Wednesday 10 December 2014

இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவு வணக்கம்!



இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவு வணக்கம்!





வணக்க வழிபாடுகள் என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் ஈருலக வாழ்க்கைக்கான உறுதியான அஸ்திவாரமாகும்.

இறைநம்பிக்கை, இறையச்சம், இறை அடிமைத்தனம் போன்ற உயர்ந்த படித்தரங்களை அடைந்து கொள்வதற்கான ஊன்றுகோலாகும்.

சில நேரங்களில் இந்த இபாதத்களின் மீது ஓர் முஃமின் கொண்டிருக்கிற தொடர்பும், அதை நிறைவேற்றுவதில் அவன் காட்டுகிற ஆர்வமும் வல்ல நாயனின் வளமான அருளுக்குச் சொந்தக்காரனாக மாற்றிவிடுகின்றது.

மேலும், உரிய நேரங்களில் ஒழுங்களைப் பேணி மனத்தூய்மையுடன் வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்துகிற போது, இறைவனுடனான தொடர்பில் நெருக்கத்தையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடைந்திடும் பேற்றினை பெற்றுத் தருகின்றது.

இபாதத்களில் முதலிடம் வகிப்பது அன்றாடம் நிறைவேற்றப்படும் ஐங்காலத் தொழுகைகளாகும்.

அதற்கு அடுத்த அந்தஸ்தைப் பெறுவது இரவு நேரங்களில் நிறைவேற்றப் படும் இனிய இபாதத்களாகும்.

ஆம்! மற்றெந்த இபாதத்களின் மூலமும் கிடைத்திடாத எல்லாப் பேறுகளையும், இறை நெருக்கத்தையும் ஓர் முஃமின் இரவு வணக்கங்களின் மூலம் அடைந்து கொள்கின்றான்.

இரவும்பகலும்

وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ()

அவன் தன்னுடைய கருணையினால் தான் உங்களுக்காக பகலையும், இரவையும் படைத்திருக்கின்றான். இரவில் நீங்கள் அமைதி பெற வேண்டும். மேலும், பகலில் அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேட வேண்டும்; அதனால் நீங்கள் படைத்த இறைவனுக்கு நன்றியுடையோராய் திகழக்கூடும் என்பதற்காக!”                     ( அல்குர்ஆன்:28:73 )

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا ()

மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்”.                              ( அல்குர்ஆன்:25:47 )

ஆக இரவென்பது அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு வழங்கிய மாபெரும் அருட்கொடையாகும்.

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இரவை மிகச் சரியான நோக்கத்திற்காகவோ, படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவோ பயன் படுத்துவதில்லை.

பொதுவாக இரவு தான் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையேயான தொடர்பை துரிதப்படுத்துகின்றது.

அல்லாஹ்வோடு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. படிப்பினைகளையும், நன்றியுணர்வையும் ஏற்படுத்துகின்றது.

 ஆனால், மனித சமூகமோ இரவை ஓய்வெடுக்கும் ஒரு சாதனமாகவே, தூங்குவதற்கென்றே படைக்கப்பட்ட ஓர் கொடையாகவே இது வரை கருதி வந்திருக்கின்றது.

ஆனால், நல்லோர்களும் இறையடியார்களும் இரவை எப்படிக் கருதுவார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிக்கும் போது...

وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து வரக்கூடியதாக அமைத்தான் – படிப்பினை பெற நாடும் அல்லது நன்றி உடையோராக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதருக்காகவும்!”

قال تعالى: { تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ}  [السجدة:16]. قال مجاهد والحسن: يعني قيام الليل.

وقال ابن كثير في تفسيره: ( يعني بذلك قيام الليل وترك النوم والاضطجاع على الفرش الوطيئة ).
وقال عبد الحق الأشبيلي: ( أي تنبو جنوبهم عن الفرش، فلا تستقر عليها، ولا تثبت فيها لخوف الوعيد، ورجاء الموعود ).

وقد ذكر الله عز وجل المتهجدين فقال عنهم:
{كَانُوا قَلِيلاً مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ * وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ } [الذاريات:18،17] قال الحسن: كابدوا الليل، ومدّوا الصلاة إلى السحر، ثم جلسوا في الدعاء والاستكانة والاستغفار.

وقال تعالى: {
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاء اللَّيْلِ سَاجِداً وَقَائِماً يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُوا الْأَلْبَابِ} [الزمر:9]. أي: هل يستوي من هذه صفته مع من نام ليله وضيّع نفسه، غير عالم بوعد ربه ولا بوعيده؟!

ஆகவே, அல்லாஹ்வின் அருளும் வளமும், சாந்தியும் தவழ்கிற இரவு நேரங்களை முழுமையாக பயன் படுத்திட அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்!!

இரவில் தொழுவதின் சிறப்பு...

فعن أبي هُرَيرةَ - رضي الله عنه - قال: قال رسولُ الله - صلَّى الله عليه وسلَّم -: ((أفضلُ الصيام بعدَ رمضان شهر الله المُحرَّم، وأفضلُ الصلاةِ بعدَ الفريضة صلاةُ اللَّيْل)؛ رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: “ரமழானுடைய நோன்புக்குப் பின்னால் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் (ஆஷூரா) நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின்னால் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                           ( நூல்:முஸ்லிம் )

1. முஃமினின் சிறப்பு.

وعن سَهْل بن سعد - رضي الله عنه - قال جاءَ جبريلُ إلى النبيِّ  - صلَّى الله عليه وسلَّم - فقال يا مُحمَّد، عِشْ ما شِئتَ فإنَّك ميِّت، واعملْ ما شئتَ فإنَّك مَجْزيٌّ به، وأحْبِبْ مَن شئتَ فإنَّك مُفارقُه، واعلمْ أنَّ شرفَ المؤمن قيامُ الليل، وعِزَّه استغناؤُه عن الناس))؛
(4278) “الترغيب والترهيب وحسَّن إسنادَه المنذريُّ في
 رواه الطبراني

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தந்து....

“முஹம்மது {ஸல்} அவர்களே! நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள்.

நீங்கள் விரும்பியவாறு அமல் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் அமல் செய்த அள்விற்கு அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள்.

நீங்கள் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களின் மீது நேசம் கொள்ளுங்கள்! ஏனெனில், ஒரு நாள் நிச்சயம் அவர்களை விட்டும் நீங்கள் பிரிந்து விடுவீர்கள்.

முஹம்மத் {ஸல்} அவர்களே! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! ஓர் இறை நம்பிக்கையாளனின் சிறப்பு என்பது இரவிலே நின்று வணங்குவதின் மூலம் தான் கிடைக்கிறது. ஓர் இறைநம்பிக்கையாளனின் கண்ணியம் என்பது பிற மனிதர்களிடம் இருந்தும் தேவையற்றவனாக வாழ்ந்திடும் போது தான் வழங்கப்படுகின்றது”. என்று கூறியதாக, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
                                ( நூல்: தபரானீ, அத் தர்ஃகீப் – வத் தர்ஹீப் )

2. நிம்மதியுடன் சுவனத்தில் நுழைதல்.

وعن عبدِالله بن سَلاَم - رضي الله عنه
 قال: لمَّا قَدِم رسولُ الله - صلَّى الله عليه وسلَّم - المدينةَ، انجفَل الناسُ إليه، فجئتُ في الناس لأنظرَ إليه، فلمَّا استثبتُّ وجهَ رسولِ الله - صلَّى الله عليه وسلَّم - عَرَفْتُ أنَّ وجهه ليس بوجْهِ كذَّاب، وكان أوَّل شيءٍ تَكلَّم به أن قال: ((أيُّها الناس، أفْشُوا السلام، وأطْعِموا الطعام، وصَلُّوا والناس نِيام، تَدْخلوا الجَنَّةَ بسلام))؛ رواه الترمذي وصحَّحه

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா நகருக்குள் நுழைந்த போது மக்களெல்லாம் நபிகளாரைத் தரிசிக்க சாரை சாரையாய் சென்ற வண்ணம் இருந்தனர்.

நானும், அவர்களில் ஒருவனாக இருந்தேன். அப்போது முதன் முதலாக நான் நபி {ஸல்} அவர்களைக் கண்ணுற்றேன். அவர்களின் முகம் ஒளியால் இலங்கிற்று. அப்போது நான் நன்றாக விளங்கிக் கொண்டேன். பொய்யர்களின் முகம் ஒரு போதும் ஒளிக்கற்றை போல் இலங்காது. (ஆகையால் முஹம்மத் {ஸல்} அவர்கள் பொய்யர் இல்லை. அவர் உண்மையான நபி தான் என்று)

நபி {ஸல்} அவர்கள் தன் முன் தோன்றியிருந்த மக்கள் திரள் நோக்கி முதன் முதலாகச் சொன்ன திருவாக்கியம் எது தெரியுமா? “மக்களே! அல்லாஹ்வின் சாந்தியை தரக்கூடிய ஸலாத்தைப் பரப்புங்கள்! பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும் போது கண்விழித்து எழுந்து படைத்த ரப்பை தொழுங்கள்! நீங்களெல்லாம் நிம்மதியுடன் சுவனத்தில் நுழைவீர்கள்!” என்று தான் நபி {ஸல்} கூறினார்கள்.                                                   ( நூல்: திர்மிதீ )

3. முத்தான மூன்று சோபனங்கள்.

فعَن أبي أُمامة الباهِليِّ - رضي الله عنه - عن رسولِ الله  - صلَّى الله عليه وسلَّم - قال: ((عليكم بقيامِ اللَّيل، فإنَّه دأبُ الصالحين قبْلَكم، وهو قُرْبة لكم إلى ربِّكم، ومكفرة للسيِّئات، ومنهاةٌ عن الإثم)) رواه ابنُ خزيمة

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரவில் நின்று வணங்குவதை நீங்கள் கடைபிடித்து வாருங்கள்! ஏனெனில், அது உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லோர்கள் பலரின் சிறந்த நடைமுறையாகும்.

அதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தையும், பாவங்களுக்குப் பரிகாரத்தையும், தீய செயல்கள் செய்வதிலிருந்து பாதுகாப்பையும் பெறுவீர்கள்”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு ஃகுஸைமா )

4. சுவனத்து அழகிய மாளிகையின் பிரவேசம்.

وقال النبي : { في الجنة غرفة يرى ظاهرها من باطنها، وباطنها من ظاهرها } فقيل: لمن يا رسول الله؟ قال: { لمن أطاب الكلام، وأطعم الطعام، وبات قائماً والناس نيام } [رواه الطبراني والحاكم وصححه الألباني].

அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “சுவனத்தில் ஒரு மாளிகை உண்டு. அதன் சிறப்பம்சம் என்னவெனில், உள்ளே உள்ளவை வெளியேயும், வெளியில் உள்ளவை உள்ளேயும் காட்சியளிக்கும்” என்று நபிகளார் கூறியபோது...

நபித்தோழர்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இத்தகைய சிறப்பு வாய்ந்த மாளிகையை அல்லாஹ் யாருக்கு வழங்குவான்” என வினவினார்கள்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் “இந்த மாளிகையை “மக்களுக்கு மத்தியில் தூய்மையோடு பேசியும், பசித்தவர்களுக்கு உணவளித்தும், மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் விழித்தெழுந்து தொழுதும் வந்தவர்களுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளான்” என்று பதிலளித்தார்கள். ( நூல்: ஹாக்கிம் )

5. சிறப்பானவர்களின் பட்டியலில் பெயர் இடம் பெறுதல்.

وقال : { من قام بعشر آيات لم يُكتب من الغافلين، ومن قام بمائة آية كتب من القانتين، ومن قام بألف آية كتب من المقنطرين } [رواه أبو داود وصححه الألباني]. والمقنطرون هم الذين لهم قنطار من الأجر.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: “எவர் இரவில் தொழுகையில் ஈடுபட்டு பத்து ஆயத்துகள் ஓதுவாரோ, அவர் அவ்விரவில் (அல்லாஹ்வை மறந்த) மறதியாளர்களில் எழுதப்படமாட்டார்.

எவர் நூறு ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் வணக்கசாலிகளின் பட்டியலில் இடம் பெறுவார். எவர் ஆயிரம் ஆயத்துகளை ஓதுவாரோ அவர் (கின்தார்) குவியலுக்குச் சமமான நன்மையைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவார்”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                ( நூல்: இப்னு ஃகுஸைமா )

6. இரு வகையான நற்பேறுகள்.

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ () فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், (நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில்,) அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் (இறை வணக்கத்திற்காக) எழுந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

மேலும், அவர்களுக்கு நாம் வழங்கியிருப்பதிலிருந்து தாராளமாக செலவும் செய்கின்றனர். அவர்களின் செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.”                               ( அல்குர்ஆன்:32:16,17 )

7. முகப் பொழிவு கிடைத்தல்.

حدثنا أبو الفضل العباس بن يوسف الشكلي قال حدثنا أيوب بن سليمان الصغدي قال حدثنا ثابت بن موسى قال حدثنا شريك بن عبد الله عن الأعمش عن أبي سفيان عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من كثرت صلاته بالليل حسن وجهه بالنهار.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் இரவிலே அதிகமாக நின்று தொழுவாரோ பகலிலே அவரின் முகத்தை அல்லாஹ் பொழிவுடன் இலங்கச் செய்கின்றான்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

8. அல்லாஹ்வை மகிழ்வுறச் செய்யும் பாக்கியம் கிடைத்தல்.

أخبرنا أبو بكر جعفر بن محمد الفريابي قال حدثنا أبو كريب محمد بن العلاء الهمداني قال حدثنا يحيى بن آدم قال حدثنا إسرائيل عن أبي إسحاق عن أبي عبيدة وأبي الكنود عن عبد الله بن مسعود قال يضحك الله عز وجل إلى رجلين رجل قام في جوف الليل وأهله نياما فتطهر ثم قام يصلي فيضحك الله إليه ورجل لقي العدو فانهزم أصحابه وثبت حتى رزقه الله عز وجل الشهادة.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ் இரு மனிதர்களின் செயல் கண்டு மகிழ்கின்றான். ஒருவர், நடுநிசி நேரத்தில் வீட்டில் உள்ளவர்களெல்லாம் உறங்கிய பின்னர் எழுந்து அல்லாஹ்வை வணங்குபவர். மற்றொருவர், போர்க்களத்தில் எதிரிகளின் பலமான தாக்குதலைக் கண்டு தம்மோடு வந்தவர்கள் புறமுதுகிட்டி ஓடியும், அஞ்சா நெஞ்சத்துடன் போராடி அல்லாஹ்விற்காக தம் இன்னுயிரைத் தந்தவர்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

9. கோடைகாலமும் வசந்தமாகுதல்.

حدثنا أبو عبد الله أحمد بن الحسن بن عبد الجبار الصوفي قال حدثنا هارون بن معروف قال حدثنا عبد الله بن وهب عن عمرو الحارث عن دراج عن أبي الهيثم عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن قصر نهاره فصامه وطال ليله فقامه.

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “கோடைகாலம் கூட ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு வசந்தகாலம் தான். ஓர் முஃமின் தன் பகலை நோன்பு வைப்பதன் மூலம் சுறுக்கி, இரவில் வணக்க வழிபாடுகளால் நீட்டுகிற போது”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

10. மறுமையில் சீமானாக

وأخبرنا حامد بن شعيب البلخي قال حدثنا أبو عمر المقري قال حدثنا سنيد بن داود عن يوسف بن محمد بن المنكدر عن أبيه عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم قالت أم سليمان بن داود يا بني لا تكثر النوم بالليل فإن كثرة النوم بالليل يترك الرجل فقيرا يوم القيامة.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயர் தம் மகனார் சுலைமான் (அலை) அவர்களுக்கு உபதேசம் செய்கிற போதுமகனே! இரவில் அதிக நேரம் உறங்காதே! இறைவழிபாட்டில் கழிக்காமல் நீ உறங்குவது நாளை மறுமையில் அனைவரின் முன்பாக உன்னை வறியவனாக ஆக்கிவிடும்”. என்று கூறியதாக நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


நபி {ஸல்} அவர்களின் இரவு வணக்கம்

وعن عائشة رضي الله عنها قالت: { كان النبي يقوم من الليل حتى تتفطر قدماه. فقلت له: لِمَ تصنع هذا يا رسول الله، وقد غُفر لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال: أفلا أكون عبداً شكوراً؟ } [متفق عليه].

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் இரு பாதங்கள் வீங்க நின்று தொழுவார்கள். நான்அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தான் அல்லாஹ்வால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக இருக்கின்றீர்களே! ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றீர்கள்?” என்று கேட்டேன்.

அப்போது, அண்ணலார்நான் அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?” என்று பதில் கூறினார்கள்.

وعن حذيفة قال: { صليت مع النبي ذات ليلة، فافتتح البقرة، فقلت: يركع بها، ثم افتتح النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسلاً، إذا مرّ بآية فيها تسبيح سبّح، وإذا مرّ بسؤال سأل، وإذا مر بتعوّذ تعوذ... الحديث } [رواه مسلم].

ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் இரவு நான் நபி {ஸல்} அவர்களுடன் இரவில் தொழுதேன். அப்போது, அண்ணலார் ஒரே ரக்அத்தில் சூரா பகரா, அந்நிஸா, ஆலுஇம்ரான் ஆகிய சூராக்களை ஓதினார்கள்.

ஒவ்வொரு வசனங்களைக் கடந்து செல்லும் போது அதில் தஸ்பீஹ் சம்பந்தமான ஆயத் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள். துஆவுடைய வசனம் வந்தால் துஆ கேட்பார்கள். பாதுகாப்பு சம்பந்தமான வசனம் வந்தால் பாதுகாப்பு கேட்பார்கள்.

وعن ابن مسعود قال: { صليت مع النبي ليلة، فلم يزل قائماً حتى هممت بأمر سوء. قيل: ما هممت؟ قال: هممت أن أجلس وأَدَعَهُ ! } [متفق عليه].

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் இரவு நான் நபிகளாருடன் இரவுத் தொழுகையில் ஈடுபட்டேன். நீண்ட நேரம் நின்று தொழுதார்கள். அப்போது நான் சீக்கிரமாக தொழுகையை அண்ணலார் முடித்து விட மாட்டார்களா?” என நினைத்தேன்.

நபித்தோழர்களின் இரவு வணக்கம்..

وروت عائشة رضي الله عنها: أن النبي صلى الله عليه وسلم سمع صوت عباد بن بشر، فقال: " اللهم ارحم عباداً "

ابْنُ إِسْحَاقَ: عَنْ مُحَمَّدِ بنِ جَعْفَرِ بنِ الزُّبَيْرِ، عَنْ عَبَّادِ بنِ عَبْدِ اللهِ بنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
تَهَجَّدَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فِي بَيْتِي، فَسَمِعَ صَوْتَ عَبَّادِ بن بِشْرٍ، فَقَالَ: (يَا عَائِشَةُ! هَذَا صَوْتُ عَبَّادِ بنِ بِشْرٍ).
قُلْتُ: نَعَمْ.
قَالَ: (اللَّهُمَّ اغْفِرْ لَهُ (2)).

ஒரு நாள் இரவு நபி {ஸல்} அவர்கள் தமதருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோடு வீட்டிலே அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென அண்ணலாரின் முகம் அப்படியே மலர் போல் மலர்ந்து இலங்கியது. மஸ்ஜிதுன் நபவீயில் இருந்து ஓர் அழகிய குரல் அண்ணலாரின் வதனம் இலங்கிட காரணமாய் அமைந்தது.

அங்கே யார்? அப்பாத் இப்னு பிஷ்ர் அவர்களா குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கின்றார்? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்! அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அன்பாய் ஆணையிடுகின்றார்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்.

ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அப்பாத் இப்னு பிஷ்ர் அவர்களே தான். அல்லாஹ் அவரின் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானாக! இன்னொரு சந்தர்ப்பத்திலே அல்லாஹ் அவருக்கு அருள் பாளிப்பானாக! இது நபிகளாரின் சுந்தர வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தை எத்தகைய சோபனத்திற்குரிய துஆ!

ஓர் இறை நம்பிக்கையாளனின் வாழ்வில் இதனை விட வேறென்ன உயர்ந்த பாக்கியம் இருக்க முடியும்.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு நடை பெற்ற படையெடுப்புக்கு “தாதுர் ரிகாவு” எனும் பெயர். இந்த யுத்தத்தில் தான் யுத்த கால தொழுகை முறை அறிமுகம் ஆனது.

நபித்தோழர்களின் ஈமானை பரிசோதிக்கும் முகமாக அமைந்து விட்டதோ எனும் எண்ணுமளவிற்கு பல்வேறு சோதனைகள் அங்கே நடைபெற்றன.

முறைவைத்து தான் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மொத்த படை வீரர்கள் 700 நபர்கள். ஆறு நபருக்கு ஒரு ஒட்டகம் வீதம் பயணத்திற்கு பயன் படுத்தப் பட்டது.

எந்த அளவுக்கெனில், நபித்தோழர்களின் பலருடைய நகங்களெல்லாம் கிழிந்து விழுந்து விட்டன.

பாறைகளையும், பாலைகளையும் கடந்து சென்றதால் பலருக்கு காயம் ஏற்பட்டு தங்களது துணிகளை கிழித்து காயத்திற்கு ஒட்டுப்போட்டுக்கொண்டனர்.

ஆதலால், அந்தப் போருக்கே தாதுர் ரிகாவு – ஒட்டுத்துணிப்போர் என பெயர் வழங்கப்பட்டது.

பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே அந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முஸ்லிம்கள் திரும்பி விட்டனர்.

بعد أن فرغ رسول الله والمسلمين من غزوة ذات الرقاع نزلوا مكانا يبيتون فيه، واختار الرسول للحراسة نفرا من الصحابة يتناوبونها وكان منهم عمار بن ياسر وعباد بن بشر في نوبة واحدة.

ورأى عباد صاحبه عمار مجهدا، فطلب منه أن ينام أول الليل على أن يقوم هو بالحراسة حتى يأخذ صاحبه من الراحة حظا يمكنه من استئناف الحراسة بعد أن يصحو.
ورأى عباد أن المكان من حوله آمن، فلم لا يملأ وقته اذن بالصلاة، فيذهب بمثوبتها مع مثوبة الحراسة..؟!
وقام يصلي..

واذ هو قائم يقرأ بعد فاتحة الكتاب سور من القرآن، احترم عضده سهم فنزعه واستمر في صلاته..!

ثم رماه المهاجم في ظلام الليل بسهم ثان نزعه وأنهى تلاوته..
ثم ركع، وسجد.. وكانت قواه قد بددها الاعياء والألم، فمدّ يمينه وهو ساجد الى صاحبه النائم جواره، وظل يهزه حتى استيقظ..
ثم قام من سجوده وتلا التشهد.. وأتم صلاته.

وصحا عمار على كلماته المتهدجة المتعبة تقول له:
" قم للحراسة مكاني فقد أصبت".

ووثب عمار محدثا ضجة وهرولة أخافت المتسللين، ففرّوا ثم التفت الى عباد وقال له:
" سبحان الله..
هلا أيقظتني أوّل ما رميت"؟؟
فأجابه عباد:

" كنت أتلو في صلاتي آيات من القرآن ملأت نفسي روعة فلم أحب أن أقطعها.
ووالله، لولا أن أضيع ثغرا أمرني الرسول بحفظه، لآثرت الموت على أن أقطع تلك الآيات التي كنت أتلوها"..!!

வழியில் ஓரிடத்தில் இளைப்பாருவதற்காக நபிகளார் படையினரை அனுமதித்தார்கள். இந்த இரவில் நமக்காக காவல் காற்பது யார்? என்று நபி {ஸல்} அவர்கள் வினவிய போது

முஹாஜிர்களில் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் முன் வந்தனர்.

நபிகளாரும், நபித்தோழர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவின் ஒரு பகுதி கழிந்ததும் அப்பாத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் நீங்கள் தூங்கிக் கொள்ளுங்கள். நான் காவல் காக்கின்றேன். பின்னர் நான் உறங்குகின்றேன் நீங்கள் காவல் காத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்ச நேரம் போனது அவர்களின் மனம் முழுவதும் இந்த ரம்மியமான இரவு வீணாகி விடக்கூடாது. பேசாமல் சிறிது நேரம் தொழுது விடுவோம் என ஆசை கொண்டது.

தொழுகைக்கு தக்பீர் கட்டி நின்றார்கள். ஃபாத்திஹா வுக்குப் பின்னர் சூரா கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார்கள்.

பின்னால், வேவு பார்த்து வந்த எதிரி ஒருவன் அப்பாத் அவர்களின் மீது அம்பொன்றை எய்தான். பிடுங்கி தூர எறிந்து விட்டு தொழுகையை தொடர்ந்தார்கள்.

மீண்டும் ஒரு அம்பு, மீண்டும் ஒரு அம்பு என மூன்று அம்புகள் எய்யப்பட்டது. ஆனாலும் அசராமல் பிடுங்கி எறிந்து விட்டு தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு அம்மார் (ரலி) அவர்களை எழுப்பினார்கள்.

எழுந்து பார்த்த அம்மார், அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.

ஏன் முதல் முறை நீங்கள் தாக்கப்படும் போதே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? எனக் கேட்டார்கள்.

தொழுகையில், குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். இடையில் நிறுத்த என் மனம் விரும்ப வில்லை.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன் அம்மாரே! நான் குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதை விட மரணித்து போவதையே விரும்பினேன்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் படைக்கு காவலாக இருக்கும் படி கட்டளை இட்டிருந்ததால், என் மரணம் படைக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என அஞ்சினேன்என்றார்கள்.

       (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல்மஃகாஸீ லில் வாகிதீ)
قال عمر بن الخطاب - رضي الله عنه -: "لولا ثلاث ما أحببت العيش في هذه الدنيا: الغزو في سبيل الله، ومُكَابدة الساعات من الليل، ومُجَالسة أقوام ينتقون أطايب الكلام؛ كما يُنْتَقَى أطايب التمر".

உமர் (ரலி) அவர்கள் சொல்வார்களாம்: “மூன்று காரியம் மாத்திரம் இல்லை என்று சொன்னால் நான் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒரு போதும் விரும்பியிருக்க மாட்டேன். 1. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது. 2. இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது. 3. நல்லோர்களின் சபையில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் வாழ்வியல் தாக்கம்.” ( நூல்: முஃக்தஸர் கியாமுல்லைல் லில் மர்வஸீ )

وفي موطأ مالك عن عبدالله بن عمر - رضي الله عنهما - قال: كان عمرُ يصلِّي في الليل، حتى إذا كان من آخرِ الليل أيقَظ أهلَه وقرَأ:
﴿ وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُك
َ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى[طه: 132]

உமர் (ரலி) அவர்கள் இரவிலே வணக்கவழிபாடுகளை முடித்து விட்டு, இரவின் கடைசி பகுதியில் தம் வீட்டாரை இபாதத்களை செய்ய எழுப்புவார்களாம். பின்னர்நபியே! உமது வீட்டாரை தொழுமாறு ஏவுவீராக! இன்னும், நீரும் அதை முறையாகக் கடைபிடித்து வருவீராக! ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு உம்மிடம் நாம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், நல்ல முடிவு இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது.” எனும் வசனத்தை ஓதுவார்கள்.

மேன்மக்களின் இரவு வணக்கம்..

قال ابن الجوزي: واعلم أن السلف كانوا في قيام الليل على سبع طبقات
الطبقة الأولى:كانوا يحيون كل الليل، وفيهم من كان يصلي الصبح بوضوء العشاء.
الطبقة الثانية: كانوا يقومون شطر الليل.
الطبقة الثالثة: كانوا يقومون ثلث الليل، قال النبي : {أَحَبُّ الصَّلاةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صَلاةُ دَاوُدَ عَلَيْهِ السَّلامُ ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ ، وَيَقُومُ ثُلُثَهُ ، وَيَنَامُ سُدُسَهُ ، وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صَوْمُ دَاوُدَ كَانَ يَصُومُ يَوْمًا ، وَيُفْطِرُ يَوْمًا} [متفق عليه]
الطبقة الرابعة: كانوا يقومون سدس الليل أو خمسه.
الطبقة الخامسة: كانوا لا يراعون التقدير، وإنما كان أحدهم يقوم إلى أن يغلبه النوم فينام، فإذا انتبه قام.
الطبقة السادسة: قوم كانوا يصلون من الليل أربع ركعات أو ركعتين.
الطبقة السابعة: قوم يُحيون ما بين العشاءين، ويُعسِّـلون في السحر، فيجمعون بين الطرفين. وفي صحيح مسلم أن النبي قال: { إن في الليل لساعة لا يوافقها عبد مسلم يسأل الله فيها خيراً إلا آتاه، وذلك كل ليلة }.
அல்லாமா இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “மேன்மக்களான நல்லோர்களின் இரவு வணக்கம் என்பது ஏழு படித்தரங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.”

1. சிலர்கள் முழு இரவையும் இபாதத்களிலேயே கழிப்பார்கள். எந்த அளவுக்கெனில் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹ் தொழுகையைத் தொழுவார்கள்.

صلى سيد التابعين سعيد بن المسيب – رحمه الله – الفجر خمسين سنة بوضوء العشاء وكان يسرد الصوم
தாபியீன்களின் தலைவர் என்று அறியப்படுகிற ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள் ஐம்பதாண்டு காலம் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹ் தொழுதார்கள்.


قال محمد بن المنكدر رحمه الله : كابدت نفسي أربعين عاماً ( أي جاهدتها وأكرهتها على الطاعات ) حتى استقامت لي
முஹம்மத் இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் நாற்பதாண்டு காலம் என்னுடைய நஃப்ஸை இரவு வணக்கத்தில் கடும் போராட்டத்தோடு ஈடுபடுத்தினேன். இறுதியில் என் நஃப்ஸ் இபாதத்தில் முழுமையாக எனக்கு ஒத்துழைத்தது.

كان ثابت البناني يقول كابدت نفسي على القيام عشرين سنة !! وتلذذت به عشرين سنة
ஸாபித் இப்னு புனானி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “என் நஃப்ஸை நான் இருபதாண்டு காலம் கடும் போராட்டத்தோடு இரவு வணக்கத்தில் ஈடுபடுத்தினேன். இறுதியில் இருபதாண்டு காலம் என் நஃப்ஸ் அதன் இன்பத்தை அனுபவித்தது.


كان أحد الصالحين يصلي حتى تتورم قدماه فيضربها ويقول يا أمّارة بالسوء ما خلقتِ إلا للعبادة
ஸாலிஹீன்களில் ஓர் அடியார் இரவில் தங்களின் கால்கள் மறத்துப் போகும் அளவிற்கு நின்று வணங்குவார்களாம். பின்னர் தங்களின் பாதத்தை அடித்துக் கொண்டே தீயதை ஏவும் நஃப்ஸே! நீ இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாய்!” என்று கூறுவார்களாம்.

قال معمر : صلى إلى جنبي سليمان التميمي رحمه الله بعد العشاء الآخرة فسمعته يقرأ في صلاته : {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ} حتى أتى على هذه الآية {فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا } فجعل يرددها حتى خف أهل المسجد وانصرفوا ، ثم خرجت إلى بيتي ، فما رجعت إلى المسجد لأؤذن الفجر فإذا سليمان التميمي في مكانه كما تركته البارحة !! وهو واقف يردد هذه الآية لم يجاوزها {فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا }

மஃமர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் நான் சுலைமான் அத்தமீமி (ரஹ்) அவர்களின் அருகாமையில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அது இஷாவின் பின்னேரமாக இருந்தது.

சுலைமான் (ரஹ்) அவர்கள் தொழுகையில் சூரா முல்க் ஓதிக் கொண்டிருந்தார்கள். சூரா முல்க்கின் 27 –ஆம் வசனம் வந்த போது மீண்டும், மீண்டும் ஓதினார்கள்.

பள்ளியில் இருந்த மக்களெல்லாம் சென்று விட்டிருந்தனர். நானும் செல்வதற்காக எழுந்த போதும் கவனித்தேன் அப்போதும் அதே வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

மீண்டும் நான் சுபுஹ் தொழுகைக்காக பாங்கு சொல்லும் சமயத்தில் சென்று பார்த்த போது சுலைமான் (ரஹ்) அவர்கள் அந்த வசனத்தையே ஓதிக் கொண்டிருந்தார்கள்.

2. இரவில் சரிபாதியை இரவு வணக்கத்தில் கழிப்பார்கள்.
3. இரவில் மூன்றில் ஒரு பகுதியை வணக்கத்தில் கழிப்பார்கள்.
4. இரவில் ஐந்தில் அல்லது ஆறில் ஒரு பகுதியை வணக்கத்தில் கழிப்பார்கள்.
5. விழித்தால் தொழுவார்கள். தூக்கம் வந்தால் தூங்கி விடுவார்கள்.
6. இரண்டு ரக்அத்தோ அல்லது நான்கு ரக்அத்தோ தொழுவார்கள்.
7. இரவின் ஆரம்பத்திலிருந்து ஸஹர் நேரம் வரை வணக்கத்தில் கழிப்பார்கள்.

ذكر أبو حامد الغزالي أسباباً ظاهرة وأخرى باطنة ميسرة لقيام الليل:
فأما الأسباب الظاهرة فأربعة أمور:
الأول: ألا يكثر الأكل فيكثر الشرب، فيغلبه النوم، ويثقل عليه القيام.
الثاني: ألا يتعب نفسه بالنهار بما لا فائدة فيه.
الثالث: ألا يترك القيلولة بالنهار فإنها تعين على القيام.
الرابع: ألا يرتكب الأوزار بالنهار فيحرم القيام بالليل
அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “இரவு வணக்கத்தில் ஈடுபட வேண்டுமானால் எட்டு அம்சங்களை மிகவும் சிரத்தையோடு மேற்கொள்ள வேண்டும். அதில் நான்கு வெளிரங்கமானது.

1. அதிகமாக சாப்பிடக்கூடாது, அதிகமாக தண்ணீர் பருகக்கூடாது. இல்லை என்றால் தூக்கம் மிகைத்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாமல் போகும்.
2. பகலில் பயனில்லாத காரியங்களில் உடலை வருத்தக் கூடாது.
3. கைலூலா தூக்கத்தை விட்டு விடக்கூடாது.
4. பகலில் பாவமான காரியங்களில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் இரவு வணக்கம் தடைபட்டு போகும்.

அதில் நான்கு உள்ரங்கமானது.

وأما الأسباب الباطنة فأربعة أمور:
الأول: سلامة القلب عن الحقد على المسلمين، وعن البدع وعن فضول الدنيا.
الثاني: خوف غالب يلزم القلب مع قصر الأمل.
الثالث: أن يعرف فضل قيام الليل.
الرابع: وهو أشرف البواعث: الحب لله، وقوة الإيمان بأنه في قيامه لا يتكلم بحرف إلا وهو مناج ربه.
1. சக முஸ்லிம்கள் குறித்த சூழ்ச்சிகளை விட்டு விலகியும், அனாச்சாரங்களை விட்டு விலகியும், உலக மோகத்தை விட்டு விலகியும் இருப்பதோடு தமது இதயத்தை தூய்மையாகவும் வைத்திருப்பது.
2. நீண்ட, நீண்ட ஆசைகளில் இருந்து இதயத்தை தூரமாக்கி வைப்பதுடன். அது குறித்தான பயத்துடனே எப்போதும் இதயத்தை ஈடுபடுத்துவது.
3. இரவு வணக்கத்தின் மேன்மைகளை அறிந்து வைத்திருப்பது.
4. மேலான ரப்பின் பிரியத்தை உள்ளத்தில் பதியவைத்து, இரவு வணக்கத்தில் ஈடுபடுகிற போது தாம் மொழிகிற ஒவ்வொரு வார்த்தையும் தம் ரப்போடு உடனான உரையாடல் என்பதாகக் கருதுவது.

قال رجل لإبراهيم بن أدهم رحمه الله : إني لا أقدر على قيام الليل فصف لي دواء؟!! فقال : لا تعصه بالنهار وهو يقيمك بين يديه في الليل ، فإن وقوفك بين يديه في الليل من أعظم الشرف، والعاصي لا يستحق ذلك الشرف .

ஒரு மனிதர் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களிடம்இரவு வணக்கத்தின் மீது ஆசை இருக்கிறது. ஆனால், என்னால் இரவில் விழித்தெழ முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார்.

அதற்கு, இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள்பகலில் பாவத்தில் ஈடுபடாதே! இரவில் நீ விழித்தெழுந்து வணங்க உனக்கு உதவியாக இருக்கும். நீ இரவில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு விட்டாய் எனில் உன்னை விடச் சிறந்தவர் எவருமில்லை. ஆனால், என்ன செய்வது? பாவிகள் இதற்கு தகுதி பெறுவதில்லையே!” எனப் பதில் கூறினார்கள்.

قال سفيان الثوري رحمه الله : حرمت قيام الليل خمسة أشهر بسبب ذنب أذنبته

சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் செய்த சிறு பாவத்தால் ஐந்து மாதங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டேன்.”

இறுதியாக, இரவு வணக்கம் என்பது தஹஜ்ஜத் தொழுகையோடு சுருங்கி விடுவதில்லை. மாறாக, இரவிலே குர்ஆன் ஓதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்பு கேட்பது, அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திப்பது என நீண்ட பட்டியலே இருக்கின்றது.

வழக்கமாக, இரவு வணக்கம் என்றாலே அது ரமழான் மாதம் தான் என்றாகி விட்ட இந்த உம்மத்தில், இரவு வணக்கத்தின் மூலம் மிக எளிதாக இறைவனுடனான தொடர்பில் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிற பேருண்மையை பதிய வைப்போம்!

இரவுத் தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நம் ஈருலக அந்தஸ்தை உயர்த்திட அல்லாஹ் பேரருள் புரிவானாக! ஆமீன்!! வஸ்ஸலாம்!!!