Showing posts with label sahaba. Show all posts
Showing posts with label sahaba. Show all posts

Thursday 28 January 2021

 

ஆளுமைக்கு அழகு சேர்த்த

அபூபக்ர் (ரலி) அவர்கள் – 2

 


 


ஜமாஅத்துல் ஆகிர் மாதம் இஸ்லாமிய வரலாறு போற்றிப் புகழ்கிற இரு மேன்மக்கள் வாழ்வியலோடு தொடர்புடைய மாதம் ஆகும்.

 

இஸ்லாமிய ஆட்சியின் முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்பூவுலகை விட்டும் விடை பெற்ற மாதம் ஆகும்.

 

இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாம் கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் ஆட்சியாளாராக பொறுப்பேற்ற மாதம் ஆகும்.

 

ஒரு முஸ்லிமாக, ஒரு முஃமினாக, ஒரு செல்வந்தராக, ஒரு வியாபாரியாக, ஒரு குடும்பத்தலைவராக, ஒரு நண்பராக, ஒரு தந்தையாக, ஒரு மகனாக, ஒரு மாமனாராக, ஒரு சமூகத்தின் தலைவராக, ஒரு வணக்கசாலியாக, ஒரு ஆட்சியாளராக மாநபி {ஸல்} அவர்களுக்குப் பின்னர் இந்த உம்மத்தின் முன் மாதிரி முதல் முஸ்லிமாக வாழ்ந்தவர்கள் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள்.

 

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களை தவிர்த்து விட்டு இஸ்லாமிய வரலாற்றின் எந்த ஒரு பகுதியையும் நாம் வாசித்து விட முடியாது.

 

மக்காவின் வாழ்க்கையா? அங்கே அபூபக்ர் (ரலி) இருப்பார். ஷுஅபே அபூ தாலிப் நிகழ்வா? அங்கே அபூபக்ர் (ரலி) இருப்பார். ஹிஜ்ரத் உடைய பூமியா அங்கேயும் அபூபக்ர் (ரலி) அவர்களைக் காண முடியும்.

 

பத்ர் துவங்கி உஹத், கந்தக் தொடர்ந்து ஃப்த்ஹ் மக்கா வரை அபூபக்ர் (ரலி) இடம் பெற்றிருப்பார்கள்.

 

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவையோ அவைகளை எல்லாம் ஒருங்கே பெற்றிருந்த முழுமையான மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

 

இன்று உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் குறித்து மிக அதிகமாக பேசப்படுகிறது. ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிகாலம் குறித்து அவ்வளவாக பேசப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு நாளும் முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியமான நாளே!

 

நீதியான, நேர்மையான ஆட்சிக்கு முன் உதாரணமாக பேசப்படுகிற உமர் (ரலி) அவர்களின் ஆட்சிமுறைக்கு முன்மாதிரியே ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் என்றால் அது மிகையல்ல.

روي في السير عن عمر بن الخطاب قال: كنت أفتقد أبا بكر أيام خلافته ما بين فترة وأخرى، فلحقته يوما فإذا هو بظاهر المدينة -أي خارجها- قد خرج متسللا، فأدركته وقد دخل بيتا حقيرا في ضواحي المدينة، فمكث هناك مدة، ثم خرج وعاد إلى المدينة، فقلت: لأدخلن هذا البيت، فدخلت فإذا امرأة عجوز عمياء، وحولها صبية صغار، فقلت: يرحمك الله يا أمة الله من هذا الرجل الذي خرج منكم الآن؟ فقالت: أنه ليتردد علينا حينا، والله إني لا أعرفه، فقلت: فما يفعل؟ فقالت: إنه يأتي إلينا فيكنس دارنا، ويطبخ عشاءنا، وينظف قدورنا، ويجلب لنا الماء، ثم يذهب، فبكى عمر حينذاك، وقال: الله أكبر والله لقد أتعبت من بعدك يا أبكر.

உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியாளராக இருந்த போது பல நாட்கள் அவர்களை பார்க்க முடியாமல் தவித்தேன். ஒரு நாள் நான் அவர்களை ஊரு (மதீனாவு) க்கு வெளியே மறைந்து மறைந்து செல்லக் கூடியர்வர்களாகக் கண்டேன்.

 

மதீனாவிற்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு வீட்டில் நுழைவதைக் கண்டேன். நீண்ட நேரம் அந்த வீட்டில் அவர்கள் இருந்தார்கள். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து மதீனா நோக்கி சென்றார்கள்.

 

அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறியதும் நான் எனக்குள்அந்த வீட்டுக்கு செல்ல வேண்டும்என்று கூறிக் கொண்டேன்.

 

பின்னர் அந்த வீட்டுக்கு சென்றேன். அங்கே நான் கண்ட காட்சிபார்வையற்ற ஒரு மூதாட்டியும், ஒரு சிறுமியும் இருப்பதைப் பார்த்தேன்.

 

பின்பு நான் அந்த மூதாட்டியிடம்அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! அல்லாஹ்வின் அடிமையே! சொல்லுங்கள்! இதோ உங்கள் வீட்டுக்கு சற்று முன்பாக வந்து சென்றாரே அவர் யார்? என்று கேட்டேன்.

 

அதற்கு அம்மூதாட்டிஅவர் எங்கள் வீட்டிற்கு பல முறை வந்திருக்கின்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். அவர் யார் என்று எனக்குத் தெரியாது.

 

அவர் இங்கே வந்து என்ன செய்கின்றார்? என்று கேட்டேன். அப்போது அம்மூதாட்டி அவர் என் வீட்டிற்கு வந்துஎன் வீட்டை சுத்தம் செய்து, எங்கள் இருவருக்கான இரவு உணவை சமைத்து, எங்கள் இருவரின் அழுக்குகளை (அழுக்கான ஆடைகளை) சுத்தம் செய்து, எங்கள் இருவருக்கும் தேவையான தண்ணீரை கிணற்றிலிருந்து இறைத்து வைத்து விட்டு எல்லா வேலைகளும் முடிந்ததும் அவர் சென்று விடுவார்என்று கூறினார்.

 

இதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். பின்பு நான்அல்லாஹ் மிகப் பெரியவன்! அபூபக்ரே! அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! உங்களுக்கு பின்னால் உங்களின் இந்த அடிச்சுவட்டை உறுதியாக நான் பின்பற்றுவேன்!” என்று எனக்குள்ளாக நான் கூறிக் கொண்டேன்.              ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )

 

இப்போது சொல்லுங்கள்! உமர் (ரலி) அவர்களின் நீதியான, நேர்மையான ஆட்சிக்கு மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் யார் என்று?.

 

முதல் உத்தரவும்மன உறுதியும்

 

فلما بويع لأبي بكر رضي الله تعالى عنه بالخلافة أمر بريدة أن يذهب باللواء إلى بيت أسامة وأن يمضي أسامة لما أمر به.
فلما مات صلى الله عليه وسلم ارتدت العرب، أي فإنه لما اشتهرت وفاة النبي صلى الله عليه وسلم، ظهر النفاق، وقويت نفوس أهل النصرانية واليهودية، وصارت المسلمون كالغنم المطيرة في الليلة الشاتية، وارتدت طوائف من العرب وقالوا نصلي ولا ندفع الزكاة وعند ذلك كلم أبو بكر رضي الله تعالى عنه في منع أسامة من السفر: أي قالوا له كيف يتوجه هذا الجيش إلى الروم وقد ارتدت العرب حول المدينة؟ فأبى أي وقال: والله الذي لا إله إلا هو لو جرت الكلاب بأرجل أزواج رسول الله صلى الله عليه وسلم ما أرد جيشا وجهه رسول الله صلى الله عليه وسلم، ولا حللت لواء عقده. وفي لفظ: والله لأن تخطفني الطير أحب إلي من أن أبدأ بشيء قبل أمر رسول الله صلى الله عليه وسلم...

 

அபூபக்ர் (ரலி) அவர்களும் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்து, முதல் உத்தரவாக, உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ரோமர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்யப்பட்ட படை கிளம்பட்டும், அந்தப் படையுடன் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவரும் மதீனாவில் தங்கக் கூடாது, அந்தப் படையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜுர்ஃப் என்ற இடத்தில் போய் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

 

மிகச்சரியாக, மாநபி {ஸல்} அவர்கள் இறந்து 19 நாட்கள் கழித்து, ரபீஉல் ஆகிர் மாதம் இறுதியில் படை கிளம்பியது. ஹிஜ்ரி 8 ம் ஆண்டு, மாநபி {ஸல்} அவர்கள் உயிருடன் இருந்த அந்த காலகட்டத்தில், முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வந்த ரோமப்படைகளை, முஅத்தா என்ற இடத்தில் வைத்து எதிர்ப்பதற்காக உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைத் தயார் செய்தார்கள். இதில் மதீனாவைச் சேர்ந்த 700 இளைஞர்கள் இருந்தார்கள். மாநபி {ஸல்} அவர்கள் உடல் நலம் குன்றியதன் காரணமாக, இந்தப் படை மதீனாவை விட்டும் இன்னும் கிளம்பாத நிலையில் இருந்தது.

 

மாநபி {ஸல்} இப்பூவுலகை விட்டு மறைந்ததன் பின்பு, மதீனாவின் சமூகச் சூழ்நிலை பாதிக்கப்பட்டது, மக்களின் மனங்களில் அமைதியிழந்து காணப்பட்டது, புதிதாக பொய்த் தூதர்கள் பலர் தோன்ற ஆரம்பித்தார்கள். இதனை மூலதனமாக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவர்களும், யூதர்களும் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 

இந்த நிலையில், அபூ மஸ்ஊத் (ரலி) போன்ற பெரிய  நபித்தோழர்கள், உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் மதீனாவின் தற்போதைய சூழ்நிலையில் மதீனாவை விட்டும் ஒரு படை வெளிக்கிளம்பிச் செல்ல வேண்டுமா? அதுவும் கடுங்குளிர் நிலவுகிற நேரத்தில், ஆட்டு இடையனைத் தொலைத்த ஆட்டு மந்தை போல, முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. சுற்றிலும் அந்த ஆட்டை பலி கொள்ளக் காத்திருக்கும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படையெடுப்பு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

 

ஆனால்; அபூபக்ர் (ரலி) அவர்களோ, இது என்னுடைய உத்தரவல்லவே?, இது மாநபி {ஸல்} அவர்கள் உயிர் வாழ்கிற காலத்தில் இட்ட உத்தரவல்லவா?! என்று கேட்டுவிட்டு,. என்னுடைய உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக..! இந்த உத்தரவில் நான் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன். படை புறப்படுவது உறுதி! உங்களுடைய இந்த கருத்தில் நான் உடன்படுவதை விட, ஒரு ஓநாய் என்னைக் கவர்ந்து சென்று விடுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன், நான் இந்த மதீனாவில் தன்னந்தனியாக தனித்து விடப்படினும் சரியே..! என்று கூறினார்கள்.

ذكر بعضهم أن أسامة رضي الله تعالى عنه وقف بالناس عند الخندق وقال لسيدنا عمر: ارجع إلى خليفة رسول الله صلى الله عليه وسلم فاستأذنه أن يأذن لي أن أرجع بالناس، فإن معي وجوه الناس ولا آمن على خليفة رسول الله صلى الله عليه وسلم وثقله وأثقال المسلمين أن يتخطفهم المشركون، وقالت له الأنصار رضي الله تعالى عنهم: فإن أبي أبو بكر إلا أن يمضي: أي الجيش فأبلغه منا السلام، واطلب إليه أن يولي أمرنا رجلا أقدم سنا من أسامة، فقدم عمر على أبي بكر رضي الله تعالى عنهما وأخبره بما قال أسامة

، فقال أبو بكر: والله لو تخطفني الذئاب والكلاب لم أرد قضاء قضى به رسول الله صلى الله عليه وسلم. قال عمر رضي الله تعالى عنه: فإن الأنصار أمروني أن أبلغك أنهم يطلبون أن تولي أمرهم رجلا أقدم سنا من أسامة،

 

படையினர் அனைவரும்  ஜுர்ஃப் என்ற இடத்தில் கூடி  முகாமிட்டிருந்த அந்த நேரத்தில், உமர் (ரலி) அவர்கள் மூலமாக ஒரு கடிதத்தை உஸாமா (ரலி) அவர்கள் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

 

கடிதத்தில்.. கலீஃபா அவர்களே..! நமது படை கிளம்பியவுடன், இங்கே இருக்கிற குழப்பக்காரர்கள் கலீஃபாவான உங்களையும், மாநபி {ஸல்} வாழ்ந்த இந்த புண்ணிய பூமியையும், மக்களையும் சூழ்ந்து தாக்கி விடுவார்களோ என அஞ்சுகின்றேன்!  எனவே, நீங்கள் அனுமதித்தால் நான் மதீனாவில் இருந்து விடுகின்றேன்என்று குறிப்பிடிருந்தார்கள்..

 

உஸாமா (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கலீஃபா அவர்கள், படை புறப்படுவது உறுதி அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்கள்.

 

இந்த நேரத்தில் உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாக, அவரை விட வயதில் மூத்த அனுபவமிக்க ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமிக்கலாமே என்று அங்கு கூடியிருந்த அன்ஸார்கள் இந்த ஆலோசனையை உமர் (ரலி) அவர்களின் முன்பாக வைத்தார்கள்.  இதனை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நீங்களே! தெரிவித்து விடுங்கள் என்றும் கூறினார்கள்.

 

அதன் பின் உமர் (ரலி) அவர்கள் அன்ஸார்கள் கூறிய ஆலோசனையை கலீஃபா அவர்களிடம் முன் வைத்தபொழுது, இதனைக் கேட்ட கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் சினமுற்றவர்களாக..,

 

உங்கள் மீது அழிவு உண்டாகட்டும்! மாநபி {ஸல்} அவர்கள் நியமித்த ஒருவரை என்னைக் கொண்டு நீக்க முனைகின்றீர்களா? என்று கேட்டு விட்டு, கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் படையினரை வழியனுப்பி வைப்பதற்காக ஜுர்ஃப் என்ற இடத்திற்கே வந்தார்கள். தளபதி இருக்கும் இடத்தை நோக்கி நடக்கலானார்கள்.

 

وودعه سيدنا أبو بكر رضي الله تعالى عنه بعد أن سار إلى جنبه ساعة ماشيا، وأسامة راكب، وعبد الرحمن بن عوف يقود براحلة الصديق، فقال أسامة: يا خليفة رسول الله إما أن تركب وإما أن أنزل، فقال: والله لست بنازل، ولست براكب ثم قال له الصديق، رضي الله تعالى عنه: أستودع الله دينك وأمانتك وخواتيم عملك

அப்போது, படைத் தளபதியான உஸாமா (ரலி) அவர்கள் குதிரையில் அமர்ந்து வருகின்றார்கள். கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்துவர, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீது அமராமல் அதனை நடத்திக் கூட்டி வருகின்றார்கள்.

 

இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்கள், உங்களது குதிரையை நீங்கள் ஓட்டி வாருங்கள் அல்லது என்னை நடந்து வர அனுமதியுங்கள் என்று கூறினார்கள்.

 

அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :  நான் குதிரையில் ஏறியும் வர மாட்டேன், உங்களை இறங்கி நடக்கவும் அனுமதிக்க  மாட்டேன் என்று கூறி விட்டு, அல்லாஹ்வின் பாதையில் போரடக் கிளம்பியவரின் பாதங்களில் படக் கூடிய தூசி பட்டதனால் என்னுடைய அந்தஸ்து என்ன குறைந்தா போய்விடும்? என்று கேட்டு விட்டு..

 

அல்லாஹ்வின் பாதையில் சேவை செய்யக்கூடிய ஒருவரின் அந்தஸ்தை அல்லாஹ் 700 மடங்காக உயர்த்துகின்றான், இன்னும் 700 பாவங்களை மன்னிக்கின்றான், 700 நன்மைகளை அவன் கணக்கில் எழுதி விடுகின்றான்என்று கூறினார்கள்.

 

பின்பு, படையினரின் பக்கம் திரும்பி அபுபக்கர் (ரலி) அவர்கள்வீரர்களே..! உங்களுக்கு நான் பத்து கட்டளைகளை இடுகின்றேன். அவற்றை மனதினுள் பதித்துக் கொள்ளுங்கள்..!

 

மோசடியில் ஈடுபடாதீர்கள், உங்களில் தலைவருக்குக் கட்டுப்பட மறுக்காதீர்கள், உடலை அங்கவீனப்படுத்தாதீர்கள். வயதானவர்களையும், பெண்களையும் அல்லது குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள். ஈச்ச மரங்களை வெட்டவோ அல்லது எரிக்கவோ அல்லது கனிதரக் கூடிய மரங்களை வெட்டவோ செய்யாதீர்கள். உணவுக்காக அன்றி ஆடு, மாடு அல்லது ஒட்டகங்களை வெட்டிக் கொல்லாதீர்கள். மடங்களில் தங்கி தங்களது இறுதிக்காலத்தைக் கழிக்கக்கூடிய மக்களை ஒன்றும் செய்யாதீர்கள், அவர்களை அவர்களது வழியிலேயே விட்டு விடுங்கள். நீங்கள் செல்லும் பாதைகளில் விதவிதமான பாத்திரங்களில் உணவு கொண்டு வரக் கூடிய மக்களைக் காண்பீர்கள். அவைகளை நீங்கள் உண்ண ஆரம்பிக்கும் பொழுது, இறைவனது திருப்பெயரை மொழிந்து கொள்ளுங்கள்.

 

இன்னும் உச்சந்தலையில் சிரைத்து, அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் முடிகளை வளர விட்டு சடை போலத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பீர்கள். அவர்களை உங்களது வாளால் தாக்குங்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு முன்னேறுங்கள். எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக இன்னும் கொடிய நோயிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பானாக..! என்று கூறி  படையை வழியனுப்பி வைத்தார்கள்.

 

இந்தப் படை கிளம்பியதன் பின்னர் அரபுலகைச் சுற்றிலும்  வாழ்ந்த மக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய அச்சம் இயல்பாகவே கூடியது. அதாவத, மதீனாவில் மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவும் இந்த நேரத்திலும் கூட படை ஒன்று வெளியே செல்வதென்பது இயலாத காரியம். ஆனாலும், படை கிளம்புகின்றதென்றால், முஸ்லிம்கள் மிகவும் வலிமை வாய்ந்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அர்த்தமாகும் என்று அவர்கள் மதிப்பீடு செய்து கொண்டார்கள்.

 

மூன்றாவது பிரச்சினை…

 

யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்திருந்த 70 ஹாஃபிழ்களின் வீர மரணம் நபித்தோழர்களுக்கு இடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

 

இப்படியே ஹாஃபிழ்களின் மரணம் தொடருமேயானால் இந்த உம்மத்திற்கு பெருமானார் {ஸல்} பேரொளியாக விட்டுச் சென்றிருக்கிற குர்ஆன், ஸுன்னா என்கிற இரண்டில் ஒன்றான குர்ஆன் உடைய நிலைமை என்னவாகும் என்பதே அந்த அச்சத்திற்கு மூல காரணம் ஆகும்.

 

எனவே, அவர்களுடைய இந்த அச்சம் அவ்வப்போது நிகழ்கிற சந்திப்பின் ஊடாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

 

இறுதியாக ஆட்சியாளர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு உமர் (ரலி) அவர்களின் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

 

ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர் (ரலி) என்னை கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற போது அவர்களோடு உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என உமர் என்னிடம் வந்து கூறினார்.

 

அதற்கு நான் உமரிடம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின் கருத்தை நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலை ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்].

 

ஜைத் (ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்: அபூபக்ர் தொடர்ந்து என்னைப்பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர் மாநபி {ஸல்} அவர்களுக்கு வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள் உங்களை நாங்கள் சந்தேகிக்கவில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள்.

 

அல்லாஹ்வின் மீது சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர், உமர் இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன்.

 

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி அபூபக்ர் என்னிடம் திரும்பத்திரும்ப பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ஆகியோரின் மனதில் எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.

 

அதன் பின் குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்ர் அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. ( நூல்: புகாரி, 4986 )

 

அன்று அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மூலமாக வந்த இந்த உம்மத்தின் கவலையை, பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்து தீர்வை நோக்கி நகர்ந்து உடனடியாக செயல் பட்டிருக்காவிட்டால் இன்று உலகின் 200 கோடிக்கும் மேலான மக்களின் நாவுகளிலும், இதயங்களிலும் இறைவனின் வார்த்தையான குர்ஆன் இடம் பெற்றிருக்காது.

 

நான்காம் பிரச்சினை…

 

ஹிஜ்ரி 13, இதே ஜமாஅத்துல் ஆகிர் மாதத்தில் ரோம் நாட்டுப் படையினருக்கும் இஸ்லாமியப் படையினருக்கும் யர்மூக் என்னும் இடத்தில் நிகழ்ந்த பெரிய யுத்தம் தான் யர்மூக் எனும் யுத்தமாகும்.

 

அபூபக்ர் (ரலி) ஆட்சிகாலத்தில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் வல்லரசு ரோமம் தலைதெறிக்க ஓடியது வரலாறு.

 

யுத்தத்தின் பிண்ணனியையும் வெற்றி நிகழ்வையும் காண்போம்.

 

ரோமப் பேரரசர் சீஸர் முஸ்லிம்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அந்தப் பாடத்தை முஸ்லிம்களின் சந்ததியினர் எவரும் எளிதில் மறந்து விடக்கூடாது. எனும் சூளுரையோடு தகுதியும் ஆற்றலும் நிறைந்த பல தளபதிகளின் தலைமையில் சுமார் 4 லட்சம் போர் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.

 

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மண்ணில் இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கின்றது.

 

ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பி, ரோமர்களுக்கு சத்தியதீனின் அறிவை எத்திவைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானித்து, அதற்கான ஆயத்தப்பணிகளில் கலீஃபா அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

 

ரோமை நோக்கி முஸ்லிம்கள் படையெடுத்து வரப்போகிறார்கள் எனும் செய்தியை அறிந்து கொண்ட சீஸர் தன் முக்கிய மந்திரிப் பிரதாணிகளிடம் ஆலோசனைக் கேட்டபோது தான், மேலே சொன்ன சூளுரையை அத்துணை மந்திரிகளும் முன் மொழிந்தனர்.

 

அதற்கு இசைந்த சீஸர் இப்போது 4 லட்சம் வீரர்களுடன் பெரும்படையை அனுப்பி வைத்தார். படை புறப்பட்டு யர்மூக் எனும் நதிக்கரையின் ஒரு பக்கத்திலே முகாமிட்டு இருந்தனர்.

 

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இந்த விஷயம் எத்திவைக்கப் பட்டது. உடனடியாக சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார்.

 

ஈராக் மற்றும் சிரியா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டு திரும்பி மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரலி), முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), யஸீத் இப்னு அபீ சுஃப்யான் (ரலி), அம்ர் இப்னு ஆஸ் (ரலி) ஆகியோர் தலைமையிலான படைப்பிரிவுக்கு கடிதம் மூலம் உடனடியாக ரோம் நோக்கிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

 

இறுதியாக யர்மூக் நதியின் இன்னொரு பக்கத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியப் படையினரும் முகாமிட்டிருந்தனர்.

 

எதிரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் முஸ்லிம்படை வலுவானதாக இருக்கவில்லை.

 

நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஆம்! மொத்தப்படையையும் சேர்த்து 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

 

அத்துணை தளபதிகளும் உடனடியாக ஆலோசனை மன்றத்திற்குள் ஆஜராகுமாறு கட்டளையிட்டார் ஸைஃபுல்லாஹ்காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

 

ஆலோசனை மன்றம் இயங்க ஆரம்பித்ததும் ஒருவர் பின் ஒருவராக தங்களது ஆலோசனைகளை கூறினார்கள். ரொம்பக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் காலித் (ரலி) அவர்கள்.

 

தங்களுடைய ஆலோசனையின் முறைவரும் போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தோழர்களே! உங்களின் ஒவ்வொருவரின் கருத்துக்களும் மிகவும் பின்பற்றப்பட வேண்டியதே! ஆனால், நாம் இன்னும் மிக வேகமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய முக்கியமானச் சூழ்நிலையில் தள்ளப் பட்டிருக்கின்றோம்.

 

நமக்கு அவர்களை எதிர் கொள்ள எண்ணிக்கை ஒன்றும் பெரிய விஷயமல்ல. வலிமையுடன் கூடிய நல்ல செயல்திட்டங்கள் தான் இப்போது நமக்குத் தேவை.

 

நம்மில் ஒவ்வொரு தளபதியும் வெவ்வேறு வகையில் ஆற்றல் மிக்கவர்கள். ஆதலால் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு தளபதியின் கீழ் போரிடுவோம். அத்துணை தளபதிகளுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

 

ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன் களத்தில் போராடுகிற போது, மிக விரைவில் எதிரிகளிடம் இருந்து வெற்றியை நம் வசமாக்கி விடலாம்.என்று கூறினார்.

 

அத்துணை தளபதிகளும் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முடிவை ஆமோதித்தனர். இறுதியாக முதல் நாள் போரை காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையிலேயே எதிர் கொள்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

 

முதல் நாள் போர் துவங்க சில மணித்துளிகளே இருந்த போது படை வீரர்கள் முன் தோன்றிய காலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் என்னருமைத் தோழர்களே! இந்த நாள் அல்லாஹ் நம் வாழ்வில் வழங்கிய சிறப்புமிக்க நாள்!

 

இன்றைய தினத்தில் நம் முரட்டுத்தனம், பாரம்பரிய குலப்பெருமைகள் ஆகியவகளுக்கு துளியளவு கூட இடமில்லை.

 

என்னருமைத் தோழர்களே! அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை முழு மூச்சாகக் கொண்டு போரிடுங்கள்!

 

இன்று நம் படைக்கு மிகப்பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றுள்ளனர். ஒருவர்பின் ஒருவராக உங்களை வழி நடத்த உள்ளனர். அவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

 

உங்கள் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க நீங்களும், நானும் உதவிடவும் நம்மை பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். என்று வீர உரை நிகழ்த்தினார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294,295,296 )

 

பின்னர் யர்மூக் யுத்தத்தின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் மாறிப்போனதை, முஸ்லிம்கள் அடைந்த இமாலய வெற்றியாய் பதிவு செய்யப்பட்டதை வரலாறு சான்றுரைத்துக் கொண்டிருக்கின்றது.

 

ஐந்தாம் பிரச்சினை…

 

فَقَدِمَ عَلَى أَبِي بَكْرٍ، فَقَالَ لَهُ عُمَرُ:

هَلْ لَكَ يَا مُعَاذُ أَنْ تُطِيْعَنِي؟ تَدْفَعُ هَذَا المَالَ إِلَى أَبِي بَكْرٍ، فَإِنْ أَعْطَاكَهُ فَاقْبَلْهُ.

فَقَالَ: لاَ أَدْفَعُهُ إِلَيْهِ، وَإِنَّمَا بَعَثَنِي نَبِيُّ اللهِ لِيَجْبُرَنِي.

فَانْطَلَقَ عُمَرُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: خُذْ مِنْهُ، وَدَعْ لَهُ.

قَالَ: مَا كُنْتُ لأَفْعَلَ، وَإِنَّمَا بَعَثَهُ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- لِيَجْبُرَهُ.

فَلَمَّا أَصْبَحَ مُعَاذٌ، انْطَلَقَ إِلَى عُمَرَ، فَقَالَ:

مَا أَرَانِي إِلاَّ فَاعِلَ الَّذِي قُلْتَ، لَقَدْ رَأَيْتُنِي البَارِحَةَ - أَظُنُّهُ قَالَ - أُجَرُّ إِلَى النَّارِ، وَأَنْتَ آخِذٌ بِحُجْزَتِي.

فَانْطَلَقَ إِلَى أَبِي بَكْرٍ بِكُلِّ مَا جَاءَ بِهِ، حَتَّى جَاءهُ بِسَوْطِهِ.

 

وفي خلافة أبي بكر رجع معاذ من اليمن، وكان عمر قد علم أن معاذا أثرى.. فاقترح على الخليفة أبي بكر أن يشاطره ثروته وماله..!

ولم ينتظر عمر، بل نهض مسرعا الى دار معاذ وألقى عليه مقالته..

كان معاذ ظاهر الكف، طاهر الذمة، ولئن كان قد أثري، فانه لم يكتسب اثما، ولم يقترف شبهة، ومن ثم فقد رفض عرض عمر، وناقشه رأيه..

وتركه عمر وانصرف..

وفي الغداة، كان معاذ يطوي الأرض حثيثا شطر دار عمر..

ولا يكاد يلقاه.. حتى يعنقه ودموعه تسبق كلماته وتقول:

" لقد رأيت الليلة في منامي أني أخوض حومة ماء، أخشى على نفسي الغرق.. حتى جئت وخلصتني يا عمر"..

وذهبا معا الى أبي بكر.. وطلب اليه معاذ أن يشاطره ماله، فقال أبو بكر:" لا آخذ منك شيئا"..

فنظر عمر الى معاذ وقال:" الآن حلّ وطاب"..

ما كان أبو بكر الورع ليترك لمعاذ درهما واحدا، لو علم أنه أخذه بغير حق..

وما كان عمر متجنيا على معاذ بتهمة أو ظن..

 

மதீனாவில் மழை இல்லாமல் போய் கடுமையான பஞ்சம் நிலவியது. விவசாயத் தொழில் நலிவடைந்து பொருளாதாரம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அன்றாட உணவுத்தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

பல முறை கலீஃபாவை சந்தித்து மக்கள் தங்கள் சூழ்நிலைகளை முறையிட்டனர். அப்போதெல்லாம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய வார்த்தைகள் இவை தாம் “பொறுமையாக இருங்கள்! அல்லாஹ் இந்த சூழ்நிலையில் இருந்து மிக விரைவில் மீட்சியை தருவான்” என்று.

 

ஒரு கட்டத்தில் அரசு கஜானாவிலும் பொருளாதார நெருக்கடியை கலீஃபா உணர்ந்த போது, ஒரு மாலைப் பொழுதில் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.

 

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒரு யோசனை எம்மிடம் உண்டு. வேண்டுமானால் முஆத் (ரலி) அவர்களை அழைத்து அவர்கள் யமனில் சம்பாதித்த அவரின் தேவைக்குப் போக மீதமிருக்கிற அனைத்து சொத்துக்களையும் அரசுக்கு ஒப்படைக்கு மாறு சொல்லுங்கள்.

 

நீங்கள் ஆட்சியாளர் தானே! அவர் தந்தார் என்றால் இந்த நிலை கொஞ்சம் மாறிவிடும் அல்லவா?” என்று கூறினார்கள்.

 

அது கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்அவர்களாக விரும்பி எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்! மாறாக, அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி நான் பெற்றுக் கொள்ளமாட்டேன்.” என்றும், மேலும், முஆத் அவர்களை நபி {ஸல்} அவர்கள் யமனுக்கு அனுப்பும் போதே பொருளீட்டுவதற்கும் சம்பாத்யம் செய்வதற்கும் அனுமதி அளித்திருந்தார்கள்என்று கூறி மறுத்து விட்டார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்ததும், முஆத் (ரலி) அவர்களை நேரிடையாகச் சந்தித்து மதீனாவின் நிலையை எடுத்துக் கூறி தமது அபிப்பிராயத்தைக் கூறினார்கள்.

 

முஆத் (ரலி) அவர்கள் மறுத்து விடுகின்றார்கள். முஆத் (ரலி) மறுத்ததும் அங்கிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள்.

 

உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயத்தை நிராகரித்த முஆத் (ரலி) அவர்கள் நீண்ட நேரம் யோசித்தார்கள். சட்டென அவருக்கு பழைய கனவொன்று மின்னல் கீற்று போல் பளிச்சிட்டு மறைந்தது. மீண்டும் அதிகம் உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயம் குறித்து சிந்தித்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

 

ஒருவாராக உமர் (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நடந்தார்கள். அந்த நடையில் அவர்கள் எடுத்த முடிவின் வேகம் தென்பட்டது.

 

வீட்டின் கதவை தட்டி உமர் (ரலி) அவர்களை வெளியே அழைத்த முஆத் (ரலி) அவர்கள்உமர் அவர்களே! நான் உங்களுடைய ஆலோசனையையும், அபிப்பிராயத்தையும் ஏற்கின்றேன்

 

என்னுடைய இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று என்னிடம் நீங்கள் அவசியம் கேட்கத்தான் வேண்டும்?” என்றார் முஆத் (ரலி) அவர்கள்.

 

உம்முடைய மன மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று உமர் (ரலி) அவர்கள் வினவியதற்கு

 

ஒரு முறை நான் கனவொன்று கண்டேன். அதில் ஆழமான நீர்ச்சுழலில் நான் சிக்கிக்கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கப்போகிறேன் எனும் அச்சம் மனதை ஆட்கொண்ட போது, நீங்கள் தான் வந்து கரம் கொடுத்து என்னைக் காப்பாற்றினீர்கள்என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 

பின்னர், உமர் அவர்களையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று தமது பொருளாதாரம் முழுவதையும் கொடுத்து விட்டு, அமீருல் முஃமினீன் அவர்களே! இதோ இங்கிருப்பவைகள் மட்டும் தான் நான் சம்பாதித்தது! அதை நான் அல்லாஹ்விற்காக தந்துவிட்டேன்என்று கூறி சென்று விட்டார்கள்.

 

(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:139, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்:1)

 

இந்த நிகழ்விற்குப் பின்னால் அரசின் எல்லா முன்னெடுப்புகளுக்கும் ஜகாத், ஸதகா போன்ற மார்க்கத்தின் கடமையான உபரியான அம்சங்களை நிறைவேற்றியதோடு மேல்மிச்சமான பொருளாதாரத்தை முஸ்லிம் சமூகத்தின் கவலையான, சிரமமான நேரத்தில் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் செல்வந்தர்களின் சிந்தனையில் ஏற்பட்டது.

 

இன்ஷா அல்லாஹ்… அடுத்த வாரமும் தொடரும்…