹா. அவர்களுக்கு அழகிய முறையில் பணிவிடை செய்து வருபவர் தல்ஹா.

மீண்டும் முன்பு போன்றே பெருமானார் {ஸல்} அவர்கள் கூற, மீண்டும் தல்ஹா அதே பதிலையே கூறினார். மூன்றாம் முறையாக மாநபி {ஸல்} அவர்கள் அதே போன்று கேட்ட போதுஅல்லாஹ்வின் தூதரே! நான் விட்டு விட்டு வந்து விடுகின்றேன்என்றார்.

அது கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்த முகத்தோடு அவரை நோக்கி, “தல்ஹாவே! உறைவை முறித்து வாழ்வது நம் தீனுடைய பண்பாடல்ல. உம் தீனில் எவ்வித சந்தேகமும் நீ கொண்டு விடக்கூடாது என்று நான் விரும்பினேன். ஆகவே, உம்மிடம் இவ்வாறு கூறினேன்என்றார்கள்.

தல்ஹா இப்னு பர்ராவு (ரலி) இஸ்லாத்தை ஏற்றார்கள். சில காலம் மாநபி {ஸல்} அவர்களோடு தோழமை கொண்டிருந்தார். ஆர்வத்தோடு குர்ஆனைக் கற்றார். போர் முறை கற்றுக்கொண்டார். போரில் பங்கெடுத்தார். ஒரு போரில் காயம் அடைந்தார். அந்த காயத்தின் காரணமாக திடீரென அவர் உடல் நிலை சரியில்லாமல் ஆனார். சில நாட்களில் மரணத்தின் விளிம்புக்கே வந்து விட்டார்.

எப்போதும் பள்ளியோடு தொடர்பில் இருந்த தல்ஹாவை காணாத நபி {ஸல்} அவர்கள் தோழர்களிடத்தில் விசாரிக்க, தோழர்கள் அவரின் நிலையை கூறினார்கள். நபி {ஸல்} அவர்கள் நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். ஆனால், அவர் நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்தார். பெருமானார் {ஸல்} அந்த தோழர் குறித்து அருகில் அமர்ந்திருந்த தோழர்களிடம்இவர் இந்த நோயிலேயே இரவு நேரத்தில் இறந்து போனால் எந்நேரம் ஆனாலும் என்னிடம் வந்து தகவல் சொல்ல வேண்டும்என்று கூறி விட்டு சென்று விட்டார்கள்.

பெருமானார் {ஸல்} அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து கண் விழித்தார். பெருமானார் {ஸல்} அவர்கள் வந்ததையும், சொன்னதையும் தல்ஹா (ரலி) அவர்களிடம் கூறிய போதுநான் இதே நிலையில் இறந்து விட்டால் நபி {ஸல்} அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், இரவு நேரம் பெருமானார் {ஸல்} அவர்களுக்கு விரோதிகளாலோ, விஷ ஜந்துக்களாலோ ஏதும் ஆபத்து நேர்ந்து விடக்கூடாது. நான் ஸலாம் சொன்னதாக சொல்லி விடுங்கள். எனக்காக மாநபி {ஸல்} அவர்களிடம் துஆச் செய்ய சொல்லுங்கள்என்றார். சிறிது நேரத்தில் இந்த உலகை விட்டும் விடை பெற்றார் தல்ஹா இப்னு பர்ராவு (ரலி) அவர்கள்.

روي أَنه توفي ليلًا، فقال: ادفنوني وأَلحقوني بربي، ولا تَدْعوا رسول الله صَلَّى الله عليه وسلم، فإِني أَخاف عليه اليهود أَن يصاب في سببي، فأَخبر رسول الله صَلَّى الله عليه وسلم حين أَصبح، فجاءَ حتى وقف على قبره، وَصَفَّ الناس معه، ثم رفع يديه وقال

"اللَّهُمَّ، الْقَ طَلْحَةَ وَأَنْتَ تَضْحَكُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ إِلَيْكَ" 

அவரின் வஸிய்யத் அடிப்படையில் இரவோடு இரவாக இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டு நல்லடக்கமும் செய்யப்பட்டது. மறுநாள் சுபுஹ் தொழுகைக்கு வந்த மாநபி {ஸல்} அவர்களிடம் தகவல் சொல்லப்பட்டது. தொழுது முடித்த பின் மாநபி {ஸல்} நபித்தோழர்களோடு தல்ஹா (ரலி) அடக்கம் செய்யப்பட்ட மண்ணறைக்கு வந்துஅல்லாஹ்வே! நீ அவரை மகிழ்ச்சியோடு சிரித்த நிலையில் சந்திக்க வேண்டும். அவரும் உன்னை மகிழ்ச்சியோடு சிரித்த நிலையில் சந்திக்க வேண்டும்என்று துஆச் செய்தார்கள். ( நூல்: தபகாத்துல் குப்ரா, அல் இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா )

இஸ்லாத்தை ஏற்று சில காலமே மாநபி {ஸல்} அவர்களோடு பயணித்த தல்ஹா இப்னு பர்ராவு (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களை எந்தளவு நேசித்தார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

வாழ்வில் ஒரு முறையேனும் பெருமானார் ரவ்ளாவை தரிசித்திட ஆசை கொள்ள வேண்டும்

ولدت السيدة نفيسة رضى الله عنها فى مكة 11 ربيع الأول 145 هجرية، انتقل بها والدها إلى المدينة المنورة وهى فى الخامسة من عمرها، فكانت تذهب إلى المسجد النبوى وتسمع إلى مشايخه، وتتلقى الحديث والفقه من علمائه حتى لقبها الناس بنفيسة العلم قبل أن تصل اإلى سن الزواج، تقدم الكثير للزواج من نفيسة العلم إلى أن قبل والدها بزواجها بإسحاق المؤتمن بن جعفر بن محمد بن على بن الحسين بن على بن أبى طالب، وتزوجت السيدة نفيسة وأنجبت القاسم وأم كلثوم،

ஹஸன் (ரலி) அவர்களுடைய பேரர் ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களுக்கு ஹிஜ்ரி 145 –ல் மக்காவில் பெண் குழந்தை ஒன்று பிறக்கின்றது. ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களும் அவர்களின் துணைவியார் ஜைனப் (ரஹ்) அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். “நஃபீஸா” என பெயரும் வைத்தனர்.

நடக்கும் பருவத்தை நஃபீஸா அடைந்த போது அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு மதீனா வந்து, மாநபியின் புனித ரவ்ளாவின் முன் நின்று “தலைவரே! உங்கள் பேத்தியை நீங்கள் பொருந்திக் கொள்ள வேண்டும்! என்று கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். இரவில் ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றிய பெருமானார் {ஸல்} அவர்கள் “உம்முடைய மகளை நான் பொருந்திக் கொண்டேன். அல்லாஹ்வும் உம் மகளை பொருந்திக் கொள்வான்” என கூறினார்கள் 

வளர்ந்து 8 வயதை அடைகிற போது முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாஃபிழாவாக ஆனார் நஃபீஸா. பருவ வயதை அடைவதற்குள்ளாக அரபி இலக்கணம், இலக்கியம் போன்ற கல்வியைப் பயின்றார் நஃபீஸா. பருவ வயதை அடைந்ததற்குப் பின்னர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் முஅத்தாவையும், ஹதீஸ் துறைக்கல்வியையும் பயின்று ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்றார்கள்.

திருமண வயதைத் தொட்டு நிற்கிற போது மிகச் சிறந்த மார்க்க மேதையாக திகழ்ந்தார்கள். பலரும், பல செல்வந்தர்களும், பல பாரம்பர்யமான குடும்பத்தினரும் பெண் கேட்டு வந்த போதும் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்கள் ஹஸனுல் அன்வர் (ரஹ்) அவர்கள்.

இறுதியாக இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் பேரர் ஜஅஃபர் ஸாதிக் (ரஹ்) அவர்களின் மகனார் இஸ்ஹாக் அல் முஃதமன் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.

திருமணம் முடித்த பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நஃபீஸா (ரஹ்) அவர்கள் மதீனாவில் பல்வேறு மார்க்க சேவைகளை மக்களுக்கு ஆற்றி வந்தார்கள். எங்கு பார்த்தாலும் இவர்களின் மார்க்க அறிவும், ஹதீஸ், தஃப்ஸீர் புலமையும் பேசப்பட்டு வந்தது. மதீனாவில் மிகப்பெரிய புகழை நஃபீஸா (ரஹ்) அவர்கள் பெற்றார்கள்.

வணக்க வழிபாடுகளில் மிகப்பெரிய பேணுதல் உள்ளவர்களாக திகழ்ந்ததோடு, எந்நேரமும் குர்ஆனை ஓதக்கூடியவர்களாகவும், அதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாகவும் விளங்கினார்கள்.

அவர்களின் 48 வது வயதில் ஹிஜ்ரி 193 ல் மதீனாவில் இருந்து மிஸ்ர் க்கு கணவரோடு இடம் பெயர்ந்தார்கள். இங்கேயும் இவர்கள் சிறந்து விளங்கினார்கள். பல்வேறு மார்க்க மேதைகள் இவர்களிடம் கல்வி பயின்றார்கள்.

அதில் குறிப்பிடும் படியாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள், இமாம் பிஷ்ர் இப்னுல் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் நஃபீஸா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் வகுப்பில் பங்கேற்று ஹதிஸ் துறை சம்பந்தமான கல்வியைப் பெற்றார்கள். குறிப்பாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் இருந்து சில நபிமொழிகளை அறிவிக்கவும் செய்கின்றார்கள்.

மிஸ்ருக்கு வந்த புதிதில் ஆண்களும், பெண்களும் திரளாக வந்து அவர்களிடத்திலே கல்வி கற்க வருவதும் போவதுமாய் இருப்பார்கள். மிகப் பெரிய இட நெருக்கடி ஏற்பட்ட போது நஃபீஸா (ரஹ்) அவர்கள் மக்களிடம் அடிக்கடி வருவதை குறைத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.

அப்போது மிஸ்ரின் ஆளுநராக இருந்த ஸாரி இப்னு அல் ஹிகம் அவர்கள் நேரில் வந்து “உங்கள் மார்க்க சேவைக்காக நானே ஒரு விசாலமான வீட்டை வாங்கித் தருகின்றேன் என்று கூறி ஒரு பெரிய வீட்டை” வாங்கிக் கொடுத்தார்கள்

மேலும், நஃபீஸா (ரஹ்) அவர்கள் அஹ்லெ பைத்தாக இருந்ததால் அவர்களின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்கள். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நோய்வாய் படும் போதெல்லாம் நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் ஒருவரை அனுப்பி துஆ செய்யுமாறு வேண்டிக்கொள்வார்கள். அனுப்பப்பட்ட அவர் வருவதற்குள்ளாகவே இமாம் ஷாஃபிஈ (ரஹ் அவர்களின் நோய் குணமாகுவதை உணர்ந்தார்கள்.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது முன்பு போல ஒருவரை அனுப்பி நோய் குணமாக துஆச் செய்யுமாறு நஃபீஸா (ரஹ்) அவர்களிடம் கோரிக்கை வைத்த போது “அல்லாஹ் அவருக்கு அவனுடைய சங்கையான திரு(முகத்தை) அனுபவிக்கச் செய்வானாக!” என்று துஆச் செய்தார்களாம். இதை அந்த நபர் வந்து சொன்ன போது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தங்களின் இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து வஸிய்யத் செய்தார்கள். அந்த வஸிய்யத்தில் தங்களுடைய ஜனாஸாத் தொழுகையில் நஃபீஸா (ரஹ்) அவர்கள் பங்கேற்று தங்களுக்காக துஆச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அதே போன்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) இந்த உலகத்தை விட்டு விடை பெற்றதன் பின்னர் அவர்களின் ஜனாஸா நஃபீஸா அவர்களின் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டு அங்கேயே ஜனாஸாத்தொழுகையும் நடத்தப்பட்டது. நஃபீஸா (ரஹ்) வீட்டிருந்தவாரே ஜனாஸாத் தொழுகையை பின் தொடர்ந்து தொழுதார்கள்.

அல்லாஹ் இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு அருள் புரிவானாக! இமாம் ஷாஃபிஈ அவர்கள் உளூவை அழகிய முறையில் செய்யக்கூடியவராக இருந்தார்கள்” என்று துஆச் செய்து விட்டு கடுமையாக அழுதார்களாம்.

قضت السيدة نفيسة رضى الله عنها 16 عاما فى مصر حتى أصابها المرض فى شهر رجب سنة 208 من الهجرة، وجاء شهر رمضان وظل المرض يشتد ويقوى وأقعدها عن الحركة، فأحضروا لها الطبيب وأمرها بالإفطار فقالت: "واعجبا، منذ ثلاثين عاما أسأل الله تعالى أن ألقاه وأنا صائمة، أأفطر الآن، هذا لا يكون"، ثم راحت تقرأ من سورة الأنعام، حتى وصلت إلى قوله تعالى: "لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون"، لتكون آخر ما قرأت من كتاب الله وصعدت روحها الى باريها .

மிஸ்ர் க்கு வந்து 15 ஆண்டுகள் வாழ்ந்து மகத்தான மார்க்க சேவை செய்து, பேணுதலான வாழ்க்கையை மேற்கொண்ட அவர்கள் ஹிஜ்ரி 208 –ம் ஆண்டு தங்களது பாட்டனார் பெருமானார் {ஸல்} அவர்களின் வயதான 63 –ம் வயதில் நோய் வாய்ப்படுகின்றார்கள் நஃபீஸா (ரஹ்) அவர்கள்.

மருத்துவர்கள் வந்து பரிசோதித்து விட்டு “நீங்கள் உடனடியாக நோன்பு திறக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்று கூறினார்கள். நோன்பு திறக்க மறுத்த நஃபீஸா அவர்கள் “அல்லாஹ்விடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நான் நோன்பு வைத்த நிலையில் என் ரூஹ் பிரிந்து, ரப்பை சந்திக்க பிரியப்படுவதாக நான் பிரார்த்தித்து வருகின்றேன்” என்று கூறினார்கள்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் நோன்பு திறக்க மறுத்து விடவே அங்கிருந்து மருத்துவர்கள் கிளம்பி விட்டார்கள் 

இதற்கிடையே தங்களின் வீட்டிலேயே அவர்களுக்கான மண்ணறையை அவர்களே தோண்டி தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

மருத்துவர்கள் கிளம்பியதும் குர்ஆனைக் கையில் எடுத்து சூரா அல் அன்ஆமை ஓத ஆரம்பித்தார்கள் 128 –வது வசனமான “அவர்களுக்கு அவர்களது ரப்பிடம் – இறைவனிடம் தாருஸ்ஸலாம் – சாந்தியின் இல்லம் உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லறங்களுக்காக! மேலும், அவன் அவர்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்” என்கிற வசனத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது, நோன்பு நோற்றிருந்த நிலையில் அவர்களின் ரூஹ் பிரிந்தது. இன்னா லில்லாஹ்…

( நூல்: வஃப்யாத்துல் அஃயான், அல் மவாயிளு, அல் இஃதிபாரு பில் குததில் ஆஸார் லி இமாமி அல் மிர்கீஸீ )

63 ஆண்டு கால வாழ்க்கையின் நிகரில்லா இந்த வாழ்க்கையை அவர்கள் பெருமானார் {ஸல்} அவர்களின் ரவ்ளாவில் இருந்து பெற்றார்கள் என்றால் அது மிகையல்ல.

பெருமானார் {ஸல்} அவர்களின் ஸுன்னாவை கடைபிடிப்பது…

حديث أبي سِرْوَعة عقبة بن الحارث 

 أنه تزوج ابنة لأبي إهاب بن عزيز فأتته امرأة فقالت: إني قد أرضعت عقبة، والتي قد تزوج بها، فقال لها عقبة: ما أعلم أنك أرضعتني، ولا أخبرتني، فركب إلى رسول الله ﷺ بالمدينة فسأله، فقال رسول الله ﷺ

 كيف وقد قيل؟ 

ففارقها عقبة، ونكحت زوجاً غيره

நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன்.

உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" (அறிவிப்பவர் உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) (நூல் - புகாரி 88, 2052, 2640, 2659, 2660. திர்மதீ 1161)

பாங்கிற்குப் பிறகு மாநபி {ஸல்} அவர்களுக்காக வஸீலாவைக் கேட்பது…


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ، وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، وَغَيْرِهِمَا، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ 

إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِيَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لاَ تَنْبَغِي إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ

  தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும் ; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ் விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 628

பெருமானார் {ஸல்} அவர்களின் மீது அளவில்லாமல் ஸலவாத் ஓதுவது 

1.  ஸலவாத்தின் பொருள் விளக்கம்:

ஸலவாத் என்றால் ஈடேற்றம் என்று பொருளாகும். ஸலவாத் என்பது சொல்பவர்களை  பொறுத்து பொருள் மாறுபடும். இதன்படி அல்லாஹ் ஸலவாத் கூறுகின்றான் என்பதற்கு ''அருள்புரிகின்றான் என்றும் மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதற்கு ''பாவமன்னிப்பு கோருகின்றார்கள்"" என்றும் முஃமின்கள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதற்கு ''துஆச் செய்கின்றார்கள்"" என்றும் பொருள் கொள்ள வேண்டும் 

2.  ஸலவாத் சொல்வதின் சட்டம்:

****************************** 

قال الله تعالي : إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً (الأخزاب : 56)

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலாவத் சொல்கின்றனர். ஆகவே நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்து கூறுங்கள் ஸலாம் கூறுங்கள்.(33:56)

இவ்வசனத்தில் அல்லாஹ் தன் தூதரின் மீது ஸலவாத் கூற முஃமின்களுக்கு ஆணை பிறப்பிக்கின்றான். எனவே ஒரு முஃமின் தன்வாழ் நாளில் ஒரு முறையேனும் நபியின் ஸலவாத் கூறுவது ஃபர்ழ் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர் 

3.  ஸலவாத்தின் சிறப்புக்கள்

***********************************

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى الله عَلَيْهِ عَشْرًا» م : 407

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முறை என் மீது ஸலவாத் கூறுபவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகின்றான். (முஸ்லிம்: 407 

4.  ஸலவாத் எப்படி சொல்ல வேண்டும்?

***********************************

عن أبي حُمَيْدٍ السَّاعِدِيُّ، أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: «قُولُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ» صحيح مسلم : 40 

அபூஹூமைத் அஸ்ஸாயிதி (ரழி) அவர்கள் கூறினார்கள்.அவர்கள் (நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களின் மீது எப்படி ஸலவாத் சொல்வதுஎன்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்

اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

என்று சொல்லுங்கள் என்றார்கள். (முஸ்லிம்: 407 

5.  ஸலவாத் சொல்ல வேண்டிய சமயங்கள்:

****************************************

1.   தொழுகையின் தஷஹ்ஹூதின் இறுதியில்:

 

عن فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، صَاحِب رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا»، ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ: - أَوْ لِغَيْرِهِ - «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ، وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ» د :148 

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாமல் (புகழாமல்) நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்திக்கக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவர் அவசரப்பட்டுவிட்டார் எனக் கூறி பின்னர் அவரை அழைத்து உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் அவர் தன் இறைவனை கண்ணியப்படுத்தி புகழட்டும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாவத் கூறட்டும் பின்னர் தான் நாடியதை கேட்கட்டும் என்று கூறினார்கள். (அபூதாவூத்: 1481 

2.   ஜனாஸா தொழுகையில் இரண்டாவது தக்பீருக்குப் பின்னால்:

 

عن أُمَامَةَ بْنُ سَهْلٍ، أَنَّهُ أَخْبَرَهُ رَجُلٌ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ السُّنَّةَ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يُكَبِّرَ الْإِمَامُ ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ بَعْدَ التَّكْبِيرَةِ الْأُولَى سِرًّا فِي نَفْسِهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَخْلُصُ الدُّعَاءَ لِلْجَنَازَةِ فِي التَّكْبِيرَاتِ، لَا يَقْرَأُ فِي شَيْءٍ مِنْهُنَّ، ثُمَّ يُسَلِّمُ سِرًّا فِي نَفْسِهِ. مسند الشافع 

ஜனாஸா தொழுகையில் சுன்னத்தாகிறது இமாம் தக்பீர் சொல்லி முதல் தக்பீருக்குப் பின் சூரத்துல் ஃபாத்திஹாவை தன் மனதிற்குள் ஓத வேண்டும். பின்னர் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலாவத் கூற வேண்டும்….. (முஸ்னதுஷ் ஷாபியீ 

(ஹனபி மத்ஹபில் முதல் தக்பீருக்குப்பின் ஃதனா ஓதினாலே போதுமானது அதிலேயே அல்லாஹ்வை புகழுதல் உண்டாகிவிடுகிறது. இந்த ஹதீஸூம் அல்லாஹ்வை புகழுதல் என்ற அடிப்படையில்தான் அல்ஹம்து சூரா ஓதப்பட்டுள்ளது என்று ஹனபி மத்ஹபில் கூறப்பட்டுள்ளது. 

3.  ஜூம்ஆவுடைய நாளில் 

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ» ن : 1374

உங்கள் நாட்களில் சிறந்தது ஜூம்ஆவுடைய நாளாகும். அந்நாளில்தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். மேலும் அந்நாளில்தான் கைப்பற்றப்பட்டார்கள். மேலும் அந்நாளில்தான் முதல் ஸூர் ஊதப்படும். எனவே என் மீது ஸலவாத்தை அதிகப்படுத்துங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத்து எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கிவிட்ட பின் உங்களுக்கு எங்களின் ஸலவாத்து எப்படி எடுத்துக் காட்டப்படும்?என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடலை உண்ணுவதை பூமிக்கு தடை செய்து விட்டான் என்று கூறினார்கள். (நஸயி: 1374 

4.  பாங்குக்குப் பின் 

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى الله عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ» م : 384

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஅத்தின் (பாங்கு சொல்வதை) நீங்கள் கேட்டால் அவர் சொல்வதைப் போல் நீங்களும் சொல்லுங்கள். பின்பு என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஏனெனில் என் மீது ஸலவாத் கூறுபவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகின்றான். ……… (முஸ்லிம்: 384 

5.  சபையில்:

 

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ، وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ، إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً، فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ»: وَمَعْنَى قَوْلِهِ: تِرَةً: يَعْنِي حَسْرَةً وَنَدَامَةً. سنن الترمذي : 338 

எந்த ஒரு கூட்டம் ஒரு சபையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறவும் என் மீது ஸலவாத் சொல்லவும் இல்லையோ அவர்கள் மீது நஷ்டம் ஏற்பட்டுவிடும். அவன் (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனை செய்வான். மேலும் அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்.     (திர்மிதி: 3380 

6.  நபிகளாரின் பெயர் கூறப்படுகையில் 

عن حسين ، عن النبي صلى الله عليه وسلم، قال: «إن البخيل من ذكرت عنده، فلم يصل علي» صحيح إبن حبان : 909

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரிடத்தில் நான் கூறப்பட்டு (என் பெயர் சொல்லப்பட்டு)அவர் என் மீது ஸலவாத் கூற வில்லையோ அவரே நிச்சயமாக கஞ்சனாவார். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்: 909 

7.  பள்ளிவாசலில் நுழைகையில் 

عن أبي أُسَيْدٍ الْأَنْصَارِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ  افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، فَإِذَا خَرَجَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ " د : 465

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தால் அவர் நபி (லஸ்) அவர்களின் மீது ஸலாவத்  சொல்லட்டும்….. (அபூதாவூத்: 465 

8.  துஆ செய்கையில்

عَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: " كُلُّ دُعَاءٍ مَحْجُوبٌ  حَتَّى يُصَلَّى عَلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم - " (صحيح الجامع - وقال الالباني في الصحيحة: هو في حُكْم المرفوع  لأن مثله لَا يُقال من قبل الرأي)

ஒவ்வொரு துஆவும் என் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை தடுக்கப்படும்.

( நன்றி: சுந்தர நபியின் மீது சொல்வோம் ஸலவாத்து, தாவூதி ஆலிம்கள் சங்கமம் வியாழன் 8 டிசம்பர் 2016 கட்டுரையிலிருந்து..  

ஆகவே, பெருமானார் {ஸல்} அவர்களை இது போன்ற செயல்களால் மகிழ்வித்து நாளை மறுமையில் பெருமானார் ஸல் அவர்களின் புனித ஷஃபாஅத்துக்குரியவர்களாக நாம் தகுதி பெறுவோம்!!.