Wednesday 4 February 2015

ஹிஜாப்… ஒழுக்க வாழ்வின் அடையாளம்!!



ஹிஜாப்ஒழுக்க வாழ்வின் அடையாளம்!!



மனித சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற எண்ணிலடங்கா அருட்கொடைகளில் மிகவும் மகத்துவம் வாய்ந்தது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த வாழ்க்கை நெறிமுறை தான்.

அந்த வாழ்க்கை நெறிமுறைகளை நம்பி, ஏற்றுக்கொண்டு செயலாற்றுகின்ற மனிதர்களை முஸ்லிம்கள்இறைவனுக்கு கீழ்ப்படிவோர் என்றும், முஃமின்கள்இறைநம்பிக்கையாளர்கள் என்றும் இஸ்லாம் அழைக்கின்றது.

இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளை பிற்போக்குத்தனமாகவும், அடிப்படை வாதமாகவும் இஸ்லாமிய அடையாளங்களை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்துகிற ஒரு முஸ்லிமை பயங்கரவாதியாகவும் சித்தரிக்கிற ஓர் நச்சு உலகத்திலே வாழ்ந்து வருகின்றோம்.

அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம் பெண்கள் அணிகிற ஹிஜாப் என்பது கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருவதையும், அதை அணிவதற்கு உலக நாடுகளில் பல்வேறு தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதையும் கண்டு வருகிறோம்.

ஹிஜாப் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்துவதற்கும், முஸ்லிம் பெண்களிடையே ஹிஜாப் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக 2013 –ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 1 –ஆம் தேதி உலக ஹிஜாப் தினம்சர்வதேச அளவில் 50 –க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடத்திற்கு வந்த நஜ்மாகான் எனும் யுவதியை பள்ளி நிர்வாகம் தனிமைப் படுத்தியது, பாகுபாடு காட்டியது இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் 2013 –ஆம் ஆண்டு பிப்ரவரி 1 –ஆம் தேதி உலக ஹிஜாப் தினம் உருவாகக் காரணமாக அமைந்தது.

அதன் பின்னர் தன்னுடைய இந்த அனுபவத்தை சமூக வலைதளங்களின் மூலம் 22 மொழிகளில் கொண்டு சென்று இன்று நம் அளவில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்.

அடிப்படையில் இவர் பங்ளாதேஷைச் சார்ந்தவர். தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

விமர்சனங்களையும் தடைச் சட்டங்களையும் உண்டு பண்ணுகிற குறிப்பிட்ட சில மதங்களைச் சார்ந்தவர்கள் தங்களின் மதங்கள் ஹிஜாப் குறித்து என்ன கூறியிருக்கிறது என்பதை ஆய்வு செய்ய முன் வரவேண்டும்.

ஹிஜாப் என்பது உண்மையில் ஆடை சம்பந்தமான சில கட்டுப்பாடுகளைக் கொண்டதே தவிர பெண்ணினத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் அமையும் தடுப்பு அல்ல என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.

ஹிஜாப் குறித்து கிறிஸ்துவ மதம்..

ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ண வெளியே போயிருந்த போது தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது, ஒட்டகங்கள் வரக்கண்டான். ஒட்டகத்தில் வந்த ரெபெக்காள் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை பார்த்த போது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள்.” (ஆதியாகமம் 24:62-65)

தூதர்களினிமித்தம் பெண்கள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்.” என்று பவுல் கூறுகின்றார்.                       ( கொரிந்தியா 11:10 )

ஹிஜாப் பற்றி இந்து மதம்..

உனக்காகப் படைத்த உன் சீமாட்டிக்குக் கூறு! உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள்! பார்வையை மேல் நோக்காதே! அது உன் பாதத்தை நோக்கி இருக்கட்டும்! பிறர் எவரும் உன் வெளித்தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்!”                                         ( ரிக்வேதம் 8:33:19 )

இஸ்லாம் பெண்களின் ஆடை விஷயத்தில் இரண்டு அம்சங்களைக் கூறுகிறது. ஒன்று ஹிஜாப், இன்னொன்று தபர்ருஜ்

இதில் ஹிஜாப் கற்பொழுக்கம் நிறைந்த வாழ்க்கையின் பால் அழைத்துச் செல்லும் தபர்ருஜ் கற்பொழுக்கத்தைச் சீர் கெடுக்கிற வாழ்க்கையின் பால் அழைத்துச் செல்லும்.

முந்தியது ஈமானின் அடையாளம். பிந்தியது ஷைத்தானிய்யத்தான கொள்கைகளின் அடையாளம்.

தபர்ருஜ் - ஆடை குறைபாடுகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள்.

பிரபல கிளினிக்கல் மனோதத்துவ நிபுணரும், இஸ்ரேல் டெல்ஹாய் கல்லூரியின் பெண் கல்வித்துறைத் தலைவருமான அவிகைல் மூர் என்பவர்பெண்ணின் ஆடைக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஓர் ஆய்வை நடத்தினார்.

உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் காணும் போது ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் உணர்வு எவ்வளவு என்று கண்டுபிடிப்பது தான் அந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும்.

அவர் ஆய்வை நடத்தி முடித்த பின்னர் மக்கள் மன்றத்தில் தம் ஆய்வரிக்கையை சமர்ப்பித்தார்.

Journal Of International Women`s Studies, எனும் பெயரிட்ட அந்த ஆய்வரிக்கையின் இரண்டாம் பாகத்தின் நான்காம் பக்கத்தில்

ஆய்வில் பங்கெடுத்த ஆண்களில் 29.8 சதவீதம் பேருக்கு பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கும் போதெல்லாம் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்.

“58.1 சதவீதம் பேருக்கு பெரும்பாலான சமயங்களில் உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் கண்டால் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்”. (Journal Of International Women`s Studies, Vol. II 4 May 2010) அதாவது, அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களைக் காண்கிற 88 சதவீத ஆண்களுக்கு பாலியல் தூண்டல் (காம உணர்வு) உணர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.


( நூல்: இலக்கியச்சோலையின் வெளியீடானஇஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்எனும் நூலின் 27 –ஆம் பக்கத்திலிருந்து… )

ஆகவே, இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சியும், முஸ்லிம் பெண்களின் அழகை ரசிக்கவேண்டும் என்கிற மட்டமான சிந்தனை கொண்டவர்களையும் தவிர வேறெவரும் ஹிஜாப் குறித்து, இஸ்லாம் இயம்பும் ஆடை அமைப்பு குறித்து விமர்சனம் செய்யமாட்டார்கள்.

ஹிஜாபின் இலட்சியங்கள் இரண்டு

يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ

அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் அறியப்படுவதற்கும், நோவினைப்படுத்தப் படாமல் இருப்பதற்கும் இதுவே (ஹிஜாப் முறையிலான அமைப்பே) மிக நெருக்கமானதாகும்.”                                          ( அல்குர்ஆன்: 33:59 )

ஹிஜாப் என்பது பெண்ணினத்தின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் இன்றியமையாதது என்பதை மேற்கூறிய இறைவசனம் உணர்த்துகின்றது.

ஹிஜாப் என்றால் என்ன? ஹிஜாப் ஏன் சிறந்தது?...

பெண்ணுக்கும் ஆணுக்கும் மார்க்கத்தின் அநேக காரியங்களில் சம உரிமைகளை இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ()

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எவர் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ, அவர்களை (இவ்வுலகில்) மணமான வாழ்வு வாழச்செய்வோம். மேலும், (மறுமையில்) அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலி வழங்குவோம்.”
                                                                                                                               (அல்குர்ஆன்; 16:97)

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ()


 கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவணங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் நிரந்தரமாய் தங்கி வாழ்வார்கள்.

 மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக உயர்வான அல்லாஹ்வின் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும் இதுவே மாபெரும் வெற்றியாகும்.”
                                                                                                                                  (அல்குர்ஆன்; 9:72)

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا ()
            ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன் பணிபவர்களாகவும், தர்ம்ம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களின் மறைவிடங்களை பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களாகவும் இருக்கின்றார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்காக மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.”
                                                                                                                                    (அல்குர்ஆன்; 33:35)

إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ ()

ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா தான தர்மங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்கு பன்மடங்கு பகரம் வழங்கப்படும். அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு .”
(அல்குர்ஆன்; 57:18)

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ()

“ ( நபியே! ) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.”                               ( அல்குர்ஆன்: 24:30 )

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ

மேலும், ( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்!                           ( அல்குர்ஆன்: 24:31 )


கற்பொழுக்கமுள்ள  விஷயங்கள் ஆகட்டும்,  ஆன்மீக வழிபாடாகட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இஸ்லாம் எவ்வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

மேலும், சமயக்கடமைகள் ஆகட்டும்,   சுமத்தப்பட்ட பொறுப்புகளாகட்டும் அங்கேயும் இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

 மேலும், அல்லாஹ் வழங்குகின்ற இவ்வுலக பாக்கியங்களும் மறு உலக சுவனமும் ஆண்,  பெண் என்ற பாகுபாட்டினைக் கொண்டும் கொடுக்கப்படுவதில்லை.

மாறாக,  நல்லறங்களைச் செய்கிற முஃமினாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கின்றது என்பதையே இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சேர நமக்கு உணர்த்துகின்றன.

ஆனால், ஆடை மற்றும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் ஆண்களிடம் விதிக்காத ஒரு சில கட்டுப்பாடுகளை பெண்கள் மீது இஸ்லாம் விதிக்கின்றது.

எனவே, ஆடை மற்றும் அழகை வெளிப்படுத்துகிற விவகாரத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர் என்று இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()

மேலும், ( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்! தங்களுடைய அழகை வெளியே காட்டாதிருக்கட்டும்! அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்!”

தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள், மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழ்கிற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்களின் முன்னிலையில் அன்றி வேறு எவருடைய முன்னிலையிலும் தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம்.

தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம்.”                                           ( அல்குர்ஆன்: 24:31 )

இந்த இறைவசனத்தின் மூலம் பெண் என்பவள் முழுமையாக மறைப்புக் குரியவள் என்றும் அவளின் உடை என்பது எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதும் நிரூபணமாகின்றது.

மேலும், இந்த இறைவசனத்தில் இருந்து தான்அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர!” எனும் சொல்லாடலின் மூலம் பர்தா சம்பந்தமான இரு வேறு கருத்துக்கள்சட்டப்பிரச்சனைகள் எழுந்தது எனலாம்.

1. ”முகமும் இரு கரங்களும் கூட தெரியக்கூடாது. ஆகவே, முகத்தையும், கரங்களையும் மறைக்க வேண்டும்என்றும்,

2. “முகத்தையும், இரு கரங்களையும் மறைக்க வேண்டிய அவசியமில்லைஎன்றும் இரு வேறு அபிப்பிராய பேதங்கள் தொன்று தொட்டு இன்று வரை சட்ட அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.

( இன்ஷா அல்லாஹ்.. இன்னொரு சந்தர்ப்பத்திலே இந்த ஆய்வு குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம். )

பெண்களின் ஆடை அமைப்பு பற்றி அல்குர்ஆனும்.. நபி மொழியும்..
وقد قال رسول اللّه صلى اللّه عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان - رواه الترمذي عن ابن مسعود فان هذا الحديث يدل على انها كلها عورة

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பெண் என்பவள் முழுமையாக மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். ஒரு பெண் முழுமையாக மறைக்காமல் வெளியே சென்றால் எனில் ஷைத்தான் அவளை அழகாக காண்பிப்பான்  என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                            ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )

இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்க்கும் போது ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிய வேண்டும் என்று தெரிகிறது.

قال رسول الله صلى الله عليه وسلم : " سيكون في آخر أمتي نساءٌ كاسيات عاريات , على رؤوسهن كأسْنِمَةِ البُخْت , العنوهن , فإنهن ملعونات " [صحيح] , والبُخْتُ: نوع من الإبل.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எனது உம்மத்தின் கடைசி காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருவார்கள். அவர்களின் தலைமுடி ஒட்டகங்களின் திமில் போன்று இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக, அவர்கள் சபிக்கப்பட வேண்டியவர்களே!”                                       ( நூல்: தப்ரானீ )

قال رسول الله صلى الله عليه وسلم : " صنفان من أهل النارلم أَرَهُمَا : قوم معهم سِياطٌ كأذناب البقر يضربون بها الناس , ونساء كاسيات عاريات , مُمِيلاتٌ مائلات , رؤوسهن كأسنمة البُخْتِ المائلة , لا يدخلن الجنة , ولا يجدن ريحها , وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا " .[ مسلم ]
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இரு வகையினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களில் ஒரு வகையினர் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பார்கள்

அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பார்கள். இன்னொரு வகையினர் ஆடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவார்கள். பிறரைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களும் பிறர் பக்கம் வீழ்வார்கள்.

இவர்களின் தலை உயரமான கழுத்துடன் அங்கும் இங்கும் சாயும் ஆண் ஒட்டங்களின் திமில்களைப் போல் இருக்கும். இவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். சுவனத்தின் வாடையை இன்னின்ன தூரத்தில் இருந்து கூட நுகரலாம். (ஆனால், இவர்களோ அச்சுவர்க்கத்தை விட்டும் வெகுதூரம் விலக்கி வைக்கப்படுவார்கள்.) ( நூல்: முஸ்லிம் )

இந்த இரு நபிமொழிகளும் மெல்லிய அரைகுறை ஆடைகளை அணிவதை தவிர்த்து கனமான ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்துகின்றது.

قالت عائشة رضى اللّه عنها رحم اللّه النساء المهاجرات الأول لمّا انزل اللّه تعالى وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلى جُيُوبِهِنَّ شققن مروطهن فاختمرن به

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் முந்தைய முஹாஜிர்களான பெண்களுக்கு அருள் புரிவானாக! “பெண்கள் முந்தானைகளால் தங்களின் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்!” என்ற இறைக் கட்டளை அருளப்பட்ட போது அவர்கள் தங்களின் மெல்லிய ஆடைகளைக் கை விட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளை அமைத்துக் கொண்டனர்.”

                                            ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )

قال أسامة بن زيد رضي الله عنهما : ( كساني رسول الله صلى الله عليه وسلم قُبْطِيَّةً كثيفة مما أهداها له دِحْيَةُ الكلبي , فكسوتُها امرأتي , فقال:" ما لك لم تلبس القُبْطِيَّةً ؟ " , قلت: ( كسوتُها امرأتي ) , فقال: " مُرها , فلتجعل تحتها غُلالة – وهي شعار يُلْبَسُ تحت الثوب – فإني أخاف أن تَصِفَ حجمَ عِظامِها " ) [ حسن ]

உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒருமுறை தங்களுக்கு அன்பளிப்பாக வந்த எகிப்து தேசத்தின் ஆடை ஒன்றை எனக்கு அன்பளிப்பாக அணியக் கொடுத்தார்கள்.

நான் வீட்டிற்குச் சென்று அதை என் மனைவியிடம் அணிந்து கொள்ளுமாறு கூறிவிட்டேன். பின்பு நான் அண்ணலாரின் சபைக்கு வந்த போது என்னிடம்உஸாமாவே உம்மிடம் நான் தந்த ஆடையை நீர் ஏன் அணியவில்லை?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு நான்அல்லாஹ்வின் தூதரே! அதனை நான் என் மனைவிக்கு அணியக் கொடுத்து விட்டதைக்கூறினேன். அதைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள்உமது மனைவியிடம் அந்த ஆடையை அணியும் போது அதனுள் ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும் படி நீர் கூறும்! ஏனெனில், உமது மனைவியின் உடலமைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்து விடுமோ என நான் அஞ்சுகின்றேன்எனக் கூறினார்கள்.     ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா லி இமாமி அத் தஹபீ )

உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தாத இறுக்கமற்ற, சற்று தளர்வான நீளமான பெரிதான ஆடைகளை அணிய வேண்டும் என இந்த நபிமொழிகள் கூறுகின்றன.

فقد روى النسائي عن أبي موسى الأشعري قال: قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
وفي مسند الإمام أحمد

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எந்தப் பெண் நறுமணம் பூசிய நிலையில் அதை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு மத்தியில் நடந்து செல்கின்றாளோ அவள் விபச்சாரியாவாள்.”             ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

عن أبي هريرة رضي الله عنه أنه استقبلته -أي في الطريق- امرأة متطيبة فقال: أين تريدين يا أمة الجبار؟ فقالت المسجد. فقال: وله تطيبت؟ قالت نعم.
قال أبو هريرة إنه قال:
 أيما امرأة خرجت من بيتها متطيبة تريد المسجد لم يقبل الله عز وجل لها صلاة
 حتى ترجع فتغتسل منه غسلها من الجنابة.
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண் நறுமணம் பூசிய நிலையில் மஸ்ஜிதுக்குச் செல்வாளேயானால், அவள் பெருந்தொடக்குக்காக குளிப்பது போன்று குளிக்கும் வரை அவளது தொழுகை ஒப்புக் கொள்ளப்படாது.”     ( நூல்: அஹ்மத் )

இமாம் ஷாஃபிஇ, இமாம் அபூஹனீஃபா இமாம் மாலிக் (ரஹிமஹுமுல்லாஹு அலைஹிம்) ஆகியோர் பெண்களுக்கான நறுமணப் பொருட்கள் நிறமுடையதாகவும், இலேசான மணமுடையதாகவும் இருக்க வேண்டுமென கூறுகின்றார்கள்.

மேற்கூறிய இரு நபிமொழிகளும் ஆடை மீது நறுமணம் பூசிச் செல்லக்கூடாது என கூறுகின்றது.

وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال : " رأى رسول الله صلى الله عليه وسلم عَلَيَّ ثوبين معصفرين , فقال : ( إن هذه من ثياب الكفار فلا تَلْبَسها ). [ مسلم ]

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருந்தேன். இதைக் கண்ட நபி {ஸல்} அவர்கள் இந்த ஆடைகளை அணியாதீர்கள்! இவை நிராகரிப்போர்களுடைய ஆடைகள்” என என்னிடம் கூறினார்கள்.  ( நூல்: முஸ்லிம் )

قال رسول الله صلى الله عليه وسلم : " من تشبه بقوم فهو منهم " . [ صحيح ]

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”மாற்றார்களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவர்கள் அவர்களைச் சார்ந்தவர்களே!”               ( நூல்: முஸ்லிம் )

இன்று சமூகத்திலே நடிகைகள் அணிகிற சேலை அமைப்பிலிருந்து ஜாக்கெட் மாடல் வரையிலும் அதை உடுத்தும் விதத்திலும் அங்குலம் அங்குலமாக பின்பற்றப்படுகிறது.

எனவே, மாற்று மதகலாச்சாரங்களைத் தாங்கிய ஆடைமுறைகளை அங்கீகரிப்பதும் கூடாது என இந்த இரு நபிமொழிகளும் உணர்த்துகின்றன.

قال رسول الله صلى الله عليه وسلم : " ومن لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ في الدنيا , ألبسه الله ثوبَ مَذَلَّةٍ يوم القيامة , ثم ألهب في ناراً " . [ حسن ]

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உலகில் புகழுக்காகவும், பிறர் புகழ்வதற்காகவும் ஆடை அணிபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் இழிவெனும் ஆடையை அணிவித்து நரகத்தில் புகுத்துவான்.”            ( நூல்: நஸாயீ )

இன்று நவீன நாகரீக ஆடைகளை பெண்கள் விரும்பி அணிவது பிறர் புகழுக்காகவும், பிரபல்யத்திற்காகவும் தான். அந்த மாதிரியான ஆடைகளை அணியக் கூடாது என இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

وعن أبي هريرة رضي الله عنه قال : " لعن رسولُ الله صلى الله عليه وسلم الرجلَ يَلْبَس لِبْسَةَ المرأة , والمرأة تلبَسُ لِبسَةَ الرجل " . [ صحيح ]

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களையும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களையும் சபித்தார்கள்.”         ( நூல்: முஸ்லிம் )

وقال رسول الله صلى الله عليه وسلم : " ثلاث لا يدخلون الجنة , ولا ينظر الله إليهم يومَ القيامة: العاقُ والديه , والمرأةُ المترجلة المتشبهة بالرجال , والدَّيُّوث "الحديث.[ صحيح ]

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மூன்று நபர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவிக்க மாட்டான். நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களை பார்க்கவும் மாட்டான். 1. பெற்றோருக்கு நோவினை செய்பவன்., 2. ஆண்களுக்கு ஒப்பாக ஆடை அணியும் பெண்., 3. குடும்பத்தார்களின் அசிங்கங்களை, தீய நடத்தைகளை அங்கீகரிப்பவன்.”                     ( இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்னத் அஹ்மத் )

قال رسول الله صلى الله عليه وسلم : " ليس منا من تشبه بالرجال من النساء , ولا من تشبه بالنساء من الرجال ". [ صحيح ]

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் நம்மைச் சார்ந்தவரல்லர்.”                                      ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

இதுவரை நாம் குறிப்பிட்டிருக்கிற ஆடை சம்பந்தமான இறைவசனங்களும், நபிமொழிகளும் வரையறுத்துள்ள அடிப்படையில் தான் ஓர் இஸ்லாமியப் பெண் ஆடை அமைப்புகளைப் பேண வேண்டும்.

நபித்தோழியர்களின் வாழ்விலிருந்து….

ولما دخل نسوة من بني تميم على أم المؤمنين عائشة رضي الله عنها , عليهن ثياب رِقاق , قالت: ( إن كنتن مؤمنات فليس هذا بلباس المؤمنات , وإن كنتن غير مؤمناتٍ , فتمتعن به ).
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்பு பனூதமீம் கோத்திரத்தைச் சார்ந்த சில பெண்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்க வருகை தந்திருந்தனர்.

அவர்கள் மெல்லிய ஆடைகளை அணிந்திருந்தனர். இதனைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் “உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பெண்களாக இருப்பின் ( இப்படியான ஆடைகளை நீங்கள் அணிந்திருக்க மாட்டீர்கள்.) அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்கள் அணிகின்ற ஆடைகள் அல்ல. நீங்கள் இறைநம்பிக்கை இல்லாத பெண்களாக இருந்தால் இது போன்ற ஆடைகளை அணியுங்கள்.”

وعن أم المؤمنين عائشة رضي الله عنها قالت: " كنت أدخل البيت الذي دُفِنَ فيه رسول الله صلى الله عليه وسلم وأبي رضي الله عنه واضعةً ثوبي , وأقول: ( إنما هو زوجي وأبي ) , فلما دُفن عمر رضي الله عنه , والله ما دخلته إلا مشدودة عليَّ ثيابي , حياءً من عمر رضي الله عنه. (صححه الحاكم على شرط الشيخين ).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களும், எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேல் துணி இல்லாது செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரில் ஒருவர் எனது கணவர், இன்னொருவர் எனது தந்தை என்ற அடிப்படையில் நான் அப்படி நடந்து கொண்டேன்.

ஆனால், உமர் (ரலி) அவர்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்ட பின்பு எனக்கேற்பட்ட வெட்க உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் ஒரு போதும் நுழைந்ததில்லை.”         ( நூல்: முஸ்தத்ரக் ஹாகிம் )

جائت أميمة بنت رقيقة إلى رسول الله صلى الله عليه وسلم تباعيه عللى الإسلام , فقال : " أُبايعك على أن لا تُشركي بالله , ولا تسرقي , ولا تزني , ولا تقتلي وَلَدَكِ , ولا تأتي ببهتان تفترينه بين يديك ورجليك , ولا تَنُوحي ولا تتبرجي تبرج الجاهلية الأولى " [صحيح]

உமைய்யா பிந்த் ருகைய்யா என்கிற பெண்மணி இஸ்லாத்தை தழுவுவதற்காக அண்ணலாரிடம் வருகை தந்த போது…

“நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்கக்கூடாது. திருடக்கூடாது, விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது, உமது குழந்தைகளைக் கொல்லக்கூடாது, அவதூறு கூறக்கூடாது, ஒப்பாரி வைத்து அழக்கூடாது, நீர் அறியாமைக் காலத்தில் இருந்தது போல ”தபர்ருஜ்” எனும் உடல் அங்கங்களின் பாகத்தையும், அழகையும் காட்டுவது போன்று ஆடை அணியக் கூடாது.” என்று கூறி பைஅத் வாங்கினார்கள்.

இப்படித்தான் வாழ வேண்டும் ஓர் இஸ்லாமியப் பெண்மணி…

روى عطاء بن أبي رباح قال: قال لي ابن عباس: ألا أريك امْرَأَة من أهل الجنة؟ قلت: بلى. قال: هذه المرأة السوداء، أتت رسول الله صلّى الله عليه وسلّم فقالت: إن أُصرَع وإني أنكشف، فادع الله عَزَّ وجَلّ. قال: " إن شئتِ صبرتِ ولك الجنة، وإن شئت دعوت الله أن يعافيك " . فقالت: أصبر. قالت: فإني أنكشف، فادع الله أن لا أنكشف. فدعا لها.


அதாஃ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். என்னிடம் சுவர்க்கத்துப் பெண்மணியை உமக்கு நான் அடையாளம் காட்டட்டுமா? எனக் கேட்டார்கள்.

அப்போது நான், பேறு பெற்ற அப் பெண்மணி யார் என்று வினவினேன். அப்போது அங்கே வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியை சுட்டிக் காட்டி, இதோ! இந்த கருப்பு நிற பெண் தான் அந்தப் பெண்மணி என்று கூறி விட்டு, என்னிடம் தொடர்ந்து கூறினார்கள்.

ஒரு நாள் நாங்கள் நபிகளாரோடு அமர்ந்திருந்தோம். அப்போது உம்மு ஸுஃபர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சபைக்கு வருகை தந்தார்கள். வந்தவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலிப்பு நோய் இருக்கின்றது.

திடீரென அது வரும் போது என் ஆடைகள் அகன்று விலகி விடுகின்றது, அதனால் நான் பல சங்கடங்களுக்கு ஆளாகின்றேன். என்னால் எங்கேயும் செல்ல முடிவதில்லை. ஆகவே, என் வலிப்பு நோய் நீங்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார்கள்.

அது கேட்ட அண்ணலார், நீ விரும்பியவாறே நான் துஆ செய்கின்றேன். என்றாலும் நீ பொறுமையை மேற்கொண்டால் உமக்கு கேள்வி கணக்கின்றி சுவனம் செல்லும் நஸீப் பாக்கியம் கிடைக்கப் பெறுவாய்! இதில் எதை நீ விரும்புகின்றாய்! என்று நபிகளார் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அப்பெண்மணி நான் அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொள்கின்றேன். ஆனாலும் வலிப்பு வருகிற போது என் ஆடை விலகாமல் இருக்க நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்என்று கூறி சென்று விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணிக்காக துஆ செய்தார்கள்.

                                                              (நூல்: இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா)

ஏமன் நாட்டைச் சார்ந்த தவக்குல் கார்மன் எனும் இஸ்லாமியப் பெண்மணியின் பெயரை பிரபல டைம் மாத இதழ் 2011 –ஆம் ஆண்டிற்கான (Person Of The Year) சிறந்த பெண்மணிக்கான விருதுக்கு பரிந்துரை செய்தது. அதே ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கான அவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இஸ்லாமிய ஹிஜாப் முறையைப் பேணி உலக நாடுகளின் தலைவர்கள், தலைசிறந்த விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் ஆகியோர் முன்பு அந்தப் பரிசை பெற்றுக் கொண்டு மேடையிலிருந்து கீழிறங்கிய அப்பெண்மணியை உலக ஊடகங்களின் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அதில் ஒரு நிருபர் இப்படிக் கேட்டார்: “நீங்கள் ஏன் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களின் அறிவாற்றலுக்கும், உயர்ந்த சிந்தனைக்கும் பொருந்துகின்றது?” என்று..

சற்று நிதானமான பார்வையுடன் தவக்குல் கார்மன் இப்படிப் பதில் கூறினார்: “ஆதி மனிதன் ஆடையில்லாதவனாகவே இருந்தான். அவனின் அறிவுப் பெருகப் பெருக ஆடைகளை அணிய ஆரம்பித்தான். நான் இன்றைக்கு யார்? என்ன உடுத்தியிருக்கின்றேன்? என்பது என் சமூகம் எத்தனை தூரம் அறிவிலும், நாகரீகத்திலும் முன்னேறி இருக்கிறது என்பதற்கான அடையாளமே தவிர பின்னடைவுக்கானதல்ல.

ஆடைக் குறைப்பே மனிதனை மீண்டும் ஆதிகாலத்திற்கே அழைத்துச் செல்லும் பின்னடைவாகும்.” என்று.

ஆகவே, ஹிஜாப் என்பது ஒழுக்க வாழ்வின் அடையாளம் என்று உரக்கச் சொல்வோம்!

ஹிஜாப் என்பது பெண்ணினத்தின் ஆளுமைக்கான அடையாளம் என்று உரத்து முழங்குவோம்!

ஹிஜாப் என்பது கண்ணியமான வாழ்வின் அணிகலன் என்று விண் முட்ட முழங்குவோம்!

ஹிஜாபின் மீதான எத்தகைய விமர்சனங்களையும் அழகிய முறையில் எதிர் கொண்டு உலகாளும் ஓர் ஒப்பற்றச் சமுதாயமாய் மிளிர்வோம்!

வல்ல ரஹ்மான் இஸ்லாமியப் பெண்மணிகளின் இதயத்தை தூய இஸ்லாத்திற்காக, இறைமார்க்கத்தின் கட்டளைகளை ஏற்று வாழ்வதற்காக திறந்து வைப்பானாக!  ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!