Thursday, 30 May 2019

கவலைப்படுவோம்! கண்ணீர் சிந்துவோம்!! ரப்பிடம் கையேந்துவோம்!!!


கவலைப்படுவோம்! கண்ணீர் சிந்துவோம்!! ரப்பிடம் கையேந்துவோம்!!!

 

அல்லாஹ்வின் நிரப்பமான அருளும், விசாலமான கருணையும் இலங்கிக் கொண்டிருக்கிற முபாரக்கான, சங்கையான ரமழான் இன்னும் சில தினங்களில் நம்மை விட்டும் விடை பெற இருக்கின்றது.

இந்த ரமழானின் பகல் காலங்களில் நாம் கடுமையான வெயிலோடு நோன்பு நோற்றிருக்கின்றோம். இரவுகளில் தராவீஹ் தொழுகையும், இதர உபரியான தொழுகைகள் தொழுதிருப்போம்.

தான தர்மங்கள், கடமையான ஜகாத், இஃப்தார், ஸஹர் உணவு, ஏழைகளுக்கு உணவளித்தல், குடும்பத்தார்களுக்கு உதவி செய்தல், பள்ளிவாசல், மதரஸா, எத்தீம் கானா போன்றவற்றிற்கு நிதியளித்தல், மருத்துவ உதவி, கல்வி உதவி, திருமண உதவி, ஆலிம்கள், ஹாஃபிழ்கள் ஆகியோருக்கு கண்ணியம் செய்தல் இன்னும் இது போன்ற ஏராளமான நல்லறங்களையும், நல் அமல்களையும் செய்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்புகளையும், வணக்க வழிபாடுகளையும், இதர உபரியான நல்லறங்கள், நல் அமல்களையும் பரிபூரணாக கபூல் செய்து நிறைவான நன்மைகளையும், நற்கூலிகளையும் தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

ஒரு முஃமின் இரண்டு விஷயங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக கவலைப்பட வேண்டும், கண்ணீர் சிந்த வேண்டும், எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்தி இறைஞ்ச வேண்டும்.

ஒன்று, ஈமானோடு நாம் செய்த எல்லா நல்லறங்களும், நல் அமல்களும் ரஹ்மானுடைய கபூலிய்யத்தைப் பெற வேண்டும்.

மற்றொன்று, ஈமானோடு நாம் செய்த எல்லா நல்லறங்களும், நல் அமல்களும் எந்தக் காரணம் கொண்டும் அழிந்து போய் விடக்கூடாது.

கபூலிய்யத்தை பெறாதவர்களும், அமல்கள் அழிந்து போனவர்களும் (நவூது பில்லாஹ்) அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் போய் சேரும் இடம் கொடிய நரகமாகும் என்பதை அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் நமக்கு எச்சரித்து இருக்கின்றார்கள்.

பொதுவாக எந்த ஒரு அமலும் நிறைவை நெருங்குகிற போது சில அம்சங்களை செய்யுமாறு மார்க்கம் நம்மை வலியுறுத்துகின்றது.

1.   கபூலிய்யத் வேண்டி துஆ செய்வது…

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ (127)
“மேலும், நினைவு கூறுங்கள்: இப்ராஹீமும், இஸ்மாயீலும் (அலைஹிமஸ்ஸலாம்) இறையில்லமான கஅபாவின் சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்த போது இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.

“எங்கள் இறைவனே! எங்களுடைய இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக, நீதான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்”.                                             ( அல்குர்ஆன்: 2: 127 )

2.   அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வது, துஆவும் செய்வது…

فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ (200) وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (201) أُولَئِكَ لَهُمْ نَصِيبٌ مِمَّا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ (202)

“நீங்கள் உங்களுடைய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், (முன்னர்) நீங்கள் உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போல – ஏன், அதனை விட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்!

மக்களில் அல்லாஹ்வை பல வழிகளில் நினைவு கூருவோர் உள்ளனர். சிலர், “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பேறும் கிடையாது.

இன்னும் சிலர், “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக வேதனையில் இருந்து எங்களை காத்தருள்வாயாக! எனப் பிரார்த்திக்கின்றனர்”.

இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப ஈருலகிலும் நற்பேறு உண்டு”.                           ( அல்குர்ஆன்: 2: 200 – 203 )

3.   அடுத்த நல்லறங்களையும், நல்லமல்களையும் நோக்கி விரைவது, ரப்பின் பக்கம் நெருங்க ஆர்வம் கொள்வது..

فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ (7) وَإِلَى رَبِّكَ فَارْغَبْ (8)

( “நபியே! ஓர் அமலில் இருந்து நீர் ஓய்வு பெறும் போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக! மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!”.                                      ( அல்குர்ஆன்: 94: 7, 8 )

4. செய்த நல்லறங்களையும், நல் அமல்களையும் பாழ்படுத்தாமல் இருப்பது…

وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا
“உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று பிறகு அதனைத் துண்டு துண்டாக்கிக் கொண்டாளே அத்தகைய பெண்ணின் நிலையைப் போல் ஆகி விட வேண்டாம்”.                                                 ( அல்குர்ஆன்: 16: 92 )

4.   நல்லறங்களையும், நல்லமல்களையும் விடாது நிரந்தரமாகச் செய்வது..

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا

“மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை நிரந்தரமாகக் கடைபிடிப்பீராக!” (அல்குர்ஆன்:20:132)

அமல்கள் அழிந்து விடுமோ என்கிற அச்சம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்…

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ

وقال ابن جرير: حدثنا أبو كُرَيْب، حدثنا زيد بن الحُبَاب، حدثنا أبو ثابت بن ثابت بن قيس بن شمَّاس، حدثني عمي إسماعيل بن محمد بن ثابت بن قيس بن شماس، عن أبيه قال: لما نزلت هذه الآية: { لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ } قال: قعد ثابت بن قيس (5) في الطريق يبكي، قال: فمر به عاصم بن عدي من بني العَجلان، فقال: ما يبكيك يا ثابت؟ قال: هذه الآية، أتخوف أن تكون نزلت فيَّ وأنا صيت، رفيع الصوت. قال: فمضى عاصم بن عدي إلى رسول الله صلى الله عليه وسلم قال: وغلبه البكاء، فأتى امرأته جميلة ابنة عبد الله بن أبي بن سلول فقال لها: إذا دخلتُ بيت فَرَسي فشدّي عَلَيّ الضبَّة بمسمار فضربته بمسمار حتى إذا خرج عطفه، وقال: لا أخرج حتى يتوفاني الله، عز وجل، أو يرضى عني رسول الله صلى الله عليه وسلم. قال: وأتى عاصم رسولَ الله صلى الله عليه وسلم فأخبره خبره، فقال: "اذهب فادعه لي". فجاء عاصم إلى المكان فلم يجده، فجاء إلى أهله فوجده في بيت الفَرَس، فقال له: إن رسول الله صلى الله عليه وسلم يدعوك. فقال: اكسر الضبة. قال: فخرجا فأتيا (6) النبي صلى الله عليه وسلم فقال له رسول الله صلى الله عليه وسلم: "ما يبكيك يا ثابت؟". فقال: أنا صيت وأتخوف أن تكون هذه الآية نزلت في: { لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ } . فقال له رسول الله صلى الله عليه وسلم: "أما ترضى أن تَعِيش حَميدًا، وتقتل شهيدا، وتدخل الجنة؟". فقال: رضيت ببشرى الله ورسوله صلى الله عليه وسلم، ولا أرفع صوتي أبدا على صوت النبي صلى الله عليه وسلم.

அல்லாஹ் அல் ஹுஜுராத் அத்தியாயத்தின் 2 –ஆம் வசனத்தை இறக்கியருளிய போது, ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரலி) அவர்கள் மதீனாவின் வீதியில் இருந்து அழுது கொண்டிருந்தார்கள்.

அவ்வழியாகச் சென்ற ஆஸிம் இப்னு அதீ (ரலி) அவர்கள் அதைப் பார்த்து விட்டு, அழுவதற்கான காரணத்தை வினவிய போது,  மேற்கூறிய இறைவசனத்தை சுட்டிக் காட்டி அந்த வசனம் என் சம்பந்தமாகத்தான் இறங்கிற்றோ என்கிற கவலையில் நான் அழுகின்றேன் என்றார்கள்.

அங்கிருந்து ஆஸிம் (ரலி) அவர்கள் விடைபெற்றதும், அழுகை மிகுதியாகவே நேராக வீட்டிற்குச் சென்ற ஸாபித் (ரலி) அவர்கள், தம்முடைய மனைவி ஜமீலா (ரலி) அவர்களிடம் வந்து, என்னை குதிரையை கட்டும் லாயத்தில் ஓரிடத்தில் கூண்டடித்து என்னை கட்டிப்போட்டு விடுங்கள்.

பின்னர் தமது மனைவியை நோக்கிஎன்னை குறித்து நபி {ஸல்} அவர்கள் திருப்தி கொள்ளாதவரையில் எனக்கு மரணமே வந்தாலும் நான் கூண்டை விட்டு  வெளியே வரமாட்டேன்என்றார்கள்.

அதே வேளையில் ஆஸிம் (ரலி) அவர்கள் வழியில் தாம் கண்ட காட்சியை அண்ணலாரிடம் கூறினார்கள். அப்போது நபிகளார் ஸாபித் (ரலி) அவர்களை தம்மிடம் அழைத்து வருமாறு ஆஸிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

நேராக மதீனாவின் வீதிக்கு வந்த ஆஸிம் (ரலி) அவர்கள், ஸாபித் (ரலி) அவர்கள் அங்கு இல்லாததைக் கண்டு ஸாபித் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அங்கே குதிரை லாயத்திலே முடங்கிக்கிடந்த ஸாபித் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் உடனே மஸ்ஜிதுன் நபவீக்கு உங்களை வரச்சொன்னார்கள்என்றார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள் தம் மீது போடப்பட்டிருக்கின்ற கூண்டை உடைக்கச் சொன்னார்கள்.

அது போன்றே ஆஸிம் (ரலி) அவர்களும் உடைத்தார்கள். பின்னர் இருவரும் நபிகளாரின் சபை நோக்கி நடந்தார்கள்.

அழுது புலம்பியவராக அண்ணலாரின் அவைக்குள்ளே அடியெடுத்து வைத்த ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி பெருமானார் {ஸல்} அவர்கள்தோழரே! நீர் புகழுக்குரிய வாழ்வை வாழ்வீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?” நீர் ஷஹாதத் எனும் வீர மரணம் அடைவீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?” நீர் சுவனத்தைப் பெற்றுக் கொள்வீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?”

வாரும்! உமக்கான சோபனத்தை பெற்றுச் செல்லும்! என்று கூறினார்கள். நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதரே! இதோ! அல்லாஹ்வுடைய, அல்லாஹ்வின் தூதருடைய சோபனத்தை நான் பொருந்திக்கொள்கின்றேன்.” என்று ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இனி ஒரு போதும் நான் தங்களின் குரலை விட உயர்த்தி பேசமாட்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்றுரைத்தார்.

உடனடியாக அல்லாஹ் அடுத்து ஒரு இறை வசனத்தை இறக்கியருளினான்.

إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக! எவர்கள் இறைத்தூதரின் திருமுன் உரையாடும் போது தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் இதயங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்து தேர்ந்தெடுக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றது.”

                           ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா )

அல்லாஹ் நம் ஈமானையும், அமல்களையும் சோதிக்க நாடிவிட்டால்?...

روى البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة رضي الله عنه أنه سمع النَّبِيَّ صلى الله عليه وسلم يقول: «إِنَّ ثَلَاثَةً فِي بَنِي إِسْرَائِيلَ: أَبْرَصَ، وَأَقْرَعَ، وَأَعْمَى، فَأَرَادَ اللهُ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ إِلَيْهِمْ مَلَكًا، فَأَتَى الْأَبْرَصَ، فَقَالَ: أَيُّ شَيْءٍ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: لَوْنٌ حَسَنٌ، وَجِلْدٌ حَسَنٌ، وَيَذْهَبُ عَنِّي الَّذِي قَدْ قَذِرَنِي النَّاسُ، قَالَ: فَمَسَحَهُ فَذَهَبَ عَنْهُ قَذَرُهُ، وَأُعْطِيَ لَوْنًا حَسَنًا وَجِلْدًا حَسَنًا، قَالَ: فَأَيُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: الْإِبِلُ - أَوْ قَالَ: الْبَقَرُ، شَكَّ إِسْحَاقُ - إِلَّا أَنَّ الْأَبْرَصَ، أَوِ الْأَقْرَعَ، قَالَ أَحَدُهُمَا: الْإِبِلُ، وَقَالَ الْآخَرُ: الْبَقَرُ- قَالَ: فَأُعْطِيَ نَاقَةً عُشَرَاءَ، فَقَالَ: بَارَكَ اللهُ لَكَ فِيهَا، قَالَ: فَأَتَى الْأَقْرَعَ، فَقَالَ: أَيُّ شَيْءٍ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: شَعَرٌ حَسَنٌ وَيَذْهَبُ عَنِّي هَذَا الَّذِي قَذَرَنِي النَّاسُ، قَالَ: فَمَسَحَهُ فَذَهَبَ عَنْهُ، وَأُعْطِيَ شَعَرًا حَسَنًا، قَالَ: فَأَيُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: الْبَقَرُ، فَأُعْطِيَ بَقَرَةً حَامِلًا، قَالَ: بَارَكَ اللهُ لَكَ فِيهَا، قَالَ: فَأَتَى الْأَعْمَى، فَقَالَ: أَيُّ شَيْءٍ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: أَنْ يَرُدَّ اللَّهُ إِلَيَّ بَصَرِي، فَأُبْصِرَ بِهِ النَّاسَ، قَالَ: فَمَسَحَهُ فَرَدَّ اللَّهُ إِلَيْهِ بَصَرَهُ، قَالَ: فَأَيُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: الْغَنَمُ، فَأُعْطِيَ شَاةً وَالِدًا. فَأُنْتِجَ هَذَانِ وَوَلَّدَ هَذَا. قَالَ: فَكَانَ لِهَذَا وَادٍ مِنَ الْإِبِلِ، وَلِهَذَا وَادٍ مِنَ الْبَقَرِ، وَلِهَذَا وَادٍ مِنَ الْغَنَمِ، قَالَ: ثُمَّ إِنَّهُ أَتَى الْأَبْرَصَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ، فَقَالَ: رَجُلٌ مِسْكِينٌ، قَدِ انْقَطَعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلَا بَلَاغَ لِيَ الْيَوْمَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ بِكَ، أَسْأَلُكَ بِالَّذِي أَعْطَاكَ اللَّوْنَ الْحَسَنَ، وَالْجِلْدَ الْحَسَنَ، وَالْمَالَ، بَعِيرًا أَتَبَلَّغُ عَلَيْهِ فِي سَفَرِي، فَقَالَ: الْحُقُوقُ كَثِيرَةٌ، فَقَالَ لَهُ: كَأَنِّي أَعْرِفُكَ، أَلَمْ تَكُنْ أَبْرَصَ يَقْذَرُكَ النَّاسُ؟ فَقِيرًا فَأَعْطَاكَ اللَّهُ؟ فَقَالَ: إِنَّمَا وَرِثْتُ هَذَا الْمَالَ كَابِرًا عَنْ كَابِرٍ، فَقَالَ: إِنْ كُنْتَ كَاذِبًا، فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ، قَالَ: وَأَتَى الْأَقْرَعَ فِي صُورَتِهِ، فَقَالَ لَهُ مِثْلَ مَا قَالَ لِهَذَا، وَرَدَّ عَلَيْهِ مِثْلَ مَا رَدَّ عَلَى هَذَا، فَقَالَ: إِنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ. قَالَ: وَأَتَى الْأَعْمَى فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ، فَقَالَ: رَجُلٌ مِسْكِينٌ وَابْنُ سَبِيلٍ، انْقَطَعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلَا بَلَاغَ لِيَ الْيَوْمَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ بِكَ، أَسْأَلُكَ بِالَّذِي رَدَّ عَلَيْكَ بَصَرَكَ، شَاةً أَتَبَلَّغُ بِهَا فِي سَفَرِي، فَقَالَ: قَدْ كُنْتُ أَعْمَى فَرَدَّ اللَّهُ إِلَيَّ بَصَرِي، فَخُذْ مَا شِئْتَ، وَدَعْ مَا شِئْتَ، فَوَاللَّهِ لَا أَجْهَدُكَ الْيَوْمَ شَيْئًا أَخَذْتَهُ لِلَّهِ، فَقَالَ: أَمْسِكْ مَالَكَ، إِنَّمَا ابْتُلِيتُمْ، فَقَدْ رُضِيَ عَنْكَ وَسُخِطَ عَلَى صَاحِبَيْكَ».

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். 

அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்' என்று கூறினார்.

உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், 'எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடு தான்... (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார்.

அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்' என்று கூறினார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர்.

இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்' என்று கூறினார்.

அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்' என்று பதிலளித்தான்.

உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார்.

அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது.

இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன்.

அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்' என்று கூறினார்.

உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்' என்று கூறினார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.                                                       ( நூல்: புகாரி )

கபூலிய்யத் கிடைக்க வேண்டுமானால் அமல்கள் தொடர வேண்டும்…

1.   அபூதர் அல் ஃகிஃபாரி ரலியல்லாஹு அன்ஹு என்கிற சகாப்தம்

அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) நபித்தோழர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். அண்ணலாரின் அருகாமையை அதிகம் பெற்றவர்கள்.

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அருமைத் தோழர்களும் மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருந்த சமயம் தூரத்தில் தக்பீர் முழக்கம் கேட்கிறது.குரல் வந்த திசை நோக்கி மாநபியின் முகமும், நபித்தோழர்களின் முகமும் முன் நோக்கியவாறு இருந்தன.

அப்போது அவர்கள் கண்ட காட்சி நடந்தவாறும், வாகனத்தில் அமர்ந்தவாறூம், சிறுவர்கள், வாலிபர்கள், முதியோர்கள், பெண்கள் என தக்பீர் முழக்கம் விண்ணைப் பிளக்க அணி, அணியாய் மஸ்ஜிதுந் நபவீயை நோக்கி சமீபமாக வந்து விட்டனர். நபி (ஸல்) அவர்கள் அருகே அந்த கூட்டம் வந்ததும் தலைமையேற்று அழைத்து வந்த அந்த இளைஞரைப் பார்த்ததும் ஆச்சர்யம் மேலிட அவரை நோக்கிப் புன்னகைத்தார்கள், அவரும் பதிலுக்கு புன்னகைத்தார். பெருந்திரளாக வந்திருந்த அந்த மக்கள் யார்?என மாநபி (ஸல்) அந்த இளைஞரை நோக்கி கேட்டார்கள்.அந்த இளைஞர் சொன்னார்; இவர்கள் என் சமூக மக்களான கிஃபார் மக்கள் மற்றும் அண்டை கோத்திரமான அஸ்லம் மக்களாவார்கள். உயர்ந்தோனாம் அல்லஹ்வின் சத்திய மார்க்கத்தை ஏற்றவர்களாக உங்களிடம் அழைத்து வந்துள்ளேன் அல்லாஹ்வின் தூதரே! என்றார் அந்த இளைஞர்.

நல்வரவாகட்டும்! கிஃபார் குல மக்களே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!
நல்வரவாகட்டும்! அஸ்லம் குல மக்களே! அல்லாஹ் உங்களுக்கு சாந்தியளிப்பானாக!
என்று நபி (ஸல்) அவர்கள் மகிழ்ந்த முகத்தோடு கூறினார்கள்.

தன் குலத்திற்கும், தன் அண்டை குலத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அமுத வாயால் சோபனத்தை பெற்றுத்தந்த அந்த இளைஞர் யார்?
அவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர்கள்நான்காவதாவோ அல்லது ஐந்தாவதாகவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்எனக் கூறுவர்.

கஃபாவின் முகட்டின் மீதேறி மிக உரத்த குரலில் ஷஹாதத் - சாட்சியம் சொன்ன முதல் மாவீரரும் அவரே!

அவர்தான் அபூதர் அல் கிஃபாரி என்றழைக்கபடும் ஜுந்துப் இப்னு ஜனாதா (ரலி) அவர்கள். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீயின் முன் திரளாக குழுமியிருந்த கிஃபார் மற்றும் அஸ்லம் மக்களையும், அபூதர் (ரலி) அவர்களையும், வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது, அபூதர் (ரலி) அவர்கள் நபிகளாரை நோக்கி அல்லாஹ்வின் தூதரே! அன்றே நான் உங்களிடம் சொல்லவில்லையா? எனக் கேட்டார்.

எந்த நாள் அது?என்ன சொன்னார் அவ்ர் நபியிடத்தில்? இஸ்லாத்தின் அறிமுகமும், ஏகத்துவத்தின் ஜோதியும் மக்கமா நகரில் முஹம்மது (ஸல்) அவர்களால் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற செய்தியை கேள்விப்பட்டு ஷாம்-க்கு அருகே உள்ள ஒரு ஊரிலிருந்து மக்காவந்து ஹல்ரத் அலீ (ரலி) அவர்களின் உதவியால் ஒருநாள் அதிகாலைப் பொழுதில் அண்ணலாரை சந்தித்தார் அபூதர் அவர்கள்.
                உங்களது கவியை எனக்கு கொஞ்சம் படித்துக் காட்டுங்களேன் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார் அபூதர் அவர்கள்.இல்லை! இது என் இறைவனின் சங்கை மிகு வார்த்தைகளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்படியானால், எனக்கு ஓதிக் காட்டுங்கள் என்றார் அபூதர். நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய சில மனித் துளிகளிலேயே ஷஹாதத் - சாட்சியம் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள் அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்கள்,.
அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களின் முகவரியை கேட்ட போது, கிஃபார் கோத்திரம் என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.

இதைக்கேட்ட அண்ணலார் ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு (ஆச்சர்யப்பட காரணம் கிஃபார் குல மக்கள் கடும் முரட்டு சுபாவம் கொண்டவர்கள்)
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுகின்றான் என்று கூறினார்கள்.
பின்பு அபூதரே! உமது ஈமானை மறைத்துக் கொள்வீராக! மக்கத்து மனிதர்களிடம் வெளிப்படுத்திவிடாதே! உம்மை ஏதாவது செய்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் என்றார்கள்.

சிறிது நேரம் கூட கழியவில்லை.கஃபத்துல்லாஹ்வின் முகட்டின் மீதேறி உரத்த குரலில் ஏகத்துவ முழக்கத்தை முழங்கினார்கள்.மேலிருந்து கீழிறக்கி மக்கத்து தலைவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு தாக்கினார்கள்.

விஷயம் கேள்விப்பட்டு ஓடிவந்த அப்பாஸ் (ரலி) அவர்கள் அம்மக்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களை காப்பாற்றினார்கள். மறுநாளும், மூன்றாம் நாளும் அவ்வாறே நடந்தது. விஷயம் விபரீதமாவதை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை தம் பக்கம் அழைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பார்வையில் பாடம் கற்றுக்கொண்டவராய் என்ன செய்ய உத்தரவிடுகின்றீர்களோ அப்படியே நான் நடந்து கொள்கின்றேன். செல்லுங்கள்! உமது மக்களுக்கு நேர்வழியின்பால் அழைப்பு விடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் மக்களை நேர்வழிக்கு கொண்டு வராமல் நான் இங்கு வரமாட்டேன் என்று நபிகளாரை நோக்கி கூறியவாறு தமது ஊரின் திசை நோக்கி விரைந்தார் அபூதர் (ரலி) அவர்கள்.

இந்தக் காட்சி நடைபெறும் என்பதை அன்றே நான் உங்களிடம் சொல்லவில்லையா? நீங்கள் ஆச்சர்யத்தோடும், வியப்போடும் காண்கிற இந்தக் காட்சிக் குறித்து அன்றே நான் உங்களிடம் சொல்லவில்லையா?

இதைத்தான் மஸ்ஜிதுன் நபவீன் முன் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அண்ணலார் வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது, கடந்த காலத்தில் நடந்தவைகளை நபிகளாரின் கண்முண் கொண்டு வந்து நிறுத்தினார்கள் அபூதர் (ரலி) அவர்கள்.
இதைக்கண்டு பூரித்துப் போன அண்ணல் நபி (ஸல்) அவர்கள்:

مَن سرّه أن ينظر إلى زُهْدِ عيسى بن مريم فلينظر إلى أبي ذرّ».

மர்யமின் மகன் ஈஃஸா (அலை) அவர்களின் பணிவை காண வேண்டும் என ஆசை கொள்பவர் அபூதர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆனந்தமடைந்து கொள்ளட்டும்.

               ( நூல்: இஸ்தீஆப்: பாகம்:1, பக்கம்:132 இஸ்தீஆப்: பாகம்:3, பக்கம்:103 )

மற்றுமொரு அறிவிப்பில்.. நபி ஈஸா (அலை) அவர்கள் உலகப்பற்றற்ற தன்மைக்கு என்னுடைய உம்மத்தில் ஒப்பானவர் அபூதர் (ரலி) அவர்களே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்       ( இப்னு ஸஅத்: பாகம்:4, பக்கம்:228 )

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமூகத்தில் அபூதர் (ரலி) அவர்களுக்கான உரிய மரியாதையை, கண்ணியத்தை அடையாளமிட்டார்கள்.அதன் பின்னர் அபூதர் (ரலி) என்ன செய்தார்?அப்படியே இருந்து விட்டாரா?அல்லது அடுத்த சிகரத்தை நோக்கி முன்னேறினாரா?
      
لما سار رسول الله صلى الله عليه وسلم إلى تبوك جعل لا يزال يتخلف الرجل، فيقولون يا رسول الله: تخلف فلان، فيقول: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، حتى قيل: يا رسول الله تخلف أبو ذر وأبطأ به بعيره، فقال رسول الله صلى الله عليه وسلم: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، فتلوم أبو ذر رضي الله عنه على بعيره فأبطأ عليه، فلما أبطأ عليه أخذ متاعه فجعله على ظهره فخرج يتبع رسول الله صلى الله عليه وسلم ماشيا، ونزل رسول الله صلى الله عليه وسلم في بعض منازله ونظر ناظر من المسلمين فقال: يا رسول الله هذا رجل يمشي على الطريق، فقال رسول الله صلى الله عليه وسلم: كن أبا ذر، فلما تأمله القوم قالوا: يا رسول الله هو والله أبو ذر! فقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله أبا ذر يمشي وحده ويموت وحده ويبعث وحده، فضرب الدهر من ضربته وسير أبو ذر إلى الربذة، فلما حضره الموت أوصى امرأته وغلامه إذا مت فاغسلاني وكفناني ثم احملاني فضعاني على قارعة الطريق فأول ركب يمرون بكم، فقولوا: هذا أبو ذر، فلما مات فعلوا به كذلك، فاطلع ركب فما علموا به حتى كادت ركائبهم تطأ سريره، فإذا ابن مسعود في رهط من أهل الكوفة، فقالوا: ما هذا؟ فقيل: جنازة أبي ذر، فاستهل ابن مسعود رضي الله عنه يبكي، فقال: صدق رسول الله صلى الله عليه وسلم يرحم الله أبا ذر يمشي وحده ويموت وحده ويبعث وحده، فنزل فوليه بنفسه حتى أجنه، فلما قدموا المدينة ذكر لعثمان قول عبد الله وما ولي منه.

ஹிஜ்ரி ஒன்பது, தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடப்படுகின்றது.கடுமையான கோடைக்காலம், மிக நீண்ட தூரப் பயணம்.எதிரிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம் என போருக்கு தடை ஏற்படுத்துகிற சூழ்நிலைகள் முஸ்லிம்களை சூழ்ந்திருந்தது.

ஒருவாராக நபி (ஸல்) அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் போருக்கு புறப்பட்டுச் சென்றனர். மாலை நேரத்தில் ஓர் இடத்தில் படை வீரர்களை இளைப்பாறிச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவே முஸ்லிம்கள் இளப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களிடத்தில்நம்மோடு போருக்கு வராமல் அபூதர் (ரலி) ஊரிலேயே பின்தங்கி விட்டார் என்றனர்.

இல்லை! ஒருபோதும் அப்படியிருக்காது; அவர் நம்மோடு தான் புறப்பட்டிருப்பார்; வழியிலே அவரது வாகனம் (கோவேறு கழுதை) பலகீனப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறுதியாக, அதிகாலை நேரத்தில் மாநபியும் தோழர்களும், மாநபி (ஸல்) அவர்களும் புறப்படத்தயாராயிருந்த போது, தூரத்தில் ஒரு மனிதர் முதுகிலே ஒரு மூட்டையை சுமந்து வருவதைக் கண்டு அண்ணலாரிடம் தெரிவித்தார்கள் தோழர்கள்.

அப்படியானால், அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்களாகத்தான் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

மிகச் சமீபமாக வரும்போது தான் அவர் அபூதர் (ரலி) அவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திய பின் நபிகளாரிடத்தில் இதோ! அபூதர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள் எனக் கூறினார்கள் நபித்தோழர்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள்; அல்லாஹ் அபூதர் (ரலி) அவர்களுக்கு அருள் பாலிப்பானாக! தனியே நடந்து வந்தார். தனியே இருக்கும் போதுதான் மரணிப்பார்; நாளை மஹ்ஷரில் தனியாகத்தான் எழுப்பப்படுவார்! என்று கூறினார்கள்.
( நூல்: கிஸஸ் - அஸ் ஸஹாபா தஹ்தீப் - சீரத்- இப்னு ஹிஷாம்; பக்கம்:256 )

வாழ்க்கையில் நல்லறங்களையும், நல்லமல்களையும் செய்து, சோபனங்களாக மாற்றிய அபூதர் - அல் - கிஃபாரி (ரலி) அவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த அமல்களை நோக்கி, நல்லறங்களை நோக்கியே பயணித்தார்கள்.


(لا حاجة لي في دنياكم).!

வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், வறுமை, ஏழ்மை, கஷ்டம் எனும் சூழ்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வந்த போதும் அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை இது தான்! உங்கள் உலகம் எனக்கு தேவை இல்லை, உங்கள் உலகத்திடம் நான் ஒரு போதும் தேவையாகப் போவதில்லை”.

ورآه صاحبه يوما يلبس جلبابا قديما فسأله
أليس لك ثوب غير هذا..؟! لقد رأيت معك منذ أيام ثوبين جديدين..؟
فأجابه أبو ذر: " يا بن أخي.. لقد أعطيتهما من هو أحوج اليهما مني"..
قال له: والله انك لمحتاج اليهما!!
فأجاب أبو ذر: "اللهم اغفر له.. انك لمعظّم للدنيا، ألست ترى عليّ هذه البردة..؟؟ ولي أخرى لصلاة الجمعة، ولي عنزة أحلبها، وأتان أركبها، فأي نعمة أفضل ما نحن فيه"..؟؟

ஒரு முறை அபூதர் (ரலி) அவர்களின் நண்பர் ஒருவர், அபூதர் (ரலி) அவர்களின் ஒட்டுப் போட்ட ஆடையைப் பார்த்து, நபித்தோழர் ஒருவர் இப்படி ஏழ்மையில் உழன்று கொண்டு சிரமப்படுகின்றாரே என்று கருதி ஆறுதல் வார்த்தை கூற வந்தார்.

அபூதர் அவர்களே! நீங்கள் அணிந்திருக்கும் இந்த ஆடையைத் தவிர வேறு ஆடைகள் ஏதும் இல்லையா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உங்களிடம் புதிய இரண்டு ஆடைகள் இருப்பதை நான் கண்டேனே? அதை அணிந்து கொள்ள வேண்டியது தானே? என்றார்.

அதற்கு, அவ்விரண்டு ஆடைகளையும் நான் என்னை விட தேவையானவர்கள் இருவருக்கு கொடுத்து விட்டேன்என்றார்கள்.

அதற்கு, அபூதர் அவர்களின் நண்பர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்விரண்டு பேர்களை விட நீர் தான் மிகவும் தேவை உடையவராக இருக்கின்றீர்என்றார்.

அப்போது, வானின் பக்கம் கையை உயர்த்தி, இறைவா! இவர் விளங்காமல் பேசுகின்றார்! இவரை மன்னித்து விடுவாயாக!என்று கூறிவிட்டு, என்னிடம் இரு ஆடைகள் உண்டு ஒன்றை நான் இப்போது அணிந்திருக்கின்றேன். இன்னொன்றை ஜும்ஆ தொழுகைக்காக அணிந்து கொள்வேன்என்றார்கள்.

عن زيد بن وهب قال: مررت بالرَّبَذَة، فإذا أنا بأبي ذَرّ
فقلت له: ما أنزلك منزلك هذا؟ قال: كنت بالشام، فاختلفت أنا ومعاوية في {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّه
التوبة: 34]
 قال معاوية نزلت في أهل الكتاب
 فقلت: نزلت فينا وفيهم. فكان بيني وبينه في ذاك
 وكتب إلى عثمان يشكوني
 فكتب إليَّ عثمان
أنِ اقْدِم المدينة
 فقدمتها فكثر عليَّ الناس حتى كأنهم لم يروني قبل ذلك، فذكرت ذاك لعثمان، فقال لي: إن شئت تنحيت فكنت قريبًا. فذاك الذي أنزلني هذا المنزل، ولو أمَّرُوا عليَّ حبشيًّا لسمعت وأطعت.

தங்களின் அந்திம காலத்தில் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஜகாத் தொடர்பான இறைவசனம் ஒன்றில் அபூதர் (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினாலும், முஆவியா (ரலி) அவர்களின் நிலைப்பாடு தவறெனெச் சுட்டிக்காட்டியதாலும், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆணைக்கினங்க, ஊரை விட்டும் ஒதுங்கி யாரும் இல்லா அர் ரபதா வனாந்தரத்தில் காட்டில் தங்களின் மனைவியோடு தங்கி இருக்கின்றார்கள்.

قيل لأبي ذرٍّ
ألا تتخذ أرضًا كما اتخذ طلحة والزبير؟ فقال: "وما أصنع بأن أكون أميرًا، وإنما يكفيني كل يوم شربة من ماء أو نبيذ أو لبن، ".
وعن أبي ذر قال: "كان قوتي على عهد رسول الله صاعًا من التمر، فلست بزائدٍ عليه حتى ألقى الله تعالى".

ஒரு முறை அபூதர் (ரலி) அவர்களிடம் ஒருவர் இவ்வாறு கேட்டார்: உங்கள் தோழர்கள் ஸுபைர் (ரலி) தல்ஹா (ரலி) ஆகியோருக்கு சொந்தமாக பெரிய நிலம் ஒன்று இருக்கின்றதே? நீங்களும் அது போன்று வாங்கக் கூடாதா? என்று.

அதற்கு, நான் என்ன நாடு மக்களின் தலைவரா? கோட்டை கொத்தளங்களில் வாழ்வதற்கு! எனக்கு தினமும் குடிப்பதற்கு ஒரு மிடரு தண்ணீரோ, பழச்சாறோ, பாலோ இருந்தால் போதும்என்று அபூதர் (ரலி) பதில் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயிர் வாழும் காலத்தில் என்னுடைய உணவு ஒரு ஸாவு பேரீத்தம் பழம் தான், என் மரணம் வரை இதில் இருந்து கொஞ்சம் கூட அதிகரிக்கப்போவதில்லைஎன்று அபூதர் (ரலி) கூறுவார்கள்.

الآن يعالج أبو ذر سكرات الموت في الربذة.. المكان الذي اختار الاقامة فيه اثر خلافه مع عثمان رضي الله عنه، فتعالوا بنا اليه نؤد للراحل العظيم تحية الوداع، ونبصر في حياته الباهرة مشهد الختام.
ان هذه السيدة السمراء الضامرة، الجالسة الى جواره تبكي، هي زوجته..
وانه ليسألها: فيم البكاء والموت حق..؟
فتجيبه بأنها تبكي: " لأنك تموت، وليس عندي ثوب يسعك كفنا"..!!
".. لا تبكي، فاني سمعت رسول الله صلى الله عليه وسلم ذات يوم وأنا عنده في نفر من أصحابه يقول: ليموتنّ رجل منكم بفلاة من الأرض، تشهده عصابة من المؤمنين..
وكل من كان معي في ذلك المجلس مات في جماعة وقرية، ولم يبق منهم غيري .. وهأنذا بالفلاة أموت، فراقبي الطريق،، فستطلع علينا عصابة من المؤمنين، فاني والله ما كذبت ولا كذبت

சில நாட்களில் நோய்வாய்ப்படுகின்றார்கள், அந்த நோயின் வீரியம் அவர்களை மரணத்தின் விளிம்பு வரை அழைத்துச் செல்கிறது.

இப்போதோ, அப்போதோ என எப்போது வேண்டுமானாலும் அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்களின் ரூஹ் பிரிந்து விடும் என்பதை அறிந்து அழுகின்றார்கள்!

அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்களின் துணைவியார், அபூதர் (ரலி) அவர்களைப் பார்த்தவாறே! தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்களே!; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லையே! உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் கஃபன் துணியில்லையே! நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?”

அதைக் கேட்டு புன்னகைத்தவாறே அபூதர் (ரலி) அவர்கள்உறுதியாக இரு! நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் உங்களுள் ஒருவர் பாலைவனத்தில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்என்று கூறியதை நான் செவியுற்றேன்.

அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர! இதோ இங்கு நான் அரவமற்ற பாலைவனத்தில்.

அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. எழுந்து செல்! பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்! என்று கூறினார்கள்.                                  ( நூல்: அஹ்மத் )

அருகில் இருந்த சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்ப்பார் உம்மு தர் (ரலி).

அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பதும், மீண்டும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவதும் என்று கடினமான தருணங்களை அனுபவித்தார்கள் உம்மு தர் (ரலி).

இறுதியாக, தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் (ரலி) அவர்கள் நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் இவர் அபூதர்என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.என்றார்கள்.

அபூதர் (ரலி) அவர்களின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்தி விட்டு யாரேனும் வருகிறார்களா என்று அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது.

அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிவதைக் கவனித்தார்கள்.

அருகில் வந்த குழுவினார்கள் அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க,

என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வந்து, என் கணவரை நல்லடக்கம் செய்ய உதவி புரியுங்கள்! தயவுசெய்து உதவுங்கள்என்றார் உம்முதர் (ரலி).

யார் அவர்? என்று கேட்க,  அபூதர் (ரலி) என்று உம்முதர் (ரலி) அவர்கள் கூற...

அல்லாஹ்வின் தூதரின் தோழரா?” என்று குழுவினர்கள் ஆச்சர்யத்துடன் வினவ, “ஆம்.என்று உம்மு தர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

وفاضت روحه الى الله..
ولقد صدق..
فهذه القافلة التي تغذ السير في الصحراء، تؤلف جماعة من المؤمنين، وعلى رأسهم عبدالله بن مسعود صاحب رسول الله.
وان ابن مسعود ليبصر المشهد قبل أن يبلغه.. مشهد جسد ممتد يبدو كأنه جثمان ميّت، والى جواره سيدة وغلام يبكيان..
وتفيض عيناه بالدمع، ويقف على جثمانه الطاهر يقول:" صدق رسول الله.. نمشي وحدك، وتموت وحدك، وتبعث وحدك".!
ويجلس ابن مسعود رضي الله عنه لصحبه تفسير تلك العبارة التي نعاه بها:" تمشي وحدك.. وتموت حدك.. وتبعث وحدك

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். இதைக் கேட்டதும், ஓடோடி வந்து பார்த்தார், அபூதர் (ரலி) அவர்களின் அருகே உம்முதர் அவர்களும், அவர்களின் அடிமையும் நின்று அழுது கொண்டிருந்தனர். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”.


( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... ஸியரு அஃலா மின் நுபலா )

வத்தான் எனும் பள்ளத்தாக்கிலிருந்து தனி நபராய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, தங்களது கோத்திரம், நட்புக் கோத்திரம் என அனைவருக்கும் ஈமானிய ஒளியைக் கொடுத்து, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, அல்லாஹ் வழங்கிய வாழ்க்கை முறையை அப்படியே ஏற்று, திருப்தி பட்டு தனியாளாய் இறந்து போனார்கள் அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்கள்.

எனவே, ரமழானில் அமல் செய்வதில் காட்டிய அதே ஆர்வத்தை எதிர் வருகிற காலங்களிலும் காட்டிட வேண்டும், நன்மையான அனைத்து காரியங்களிலும் முன்னிலை பெற வேண்டும் தனது ஈமானை முன்பைவிட அழகிலும், பொழிவிலும் பட்டை தீட்ட வேண்டும்.

அல்லாஹ்வே! எங்களின் நோன்புகளையும், வணக்க வழிபாடுகளையும், இதர உபரியான நல்லறங்கள், நல் அமல்களையும் பரிபூரணாக கபூல் செய்து நிறைவான நன்மைகளையும், நற்கூலிகளையும் தந்தருள்வாயாக!

செய்த நல்லமல்களையும், நல்லறங்களையும் பாழ்படுத்துகிற, அழித்து விடுகிற எந்த ஒரு செயலையும் செய்திடாமல் எங்களை காத்தருள்வாயாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!