Thursday 28 March 2019

மனிதநேயம் இன்னும் மாய்ந்திடவில்லை…. நீதம் இன்னும் நீர்த்துப் போகவில்லை…


மனிதநேயம் இன்னும் மாய்ந்திடவில்லை….
நீதம் இன்னும் நீர்த்துப் போகவில்லை



ஜெஸிந்தா ஆர்டர்ன் சர்வதேச உலகின் மூலை முடுக்கெல்லாம் கடந்த இரு வாரங்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர்.

பெண் ஆளுமைகளில் கவனிக்கத்தக்கவர். சர்வதேச நாடுகளின் தலைவர்களின் கவனத்தை எல்லாம் ஒரே நாளில் தன் பக்கம் திருப்பியவர்.

சுமார் 48 லட்சம் மக்கள் தொகையை கொண்ட, இரண்டு பெரிய (வடக்கு, தெற்கு) தீவுகளால் அமைந்துள்ள உலகளவில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியான நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற நியூஸிலாந்து நாட்டின் பெண்பிரதமர் ஆவார்.

கடந்த (மார்ச்) 15 –ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினத்தன்று தெற்கு தீவில் அமைந்துள்ள பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச் நகரில் உலகின் தெற்கு மூலை பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிற அந் நூர் பள்ளிவாசலில் ( Address: 101 Deans Ave, Riccarton, Christchurch 8011, New Zealand Phone: +64 3-348 3930 )

 ஜும்ஆ தொழுகைக்காக மக்கள் தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில் சுமார் 1:40 மணியளவில் இயந்திரத்துப்பாக்கியோடு நுழைந்த வலதுசாரி பயங்கரவாதி 28 வயது நிரம்பிய பிரெண்ட்டன் டாரெண்ட் என்பவன் கண்ணெதிரே பட்டவர்களையெல்லாம் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றான்.

இதே நேரத்தில் நேரலையாக இதை தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டான்.

அந் நூர் மஸ்ஜிதில் அவன் சுட்டுக் கொன்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 42. அங்கிருந்து வேகமாக வெளியேறிய அந்தப்பயங்கரவாதி 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லின்வுட் பள்ளிவாசலுக்குச் சென்று 1:55 மணியளவில் சுடத் தொடங்கிய அவன் 8 முஸ்லிம்களை சுட்டுக்கொன்றான்.

வெறி பிடித்த இவனோடு ஒரு பெண் உள்பட நான்கு பேர் கூட்டாக இருந்து இந்த கொலை வெறித்தாக்குதல்களை நடத்தி இருக்கின்றனர்.

இந்தியர்கள் 5 பேர், அண்டை மாநிலமான கேரளாவின் சேரமான் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தைச் சார்ந்த அன்ஸி என்கிற சகோதரி உள்பட மருத்துவமனையில் படுகாயத்தோடு சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த மேலும் 2 பேரும் உயிரிழக்க மொத்தம் 52 முஸ்லிம்கள் தூய ஷஹாதா வீரமரணம் அடைந்திருக்கின்றார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவர்கள் அனைவரின் பாவங்களை மறைத்து, மன்னித்து மண்ணறை வாழ்க்கையை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக்கி, மஹ்ஷர் வாழ்வை இலகுவாக்கி உயர் சுவனமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நுழைவித்து, நபிமார்கள், ஸாலிஹீன்கள், ஷுஹதாக்களோடு வீற்றிருக்கும் நல்ல தௌஃபீக்கை நல்குவானாக!.

இவர்களை இழந்து வாடும் இவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்கி, அளவிலா நன்மைகளை வழங்கி, சிறந்த பகரத்தை வழங்கி சிறப்பான வாழ்க்கையை வாழச் செய்வானாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

யார் அந்த பிரெண்ட்டன் டாரண்ட்....

இந்த கொடூர தாக்குதலில் ஈடுப்பட்ட குற்றவாளி பிரண்ட்டன் டாரண்ட் ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் மாநிலத்தின் சிறு நகரான கிரஃப்டனைச் சேர்ந்த இந்த 28 வயது இளைஞன்.

லைவ் ரிலே செய்யப்பட்ட உலகின் முதல் தீவிரவாத தாக்குதல் இது தான்
என உலகையே உலுக்க வைத்திருக்கும் இத்தனை கொடூரமான கொலைவெறி தாக்குதலை நடத்துமாறு தூண்டியது எது, அல்லது யார்?. என்ற கேள்வியோடு அவனை கைது செய்து விசாரித்த போது அவன் சொன்னது

“'நமது நிலம் ஒரு நாளும் அவர்களுடையதாக இருந்ததில்லை, இனி அவர்களுடையதாக ஆகப்போவதுமில்லை. இந்த தாய்மண் நம்முடையது. கடைசி வெள்ளை மனிதன் உயிருடன் இருக்கும் வரை இந்த வந்தேறிகளால் நம் மண்ணைக் கைப்பற்ற முடியாது என்று காட்ட விரும்பினேன்' என்கிறான் கைதான குற்றவாளி பிரண்ட்டன் டாரண்ட்!

இப்படி ஒரு தாக்குதலுக்கு கடந்த இரண்டாண்டு காலமாகவே தான் திட்டமிட்டு வந்ததாக சொல்லி இருப்பதோடு, ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்றத்தில் சிரித்து கொண்டே இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதியின் அவன் சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கியில் எழுதப்பட்டு இருந்த வார்த்தைகள்,  தீவிரவாதிகளின் வரலாற்று கோபம், வக்கிரம், பகையை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது.

-turkofagos- என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு "துருக்கி கொலைக்காரர்கள்" என பொருள்

-Miloš_Obilić- 1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1  அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயர்

-John_Hunyadi - காண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூத் || வின் படைக்கு எதிராக போராடி வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதி பெயர்

-Vienna_1683-  உதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு

       இவை எல்லாம் உதுமானிய கிலாஃபத் திற்கு எதிராக கிருஸ்துவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள்

                இவைமட்டுமல்லாமல், 'Refugees welcome to Hell' என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது சாதாரணமான முஸ்லிம் வெறுப்பு அடிப்படையில் நடத்திய தாக்குதல் அல்ல, முஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான வலதுசாரி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் ஆகும்.

ஆனால் அவனது குடும்பமோ,ஊரோ இன்னும் இந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவில்லை.

பிரண்டனின் குடும்பமே போலீசை அழைத்து விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவோம் என்று சொல்லி இருக்கிறது. சிறு சிறு ட்ராபிக் விதி மீறல்களைத்தாண்டி எந்த குற்றச்செயலிலும் இதுவரை அவன் ஈடுபட்டதே இல்லை என்ற உள்ளூர் போலீஸின் தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தீவிரவாதம் என்ற சொல்லுக்கு எதிர்மறையாக இருந்த இவன் எப்படி இப்படி பயங்கரவாதி ஆனான் என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளார்கள் அப்பகுதி வாசிகள். உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவனாகவும், ஜிம்முக்கு வரும் சிறாருக்கு உதவும் தன்னார்வலனாகவும் இருந்திருக்கிறான் பிரண்ட்டன்.

கடந்த 2010 -ல் தந்தை புற்று நோயால் இறந்து போக மன உளைச்சல் காரணமாக வீட்டை விட்டு கிளம்பிய பிரண்ட்டன் ஏழு வருடகாலம் உலகம் முழுவதும் சுற்றி இருக்கிறான்.

இந்தப் பயணத்தின் போது தான் அவன் தீவிரவாதப் பாதையில் திசை திருப்புவதற்கு ஏதுவாக நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள்.

தாக்குதல் நடத்துவதற்கு 9 நிமிடங்களுக்கு முன்பாக நியூசிலாந்து பிரதமர் உட்பட 20 பேருக்கு இ-மெயிலில் தான் நடத்தப் போகும் தாக்குதல் குறித்து இடம், நேரம் குறிப்பிடாமல் குறுந்தகவலும் அனுப்பி இருக்கிறான்.  ( டெய்லி ஹண்ட்.காம் & விகடன்.காம் )

முஸ்லிம் உலகும்... சகோதர சமயத்தவர்களின் உதவிகளும்....

ஜெஸிந்தா ஆர்டர்ன் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த சமூகத்தின் பிரதிநிதி போன்றே நடந்து கொண்டார். அவர் நியூசிலாந்து அரசின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முன்பாக பேசும் போது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார்.

இந்த மண்ணில் இது போன்ற செயல்களுக்கும், வன்முறைக்கும் இடம் கிடையாது என்றும் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுகிறவர்கள் தீவிரவாதி, பயங்கரவாதி என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் பெயர் கூறி அழைப்பதற்கே தகுதியற்றவர்கள் என்றும் உரை நிகழ்த்தினார்.

இந்த நாடு எப்போதும் போல அகதிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கும் நாடாகவும் திகழும் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, சம்பவம் நடைபெற்ற அந்த நாளில், அந்த பள்ளிவாசலில் மீட்புப்பணியில் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
   
நபி {ஸல்} அவர்கள் மக்காவில் இறைநிராகரிப்பாளர்கள் கடுமையான நெருக்கடியும், துன்பமும் இழைத்த போது கிருஸ்துவ நாடான அபீ சீனியாவிற்கு ஹிஜ்ரத் அடைக்கலம் தேடி அனுப்பி வைத்தார்கள்.

அதே போன்று அபூபக்ர் (ரலி) அவர்களும் அபீ சீனியாவிற்கு அடைக்கலம் (ஹிஜ்ரத்) புறப்பட்ட போது நடைபெற்ற நெகிழ்வான நிகழ்வு..


عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ ، إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً ، فَلَمَّا ابْتُلِىَ الْمُسْلِمُونَ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الْحَبَشَةِ ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ - وَهْوَ سَيِّدُ الْقَارَةِ - فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِى قَوْمِى فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِى الأَرْضِ فَأَعْبُدَ رَبِّى . قَالَ ابْنُ الدَّغِنَةِ إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ ، فَإِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ ، وَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَقْرِى الضَّيْفَ ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ، وَأَنَا لَكَ جَارٌ فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ . فَارْتَحَلَ ابْنُ الدَّغِنَةِ ، فَرَجَعَ مَعَ أَبِى بَكْرٍ ، فَطَافَ فِى أَشْرَافِ كُفَّارِ قُرَيْشٍ ، فَقَالَ لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ ، وَلاَ يُخْرَجُ ، أَتُخْرِجُونَ رَجُلاً يُكْسِبُ الْمَعْدُومَ ، وَيَصِلُ الرَّحِمَ ، وَيَحْمِلُ الْكَلَّ ، وَيَقْرِى الضَّيْفَ ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ . فَأَنْفَذَتْ قُرَيْشٌ جِوَارَ ابْنِ الدَّغِنَةِ وَآمَنُوا أَبَا بَكْرٍ وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِى دَارِهِ ، فَلْيُصَلِّ وَلْيَقْرَأْ مَا شَاءَ ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ ، فَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا . قَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِى بَكْرٍ ، فَطَفِقَ أَبُو بَكْرٍ يَعْبُدُ رَبَّهُ فِى دَارِهِ ، وَلاَ يَسْتَعْلِنُ بِالصَّلاَةِ وَلاَ الْقِرَاءَةِ فِى غَيْرِ دَارِهِ ، ثُمَّ بَدَا لأَبِى بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَبَرَزَ فَكَانَ يُصَلِّى فِيهِ ، وَيَقْرَأُ الْقُرْآنَ ، فَيَتَقَصَّفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ ، يَعْجَبُونَ وَيَنْظُرُونَ إِلَيْهِ ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ دَمْعَهُ حِينَ يَقْرَأُ الْقُرْآنَ ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ فَقَدِمَ عَلَيْهِمْ ، فَقَالُوا لَهُ إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ ، وَإِنَّهُ جَاوَزَ ذَلِكَ ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَأَعْلَنَ الصَّلاَةَ وَالْقِرَاءَةَ ، وَقَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا ، فَأْتِهِ فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ فَعَلَ ، وَإِنْ أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ ذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ ، فَإِنَّا كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِى بَكْرٍ الاِسْتِعْلاَنَ . قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ أَبَا بَكْرٍ ، فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِى عَقَدْتُ لَكَ عَلَيْهِ ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ وَإِمَّا أَنْ تَرُدَّ إِلَىَّ ذِمَّتِى ، فَإِنِّى لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّى أُخْفِرْتُ فِى رَجُلٍ عَقَدْتُ لَهُ . قَالَ أَبُو بَكْرٍ إِنِّى أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ ، وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கவில் முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களால் சோதனைக்கு உள்ளாக்கப்பட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் நாடு துறந்து அபீசீனியாவை நோக்கி ஹிஜ்ரத் சென்றார்கள்.

யமன் செல்லும் வழியில் அல்காரா குலத்தின் தலைவர் இப்னு தஃகினா என்பவரை சந்தித்தார்கள்.

தம் நோக்கத்தையும், முஸ்லிம்கள் மக்காவில் சந்தித்துவரும் கஷ்டங்களையும் அவரிடம் தெரிவித்தார்கள்.

அதற்கு, இப்னு தஃகினா உம்மைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கின்றீர், உறவைப் பேணுகிறீர்; சிரமப்படுவோரின் சுமையைச் சுமக்கின்றீர்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்; சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகின்றீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகின்றேன். ஆகவே, திரும்பிச் சென்று உமது ஊரிலேயே இறைவனை வழிபடுவீராக!என்று கூறினார்.

அத்தோடு நின்று விடாமால், அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷித்தலைவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தாம் அடைக்கலம் தந்திருப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆகவே, குறைஷிகள் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

மேலும், குறைஷிகள் இப்னு தஃகினாவிடம் தமது வீட்டில் தமது இறைவனைத் தொழுது வருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்களது மனைவி மக்களை குழப்பி சோதனைக்குள்ளாக்கி  விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்என்றனர்.

இதை இப்னு தஃகினா அபூபக்கர் (­லி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்கர் (ரலி­) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது ஓதி பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள்.

பிறகு அவர்களுக்கு ஏதோ தோன்ற தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் தொழுமிடம் ஒன்றைக் கட்டி வெளியே வந்து தொழுதார்கள். அந்தப் இடத்தில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள்.

இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது மனம் உருகி வெளிப்படும் தமது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்பவர்களான குரைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.

குறைஷிகள் இப்னு தஃகினாவை அழைத்து வரச் செய்து நடந்தவற்றைக் கூறினார்கள்.

 அவர் அடைக்கலத்திற்கான நிபந்தனைகளை அபூபக்ர் (ரலி) அவர்களிடத்திலே நினைவு படுத்திய போது அபூபக்கர் (ரலி) அவர்கள்இப்னு தஃகினாவே! உம் அடைக்கலத்தை நீர் திரும்ப எடுத்துக் கொள்ளும்! நான் அல்லாஹ்வின் அடைக்கலத்தையே திருப்தியுறுகின்றேன்என்று கூறினார்கள்.       ( நூல்: புகாரி )


زادت حيرة المشركين إذ نفدت بهم الحيل، ووجدوا بني هاشم وبني المطلب مصممين على حفظ نبى الله صلى الله عليه وسلم والقيام دونه، كائنًا ما كان، فاجتمعوا في خيف بني كنانة من وادى المُحَصَّبِ فتحالفوا على بني هاشم وبني المطلب ألا يناكحوهم، ولا يبايعوهم، ولا يجالسوهم، ولا يخالطوهم، ولا يدخلوا بيوتهم، ولا يكلموهم،
تم هذا الميثاق وعلقت الصحيفة في جوف الكعبة، فانحاز بنو هاشم وبنو المطلب، مؤمنهم وكافرهم ـ إلا أبا لهب ـ وحبسوا في شعب أبي طالب، وذلك فيما يقال : ليلة هلال المحرم سنة سبع من البعثة .

நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு கினானா கிளையாருக்குச் சொந்தமான முஹஸ்ஸப் என்ற பள்ளத்தாக்கில் ஒன்று கூடிய மக்கத்து இணைவைப்பாளார்கள்இது வரை நாம் முஹம்மதுக்கு எதிராக எடுத்த எந்த நடவடிக்கைக்கும் முஹம்மதும், முஹம்மதின் தோழர்களும் உடன்படாததாலும், ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையார்கள் தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாலும் நாம் இவர்கள் விஷயமாக தீர்க்கமான ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நல்ல ஆலோசனைகள் வழங்கிட ஒத்துழைப்பு தாருங்கள் என்று தங்களுக்குள் கோரிக்கொண்டனர்.

இறுதியாக, ”ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்கு கருணை காட்டுவது, அவர்களின் சமரச பேச்சை ஏற்பது, இது போன்ற எந்த ஒரு தொடர்பையும் அவர்களோடு மேற்கொள்ளக் கூடாதுஎன தீர்மானமாக எழுதி கஅபாவில் தொங்க விடப்பட்டது.

ஹாஷிம், முத்தலிப் கிளையாரில் அபூலஹபைத் தவிர மற்ற நிராகரிப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் அபூதாலிப் பள்ளத்தாக்கில் ஊர் விலக்கம் செய்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

மூன்றாண்டுகள் சொல்லெனா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் முஸ்லிம்கள்.

ஒரு சிலரின் பெரும் முயற்சிக்குப் பிறகு இதுவும் தோற்றுப் போனது.
ஜூஹைர் இப்னு அபூ உமைய்யா
ஹிஷாம் இப்னு அம்ர்
முத்இம் இப்னு அதீ
அபுல் புக்தரீ
ஸம்ஆ ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து மக்கத்து தலைவர்களிடம் கடுமையாக சண்டை போட்டு, தொங்கவிடப் பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தனர்.

மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கின்றார்கள். முன்பு போலவே அழைப்புப் பணியை தொடர்கின்றார்கள்.

                                            ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

( பின் நாளில் ஹகீம் இப்னு ஹிஷாம் அவர்களும், அபுல் புக்தரீ அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் )

இன்னும், இது போன்ற பல தருணங்களில் ( ஹிஜ்ரத், அபீ சீனியா, ஹுதைபிய்யா ) மாற்றுக் கருத்தாளர்கள் பலரின் குரல்கள் மாநபி {ஸல்} அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆதரவாக ஒலித்து, அதை அங்கீகரித்து முஸ்லிம் சமூகம் அடைந்து கொண்டிருந்த துன்பங்களில் இருந்து ஓரளவு மீள காரணமாக அமைந்ததை வரலாறு நெடுகிலும் காண முடிகின்றது.


عندها ذهب الرسول الى ابناء من بني عمرو ليدعوهم إلى الإسلام و يطلب منهم ان العون له والنصرة وللإسلام وللمؤمنين الموجودين في مكة فكان الثلاثة هم: عبد ياليل ومسعود وحبيب أولاد عمرو بن عمير، وكانوا احد اشراف و سادات المدينة فعرض رسول الله عليهم الاسلام وان يتركوا عبادة اللات إلى عبادة الله وحده ، فهذا يعني ان دخولهم في الاسلام كأنه إعلان للحرب على قبيلة قريش. فكان موقفهم من دعوة الرسول انه قال احدهم الا وهو عبد اليل بن عمرو : إنه سيمرط (أي سيمزق) ثياب الكعبة إن كان الله أرسلك. أما الاخر الا وهو مسعود فقال: أما وجد الله أحدًا غيرك. وأما الثالث حبيب فقد قال -وهو يحاول أن يصطنع الذكاء مع شدة غبائه- قال
 والله لا أكلمك أبدًا، إن كنت رسولاً لأنت أعظم خطرًا من أن أرد عليك الكلام، ولئن كنت تكذب على الله ما ينبغي أن أكلمك. فقال لهم رسول الله : ( إذا فعلتم ما فعلتم فاكتمـوا عني ) ، وكره رسـول الله صلى الله عليه وسلم أن يبلغ قومه عنه فيذئرهم [ أي : يجرئهم ] ذلك عليه ، فلم يفعلوا ، وأغروا به سفهاءهم وعبيدهم يسبونه ويصيحون به ، حتى اجتمع عليه الناس ، وألجئوه إلى حائط لعتبة بن ربيعة وشيبة بن ربيعة وهما فيه ، وجعلوه يمر من بين الصفين وهم يقذفونه بالحجارة ويقذفونه بأسوأ الكلام والسباب، حتى سالت دماؤه الشريفة على كعبيه وتلون النعل بالدم، وكان زيد بن حارثة يبذل كل طاقته لتلقي الحجارة في جسده، بل في رأسه حتى لا تصيب رسول الله ، حتى شج رأسه ، ورسول الله يسرع الخطا بين الصفين حتى انتهى منه ورجع عنه من سفهاء ثقيف من كان يتبعه ، فعمد إلى ظل حبلة [ أي : شجرة ] من عنب فجلس فيه ، وابنا ربيعة ينظران إليه ويريان ما لقي من سفهاء أهل الطائف ، فلما اطمأن رسول الله صلى الله عليه وسلم



நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாயிஃபிற்குச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபிஎன்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள்.

ஆனால், அவர்களில் ஒருவன் உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்என்று கூறினான். மற்றொருவன் அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.

மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்லஎன்று கூறினான். அப்போது நபி (ஸல்) இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாயிஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

இறுதியில், மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாரிஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாஃயிபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர்.

நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள்.

நபி {ஸல்} அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடுஎன்று கூறினர்.
இந்த சந்திப்பின் முடிவில் அத்தாஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

எனவே, முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களின் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களின் உதவி உபகாரங்களையும், கரிசனங்களையும் பெற்றே வந்துள்ளது என்பதை உணர முடிகின்றது.

முஸ்லிம் சமூகம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன?..

படிப்பினை 1.

முஸ்லிம் உலகிற்கு உதவிகள் செய்கிற, பக்கபலமாய் நிற்கிற மனித நேய மாண்பாளர்களாய் மிளிர்கிற, நீதி வழுவாமல் நடந்து கொள்கிற மாற்றுக் கருத்து கொண்ட சகோதர சமய மக்களோடு நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)
     
”தீன் – இறைமார்க்கம் தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடந்து கொள்வதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை”. ( அல்குர்ஆன்:60:8 )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம் உம்மாவிற்கும், இஸ்லாத்திற்கும் உதவிகள் செய்கிற, பக்கபலமாய் நிற்கிற மனித நேய மாண்பாளர்களாய் மிளிர்கிற, நீதி வழுவாமல் நடந்து கொள்கிற மாற்றுக் கருத்து கொண்ட சகோதர சமய மக்களோடு நடந்து கொண்ட விதங்கள் வரலாற்றில் ஏராளமாய் இடம் பெற்றிருக்கின்றன.

மாநபி {ஸல்} அவர்கள் அந்த மக்கள் ஹிதாயத் பெற வேண்டும் என விரும்பினார்கள். அதை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் ஹிதாயத்திற்காக அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆவும் செய்தார்கள்.

ஹுதைப்பிய்யா உடன்படிக்கை தொடர்பான விவகாரங்களில் மாநபி {ஸல்} அவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் உதவி புரிந்த ஸுஹைல் இப்னு அம்ர் அவர்களுக்கும், மக்கா ஊர் விலக்கத்தின் போது மாநபி {ஸல்} அவர்களுக்கும், முஸ்லிம் உம்மத்திற்கும் உரிமைக்குரல் கொடுத்த ஹகீம் இப்னு ஹிஸாம், அபுல் புக்தரி போன்றோருக்கும், ஹுனைன் யுத்தத்தில் ஆயுத தளவாடங்களும், கவச உடைகளும் இரவலாகத் தந்து உதவிய ஸஃப்வான் இப்னு உமைய்யாவுக்கும்ஹிதாயத் கிடைக்க விரும்பியதும், விரும்பி துஆச் செய்ததும் வரலாற்றில் காணப்படுகின்றது.

பெருமானார் {ஸல்} அவர்கள் விரும்பியது போன்றே, விரும்பி துஆச் செய்தது போன்றே ஸுஹைல் இப்னு அம்ர், ஹகீம் இப்னு ஹிஸாம், அபுல் புக்தரீ, ஸஃப்வான் இப்னு உமைய்யா ஆகியோர் ( ரலியல்லாஹு அன்ஹும் ) நேர்வழி பெற்றனர்.

படிப்பினை 2.

இஸ்லாத்திற்கெதிரான சிந்தனையும், முஸ்லிம் உம்மத்திற்கெதிரான மனோ நிலையும் கொண்ட ஓர் கூட்டம் பல்வேறு செயல் திட்டங்களோடு வரலாற்றுப் பகையைச் சுமந்த ஓர் பெரும் கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அறுவடை செய்ய துவங்கியிருக்கின்றது.

வரலாற்று ரீதியாக அவர்களை எதிர்கொள்ளவும், நவீன உலகின் சாதனங்களின் ஊடாக அவர்களின் செயல் திட்டங்களை இல்லாமல் ஆககவும் பெரும் முயற்சி எடுக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஒன்று அன்பையும், மன்னிப்பையும் விதைப்பதன் ஊடாக அல்லது தாவாவை முழுமூச்சாக முடுக்கி விடுவதன் மூலமாக இவர்களையும், இவர்களின் சூழ்ச்சிகளையும் வெல்லலாம்.

பெருமானார் {ஸல்} அவர்கள் மேற்கொண்ட முறைகளைக் கையாண்டே எதிரிகளை வென்றெடுத்து மாபெரும் வெற்றி வாகை சூடினார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை வென்றெடுத்த பெருமானார் {ஸல்} அவர்கள்…

காலித் இப்னு வலீத் (ரலி) இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த பென்னம் பெரும் படைகளையும், தளபதிகளையும் எதிர்கொண்டு களங்களில் வெற்றிவாகை சூடியவர்.

எதிரி படைகளின் பலவீனமான முனைகளை இனங்கண்டு அதனுள் ஊடுருவும் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் இவர். 

தனது படையினரை அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்யும் மனோநிலையை வலுப்படுத்தி அவர்களது தீரமிகு தாக்குதல்களின் ஊடாக எதிரியை நிலைகுலைய வைத்து வெற்றிகளை வளைத்து போடுபவர்.

வர் தான் காலித் இப்னு வலீத். இது தான் இஸ்லாமிய வரலாறு. ஒரு மிகப்பெரும் வீரர், தன்னிகரில்லா தளபதி, ஸைஃபுல்லாஹ் அல்லாஹ்வின் வாள் எனும் பட்டத்தை நபியவர்களின் திருவாயினால் பெற்றவர், ஜிஹாத் வேறு அவர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாத முஜாஹித். ஆனால் அவர்க்கு கூட யுத்த களத்தில் ஷுஹதாவாக மரணிக்கும் வீர மரணம் கிட்டவில்லை. ஒரு கட்டிலில் அல்லாஹ்வின் பாதையில் நான் வெட்டப்படவில்லையே என்ற விம்மிய நெஞ்சுடன் குமுறி அழுதபடி தான் மரணித்தார்கள்.

இந்த காலித் இப்னு வலீத் யார்?..

كان خالد بن الوليد كثيرَ التردُّد في الانتماء للإسلام، غير أنه مال إلى الإسلام وأسلم متأخِّرًا في صفر للسنة الثامنة من الهجرة، قبل فتح مكة بستة أشهر، وقبل غزوة مؤتة بنحو شهرين، وتعود قصة إسلام خالد بن الوليد إلى ما بعد معاهدة الحديبية؛ حيث أسلم أخوه الوليد بن الوليد، ودخل الرسول صلى الله عليه وسلم مكة في عمرة القضاء فسأل الوليد عن أخيه خالد، فقال: «أَيْنَ خَالِدٌ؟» فقال الوليد: يأتي به الله.
فقال النبي صلى الله عليه وسلم: «مَا مِثْلُهُ جَهِلَ الْإِسْلَامَ، وَلَوْ كَانَ يَجَعَلَ نِكَايَتَهُ مَعَ المُسْلِمِينَ عَلَى المُشْرِكِينَ كَانَ خَيْرًا لَهُ، وَلَقَدَّمْنَاهُ عَلَى غَيْرِهِ». فخرج الوليد يبحث عن أخيه فلم يجده، فترك له رسالة قال فيها: «بسم الله الرحمن الرحيم، أمَّا بعدُ.. فإني لم أَرَ أعجب من ذهاب رأيك عن الإسلام وَعَقْلُهُ عَقْلُكَ، ومِثْلُ الإسلام يجهله أحدٌ؟! وقد سألني عنك رسول الله صلى الله عليه وسلم، فقال: «أَيْنَ خَالِدٌ؟» -وذَكَرَ قولَ النبي صلى الله عليه وسلم فيه- ثم قال له: فاستدركْ يا أخي ما فاتك فيه؛ فقد فاتتك مواطن صالحة». وقد كان خالد –رضي الله عنه- يُفَكِّر في الإسلام، فلمَّا قرأ رسالة أخيـه سُرَّ بها سرورًا كبيرًا، وأعجبه مقالة النبـي صلى الله عليه وسلم فيه، فتشجَّع وأسلـم (1).
الحلم
رأى خالد بن الوليد في منامه كأنه في بلادٍ ضيِّقة جدبة، فخرج إلى بلد أخضر واسع، فقال في نفسه: «إن هذه لرؤيا». فلمَّا قَدِمَ المدينة ذكرها لأبي بكر الصديق رضي الله عنه فقال له: «هو مخرجُكَ الذي هداك الله للإسلام، والضيقُ الذي كنتَ فيه من الشرك» (2).
رحلة خالد بن الوليد إلى المدينة
يقول خالد عن رحلته من مكة إلى المدينة: (وددت لو أجد مَنْ أُصاحب، فلقيتُ عثمان بن طلحة، فذكرتُ له الذي أُريد فأسرع الإجابة، وخرجنا جميعًا فأدلجنا سرًّا، فلما كنا بالسهل إذا عمرو بن العاص، فقال: «مرحبًا بالقوم». قلنا: «وبك». قال: «أين مسيركم يا مجانين؟». فأخبرْنَاه، وأخبرَنَا -أيضًا- أنه يُريد النبي صلى الله عليه وسلم ليُسلم، فاصطحبنا حتى قدمنا المدينة أول يوم من صفر سنة ثمان).
فلما رآهم رسول الله صلى الله عليه وسلم قال لأصحابه: «رَمَتْكُمْ مَكَّةُ بِأَفْلَاذِ كَبِدِهَا (3)». يقول خالد: «ولما اطَّلعت على رسول الله صلى الله عليه وسلم سَلَّمتُ عليه بالنبوة، فردَّ عليَّ السلام بوجهٍ طلقٍ، فأسلمتُ وشهدتُ شهادة الحقِّ». وحينها قال الرسول صلى الله عليه وسلم: «الحَمْدُ لِلهِ الَّذِي هَدَاكَ، قَدْ كُنْتُ أَرَى لَكَ عَقْلًا رَجَوْتُ أَنْ لَا يُسْلِمَكَ إِلَّا إِلَى خَيْرٍ». وبايعتُ الرسـول وقلتُ: «استغفر لي كل ما أوضعـتُ فيه من صدٍّ عن سبيل الله». فقال: «الْإِسْلَامُ يَجُبُّ مَا كَانَ قَبْلَهُ». فقلتُ: «يا رسول الله على ذلك». فقال: «اللهُمَّ اغْفِرْ لِخَالِدِ بْنِ الْوَلِيدِ كُلَّ مَا أَوْضَعَ فِيهِ مِنْ صَدٍّ عَنْ سَبِيلِكَ». وتقدَّم عمرو بن العاص وعثمان بن طلحة، فأسلما وبايعا رسول الله (4).
وقال الرسول صلى الله عليه وسلم عن خالد: «نِعْمَ عَبْدُ اللهِ خَالِدُ بْنُ الوَلِيدِ، سَيْفٌ مِنْ سُيُوفِ اللهِ» (5).
மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.
உஹதுப் போர் முதல் ஹ{தைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார். உமர் (ரலி) அவர்களின் 22 ½ லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட இஸ்லாமிய ஆளுகைக்கு வித்திட்டவர்.

இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.

ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார்.

ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார். முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.

மீண்டும் அஸர்  தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது. அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது தேவையில்லாத ஒன்று என்று. அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும் கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹ{தைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார்.

அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார்.

பின் நாம் ஹிர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்றும் கூட எண்ணினார்.

இவ்வாறாக, பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார்.

இந்த தருணத்தில் தான் ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், வலீத் இப்னு வலீத் காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு புத்துணர்வு ஏற்பட்டது.

இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தார்.

அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு மக்காவில் தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்தார்.

பின்னர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்த போது, சட்டென உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.

அது கேட்ட, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவு செய்து இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்டனர்.

வழியின் இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள்.

மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது. ஆம்! அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களும் இணைந்து கொண்டார்கள்.

மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் நாளன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள்.

பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய

அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ காலித் பின் வலீத் (ரழி) அவர்களே….! உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன்” என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

அது கேட்ட காலித் (ரலி) அவர்கள்: “இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்டாகள்..!

ஏனெனில், நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.

இல்லை..! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே,

அல்லாஹ்வே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பயம் காரணமாகவோ அல்லது பெருமைக்காகவோ இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை.

 இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் தான் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கக் காரணமாக அமைந்தன.

இந்த காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் இரண்டாம் உலக யுத்தத்தை வழி நடாத்திய ரோமெல் என்கிற ஹிட்லரின் தளபதியின் இதயத்தை கூட கவர்ந்திழுத்திருக்கின்றார்.

ரோமல் பேப்பர்ஸ்  (The Rommel Papers) எனும் புத்தகத்திலிருந்து.....

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அடோல்ப் ஹிட்டலரின் முதல் நிலை தளபதிகளில் ஒருவர் Erwin Johannes Eugen Rommel. பாலைவன நரி என வரலாற்றில் புகழ் பெற்றவர். ஜெர்மானிய படைகளின் பீல்ட் மார்ஷல் எனும் உயர் பதவியை வகித்தவர். ஜெர்மனில் இவரை இரண்டாம் ஹிட்லர்என அழைப்பார்கள்.

அவரின் கைகளில் குவிந்த அதிகாரங்களின் காரணமாக. நாஸிகளின் வெற்றிகளிற்கு மிக முக்கியாக விளங்கிய சண்டைகளை வழி நடாத்தியவர். வட ஆபிரிக்க வெற்றிகளின் சொந்தக்காரர்.

ஜெர்மானிய இராணுவமும் அடோல்ப் ஹிட்லரும் வேகமாக உயர்வதற்கு உழைத்த முக்கியமான ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஹிட்லர் யுத்தங்களை ஆரம்பித் போது, அவரை ஹெய்ல் ஹிட்லர் என அனைவரும் துதித்த போது, அவரை பெயர் சொல்லி அழைக்கும் துணிவு பெற்ற தளபதி ரோமல். ஹிட்லர் ஒரு முறை பெர்லினின் மக்கள் சதுக்கத்தில் பேசும் போது கூறினார், “எமது வெற்றிகளிற்கு காரணம் நமது வொக்ஸ் கவச வாகனங்களா? அல்லது எமது மெஸ்ஸர் சண்டை விமானங்களா? அல்லது ஜெனரல் ரோமலா? என்பதில் நான் அடிக்கடி குழம்பி விடுகிறேன். இறுதியில் அது ரோமலால் தான் என்ற முடிவுடன் தூங்கச் செல்கிறேன்என்று.

கைப்பற்றிய இடங்களில் ஜெர்மனிய படைகள் பல அநியாயங்களை செய்தன. போலந்து முதல் பிரான்ஸ் வரை இது நிகழ்ந்தது. ஆனால் ரோமல் அதனை செய்யவில்லை. எதிரி தேச பெண்களை தனது படையினர் கற்பழிப்பதற்கு அனுமதிக்கவில்லை. சிறுவர்களையும் வயோதிபர்களையும், மத துறவிகளையும் கொலை செய்ய வேண்டான் என கண்டிப்பான கட்டளையிட்டார்.

பயிர் நிலங்களை தீயிடுவதை தடுத்தார். சரணடைந்த கைதிகளுடன் நியாயமாக நடந்து கொண்டார். கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு படைத் தளபதிகளை சித்திரவதை செய்து கொல்லாமல் தனது டின்னரில் அவர்களையும் அழைத்து, தன்னுடன் எதிர்த்து நின்ற அவர்களது வீரத்தை கண்ணியப்படுத்தினார்.

இவரது இந்த நடவடிக்கை ஜெர்மானிய “சீக்கிரட் சர்விஸ்” எனும் ஹிட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு பிரிவினரால் திரிவுபடுத்தப்பட்டு ஹிட்லிரிற்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே ஜேர்மனிய வெற்றிகளின் பின்னால் அடோல்ப் ஹிட்லறின் உரைகளும், ரோமலின் வெற்றிகளுமே இருப்பதாக மக்கள் பேசுவதையும் கேள்விப்பட்ட ஹிட்லரிற்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ரோமலை பீல்ட் மார்ஷல் தரத்திற்கு கீழான பதவிக்கு நியமனம் செய்தார்.

பிரான்ஸின் பாதுகாப்பு தளபதியாக அனுப்பினார். பின்னர் மீண்டும் ஜேர்மனிக்கு அழைத்து கொண்டார். சண்டைகளின் போக்கு மாறியமையும், நேசப்படைகளின் தாக்குதல்கள் வேகம் பெற்றமையும் ஜேர்மனிய இராணுவ தளபதிகளிடையே முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கியது.

சண்டை வியூகங்களில் ஹிட்லரிற்காக மரணிக்க வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி சிப்பாய்களின் வீரத்தை உயர்நிலையில் பேணி வெற்றிகளை கண்டவர் ஜெனரல் ரோமல். ஆனால் அவர் இறுதியில் ஹிட்லரின் இராணுவ வியூகங்களை விமர்சனம் செய்தார்.

கொளரவத்திற்காகவும், புகழிற்காகவும் எதிரியின் பலம் பொருந்திய முனைகளை தேர்வு செய்து சண்டைகளை ஆரம்பிப்பது கூட்டு தற்கொலைக்கு சமானம் என்று ஹிட்லரிற்கு நேரடியாகவே கடிதமனுப்பினார் ரோமல். ஹிட்லரின் முரட்டுத்தனமான, முட்டாள்தனமான இறுதி நடவடிக்கைகளால் விரக்தியடைந்த இரு ஜெனரல்கள் மேலும் மூன்று கேர்ணல்களுடன் இணைந்து ஹிட்லரை கொலை செய்து விட்டு ஜேர்மனியை காப்பாற்றுவது பற்றி திட்டமிட்டனர்.

அதற்குஆப்பரேஷன் ஆஃப் வல்கரீன்என்று பெயரிட்டு அடோல்ப் ஹிட்லரை ஒரு நேரக்குண்டு வெடிப்பின் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு அதில் தோல்வியை தழுவினர்.

இந்த தாக்குதல் நடவடிக்கையை பற்றியும், ஹிட்லர் இல்லாத ஜெர்மனிக்கு ஜெனரல் ரோமல் தலைமையேற்க வேண்டும் என்றும் வேண்டினர். அவர்கள் ஜெனரல் ரோமலிற்கும் தங்கள் எண்ணங்களை அறியப்படுத்தினர். ரோமல் அதனை வெகுவாக எதிர்த்தார்.

 ஒரு சாதாரண ஜேர்மனிய வீரனாக எல்லையில் சாவது, ஜெர்மனிய அரசை சதி செய்து கவிழ்த்து அதன் தலைவனாவதை விட எவ்வளவோ மேல்என திட்டத்தை சாடினார். கொலையாளிகள், திட்டமிட்டவர்கள் எல்லோரும் இனங்காணப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை ஹிட்லர் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

ஜெனரல் ரோமலிற்கு ஒரு தகவல் ஹிட்லரினால் அனுப்பப்பட்டது. அதனை ஹிட்லரின் நெருங்கிய சகாக்களான இரண்டு ஜெனரல்கள் அதனை ரோமலிடம் கொண்டு சென்றனர். வில்ஹம் பேர்க்டோம், ஏர்னஸ் மய்சல் என்பவர்களே அந்த ஜெனரல்கள்.

 ஹிட்லரை படுகொலை செய்து ஜேர்மனியை எதிரிகளிடம் தாரை வார்க்கும் துரோக கும்பலில் நீங்களும் ஒருவர் என மக்கள் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவது உங்கள் தேர்வா? அல்லது நீங்களே உங்களை தலையில் சுட்டு மரணிப்பதன் ஊடாக கௌரவமான ஜேர்மனிய ஜெனரலாக நல்லடக்கம் செய்யப்படுவது உங்கள் தேர்வா?. 30 நிமிடங்களில் இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.இது தான் ஹிட்லர் அனுப்பிய கடிதத்தின் வாசகங்கள். ஜெனரல் ரோமல் தற்கொலையை தேர்ந்து கொண்டார்.

1944-ல் ஒரு பிஸ்டலில் இருந்து புறப்பட்ட தோட்டா மூலம் உலகை வெற்றி கொண்ட தளபதி தனது ஓபல் காரினுள் வைத்து தன் கதையை முடித்துக்கொண்டார். ஹிட்லரிற்காக கோயபல்ஸ் ஒரு அறிக்கை தயாரித்து இருந்தான்.

அதில் ஜெனரல் ரோமல் தனது உடலில் ஏற்பட்ட ரணங்களின் காரணமாகவும், நோர்மண்டி தோல்வியின் காரணமாகவும் தனது உயிரை தானாகவே மாய்த்து கொண்டதாகவும், இது ஜேர்மனிய இராணுவத்திற்கும், ஜேர்மனிய மக்களிற்கும், தலைவர் அடோல்ப் ஹிட்லரிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் வீரனாக வாழ்ந்து வீரனாக மரணித்தார்.என்று குறிப்பிட்டிருந்தான். ஜேர்மனிய வானொலி தேசிய துக்கதினத்தை பிரகடனம் செய்து, ஸ்வஸ்திகா கொடியை அவர் பேழையின் மேல் போர்த்தி பூரண அரச, இராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது.

ஜெனரல் ரோமல் தனது இராணுவ வாழ்வியல் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதன் பெயர் “த ரோமல் பேப்பர்ஸ்என்பதாகும். அதில் அவர், அரேபிய தளபதி காலித் இப்னு வலீத்தை இராணுவ, மற்றும் தத்துவ ரீதியாக பின்பற்றியதாகவும், தனது வெற்றிகளின் பின்னால் தளபதி காலித்தின் உக்திகள் துணை நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒரு சுத்த இராணுவ வீரனாக தளபதி காலித்தை பார்க்கவில்லை என்றும், பண்பாடுகளும் மனிதாபிமானங்களும் நிறைந்த முழுமையான ஒரு மனித நேயம் கொண்ட ஒரு நபரை பார்த்ததாகவும், சண்டைகளில் மட்டுமன்றி போஸ்ட் ஒப் வோர் எனும் சண்டைகளிற்கு பின்னரான நாட்களிலும் கூட தான் தளபதி காலித்தை பின்பற்றியதாகவும் எழுதியுள்ளார்.

தளபதி காலித்தின் தந்திரங்களில் தன்னை கவர்ந்தவதை, எதிரியின் பலவீனமான முனைகளை தகர்ப்பதன் ஊடாக வெற்றியை வசமாக்குவதும், வீரர்களை தங்கள் உயிர்களை தத்தம் செய்து யுத்தம் செய்யும் மனோநிலையில் பேணுவதும் என்றும் அதனை தான் தலைமையேற்ற 37 சண்டைகளில் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதில் 33 சண்டைகளில் தான் பரிபூரண் வெற்றியை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் யார் என்று தான் தேடியதாகவும், ஆனால் யாரையும் தன்னால் கண்டு கொள்ள முடியமாமல் போனதாகவும், அவரை வழிநடாத்தியது இஸ்லாம் எனும் மார்க்கம் தான் என்பதை கண்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ள தளபதி ஜெனரல் ரோமல் சண்டைகளின் நெருக்கடிமிக்க காலங்கள் காரணமாக அந்த காலித் அவர்களை வழிநடாத்திய இஸ்லாத்தை கற்க முடியாமல் போனது தனது வாழ்வின் பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.


எனவே, முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வோடு இனி வரும் காலங்களில் செயல் படுவதன் துணை கொண்டு மாபெரும் சூழ்ச்சிகளை வென்று மகத்தான சாதனை படைக்கலாம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விளக்கத்தையும், முஸ்லிம் உம்மாவிற்கு முழுமையான விழிப்புணர்வையும் தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments: