Thursday 1 November 2018

இஸ்லாமியப் பார்வையில்….விமர்சனமும், விமர்சித்தலும்…


இஸ்லாமியப் பார்வையில்….விமர்சனமும், விமர்சித்தலும்…

 


விமர்சிப்பதும், விமர்சனம் செய்வதும் ஒரு பண்பாடாக, வாழ்க்கையின் ஓர் அங்கமாக கருதும் ஒரு கால சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

விமர்சனம் செய்யாதவர்களும் இல்லை, விமர்சனங்களுக்கு ஆளாகாதவர்களும் இல்லை என்று சொல்லுமளவிற்கு சமூகத்தின் எல்லா தரப்பிலும் நீக்கமற இந்த நிலை பீடித்திருப்பதைக் காண முடிகின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் விமர்சனம் குறித்தும் விமர்சித்தல் குறித்தும்  விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியமும், கடமையும் ஓர் இறைநம்பிக்கையாளன் என்ற வகையில் நமக்கு இருக்கின்றது.

விமர்சனம் செய்யாதீர்கள் என்று உலகிற்கு அறைகூவல் விடுவதற்காக அல்ல, நம்முடைய வாழ்வில் விமர்சனத்திற்கான எல்லையில் நின்று பயணிப்பதற்காக.

விமர்சனம் என்றால் என்ன?

விமர்சனம் என்பது ஒருவரின் கருத்தை, ஒருவரின் செயலாக்கத்தை, ஒருவரின் படைப்பை, தனி நபரை, அல்லது ஓர் அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும்.

விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்மறையான மதிப்பீட்டை பொதுவாக சுட்டிக்காட்டுகிறது.

விமர்சனம் என்பது ஒரு தரப்பினரை அழிக்கும் நோக்குடன், அல்லது பாதிக்கும் நோக்குடன் செய்யப்படுவதும் உண்டு.

விமர்சனம் என்பது சில போது ஒரு தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தை, மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நோக்குடன், ஆக்கபூர்வமான நோக்கைக் கொண்டிருக்கலாம்.

அரசியல் கொள்கை, திட்டம், தலைமைத்துவம், கலைப் படைப்புகள், சமூகக் கட்டமைப்பு, சமூக நிலைமைகள், சமயம், கோட்பாடுகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் என பல தரப்பட்ட அம்சங்களை நோக்கியும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

என்றாலும், மனிதனுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விமர்சனத்தின் வீச்சுக்குள் கொண்டு வர இயலும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

மீ டூ – Mee too ஹேஷ் டேக் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிற அதிர்வலைகள் அதன் பிரதிபலிப்புகள் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அது ஏற்படுத்தப்பட்ட நோக்கம் உயர்வாகச் சொல்லப்பட்டாலும் அங்கிருந்து வெளியாகி இருக்கிற விமர்சனங்கள் ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த ஓர் துறையில் இருந்து தான் என்பதும், நாளொன்றுக்கு ஒரு புகார் என்கிற விகிதத்தில் ஊடகத்தின் வாயிலாக நாம் பார்த்து வருகின்றோம்.

நமக்கு மீ டூ வின் மீதோ அல்லது அந்த விமர்சனங்களில் சிக்கியவர்களின் மீது பரிதாபம் காட்டுவது அல்லது வக்காலத் வாங்குவது நோக்கம் கிடையாது.

அதனுடைய மையக்கருவான ஓர் அம்சத்தை எடுத்து வைத்து அதன் மூலம் இஸ்லாமிய வழிகாட்டலை தெரிந்தும், அறிந்தும் கொள்வது தான்.

ஆம்! சம்பந்தப்பட்ட இருவருக்கும் படைத்த இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த ஓர் விஷயத்தை, ஒரு ரகசியத்தை, ஒரு பாவத்தை பொதுவெளியில் நாம் பகிர்வதும், அதை எல்லோரிடத்திலும் வெளிப்படுத்துவதும் சரியானது தானா?

ஏற்கனவே மன்னித்து, மறைத்த ஓர் விஷயத்தை நாம் பல பேருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது சரி தானா?

ஒருவரைக் குறித்து அவர் பற்றிய ரகசியங்களை இன்னொருவரிடம் பகிரப்படும் போது (அவர்) பகிரப்படுகிற நபர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

ஒருவர் குறித்து விமர்சிக்கின்றோம் ஆனால், அந்த விமர்சனத்திற்கு அவர் தகுதியில்லாதவராக இருக்கின்றார் அல்லது அவர் மீது இட்டுக்கட்டி ஏதேனும் கூறுகின்றோம் என்றால் நம் நிலை என்ன?

இதற்கான வழிகாட்டல் ஒவ்வொன்றையும் இஸ்லாத்தின் அடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் முழுமையாக நாம் பார்ப்போம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பகிரங்கப்படுத்துவதை விரும்புவதில்லை...

لَّا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا

அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீயவைகளை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை” ( அல்குர்ஆன்: 4: 148 )

روى الإمام البخاري رحمه الله تعالى عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
 كل أمتي معافى إلا المجاهرين، وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملاً ثم يصبح وقد ستره الله فيقول: يا فلان! عملت البارحة كذا وكذا، وقد بات يستره ربه، ويصبح يكشف ستر الله عليه
ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “எனது உம்மத்தினர் அனைவரும் பாதுகாப்பு வழங்கப்பட்டவர்களே! பகிரங்கப்படுத்தியவர்களைத் தவிர! ஏனெனில், இரவில் யாரும் அறியாத நிலையில் ஒரு பாவத்தைச் செய்கின்றார். அல்லாஹ் அதை மறைத்த நிலையில் காலைப் பொழுதை அவர் அடைகின்றார்.

ஆனால், இரவில் தாம் செய்த அந்த பாவமான காரியத்தை எல்லோரிடத்திலும் சென்று இரவு இன்னின்னவாறு நான் செய்தேன் என்று அல்லாஹ் மறைத்த ஒன்றை பகிரங்கப்படுத்துகின்றார்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )


وروي أنه لحق بني إسرائيل قحط على عهد موسى عليه السلام ، فاجتمع الناس إليه ، فقالوا : يا كليم الله ، ادع لنا ربك أن يسقينا الغيث ، فقام معهم ، وخرجوا إلى الصحراء وهم سبعون ألفا أو يزيدون ، فقال موسى عليه السلام : إلهي اسقنا غيثك ، وانشر علينا رحمتك ، وارحمنا بالأطفال الرضع ، والبهائم الرتع ، والمشايخ الركع ، فما زادت السماء إلا تقشعا ، والشمس إلا حرارة ، فقال موسى : إلهي إن كان قد خلق جاهي عندك ، فبجاه النبي الأمي محمد صلى الله عليه وسلم الذي تبعثه في آخر الزمان ، فأوحى الله إليه : ما خلق جاهك عندي ، وإنك عندي وجيه ، ولكن فيكم عبد يبارزني منذ أربعين سنة بالمعاصي، فناد في الناس حتى يخرج من بين أظهركم ، فبه منعتكم ، فقال موسى : إلهي وسيدي أنا عبد ضعيف ، وصوتي ضعيف ، فأين يبلغ وهم سبعون ألفا أو يزيدون ، فأوحى الله إليه منك النداء ، ومني البلاغ ، فقام مناديا ، وقال : يا أيها العبد العاصي الذي يبارز الله منذ أربعين سنة ، اخرج من بين أظهرنا ، فبك منعنا المطر ، فقام العبد العاصي ، فنظر ذات اليمين وذات الشمال ، فلم ير أحدا خرج ، فعلم أنه المطلوب ، فقال في نفسه : إن أنا خرجت من بين هذا الخلق افتضحت على رءوس بني إسرائيل ، وإن قعدت معهم منعوا لأجلي ، فأدخل رأسه في ثيابه نادما على فعاله ، وقال : إلهي وسيدي عصيتك أربعين سنة ، وأمهلتني وقد أتيتك طائعا ، فاقبلني فلم يستتم الكلام حتى ارتفعت سحابة بيضاء ، فأمطرت كأفواه القرب ، فقال موسى : إلهي وسيدي ، بماذا سقيتنا وما خرج من بين أظهرنا أحد ؟ فقال : يا موسى ، سقيتكم بالذي به منعتكم ، فقال موسى : إلهي أرني هذا العبد الطائع ؟ فقال : يا موسى ، إني لم أفضحه وهو يعصيني ، أأفضحه وهو يطيعني.

மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா (அலை) அவர்கள்.

ஆனால், துஆச் செய்து வெகு நேரமாகியும் துஆவிற்கான பதில் ரப்பிடமிருந்து வராததை உணர்ந்த மூஸா ( அலை ) அவர்கள் இறைவா! எப்பொழுதும் என் பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதிலளிக்கும் நீ இன்று ஏன் பதிலளிக்கவில்லைஎன்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் மூஸாவே! இங்கு கூடியிருக்கும் ஜனத்திரளில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக எனக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே நான் பதில் தரவில்லை. அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்! உங்கள் துஆவை ஏற்று உங்களுக்கு நான் மழை பொழிவிக்கிறேன்என்றான்.

உடனே, மூஸா (அலை) அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம்இங்கு கூடியிருக்கிற மக்களில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே அல்லாஹ் மழையைத் தராமல் தடுத்து வைத்திருக்கின்றான். ஆகவே, அவர் இங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்லவும். இல்லையெனில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுவோம்என்று கூறினார்கள்.

உடனே, கூட்டத்தில் இருந்த அந்த மனிதர் தன்னைத்தான் மூஸா (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். இங்கிருந்து இப்போது வெளியேறினால் தம்மை அடையாளம் கண்டு சமூக மக்கள் கேவலமாகக் கருதுவார்கள் என்று எண்ணிய அவர் தான் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதியைக் கொண்டு தன் தலைக்கு முக்காடிடுக் கொண்டு

அல்லாஹ்வே! இதோ இந்த இடத்தில் உன்னிடம் நான் ஒரு உறுதி மொழியைத் தருகின்றேன்! இனி எப்போதும் ஒரு கணமேனும் உனக்கு நான் மாறு செய்யமாட்டேன்! என் காரணத்தால் என் சமூக மக்களை நீ தண்டித்து விடாதே!என்று பிரார்த்தித்தார்.

அடுத்த நொடியில் மழை பொழியத்தொடங்கியது. மூஸா (அலை) அவர்களுக்கு ஆச்சர்யம் கூட்டத்தை விட்டு எவரும் வெளியேற வில்லை, ஆனால், மழை பொழிகிறது.

அல்லாஹ்விடம் கையேந்தினார் மூஸா (அலை) அவர்கள்.அல்லாஹ்வே! எவரும் தான் வெளியேற வில்லையே! பின் ஏன் மழையைப் பொழிவித்தாய்!”.

அதற்கு, அல்லாஹ் மூஸாவே! எந்த மனிதரின் காரணத்தால் நான் மழையைத் தடுத்து வைத்திருந்தேனோ, அவர் இப்போது மனம் திருந்தி என்னிடம் மன்னிப்புக் கோரிவிட்டார். அவரின் காரணத்தினாலேயே நான் இப்போது இந்த மழையை உங்களுக்கு தந்திருக்கின்றேன்என்று பதில் கூறினான்.

அப்போது, மூஸா (அலை) அவர்கள் அப்படியென்றால் நீ எனக்கு அவரை அடையாளம் காட்டுஎன்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ் மூஸாவே! 40 ஆண்டுகளாக எனக்கு மாறு செய்து கொண்டிருந்த போது அவரைப் பிறரிடம் காட்டிக்கொடுத்து அவமானப் படுத்தாத நான்.. தற்போது மனம் திருந்தி என் அருள் வாசலுக்கு வந்த பின்னரா பிறருக்கு நான் காட்டிக் கொடுப்பேன்என்று பதில் கூறினான்.

                                                     ( நூல்: இப்னு கஸீர் )

ரஹ்மத்துல் லில் ஆலமீனும் பகிரங்கப்படுத்துவதை விரும்புவதில்லை...

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى وَهُوَ ابْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ عَنْ غَيْلَانَ وَهُوَ ابْنُ جَامِعٍ الْمُحَارِبِيُّ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ
جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا كَانَتْ الرَّابِعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ فِيمَ أُطَهِّرُكَ فَقَالَ مِنْ الزِّنَى فَسَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبِهِ جُنُونٌ فَأُخْبِرَ أَنَّهُ لَيْسَ بِمَجْنُونٍ فَقَالَ أَشَرِبَ خَمْرًا فَقَامَ رَجُلٌ فَاسْتَنْكَهَهُ فَلَمْ يَجِدْ مِنْهُ رِيحَ خَمْرٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَزَنَيْتَ فَقَالَ نَعَمْ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَكَانَ النَّاسُ فِيهِ فِرْقَتَيْنِ قَائِلٌ يَقُولُ لَقَدْ هَلَكَ لَقَدْ أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ وَقَائِلٌ يَقُولُ مَا تَوْبَةٌ أَفْضَلَ مِنْ تَوْبَةِ مَاعِزٍ أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ فِي يَدِهِ ثُمَّ قَالَ اقْتُلْنِي بِالْحِجَارَةِ قَالَ فَلَبِثُوا بِذَلِكَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جُلُوسٌ فَسَلَّمَ ثُمَّ جَلَسَ فَقَالَ اسْتَغْفِرُوا لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالُوا غَفَرَ اللَّهُ لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ قَالَ ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنْ الْأَزْدِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ فَقَالَتْ أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ مَالِكٍ قَالَ وَمَا ذَاكِ قَالَتْ إِنَّهَا حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَ آنْتِ قَالَتْ نَعَمْ فَقَالَ لَهَا حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ قَالَ فَكَفَلَهَا رَجُلٌ مِنْ الْأَنْصَارِ حَتَّى وَضَعَتْ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ وَضَعَتْ الْغَامِدِيَّةُ فَقَالَ إِذًا لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ فَقَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ فَرَجَمَهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ..

விபச்சாரக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டால் அது தண்டனை வழங்கும் அளவிற்கான குற்றம் என்பதாக அல்லாஹ் இறைவசனத்தை இறக்கியருளியிருந்த தருணம் அது

புரைதா, இப்னு அப்பாஸ், அனஸ் ( ரலிஅன்ஹும் ) அறிவிக்கின்றார்கள்:

பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மாஇஸ் இப்னு மாலிக் என்கிற நபித்தோழர்  நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டும்  தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

மீண்டும் வந்து முறையிடவே, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு கூறி மாயிஸ் (ரலி) அவர்களை நபி {ஸல்} அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு, அவர் மூன்று முறை அண்ணலாரின் சபைக்கு வருவதும், செல்வதுமாக இருந்தார்.

நான்காவது முறையாக முன்பு போல் அவர் அவ்வாறு கூறவே அவரை நோக்கி அண்ணலார் {ஸல்} அவர்கள் ”(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!என்றார்கள்.

ஆனால், அவரோ முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர்இல்லைஎன்றார்.

ஆனால், அவரோ மீண்டும் முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, அருகில் இருந்த நபித்தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இவர் மது அருந்தி இருக்கிறாரா?” என்று பரிசோதித்துப் பாருங்கள்என்றார்கள்.

பரிசோதித்த நபித்தோழர்கள் இல்லை, இவர் மது அருந்த வில்லை என்று பதில் கூறினார்கள்.


இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ”ஆம்'” என்று கூறினார்.

அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பெருநாள் தொழுகைத் திடல்  அருகில்  அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்போது,  நபி (ஸல்) அவர்கள்அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.

மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் அல்ல.
 
மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.

அங்கே, மாயிஸ் (ரலி) குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை கேட்டபோது
 போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.

பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம்; அல்லது ஆசையோடு பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ் (ரலி) அவர்களை திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றார்கள்.

ஆனாலும், மாயிஸ் (ரலி) அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள். 

எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ் (ரலி) அவர்களை பொருந்திக் கொள்வானாக!

ஒருவரைக் குறித்து இன்னொருவர் உங்களிடம் விமர்சித்தார் என்றால்...

1.   முதலில் விமர்சிக்கப்படும் நபர் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் அவர் குறித்து நல்லெண்ணம் வைக்க வேண்டும்.


لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنْفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُبِينٌ ()

நீங்கள் இதைக் கேள்வியுற்ற சமயத்தில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களில் உள்ளவர்களைப் பற்றி நன்மையானதையே எண்ணிஇது தெளிவான அவதூறு தான்என்று கூறியிருக்க வேண்டாமா?. ( அல்குர்ஆன்: 24: 12 )

2.   அந்த விமர்சனத்தை தூக்கிக் கொண்டு திரியக்கூடாது.

إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ (15)

 இதனை நீங்கள் சிலரிடமிருந்து சிலர் உங்கள் நாவுகளின் மூலம் எடுத்துக் கொண்டு, உங்களுக்கு எது பற்றி அறிவு இல்லையோ ( தெரிய வில்லையோ ) அந்த விஷயத்தை, உங்கள் வாய்களால் கூறிக் கொண்டிருந்த பொழுது, இந்த செயலை நீங்கள் மிக இலேசான ஒன்றாக எண்ணி விட்டீர்கள்; ஆனால், அல்லாஹ்விடத்தில் இதுவோ மிகப்பெரிய ஒன்றாகும்”.

3.   அது இட்டுக்கட்டாக இருக்கும் என்று தெரிந்தால் அது இட்டுக்கட்டு தான் என்று உங்களிடம் கூறியவரிடம் கூறிவிட வேண்டும்.

وَلَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُمْ مَا يَكُونُ لَنَا أَنْ نَتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ (16)

”நீங்கள் இதனைக் கேள்வி பட்ட போதுஇது பற்றி பேசுவது நமக்குத் தகுதி இல்லை. அல்லாஹ்வே! நீயே பரிசுத்தமானவன். இது மகத்தான பெரும் அவதூறு ஆகும் என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?             ( அல்குர்ஆன்: 24: 15,16 )

4.   விமர்சிக்கப்படும் அந்த நபர் குறித்த நல்ல விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பின் விமர்சித்தவரிடம் அதை வெளிப்படுத்த வேண்டும்.

மாநபி {ஸல்} அவர்களின் முன்மாதிரி

لما سار رسول الله صلى الله عليه وسلم إلى تبوك جعل لا يزال يتخلف الرجل، فيقولون يا رسول الله: تخلف فلان، فيقول: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، حتى قيل: يا رسول الله تخلف أبو ذر وأبطأ به بعيره، فقال رسول الله صلى الله عليه وسلم: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، فتلوم أبو ذر رضي الله عنه على بعيره فأبطأ عليه، فلما أبطأ عليه أخذ متاعه فجعله على ظهره فخرج يتبع رسول الله صلى الله عليه وسلم ماشيا، ونزل رسول الله صلى الله عليه وسلم في بعض منازله ونظر ناظر من المسلمين فقال: يا رسول الله هذا رجل يمشي على الطريق، فقال رسول الله صلى الله عليه وسلم: كن أبا ذر، فلما تأمله القوم قالوا: يا رسول الله هو والله أبو ذر! فقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله أبا ذر يمشي وحده ويموت وحده ويبعث وحده،

ஹிஜ்ரி ஒன்பது, தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடப்படுகின்றது. கடுமையான கோடைக்காலம், மிக நீண்ட தூரப் பயணம்.எதிரிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம் என போருக்கு தடை ஏற்படுத்துகிற சூழ்நிலைகள் முஸ்லிம்களை சூழ்ந்திருந்தது.

ஒருவாராக நபி (ஸல்) அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் போருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மாலை நேரத்தில் ஓர் இடத்தில் படை வீரர்களை இளைப்பாறிச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவே முஸ்லிம்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களிடத்தில்நம்மோடு போருக்கு வராமல் இன்னவர் ஊரிலேயே பின் தங்கி விட்டார்என்று ஒருவர் குறித்து முறையிட்டனர்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் இன்ன மனிதர் குறித்து என்னிடம் கூறுவதை தவிர்த்து விடுங்கள்! அவர் விஷயத்தில் அல்லாஹ் நலவை நாடியிருந்தால் அவரை உங்களோடு இப்படையில் இணைப்பான். அவர் விஷயத்தில் அதுவல்லாத வேறேதேனும் நாடி இருந்தால் உங்களுக்கு இதயத்தில் நிம்மதியை நல்குவான்என்று கூறினார்கள்.

சற்று நேரம் கழித்து இன்னும் சிலர்  நபி (ஸல்) அவர்களிடத்தில்நம்மோடு போருக்கு வராமல் அபூதர் (ரலி) ஊரிலேயே பின்தங்கி விட்டார் என்றனர்.

அதற்கு, உடனடியாக இல்லை! ஒருபோதும் அப்படியிருக்காது; அவர் நம்மோடு தான் புறப்பட்டிருப்பார்; வழியிலே அவரது வாகனம் (கோவேறு கழுதை) பலகீனப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறுதியாக, அதிகாலை நேரத்தில் மாநபி (ஸல்) அவர்களும், மாநபியின் தோழர்களும் புறப்படத்தயாராயிருந்த போது, தூரத்தில் ஒரு மனிதர் முதுகிலே ஒரு மூட்டையை சுமந்து வருவதைக் கண்டு அண்ணலாரிடம் தெரிவித்தார்கள் தோழர்கள்.

அப்படியானால், அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்களாகத்தான் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

மிகச் சமீபமாக வரும்போது  அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திய பின் நபிகளாரிடத்தில் இதோ! அபூதர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள் எனக் கூறினார்கள் நபித்தோழர்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள்: “ அல்லாஹ் அபூதர் (ரலி) அவர்களுக்கு அருள் பாளிப்பானாக! தனியே நடந்து வந்தார். தனியே இருக்கும் போதுதான் மரணிப்பார்; நாளை மஹ்ஷரில் தனியாகத்தான் எழுப்பப்படுவார்!” என்று சோபனம் கூறினார்கள்.

                                ( நூல்: தஹ்தீப் - சீரத்- இப்னு ஹிஷாம்; பக்கம்:256 )   


மேன்மக்களின் முன்மாதிரி
  
وَلَمْ يَذْكُرْنِي رَسُوْلُ اللهِ ' حَتَّي بَلَغَ تَبُوْكًا , فَقَالَ وَهُوَ جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوْكٍ : مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ؟ فَقَالَ رَجُلٌ مِنْ بَنِيْ سَلِمَةَ: يَا رَسٌوْلَ اللهِ حَبَسَهُ بُرْدَاهُ, وَالنَظَرُ فِيْ عِطْفِيْهِ فَقَالَ لَهُ مُعَادُ بْنُ جَبَلٍ : بِئْسَ مَا تَقُوْلُ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ مَا عَلِمْناَ عَلَيْهِ الاَّ خَيْرًا, فَسَكَتَ رَسُوْ لُ الله ِ فَبَيْنَمَا هُوْ عَلَي ذَلِكَ رَأي رَجُلاً مُبَيَّضًا يَزُوْلُ بِهِ السَّرَابُ . فَقَالَ رَسُوْلُ اللهِ : كُنْ أبَا خَيْثَمةَ, فَأذَا هُوَ أبُو خَيْثَمَةَ  الاَنْصَارِي وَهُ الذِّيْ تَصَدَّقَ بِصَاعِ التَّمْرِ حِيْنَ لَمَزَهُ الْمُنَافِقُوْنَ

 நபி (ஸல்) அவர்கள் தபூக் சென்றடையும் வரையில் என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. தபூக்கில் மக்கள் மத்தியில் அவர்கள் அமர்ந்திருந்தபொழுது கஅப் பின் மாலிக் என்ன செய்தார்? என்று கேட்டார்கள்.

அப்போது, பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் சொன்னார்: அல்லாஹ்வின் தூதரே! அவர் அணிந்திருந்கும் வேஷ்டியும் மேலங்கியும் அவரைத் தடுத்துவிட்டன! தமது ஆடையழகைக் கண்டு பூரிப்படைவதே அவரது வேலை!

அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நீ எவ்வளவு மோசமான வார்த்தையைக் கூறிவிட்டாய்! அல்லாஹ்வின்தூதரே! நாங்கள் அவரது விஷயத்தில் நல்லதைத் தவிர வேறெதையும் அறிந்திருக்கவில்லை!என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்.

                                                            ( நூல்: புகாரி )
ஒருவரின் மீது இல்லாத ஒன்றை, செய்யாத ஒன்றை இட்டுக்கட்டி விமர்சனமாக தொடுத்தால்….

ஒருவரின் மீது இல்லாத ஒன்றை, செய்யாத ஒன்றை இட்டுக்கட்டி விமர்சனமாக தொடுத்தால் இருவகையான தீங்குகள் ஏற்படும்.

1.   சம்பந்தப்பட்ட நபரின் துஆ விமர்சித்தவரின் வாழ்க்கையை பாழாக்கி விடும்.

2.   சம்பந்தப்பட்ட அந்த நபர் பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணித்தவராக இருப்பின் அவர் மூலம் சமூகம் அடைந்து வந்த நின்று விடும்.

وعن أبي هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم-: (وَدَعْوَةُ الْمَظْلُومِ تُحْمَلُ على الْغَمَامِ وَتُفْتَحُ لها أَبْوَابُ السماء
وَيَقُولُ الرَّبُّ عز وجل وعزتي لأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِين).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீடு உடனடியாக மேகத்தைக் கடக்கிறது. அதற்காக வானலோகத்தின் வாசல்களும் திறக்கப்படுகிறது. அந்த முறையீட்டுக்குப் பதில் தரும் முகமாக அல்லாஹ்என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இதோ இப்போதே உன் முறையீட்டுக்குப் பதில் தருகின்றேன்என்று கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                  ( நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் )

وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: (دعوة المظلوم مستجابة وإن كان فاجرا ففجوره على نفسه).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அல்லாஹ் உடனடியாக ஏற்றுக் கொள்கின்றான். அவன் பாவியாக இருந்தாலும் சரியே!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                     ( நூல்: தப்ரானீ )


حدثنا عبد الوارث بن سفيان حدثنا قاسم بن أصبغ أخبرنا المطلب ابن سعيد أخبرنا عبد الله بن صالح قال: حدثني الليث قال: حدثني ابن الهادي عن أبي بكر بن محمد بن عمرو بن حزم قال: جاءت أروى بنت أويس إلى أبي محمد بن عمرو بن حزم فقالت له: يا أبا عبد الملك إن سعيد بن زيد بن عمرو بن نفيل قد بنى ضفيرة في حقي فأته بكلمة فلينزع عن حقي فوالله لئن لم يفعل لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم فقال لها: لا تؤذي صاحب رسول الله صلى الله عليه وسلم فما كان ليظلمك ولا ليأخذ لك حقاً. فخرجت وجاءت عمارة بن عمرو وعبد الله بن سلمة فقالت لهما ائتيا سعيد بن زيد فإنه قد ظلمني وبنى ضفيرة في حقي فوالله لئن لم ينزع لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم. فخرجا حتى أتياه في أرضه بالعقيق فقال لهما: ما أتى بكما؟ قالا: جاءتنا أروى بنت أويس فزعمت أنك بنيت ضفيرة في حقها وحلفت بالله لئن لم تنزع لتصيحن بك في مسجد رسول الله صلى الله عليه وسلم فأحببنا أن نأتيك ونذكر ذلك لك. فقال لهما: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من أخذ شبراً من الأرض بغير حقه يطوقه الله يوم القيامة من سبع أرضين " . فلتأت فلتأخذ ما كان لها من الحق اللهم إن كانت كاذبة فلا تمتها حتى تعمي بصرها وتجعل ميتتها فيها فرجعوا فأخبروها ذلك فجاءت فهدمت الضفيرة وبنت بنيانا فلم تمكث إلا قليلاً حتى عميت وكانت تقوم بالليل ومعها جارية لها تقودها لتوقظ العمال فقامت ليلة وتركت الجارية فلم توقظها فخرجت تمشي حتى سقطت في البئر فأصبحت ميتة.

மர்வான் இப்னு ஹகம் (ரஹ்) அவர்களிடம் அர்வா பிந்த் உவைஸ் எனும் பெண்மனி சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் ஒருவரான ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்களைக் குறித்து நில அபகரிப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சமர்ப்பித்தார்.

அபூ அப்துல் மலிக் அவர்களே! எனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ஸயீத் இப்னு ஜைத் அவர்கள் அபகரித்துக் கொண்டார். நீங்கள் வந்து பேசி என் நிலத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தரவேண்டும். இல்லையெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! மஸ்ஜிதுன் நபவீக்கு முன்னால் நின்று நான் கூச்சலிடுவேன்என்று கூறினாள்.

அப்போது, மர்வான் அவர்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நபித் தோழருக்கு நோவினை கொடுக்காதே! அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். முதலில் இங்கிருந்து கிளம்புஎன்று விரட்டி விட்டார்கள்.

அங்கிருந்து வெளியேறிய அப்பெண்மனி நேராக அம்மாரா இப்னு அம்ர், மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸலமா என்பவர்களிடத்தில் சென்று மர்வான் அவர்களிடத்தில் முறையிட்டது போன்று முறையிட்டாள்.

இருவரும் ஸயீத் (ரலி) அவர்களிடம் வந்து அர்வா வின் முறையீடு குறித்தும், அவளின் மிரட்டல் குறித்தும் கூறிவிட்டு இது குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டனர்.

அப்போது, ஸயீத் (ரலி) அவர்கள் “”எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்க விடப்படுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறியதை ( தங்களின் செவியைப் பிடித்துக் காட்டி ) இந்தச் செவியால் நான் கேட்டிருக்கின்றேன்.

பிறகு, நான் எப்படி அவ்வாறு அப்பெண்மனியின் நிலத்தின் ஒரு பகுதியை அபகரிப்பேன்?என்று அவ்விருவரிடமும் கேட்டு விட்டு

தங்களின் இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்திஇறைவா! அவள் பொய் சொல்கிறாள் என்றால் அவளின் பார்வையை குருடாக்கி விடு! எந்த நிலத்தை நான் அபகரித்ததாகச் சொல்கிறாளோ அதிலேயே அவளை மரணிக்கச் செய்! என துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் ஸயீத் அவர்களின் துஆவைக் கபூலாக்கினான். பின் நாளில் அது போன்றே அவளின் மரணமும் நடந்தேறியது.

மக்கள் கூடஅல்லாஹ் அர்வாவைக் குருடாக்கியது போல் உன்னையும் குருடாக்குவானாக! என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை நாங்கள் கண்டோம் என அலாவு இப்னு அப்துர்ரஹ்மான் மற்றும், முஹம்மத் இப்னு அபூபக்ர் ஆகிய இந்த அறிவிப்பின் இரு ராவிகளும் கூறுகின்றார்கள்.

                       ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் )

وعن جابر بن سمرة، رضي الله عنهما .
قال: شكا أهل الكوفة سعداً، يعني: ابن أبي وقاص - رضي الله عنه - إلى عمر بن الخطاب - رضي الله عنه - فعزله واستعمل عليهم عمارًا، فشكوا حتى ذكروا أنه لا يحسن يصلي، فأرسل إليه فقال: يا أبا إسحاق، إن هؤلاء يزعمون أنك لا تحسن تصلي .
فقال: أما أنا والله فإني كنت أصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلم لا أخرم عنها أصلي صلاة العشاء فأركد في الأوليين، وأخف في الأخريين، قال: ذلك الظن بك يا أبا إسحاق، وأرسل معه رجلاً - أو رجالاً - إلى الكوفة يسأل عنه أهل الكوفة، فلم يدع مسجداً إلا سأل عنه، ويثنون معروفًا

حَتَّى أَتَوْا مَسْجِداً لِبَنِي عَبْسٍ.
فَقَالَ رَجُلٌ يُقَالُ لَهُ: أَبُو سعدَةَ: أَمَا إِذْ نَشَدْتُمُوْنَا بِاللهِ، فَإِنَّهُ كَانَ لاَ يَعْدِلُ فِي القَضِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَسِيْرُ بِالسَّرِيَّةِ.
فَقَالَ سَعْدٌ: اللَّهُمَّ إِنْ كَانَ كَاذِباً فَأَعْمِ بَصَرَهُ، وَعَجِّلْ فَقْرَهُ، وَأَطِلْ عُمُرَهُ، وَعَرِّضْهُ لِلْفِتَنِ.
قَالَ: فَمَا مَاتَ حَتَّى عَمِيَ، فَكَانَ يَلْتَمِسُ الجُدُرَاتِ، وَافْتَقَرَ حَتَّى سَأَلَ، وَأَدْرَكَ فِتْنَةَ المُخْتَارِ، فَقُتِلَ فِيْهَا  .
قَالَ عَبْدُ المَلِكِ: فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ يَتَعَرَّضُ لِلإِمَاءِ فِي السِّكَكِ، فَإِذَا سُئِلَ كَيْفَ أَنْتَ؟
يَقُوْلُ: كَبِيْرٌ مَفْتُوْنٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ.
مُتَّفَقٌ عَلَيْهِ  .

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூஃபாவில் ஆளுநராக இருந்தார்கள். அப்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மீது கூஃபா நகர மக்கள் விமர்சனம் ஒன்றை ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார்கள்.

அதாவது, ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்கும் போது சரியாக தொழ வைப்பதில்லை என்றும், குறிப்பாக மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் போது நீண்ட அத்தியாயங்களை ஓதுகின்றார்கள்” என்பது தான் அந்த விமர்சனம்.

உடனடியாக வந்த இந்த விமர்சனம் உண்மைதானா என்று கண்டறிய ஒரு குழுவை நியமித்தார்கள்.

அந்த குழு கூஃபா விரைந்து சென்று மக்களிடையே விசாரித்தது. கூஃபா நகர மக்களும், அவர் இமாமாக பணியாற்றும் மஸ்ஜிதின் மக்களும் ஸஅத் (ரலி) அவர்கள் குறித்து நல்லதையே கூறினார்கள்.

பனூஅபஸ் எனும் பள்ளியில் அந்தக் குழு விசாரித்த போது, அங்கிருந்த உஸாமா இப்னு கதாதா ( அபூஸஅதா ) என்பவர் எழுந்து ஆளுநர் ஸஅத் அவர்கள் எங்களுக்கு மத்தியில் சமத்துவமாகப் பங்கு வைப்பதில்லை, தீர்ப்பளிப்பதில் நீதியாக நடந்து கொள்வதும் இல்லை, எங்களோடு யுத்தகளங்களுக்கு வருவதும் இல்லைஎன்று குற்றம் சுமத்தினார்.

உண்மை கண்டறியும் குழுவினர் அதிர்ச்சியோடு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் சென்று நீங்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து வருமாறு அனுப்புனீர்கள். ஆனால், அங்கு ஒருவர் இன்னின்னவாறு புதுசாக விமர்சனங்களை வைக்கின்றார் என்று கூறினார்கள்.


கடிதம் கிடைக்கப்பெற்ற ஸஅத் (ரலி) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

அமீருல் முஃமினீன் முன்பாக வந்து நின்றார்கள் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள்.

அமீருல் முஃமினீன்: ஸஅதே! நீங்கள் அழகிய முறையில் தொழ வைக்கவில்லையாமே அப்படியா?

வாய் நிறைய புன்னைகை பூத்தவாறு ஸஅத் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! அம்மக்களுக்கு நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழ வைத்தது போன்றே முந்திய இரண்டு ரக்அத்தில் சற்று நீட்டியும் கடைசி ரக்அத்களில் சுருக்கமாகவும் தொழ வைத்தேன்என்று கூறினார்கள்.

அடுத்த படியாக உமர் (ரலி) அவர்கள் அபூஸஅதா எழுப்பிய மூன்று விமர்சனங்கள் குறித்து விளக்கம் கேட்டார்கள்.

இதைச் செவியுற்ற ஸஅத் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றவராக அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்குப் பாதகமாக நான் மூன்று பிரார்த்தனைகளைச் செய்கின்றேன்எனக்கூறிவிட்டு...

யாஅல்லாஹ்! உனது அடியார் உஸாமா இப்னு கதாதா என் மீது சுமத்திய குற்றச்சாட்டில் பொய்யுரைத்திருந்தால், அவர் பிரபல்யத்திற்காகவும், அதைக் கொண்டு இன்பம் அடைவதற்காகவும் கூறியிருந்தால் ”அவரின் ஆயுளை நீ நீளமாக்குவாயாக!, அவருக்கு வறுமையை நீ நீடித்துவிடுவாயாக!, அவரைக் குழப்பங்களுக்கு மத்தியில் வாழ வைப்பாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.

உஸாமா இப்னு கதாதா தங்களது கடைசி காலத்தில் தமது இரு புருவங்களும் கண்களின் மீது விழுந்து தொங்கும் அளவிற்கு முதுமை அடைந்தார். மேலும், கடுமையான வறுமை ஏற்பட்டு, வீதியில் வருவோர் போவோரிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அத்தோடு பாதையில் செல்லும் பெண்களை சில்மிஷம் செய்து, அவமாரியாதைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும், இது குறித்து அவரிடம் ஏன் இந்த வயதில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டால் ஸஅத் அவர்களின் மனவருத்தமும், துஆவும் தான் என்னுடைய இந்த கேவலமான நடவடிக்கைகளுக்கு காரணம்என்று பதில் கூறுவார்.

முக்தார் எனும் ஆட்சியாளரின் காலத்தில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் கடுமையான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்தார்.

                       ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் ஃகாபா )

எல்லாவற்றையும் விசாரித்து முடித்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் “ஸஅதே! உடனடியாகச் சென்று கூஃபாவில் மீண்டும் கவர்னராகப் பொறுப்பேற்றுக் கொள்வீராக!” என்றார்கள்.

இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள் கோபத்தோடு அமீருல் முஃமினீன் அவர்களே! “எனக்கு ஒழுங்காக தொழ வைக்கத் தெரியவில்லை என்று விமர்சித்த மக்களுக்கா என்னை தலைமையேற்றிடச் செல்லுமாறு ஆணையிடுகின்றீர்கள்? இல்லை, இனி ஒரு போதும் அங்கே செல்ல மாட்டேன் என்று கூறி வாழ்நாளின் இறுதி வரை மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.

இல்லாத ஒன்றை, செய்யாத ஒன்றை விமர்சனமாக முன் வைத்ததால் துஆ ஒப்புக்கொள்ளப்படும் பாக்கியம் நிறைந்த, சிறந்த போர் வீரரான, சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட நல்ல, சிறந்த பரக்கத்தான ஒரு மனிதரை கூஃபா நகர மக்கள் இழந்தனர்.                                    ( நூல்: உஸ்துல் காபா )

பிறர் விமர்சிக்கின்ற அளவிற்கு நம் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்…

حدثنا سعيد بن عفير قال: حدثني الليث قال: حدثني عبد الرحمن بن خالد عن ابن شهاب عن علي بن الحسين رضى الله تعالى عنهما أن صفية زوج النبي ﷺ أخبرته ح حدثنا عبد الله بن محمد حدثنا هشام أخبرنا معمر عن الزهري عن علي بن الحسين كان النبي ﷺ في المسجد وعنده أزواجه فرحن ، فقال لصفية بنت حيي لا تعجلي حتى أنصرف معك وكان بيتها في دار أسامة فخرج النبي ﷺ معها فلقيه رجلان من الأنصار فنظرا إلى النبي ﷺ ثم أجازا ، وقال لهما النبي ﷺ تعاليا إنها صفية بنت حيي قالا سبحان الله يا رسول الله قال إن الشيطان يجري من الإنسان مجرى الدم وإني خشيت أن يلقي في أنفسكما شيئا.

நபி {ஸல்} அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி {ஸல்} அவர்கள் (ரமளானின் இறுதிப் பத்து நாட்களில்) "இஃதிகாஃபி"ல் இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் நான் சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தபோது, என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி {ஸல்} அவர்களும் எழுந்தார்கள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது இல்லத்திலேயே என் வசிப்பிடம் இருந்தது.

அப்போது அன்சாரிகளில் இருவர் (எங்களைக்) கடந்து சென்றனர். அவ்விருவரும் நபி {ஸல்} அவர்களைக் கண்டதும் விரைவாக நடந்தனர்.

அப்போது நபி {ஸல்} அவர்கள், "சற்று நில்லுங்கள். இவர் (என் துணைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் இருவரும், "அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்!)" என்று கூறினர்.

நபி {ஸல்} அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தைப் போட்டுவிடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்றோ, அல்லது "எதையேனும் போட்டுவிடுவான்" என்றோ சொன்னார்கள்.

قال ابن إسحاق: فحدثني محمد بن يحيى بن حبان قال: ازدحما على الماء فاقتتلا فقال سنان: يا معشر الأنصار. وقال الجهجاه: يا معشر المهاجرين -وزيد بن أرقم ونفر من الأنصار عند عبد الله بن أبي-فلما سمعها قال: قد ثاورُونا في بلادنا. والله ما مثلُنا وجلابيب قريش هذه إلا كما قال القائل: "سَمن كلبك يأكلك". والله لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل. ثم أقبل على من عنده من قومه وقال: هذا ما صنعتم بأنفسكم، أحللتموهم بلادكم، وقاسمتموهم أموالكم، أما والله لو كففتم عنهم لتحولوا عنكم في بلادكم إلى غيرها. فسمعها زيد ابن أرقم، فذهب بها إلى رسول الله صلى الله عليه وسلم وهو غُلَيّمٌ -وعنده عمر بن الخطاب رضي الله عنه-فأخبره الخبر،

فقال عمر رضي الله عنه: يا رسول الله مر عَبّاد بن بشرْ (2) فليضرب عنقه. فقال صلى الله عليه وسلم: "فكيف إذا تحدث الناس -يا عمر-أن محمدا يقتل أصحابه؟ لا ولكن ناد يا عمر في الرحيل".

فلما بلغ عبد الله بن أبي أن ذلك قد بلغ رسولَ الله صلى الله عليه وسلم، أتاه فاعتذر إليه، وحلف بالله ما قال ما قال عليه زيد بن أرقم -وكان عند قومه بمكان-فقالوا: يا رسول الله، عسى أن يكون هذا الغلام أوهم ولم يثبت ما قال الرجل.
وراح رسول الله صلى الله عليه وسلم مُهجرًا في ساعة كان لا يروح فيها، فلقيه أسيد بن الحضير فسلم عليه بتحية النبوة، ثم قال: والله لقد رُحتَ في ساعة مُنكَرَة ما كنت تروح فيها. فقال رسول الله صلى الله عليه وسلم: "أما بلغك (3) ما قال صاحبك ابن أبي؟. زعم أنه إذا قدم المدينة سيخرج الأعز منها الأذل". قال: فأنت -يا رسول الله-العزيزُ وهو الذليل. ثم قال: يا رسول الله ارفق به فوالله لقد جاء الله بك وإنا لننظم له الخَرزَ لِنُتَوّجه، فإنه ليرى (4) أن قد استلبتَه ملكا.
فسار رسول الله صلى الله عليه وسلم بالناس حتى أمسوا، ليلته حتى أصبحوا، وصَدرَ يومه حتى اشتد الضحى. ثم نزل بالناس ليشغلهم عما كان من الحديث، فلم يأمن الناس أن وجدوا مَس الأرض فناموا، ونزلت سورة المنافقين (5)

முஸ்தலக் போரில் நயவஞ்சகர்களும் முஸ்லிம்களுடன் கிளம்பி இருந்ததால் அல்லாஹ் திருமறையிலே சுட்டிக்காட்டும்...

“அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதனையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டுபண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:47)

இக்கூற்றுக்கு ஒப்பாகவே அவர்கள் நடந்து கொண்டனர். தீங்கு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் முஸ்லிம்களின் அணியில் பெரும் பிணக்கையும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மிக இழிவான பழியையும் உருவாக்கினர். அதன் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.

நாம் மதீனாவிற்குத் திரும்பினால் இழிவானவர்களைக் கண்ணியமானவர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் போர் முடித்துத் திரும்பும் போது உரைஸிஃஎன்ற இடத்தில் தங்கியிருந்தார்கள்.
அப்போது தண்ணீர் நிரப்பிக் கொள்ளும் ஓர் இடத்தில் முஹாஜிர்களில் ஜஹ்ஜாஹ் அல் கிஃபா என்பவரும், அன்சாரிகளில் கினான் இப்னு வபர் அல் ஜுஹ்னி என்பவரும் சண்டை செய்து கொண்டனர். அப்போது ஜுஹ்னி அன்சாரிகளின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்என்றார்.

ஜஹ்ஜாஹ் முஹாஜிர்களின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்என்றார். இக்கூச்சலைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது இவ்வாறு அறியாமைக்கால வார்த்தைகளையா பயன்படுத்துகிறீர்கள்? இதை விட்டு விடுங்கள். அது மிக அசுத்தமானது!என்று எச்சரித்தார்கள்.

இந்தச் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலுக்கு எட்டியது. இதனால் அவன் கோபமடைந்தான். அவனுடன் அவனது இனத்தவரில் சிலர் இருந்தனர். அவர்களில் மிகச் சிறிய வயதுடைய ஜைதுப்னு அர்கம் என்பவரும் இருந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்படியா அவர்கள் செய்தார்கள்! நமக்கு வெறுப்பூட்டி விட்டார்கள். நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமக்கும் அவர்களுக்குமுள்ள உதாரணம்: உனது நாயை நல்ல கொழுக்க வளர்ப்பாயாக! அது இறுதியில் உன்னையே தின்றுவிடும்’ (வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது) என்பதுதான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியமானவர்கள் இழிவானவர்களை அங்கிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும்என்று கூறினான்.

மேலும், தனக்கு முன் இருந்தவர்களை (அன்சாரிகளை) நோக்கி, “பார்த்தீர்களா! இது நீங்கள் உங்களுக்கே தேடிக் கொண்டது. அவர்களை உங்கள் ஊரில் தங்க வைத்து உங்களது பொருட்களை பங்கு வைத்துக் கொடுத்தீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்என்று கூறினான்.

ஜைது இப்னு அர்கம் தனது தந்தையின் சகோதரரிடம் இச்செய்தியைக் கூற, அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அங்கு உமரும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அப்பாத் இப்னு பிஷ்ருக்குக் கட்டளையிடுங்கள். அவர் அவனைக் கொன்று விடட்டும்என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமரே! அப்படி எவ்வாறு செய்ய முடியும்? முஹம்மது தமது தோழர்களைக் கொல்கிறார் என்று மக்கள் பேசுவார்கள். எனவே, அவ்வாறு செய்யக் கூடாது. நீர் அனைவரையும் இங்கிருந்து புறப்படுவதற்கு அறிவிப்புச் செய்வீராக! என்று கூறினார்கள்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் பயணிக்க மாட்டார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க பயணத்தைத் தொடங்கினர். அப்போது உஸைது இப்னு ஹுழைர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி, “நபியே! நீங்கள் வழக்கத்துக்கு மாற்றமான நேரத்தில் பயணிக்கிறீர்களே!என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இப்னு உபை கூறிய செய்தி உமக்கு தெரியாதா?” என்று கேட்டார்கள். அதற்கு உஸைது (ரழி), “அவன் என்ன கூறினான்?” என்று கேட்டார். அவன் மதீனாவிற்குத் திரும்பினால் அதிலுள்ள கண்ணியவான்கள் இழிவானவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறினான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உஸைது (ரழி) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பினால் அவனை மதீனாவிலிருந்து வெளியேற்றலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இழிவானவன். நீங்கள்தான் கண்ணியமானவர்கள்என்று கூறிவிட்டுஅல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனுடன் சற்று மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். அவனது கூட்டத்தினர் அவனைத் தங்களது தலைவராக்க நினைத்த போது அல்லாஹ் உங்களை எங்களிடம் கொண்டு வந்தான். எனவே, நீங்கள்தான் அவனது பதவியைப் பறித்துக் கொண்டீர்கள் என்று அவன் எண்ணுகிறான்என்று ஆறுதல் கூறினார்கள்.

அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக் கொண்டு மாலைவரை பயணித்தார்கள். பயணத்தில் எங்கும் ஓய்வெடுக்காமல் அன்று இரவிலிருந்து மறுநாள் முற்பகல் வரை தொடர்ந்து பயணம் செய்தார்கள். அதற்குப் பின் மக்களுக்கு ஓய்வெடுக்க அனுமதி கொடுத்தார்கள். கடுமையான களைப்பின் காரணமாக மக்கள் இறங்கியவுடன் அயர்ந்து தூங்கி விட்டார்கள். இவ்வாறு நபி (ஸல்) செய்ததற்குக் காரணம், மக்கள் வேறு எந்த பேச்சிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இருக்கலாம்.

நபி (ஸல்) அவர்களிடம் ஜைதுப்னு அர்கம் இச்செய்தியைக் கூறிவிட்டார் என்ற விவரம் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு தெரியவந்தது. உடனே அவன் நபியவர்களைச் சந்தித்து தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த சில அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! ஜைது சிறுவர். அவர் சரியாக விளங்கி இருக்கமாட்டார். இப்னு உபை கூறிய சொல்லை அச்சிறுவர் சரியாக நினைவில் வைக்கத் தெரியாது. எனவே, இப்னு உபை கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்என்றனர்.

இது தொடர்பாக ஜைது இப்னு அர்கம் அவர்களே கூறுகிறார்கள்: மக்கள் என்னை பொய்யர் என்று கூறியதால் எனக்கு இதுவரை ஏற்பட்டிராத பெரும் கவலை ஏற்பட்டு நான் எனது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டேன். அந்நிலையில் எனது கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆனில் அத்தியாயம் 63ல் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.

ஜைது இப்னு அர்கம் (ரழி) கூறுகிறார்கள்: இந்த வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவுடன் அவர்கள் என்னை அழைத்து இவற்றைக் ஓதிக்காண்பித்து அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான்என்று கூறினார்கள்.

 ( நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் )

விமர்சனம் மற்றும் விமர்சித்தலின் எல்லையை அடையாளம் கண்டோம்! அதற்குள் பயணித்து வாழும் நஸீபையும், விமர்சிப்பதில் இருந்து தவிர்ந்து வாழும் தௌஃபீக்கையும், பிறர் விமர்சிப்பதில் இருந்து பாதுகாப்பையும் அல்லாஹ் நம் எல்லோருக்கும் நல்குவானாக! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!