Thursday, 6 April 2017

முஸ்லிம் சமூகத்தின் வெற்றி தாமதம் ஆவது ஏன்?முஸ்லிம் சமூகத்தின் வெற்றி தாமதம் ஆவது ஏன்?அல்லாஹ் முஸ்லிம்களுக்கும், முஃமின்களுக்கும் வெற்றியை, நிம்மதியான வாழ்க்கையை தருவதாக அல்குர்ஆனில் பல இடங்களில் வாக்களிக்கின்றான்.

ஆனால், இன்று உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் அமோக வெற்றியைப் பெறுகின்றார்கள். ஆட்சி, அதிகார பீடத்தை அலங்கரிக்கின்றார்கள்.

ஏன் வெற்றி அவர்களின் வசம் ஆனது? ஏன் இறை உதவி முஸ்லிம்களுக்கு தாமதம் ஆகின்றது?

அல்லாஹ் எந்த அடியாருக்கும் அநீதி இழைப்பதில்லை. இது அல்லாஹ் தன் மீது ஆணையிட்டு விதியாக்கி இருக்கின்றான் எனும் போது, உலகளாவிய அளவில் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் ஏன் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது?

இந்த கேள்வி இன்று முஸ்லிம் சமூக முற்றத்தைத் தாண்டி, பொது வெளியிலும் அதிகமாகப் பரிமாறப்படுகின்றது.

.பி யில் பா.. வின் பிரம்மாண்ட வெற்றி இந்திய முஸ்லிம் உலகை கொஞ்சம் ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது என்றால் அதுவும் மிகையல்ல.

உள் வீட்டு விவாகாரம் முதற்கொண்டு உலகளாவிய விவகாரங்கள் வரை முஸ்லிம் சமூகம் அடையும் தோல்விகளுக்கு முஸ்லிம் சமூகம் ஒற்றை வார்த்தையில் பதிலை வைத்திருக்கின்றது, ஆம்! முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை! பல பிரிவுகளும், இயக்க வெறிகளும் தான் காரணம்என்று.

முஸ்லிம் சமூகத்தின் உலகளாவிய தொடர் தோல்விகளை இந்த ஒற்றை குற்றச் சாட்டிற்குள் அடைத்து விட முடியுமா? உண்மையில் அது தான் காரணமா?

வாருங்கள்! உலகிற்கும், மனித குல சமூகத்திற்கும் வெற்றியை பெற்றுத் தருகிற இஸ்லாம் இது குறித்து என்ன கூறுகின்றது என்பதை ஓர் பார்வை பார்த்து விட்டு, வெற்றியாளர்களாய் வலம் வருவோம்!

அல்லாஹ்வின் உதவியும்…. தாமதமாகும் வெற்றியும்….

அல்லாஹ்வின் உதவி கிடைக்காமல் போவதற்கும் வெற்றி தாமதம் ஆவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

1. நாம் தான் காரணம்….

அதில் முழு முதற்காரணம் நீங்களும், நானும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தான்.

أَوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّى هَذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ()

“உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும் போது ”இது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கின்றீர்கள். இது போன்ற இருமடங்கு துன்பம் உங்கள் கரங்களால் எதிரிகளுக்கு (பத்ரு போரில்) ஏற்பட்டிருந்ததே!

நபியே! நீர் அவர்களுக்கு கூறிவிடும்! “இத்துன்பம் உங்களால் தான் வந்தது. திண்ணமாக! அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்”.   ( அல்குர்ஆன்: 3: 165 )

உஹதின் தோல்வியும், அளப்பெரும் உயிரிழப்பும் மாநபித்தோழர்களின் உள்ளத்தை உலுக்கிய போது அவர்களின் நாவுகளும், உள்ளங்களும் வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு பதில் கூறும் முகமாக அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இது.

2. நம்மிடம் இருந்து வெளிப்படும் நடத்தைகள் ஒரு காரணம்…

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ () ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَنْزَلَ جُنُودًا لَمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِينَ كَفَرُوا وَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ ()

“இதற்கு முன்னர் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். இப்போது, ஹுனைன் போர் நடைபெற்ற நாளிலும் அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்.

அன்று உங்களின் படையினரின் எண்ணிக்கை உங்களை இறுமாப்பில் ஆழ்த்தி இருந்தது. ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனும் அளிக்கவில்லை. மேலும், பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் உங்களுக்கு குறுகிப் போய் விட்டது. பின்னர், நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.

பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வையில் தென்படாத படைகளை இறக்கி இறைமறுப்பாளர்களைத் தண்டித்தான்”.      ( அல்குர்ஆன்: 9: 25 )

ஹுனைன் யுத்தத்தில் எதிரிகளை விட இருமடங்கு எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருந்தனர். அது முஸ்லிம்களிடம் ஒரு வித தற்பெருமையை ஏற்படுத்தியது.

ஆதலால், அல்லாஹ் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு தோல்வியைக் கொடுத்து, இறுதியில் முஸ்லிம்களுக்கு வெற்றியை நல்கினான். இதைத் தான் அல்லாஹ் மேற்கூறிய இறைவசனத்தில் குறிப்பிடுகின்றான்.

முஸ்லிம்களிடம் ஏற்பட்ட சிறு தவறான நடத்தை அல்லாஹ்வின் உதவி தாமதமாக காரணமாக அமைந்து விட்டதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

3. நம்முடைய பாவங்களும் ஓர் காரணம்….

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ ()

“உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். எனினும், அவன் பெரும்பாலான பிழைகளை பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றான்”.                     ( அல்குர்ஆன்: 42: 30 )

فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ ()

 “ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம், சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது. இன்னும் சிலரை நாம் பூமியில் புதைத்து விட்டோம். மேலும் சிலரை நாம் மூழ்கடித்து விட்டோம்.

அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக்கொண்டிருந்தார்கள்”. (அல்குர்ஆன்: 29:40)

முன் சென்ற சமூக மக்களின் அழிவைக் குறிப்பிடும் அல்லாஹ் இங்கே இரண்டு விஷயங்களைக் கூறுகின்றான்.

1. பாவங்களின் காரணமாக அல்லாஹ் ஓவ்வொருவரையும் தண்டிப்பான். 2. அப்படி அவன் தண்டித்தால் அது அநியாயமாக ஆகாது. அவரவர்களின் செயல்பாடுகளே அந்த தண்டனைக்கான காரணம் ஆகும். 

قال النبي صلى الله عليه وسلم
إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ وَرَضِيتُمْ بِالزَّرْعِ وَتَرَكْتُمْ الْجِهَادَ سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ] رواه أبو داود وأحمد

”உங்கள் வியாபாரம் மிகவும் தந்திரமான ( ஈனா ) அடிப்படையில் அமைந்திருக்கும் போது, மாடுகளின் காதுகளைப் பிடித்துக் கொண்டு விவசாயங்களை நீங்கள் திருப்தி பட்டுக் கொள்ளும் போது ( உலக மோகத்தை மாநபி {ஸல்} அவர்கள் இப்படியான உவமானத்தைக் கொண்டு குறிப்பிடுகின்றார்கள். ) அறப்போராட்டங்களை நீங்கள் கைவிடும் போது அல்லாஹ் உங்கள் மீது இழிவையும், கேவலத்தையும் சாட்டுவான்.

மீண்டும் நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால் திரும்புகின்ற வரை அந்த இழிவு நீடித்து இருக்கும். நீங்கள் திரும்பி விட்டால் அல்லாஹ் உங்களை விட்டும் அதை நீக்கி விடுவான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.  ( நூல்: அஹ்மத் )

وهنا ستجد قراءتين للحديث, القراءة الأولى تنبيه للمسلمين من أسباب الذل والهزيمة
القراءة الثانية تنبؤ الرسول محمد بأن المسلمين سيشهدون عصورًا تعج بالهزيمة بما كسبت أيديهم من أكل الربا وترك الجهاد ولن يعودوا للنصر إلا باتباع الدين وطاعة الله ورسوله

மேற்கூறிய நபிமொழியில் இரண்டு அம்சங்கள் பொதிந்து இருக்கின்றன. முதலாவது அம்சம் “முஸ்லிம்களுக்கு இழிவும் கேவலமும் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த எச்சரிக்கையும்,

இரண்டாவது அம்சம் “முஸ்லிம்கள் சில பாவங்களால் தொடர்ச்சியாக சில காலங்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அப்படியான காலங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்பட்டு வாழும் போது அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைக்கும் என்றும் உணர்த்துகின்றார்கள்.


جاء رسول بِالشَّامِ
عمر بن الخطاب من إحدى الغزوات فبشره بالنصر
فسأله عمر بن الخطاب : متى بدأ القتال ؟
فقالوا : قبل الضحى
قال : ومتى كان النصر ؟
فقالوا : قبل المغرب
فبكى سيدنا عمر حتى ابتلت لحيته..
فقالوا : يا أمير المؤمنين نبشرك بالنصر فتبكى ؟
فقال رضي الله عنه : والله إن الباطل لا يصمد أمام الحق طوال هذا الوقت إلا بذنب أذنبتموه أنتم أو أذنبته أنا
ابن الحاج في كتاب المدخل 3ج/ص5
أبو بكر الطرطوشي في كتاب سراج الملوك ص: 174

ஷாம் தேசத்திற்கு உமர் (ரலி) அவர்கள் அனுப்பியிருந்த படைப்பிரிவுகளின் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்திருந்தார்.

வந்தவர், ”அமீருல் முஃமினீன் அவர்களே! நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்றுவிட்டது. அல்லாஹ் நமது படைப்பிரிவுக்கு வெற்றியை நல்கினான்என்று கூறினார்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள்எப்போது நமது படை வீரர்கள் எதிரணியினரின் படை வீரர்களோடு போரிட ஆரம்பித்தனர்?” என்று கேட்டார்கள்.

அதற்கவர், ”ளுஹா உடைய நேரத்திற்கு சற்று முன்னதாகஎன்று பதில் கூறினார்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள்எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்தது?” என்று கேட்டார்கள்.

அதற்கவர், “மஃக்ரிப் உடைய நேரத்திற்கு சற்று முன்னதாகஎன்று பதில் கூறினார்.

இந்த பதிலைக் கேட்டதும் தான் தாமதம் உமர் (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அழுகையின் உச்சபட்சமாக தாடி முழுவதும் நனைந்து தேம்பித் தேம்பி அழுதார்கள்.

சபையில் இருந்தவர்கள், உமர் (ரலி) அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றார்கள். எனினும், உமர் (ரலி) அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.

அப்போது, சபையில் இருந்தவர்கள்அமீருல் முஃமினீன் அவர்களே! அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகின்றீர்கள்? அவர் நல்ல செய்தியைத் தானே சொல்லியிருக்கின்றார்? நமது படை வெற்றி பெற்றது மகிழ்ச்சியான செய்தி தானே?” என்று கேட்டனர்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் மீது ஆணையாக! அசத்தியத்திற்கெதிரான அறப்போரட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு நேரம் வரை தாமதம் ஆகாது, அப்படியானால், நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்? அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்?” இல்லையென்றால், இவ்வுளவு நேரம் வெற்றி தாமதப்பட்டிருக்காது”. என்று பதில் கூறினார்கள்.

( நூல்: அல் மத்ஃகல் லிஇமாமி இப்னுல் ஹாஜ் (ரஹ்)…, ஸிராஜுல் முலூக் லி இமாமி அத் தர்தூஸீ (ரஹ்)… )

4. தீமைகளை தடுக்காததும் ஒரு காரணம்....

قال النبي صلى الله عليه وسلم
 إن الناس إذا رأوا المنكر فلم يغيروه أوشك أن يعمهم الله بعقابه
 أخرجه الإمام أحمد رحمه الله بإسناد صحيح عن الصديق رضي الله عنه

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“மக்கள் செய்யும் பாவமான செயல்களை தடுக்கவில்லையானால் அல்லாஹ் தண்டனையை எல்லோருக்கும் பொதுவாக்கி விடுவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                    ( நூல்: அஹ்மத் )

حدثنا هاشم بن القاسم ، حدثنا زهير - يعني ابن معاوية - حدثنا إسماعيل بن أبي خالد ، حدثنا قيس قال : قام أبو بكر ، - رضي الله عنه - ، فحمد الله وأثنى عليه ، وقال : أيها الناس ، إنكم تقرؤون هذه الآية : ( يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ) إلى آخر الآية ، وإنكم تضعونها على غير موضعها ،
 وإني سمعت رسول الله - صلى الله عليه وسلم - قال : " إن الناس إذا رأوا المنكر ولا يغيرونه أوشك الله ، عز وجل ، أن يعمهم بعقابه

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தும் போது “மக்களே! நீங்கள் “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது” எனும் ( அல்குர்ஆன்: 5: 105 ) இந்த வசனத்தை ஓதுகின்றீர்கள். ஆனால், அதற்கு தவறான பொருளை அறிவிக்கின்றீர்கள்.

மக்கள் தீய செயல்கள் நடப்பதைக் கண்ணால் கண்ட பின்பும் அதைத் தடுக்க முயற்சிப்பதில்லை. அநியாயக்காரன், அநீதி இழைப்பதைக் கண்டும் அவன் கரத்தைப் பிடித்து அதைத் தடுப்பதில்லை என்றால் இத்தகைய நிலையில் அல்லாஹ் வேதனை தரும் தண்டனையை நல்லவர், கெட்டவர் அனைவரின் மீதும் விரைவில் இறக்கி விடுவான்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நற்செயல்கள் புரியுமாறு ஏவி, தீய செயல்களைத் தடுத்து நிறுத்துவது உங்கள் மீது கடமையாகும்.  இவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில், அல்லாஹ் உங்களில் மிகவும் கீழ்த்தரமான, கேடுகெட்ட நபர்களை உங்களுக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவிடுவான்.

அவர்கள் உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுப்பார்கள். துன்பங்களைத் தருவார்கள். பின்னர், உங்களில் நல்லவர்கள் அக்கேடு கெட்டவர்களின் தீங்கிலிருந்து பாதுகாத்திடுமாறு இறைவனிடம் பிரார்த்திப்பார்கள். ஆனால், அந்த பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிக்க மாட்டான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என கூறினார்கள்.

                                             ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ )

5. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுதலும் ஓர் காரணம்….

في غزوة أحد عصا الرماة أمر رسول الله صلى الله عليه وسلم، فانقلبت الدائرة على المسلمين، وصعد رسول الله صلى الله عليه وسلم فوق جبل أحد، وأشرف أبو سفيان فقال: أفي القوم محمد؟ فقال الرسول صلى الله عليه وسلم: «لا تجيبوه». فقال: أفي القوم ابن أبي قحافة؟ قال: «لا تجيبوه». فقال: أفي القوم ابن الخطاب؟ فقال: إن هؤلاء قتلوا، فلو كانوا أحياء لأجابوا.

فلم يملك عمر نفسه، فقال: كذبت يا عدو الله، أبقى الله عليك ما يخزيك. قال أبو سفيان: اُعْلُ هُبَل. فقال النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا: ما نقول؟ قال: «قولوا الله أعلى وأجل». قال أبو سفيان: لنا العزى ولا عزى لكم. قال النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا: ما نقول؟ قال: «قولوا الله مولانا ولا مولى لكم». قال أبو سفيان: يوم بيوم بدر، والحرب سجال، وتجدون مُثْلةً لم آمر بها ولم تسؤني(

صحيح البخاري

உஹது போர்க்களத்தின் உச்சபட்ச தருணம் அது…

நபி {ஸல்} அவர்களின் கட்டளைக்கு நபித்தோழர்களில் ஒரு சிறு கூட்டம் மாறு செய்தபோது போரின் நிலை முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி  விட்டது.

நபி {ஸல்} அவர்களும் அவர்களின் சில தோழர்களும் உஹது மலைக்குமேல் ஏறி, ஒரு பாறைக்கு பின்னால் ஒளிந்திருந்தார்கள்.

அப்போது, எதிரிகளின் தலைவரான அபூஸுப்யான் அவர்கள்: “முஹம்மத் இருக்கிறாரா? என்று சப்தமிட்டார்.  பதில் சொல்ல எத்தனித்த உமர் (ரலி) அவர்களை நபி {ஸல்} அவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என கூறினார்கள்.

அபூ குஹாபாவின் மகன் அபூபக்கர் இருக்கிறாரா? என அபூ ஸுப்யான் மீண்டும் குரல் கொடுத்தார்.

இப்போதும் பதில் சொல்ல வேண்டாம் என நபி ஸல் அவர்கள் தடுத்து விட்டார்கள்.

கத்தாபின் மகன் உமர் இருக்கிறாரா? என மூன்றாவது சப்தமிட்டார்.  இதற்கும் பதில் இல்லாத போது,  இவர்கள் அனைவரும் மரணித்துவிட்டார்கள்.

இவர்கள் உயிருடன் இருந்தால் இந்நேரம் பதில் சொல்லி இருப்பார்கள் என அபூ ஸுப்யான் அவர்கள் இறுமாப்புடன் மிக சப்தமாக கூறினார்.

இதைக் கேட்டு தாள முடியாத உமர் (ரலி) அவர்கள்  அல்லாஹ்வின் விரோதியே! நீ பொய் சொல்கிறாய்! நாங்கள் ஒன்றும் மரணித்து போகவில்லை. அல்லாஹ் உம்மை இழிவுபடுத்த எங்களை உயிருடன் தான் வைத்துள்ளான்!” என பதில் கூறினார்கள்.

ஹுபல் எனும் எங்கள் தெய்வம் உயர்ந்துவிட்டது! என அபூ ஸுப்யான் சப்தமிட்டார்.

அதைக்கேட்ட நபி {ஸல்} அவர்கள் இப்போது, அவருக்கு பதில் சொல்லுங்கள்! என்று தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

எப்படி பதில் சொல்வது? என ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

அல்லாஹ்வே உயர்ந்தவன்! கண்ணியமானவன்! என்று கூறுங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அவ்வாறு கூறியதும் தான் தாமதம் எங்களுக்கு உஸ்ஸா எனும் தெய்வம் இருக்கிறது உங்களுக்கு இல்லை என அபூ ஸுப்யான் சொன்னார்.

இதைக்கேட்ட நபி {ஸல்} அவர்கள் அவருக்கு பதில் சொல்லுங்கள்! என மீண்டும் தம் தோழர்களுக்கு உத்தரவிட்டபோது எப்படி பதில் சொல்வது  என மீண்டும் ஸஹாபாக்கள் கேட்டனர்.

எங்களுக்கு அல்லாஹ் மவ்லாவாக எஜமானனாக இருக்கிறான்! உங்களுக்கு இல்லை என்று சொல்லுங்கள்!” என கூறினார்கள்.                                             ( நூல்: புகாரி )

இதன் மூலம் ஒரு செய்தியை அழுத்தமாக முஸ்லிம்கள் தங்களின் மனங்களில் பதிய வைக்கவேண்டும்.

அது என்னவெனில், எடுத்ததெற்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடாமல் காலம் காத்திருந்து கச்சிதமான முறையில் விவகாரங்களை அணுக வேண்டும். எதிரிகளை வாயடைக்கச் செய்ய வேண்டும்.

உணர்ச்சிவசப்பட்டதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் சமூகத்தின் சொந்தங்கள் இன்றளவிலும் சொந்த பந்தங்களை, மனைவி, மக்களை பெற்றோரை, சகோதர, சகோதரிகளை இழந்து சிறையில் வாடி வருகின்றனர்.

6. கண்ணியத்தை இஸ்லாமிய கலாச்சாரத்தில் தேடாமல் இன்ன பிற கலாச்சாரங்களில் தேடுவதும் ஓர் காரணம்…

عن طارق بن شهاب قال:خرج عمر بن الخطاب إلى الشام، ومعنا أبو عبيدة بن الجراح، فأتوا على مخاضة وعمر على ناقة، فنزل عنها وخلع خفيه فوضعهما على عاتقه، وأخذ بزمام ناقته فخاض بها المخاضة، فقال أبو عبيدة: يا أمير المؤمنين، أأنت تفعل هذا؟! تخلع خفيك وتضعهما على عاتقيك، وتأخذ بزمام ناقتك وتخوض بها المخاضة؟! ما يسرني أن أهل البلد استشرفوك! فقال عمر: أوه لو يقل ذا غيرك يا أبا عبيدة جعلته نكالاً لأمة محمد !
إنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام، فمهما نطلب العز بغير ما أعزنا الله به أذلنا الله.
أخرج الحاكم في "المستدرك" (1/61 ـ 62)

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் சிரியாவுக்கு புறப்பட்டார்கள். அவர்களுடன் அபூ உபைதா (ரலி) அவர்களும் சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு நீர் தடாகத்தைக் கடந்து செல்ல வேண்டியதிருந்தது.

அப்போது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி, தங்களின் இரு காலுறைகளையும் கழற்றி தங்களின் தோள் புஜத்தில் வைத்துக் கொண்டு, ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினார்கள்.

இந்த காட்சியை பார்த்த அபூஉபைதா (ரலி) அவர்கள் “முஃமின்களின் தலைவரே! நீங்களா இவ்வாறு செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் ஒட்டகத்திலிருந்து இறங்கினீர்கள்? அது உங்களின் மரியாதைக்கு உகந்ததா? மேலும், இந்நாட்டு மக்களெல்லாம் உங்களைக் காண ஆவலாக இருக்கின்றனர். இந்தக் கோலத்தில் உங்களைக் கண்டால் அவர்களெல்லாம் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்றார்கள்.

அதை செவியுற்ற அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் கடும் சினத்துடன் ”அபூ உபைதா (ரலி) அவர்களே! உம்மைத் தவிர வேறுயாரும் இதை சொல்லியிருந்தால் கடுமையாக நான் தண்டித்திருப்பேன்.

கண்ணியத்தை யாரிடம் எதிர் பார்ப்பது? மக்களிடமா எதிர்ப்பார்ப்பது?

”நாம் இழிவாக இருந்தோம், அல்லாஹ் இஸ்லாத்தைக் கொண்டு நம்மை கண்ணியப்படுத்திவிட்டான்! எனவே, இஸ்லாத்தை தவிர்த்து வேறு எங்கு, யாரிடம் கண்ணியத்தை தேடினாலும் அது இழிவையே தரும்! என்று கூறினார்கள்.

                     ( நூல்: அல் மஃகாஸி லி இமாமி அல்வாக்கிதீ (ரஹ்)..... )

7. மாற்றுக் கருத்தாளர்களின் இதயங்களை வென்றெடுக்காததும் ஓர் காரணம்....

عندها ذهب الرسول الى ابناء من بني عمرو ليدعوهم إلى الإسلام و يطلب منهم ان العون له والنصرة وللإسلام وللمؤمنين الموجودين في مكة فكان الثلاثة هم: عبد ياليل ومسعود وحبيب أولاد عمرو بن عمير، وكانوا احد اشراف و سادات المدينة فعرض رسول الله عليهم الاسلام وان يتركوا عبادة اللات إلى عبادة الله وحده ، فهذا يعني ان دخولهم في الاسلام كأنه إعلان للحرب على قبيلة قريش. فكان موقفهم من دعوة الرسول انه قال احدهم الا وهو عبد اليل بن عمرو : إنه سيمرط (أي سيمزق) ثياب الكعبة إن كان الله أرسلك. أما الاخر الا وهو مسعود فقال: أما وجد الله أحدًا غيرك. وأما الثالث حبيب فقد قال -وهو يحاول أن يصطنع الذكاء مع شدة غبائه- قال
 والله لا أكلمك أبدًا، إن كنت رسولاً لأنت أعظم خطرًا من أن أرد عليك الكلام، ولئن كنت تكذب على الله ما ينبغي أن أكلمك. فقال لهم رسول الله : ( إذا فعلتم ما فعلتم فاكتمـوا عني ) ، وكره رسـول الله صلى الله عليه وسلم أن يبلغ قومه عنه فيذئرهم [ أي : يجرئهم ] ذلك عليه ، فلم يفعلوا ، وأغروا به سفهاءهم وعبيدهم يسبونه ويصيحون به ، حتى اجتمع عليه الناس ، وألجئوه إلى حائط لعتبة بن ربيعة وشيبة بن ربيعة وهما فيه ، وجعلوه يمر من بين الصفين وهم يقذفونه بالحجارة ويقذفونه بأسوأ الكلام والسباب، حتى سالت دماؤه الشريفة على كعبيه وتلون النعل بالدم، وكان زيد بن حارثة يبذل كل طاقته لتلقي الحجارة في جسده، بل في رأسه حتى لا تصيب رسول الله ، حتى شج رأسه ، ورسول الله يسرع الخطا بين الصفين حتى انتهى منه ورجع عنه من سفهاء ثقيف من كان يتبعه ، فعمد إلى ظل حبلة [ أي : شجرة ] من عنب فجلس فيه ، وابنا ربيعة ينظران إليه ويريان ما لقي من سفهاء أهل الطائف ، فلما اطمأن رسول الله صلى الله عليه وسلم


நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாயிஃபிற்குச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபிஎன்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள்.

ஆனால், அவர்களில் ஒருவன் உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்என்று கூறினான். மற்றொருவன் அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.

மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்லஎன்று கூறினான். அப்போது நபி (ஸல்) இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாயிஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

இறுதியில், மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாரிஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாஃயிபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர்.

நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள்.

நபி {ஸல்} அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடுஎன்று கூறினர்.

                                            ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

زادت حيرة المشركين إذ نفدت بهم الحيل، ووجدوا بني هاشم وبني المطلب مصممين على حفظ نبى الله صلى الله عليه وسلم والقيام دونه، كائنًا ما كان، فاجتمعوا في خيف بني كنانة من وادى المُحَصَّبِ فتحالفوا على بني هاشم وبني المطلب ألا يناكحوهم، ولا يبايعوهم، ولا يجالسوهم، ولا يخالطوهم، ولا يدخلوا بيوتهم، ولا يكلموهم،
تم هذا الميثاق وعلقت الصحيفة في جوف الكعبة، فانحاز بنو هاشم وبنو المطلب، مؤمنهم وكافرهم ـ إلا أبا لهب ـ وحبسوا في شعب أبي طالب، وذلك فيما يقال : ليلة هلال المحرم سنة سبع من البعثة .

நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு கினானா கிளையாருக்குச் சொந்தமான முஹஸ்ஸப் என்ற பள்ளத்தாக்கில் ஒன்று கூடிய மக்கத்து இணைவைப்பாளார்கள்இது வரை நாம் முஹம்மதுக்கு எதிராக எடுத்த எந்த நடவடிக்கைக்கும் முஹம்மதும், முஹம்மதின் தோழர்களும் உடன்படாததாலும், ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையார்கள் தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாலும் நாம் இவர்கள் விஷயமாக தீர்க்கமான ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நல்ல ஆலோசனைகள் வழங்கிட ஒத்துழைப்பு தாருங்கள் என்று தங்களுக்குள் கோரிக்கொண்டனர்.

இறுதியாக, ”ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்கு கருணை காட்டுவது, அவர்களின் சமரச பேச்சை ஏற்பது, இது போன்ற எந்த ஒரு தொடர்பையும் அவர்களோடு மேற்கொள்ளக் கூடாதுஎன தீர்மானமாக எழுதி கஅபாவில் தொங்க விடப்பட்டது.

ஹாஷிம், முத்தலிப் கிளையாரில் அபூலஹபைத் தவிர மற்ற நிராகரிப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் அபூதாலிப் பள்ளத்தாக்கில் ஊர் விலக்கம் செய்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

மூன்றாண்டுகள் சொல்லெனா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் முஸ்லிம்கள்.

ஒரு சிலரின் பெரும் முயற்சிக்குப் பிறகு இதுவும் தோற்றுப் போனது.
ஜூஹைர் இப்னு அபூ உமைய்யா
ஹிஷாம் இப்னு அம்ர்
முத்இம் இப்னு அதீ
அபுல் புக்தரீ
ஸம்ஆ ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து மக்கத்து தலைவர்களிடம் கடுமையாக சண்டை போட்டு, தொங்கவிடப் பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தனர்.

மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கின்றார்கள். முன்பு போலவே அழைப்புப் பணியை தொடர்கின்றார்கள்.

                                            ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

( பின் நாளில் ஹகீம் இப்னு ஹிஷாம் அவர்களும், அபுல் புக்தரீ அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் )

இன்னும், இது போன்ற பல தருணங்களில் ( ஹிஜ்ரத், அபீ சீனியா, ஹுதைபிய்யா ) மாற்றுக் கருத்தாளர்கள் பலரின் குரல்கள் மாநபி {ஸல்} அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆதரவாக ஒலித்து, முஸ்லிம் சமூகம் அடைந்து கொண்டிருந்த துன்பங்களில் இருந்து ஓரளவு மீள ஆதரவாக இருந்ததை வரலாறு நெடுகிலும் காண முடிகின்றது.

இன்னும் ஏராளமான காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும் இந்த உம்மத் விழிப்புணர்வு பெற இந்த காரணங்களை சரி செய்வது போதுமாகும்.

யாஅல்லாஹ்! இந்த உம்மத்திற்கு உள் வீட்டு விவகாரம் முதற்கொண்டு உலகளாவிய விவகாரங்கள் வரை வெற்றியை வழங்குவாயாக!

உனது உதவியை தாமதமின்றி வழங்குவாயக! எங்கள் காரியங்களை சீராக்குவாயாக!

உனது உதவியைத் தடுக்கும், உனது வாக்குறுதியை தாமதப்படுத்தும் அனைத்து காரியங்களில் இருந்தும் விலகி வாழும் மேன்மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!