Thursday, 28 January 2016

இல்லாத ஷிர்க்கை இவர்கள் ஏன் ஒழிக்க வேண்டும்?இல்லாத ஷிர்க்கை இவர்கள் ஏன் ஒழிக்க வேண்டும்?


இறைவனுக்கு இணை இல்லை இந்த ஒற்றை வார்த்தையை சொல்லிட பல கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக நடத்தப் பட இருக்கிற ஓர் மாநாடு தான் ஷிர்க் ஒழிப்பு மாநாடு.

அந்த மாநாட்டைக் குறித்த கருத்தாக்கங்கள் தேவையற்றது தான் என்றாலும் காலத்தின் அருமை கருதி எழுத வேண்டிய, பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக கருதுகின்றேன்.

சமுதாயத்தின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதிய காரணத்தால் தான் இது நாள் வரை நாம் மௌனம் காத்து வந்தோம்.

அந்த மௌனமே நமது உயிரினில் கலந்த ஷரீஅத்தைச் சுக்கு நூறாக இவர்களைப் போன்றவர்கள் உடைத்தெறிவதற்கு அஸ்திவாரமாய் அமைந்து விட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது மௌனத்தை கலைக்க வில்லையென்றால், நமது அடுத்த தலைமுறையினர் இது போன்ற தவறான மாநாடுகளின் முன் வரிசையில் இடம் பிடிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

ஏனெனில், ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் அவர்கள் கையில் எடுத்திருப்பது அல் குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழியில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பல விஷயங்களை இல்லை என்று மறுப்பதற்கும், அதை நிலைப்படுத்துவதற்கும் ஆகும்.

இவர்கள் ஷிர்க் என்று மத்ஹப், ஸியாரத், வஸீலா, மீலாத், மவ்லித், கூட்டு துஆ, திக்ர் மஜ்லிஸ், சூனியம், ஓதிப் பார்த்தல், தாயத்து என ஒரு நீண்ட பட்டியலை வைத்திருக்கின்றனர்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் பல கொள்கை முடிவுகளோடும், மேலான இமாம்கள், உம்மத்தின் இஜ்மாக்கள், போன்றவற்றோடும் முரண்பட்டு நின்று புதியதோர் கொள்கையை விதைத்து வருகின்றனர்.

இப்படியே இவர்களைப் பற்றி பட்டியலிட்டுக் கொண்டிருந்தால் முடிவில்லாது நீண்டு கொண்டே செல்லும்.

எனவே, இப்போதைக்கு ஷிர்க் என்றால் என்ன? இவர்கள் கூறுவதெல்லாம் ஷிர்க்கா? என்பதை தெரிந்து கொள்வோம்!

நம்மை நாமே உஷார் படுத்திக் கொள்ள அவர்கள் நமக்கு ஏற்படுத்தித் தந்த சரியான தருணமாகக் கருதி தெளிவுகளைப் பெறுவோம்!

வாருங்கள்….. இஸ்லாமிய வெளிச்சத்தில் ஷிர்க் என்றால் என்ன என்பதை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்!!!

அல்குர்ஆனில் அல்லாஹ் 140 இடங்களில் ஷிர்க் பற்றி பேசுகின்றான். ஷிர்க் என்ற அரபுச் சொல்லுக்கு கூட்டு, இணைப்பு, சேர்ப்பு என்றெல்லாம் பொருள் உண்டு.

இது நேரடி மொழியாக்கப் பொருளாகும். இஸ்லாமிய ஷரீஅத் வழக்கில் ஷிர்க் என்பது இறைவனுக்கு இணையாக இன்னொன்றுக்கு கடவுள் தன்மையை இணை வைப்பதைக் குறிக்கும்.

அது சூரியனாகவோ, சந்திரனாகவோ, மலையாகவோ, மரமாகவோ, கல்லாகவோ ஏன் மனிதனாகவோ மிருகமாகவோ கூட இருக்கலாம். இவ்வகையில் அமைந்த இணை வைத்தலையே ஷிர்க் எனக் கூறப்படும்.

உதாரணத்திற்கு அல்குர்ஆன்: 7: 191 – 195 , 27: 63, 18: 110, 24: 55 போன்ற இறை வசனங்களில் ஷிர்க் எனும் சொல் மேற்கூறப்பட்ட பொருளில் ஆளப்பட்டிருப்பதைக் காணலாம்.

இது வரை உலகில் எவருமே சொல்லத்துணியாத ஒரு விவாதப் பொருளை இந்த ஷிர்க் என்ற பதத்தின் பெயரால் மேற்கண்ட மாநாட்டுக் குழுவினர் அள்ளி வீசினர்.

ஆம்! சில காலம் நம்முடைய நபி {ஸல்} அவர்களும், நபித் தோழர்களும் ஷிர்க் வைத்தார்கள்! ( நவூது பில்லாஹ்… ) என்று..

ஷிர்க் என்கிற வார்த்தையை இவர்கள் தவறாக விளங்கியதன் விளைவாகவே இவ்வாறான அபத்தங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீதும், அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்ட ஸஹாபாக்கள் மீதும் அள்ளி வீச எத்தனிக்க வைத்திருக்கின்றது.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் எதையெல்லாம் ஷிர்க் என்று தீர்மானிக்கின்றார்களோ அவைகளை ஷிர்க் என்றும், அவர்கள் யாரையெல்லாம் முஷ்ரிக் எனக் கூற வேண்டும் என முடிவெடுக்கின்றார்களோ அவர்களை முஷ்ரிக் என்றும் முச்சந்தியில் நின்று மேடை போட்டு முழங்கி விடுவார்கள்.

இணைவைப்புக்கு எதிரான களத்தில் இறைத்தூதர் {ஸல்} அவர்களின் பங்கு

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஷிர்க் எனும் இணைவைப்பை இப்பூவுலகை விட்டும் அகற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள், அதற்காக அவர்கள் சகித்துக் கொண்ட துன்பங்கள் எத்துனை எத்துனை!!

அவர்களின் பாசறையில் பயின்ற சத்திய ஸஹாபாக்களும் ஷிர்க் விஷயத்தில் காட்டிய முனைப்புகள், எதிர் கொண்ட சவால்கள் எத்துனை எத்துனை!!

வரலாறுகளில் இருந்து ஆயிரமாயிரம் சான்றுகளை உங்கள் கண்முன்னால் கொண்டு வந்து குவிக்கலாம் அவ்வளவு குவிந்து கிடக்கின்றது நபி மொழிக் கிரந்தங்களில்

இதோ சிலவற்றைக் காண்போம்….

ஆனால், ஒரு விஷயம் அந்த ஷிர்க் - இணைவைப்பிற்கும் இவர்கள் கூறும் ஷிர்க் - இணைவைப்பிற்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசம் உண்டு.

உயிரை விட ஏகத்துவமே இலட்சியம் என சூளுரைத்த பெருமானார் {ஸல்}..

மக்காவில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இணைவைப்பிற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆரம்பப் பொழுது அது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ அழைப்பை எத்திவைத்த ஆரம்ப காலம் விரல் விட்டு எண்ணிடும் அளவிற்கே முஸ்லிம்கள் இருந்தனர்.

மெல்ல, மெல்ல பிரச்சாரம் விரிவடைந்த்து பெரிய குடும்பத்து மனிதர்களும் இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.

பெரிய மனிதர்களிடத்தில் அடிமை பட்டுக்கிடந்த பிலால், கப்பாப், ஸுஹைப் போன்ற ஏழை அடிமைகளும் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இன்னும் சற்று விரிவடைந்து வெளியூர்களிலிருந்து வியாபார விஷயமாக வரும் வியாபார பெருமக்களும், மக்காவை ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களும், இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.

இந்த ஏகத்துவக் கொள்கையை இத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும்
எனும் முனைப்பில் 25 பேர் கொண்ட மக்கத்து பெரும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில், இப்படியே முஹம்மதை விட்டுவிட்டால் நம் மக்களையும், குடும்பத்தாரையும் நம்மை விட்டு பிரித்துவிடுவார். நம்மிடமிருந்து அதிகாரத்தையும், அந்தஸ்தையும் பறித்துவிடுவார்.

எனவே, அவரது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். அவரைப்பற்றி மக்களிடையே அவதூறான செய்திகளை பரப்ப வேண்டும்.அவர் ஓதிக் காட்டுகிற இறை வசனங்களை பொய் படுத்த வேண்டும். எனும் தீர்மானத்தை முதன் முதலாக நிறைவேற்றினர். அதை மிகத் தீவிரமாக கடை பிடிக்கவும் ஆரம்பித்தனர்.

قال ابن إسحاق-رحمه الله-: "وحدثنى يعقوب بن عتبة بن المغيرة بن الأخنس أنه حُدِّث أن قريشًا حين قالوا لأبي طالب هذه المقالة بعث إلى رسول الله -صلى الله عليه وسلم- فقال له: يا ابن أخي، إن قومك قد جاؤوني فقالوا لي: كذا وكذا، للذي كانوا قالوا له، فأبق عليّ وعلى نفسك، ولا تحملنى من الأمر مالا أطيق. فظن رسول الله -صلى الله عليه وسلم- أنه قد بدا لعمه فيه أنه خاذله ومسلمه، وأنه قد ضعف عن نصرته والقيام معه. قال رسول الله -صلى الله عليه وسلم-: يا عمّ، والله لو وضعوا الشمس في يمينى والقمر في يساري على أن أترك هذا الأمر حتى يظهره الله، أو أهلك فيه ما تركته.

ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த அவர்கள் அனைவரும், அபூதாலிபிடம் சென்று உமது சகோதரன் மகன் முஹம்மத் எமது கடவுளர்களை ஏசுகிறார், எமது கொள்கைகளை விமர்சிக்கின்றார்,  எங்கள் மக்களை மடமைத்தனத்தின் பால் அழைத்துச் செல்கிறார், எமது மூதாதையர்களை வழிகேடர்கள் என்கிறார்.

இதை நீங்கள் தடுத்து நிறுத்துங்கள், அல்லது அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று முறையிட்டனர். அதற்கு அபூதாலிப் குறைஷித் தலைவர்களிடம் மென்மையான குறையிலும், அழகான முறையிலும் பதில் கூறிஅனுப்பி வைத்தார்கள்.

இரண்டாம் முறையாக சில மாதங்கள் கழித்து குறைஷித் தலைவர்கள் அபூதாலிபைச் சந்தித்து அபூதாலிபே! உங்களை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். ஆதலால் தான் முன்பொருமுறை உம்மிடம் வந்து உமது சகோதரன் மகன் குறித்து எச்சரித்துச் சென்றோம்.


ஆனால், முஹம்மத் தன் போக்கை மாற்றிக் கொள்பவராய் இல்லை. இனிமேலும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். அவர் தமது கொள்கையையும், பிரச்சாரத்தையும் விட்டுவிடவில்லையென்றால் உங்களையும் அவரையும் நாங்கள் சும்மா விட மாட்டோம், போர் செய்வோம்இது தான் எங்களது இறுதி எச்சரிக்கையாகும் என்று உரத்த குரலில் சொல்லி விட்டு வந்தனர்.

இதன் பின்னர், அபூ தாலிப்,நபி (ஸல்) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை விளக்கி கூறி என்னால் இயன்றவரை உமக்கு உறுதுணையாய் இருப்பேன் அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாதுஎன்று கூறினார்கள்.

அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதாலிப் அவர்களிடம் இருந்து வந்த இந்த பதிலைக் கண்டு எதிரிகள் புதுயுக்தியை கையாள முயற்சிக்கின்றனர்என்பதை விளங்கிக் கொண்டு  பெரிய தந்தையே!“ என் வலக்கரத்தில் சூரியனையும், என் இடக் கரத்தில் சந்திரனையும் வைத்தாலும், என்னுடைய இந்த கொள்கையையும், பிரச்சாரத்தையும் ஒரு போதும் விடப்போவதில்லை! அல்லாஹ் இந்த மார்க்கத்தை எழுச்சியடைச் செய்யும்வரை, அல்லது நான் உயிரை விடும் வரை இதை விடப் போவதில்லை! என்று கூறிவிட்டு, மாநபி (ஸல்) அவர்கள் அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள்.

திரும்பிச் சென்ற நபியவர்களை அபூதாலிப் அழைத்து என் சகோதரர் மகனே! நீவிரும்பிய படி வாழ்ந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணை! எந்த நிலையிலும் யாரிடமும் உம்மை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார்.

                                     ( நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்:54,55,56 )

இதன் தொடர்ச்சியாக, ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை சந்திக்க கஅபாவில் அத்துணை கொடியவர்களும் ஒன்று சேர்ந்து வந்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள், அம்மக்கள் ஈமான் கொண்டு விடமாட்டார்களா? எனும் ஆசையோடு அவர்கள் முன் வந்து அமர்ந்தார்கள்.

அஸ்வத் இப்னு அல் முத்தலிப் என்பவனும், வலீத் பின் முகீரா என்பவனும் ஆரம்பித்தனர்.

முஹம்மதே! இனி நமக்குள் பகைமை வேண்டாம், இனி நாம் கூட்டாக சேர்ந்து வாழ்ந்திடுவோம். நாங்கள் வணங்குவதை நீங்கள் வணங்குங்கள்; நீங்கள் வணங்குவதை நாங்கள் வணங்குகின்றோம்! என்று கூறினார்கள்.

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ (1) لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (3) وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (4) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5) لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ (6)

இவர்களின் வாதத்திற்கு மறுப்பாக அல்லாஹ் அல் குர் ஆனில் 109-வது அத்தியாயத்தையே இறக்கியருளினான்.
                                         
                                                   ( நூல்: ரஹீக் அல் மக்தூம் )

சமரசம் கிடையாது இணைவைப்பில்......

سبق أن النبي حاصر أهل الطائف بعد غزوة حنين ، ثم تركهم في أماكنهم ، ورجع ، فلما رجع تبع أثره عروة بن مسعود الثقفي حتى أدركه قبل أن يصل إلى المدينة ، فأسلم ، ثم رجع ودعا قومه إلى الإسلام – وكان أحب إليهم من أبكارهم ، فظن أنهم يطيعونه – فرموه بالنبل من كل جانب حتى قتلوه ، ثم ائتمروا بينهم ، ورأوا أنهم لا طاقة لهم بحرب من حولهم من العرب ، فبعثوا عبد ياليل بن عمرو ، ومعه خمسة آخرون من أشرافهم ، وذلك في رمضان سنة 9هـ فلما قدموا المدينة ضرب عليهم رسول الله قبة في ناحية المسجد ليسعوا القرآن ، ويروا الناس إذا صلوا .
ومكثوا يختلفون إلى رسول الله ، يدعوهم إلى الإسلام ، وهم لا يسلمون ، حتى طلبوا منه أن يسمح لهم بالزنا وشرب الخمر وأكل الربا ، وأن لا يهدم اللات ، ويعفيهم عن الصلاة ، وأن لا يكسروا أصنامهم بأيديهم ، فأبى ، وأخيراً رضخوا له ، وأسلموا واشترطوا أن يتولى هو بهدم اللات ، وأن ثقيفاً لا يهدمونها بأيديهم أبداً . فقبل ذلك .
وكان عثمان بن أبي العاص الثقفي أصغرهم سناً ، فكانوا يختلفونه في رحالهم ، فكان إذا رجعوا يذهب إلى النبي يستقرؤه القرآن ، وإذا رأه نائماً استقرأ أبا بكر ، حتى حفظ شيئاً كثيراً من القرآن ، وهو يكتم ذلك عن أصحابه ، فلما أسلموا أمره عليهم رسول الله لحرصه على الإسلام وقراءة القرآن وتعلم الدين .
ورجع الوفد إلى قومه عنهم إيمانه ، وخوفهم الحرب والقتال ، وقالوا : جئنا رجلاً فظاً غليظاً قد ظهر بالسيف ، ودان له الناس ، فعرض علينا أموراً شديدة ، وذكروا ما تقدم من ترك الزنا والخمر والربا وغيرها ، وإلا يقاتلهم ، فأخذتهم النخوة ، واستعدوا للقتال يومين أو ثلاثة أيام ، ثم ألقى الله في قلوبهم الرعب فقالوا للوفد : ارجعوا فأعطوه ما سأل . فقال الوفد : قد قاضيناه وأسلمنا فأسلم ثقيف .
وبعث رسول الله خالد بن الوليد والمغيرة بن شعبة الثقفي في رجال إلى الطائف ليهدموا اللات ، فكسروها وهدموا بنيانها .
وكان مما اشترطوا على رسول الله أن يدع لهم الطاغية ثلاث سنين، فما برحوا يسألونه سنة سنة، ويأبى عليهم، حتى سألوه شهرا واحدا بعد مقدمهم ليتألفوا سفهاءهم، فأبى عليهم أن يدعها شيئا مسمى، إلا أن يبعث معهم أبا سفيان بن حرب، والمغيرة ليهدماها، وسألوه مع ذلك أن لا يصلوا، وأن لا يكسروا أصنامهم بأيديهم.
فقال: «أما كسر أصنامكم بأيديكم فسنعفيكم من ذلك، وأما الصلاة فلا خير في دين لا صلاة فيه».
فقالوا: سنؤتيكها وإن كانت دناءة.
وقد قال الإمام أحمد: حدثنا عفان، ثنا محمد بن مسلمة عن حميد، عن الحسن، عن عثمان ابن أبي العاص أن وفد ثقيف قدموا على رسول الله فأنزلهم المسجد ليكون أرق لقلوبهم، فاشترطوا على رسول الله أن لاتحشروا، ولا يعشروا، ولا يجبوا، ولا يستعمل عليهم غيرهم.
فقال رسول الله: «لكم أن لا تحشروا، ولا تجبوا، ولا يستعمل عليكم غيركم، ولا خير في دين لا ركوع فيه».
 ஹிஜ்ரி 9 – ஆம் ஆண்டு ரமலான் மாதம் அண்ணலாரைக் காண ஒட்டு மொத்த ஸகீஃப் கோத்திரமும் மதீனா வந்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன் வந்து நின்ற ஸகீஃப் கோத்திரத்தினர்நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், சில விஷயங்களில் எங்களுக்கு விதி விலக்கு வழங்க வேண்டும்.” என வேண்டி நின்றனர்.

1. நாங்கள் வசிக்கும் பகுதியை யுத்த தளமாக ஆக்கக் கூடாது. 2. இஸ்லாத்தில் எங்களுக்கு ஈடுபாடு வரும் வரை சில காலங்களுக்கு சிலைகளை வணங்க அனுமதிக்க வேண்டும். 3. தொழுகை மற்றும் ஜகாத்தில் சலுகைகள் தர வேண்டும். 4. எங்களில் ஒருவரே எங்களுக்கு தலைவராக இருக்க வேண்டும்.  5. ஜிஹாத் -  மார்க்கப் போரில் கலந்து கொள்ள எங்களை கட்டாயப் படுத்தக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்,  ஸகீஃப் கோத்திரத்தார்களின் ஐந்து நிபந்தனைகளில் இரண்டை நிராகரித்து விட்டார்கள்.

1.அல்லாஹ்வுக்கு இணை வைக்க அனுமதிக்க முடியாது.
2.தொழுகையிலும், ஜகாத்திலும் சலுகைகள் தர முடியாது.


                                                           ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:259 – 262 )

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர் ஏகத்துவ எழுச்சியை உலகெங்கும் எடுத்துச் சென்றிட ஆயத்தமான அண்ணல் நபி {ஸல்} அவர்கள் அருகில் இருக்கிற நாடுகளுக்கும், மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் கடிதம் மூலம் இஸ்லாமிய அழைப்பை விடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

அப்போது, அண்ணலாரின் காதுகளுக்கு ஓர் செய்தி பேரிடியாய் வந்து இறங்கியது. ”யமனுக்கு அருகே இருக்கிற ஓர் பிராந்தியத்தின் அரசன் அவனுடைய ஆளுமையின் கீழ் ஒரு லட்சம் மக்கள், தன்னை இறைவனாக அறிவித்து தனக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறான். அம்மக்களும் அவ்வாறே அவனுக்கு ஸஜ்தா செய்து வருகின்றனர்” அந்த அரசனின் பெயர் துல் கிலாவு அல்லது தல் கிலாவு என்று.

وروى ابن دريد عن الرياشي عن الأصمعي قال كان رسول الله صلى الله عليه و سلم كاتب ذا الكلاع من ملوك الطوائف على يد جرير بن عبدالله يدعوه إلى الإسلام وكان قد استعلى أمره حتى ادعى الربوبية وأطيع حتى مات النبي صلى الله عليه و سلم قبل عودة جرير وأقام ذو الكلاع على ما هو عليه إلى أيام عمر ثم رغب في الإسلام فوفد على عمر ومعه ثمانية آلاف عبد فأسلم على يده وأعتق من عبيده أربعة آلاف فقال له عمر يا ذا الكلاع بعني ما بقي من عبيدك حتى أعطيك ثلث أثمانهم هاهنا وثلثا باليمن وثلثا بالشام قال أجلني يومي هذا أفكر فيما قلت ومضى إلى منزله فأعتقهم جميعا فلما غدا على عمر قال له ما رأيك فيما قلت لك في عبيدك قال قد اختار الله لي ولهم خيرا مما رأيت قال وما هو قال هم أحرار لوجه الله قال قد أصبت والله يا ذا الكلاع قال يا أمير المؤمنين لي ذنب ما أظن أن الله يغفره لي
قال وما هو قال تواريت عمن يتعبد لي ثم أشرفت عليهم من مكان عال فسجد لي زهاء مائة ألف إنسان فقال عمر التوبة بالإخلاص والإنابة بالإقلاع يرجى بهما مع رأفة الله الغفران قال الله تعالى لا تقنطوا من رحمة الله الزمر 53
  
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இணைவைப்பின் தீமை குறித்தும், ஏகத்துவத்தின் அவசியம் குறித்தும், இஸ்லாமிய அழைப்பைத் தாங்கிய கடிதம் ஒன்றை எழுதி ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் கொடுத்து துல் கிலாவு அரசனிடம் கொடுத்து வருமாறு அனுப்பினார்கள்.

இது ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு இறுதியில் அல்லது ஏழாம் ஆண்டின் துவக்கத்தில் நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் துல்கிலாவு அரசனிடம் இருந்து பதிலோ அல்லது வேறு எந்த வித முடிவுமோ வரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். இஸ்லாமிய தேசத்தின் எல்லைகள் விரிவடைகின்றது. ஆனாலும், துல்கிலாவு அரசனின் பிராந்தியம் இஸ்லாமிய தேசத்தின் எல்லைக்குள் வரவில்லை. துல்கிலாவு அரசனிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்கின்றார்கள். இஸ்லாமிய தேசம் என்பது சாம்ராஜ்யம் எனும் சொல்லாடலுக்கு மாறிப்போயிருந்தது. எல்லைகள் உலகின் நாலா பாகங்களிலும் விரிவடைந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருக்கின்றார்கள். ஒருவர் வந்து தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வந்திருப்பதாகவும் கலிமாவைச் சொல்லித்தருமாறும் வேண்டி நின்றார்.

உமர் (ரலி) அவர்கள் அவரை அருகே அமர வைத்து ஏகத்துவக் கலிமாவை அவருக்கு சொல்லிக்கொடுத்து விட்டு, தாங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று வினவினார்கள்.

அதற்கு, வந்திருந்த அவர் நான் தான் துல்கிலாவு யமனுக்கு அருகில் இருக்கிற இன்ன பிராந்தியத்தின் அரசன் என்று பதிலளித்து விட்டு, உமர் (ரலி) அவர்களின் கரங்களைப் பிடித்து மஸ்ஜிதுக்கு வெளியே அழைத்து வந்து உமர் அவர்களே! இதோ! நின்று கொண்டிருக்கின்றார்களே இவர்கள் எட்டாயிரம் பேரும் என்னுடைய அடிமைகள்! இதில் நான்காயிரம் பேரை நான் இப்போதே அல்லாஹ்வுக்காக விடுதலை அளிக்கின்றேன்! அதற்கு, நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று கூறி நான்காயிரம் அடிமைகளுக்கு விடுதலை அளித்தார்.

அதன் பின்னர், மஸ்ஜிதுன் நபவீயில் ஓரிடத்தில் ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்தார் துல்கிலாவு (ரஹ்) அவர்கள்.

சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் அவரின் அருகே உமர் (ரலி) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். துல்கிலாவு அவர்களே! மீதமிருக்கிற நான்காயிரம் அடிமைகள் விஷயத்தில் நீங்கள் என்ன முடிவெடுத்து இருக்கின்றீர்கள்? நான் ஒரு உங்களிடம் கோரிக்கையை முன் வைக்கின்றேன்.

இஸ்லாமிய எல்லைகள் விரிவடைந்து கொண்டிருக்கிற தருணம் இது. நம்முடைய பல வேலைகளுக்கு வேலையாட்கள் தேவைப் படுகின்றார்கள். உங்களின் அடிமைகளை விலைக்கு தந்தீர்கள் என்றால் மதீனா, யமன், ஷாம் ஆகிய இடங்களுக்கு பகிர்ந்தளித்து வேலைப் பளுவை குறைத்துக் கொள்ளலாம்” உங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கின்றேன் என்றார்கள்.

அமீருல் முஃமினீன் அவர்களே! ”எனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும், யோசித்து முடிவைச் சொல்கின்றேன்” என்றார்கள் துல்கிலாவு (ரஹ்) அவர்கள்.

இரவுக்குள் மீதமிருந்த நான்காயிரம் அடிமைகளையும் விடுதலை அளித்தார் துல்கிலாவு (ரஹ்) அவர்கள்.

மறுநாள் அதிகாலை சுபுஹ் தொழுகைக்குப் பின்னர் உமர் (ரலி) அவர்கள், மீண்டும் துல்கிலாவு (ரஹ்) அவர்களை அணுகினார்கள்.

அப்போது, அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அடிமைகள் விஷயத்தில் இலகுவான ஒன்றை ஏற்படுத்தி விட்டான் என்றார்கள் துல்கிலாவு (ரஹ்) அவர்கள்.

அப்படியா? என்ன இலகுவான விஷயம்? என்று கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அப்போது, துல்கிலாவு (ரஹ்) அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் பெரும் பாவங்களை செய்திருக்கின்றேன்! அல்லாஹ் அவற்றையெல்லாம் மன்னிப்பானா? என்று எனக்குத் தெரியவில்லை.

அப்படியென்ன மன்னிக்க முடியாத பெரும்பாவங்களை செய்து விட்டீர்கள் நீங்கள்? சொல்லுங்கள்! என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.

நான் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட ஓர் பிராந்தியத்தின் அரசனாக இருந்தேன். அம்மக்களை எனக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் ஆணையிட்டு, அதைக் கண்டு மகிழ்ந்த்ருக்கின்றேன். எத்தகைய கொடிய பாவத்தை செய்திருக்கின்றேன் நான்.
அல்லாஹ் இத்தகைய பாவங்களையெல்லாம் மன்னிக்க வேண்டும் என ஆதரவு வைத்தவனாக மீதமிருந்த நான்காயிரம் அடிமைகளுக்கும் விடுதலை அளித்து விட்டேன்” என்றார்கள் துல்கிலாவு (ரஹ்) அவர்கள்.

அல்லாஹ்விடம் உளத்தூய்மையோடும், மீண்டும் செய்ய மாட்டேன் என்ற உறுதியோடும் செய்யப்படுகிற தவ்பா பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு மன்னிப்பையும், அருளையும் தருவான்! அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நிராசை அடைந்து விடாதீர்கள் எனும் ஸுமர் அத்தியாயத்தின் 53 –வது வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

( நூல்: அர்ரவ்ளா லிஇமாமி முஹம்மத் இப்னு அஹ்மத் அல் பர்ராவு (ரஹ்)..)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இணைவைப்பிற்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளையும், அல்லாஹ் அதற்கு அளித்த முக்கியத்துவத்தையும் இந்த வரலாற்று நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

காலம் கனிந்த பின்னரும் கூட அல்லாஹ் நபி {ஸல்} அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றினான்.

இந்தச் செய்தியை பதிவு செய்திருக்கிற ரவ்ளா எனும் நூலின் ஆசிரியர் இந்தச் செய்தியை தமக்கு அறிவித்த உல்வான் இப்னு தாவூத் (ரஹ்) அவர்கள், தங்களது சமூகத்தின் ஒரு மனிதர் சொன்னதாக ஒரு செய்தியை சொல்கிறார்கள்.

ذكر محمد بن أحمد بن البراء في كتاب الروضة أنا محمد بن الرصافي ثنا سليمان بن معبد ثنا سعيد بن عفير المصري ثنا علوان بن داود عن رجل من قومه قال بعثني أهلي في الجاهلية إلى ذي الكلاع بهدية فأقمت ببابه سنة لا أصل إليه ثم اطلع اطلاعة من قصره فلم يبق حول قصره أحد إلا خر له ساجدا ثم أمر بهديته فقبلت ثم رأيته في الإسلام قد
اشترى لحما بدرهم وهو على فرس قد سمط اللحم على فرسه

“ஜாஹிலிய்யா காலத்தில் எங்கள் சமூகத்தின் சார்பாக ஒரு அன்பளிப்பை எடுத்துக் கொண்டு துல்கிலாவு அரசராக இருந்த போது கொடுக்கச் சென்றேன். சுமார் ஒரு ஆண்டு காலம் அவரின் அரண்மனை வாசலில் நான் நிற்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஒரு ஆண்டுக்கு பின்னர் தான் அனுமதி வழங்கப்பட்டு உள்ளே சென்றேன். அங்கே நான் கண்ட காட்சியைக் கண்டு ஆடிப்போய் விட்டேன். மக்கள் எல்லோரும் அரசராக இருந்த துல்கிலாவுக்கு ஸஜ்தா செய்ய கண்டேன்.

இஸ்லாத்திற்கு வந்த பின்னர் இதே துல்கிலாவை கண்டேன். என்ன ஓர் ஆச்சர்யம் ஒரு திர்ஹத்திற்கு இறைச்சித்துண்டு ஒன்றை வாங்குவதற்காக மக்களோடு மக்களாக குதிரையின் மீது அமர்ந்து காத்துக் கொண்டிருந்ததையும் கண்டேன்” என்று.

துல்கிலாவு அவர்கள் மாத்திரம் இஸ்லாத்தைத் தழுவவில்லை. ஊர் திரும்பியதும் தங்களுக்கு ஸஜ்தா செய்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏகத்துவ சுகந்தத்தை நுகரச் செய்து முற்றிலும் அல்லாஹ்விற்கு ஸஜ்தா செய்கிற சமூகமாக மாற்றினார்கள்.                                                ( நூல்: அர்ரவ்ளா )

இணைவைப்பிற்கு எதிராக நபித்தோழர்களின் நிலைப்பாடு...

மதீனாவில் இஸ்லாம் அடியெடுத்து வைத்திருந்த ஆரம்ப கால தருணம் அது. ஒரு சில இளைஞர்கள் ஒன்று கூடி மதீனாவை சிலை வணக்கமில்லா தூய பூமியாக ஆக்க வேண்டும் என தீர்மானமெடுத்தார்கள்.

தங்களின் தலைவராக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.

ஒரு நாள் இரவுப் பொழுதில் ஓரிடத்தில் ஒன்று கூடிய இந்த இளைஞர்கள் எங்கிருந்து இந்தப் பணியை ஆரம்பிப்பது என்று ஆலோசித்த போது, தங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த பனூ ஸலமா கோத்திரத்தைச் சார்ந்த முஆத் இப்னு அம்ர் (ரலி), முஅவ்வித் இப்னு அம்ர் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அம்ர் (ரலி) இம்மூவரின் தந்தையான அம்ர் இப்னுல் ஜமூஹ் (ரலி) அவர்களின் வீட்டில் இருந்து துவங்குவதாக முடிவெடுத்தார்கள்.

ஏனெனில், அவர் தான் பனூ ஸலமா கோத்திரத்தார்களின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். அவர் சன்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் ஒட்டு மொத்த கோத்திரமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் என்று இளைஞர்கள் குழு கருதினர்.

அதன் தொடக்கமாக காலையில் விடிந்ததும் சத்திய மார்க்கத்தின் அழைப்பாளர் முஸ்அப் (ரலி) அவர்களிடம் அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களை அவர்களின் மூன்று ஆண் மக்களும் அழைத்துச் சென்று இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுத்தனர்.

பேசியபடி முஸ்அப் (ரலி) அவர்களின் சபையில் மகன்கள் மூவரும் தந்தை அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களை ஆஜர்படுத்தினர்.

رَوَى ثَابِتٌ البُنَانِيُّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ:
قَدِمَ مُصْعَبُ بنُ عُمَيْرٍ المَدِيْنَةَ يُعَلِّمُ النَّاسَ، فَبَعَثَ إِلَيْهِ عَمْرُو بنُ الجَمُوْحِ: مَا هَذَا الَّذِي جِئْتُمُوْنَا؟
قَالُوا: إِنْ شِئْتَ جِئْنَاكَ، فَأَسْمَعْنَاكَ القُرْآنَ.
قَالَ: نَعَمْ.
فَقَرَأَ صَدْراً مِنْ سُوْرَةِ يُوْسُفَ، فَقَالَ عَمْرٌو: لست فاعلاً حتى أستشير مناة، يعني صنمه، فأنظر ما يقول؟   
وَدَخَلَ عَلَى مناة ، فَقَالَ: يَا مناة ! تَعْلَمُ -وَاللهِ- مَا يُرِيْدُ القَوْمُ غَيْرَكَ، فَهَلْ عِنْدَكَ مِنْ نَكِيْرٍ؟

 ثم قال يا مناة, لا ريب أنك قد علمت بأن هذا الداعية الذي وفد علينا من مكة لا يريد أحداً بسوء سواك، وأنه إنما جاء لينهانا عن عبادتك، وقد كرهت أن أبايعه على الرغم مما سمعت من جميل قوله، حتى أستشيرك، فأشر عليَّ، فلم يردّ عليه مناة بشيء،

 فقال: لعلك قد غضبت، وأنا لم أصنع شيئاً يغضبك بعد، ولكن لا بأس فسأتركك أياماً حتى يسكت عنك الغضب

முஸ்அப் (ரலி) அவர்கள் ஏகத்துவ அழைப்பை அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களிடம் எடுத்தியம்பினார்கள். பின்பு, அம்ர் அவர்களிடம் சூரா யூஸுஃபின் ஒரு சில வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

அதைக் கேட்டதும் அம்ர் அவர்கள்நான் இது விஷயமாக எங்கள் குல தெய்வம் (பனூ ஸலமா கோத்திரத்தார் வழிபடும் சிலை) மனாத்திடம் ஆலோசனை செய்து விட்டுத் தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்என்று கூறி அங்கிருந்து விடை பெற்றார்.

நேராக, மனாத்தின் முன் வந்து நின்ற அம்ர் அவர்கள்மக்கள் உன் அல்லாத ஒருவனை கடவுளாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நீ அறிந்திருப்பாய் என நான் கருதுகின்றேன்.

அது சம்பந்தமாக உன் அபிப்பிராயமென்ன? அது தவறென்று நீ மறுப்பேதும் கூற விரும்புகின்றாயா? உன்னை வணங்குவது தவறென்கிறார் மக்காவில் இருந்து வந்த அவர். அது சம்பந்தமாகத் தான் உன்னிடம் ஆலோசனைக் கேட்க வந்திருக்கின்றேன் என்று மனாத் சிலை முன்பு நின்று பேசினார்.

எங்கே கல் பேசியிருக்கின்றது? சில நிமிட மௌனத்திற்குப் பின் அம்ரே தொடர்ந்தார். “எனக்குத் தெரியும்! இந்த விஷயங்களால் நீ சினமுற்று இருப்பாய் என்று.. மேலும், மேலும் உன்னைச் சீண்டிப்பார்க்க எனக்கு விருப்பமில்லை. கொஞ்ச நாள் நீ நிம்மதியாக ஓய்வெடு! இன்னொரு நாள் இது குறித்து நான் கேட்டுக் கொள்கிறேன்என்றார்.

فكان معاذ بن عمرو بن الجموح بعد إسلامه ومعاذ بن جبل يدخلان ليلاً إلى الدار فيأخذان هذا الصنم ويلقيانه في مكان مخلفاتهم منكساً على رأسه, فلما يصبح عمرو يذهب فيأتي به ويغسله ويعطره, وهو يتوعد من فعل به ذلك, وكل ليلة يحدث هذا المشهد. وذات يوم وضع عمرو سيفاً في رقبة صنمه الذي يعبده وقال له:((لأني لا أعلم من يفعل بك هذا, فإن كنت تستطيع الدفاع عن نفسك فهذا السيف معك فافعل)). وبالليل جاء الفتيان فأخذا السيف من عنقه ثم أحضرا كلباً ميتاً فقرنوه به بحبل وألقوه في بئر من الآبار فيها يقضي الناس حاجتهم حيث لم يكونوا قد اتخذ الناس مكانا لقضاء الحاجة في بيوتهم. وفي الصباح قام عمرو يبحث عنه قلما وجده كذلك, علم أنه لا نفع

وقال  : واللـه لو كنت إلها لم لمثل
أنـت وكلب وسط بئر في قرن
أف لمثــواك إلهـا مسـتدن  
فالآن فتشناك عن شر الغبـن
  
இது தான் நல்ல சந்தர்ப்பம் எனக் கருதிய இளைஞர் குழு அன்றிரவே அங்கிருந்து மனாத்தை முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் தலைமையில் சென்று கடத்தி வந்து பனூ ஸலமாவினரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஓர் பாழடைந்த கிணற்றுப் பகுதியில் வீசியெறிந்தனர்.

காலையில் மனாத்தை காணாது அதிர்ச்சியடைந்த அம்ர் ஊர் முழுக்க தேடி அலைந்து ஒருவாராக அங்கிருந்து எடுத்து வந்து குளிப்பாட்டி, உயர் ரக அத்தர் பூசி மீண்டும் அதே இடத்தில் மனாத்தை வைத்தார்.

இரண்டாம் நாளும் முன்பு போலவே கடத்திச் சென்று இப்போது வேறு ஒரு குப்பை மேட்டில் வீசினர்.

மறு நாளும் அம்ர் தேடி எடுத்து வந்து குளிப்பாட்டி, அத்தர் பூசி அதே இடத்தில் மனாத்தை வைத்து விட்டு அருகே ஒரு வாளை நட்டு வைத்துசத்தியமிட்டுச் சொல்கிறேன்! யார் இதை செய்கிறார் என்று தெரியவில்லை. இனி உன்னை நீயே பாதுகாத்துக் கொள். உன்னைத் தூக்கிச் செல்ல யாராவது வந்தால் இந்த வாளைக் கொண்டு உன்னை தற்காத்துக் கொள்!” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

மூன்றாம் நாள் இரவும் சிலையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் மனாத்தை ஒரு செத்த நாயின் கழுத்தில் கட்டி வீட்டு, வாளை வேறொரு குழியில் போட்டு விட்டனர்.

மூன்றாம் நாளும் அதைத் தேடிச் சென்ற அவர் மனாத் கிடந்த கோலத்தைப் பார்த்து விட்டு  நீ மட்டும் உண்மையான கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் குப்பை மேட்டில் வந்து கிடக்கமாட்டாய்என்று சொல்லி விட்டு அங்கிருந்து சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்ற உணர்வோடு திரும்பினார்கள். ஆம்! அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

  ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா, உஸ்துல் காபா, அல் இஸ்தீஆப் )

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் செய்த முதல் நற்பணியே இணைவைப்பிற்கு எதிரான பணி தான்

ஃபத்ஹ் மக்காவிற்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்காவின் உட்புறத்தில் மக்கா இணைவைப்பாளர்கள் வைத்திருந்த சிலைகளை அப்புறப்படுத்தி தூய்மையாக்கினார்கள்.

பின்னர், அல்லாஹ் ஹஜ்ஜை கடமையாக்கினான். ஹஜ் மற்றும் உம்ராவின் இபாதத்களை அல்லாஹ் வரைமுறைப் படுத்தினான்.

அதில் ஒன்றாக ஸஃபா, மர்வாவை இறைவன் தன்னுடைய சின்னமாக அறிவித்து இரண்டுக்கும் இடையே தொங்கோட்டம் (ஸஈ) ஓட வேண்டுமென கட்டளை பிறப்பித்தான்.

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ()

நிச்சயமாக! ஸஃபா, மர்வா எனும் இரு குன்றுகள் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகையால், யார் இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அந்த இரண்டுக்கும் இடையே ஸஈ செய்வதில் குற்றமில்லை. மேலும், எவரேனும் தாமாக விரும்பி ஏதேனும் நன்மையைச் செய்தால், அல்லாஹ் அதை மதிப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 2: 158 )

وذكر ابن إسحاق في كتاب السيرة أن إسافا ونائلة كانا بشرين، فزنيا داخل الكعبة فمسخا حجرين فنصبتهما قُريش تجاه الكعبة ليعتبر بهما الناس، فلما طال عهدهما عبدا، ثم حولا إلى الصفا والمروة، فنصبا هنالك، فكان من طاف بالصفا والمروة يستلمهما،

அறியாமைக் காலத்தில் அஸாப் நாயிலா என்னும் பெயர்களைக் கொண்ட ஆண், பெண் இருவர் இருந்தனர். இவர்கள் இருவரும் கஅபாவின் உட்புறத்தில் விபச்சாரம் செய்து விட்டனர். அவர்களை அல்லாஹ் கற்களாக உருமாற்றி விட்டான்.

பொதுமக்கள் இதைப் பார்த்து உணர்வு பெரும் பொருட்டாக அப்போதிருந்த கஅபாவின் பொறுப்புதாரிகள் இவ்விரு கற்சிலைகளையும் கஅபாவிற்கு வெளியே வைத்தார்கள்.

காலஞ்செல்லச் செல்ல பின்னர் வந்த மக்கள், அஸாப் சிலையை ஸஃபா குன்றிலும், நாயிலா சிலையை மர்வா குன்றிலும் நிறுவினர். அதற்குப் பின் வந்த மக்கள் அதை வணங்க ஆரம்பித்தனர்.

அறியாமைக் காலத்தில் ஸஃபா, மர்வா இரண்டுக்குமிடையில் சுற்றிக் கொண்டு வருபவர்கள் ஒவ்வொரு சுற்றுக்குப் பின்னரும் இவ்விரண்டு சிலைகளையும் தடவிக் கொண்டு செல்வதை வணக்கமாக கருதி வந்தனர்.

في حديث ابن عباس أن أصل ذلك مأخوذ من تطواف  هاجر وتردادها بين الصفا والمروة في طلب الماء لولدها، لما نفد ماؤها وزادُها، حين تركهما إبراهيم -عليه السلام -هنالك ليس عندهما أحد من الناس، فلما خافت الضيعة على ولدها هنالك، ونفد ما عندها قامت تطلب الغوث من الله، عز وجل، فلم تزل تردد  في هذه البقعة المشرفة بين الصفا والمروة متذللة خائفة وجلة مضطرة فقيرة إلى الله، عز وجل، حتى كشف الله كربتها، وآنس غربتها، وفرج شدتها، وأنبع لها زمزم التي ماؤها طعام طعم، وشفاء سقم، فالساعي بينهما ينبغي له أن يستحضر فقره وذله وحاجته إلى الله في هداية قلبه وصلاح حاله وغفران ذنبه، وأن يلتجئ إلى الله،
عز وجل ،ليُزيح ما هو به من النقائص والعيوب، وأن يهديه إلى الصراط المستقيم  وأن يثبته عليه إلى مماته، وأن يحوّله من حاله الذي هو عليه من الذنوب والمعاصي، إلى حال الكمال والغُفران والسداد والاستقامة، كما فعل بهاجر -عليها السلام.

இந்த நிலையில், இந்த வசனம் இறங்கப் பெற்றதும் நபித்தோழர்கள் நபி {ஸல்} அவர்களிடம் வந்து இது குறித்து முறையிட்ட போது நபி {ஸல்} அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் துணைவியார் தண்ணீருக்காக இறைவனின் உதவி தேடி இரு மலைக்குன்றுகளுக்கிடையே ஓடிய அந்த நிகழ்வை நினைவு கூறும் முகமாகத் தான் இவ்விரண்டையும் அல்லாஹ் தன் அடையாளச் சின்னங்கள் என்றும், அதைச் சுற்றி ஸஈ செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.          ( தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 1, பக்கம்: 263 )

நபித்தோழர்கள் இணைவைப்பின் விஷயத்தில் எந்தளவு எச்சரிக்கையாக இருந்தார்கள் என்பதை மேற்கூரிய நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே, ஷிர்க் என்றால் இறைவனுக்கு இணையாக இன்னொன்றுக்கு கடவுள் தன்மையை இணை வைப்பதைக் குறிக்கும்.

அது சூரியனாகவோ, சந்திரனாகவோ, மலையாகவோ, மரமாகவோ, கல்லாகவோ ஏன் மனிதனாகவோ மிருகமாகவோ கூட இருக்கலாம். இவ்வகையில் அமைந்த இணை வைத்தலையே ஷிர்க் எனக் கூறப்படும் என்பதை மேற்கூறிய சம்பவங்களில் இருந்து நாம் படிப்பினையாக பெறலாம்.

இவர்கள் கூறுவது போன்று மத்ஹப் ஷிர்க், மவ்லித் ஷிர்க், மீலாத் ஷிர்க், கூட்டு துஆ ஷிர்க், திக்ர் மஜ்லிஸ் ஷிர்க், ஸியாரத் ஷிர்க், சூனியம் ஷிர்க், தாயத் ஷிர்க் இப்படி எதுவும் ஷிர்க் அல்ல.

இவைகள் அனைத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஆதாரம் இருக்கின்றது. அவைகளைச் செய்ய அனுமதியும் இருக்கிறது..

முதலில் ஓதிப்பார்ப்பது தாயத்து அணிவது சம்பந்தமான அல்குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதலைப் பார்ப்போம்.

وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين


அல்குர்ஆனில் நாம் இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளையும் நோய் நிவாரணத்தையும் இறக்கிவைத்துள்ளோம்.                                                    ( அல்குர்ஆன்: 17: 82 )

இது திருமறையில் நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்பதை உணர்த்துகின்றது.

இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதும் இமாம் பக்றுத்தீன் ராஸீ (ரஹ்) அவர்கள் அல்குர்ஆன் என்பது உடல் மற்றும் ஆன்மாவுடன் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகும். அதனை ஓதுவதன் மூலம் நோய்களை தடுக்க முடியும்என்று கூறுகின்றார்கள்.                              ( தப்ஸீர் அர்ராஸீ,  பாகம்:21,  பக்கம்24 )


 ஓதிப் பார்த்தல் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள்....

ـ حدّثني أَبُو الطَّاهِرِ. أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ. أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَـنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ. فَقُلْنَا : يَا رَسُولَ اللّهِ كَيْفَ تَرَى فِي ذلِكَ؟ فَقَالَ: «اعْرِضُوا علَيَّ رُقَاكُمْ. لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ


நாங்கள் அறியாமை காலத்தில் ஓதிப்பார்த்துக் கொண்டிருந்தோம். இது பற்றி நபி {ஸல்} அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் என்னிம் உங்களின் மந்திரத்தை ஓதிக்காட்டுங்கள். அப்போது, நாங்கள் ஓதிக்காட்டினோம். ஷிர்க் - இணைவைத்தல் இல்லாத மந்திரத்தில் பிரச்சினை இல்லை” என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.                                                                                    (  நூல்: முஸ்லிம், 5686  )

 
ـ حدّثنا عثمانُ بن أبي شَيبةَ حدَّثنا جريرٌ عن منصورٍ عنِ المِنهالِ عن سعيد بنِ جُبَيرٍ عن ابنِ عبّاسٍ رضيَ الله عنهما قال: «كان النبيُّ صلى الله عليه وسلّم يُعوِّذُ الحسنَ والحسينَ ويقول: إن أباكما كان يَعوِّذُ بها إسماعيلَ وإسحاق: أعوذُ بكلماتِ الله التامَّة، من كلِّ شيطانٍ وهامَّة، ومن كل عينٍ لامَّة».


நபி {ஸல்}  அவர்கள் ஹஸன் (ரலி) மற்றும் ஹூஸைன் (ரலி) ஆகியாருக்கு பாதுகாப்புத் தேடுவார்கள். அப்போது, அவர்களிடம் உங்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை),  இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்கு பின்வரும் வாசகத்தின் மூலம் பாதுகாப்புத்தேடுவார்கள் என்று கூறிவிட்டு,

أعوذُ بكلماتِ الله التامَّة، من كلِّ شيطانٍ وهامَّة، ومن كل عين لامَّة

என்று ஓதுவார்கள்”. என  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி,)

ـ حدّثني إبراهيمُ بن موسى أخبرنا هِشامٌ عن مَعْمَر عن الزُّهريِّ عن عروةَ عن عائشةَ رضيَ الله عنها: «أنَّ النبيَّ صلى الله عليه وسلّم كان يَنْفِثُ على نفسه ـ في المرَضِ الذي مات فيه ـ بالمعوذات، فلما ثقلَ كنتُ أنفثُ عليه بهنَّ، وأمسحُ بيده نفسهِ لبَرَكتها».
فسألتُ الزُّهريَّ: كيفَ يَنفثُ؟ قال: كان يَنفثُ على يديه ثمَّ يمسحُ بهما وَجهه..


நபி  {ஸல்}  அவர்கள் தங்களின் மரண நேரத்தின்போது முஅவ்விதாத் (குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின் நாஸ்) ஆகிய சூராக்களைக் கொண்டு தமக்கு தாமாகவே ஊதினார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நான் அவைகளைக் கொண்டு ஓதி ஊதினேன். அவர்களின் உடலை பரக்கத்துக்காக அவர்களின் கையினால் தடவினேன்என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி )


ـ حدّثنا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ. حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ فَقَالَ: يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ؟ فَقَالَ: «نَعَمْ» قَالَ: بِاسْمِ اللّهِ أَرْقِيكَ . مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ . مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللّهُ يَشْفِيكَ. بِاسْمِ اللّهِ أَرْقِيكَ


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நோயுற்றிருந்த ஒரு சமயத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி  {ஸல்}  அவர்களிடம் வந்துமுஹம்மதே! தங்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டதா ? என்று கேட்டார்கள். அதற்கு நபி  {ஸல்}  அவர்கள் ஆம்! என்றார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வருமாறு ஓதினார்கள்.

 بِاسْمِ اللّهِ أَرْقِيكَ 
مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ
 مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللّهُ يَشْفِيكَ
 بِاسْمِ اللّهِ أَرْقِيكَ  ( நூல்: முஸ்லிம் )


حدّثنا مُسدَّدٌ حدَّثنا عبدُ الوارثِ عن عبد العزيز قال: «دخلتُ أنا وثابتٌ على أنسِ بن مالك، فقال ثابتٌ: ياأبا حَمزة اشتَكيتُ. فقال أنسٌ
ألا أرقيكَ برُقيةِ رسولِ الله صلى الله عليه وسلّم؟ قال: بلى. قال
 اللهمَّ ربَّ الناس، مُذهبَ الباس ، اشْفِ أنتَ الشافي، لا شافيَ إلاّ أنت، شِفاءً لا يُغادِرُ سَقَماً».

நானும் ஸாபித் இப்னு அஸ்லம் அல்புனானீ (ரலி) அவர்களும் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது, ஸாபித் (ரலி) அவர்கள் 'அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்' என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள் “இறைத்தூதர் {ஸல்}  அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

ஸாபித் (ரலி) அவர்கள்'சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)' என்று சொல்ல, அனஸ் (ரலி), 'அல்லாஹும்ம றப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்பி அன்த்தஷ் ஷாபீ, லா ஷாபிய இல்லா அன்த்த, ஷிபா அன்லா யுகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.) ( நூல்:  புகாரி )

حدّثنا أبو النُّعمانِ حدَّثَنا أبو عَوانةَ عن أبي بِشْرٍ عن أبي المتوكلِ عن أبي سعيدٍ رضيَ اللهُ عنه قال: «انطَلَقَ نَفرٌ من أصحابِ النبيِّ صلى الله عليه وسلّم في سَفْرةٍ سافَروها، حتّى نزَلوا على حيٍّ من أحياءِ العرب فاستَضافوهم فأبَوا أن يُضيِّفوهم، فلُدِغَ سَيِّدُ ذلكَ الحيِّ، فسَعَوا لهُ بكلِّ شيءٍ، لايَنفعُهُ شيء. فقال بعضهم: لو أتيتُم هؤُلاءِ الرَّهطَ الذينَ نزَلوا لعلَّهُ أن يكونَ عندَ بعضهم شيء. فأتوْهم فقالوا: يا أيُّها الرَّهطُ إِنَّ سيِّدَنا لُدِغَ ، وسَعينا لهُ بكلّ شيءٍ لا يَنفعُه، فهل عندَ أحدٍ منكم مِن شيء؟ فقال بعضُهم: نعم واللهِ، إني لأرقِي، ولكِنْ واللهِ لقدِ استَضَفْناكم فلم تُضيِّفونا، فما أنا بِراق لكم حتّى تَجعلوا لنا جُعلاً. فصالَحوهم على قَطيعٍ منَ الغنم. فانطلقَ يَتفِلُ عليهِ ويقرأُ: {الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَالَمِينَ} فكأنَّما نُشِطَ من عِقال، فانطَلَقَ يَمشي وما بهِ قَلبَة. قال: فأوفوهم جُعلَهمُ الذي صالَحوهم عليه. فقال بعضُهم: اقسِموا. فقال الذي رَقَى: لا تَفْعلوا حتّى نأتيَ النبيَّ صلى الله عليه وسلّم فنذكُرَ لهُ الذي كان فننظُرَ ما يأمُرنا، فقدِموا على رسولِ الله صلى الله عليه وسلّم فذَكروا له، فقال: وما يُدريكَ أنها رُقْية، ثمَّ قال: قد أَصبتم، اقسِموا واضربوا لي معكم سَهماً، فضَحِكَ النبيُّ صلى الله عليه وسلّم». قال أبو عبدِ اللهِ وقال شعبةُ: حدَّثَنا أبو بِشْرٍ سمعتُ أبا المتوكِّل.. بهذا


நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது,  ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!" என்றார்.

அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார்.

வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி  {ஸல்}  அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி  {ஸல்}  அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி  {ஸல்} அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்

அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.  ( நூல்: புகாரி )

ـ حدّثنا محمدُ بن خالد حدثنا محمدُ بن وَهبِ بن عطية الدمشقي حدثنا محمد بن حرب حدثنا محمدُ بن الوليد الزبيدُّي أخبرَنا الزُّهريُّ عن عروةَ بن الزبيرِ عن زينبَ بنت أبي سلمةَ «عن أم سلمة رضي الله عنها أنَّ النبيَّ صلى الله عليه وسلّم رأى في بيتها جاريةً في وَجهها سَفْعةٌ فقال: اسَترْقوا لها فإنَّ بها النَّظرة ».
وقال عُقيل عن الزُّهري أخبرَني عروةُ عن النبي صلى الله عليه وسلّم: تابَعهُ عبد الله بن سالم عن الزبيدي.


நபி  {ஸல்}  அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி {ஸல்}   அவர்கள், 'இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறது' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸுபைதி (ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.                                                                   ( நூல்: புகாரி )

 3893 سنن أبي داوود (3662) سنن الترمذي
ـ حدثنا عَلِيُّ بنُ حُجْرٍ، حدثنا إسْمَاعِيلُ بنُ عَيَّاشٍ عَن مُحمَّدِ بنِ إسْحَاقَ عَن عَمْرِو بنِ شُعَيْبٍ عَن أَبيهِ عَن جَدِّهِ أَنَّ رَسُولَ الله قالَ: «إذَا فَزِعَ أَحَدُكُمْ في النَّوْمِ فَلْيَقُلْ أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِ فإِنّهَا لَنْ تَضُرَّهُ قال: وكانَ عَبْدُ الله بنُ عَمْرٍو يُعلمهامَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ، وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا في صَك ثُمَّ عَلّقَهَا في عُنُقِهِ»


நபி  {ஸல்}  அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் தூக்கத்தின்போது திடுக்கமடைந்தால் அவர்
أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِ

என்று சொல்லவும் நிச்சயமாக அது எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது பிள்ளைகளில் வயது வந்தவர்களுக்கு இதை கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு இதை எழுதி தொங்கவிட்டார்கள்.
(
நூல்: திர்மிதி, அபூதாவூத் )

ـ حدثنا عُبَيْدُالله بنُ مُعَاذٍ أخبرنا أبِي أخبرنا شُعْبَةُ عن عَبْدِ الله بنِ أبي السَّفَرِ عن الشَّعْبِيِّ عن خَارِجَةَ بنِ الصَّلْتِ عن عَمِّهِ ،: « أنَّهُ مَرَّ بِقَوْمٍ فَأتَوْهُ فَقَالُوا: إنَّكَ جِئْتَ مِنْ عِنْدِ هذَا الرَّجُلِ بِخَيْرٍ. فَارْقِ لَنَا هذَا الرَّجُلَ فَأَتَوْهُ بِرَجُلٍ مَعْتُوهٍ في الْقُيُودِ. فَرَقَاهُ بِأُمِّ الْقُرْآنِ ثِلاِثَةِ أيَّامٍ غُدْوَةً وَعَشِيَّةً وَكُلَّمَا خَتَمَهَا جَمَعَ بُزَاقَهُ ، ثُمَّ تَفَلَ، فَكَأنَّمَا أُنْشِطَ مِنْ عِقَالٍ، فَأعْطُوْهُ شَيْئاً، فَأتَى النَّبيَّ صلى الله عليه وسلّم، فَذَكَرَهُ لَهُ، فَقالَ رَسُولُ الله صلى الله عليه وسلّم: كُلْ فَلَعَمْرِي لَمَنْ أكَلَ بِرُقْيَةِ بَاطِلٍ، لَقَدْ أكَلْتَ بِرُقْيَةِ حَقَ


ஹாரிஜா (ரலி) அவர்களின் சிறிய தந்தை அவர்கள் ஒரு கூட்டத்தின் பக்கம் சென்றபோது அந்த கூட்டத்தவர்கள் அவரிடம் திடுக்கமடைந்த ஒரு மனிதனைக் கொண்டு வந்து ஒதிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அந்த மனிதனுக்கு அவர் மூன்று நாட்கள் சூறதுல் பாத்திஹாவைக் கொண்டு காலையும் மாலையும் ஒதிப்பார்த்தார். ஒதி முடிந்ததும் உமிழ் நீரை திரட்டி துப்பினார். அப்போது அந்த மனிதர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் எழுந்தார். அந்த கூட்டத்தினர் அவருக்கு அன்பளிப்பு வழங்கினர்.

அதை நபி  {ஸல்}  அவர்களிடம் வந்து கூறிய போது, "என் ஆயுளின் மீது சத்தியமாக நீ அதை சாப்பிடு. எத்தனையோ பேர் அசத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகின்றனர். நீ சத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகிறாய்" என்று கூறினார்கள்.
                            
                                                        ( நூல்: அபூதாவூத் )

ـ حدثنا أحْمَدُ بنُ صَالِحٍ وَابْنُ السَّرْحِ قَالَ أَحْمَدُ حدثنا ابنُ وَهْبٍ وَقَالَ ابنُ السَّرْحِ أخبرنا ابنُ وَهْبٍ قالَ أخبرنا دَاوُدُ بنُ عَبْدِ الرَّحْمنِ عنْ عَمْرِو بنِ يَحْيَى عنْ يُوسُفَ بنِ مُحمَّدٍ وَقالَ ابنُ صَالِحٍ: مُحمَّدُ بنُ يُوسُفَ بنِ ثَابِتِ بنِ قَيْسِ بنِ شَمَّاسٍ عنْ أبِيهِ عن جَدِّهِ عنْ رَسُولِ الله صلى الله عليه وسلّم، أنَّهُ دَخَلَ عَلَى ثَابِتِ بنِ قَيْسِ ـ قال أَحْمَدُ وَهُوَ مَرِيضٌ ـ فَقَالَ: «اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ عنْ ثَابِتِ بنِ قَيْسِ بنِ شَمَّاسٍ، ثُمَّ أخَذَ تُرَاباً منْ بَطْحَانَ فَجَعَلَهُ فِي قَدَحٍ ثُمَّ نَفَثَ عَلَيْهِ بِمَاءٍ وَصَبَّهُ عَلَيْهِ». قالَ أَبُو دَاوُدَ: قالَ ابنُ السَّرْحِ يُوسُفُ بنُ مُحمَّدٍ قال أبُو دَاودَ: وَهُوَ الصَّوَابُ


நபி  {ஸல்}  அவர்கள் தாபித் இப்னு கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நோயுற்று இருந்தபோது அவர்களிடம் சென்று  اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! என்று சொன்னார்கள். பின்னர் மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீரை அவர் மீது ஊற்றினார்கள்.

ஆதாரம் அபூதாவூத் ,ஹதீஸ் இலக்கம் – (3885)மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களையும் இது போன்ற இங்கு குறிப்பிடப்படாத ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது
நோய்களுக்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப்பார்தல், தண்ணீர் ஓதுதல், தாயத்து கட்டுதல் என்பன இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டவையாகும்.

இவை ஷிர்க் ஆன காரியங்கள் அல்ல என்பதையும் நபி அவர்கள் அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் வைத்தியம் செய்துள்ளார்கள் என்பதையும் ஷிர்க் (இணைவைத்தல்) சம்மந்தமான ஓதல்கள் மூலம் வைத்தியம் செய்வதை நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.

عن ابن مسعود «إن الرقى والتمائم والتولة شرك

ஓதிப்பார்தலும் தாயத்துகட்டுதலும் ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும் என்ற கருத்தைத் தரும் (அபூதாவூத் – 3883 ஹதீதும் இப்னு மாஜ்ஹ்- 3612) ஹதீதுகளும் இது போன்றவைகளும் ஜாஹிலிய்யா காலப்பகுதியில் காணப்பட்ட ஷிர்க் (இணைவைத்தல் சம்பந்தமான தாயத்துகளை குறிப்பிடுகின்றன.

 மாறாக அல்குர்ஆனை கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்களை கொண்டும் ஓதிப்பார்தலையும் தாயத்துகட்டுதலையும் ஷிர்க் என இங்கு குறிப்பிடப்படவில்லை.

                                ( நன்றி/ ...... மெயில் ஆஃப் இஸ்லாம். காம் )

அடுத்து சூனியம்….

சூனியத்தால் பாதிப்பு உண்டு, அல்லாஹ் நாடினால் சூனியத்தால் விளைவுகள் ஏற்படும் என்று நம்புவதும், சூனியம் செய்வது, அதைக் கற்றுக் கொடுப்பது, கற்பது பெரும்பாவமாகும் என்று ஏற்றுக் கொள்வது தான் அகீதா கொள்கையாகும்.

ஆனால், சூனியம் என்று ஒன்றே இல்லை என்றும் மேற்படி நம்புவதும், ஏற்றுக் கொள்வதும் ஷிர்க் என்று இவர்கள் வாதிடுவது முற்றிலும் தவறான வழிகேடான வாதமாகும்.

ஸிஹ்ர் – சூனியம் என்ற கருத்தைத் தாங்கிய வசனம் அல்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது.

இஸ்லாம் நெருங்கவே கூடாது என்று கட்டளையிடுகிற பெரும் பாவங்களில் சூனியமும் ஒன்றாகும்.

இப்படியான பல விஷயங்கள் குர்ஆன் சுன்னாவில் கூறப்பட்டிருந்தும் சூனியத்தை மறுப்பது குஃப்ராகும்.

சூனியம் என்றால் வித்தை காட்டுதல் என்பது சிலரின் நம்பிக்கை. இது தவறாகும். வித்தை காட்டுவதுதான் சூனியமென்றால் இதற்காக அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை அனுப்பி தடியைப் பாம்பாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகவே வித்தை காட்டுவதை சூனியமென்பது தவறாகும். வித்தை காட்டுவதால் ஒருவர் காபிராக முடியாது. வித்தை காட்டுவது ஒரு பெரும் பாவம் அல்லது குப்ர் என்று சொல்லவும் முடியாது. ஒருவன் பார்த்துக்கொண்டிருக்க அவனுடைய கண்களை வித்தைக்குற்படுத்தி, எப்படி அவனை ஏமாற்றலாம் என்பதைப் படிப்பதே கண்கட்டி வித்தையாகும். 

இதைப்படிப்பதற்கு ஷைத்தானுடைய துணையெல்லாம் தேவையில்லை. முயன்றால் கற்று விடலாம். இதை சூனியமென்பது தவறாகும்.

சூனியத்தால் மனிதனுக்குக் பாதிப்பு ஏற்படுமா? அல்லது ஏற்படாதாஎன்பது தொடர்பாக இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று தேடும் போது கீழ்வருகின்ற ஹதீஸை பார்க்க முடியும்.

صحيح البخاري بابُ العَجْوَةِ
 حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَرْوَانُ أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ
عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ

தினமும் யார் ஒவ்வொரு நாள் காலையிலும் அஜ்வா வகை சேர்ந்த ஏழு பேரீத்தம் பழங்களை சாப்பிடுகின்றாரோ, அந்த நாளில் அவருக்கு நஞ்சோ, சூனியமோ பாதிப்பை ஏற்படுத்தாது.அறிவிப்பவர் : ஆமிரிப்னு ஸஃத் (ரழி) ஆதாரம்: புஹாரி5445

சூனியத்துக்கும் ஒரு தாக்கமிருக்கிறது, நஞ்சுக்கும் ஒரு தாக்கமிருக்கிறது என்பதை விளங்க முடிகின்றது.

அல்லாஹ் அல்குர்ஆனில் ஸிஹ்ருத்தக்யீல் என்றொருவகை சூனியத்தைக் குறிப்பிடுகின்றான். கயிரைப் போட்டு பாம்பாகத் தோற்றமுறச் செய்ததையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

ஏனெனில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெட்டவெளியில் பிர்அவ்னுடைய கன்னியத்தைக்கொண்டு என்று கூறி அந்த சூனியக்காரர்கள் அனைவரும் ஒரே முறையில் கையிற்றை மட்டுமே மூஸா நபியவர்களுக்கு முன்னால் போட்டார்கள் அவை உடனே பாம்புகளாகக் காட்சியளித்தன. 

இந்த சூனியத்தால் மூஸா நபியவர்களுக்கே பயமேற்பட்டது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே இங்கு மூஸா நபியவர்களுக்கு சூனியம் பாதித்திருக்கின்றது. 

நபிமார்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் அல்லாஹ் வஹி மூலம் உதவி செய்வான். மற்றவர்கள் இவ்வாறு சூனியத்தால் பாதிக்கப்பட்டால் சில வேளை தப்பலாம் அல்லது மரணித்தும் போகலாம்.

ஆனால், அல்லாஹ் மூஸா நபியவர்களைப்பார்த்துமூஸாவே நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்களே வெற்றி பெறுவீர்கள் உங்களது வலது கையில் உள்ளதைப் போடுவீராக அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும்  என்று கூறினான்.

சூனியக்காரர்களுக்கு கையிற்றைப் பாம்பாக மாற்ற முடியாது. ஆனால் பாம்பு போல காட்ட முடியும். இந்த சூனியம் ஒருவருக்கு வைக்கப்பட்டால் பாதையில் செல்லும் பெண்ணொருவரை மனைவியாகக்காண்பான் மனைவியை மனைவியாகக்காணமாட்டான். 

ஏனெனில் அவனுக்கு இந்த சூனியத்தால் மாற்றிக்காட்டப்பட்டுள்ளது. எல்லாம் தலைகீழாய் தோற்றமளிப்பதுவே இந்த சூனியத்தின் பாதிப்பாகும்.இதையே அல்லாஹ் மிகப்பெரும் சூனியம் என்று கூறுகின்றான்.

நபிமார்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தஃவா செய்தும் அந்த மக்கள் நிராகரித்தமைக்கு இந்த சூனியமே காரணம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஏனெனில் சூனியத்தாலும் இவ்வாறு செய்யலாம் என்று நபிமார்களைப்பார்த்து அம்மக்கள் நினைத்தனர். இவை அல்குர்ஆன் நமக்குக் கூறும் செய்திகளாகும். இந்த வகை சூனியம் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ

“யார் என்னைக் கணவில் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தானால் என்னைப் போன்று தோற்றமளிக்க முடியாது” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : புகாரி

ஷைத்தானால் நபியவர்கள் போன்று தோற்றமளிக்க முடியாது ஆனாலும் மற்றவர்களைப் போன்று தோற்றமளிக்க அவனால் முடியும் என்பதைத் தான் இந்த ஹதீஸ் நமக்கு இங்கு சுட்டிக்காட்டுகின்றது.

 நபி {ஸல்} அவர்கள்ஸிஹ்ருத்தக்யீலால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு கீழ்வரும் நபி மொழி சான்றாகின்றது.

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا هِشَامٌ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ

”நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். எந்தளவுக்கெனில் நபியவர்கள் சில வேளைகளைச் செய்ததாக நினைத்தார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி) ஆதாரம் : புகாரி

ஆகவே, சுறுங்கக் கூறின் உலகில் ஏனைய நோய்களுக்கு சில காரணங்கள் இருப்பது போல சூனியமும் சில நோய்களுக்கு காரணமாகின்றது. ஆனால் இதற்கு அல்குர்ஆன் மூலம் செய்யப்படும் மருத்துவமே உகந்ததும் சிறந்ததுமாகும்.

சூனியம் சம்பந்தமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் முழுமையாக ஒரு பதிவில் காண்போம்.

இத்தோடு ஸியாரத் சம்பந்தமாக இணைத்துக் கூற விரும்புகின்ற உலமாக்கள் கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி ஹள்ரத் அவர்கள் சென்ற வாரம் பதிவிட்ட தர்கா இஸ்லாத்தின் தனியொரு அடையாளம் என்கிற பதிவில் குறிப்பெடுத்துக் கொள்ளவும்.


மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்ட ஒரு அமல் அதில் மக்கள் இழைக்கும் தவறுகளினால் குறித்த அமல் ஹராம், ஷிர்க், பெரும்பாவம் என்றெல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட முடியாது. அதனால் நபியவர்களையே அவமதித்த குற்றத்துக்கு நாம் ஆளாகிவிட நேரிடும்.

உதாரணத்திற்கு சிலதை இங்கு தந்திருக்கின்றேன். அல்லாஹ் விளக்கத்தைத் தந்தருள் புரிவானாக!

சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நபியவர்கள், பின் சஹாபாக்கள், பின் இமாம்கள், உண்மையான இறை நேசர்கள் காட்டித்தந்த பிரகாரம் பின்பற்றுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் நமது அமல்களையும் கோட்பாடுகளையும் அமைத்துக் கொள்வதற்கு அல்லாஹ் துணை நிற்பானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!

இவர்களால் இவர்கள் மனோஇச்சை கூறுகிற ஷிர்க்கை அல்ல சாக்கடைகளில் உலவித் திரியும் கொசுவைக் கூட அழிக்க முடியாது என்பதை மக்களின் மனதில் நிலை நிறுத்துவோம்!!