Thursday, 4 July 2019

ஹஜ்!!! விரைவுபடுத்துவதும்… தாமதப்படுத்துவதும்…

ஹஜ்!!!
விரைவுபடுத்துவதும்தாமதப்படுத்துவதும்

 


துல் கஅதா மாதம் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் புனிதமாக்கியிருக்கிற நான்கு மாதங்களில் ஒன்றாகும். ஹஜ்ஜுடைய அமல்களுக்கான நாட்கள் ஆரம்பிப்பதும் அங்கிருந்து தான்.

ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்கிற புனித பயணாளிகள் பயண அறிவிப்பை சொந்த, பந்தம், அண்டை அயலார், உறவுகள் நட்புகள் மஹல்லா வாசிகள் என அனைவரிடமும் சொல்லி முடித்து, பயணம் மேற்கொள்ள துவங்குகிற மாதமும் கூட.

விருந்துகள், பிரிவுபச்சாரங்கள், ஹஜ் விளக்க கூட்டங்கள் என இப்போதே நாம் ஹஜ் தொடர்பான பல சபைகளை அலங்கரிக்கத் தொடங்கி இருப்போம்.

இந்த சபைகளைக் கடக்கிற போதோ அல்லது அவைகளில் அமர்கிற போதோ, புனித பயணாளிகளைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிற போதோ மறக்காமல் அல்லாஹ்விடம் நாம் வைக்க வேண்டிய முக்கிய வேண்டுகோளில் ஒன்றுஅல்லாஹ்வே எனக்கும், என் மனைவி மக்களுக்கும், என் குடும்பத்தார்களுக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவாயாக! உன்னுடைய உயர்தர ஆலயத்தை தரிசிக்கும் வாய்ப்பை இந்த எளியோனுக்கும் இந்த எளியோனின் மனைவி மக்களுக்கும், இந்த எளியோனின் குடும்பத்தார்களுக்கும் வழங்கி கௌரவிப்பாயாக! என்று மனமுருகி நம்முடைய ஆசையை வெளிப்படுத்த வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நஸீபை வழங்குவானாக! ஆமீன்!.

மனித சமூகம் படைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் குறித்து பின் வரும் அல்குர்ஆனின் இரண்டு வசனங்கள் நமக்கு இவ்வாறு கூறும்.

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ (115)

நாம் உங்களை வீணாக படைத்துள்ளோம் என்றும், நம்மிடம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா, என்ன?”

( அல்குர்ஆன்: 23: 115 )

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ (56)

நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிந்து வணங்குவதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை”.

( அல்குர்ஆன்: 51: 56 )

எனவே தான் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வணக்க வழிபாடுகள், அதன் செயல் வடிவங்கள், அதன் கால நேரங்கள், அதன் எல்லைகள், அதன் சிறப்புகள், அதை செய்வதால் ஏற்படும் நன்மைகள், அதனை செய்யாமல் விட்டு விடுவதால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகள் என இவை எல்லாவற்றையும் எடுத்துக் கூறிட, வாழ்ந்து காட்டிட இறைத்தூதர்கள், ஏடுகள், வேதங்கள் என மனித சமூக வரலாற்றில் நீண்டதொரு வழிகாட்டலை வழங்கினான்.

இறுதியாக நமது நபி முஹம்மது {ஸல்} அவர்களை மனித சமூகத்தின் இறுதி தூதராக்கி, தலை சிறந்த வேதமாம் திருக்குர்ஆனை வழங்கி, இந்த தீனை முழுமை படுத்தி, உலகின் தலை சிறந்த உம்மத்தாக நம்மை ஆக்கியிருக்கின்றான்.

மேலும், ஏகத்துவத்திற்குப் பிறகு வணக்க, வழிபாடுகளில் இந்த உம்மத்துக்கென்று பிரதானமான சில வணக்க, வழிபாடுகளை வழங்கிய தோடல்லாமல் அவைகளுக்கான கால நேரங்களை நிர்ணயம் செய்து, மகத்தான பல வெகுமதிகள், சோபனங்களையும் வழங்கி கௌரவித்துள்ளான்.

ஏகத்துவத்திற்குப் பிறகு பிரதானமான வழிபாடு தொழுகையாகும். அல்லாஹ் அதை கடமையாக்கி, வழங்கிய இடமும் நாளும் கூட மகத்துவமானதாகும். அந்த தொழுகையை குறித்து கூறும் போது…

اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏ 

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.”                  ( அல்குர்ஆன்:  4: 103 )

அடுத்து இதற்கு இணையான வணக்கம் கிடையாது என்று மாநபி {ஸல்} அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட நோன்பு, அது குறித்து கூறும் போது…

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (185)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான் எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)                            ( அல்குர்ஆன்: 2:185 ) 

الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَاأُولِي الْأَلْبَابِ (197)

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்.

 மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 2:197 )

இஸ்லாம் வலியுறுத்தும் எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி அதற்கென கால, நேரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அந்த கால, நேரத்திற்குள் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஹஜ்ஜும் அப்படித்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

“மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்ற வேண்டிய கடமையாகும்”.                              ( அல்குர்ஆன்: 3: 97 )

وعن الفضل - رضي الله عنه - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((مَن أراد الحجَّ، فليَتَعجَّل؛ فإنه قد يَمْرَض المريض، وتَضِلُّ الضالَّة، وتَعْرِض الحاجة))
ஃபள்ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் ஹஜ் செய்ய நாடுகின்றாரோ அவர் விரைவாக ஹஜ் செய்து விடட்டும். ஒரு வேளை அவர் நோய்வாய்ப் படலாம் அல்லது பயணப் புறப்பாட்டில் இடையூறு ஏற்படலாம் அல்லது வேறேதேனும் தேவைகள் ஏற்படலாம்”. என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                ( நூல்: இப்னு மாஜா )

عن ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((تعجَّلوا إلى الحجِّ؛ فإن أحدَكم لا يدري ما يَعْرِض له
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஹஜ்ஜை விரைவாக செய்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவரும் உங்களுக்கு இடையூறாக ஏற்படும் எதையும் அறிய மாட்டீர்கள்” என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                           ( நூல்: அஹ்மத் )

ஆனால், இன்று முஸ்லிம் சமூகத்தில் ஹஜ் செய்வதற்கு உடல் மற்றும் பொருளாதாரம், கால, நேரம் ஆகிய வசதிகள் பெற்றிருந்தும் ஹஜ் செய்ய அதிக தாமதம் செய்கின்றார்கள்.

அதிகமான வயோதிகர்கள் ஹஜ் செய்கிற நாடுகளில் இந்தியாவும், இலங்கையும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

ஹஜ் என்பது விரைவாக செய்ய வேண்டிய அமல் என்பதையும், அதை தாமதப்படுத்தக் கூடாது என்பதையும் மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் நமக்கு உணர்த்துகின்றன.

பொதுவாக இஸ்லாம் வலியுறுத்திக் கூறியிருக்கிற எந்த ஒரு வணக்க, வழிபாட்டையும் தாமதப்படுத்துவது சில போது ரப்பின் கோபத்திற்கும், தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் எச்சரிக்கின்றது.

1.   ஹிஜ்ரத்…

ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்வது கடமையாக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்காவில் இருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து கொண்டிருந்தனர்.

ஆனால், சிலர் மட்டும் போகாமல் இப்ப போகலாம், அப்ப போகலாம் என தாமதித்துக் கொண்டிருந்தனர்.

அப்படி தாமதித்துக் கொண்டிருந்தவர்கள் குறித்து அல்லாஹ் கடுமையான கண்டனத்துடன் வசனங்களை இறக்கியருளினான்.

إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا فَأُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا (97) إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ سَبِيلًا (98) فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا (99)
(அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள்.

(அதற்கவர்கள்) நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்.

 எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.
அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.

ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.”                                          ( அல்குர்ஆன்: 4: 97 - 99 )

2.   ஜிஹாத்...

தபூக் யுத்தம் கடுமையான வெயில் காலத்தில் நடைபெற்ற யுத்தம். பெரிய அளவிலான பொருளாதார, வாகன, ஆயுத தேவைகளும் எதிரிகளுக்கு நிகரான எண்ணிக்கை கொண்ட படைப்பிரிவும் தேவைப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையோடு எதிர் கொள்ளப்பட்ட யுத்தம்.

அந்த யுத்தத்தில் கலந்து கொள்ளாமல், இன்று போகலாம், நாளை போகலாம் என்று காலம் கடத்திக்கொண்டு தாமதித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி கடுமையான கண்டனத்துடன் கூடிய வசனம் ஒன்றை அல்லாஹ் இறக்கியருளினான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ (38) إِلَّا تَنْفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (39)

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?.

மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது”.

நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.             ( அல்குர்ஆன்: 9: 38, 39 )

3.   நல் அமல்கள், 4. தான தர்மங்கள், 5. தவ்பா....

உலகில் வாழும் காலங்களில் நல் அமல்கள் செய்யாது, தான தர்மங்கள் செய்யாது, செய்த பாவங்களுக்கு தவ்பா செய்யாது கால தாமதம் செய்து கொண்டிருந்தவர்கள் மரண நேரத்தின் போது புலம்புவார்கள் என்று கூறும் இறைவன் அதற்கு எவ்வித மரியாதையும் தரப்படாது என்றும் எச்சரிக்கின்றான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு சென்று நான் நற்செயல் புரிந்து வருகின்றேன்!என்று கூறுவான். அப்போது, இவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கும் வெற்று வார்த்தைகள் தாம்!என்று கூறப்படும்”. (அல்குர்ஆன்: 23: 99)


وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், அந்த நேரத்தில் நல்வழியில் செலவு செய்யாதவர்என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!என்று கூறுவார்.

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும், கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை”.                               ( அல்குர்ஆன்: 63: 10 )

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள் பாவங்கள் புரிந்தவாறு வாழ்ந்து விட்டு மரணம் நெருங்கும் போது நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. மேலும், இறுதி மூச்சு வரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்கு துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்”.                                        ( அல்குர்ஆன்: 4: 18 )

6. தாமதப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தை உணர வேண்டும்...

وقال الإمام أحمد: حدثنا عبد الله بن محمد، ثنا أبو خالد الأحمر، عن الحجاج، عن الحكم، عن مقسم، عن ابن عباس: أن رسول الله بعث إلى مؤتة فاستعمل زيدا، فإن قتل زيد فجعفر، فإن قتل جعفر فابن رواحة، فتخلف ابن رواحة، فجمع مع النبي فرآه فقال له: «ما خلفك؟».
فقال: أجمع معك.
قال: «لغدوة أو روحة خير من الدنيا وما فيها».
وقال أحمد: ثنا أبو معاوية، ثنا الحجاج، عن الحكم، عن مقسم، عن ابن عباس قال: بعث رسول الله
عبد الله بن رواحة في سرية فوافق ذلك يوم الجمعة
قال: فقدم أصحابه وقال: أتخلف فأصلي مع رسول الله الجمعة ثم ألحقهم.
قال: فلما صلى رسول الله رآه فقال: «ما منعك أن تغدو مع أصحابك؟».
فقال: أردت أن أصلي معك الجمعة ثم ألحقهم.
فقال رسول الله صلى الله
«لو أنفقت ما في الأرض جميعا ما أدركت غدوتهم».
     
            அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த நபித்தோழர்களில் ஒருவராவார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூத்தா யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தளபதிகளாக மூன்று நபித்தோழர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

ஆரம்பமாக, ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார்! அவர் காயமுற்றால் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் இஸ்லாமியப் படை வீரர்கள் அடுத்த தளபதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறி படையை வழியனுப்பி வைத்தார்கள்.

படை புறப்பட்டுச் சென்ற நாள் வியாழன் மாலையாக இருந்தது. விடிந்தால் வெள்ளிக்கிழமை.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தளபதிகளை நியமிக்கும் அந்த விதத்தைப் பார்த்தே நிச்சயம் தாம் மூத்தா யுத்தத்தில் ஷஹீதாகி விடுவோம் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஆகையால், எப்படியும் நாம் ஷஹீதாகி விடுவோம். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை இனி பார்க்க முடியாது. கடைசியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பின் நின்று ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டுச் செல்வோம்என்று மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.

ஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சொல்லப்படவே, நபி {ஸல்} அவர்கள் தம்மைப் பார்த்து விடாதவாறு ஒரு ஓரமான இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

தொழுகை முடிந்து வெளியே செல்லும் போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைப் பார்த்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அழைத்துநேற்றே நான் யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பி வைத்தேனே! ஏன் நீங்களும் அவர்களுடன் செல்லாமல் இருந்து விட்டீர்? உம்மை செல்ல விடாமல் செய்த காரியம் எது?” என்று வினவினார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! இறுதியாக உங்களுக்குப் பின்னால் நின்று ஜும்ஆ தொழுகையை தொழுதிடும் ஆவல் தான் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. இதோ அல்லாஹ்வின் தூதரே! யுத்த களத்தை நோக்கித் தான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். விரைவாகச் சென்று வழியில் படைப்பிரிவில் சேர்ந்து கொள்வேன்என்று பதில் கூறினார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்அப்துல்லாஹ்வே! பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட,  முன்னால் சென்று விட்ட படைப்பிரிவினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள முடியாதே!” என்று நபி {ஸல்} அவர்கள் பரிவோடு கூறினார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு நான் இருக்கும் ஒரு காலைப் பொழுதோ, அல்லது மாலைப் பொழுதோ இந்த உலகமும், உலகின் அனைத்துச் செல்வங்களும் எனக்கு கிடைப்பதை விட மேலாக நான் கருதுகின்றேன்!” என்று கூறி, விடை பெற்று  யுத்தகளம் நோக்கி விரைந்தார்கள்.                      ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

لما اصيب القوم قال رسول الله صلى الله عليه وسلم - فيما بلغني - : " أخذ زيد بن حارثة الراية فقاتل بها حتى قتل شهيداً، ثم أخذها جعفر بن أبي طالب فقاتل حتى قتل شهيداً " . ثم صمت رسول الله صلى الله عليه وسلم حتى تغيّرت وجوه الأنصار، وظنوا أنه قد كان في عبد الله بن رواحة ما يكرهون، فقال: ثم أخذه عبد الله بن رواحة فقاتل حتى قتل شهيداً، ثم لقد رفعوا لي في الجنة " فيما يرى النائم " على سرر من ذهب فرأيت في سرير عبد الله بن رواحة ازوراراً عن سريري صاحبيه، فقلت: عم هذا؟ فقيل لي: مضياً، وتردد عبد الله بعض التردد، ثم مضى فقتل

மூத்தா போரில் சஹாபாக்கள் தாக்கப்பட்ட போது மதீனாவில் இருந்த தோழர்களிடம் நபி {ஸல்} அவர்கள் சொன்னார்கள்: “இப்போது ஸைது பின் ஹாரிஸா இஸ்லாமிய கொடியை எடுத்தார் சண்டையிட்டார் அவர் கொல்லப்பட்டு விட்டார்.

பிறகு ஜஃபர் பின் அபீ தாலிப் கொடியை எடுத்தார் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். இத்துடன் நபி {ஸல்} அவர்கள் மெளனமாகி விட்டார்கள் இதனால் அன்சாரிகளின் முகம் சோகமாக மாறியது தளபதி அப்துல்லாஹ் பின் ரவாஹா விஷயத்தில் வெறுக்கும்  படியான ஏதேனும் ஒன்றை நபி {ஸல்} அவர்கள் சொல்லிவிடுவார்களோ என்று எண்ணினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்னார்கள். பிறகு இப்னு ரவாஹா கொடியை எடுத்து யுத்தம் செய்கிறார் அவரும் கொல்லப்பட்டார் இப்போது அந்த  பேரின் புனித ஆன்மாவும் தங்க கட்டிலில் வைத்து சுவனத்தின் பக்கம் எடுத்து செல்லப்படுகிறது.

அதில் இப்னு ரவாஹா அவர்களின் கட்டிலின் கால் கொஞ்சம் வலைந்திருப்பதை கண்டேன். காரணம் என்னவெனில் ஸைது, ஜஃபர் இருவரும் நான் சொன்னவுடன் தாமதிக்காமல் போருக்கு போனார்கள் ஆனால் இப்னு ரவாஹா அவர்கள் கொஞ்சம் தாமதித்து சென்றார்கள்.”          (  நூல் : உஸ்துல் ஃகாபா  )

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் வார்த்தையை எந்த அளவுக்கு மதித்து நடப்பவர்கள் என்றால்…?

عن عبد الرحمن بن أبي ليلى، أن عبد الله بن رواحة رضي الله عنه أتى النبي صلى الله عليه وسلم ذات يوم وهو يخطب، فسمعه وهو يقول: "اجلسوا" ، فجلس مكانه خارجًا عن المسجد حتى فرغ النبي صلى الله عليه وسلم من خطبته فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال له: "زادك الله حرصًا على طواعية الله وطواعية رسوله" .

அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரலி) கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு நாள் மிம்பரில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது, பேச்சின் ஊடாக எல்லோரும் அமருங்கள்! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அப்போது, பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் காதில் இந்த ஆணை விழுந்ததும், வந்த வழியிலேயே அப்படியே அமர்ந்து விட்டார்கள்.

நபி {ஸல்} அவர்கள் உரை நிகழ்த்தி முடித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் குறித்து சொல்லப்பட்டதும்அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்ற விஷயத்தில் அவர் பேரார்வம் கொண்டவராக இருக்கவே நான் காண்கின்றேன். அல்லாஹ் அவருக்கு அவரின் பேரார்வத்தை அதிகப்படுத்தித் தருவானாக!” என்று வாழ்த்திப் பேசி துஆ செய்தார்கள்.

                                                 ( நூல்: இப்னு அஸாக்கிர் )

ஆனாலும், தாமதப்படுத்திய ஒரே காரணத்திற்காக எவ்வளவு பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது என்பதை நாம் உணர வேண்டும்.

 நன்மையான எந்தவொரு அமலையும் செய்ய ஆர்வமும், அதை நோக்கிய செயலாக்கம் விரைவாக இருக்க வேண்டும்

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனின் பல இடங்களில் நன்மையான காரியங்களை குறிப்பிடும் போது “ ஸாரிஊ, ஸாபிகூ, ஃபஸ்தபிகூ, ஃபஃபிர்ரூ “ விரைந்து செயல் படுங்கள்! வேகமாக முன்னேறுங்கள்! விரண்டோடி வாருங்கள்!” என்று மனித சமூகத்தை நோக்கி அறை கூவல் விடுக்கின்றான்.

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ وَاللَّفْظُ لِأَبِي الطَّاهِرِ قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى أَحَدٍ يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ ح و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ كِلَاهُمَا عَنْ الزُّهْرِيِّ بِإِسْنَادِ يُونُسَ وَمَعْنَى حَدِيثِهِ

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, “அல்லாஹ்வின் அடியாரே! இது பெரும் நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்!” என்று அழைக்கப்படுவார்.

தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள்ஜிஹாத்எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள்ரய்யான்எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள்ஸதகாஎனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, அங்கிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாக அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்ஆமாம்நீரும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என நான் ஆசிக்கின்றேன். ஒருவராக இருப்பீர் என நான் நம்புகின்றேன்என்று கூறினார்கள்.                                            ( நூல்:முஸ்லிம் )

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ
 قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :«مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ:«فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ:«فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :«مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ» .
أخرجه مسلم .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் எங்களிடம், “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

இன்றைய தினம் ஓர் உங்களில் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

இன்றைய தினம் உங்களில் ஒரு நோயாளியைச் சந்தித்து நலம் விசாரித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்எந்த மனிதர் நல்லறங்களான இவையனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லைஎன்றார்கள்.                       ( நூல்: முஸ்லிம் )

இந்த நிலை வருவதற்கு முன்பாக விழித்துக் கொள்வோம்!!

وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ (54) وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ (55) أَنْ تَقُولَ نَفْسٌ يَاحَسْرَتَا عَلَى مَا فَرَّطْتُ فِي جَنْبِ اللَّهِ وَإِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِينَ (56) أَوْ تَقُولَ لَوْ أَنَّ اللَّهَ هَدَانِي لَكُنْتُ مِنَ الْمُتَّقِينَ (57) أَوْ تَقُولَ حِينَ تَرَى الْعَذَابَ لَوْ أَنَّ لِي كَرَّةً فَأَكُونَ مِنَ الْمُحْسِنِينَ (58)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

"அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே"! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

அல்லது "அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களின் - ஒருவனாகி இருப்பேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;”      ( அல்குர்ஆன்: 39: 54 – 58 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக! உடல் ஆரோக்கியத்தோடு மன நிறைவோடு, இன்பத்தோடு ஹஜ்ஜை நிறைவேற்றுகிற தவ்ஃபீக்கை தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!