Wednesday, 24 December 2014சாதனைப் படைத்த சர்தார் நபி {ஸல்} அவர்கள்!!
புகழ்மிக்க மனிதர்கள் என்று வரலாறு அறிமுகப்படுத்தும் பெரும்பாலான மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; அல்லது ஆயுதமேந்தி போராடும் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினார்கள்.

ஆன்மீக பீடத்தில் அமர்ந்து ஆசானாக இருந்தார்கள்; அல்லது மதங்களை உருவாக்கினார்கள், மாபெரும் சட்டங்களை இயற்றினார்கள் அல்லது அரசியல், அதிகாரங்களை கையகப்படுத்தி ராஜ்ஜியங்களையும் பேரரசுகளையும் நிறுவினார்கள்.

மனித சமூகத்திற்கு பயன் தரும் அரிய பல கண்டுபிடிப்புகளைத் தந்தார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்!

தங்களது கண்களின் முன்னர் மிகப்பெரிதாகக் காட்சி தந்த சில உலகாதாயத் தேவைகளை மனித சமூகத்திற்கான விடியலாகவும், மனித வாழ்க்கைக்கான அடிப்படை அம்சமாகவும் கருதினர்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது {ஸல்} அவர்கள்அன்றைய பரந்த உலகின் நிலப்பரப்பில் வாழ்ந்த கோடிக்கணக்கான மனித மனங்களை ஈர்த்தார்கள்.

ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானம், உலகம், தத்துவம், சட்டம், போன்ற பல்வேறு துறைகளில் நுழைந்து பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மனிதகுலம் அனைத்திற்கும் எக்காலமும் பயன் தருகிற ஒரு வாழ்க்கை நெறியை ஏற்படுத்தி, அது தான் மனித சமூகத்திற்கான விடியல் என்றும், மனித வாழ்விற்கான அடிப்படை அம்சம் என்றும் அறைகூவல் விடுத்தார்கள்.

அத்தோடு நின்று விடாமல், அதன் வழி நின்று வாழ்ந்து காட்டி, வெற்றி பெற்று, அதன் வழி நடக்கிற கோடான கோடி மக்களை உருவாக்கி, இன்றளவிலும் உலகளவில் முஸ்லிம்களின் இதயத்தில் சாதனை படைத்த நாயகராய்  வீற்றிருக்கின்றார்கள் சர்தார் நபி {ஸல்} அவர்கள்.

உலகில் வெறெந்த தலைவரும் படைத்திடாத, படைத்திட இயலாத சாதனைகள் பலதிற்குச் சொந்தக்காரர் தான் சர்தார் நபி {ஸல்} அவர்கள்.

நவீன வரலாற்றின் எந்த ஒரு தலைவரோடும் முஹம்மது {ஸல்} அவர்களை ஒப்பிட இந்த உலகத்தின் எந்த ஒரு வரலாற்று ஆசிரியருக்கும் தகுதி இல்லை.

ஏனெனில், முஹம்மது {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனும் அரியணையில் அமர்ந்து மனிதகுலத்தை வழி நடத்தினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் படைத்த மகத்தான, மிக உன்னதமான சாதனைகளில் இதுவும் ஒன்று!

இன, நிற, மொழி, மத ரீதியிலான பாகுபாடு அணுகுமுறையை முற்றிலும் அகற்றி, தீண்டாமை எனும் கொடிய விஷத்திலிருந்து மனித சமூகத்தைக் காப்பாற்றி, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்தி, ஒரு மனிதனை மனிதனாக அறிமுகப் படுத்தியது!”

வரலாற்று ஆசிரியர் ராமகிருஷ்ண ராவ் என்பவர் தான் எழுதிய நூல் ஒன்றில் தீண்டாமை அகல வழி கூறும் போது.....

"He must be called the Savior of Humanity. I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness."
 [The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8, 1936]

“அனைத்துலக சகோதரத்துவம், மனித இன சமத்துவம் குறித்து முஹம்மது {ஸல்} அவர்கள் பறைசாற்றிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் சமூக முன்னேற்றத்திற்கு மாபெரும் சேவைகள் ஆற்றியிருப்பதை எடுத்துரைக்கின்றன.

பெரும் சமயநெறிகள் அனைத்தும் இதே கொள்கையை போதிக்கின்றன. ஆனால், இஸ்லாத்தின் தூதர் முஹம்மது {ஸல்} அவர்கள் மட்டுமே இந்தக் கொள்கையை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார்.

அந்தக் கொள்கையின் மதிப்பு முழுமையாக உணரப்பட வேண்டும். அவர்களின்  சாதனை ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.

உலக மக்களின் மனசாட்சி விழித்தெழுந்து விட்டால் இனமாச்சரியங்கள் மறைந்து விடும்; மனித இன சகோதரத்துவக் கொள்கை நடைமுறக்கு வந்து விடும்” என்று குறிப்பிடுகின்றார்.

( நூல்: MOHAMMAD THE PROPHET OF ISLAM, PAGE NO: 7 )

தீண்டாமை என்றால் என்ன?

ஒரு மனிதன் தன்னைப் போன்ற சக மனிதன் ஒருவனைப் பிறப்பால் தாழ்ந்தவனாகக் கருதுவது தான் தீண்டாமை என்பதாகும்.

தீண்டாமையின் அளவுகோலைப் பொறுத்தமட்டில் அது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

நம் நாட்டில் காணப்படும் ஜாதீய அடிப்படையிலான தீண்டாமை, மொழி அடிப்படையிலான வேற்றுமை, மாநில அடிப்படையிலான பாகுபாடு, மேலை நாடுகளில் காணப்படும் இன, நிற ரீதியிலான தீண்டாமை என்று பல்வேறு வடிவங்களைக் கொண்டது தான் தீண்டாமை.

தீண்டாமை என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய ஒரு விஷயமில்லை. மனிதன் இப்பூமியில் வாழத்தொடங்கிய போதே தீண்டாமை எனும் கொடிய குணமும் மனிதனோடு வாழத்தொடங்கி, இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை மனித சமுதாயத்தில் விருட்சமாய் வளர்ந்திருப்பதை நாம் பார்த்து வருகின்றோம்.

கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ் கர்ணண் அவர்கள் “தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவனாக இருப்பதால் தன்னிடம் சக நீதிபதிகள் கேவலமாக நடத்துகின்றார்கள்” என்பதாக பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அந்த செய்தியை நாம் அறிந்திருக்கின்றோம்.

தீண்டாமை எனும் கொடிய குணம் பாமரர்களில் தொடங்கி, மெத்தப் படித்த மேன்மக்கள் வரை பரவியிருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

இதில், இன்னொரு கேள்வியும் இருக்கின்றது “படித்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கே இந்த நிலை என்றால்?.....

ஒருவகையில் உலகில் தீண்டாமை எனும் கொடிய விஷம் வேரூண்ற மதங்களே அடிப்படையாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

இந்து மதம் போதிக்கும் தீண்டாமை....

உலகில் தீண்டாமையை விதைத்ததிலும், அதை அறுவடை செய்ததிலும் இந்து மதத்திற்கு ஈடு இணையாக வேறெந்த மதமும் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல.

கடவுள் தான் மனிதனை உயர்வு, தாழ்வோடு படைத்து ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார் என்று கூறுகின்றது.

1. பிறப்பில் தீண்டாமை.

”பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார்”                      ( மனு தர்மம் 2:35 )

2. பெயரில் தீண்டாமை.

“பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும் படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.”                                              ( மனு தர்மம் 3:23 )

3. தொழிலில் தீண்டாமை.

“இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்புதான். பிரம்மனின் ஆணை அவ்வாறு.”

4. உச்சகட்ட தீண்டாமை.

பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புக்களைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.

பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்கு தீங்கற்ற தண்டனை தருக, இடுப்பில் சூடு போடுக, உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக, ஊரை விட்டும் அவனைத் துரத்திடுக.

பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு, மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு, மலத்தை வீசினால் ஆசனப்பகுதியை அறுத்து விடு.

சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.

சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வதைத்தால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும், பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்”`

                                             ( மனு தர்மம்: 9: 263 – 267 )

யூத, கிறிஸ்தவ மதங்கள் போதிக்கும் தீண்டாமை.

நாம் பிறப்பால் யூதர்கள். நாம் யூதர் அல்லாத பாவிகள் இல்லை.” (கேல்: 2:15)

அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும், கூலிவேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.”                                      ( லேவியராகமம்: 22:12 )

இஸ்ரவேல் மக்களைத்தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்கு கிறிஸ்தவ மார்க்கம் தயாராக இல்லை.”                  ( செகண்ட் கிங்: 5:15 )

அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடத்தில்) வந்து , “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் (இயேசு) ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்போது, அவருடைய சீடர்கள் வந்து, “ஆண்டவரே! இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே! இவளை அனுப்பிவிடும்என்று வேண்டிக் கொண்டனர்.

அதற்கு அவர், “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பட்டேனே அன்றி மற்றபடி அல்லஎன்றார்.

அப்போது, அந்த ஸ்திரீ வந்துஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள். அதற்கவர் அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது நல்லதல்லஎன்றார்.

அதற்கவள், “மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் திண்ணுமே!” என்றாள்.
(மத்தேயு: 15:22 – 27)

மேற்கூறிய இந்தச் சம்பவத்தில் கானானிய இன மக்களை நாய்கள் என்றும், இஸ்ரவேலர்களை பிள்ளைகள் என்றும் பைபிள் கூறுகின்றது.

வர்ணாசிரம தத்துவத்தை கிறிஸ்துவமும், யூதமும் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் தேவையில்லை. ஏனெனில், யூதர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் பைபிளின் பழைய ஏற்பாடு பொதுவான வேதமாகும்.

எனவே தான் இஸ்லாமிய கொள்கைகள் இந்த உலகத்தில் வளர்ந்து விடக் கூடாது என்பதில் உலகில் எல்லா நாடுகளின் தலைவர்களும் ஒரே சிந்தனையில் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் மட்டும் தான் உயர்குலத்தோனையும், தாழ்ந்தோனையும் ஒரே வரிசையில் வைத்துப் பார்க்கிறது.

முதலாளியையும், தொழிலாளியையும் ஒரே அந்தஸ்தோடு நோக்குகின்றது.

ஆள்பவனும், ஆளப்படுபவனும் ஒருவருக்கொருவர் சமமானவர் என்ற உயரிய சிந்தனையை உருவாக்கி இருக்கிறது.

கருப்புத் தோல் உடையவனும், சிவப்புத் தோலுடையவனும் எந்த விதத்திலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர் இல்லை என்று உறுதி படுத்தி இருக்கின்றது.

இந்த தத்துவங்களின் அடிப்படையில் மனித சமூகம் உருவாகுமானால், ”அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்துவிடும். ஐரோப்பிய, பிரிட்டனின் தலைமைத்துவம் காவு கொள்ளப்படும். ரஷ்ய, சீன முதலாளித்துவம் சிதைந்து போகும். இஸ்ரேலிய இனவெறி இல்லாமல் போகும். இந்திய தேசத்தின் இந்து ராஜ்ஜிய கனவு காணாமல் போகும்என்கிற அச்சம் இந்த நாடுகளுக்கும், இதன் தோழமை நாடுகளுக்கும் இருப்பதால் தான் இஸ்லாத்தை பயங்கரவாத மார்க்கமாக சித்தரிப்பதிலும், அதை ஸ்திரப்படுத்துவதிலும் உலக நாடுகள் முனைப்போடு இருப்பதை நாம் உணர வேண்டும்.

உலகின் எல்லா நாடுகளுமே, . நா. வின் துணையோடு தீண்டாமையை ஒழிப்பதாக உறுதி பூண்டு விட்டு, மறைமுகமாக, கொல்லைப் புறத்தின் வாயிலாக தீண்டாமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

தீண்டாமை எனும் கொடிய விருட்சத்தை வேரோடு வீழ்த்திட புறப்பட்டவர்களாக உலக வரலாறு புகழ்ந்து பாராட்டும்நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன், ஸ்டாலின், அண்ணல் காந்தி, டாக்டர் அம்பேத்கர், . வே. ரா., அறிஞர் அண்ணா போன்றோர் ஓரளவே தங்களின் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் வெற்றி கண்டனர்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மாத்திரம் தான் தீண்டாமை எனும் கொடிய விருட்சத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி சாய்த்தார்கள்.

தீண்டாமையை அண்ணலார் {ஸல்} ஒழித்துக் கட்டிய விதம்.

அன்றைய அரபுலக மக்கள் குலப்பெருமையாலும், இன பேதத்தாலும், நிற வெறியாலும், மொழி பாகுபாட்டாலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், தலைமுறைக்கும் பகைமையை வளர்த்து பழிதீர்த்துக் கொண்டும் இருந்த கால கட்டத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அம்மக்களிடையே ஏகத்துவ சுகந்தத்தை, இஸ்லாமிய அழைப்பை அறிமுகப் படுத்தினார்கள்.

தீண்டாமையின் வீரியத்தை, அதன் விபரீதத்தை அல்லாஹ்வின் அழகிய வழிகாட்டலோடு அங்குலம் அங்குலமாய் தெளிவு படுத்தினார்கள்.

மனிதன் தன் சக மனிதன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தும், கொடுக்க வேண்டிய உரிமைகளிலிருந்தும் புறக்கணித்து ஒதுங்கி நிற்கும் போது தான் தீண்டாமை உருவாகிறது என்று கூறி மாசு படிந்திருந்த அவர்களின் இதயங்களைத் தூய்மைபடுத்தினார்கள்.

சக மனிதனின் மீதான உரிமையை, கடமையை நிறைவேற்றும் போது இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் வெகுமதிகளைக் குறித்து ஆர்வமூட்டி, சக மனிதனின் மீதான உரிமைகளில், கடமைகளில் தவறிடும் பட்சத்தில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் சாபங்களைக் குறித்து எச்சரித்து சக மனிதர்களை சமத்துவமாகக் கருதுகிற, சகோதரனாக பாவிக்கிற ஓர் உன்னத நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்தார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

அன்றிலிருந்து தான் அரபுலக மக்கள் “மானுடத்தின் வசந்தத்தை” நுகர ஆரம்பித்தார்கள்.

1. மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே!

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ()
“மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவராவார். அல்லாஹ்வே நன்கறிபவன்; நன்கறிந்தவன்”.                                              (அல்குர்ஆன்:49:13)

இந்த ஓர் இறைவசனத்தின் உதவி கொண்டு பெருமானார் {ஸல்} அவர்கள் இறைவனின் பெயரால் நிலவி வந்த தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

மனித இனம் முழுமையும் ஆதம், ஹவ்வா (அலை) என்கிற ஒரே ஜோடியின் மூலம் தான் படைக்கப்பட்டுள்ளனர். மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பால், இனத்தால், மொழியால், நிறத்தால் கலாச்சாரத்தால், நாட்டால் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது என்ற தீண்டாமைக்கு எதிரான இந்த முதல் பிரகடனமே அம்மக்களின் அறியாமைக்கு திரையிட்டது.

2. தீண்டாமையில் உழல்பவன் சுவனம் செல்லத் தடை.

பிற மனிதர்களை எந்த நிலையிலும் அவர்கள் தம்மை விட தாழ்ந்தவர்களாகக் கருதுவதும், தன்னை உயர்வாகக் கருதுவதும் தான் ஒரு வகையில் தீண்டாமை வேர் விட்டு வளர காரணம் என்பதை உணர்ந்த நபி {ஸல்} அவர்கள் அதற்கு இப்படி ஓர் தடை உத்தரவை பிறப்பித்தார்கள்.

وعن عبد الله بن مسعود رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا، ونعله حسنة ؟ قال: إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس رواه مسلم .
بطر الحق: دفعه ورده على قائله غمط الناس: احتقارهم .

எவருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்என்று நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த ஓர் சபையில் பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது செருப்பு அழகாக இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகின்றார். இதுவும் தற்பெருமையாக கருதப்படுமா?” என்று வினவினார்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்அல்லாஹ் அழகானவன்; அழகையே விரும்புகின்றான். உண்மையில், தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மக்களைக் கேவலமாக எண்ணுவதும் தான்என்று பதில் கூறினார்கள்.

3. தொழில் ரீதியிலான பாகுபாட்டிற்கு தடை.

அன்றைய சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு தொழிலை, குறிப்பிட்ட சமூக மக்கள் தான் செய்ய வேண்டும் என்ற நிலையும், அத்தகைய தொழிலை மேற்கொள்பவர்கள் இழிநிலை கொண்டோராக கருதப்படுவதையும் கண்ட மாநபி {ஸல்} அவர்கள், அதை களைவதற்கு அந்த தொழிலில் தம்மையும் ஈடுபடுத்தி, தொழிலில் எதுவும் இழிந்த தொழில் இல்லை என்பதை உணர்வுப்பூர்வமாக நிரூபித்துக் காட்டினார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் அனுப்பிய எல்லா இறைத்தூதர்களும் ஆடு மேய்த்திருக்கின்றார்கள்என்று நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த ஓர் சபையில் அண்ணலார் {ஸல்} அவர்கள் கூறிய போது, நபித்தோழர்களில் ஒருவர்அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் ஆடு மேய்த்திருக்கின்றீர்களா?” என்று ஆச்சர்யத்தோடு வினவிய போது, “ஆம்! நானும் மக்காவாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான்என நெகிழ்ச்சியோடு பதில் கூறினார்கள்.

وعن الأسود بن يزيد قال: سئلت عائشة رضي الله عنها: ما كان النبي صلى الله عليه وسلم يصنع في بيته ؟ قالت: كان يكون في مهنة أهله - يعني: خدمة أهله - فإذا حضرت الصلاة، خرج إلى الصلاة رواه البخاري .

أنه كان النبي صلى الله عليه وسلم في بيته في خدمة أهله يحلب الشاة يخصف النعل، يخدمهم في بيتهم،

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்களில் சிலர் வந்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?” என்று வினவியதற்கு, “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டில் தமது அறுந்து போன செருப்பைத் தைப்பார்கள். தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் எங்களோடு இணைந்து செய்வார்கள். ஆடுகளின் பாலைக் கறந்து தருவார்கள்என்று பதிலளித்தார்கள்.                         ( நூல்: புகாரி )

حدثنا أحمد بن عثمان، حدثنا شريح بن مسلمة، حدثني إبراهيم بن يوسف، حدثني أبي، عن أبي إسحاق، عن البراء يحدث قال: لما كان يوم الأحزاب وخندق رسول الله رأيته ينقل من تراب الخندق، حتى وارى عني التراب جلدة بطنه، وكان كثير الشعر، فسمعته يرتجز بكلمات عبد الله بن رواحة، وهو ينقل من التراب

அகழ்யுத்தத்தின் போது நபி {ஸல்} அவர்கள் மக்களுடன் இணைந்து அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டார்கள். மண் சுமந்தார்கள். அப்போது நபிகளாரின் வயிற்றுப் பகுதியை மண் மறைத்திருந்ததை நான் பார்த்தேன்என பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                       ( நூல்: புகாரி )

عن هشام عن عروة ، عن أبيه ، عن عائشة أن رسول الله - صلى الله عليه وسلم - رأى في جدار القبلة بصاقا ، أو مخاطا ، أو نخامة فحكه .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பள்ளிவாசலில் எங்கேனும் சளியைக் கண்டால் அதைத் தாமே தங்களின் கையால் சுரண்டி சுத்தம் செய்வார்கள்என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.            ( நூல்: புகாரி )

فإن أول عمل قام به النبي صلى الله عليه وسلم عندما قدم إلى المدينة المنورة هو بناؤه لمسجده الشريف في المكان الذي بركت فيه ناقته، وكان ملكاً ليتيمين فاشتراه النبي صلى الله عليه وسلم وأقام عليه المسجد، وكان يعمل فيه بنفسه مع أصحابه الكرام، وقد بدأ بناء المسجد في ربيع الأول سنة واحد من الهجرة بعد وصول النبي صلى الله عليه وسلم مباشرة، كما جاء في كتاب "الرحيق المختوم" للمباركفوري وغيره.

நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தடைந்த போது, இறையில்லத்தை நிர்மாணித்தார்கள். மக்களோடு சேர்ந்து தாமும் கல்லையும், மண்ணையும் சுமந்தார்கள்.                                              ( ரஹீக் அல் மஃக்தூம் )


4. சுயமரியாதை, மற்றும் திருமண பந்தத்தின் மீதான தீண்டாமையைக் களைதல்.

مرّ رجلٌ على رسول الله صلى الله عليه وسلم فقال: «ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن يُنْكح، وإن شَفَع أن يُشَفّع، وإن قال أن يُسْتمع له. قال: ثم سكت، فمر رجل من فقراء المسلمين فقال: ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن لا يُنْكح، وإن شَفَع أن لا يُشَفّع، وإن قال أن لا يُسْتمع له، فقال رسول الله صلى الله عليه وسلم
«هذا خيرٌ من ملء الأرض من مثل هذا» «»

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்கள் சிலரும் அமர்ந்திருந்த இடத்தை ஒரு மனிதர் கடந்து சென்றார்.

அப்போது, அண்ணலார் இவர் மீதான உங்களின் அபிப்பிராயம் என்ன?” என்று வினவியதற்குநபித்தோழர்கள்இவர் சுதந்திரமான ஒருவர், இவர் திருமணம் செய்ய பெண் கேட்டால், மணமுடித்து வைக்கப்படுவார். ஏதேனும் ஒரு விவகாரத்தில் இவர் பரிந்துரைத்தால் உடனடியாக இவரின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். அவர் ஏதாவது சொன்னால் செவி தாழ்த்தி மக்களெல்லாம் கேட்பார்கள்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்ட மாநபி {ஸல்} அவர்கள், சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் அண்ணலாரின் சபையைக் கடந்து சென்ற ஒரு ஏழை முஸ்லிமைக் குறித்துஇவரின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று வினவினார்கள்.

அதற்கு, நபித்தோழர்கள், “இவரும் ஒரு சுதந்திரமான மனிதர் தான், எனினும் இவர் பெண் கேட்டால் எவரும் கொடுக்க முன் வர மாட்டார்கள். இவர் பரிந்துரைத்தால் அது பரிசீலிக்கப்படவே மாட்டாது. இவர் பேச்சை எவரும் காது கொடுத்து கேட்கவும் மாட்டார்கள்என பதிலளித்தனர்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நீங்கள் முதலில் விமர்சித்த நபரை விடவும், நிரப்பமான இந்த பூமியை விடவும் இந்த ஏழை மனிதர் தான் மிகவும் சிறந்தவர்என கூறினார்கள்.                              ( நூல்: புகாரி ) 

மனிதர்களை மதிப்பதின் மீதான உங்களின் அளவீடுகளும், அணுகுமுறையும் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டி சுயமரியாதை உள்ள எந்த ஒருவரும் மதிக்கப்பட வேண்டும் என்பதை நபிகளார் தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.

ذكره أبو داود في (المراسيل)، حدثنا عمرو بن عثمان وكثير بن عبيد قالا حدثنا بقية بن الوليد قال حدثني الزهري قال: أمر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بني بياضة أن يزوجوا أبا هند امرأة منهم، فقالوا لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
نزوج بناتنا موالينا؟  فأنزل الله عز وجل:" إِنَّا خَلَقْناكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثى وَجَعَلْناكُمْ شُعُوباً" الآية. قال الزهري: نزلت في أبي هند خاصة.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்பனூ பயாளா எனும் கோத்திரத்தார்களிடம் நீங்கள் உங்கள் கோத்திரப் பெண்களில் ஒருவரை அபூ ஹிந்த் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுங்கள்என்று கூறினார்கள்.

அதற்கு அம்மக்கள்உயர் குலத்துப் பெண்களான எங்களின் பெண்மக்களில் ஒருவரை எங்களிடம் சேவகம் செய்யும் அடிமை குலத்து வம்சத்தைச் சார்ந்த ஒருவருக்கு நாங்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் ஹுஜுராத் அத்தியாயத்தின் 13 –ஆவது வசனத்தை இறக்கியருளினான்.                               ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

5. சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே.

குரைஷி குலத்தின் ஓர் அங்கமான மஃக்ஸூமியா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி திருடிவிட்டார். இது குரைஷிகளுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.

இது குறித்து அண்ணலாரிடம் பேசி, கை வெட்டப்படுவதிலிருந்து அப்பெண்மணியைக் காக்க வேண்டும். இது குறித்து சிபாரிசு செய்ய மிகத்தகுதியானவர் நபிகளாரின் நெருக்கத்தைப் பெற்றிருக்கிற உஸாமா (ரலி) தான் தகுதியானவர் என்று தேர்வு செய்து, அவரிடம் வந்து குறைஷிகள் சிபாரிசு செய்யுமாறு முறையிட்டனர்.

உஸாமா நபி {ஸல்} அவர்களிடம் சென்று, இது குறித்துப் பேசினார். அப்போது நபி {ஸல்} அவர்கள்அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்திலா என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீர்?” என்று உஸாமாவை நோக்கி கேட்டு விட்டு, உடனடியாக மக்களை ஒன்று திரட்டி, மிம்பரின் மீது நின்றுஉங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களின் உயர்குலத்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள்.

பலவீனர் ஒருவர் திருடினால், அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் அழிந்து போயினர். “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையையும் நான் வெட்டுவேன்என்று பிரகடனம் செய்தார்கள்.

உயர்குலத்தவராக இருந்தால் அவர்களுக்கென எந்தவொரு தனிச் சட்டமும் இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயர் கோட்பாட்டைத் தன் மகளாரை முன் நிறுத்தி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.                                                     ( நூல்: புகாரி )

6. செல்வாக்கு பெற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த தடை.

روى مسلم عن سعد بن أبي وقاص قال: كنا مع النبي صلى الله عليه وسلم ستة نفر، فقال المشركون للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اطرد هؤلاء عنك لا يجترءون علينا، قال: وكنت أنا وابن مسعود ورجل من هذيل وبلال ورجلان لست أسميهما، فوقع في نفس رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ما شاء الله أن يقع، فحدث نفسه، فأنزل الله عز وجل" وَلا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَداةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ".


ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ நான், இப்னு மஸ்வூத்,பிலால், ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர், மற்றும் இருவர் (அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன்) அண்ணல் நபி {ஸல்} அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.

அப்போது, “மக்கத்து இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இதோ இந்த ஏழைகளை உம்மை விட்டும் விரட்டி விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்கள் துணிச்சல் பெற்றுவிடுவார்கள்என்று கூறினார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்களின் மனதில் எது ஏற்பட வேண்டுமென அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது. அப்போது, தான் அல்லாஹ் “{முஹம்மதே {ஸல்} தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டி விடாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே, அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராக ஆகிவிடுவீர்!” எனும் 6-ஆம் அத்தியாயத்தின் 52 –ஆம் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.

                                               ( நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மீதான மக்காவாசிகளின் அபிப்பிராயம் உண்மையாளர், நேர்மையாளர் என்றே இருந்தது.

ஆனாலும், நபி {ஸல்} அவர்களை அவர்கள் எதிர்ப்பதற்கு அடிப்படையாய் அமைந்திருந்ததுஆண்டாண்டு காலமாய் அவர்கள் கட்டிக்காத்து வந்த குலப்பெருமையை உடைத்தெறிகின்றார், உயர்குலத்தோரையும், இழிகுலத்தோரையும் சமமாக அமர வைக்கின்றார்என்கிற தீண்டாமையின் மீதான உச்சபட்ச வெறிதான் நபிகளாரை ஏற்பதற்கு தடையாக இருந்தது.

என்ற போதிலும், நபி {ஸல்} அவர்கள்இவர்களைப் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்தால் பலம் சேர்க்கும் என்று நினைத்து தான், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க நினைத்து அவர்களின் கருத்தை ஆமோதித்தார்கள்.

இவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதின் பின்னால், இவர்களின் குணங்களை சரிபடுத்திக் கொள்ளலாம்என்று நபிகளார் கருதி இருக்கலாம்.

ஆனாலும் அல்லாஹ் இந்தக் கருத்தில் உடன் படாமல்இஸ்லாத்தை அதன் முழு வடிவத்தோடு, எல்லோரும் சமம் தான் என்கிற அடிப்படையையும் சேர்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நபியே! அவர்களுக்காக நீர் வளைந்து கொடுக்க வேண்டாம். அவர்கள் வரவும் வேண்டாம்என கண்டிப்பான வார்த்தைகளோடு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டான்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் அழுக்காறுகளை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வெளிப்படையான வாழ்க்கையின் மூலமாகவும், அல்லாஹ்வின் தூய வழிகாட்டலோடும் அகற்றினார்கள்.

ஹிஜ்ரி 8 மக்கா வெற்றி கொள்ளப்பட்டு, அண்ணலார் வெற்றி வீரராய் வீற்றிருக்கின்றார்கள்.

புனித கஅபாவின் பொறுப்புகள் இணைவைப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்டு, நபித்தோழர்கள் சிலரிடம் ஒவ்வொன்றாக ஒப்படைக்கப் படுகின்றது.

ஆவலோடு எல்லோரும் காத்திருக்கும் அவ்வேளையிலே, மதிய தொழுகையான லுஹர் தொழுகையின் நேரமும் வருகின்றது.

பாங்கு சொல்வதற்காக நீக்ரோவான பிலாலை அழைத்து, கஅபாவின் மீதேறி நின்று பாங்கு சொல்லுமாறு மாநபி {ஸல்} ஆணையிட்ட போது… “கருப்பர், நீக்ரோ இவர்களெல்லாம் அந்த மக்களிடையே அடிமைகளாகவே அன்றி அவர்களை நெருங்க முடியாது என்ற நிலையில் இருந்த இந்தத் தீண்டாமையை இன்றோடு இம்மண்ணிலிருந்து வெளியேற்றி விட்டேன் என்று பெருமானார் {ஸல்} அவர்கள் பறைசாற்றும் விதமாகத்தான்அது அமைந்திருந்தது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அடுத்து எடுத்து வைத்த அடி இருக்கிறதே அது அம்மக்களிடம் இருந்த மிச்ச சொச்ச தீண்டாமைகளையும் களையும் முகமாக இருந்தது.

حدثنا قتيبة بن سعيد عن إسماعيل بن جعفر عن عبد الله بن دينار عن ابن عمر رضي الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا وأمر عليهم أسامة بن زيد فطعن بعض الناس في إمرته فقام رسول الله صلى الله عليه وسلم فقال إن كنتم تطعنون في إمرته فقد كنتم تطعنون في إمرة أبيه من قبل وايم الله إن كان لخليقا للإمارة وإن كان لمن أحب الناس إلي وإن هذا لمن أحب الناس إلي بعده
ஆம், அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அவர்களின் மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்கு தளபதிகளாக நியமித்து, தலைமைப் பொறுப்புக்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று மார் தட்டிய குறைஷிகளின் குலப்பெருமையை குழிதோண்டிப் புதைத்தார்கள்.

இறுதியாக, தாம் ஆற்றிய இறுதிப் பேருரையில்….

خطب رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بمنى في وسط أيام التشريق وهو على بعير فقال: يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا عجمي على عربي ولا لأسود على أحمر ولا لأحمر على أسود إلا بالتقوى
يا أيها الناس ألا
إن أمر عليكم عبد مجدع أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا

“... All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety and good action.”

ஓ மக்களே! என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள்! உங்களது இறைவன் ஒருவனே! உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்; எந்த ஓர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

எந்த ஒரு வெள்ளையருக்கும் கறுப்பரை விடவோ, எந்த ஒரு கறுப்பருக்கும் வெள்ளயரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர், உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர் தான்!”

ஓ மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! கறுப்பு நிற அபீசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும், அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி, அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தம் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள்; அவருக்கு கீழ்ப்படியுங்கள்!”                                              ( நூல்: புகாரி )

தீண்டாமை எனும் கொடிய விருட்சத்தை வெறும் பெயரளவில் இல்லாமல், செயலளவிலும் ஒழித்துக் காட்டி, மறக்காமல் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் முன்னிலையில் இந்த சமத்துவ, சகோதரத்துவ முழக்கத்தை தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை முழங்கினார்கள் என்றால் அங்கு தான் உலகத் தலைவர்களிடத்தில் இருந்து வேறுபட்டு நின்று மகத்தான சாதனையைப் புரிந்தார்கள் சர்தார் நபி {ஸல்} அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் போதித்த அந்த போதனைக்கு எந்த அளவு முஸ்லிம்கள் வழிபட்டு ஒழுகி, செயல் படுத்திக் காட்டினார்கள் என்பதற்கு வரலாற்றில் வனப்பானதோர் எடுத்துக் காட்டு.

وبعثه عمرو بن العاص في عشرة نفر لمقابلة المقوقس، وكان عبادة بن الصامت أسود اللون، فلما ركبوا السفن إلى المقوقس ودخلوا عليه، تقدم عبادة، فهابه المقوقس لسواده، فقال: نحُّـو عني هذا الأسود، وقدموا غيره يكلمني. فقالوا: إن هذا الأسود أفضلنا رأياً وعلماً، وهو سيدنا وخيرنا، والمقدَّم علينا، وإنا نرجع جميعنا إلى قوله ورأيه، وقد أمّره الأمير دوننا بما أمّره به، وأمرنا ألا نخالف رأيه وقوله.
 فقال المقوقس للوفد: وكيف رضيتم أن يكون هذا الأسود أفضلكم، وإنما ينبغي أن يكون دونكم؟. قالوا: كلا! إنه وإن كان أسود كما ترى، فإنه من أفضلنا موضعاً وأفضلنا سابقة وعقلاً ورأياً، وليس ينكر السود فينا. فقال المقوقس لعبادة: تقدم يا أسود وكلمني برفق فإني أهاب سوادك، وإن اشتد عليّ كلامك ازددت لك هيبة. فتقدم إليه عبادة فقال: قد سمعت مقالتك، وإن فيمن خلَّفت من أصحابي ألف رجل أسود كلهم مثلي، وأشد سواداً مني وأفظع منظراً، ولو رأيتهم لكنت أهيب لهم مني، وأنا قد وليّت، وأدبر شبابي، وإني مع ذلك بحمد الله ما أهاب مائة رجل من عدوي لو استقبلوني جميعاً، وكذلك أصحابي. فلما سمع المقوقس ذلك منه، قال لمن حوله: هل سمعتم مثل كلام هذا الرجل قط! لقد هبِت منظره وإن قوله لأهيب عندي من منظره، إن هذا وأصحابه أخرجهم الله لخراب الأرض، وما أظن ملكهم إلا سيغلِب على الأرض كلها

நிறவெறி நிறைந்த எகிப்து தேசத்தை வெற்றி கொண்டு, அதன் தலைமைப் பீடமான பாபிலோனிய கோட்டையை முற்றுகையிட்டிருந்தது அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் தலைமையிலான முஸ்லிம் படை.

கோட்டைக்குள்ளிருந்த எகிப்திய ஆட்சியாளன் மகூகாஸ் முற்றுகையிட்டிருந்த முஸ்லிம் படையினருடன் சமாதானமாய் போய்விடுவதாக அறிவித்தான் ஒரு நிபந்தனையோடு.

அந்த நிபந்தனை இது தான்தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்து உரையாட வேண்டும், அதுவே எனக்கு மகிழ்ச்சியாய் அமைந்து விடும் பட்சத்தில்…”

இதை கடிதத்தில் எழுதி ஒற்றரின் மூலம் படைத்தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தான்.

மகூகாஸின் ஆசையை நிறைவு செய்ய முன்வந்தார்கள் படைத்தளபதி அம்ர் (ரலி) அவர்கள்.

அதன்படி ஒரு குழுவை அமைத்து அதற்கு தலைவராக உப்பாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) எனும் நபித்தோழரை நியமித்து, “நீங்கள் யாரும் எந்த நிலையிலும் எகிப்திய ஆட்சியாளன் மகூகாஸிடம் எதுவும் பேசக்கூடாதுஎன்று குழுவில் இடம் பெற்ற அனைவரிடமும் கட்டாயமாகச் சொல்லிவிட்டார்கள்.

காரணம் இது தான், “குழுவில் உள்ள அனைவரும் வெள்ளை நிறத்தவர்கள்; உப்பாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்களோ கறுப்பு நிறம் கொண்டவர்கள். வெள்ளையர்கள் இவர்களைப் போன்றவர்களை அருவருப்பானவர்களாகவே கருதி வந்தனர்.”

குழு எகிப்திய ஆட்சியாளன் முன்னால் நின்றது.  உப்பாதா (ரலி) அவர்களின் தோற்றத்தைக் கண்ட மகூகாஸ் முஸ்லிம்களை நோக்கிஇந்த மனிதரை இந்த அவையை விட்டும் வெளியேற்றுங்கள்! உங்களில் வேறொருவர் என்னிடம் வந்து பேசுங்கள்!” என்று அலறினான்.

ஆனால், குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்ஆட்சியாளரே! உங்களின் வேண்டுகோளை நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏனெனில், எங்களின் படைத் தளபதி இவரைத்தான் எங்கள் குழுவின் தலைவராக நியமித்து இருக்கின்றார்கள்.

மேலும், எங்கள் எவரையும் உம்மோடு பேச அனுமதிக்கவும் இல்லை. இன்னும் எங்கள் குழுவின் தலைவராக இருக்கும் இவர்எங்களை விடச் சிறந்த அறிவாற்றலும், ஆற்றலும் நிறைந்தவர். இறையச்சத்தால் மிகவும் உயர்ந்தவர், அவருடைய சிந்தனை எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கக் காண்கின்றோம்.

பல நேரங்களில் நாங்களே அவரிடம் தான் எங்களுக்கான விவகாரங்களில் தீர்வு கோரி நிற்கின்றோம். அவ்வளவு ஏன் சில நேரங்களில் எங்களின் தளபதி கூட அவரிடம் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றிருக்கின்றார்கள்.

ஆகவே, நீங்கள் இவரோடு தான் அவசியம் பேசியாக வேண்டும்என்று கூறினார்கள்.

அப்போது, மகூகாஸ்எப்படி மிக எளிதாக இவரை சிறப்பானவராக பொருந்திக் கொண்டீர்கள்? இவர் தோற்றம் ஏற்றமுடையதாக இல்லையே? என்றான்.

அதற்கு, குழுவினர்இறையச்சத்திலும், அறிவிலும், ஆலோசனையிலும் இவரே மிகைத்து விடும் போது அவருடைய தோற்றம் ஏற்பும், ஏற்றமும் நிறைந்ததாய் ஆகிவிடுகின்றது.” என்றார்கள்.

அப்போது, அகம்பாவத்தோடு மகூகாஸ் உப்பாதா (ரலி) அவர்களை நோக்கிஓ கறுப்பரே! என்னோடு பேசும். ஆனால், மிகவும் மென்மையான முறையில் பேசவும்! உங்கள் தோற்றமே என்னை நடுங்க வைக்கின்றது. நீர் கடுமையாகப் பேசினால் என் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என நான் அஞ்சுகின்றேன்என்றான்.

எகிப்தின் ஆட்சியாளன் மகூகாஸை நோக்கி உப்பாதா (ரலி) அவர்கள்நீர் சொன்னதை நான் கவனமுடன் கேட்டேன். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா என் அருமை தோழரே!?” என்னுடைய படையில் என்னைவிட கடுமையான கறுப்பு நிறம் கொண்ட இன்னும் ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்களை நீர் பார்த்தீர் என்றால் உம் குலை நடுங்கிப்போகும்

இன்னொன்றையும் சொல்லட்டுமா? ஒரே நேரத்தில் உன்னுடைய படைவீரர்கள் நூறுபேர் என்னை தாக்கிட முனைந்தாலும்புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனேநான் தனியொரு நபராக நின்று நூறு பேரையும் சாய்த்திடுவேன்.

இது போன்று தான் என்னுடைய தோழர்கள் ஒவ்வொருவரும் நிகரில்லா வீரர்கள் ஆவார்கள்என்றார்கள்.

இதைக் கேட்டதும், மகூகாஸ் தம் அரசவைப் பிரதானிகளை நோக்கிஇன்று வரை இது போன்றதொரு வீரமிக்கதொரு வார்த்தையை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். நானும் தான், இவரின் தோற்றம் மாத்திரமல்ல இவர் பேசும் பேச்சும் கூட என்னை நடுங்கச் செய்து விட்டதாக நான் உணர்கிறேன்.

அறுதியிட்டுச் சொல்கின்றேன்! இவரும் இவரின் தோழர்களும் நிச்சயம் பெரும் பெரும் பேரரசுகளை வீழ்த்தும் ஆற்றல் கொண்டவர்கள்என்று கூறினான்.

( நூல்: தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல் இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா. )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மகத்தான சாதனை மனிதர்களிடையே எத்தகையதொரு சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்திற்று என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே, நடைமுறைக்கு ஒவ்வாத சட்டமுறைகளாலோ, இலவசங்களையும், சலுகைகளையும் அள்ளி வழங்குவதாலோ, கலப்புத் திருமணங்களின் வாயிலாகவோ, சமபந்தி விருந்துகளின் மூலமாகவோ தீண்டாமையை ஒழிக்க முடியாது.

தீண்டாமையை மனித மனங்களில் இருந்து அகற்றுவது கொண்டும், தீண்டாமையின் வேரை அடியோடு அழிப்பது கொண்டும் தான் சாத்தியமாகும் என்பதை சர்தார் நபி {ஸல்} அவர்களின் சாதனை வாழ்க்கை நமக்கு உணர்த்துகின்றது.

ஆனால், இன்றோ இந்த தேசத்தின் தலைவர்கள் தரமான மனிதர்களை உருவாக்குவதை விட்டு விட்டு தரமான பொருளை உருவாக்குவோம் ( Make in India ) என்று கோஷமிடுகின்றனர்.

ஒழுக்கம் நிறைந்த மனிதர்களை உண்டாக்குவதற்குப் பதிலாக ஓசோன் படலத்தின் ஓட்டையை சரி செய்வது குறித்து விவாதிக்கின்றனர்.

மனம் முழுவதிலும் அழுக்காறுகளை சுமந்து திரியும் மனித சமூகத்தை தூய்மை படுத்த முயற்சிக்காமல் ( Clean in India ) என்று கோஷமிட்டு வீதியை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஓர் அரசாகட்டும், ஒரு தலைவராகட்டும் சிறந்த ஓர் சமூகத்தை கட்டியெழுப்பாமல் சாதித்தவர்களாக, சாதனை படைத்தவர்களாக வரலாற்றில் இடம் பெற முடியாது.

ஆனால், எம்பெருமானார் {ஸல்} அவர்களோ உலகத்தலைவர்களில் வேறு பட்டு நின்று, வாழ்ந்து, வழிகாட்டி  மகத்தான சாதனை படைத்தவர்களாக உலகமே வியக்கும் வண்ணம் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! ஆமீன்!! வஸ்ஸலாம்.

நிறைவாக…..

நாம் புறக்கணிக்கும் ஒவ்வொரு கடமையும், தெரிந்துக் கொள்ளத் தவறிய ஓர் உண்மையைத் உணர்த்தும்என்றான் ஜான் ரஸ்கின் எனும் அறிஞன்.

சங்கைக் குரிய உலமா நண்பர்களே!

இன்ஷா அல்லாஹ்வருகிற 28, 30, 1, 2, 3, 4, ஆகிய தேதிகளில் மீலாது சொற்பொழிவுகளுக்குச் செல்ல இருப்பதால் வருகிற வாரம் பதிவுகள் போட இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றென்றும் உங்கள் துஆவின் ஆதரவில்,,,

இப்னு மஸ்வூத் உஸ்மானி.