Showing posts with label Prophet. Show all posts
Showing posts with label Prophet. Show all posts

Thursday 21 October 2021

வாழ்க்கையை வளமாக்கும் வள்ளல் நபி ﷺ யின் சோபனங்கள்!!! பாகம் – 2.

 

வாழ்க்கையை வளமாக்கும்

வள்ளல் நபி   யின் சோபனங்கள்!!! பாகம் – 2.



உடுத்த ஒரு துணியில்லாவிட்டாலும், உண்ண ஓர் கவளம் உணவில்லா விட்டாலும், ஒதுங்க ஓர் இடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனுசனுக்கு  மனசில நிம்மதி இருக்க வேண்டாமா? என அங்கலாய்ப்பவர்கள் பாருலகில் பலருண்டு.

என்னிடம் காசு இருக்கிறது, பணம் இருக்கிறது, சமூகத்தில் எனக்கென ஓர்  மரியாதை அந்தஸ்து இருக்கிறது, சொகுசு பங்களாவும், பஞ்சு மெத்தைகளும் இருக்கிறதுநாலு தலைமுறைக்கு இருந்து சாப்பிடுகிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறது.

இருந்து என்ன பிரயோஜனம்? இத்தனை இருந்தும் மனசில் நிம்மதி இல்லையே?  என குமுறுபவர்களும் இப்பாருலகில் உண்டு.

கோடிகளில் புரள்பவர்களும், தெருக்கோடியில் நிற்பவர்களும், ஆள்பவர்களும்,  ஆளப்படுபவர்களும், படித்தவர்களும், பாமரர்களும் எந்த வித்தியாசமும் இன்றி  நினைப்பதும், விரும்புவதும் மன நிம்மதியான ஓர் வாழ்க்கை வாழவேண்டும் என்று  தான்.

அந்த வாழ்க்கை ஒரு நிமிடமானாலும் சரி, ஒரு மணி நேரமானாலும் சரி, ஒரு  வருடமானாலும் சரி அறுபது ஆண்டுகள் ஆனாலும் சரி நிம்மதியோடு வாழ்கிற  வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும்.

எல்லாவற்றையும் தேடிப் பெற்றுக்கொள்வது போன்றே நிம்மதியையும் தேடித்  திரிந்து எப்பாடு பட்டாவது பெற்றுக் கொள்ளலாம் என உலகெங்கும் சுற்றித் திரிகின்றான்.

எது இருந்தால் நமக்கு நிம்மதி கிடைக்கும்? எது கிடைத்தால் நாம் நிம்மதியை உணர்வோம்? இது தான் இன்றைய நம்மில் பலருடைய கேள்வியும், தேடலும்

நபித்தோழர்களின் வாழ்க்கையின் தரவுகளில் நாம் தேடிப்பார்த்தால் இதற்கான விடையை விசாலமாகவே பெற முடிகின்றது.

ஆம், சதா நெருக்கடிகள், போர்கள், மரணங்கள், இரத்தக் காயங்கள், ஏழ்மை, வறுமை என பல்வேறு துன்பங்களுக்கு இடையேயும் அந்த நபித்தோழர்கள் நிம்மதியை உணர்ந்தார்கள்.

அந்த நபித்தோழர்களுக்கு கிடைத்த அந்த நிம்மதி நமக்கு கிடைக்காமல் போனதற்கான காரணங்களை நாம் அலசி ஆராய்ந்தால் நாம் மகத்தான ஒரு அருட்கொடையை இழந்திருக்கின்றோம் என்பதை அறிய முடிகின்றது.

ஆம்! அந்த அருட்கொடைவாழ்க்கைக்கையை வளமாக்குகின்ற ஆற்றல் கொண்ட வள்ளல் நபி அவர்களின் சோபனமும், துஆவும்தான் என்றால் அது மிகையல்ல.

 

அவர்களின் வணக்க வழிபாடுகளோடு வள்ளல் நபியின் துஆவுடைய பரக்கத்தும் நிறைந்து இருந்ததால் அவர்கள் நிம்மதியை உணர்ந்தார்கள். நிம்மதியாய் வாழ்ந்தார்கள்.

அப்படியென்றால், வள்ளல் நபி அவர்கள் நமக்காக துஆ செய்யவில்லையா? நபி {ஸல்} அவர்களின் துஆவுடைய பரக்கத் நமக்கு கிடைக்காதா? என்று நாம் அங்கலாய்க்கத் தேவையில்லை.

வள்ளல் நபி    அவர்களின் துஆ இன்றும், நாளையும், உலக முடிவுநாள் வரையிலும் நமக்குண்டு, அவர்களின் துஆவின் பரக்கத்தும் நமக்குண்டு!

ஆனால், அந்த துஆவைப் பெறுகிற விஷயத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம்? அந்த துஆவின் பரக்கத்தை அனுபவிக்கும் விஷயத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்? என்பதில் பிரச்சினை இருக்கின்றது.

      நமக்காக வள்ளல் நபி அவர்கள் செய்த துஆ ஹதீஸ் கிரந்தங்களில் நிரப்பமாக இருக்கின்றது. நமக்காக வள்ளல் நபி கூறிய சோபனங்களும் ஏராளமாக குவிந்து கிடக்கின்றது.

இன்ஷாஅல்லாஹ்.. இன்றைய ஜும்ஆவின் அமர்வில் மிக முக்கியமான ஒரு துஆவை நாம் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கும், முன்பாக வள்ளல் நபி அவர்களின் துஆவால் வளமான வாழ்க்கையைப் பெற்றவர்கள், வெற்றி அடைந்தவர்கள், பரக்கத் பெற்றவர்கள் என்று வரலாறு அடையாளப்படுத்தும் நபித்தோழர்களின் வாழ்விலிருந்து சில செய்திகளை நாம் அறிந்து கொண்டால் நாமும் நபி {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத்தில் வாழ்ந்திட ஆசைப்படுவோம்! அதற்காக முயற்சிப்போம்! அதற்காக செயல்படுவோம்!.

 

நபித்தோழர்களை வியக்க வைத்த உர்வா (ரலி) அவர்களின் வாழ்க்கைத்தரம்

عروة بن الجعد - وقيل ابن أبي الجعد - البارقي، وقيل الأزدي قاله أبو نعيم. سكن الكوفة،

كتاب الرسول صلى الله عليه وسلم لابناء بــــارق :
(هذا كتاب من محمد رسول الله لبارق , لاتجز ثمارهم ولا ترعى بلادهم في مربع ولا مصيف إلابمسأله من بارق,ومن مر بهم من المسلمين في عرك اوجدب فله ضيافة ثلاثه ايام , وإذا اينعت ثمارهم فلإبن السبيل اللقاط يوسع بطنه من غير ان يقـتثـم)
شهد على هذا الكتاب ابو عبيده بن الجراح , وحذيفه بن اليمان

وكاتبه للرسول صلى الله عليه وسلم أبي بن كعب.

 

وكان عروة بن الجعد مرابطا، ومعه عدة أفراس منها فرس أخذه بعشرة آلاف درهم.
وقال شبيب بن غرقدة: رأيت في دار عروة بن الجعد سبعين فرساً مربوطة للجهاد في سبيل الله عز وجل.

 

كان قائدا في معركة الخنافس وهي امتداد لحرب المرتدين:
في 11 من شعبان 12هـ
عندما نشبت معركة "الخنافس" بين المسلمين وكان القائد في المعركه هو عروة بن الجعد البارقي ونصارى العرب أثناء الفتح الإسلامي للعراق، وقد انتصر المسلمون في هذه المعركة. بقيادة عروه رضي الله عنه .

استعمله عمر بن الخطاب على قضاء الكوفة وضمَّ إليه سليمان بن ربيعة قبل أن يستقضي شريحاً. قال الشعبي: أوّل من قضى على الكوفة عروة بن الجعد البارقي.وهو أحد الذين سيّرهم عثمان إلى الشام من أهل الكوفة

دعاء الرسول صلى الله عليه وسلم لعروة بن أبي الجعد الباقري رضي الله عنه

 

يروى عن عروه بن الجعد البارقي رضي الله عنه انه قال ( ان النبي صلى الله عليه وسلم اعطاه دينارا وقال اشتر شاه فذهب واشترى شاتين ثم باع احداهما بالثمن نفسه وجاء النبي صلى الله عليه وسلم بماله وشاته فدعا له النبي صلى الله عليه وسلم  فكان لا يضارب في صفقه الا ربح فيها حتى اعتقد الصحابه انه لو باع التراب لربح فيه ) رواه البخاري

. وفي مسند الإمام أحمد أنه قال له

اللهم بارك له في صفقة يمينه؛ فكان يقف في الكوفة ويربح أربعين ألًفا قبل أن يرجع إلى أهله             

مسند أحمد  ٤ /٣٧٦

பெருமானார் அவர்கள் ஹுதைபிய்யாவின் உடன்படிக்கைக்குப் பின்னர் ஏராளமான நாடுகளுக்கும், மன்னர்களுக்கும், சிறு, குறு நில அரசர்களுக்கும், மிகப் பெரிய கோத்திரங்களுக்கும் இஸ்லாமிய அழைப்பியலைச் சுமந்த கடிதங்களை எழுதி தூதுவர்கள் மூலமாக அனுப்பினார்கள்.

உபை இப்னு கஅப் (ரலி) அவர்களைக் கொண்டு எழுதப்பட்ட கடிதத்தை அபூஉபைதா அல் ஜர்ராஹ் (ரலி) ஹுதைஃபா இப்னு அல் யமான் (ரலி) அவர்கள் மூலமாக யமனில் வாழ்ந்து வந்த அல் அஸ்த் குலத்தின் கிளைக் கோத்திரமான பாரிக்கின் மக்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஹிஜ்ரி 7 அல்லது மக்கா வெற்றிக்குப் பின்னர் பாரிக்கின் மக்களில் ஒருவரான உர்வா இப்னு அல் ஜஅதுல் பாரிகீ (அல்லது) உர்வா இப்னு அபில் ஜஅதுல் பாரிகீ என்பவர் மாநபி அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

மாநபி அவர்களுக்கு பணிவிடை செய்யும் பிரத்யேகமான நபித்தோழர்களில் ஒருவராகவும் இடம் பெற்ற அவர்கள் திண்ணைத்தோழர்களில் ஒருவராகவும் இருந்தார்கள்.

குதிரை வீரரான அவர்கள் ஃப்த்ஹ் மக்காவின் பின்னர் நடைபெற்ற போர்களில் பங்கேற்றார்கள். வீர தீரத்துடன் வெற்றிக்கு பங்களித்தார்கள்.

ஒரு நாள் பெருமானார் அவர்கள் ஒரு தீனாரைக் கொடுத்து ஆடு ஒன்றை வாங்கி வருமாறு உர்வா (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.

அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளை உர்வா (ரலி) அவர்களின் வாயிலாகவே நாம் கேட்போம்.. ”ஒரு நாள் பெருமானார் அவர்கள் என்னிடம் ஒரு தீனாரைக் கொடுத்து ஆடு ஒன்றை வாங்கி வருமாறு கூறினார்கள். நான் ஒரு தீனாரைக் கொண்டு ஒருவரிடம் இரண்டு ஆடுகளை வாங்கினேன். வரும் வழியில் ஒரு ஆட்டை ஒரு தீனாருக்கு விற்று விட்டேன். அந்த ஒரு தீனாரை நான் எனக்காக வைத்துக் கொண்டேன். பின்னர் நபி அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! இதோ உங்களின் ஆடு! இது எனக்கு உரிய தீனார் என்று கூறி நடந்த நிகழ்வுகளை நான் கூறினேன். அப்போதுநபி அவர்கள்அல்லாஹ் உம்முடைய வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக!” என்று துஆ செய்தார்கள்.

பெருமானார் அவர்கள் செய்த இந்த துஆ உர்வா (ரலி) அவர்களை எப்படி வாழ வைத்தது என்பதை வரலாறு வாகாய் எடுத்துரைப்பதை நாம் பார்ப்போம்.

மாநபி அவர்களின் மறைவுக்குப் பின்னர் அபூபக்ர் (ரலி) ஆட்சிக்காலத்தில் மதம் மாறியவர்களுக்கு எதிரான போரில் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையிலான இராக்கின் ஒரு பகுதியில் வசித்து வந்த அரபு நஸரானிகளுக்கு எதிராக ஹிஜ்ரி 12 ஷஅபான் பிறை 11-ல் நடைபெற்றஃகனாஃபிஸ்யுத்தத்தில் பங்கேற்றார்கள்.

அதன் பின்னர் கூஃபாவிலேயே இருந்து விட்டார்கள். கூஃபாவிலே தங்களின் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். வீட்டிலிருந்து காலையில் கூஃபாவின் பெரிய சந்தைக்கு வருகிற உர்வா (ரலி) அவர்கள் மீண்டும் வீட்டுக்கு செல்கிற போது 40 ஆயிரம் தீனார்களை லாபமாகப் பெற்றே செல்வார்கள்.

நபித்தோழர்களும், கூஃபா நகர மக்களும்இவர் மண்ணை விற்றாலும் கூட அதிலிருந்தும் லாபம் அடைந்து கொள்வார்என்று பேசிக் கொள்வார்களாம். அந்த அளவிற்கு லாபகரமான வியாரத்திற்கு சொந்தக்காரராகவும், கூஃபா நகரத்தின் மிகப் பெரும் செல்வந்தராகவும் விளங்கினார்கள்.

ஷபீப் இப்னு ஃகர்கதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உர்வா (ரலி) அவர்கள் சிறந்த குதிரை வீரராக திகழ்ந்தார்கள். அவர்களின் வீட்டில் அதிக எண்ணிக்கையில் குதிரைகள் இருந்தன. அந்த குதிரைகளில் ஒரு குதிரையின் விலை 10 ஆயிரம் திர்ஹம் ஆகும். அவர்களின் வீட்டில் போருக்குச் செல்ல தயார் நிலையில் எப்போதும் 70 குதிரைகள் இருக்கும்”.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கூஃபா நகரின் முதல் நீதிபதியாக ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்டார்கள். கூஃபா நகரத்தின் மிக முக்கியமான ஏழு ஆளுமைகளில் (நபித்தோழர்களில்) ஒருவராகவும் திகழ்ந்தார்கள்.

யமனில் இருந்து வந்து, இஸ்லாத்தை ஏற்று நான்கு ஆண்டுகள் மாநபி {ஸல்} அவர்களின் தோழமையைப் பெற்று, திண்ணைத் தோழர்களில் ஒருவராய் இருந்து, மஸ்ஜிதுன் நபவீயின் திண்ணையில் படுத்துறங்கி ஒரு தீனாரைக் கொண்டு வாழ்வைத் துவங்கிய உர்வா இப்னு அல் ஜஅதுல் பாரிகீ (அல்லது) உர்வா இப்னு அபில் ஜஅதுல் பாரிகீ (ரலி) கூஃபாவின் மிகப் பெரும் செல்வந்தராக வாழ்ந்து, ஹிஜ்ரி 73 –ல் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றார்கள். ( நூல்: அல் வாஃபி பில் வஃபிய்யாத், வஃப்யாத்துல் அஃயான், தாரீக்குல் இஸ்லாம், முஸ்னத் அஹ்மத், புகாரி )

சாமானியராக வாழ்ந்த அவர்களின் வாழ்வைத் துலக்கியது மாநபி அவர்களின் துஆ என்றால் அது மிகையல்ல.

 

இயற்கையை விஞ்சும் வாழ்க்கையை வாழ்ந்த அபூகதாதா (ரலி) அவர்கள்...

70 வயது வரை வாழ்ந்த போதிலும் தலை முடி நரைக்காமலும், தோல் பொலிவு மங்காமலும், வயது முதிர்ந்த நிலையிலும் 15 வயது இளம் வாலிபரைப் போல வாழ்ந்தவர்கள் அபூகதாதா (ரலி) அவர்கள்.

அவர்களின் பற்கள் விழுந்தால் மீண்டும் முளைத்து விடும் அற்புதத்தைப் பெற்றிருந்தார்கள். அவர்களின் முகத்தில் எவ்வித காயமும், அடியும் ஏற்படாதவாறு வாழ்வின் இறுதிவரை அவர்கள் வாழ்ந்தார்கள்.

ஆம்! இயற்கையை விஞ்சும் இந்த வாழ்க்கைக்குப் பின்னால் பெருமானார் அவர்களின் துஆவே இருந்தது.

பெருமானார் அவர்கள் செய்த பாக்கியமான இரு துஆக்கள் அபூகதாதா (ரலி) அவர்களின் இந்த வாழ்க்கைக்கு வித்திட்டது.

 

தூ கரத் எனும் இடத்தில் (மதீனாவில் இருந்து இரண்டு நாள் பயணத் தொலைவில் ஷாமுக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் இடத்திற்கு பெயராகும்) நபி அவர்களின் பொறுப்பில் இருந்த பால் தரும் 20 ஒட்டகங்களை இப்னு அபீதர் (ரலி) மற்றும் அவரின் மனைவியின் கண்காணிப்பில் பராமரிக்க நபி அவர்கள் நியமித்திருந்தார்கள்.

இந்நிலையில் ஒரு நாள் ஃபஸாரா குலத்தைச் சார்ந்த (அப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த) உயைய்னா இப்னு ஹஸன் என்பவர் கத்ஃபான் குலத்தாரை உதவிக்கு அழைத்துக் கொண்டு தூ கரத்திற்கு சென்று இப்னு அபீதர் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அவர்களின் மனைவியையும், 20 ஒட்டகங்களையும் கடத்திச் சென்று விட்டார்.

இந்த தகவலை அறிந்த மாநபி அவர்கள் ஸலமா இப்னுல் அக்வஃ, அக்ரம், அபூகதாதா (ரலி – அன்ஹும்) ஆகியோருடன் சில நபித்தோழர்களை முன்னதாக அந்த இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு பின்னால் 500 வீரர்களோடு பயணமானார்கள்.

இந்த நிகழ்வுக்கு தாத்துல் கரத் யுத்தம் என்று வரலாற்றில் பெயரிடப்பட்டுள்ளது. கைபருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி) அவர்களும், அபூகதாதா (ரலி) அவர்களும் கடுமையாக போரிட்டு ஒட்டகங்களையும், இப்னு அபீதர் (ரலி) அவர்களையும் மீட்டனர். சண்டையின் துவக்கத்திலேயே அக்ரம் (ரலி) அவர்கள் எதிரி ஒருவனால் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

மலைப்பாங்கான பள்ளத்தாக்கு ஒன்றில் நடபெற்ற இந்த சண்டையில் எதிரிகள் புற முதுகிட்டு ஓடிவிட்டனர். இதே நேரத்தில் இஷாவுடைய நேரத்தில் மாநபி அவர்கள் அந்த இடத்திற்கு 500 படை வீரர்களோடு வந்து விட்டார்கள்.

 

வெற்றியை உறுதி செய்து எதிரிகளை ஓடச் செய்த ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களையும் அபூகதாதா (ரலி) அவர்களையும் பாராட்டி பேசிய நபி அவர்கள் அபூகதாதா (ரலி) அவர்களின் முகத்தில் ஒரு காயத்தை பார்க்கின்றார்கள்.

قال: «فما هو الذي بوجهك؟» قلت: سهم رميت به. قال: «فادن مني». فبصق عليه ، فما ضرب عليّ قط ولا قاح. (أي أن الجرح شفي بإذن الله فما آلمه ولا فسد مكانه).

). وفي رواية: قال: «اللهم بارك له في شعره وبشره،

அந்த காயம் குறித்து நபி {ஸல்} அவர்கள் வினவிய போது “இது எதிரி ஒருவன் எய்த அம்பு தாக்கியதில் ஏற்பட்டது என்று கூற, உடனே நபி அவர்கள் அந்த இடத்தில் தங்களின் முபாரக்கான எச்சிலை உமிழ்ந்து விட்டு “அல்லாஹ்வே! இவரில் தலை முடியிலும், தோலிலும் பரக்கத் செய்வாயாக” என்று துஆ செய்தார்கள். ( நூல்: புகாரி, இஸ்தீஆப் )

وعن أبي قتادة -رضي الله عنه- قال: «كنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره إذ تأخر عن الراحلة، فدعمته بيدي، حتى استيقظ، فقال: «اللهم احفظ أبا قتادة كما حفظني منذ الليلة». وفي رواية «اللهم احفظ أبا قتادة كما حفظ نبيك هذه الليلة

அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் ஒரு (போரிலிருந்து) பிரயாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது நபி அவர்கள் பயணித்த வாகனம் மற்ற வாகனங்களோடு வருவதற்கு தாமதமானது. நபி {ஸல்} அவர்கள் வாகனத்திலேயே உறங்கிவிட்டார்கள். அப்போது நான் நபி அவர்கள் கீழே விழாதிருக்க என் கைகளால் நபி {ஸல்} அவர்களைத் தாங்கிக் கொண்டேன். மாநபி அவர்கள் கண் விழித்த போது என்னை அவர்களைத் தாங்கிய நிலையில் பார்த்தார்கள். அப்போது, “அல்லாஹ்வே! உன் நபியை இன்றைய இரவில் பாதுகாத்த இவரை நீ பாதுகாப்பாயாக! என்று துஆ செய்தார்கள். இன்னொரு அறிவிப்பில் ”அல்லாஹ்வே! என்னை இன்றைய இரவில் அபூகதாதா பாதுகாத்தது போன்று நீயும் அவரை பாதுகாப்பாயாக! என்று துஆ செய்தார்கள்.

ஹள்ரத் அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் வரை வாழ்ந்த அபூகதாதா (ரலி) அவர்கள் முகப் பொலிவோடும், தேக சுகத்தோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்ந்தார்கள். அவர்கள் இந்த உலகத்தை விட்டு விடை பெற்ற போது அலீ (ரலி) அவர்களே ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள். ( இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத் )

 

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு நபி {ஸல்} அவர்கள் செய்த இரு துஆக்கள்..

 

حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ، قَالَ : كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلامِ ، فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ اللَّهِ مَا أَكْرَهُ ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي ، فَقُلْتُ

 يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلامِ فَتَأْبَى عَلَيَّ فَدَعَوْتُهَا الْيَوْمَ فَأَسْمَعَتْنِي فِيكَ مَا أَكْرَهُ ، فَادْعُ اللَّهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 " اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ " ، قَالَ : فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جِئْتُ قَصَدْتُ إِلَى الْبَابِ ، فَإِذَا هُوَ مُجَافٍ ، فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمِي فَقَالَتْ : مَكَانَكَ يَا أَبَا هُرَيْرَةَ ، وَسَمِعْتُ خَضْخَضَةَ الْمَاءِ ، قَالَ : فَاغْتَسَلَتْ ثُمَّ لَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِهَا ، فَفَتَحَتِ الْبَابَ ، ثُمَّ قَالَتْ : يَا أَبَا هُرَيْرَةَ ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَنَا أَبْكِي مِنَ الْفَرَحِ ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَبْشِرْ قَدِ اسْتَجَابَ اللَّهُ لَكَ ، وَهَذِهِ أُمُّ أَبِي هُرَيْرَةَ فَحَمِدَ اللَّهَ ، وَقَالَ خَيْرًا ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يُحَبِّبَنِي وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَيُحَبِّبُهُمْ إِلَيْهِ ،

 قَالَ : فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اللَّهُمَّ حَبِّبْ عَبِيدَكَ هَذَا

 يَعْنِي أَبَا هُرَيْرَةَ " وَأُمَّهُ إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِلَيْهِ الْمُؤْمِنِينَ

وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَمَا خَلَقَ اللَّهُ مُؤْمِنًا سَمِعَ بِي وَلا يَرَانِي إِلا أَحَبَّنِي  

 

 

அன்றொரு நாள் அல்லாஹ்வின் தூதர்  அவர்களின் திருச்சபைக்கு அருமைத்தோழர் அபூஹுரைரா (ரலி) அழுதவாறே வருகின்றார்கள்.

அண்ணல் நபி  அவர்கள் அருகே அழைத்து அபூஹுரைரா ஏன் அழுகின்றீர்? அழ என்ன காரணம்?” என்று வினவினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அழுதவாறே அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இன்னும் சத்திய தீனை ஏற்றுக் கொள்ளவில்லை. என் தாயாரிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன்.

என் தாய் எதிர்பாராத விதமாக என்னை அடித்து விட்டார்கள். மேலும், உங்களையும் விமர்சித்து விட்டார்கள். ஆதலால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எனவே தான் நான் அழுகிறேன் என்று கூறினார்கள்.

அதைக் கேட்டதும் நபிகளார் அபூஹுரைராவே! உமக்கு உன் தாயாரின் மீது அளவு கடந்த நேசமா? இல்லை, இந்த இறைத்தூதரின் (என்) மீது அளவு கடந்த நேசமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது தான் நான் அளவு கடந்த நேசம் வைத்திருக்கின்றேன். என்றாலும், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும் என்றார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்! என் அன்பு தோழரே! என்று நபி  அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ”யா அல்லாஹ் அபூஹுரைராவின் தாயாருக்கு ஹிதாயத்தைக் கொடு!” என்று நீங்கள் ஒரேயொரு துஆ செய்ய வேண்டும் என்றார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் துஆ செய்ததும் தான் தாமதம். வேகமாக வெளியேறி தமது வீட்டை நோக்கி விரைந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர்  அவர்களின் துஆவின் சக்தியை நேரில் பார்த்தவர்களல்லவா? அதன் வீரியத்தை உணர்ந்தவர்களல்லவா?

ஆம்! அவர் எதை எதிர்பார்த்து வீட்டை நோக்கி ஓடினாரோ, அது அப்போது நடந்து கொண்டிருந்தது. அபூஹுரைரா (ரலி) அவர்களின் தாயார் குளித்து முடித்து, புதிய ஆடை அணிந்து, பர்தா அமைப்பைப் பேணி வாசலின் கதவைத் திறந்து தமது மகனார் அபூஹுரைரா (ரலி) அவர்களின் முகத்தை மலர்ச்சியோடு நோக்கியவாறு கலிமா ஷஹாதா கூறினார்கள்.

போன அதே வேகத்தோடு, இம்முறை ஆனந்தக் கண்ணீரோடு தமது தாயாரையும் கையோடு அழைத்து வந்து அண்ணலாரின் சபையிலே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் பிரார்த்தனையின் பலனை என்னோடு அழைத்து வந்திருக்கின்றேன்! இதோ என் தாயார் முஸ்லிமாகி விட்டார்கள் என ஆனந்தத்தில் ஆர்ப்பரித்துக் கூறினார் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதரும் அதை ஆமோதிக்கும் முகமாக புன்னகையோடு மிகவும் நன்று என்று கூறி தலையசைத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இன்னொரு துஆவையும் நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டும்!” என்று வேண்டினார் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

உம்! என்ன துஆ செய்ய வேண்டும் தோழரே! கூறுங்கள் என்றார்கள் நபி  அவர்கள்.

அதற்கு, அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என்னையும், என் தாயரையும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்கள் நேசிக்க வேண்டும். நானும் என் தாயாரும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்களை நேசிக்க வேண்டும் இதற்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய்யுங்கள் என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர்  அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் விரும்பியவாறே துஆ செய்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் அதன் பிறகு என்னையும், என் தாயாரையும் முஃமின்கள் அனைவரும் நேசித்தார்கள். புதிதாய் பார்க்கிற, பழகுகின்ற முஃமின்களும் எங்கள் இருவரையும் நேசிப்பதை நான் உணர்ந்தேன்.”

( நூல்: ஃபளாயிலுஸ் ஸஹாபா லின் நஸாயீ, உஸ்துல்ஃகாபா, அல் இஸ்தீஆப், தபகாத்துல் குப்ரா லி இப்னு ஸஅத் )

 

பத்து அறிஞர்களை பெற்றுத் தந்த பெருமானார் அவர்களின் துஆ…

 

فولد له منها غلام كان قد أعجب به فمات صغيراً فأسف عليه، ويقال: أنه أبو عمير صاحب النغير ثم ولدت له عبد الله بن أبي طلحة فبورك فيه وهو والد إسحاق ابن عبد الله بن أبي طلحة الفقيه وإخوته وكانوا عشرة كلهم حمل عنه العلم

 

அபூதல்ஹா (ரலி) உம்மு ஸுலைம் (ரலி) மதீனாவின் மிகச் சிறப்பான தம்பதியர். இனிதே நடந்த இவர்களின் திருமணத்தின் வாயிலாக அல்லாஹ் மழலைப்  பாக்கியத்தை வழங்கினான். அபூ உமைர் என்று இருவராலும் மிகச் செல்லமாக  அழைக்கப்பட்டார் அந்த மழலை.

அண்ணலார் அவர்கள் கூட அந்த மழலையிடத்திலே மிகவும் பாசத்தோடும் பரிவோடும் பழகியதாக வரலாற்றில் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சியும் உண்டு. ஒரு நாள்  வியாபார விஷயமாக அபூதல்ஹா (ரலி) வெளியூர் சென்றிருந்த தருணம் அது..

திடீரென நோய் வாய்ப்பட்டு அபூ உமைர் இறந்து போகிறார். அந்நாளின் இரவில்  அபூதல்ஹா ஊர் திரும்பி வீட்டிற்கு வந்தார்.

உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களின் உறவினர்கள், அண்டை வீட்டார்கள் என அனைவரையும் அழைத்து என் கணவர் அபூதல்ஹா அவர்களிடம் குழந்தை இறந்து போன விஷயம் சம்பந்தமாக நீங்கள் யாரும் அவரிடம் சொல்லி விடக்கூடாது. நானே அவர்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன்என்றார்கள்.

 

எப்போதையும் விட தம் வீடு இப்போது மிகவும் அமைதியாக இருப்பதை அபூதல்ஹா உணர்ந்தார்.  ஒருவேளை சிறுவன் அபூஉமைர் உறங்கியிருப்பதால் இவ்வாறு  அமைதியாக இருக்குமோ என்று மனதினில் நினைத்துக் கொண்டார் அபூதல்ஹா (ரலி)  அவர்கள்.

கை, கால் கழுகி சுத்தமான பின்பு உணவுத்தட்டின் அருகே வந்தமர்ந்தார். அழகிய முறையில் உணவு பரிமாறி, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு தன் இயல்பு நிலைக்கு  திரும்பினார் அபூதல்ஹா (ரலி) அவர்கள்.

அறிவின் சிகரம் இப்போது தம் கணவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.  அறிவார்ந்த முறையில்.. நம்மிடம் யாராவது ஒருவர் ஒரு பொருளை தந்து அமானிதமாக வைத்திருக்கச் சொல்லி, பின்பு அந்தப் பொருளை  கேட்டால் நாம் என்ன செய்வோம்? சொல்லுங்கள் என்று

கொடுத்தவர் கேட்டால் நமக்குச் சொந்தமில்லாத அந்தப் பொருளை திருப்பிக்  கொடுத்து விடுவோம் என்று அபூதல்ஹா கூறினார். இப்போது, மெல்ல தம் மகன் அபூ  உமைர் இறந்த செய்தியை இப்படிக் கூறினார் உம்மு ஸுலைம் (ரலி) “உங்களுடைய  குழந்தையும் அல்லாஹ் வழங்கிய ஓர் அமானிதம் தான். இப்போது அவன் அதைத் திரும்ப எடுத்துக் கொண்டான். எனவே நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள்.  இன்னாலில்லாஹி என்று. நான் வந்த உடனேயே இதை நீ கூறியிருக்க வேண்டியது  தானே? என்று கடிந்து கொண்டார் அபூதல்ஹா.

 உங்களின் நிம்மதியை கெடுத்து விடும் எந்தக் காரியத்தையும் செய்யும்  துணிவு எனக்கில்லை என்றார் உம்மு ஸுலைம் (ரலி).

மறுநாள் நபிகளாரின் அவைக்கு வந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள், தம் மனைவி  உம்மு ஸுலைம் (ரலி) நடந்து கொண்ட விதம் குறித்து முறியிட்டார்கள்.

அது கேட்ட அண்ணலார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் பொறுமையையும்  உளத்தின்மையையும் சிறப்பித்துக் கூறி வெகுவாகப் பாராட்டி விட்டு, “அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபூ உமைருக்குப் பகரமாக ஒரு நல்ல குழந்தையை  வழங்குவானாக!” என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர்  அவர்களின் துஆவின் பொருட்டால் அப்துல்லாஹ்  எனும் மகன் பிறந்தார். இவரும் அனஸ் (ரலி) அவர்களைப் போன்று அண்ணலாரின்  அண்மையில் வளரும் பாக்கியத்தைப் பெற்றார்.

அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சந்ததியில் இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள்  பத்து பேர் தோன்றினார்கள்.                                                                                           ( நூல்: இஸ்தீஆப் )

 

حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى – قَالَ – فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِىَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِى النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى – قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّى وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ – ثُمَّ أُتِىَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِى عَنْ يَمِينِهِ – قَالَ – فَقَالَ أَبِى وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِى مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் என்ற நபித்தோழர் கூறுகிறார் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம். அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே இவர்களுக்கு வழங்கியவற்றில் இவர்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் இவர்களை மன்னித்து இவர்களுக்கு அருள் புரிவாயாக என்று கேட்டார்கள். ( நூல் : முஸ்லிம் )

பெருமானார் அவர்களின் துஆவின் பரக்கத்தால் வாழ்வாங்கு வாழ்ந்த நிகழ்வுகள் வரலாற்றில் பன்னூற்றுக் கணக்காக இடம் பெற்றுள்ளன ஒன்றிரண்டு நிகழ்வுகளை உங்களின் சிந்தனைக்கு தந்திருக்கின்றேன்.

 

தற்போதும் பெருமானார் அவர்கள் செய்த துஆவின் பரக்கத் நமக்கு கிடைக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

 

عن جابر بن عبد الله، رضي الله عنهما أنَّ رسول الله صلى الله عليه وسلم قال

 رحم الله رجلًا سمحًا إذا باع، وإذا اشترى، وإذا اقتضى

நபி அவர்கள். விற்­பதிலும் வாங்­குவதிலும் கொடுத்த கடனை திரும்பக் கேட்பதிலும் தாரா­ளத்­தன்­மை­யோடு ( நற்பண்போடு) நடந்து கொள்கிற மனி­த­னுக்கு அல்லாஹ் அருள் புரி­வா­னாக!என்று கூறினார்கள். (அறி­விப்­பவர்: ஜாபிர் (ரலி) -­பு­காரி)

 

சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட நபித்தோழர்களில் அபூபக்ர், உமர், உஸ்மான், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா, ஜுபைர் இப்னு அவ்வாம், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ( ரலியல்லாஹு அன்ஹும் ) ஆகியோர் மாபெரும் வணிகர்கள் மற்றும் செல்வந்தர்கள்.

 

وقال أبو عمر: كان تاجرًا مجدودًا في التجارة، فكسب مالا كثيرًا وخلف ألف بعير وثلاثة آلاف شاة ومائة فرس ترعى بالبقيع، وكان يزرع بالجرف على عشرين ناضحًا

فكان يدخل من ذلك قوت أهله سنة.

 

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் குறித்து வரும் செய்தி மிகவும் ஆச்சர்யமானது. ஒரு முறை அவர்களின் சரக்கு சந்தைக்கு சென்று திரும்பும் போது ஓராண்டு முழுவதுக்கும் அவர்களின் குடும்பம் சும்மா உட்கார்ந்து அனுபவிப்பதற்குத் தேவையான லாபங்களை ஈட்டுமாம்.

 

தல்ஹா (ரலி) அவர்கள் குறித்து சொல்லப்படும் போது எவராவது அவரிடம் உதவி கேட்கும் நோக்கத்தில் அவரைச் சந்திக்கச் சென்றால் அவர் கேட்கும் முன்பாக அவர் கேட்க நினைத்ததை விட அதிகளவிலான உதவிகளைச் செய்வார்களாம்.

 

وهذا خباب بن الأرت كان حدادًا، وعبد الله بن مسعود كان راعيًا، وسعد بن أبي وقاص كان يصنع النبال، والزبير بن العوام كان خياطًا،وسلمان الفارسي كان حلاقًا ومؤبرًا للنخل، وخبيرًا بفنون الحرب، والبراء بن عازب وزيد بن أرقم كانا تاجرين

 

இன்னும், நபித்தோழர்களில் கப்பாப் (ரலி)  அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஜைத் இப்னு அர்க்கம், பர்ராஉ இப்னு ஆஸிப் (ரலி) ஆகியோரும், அப்துல்லாஹ் இப்னு உமர், அபுத்தர்தா, அபூதல்ஹா, அபுத்தஹ்தாஹ், அபூஸுஃப்யான், முஆவியா, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், உம்முல் முஃமினீன் ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜுலைபீப் (ரலி) அவர்களின் மனைவி (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் பெரும் லாபம் ஈட்டும் வணிக நிறுவனங்களின் நிறுவனர்களாக இருந்துள்ளனர்.

 

இமாம்களில், அபூஹனீஃபா, அப்துல்லாஹ் இப்னு முபாரக், (ரஹ்-அலைஹிமா) ஆகியோரும் ஹதீஸ் மற்றும் தஃப்சீர் துறையில் சிறந்து விளங்கிய ஏராளமான அறிஞர் பெருமக்களும் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.

 

இப்படியாக, வணிகத்தில் சிறந்து விளங்கிய மேன்மக்களான நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மரணத்தின் போது விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பீடுகள் அவர்களின் மொத்த குடும்ப அங்கத்தினர்களும் தலைமுறைக்கும் சும்மா இருந்து அனுபவிக்கும் அளவுக்கு இருந்தது.

 

அவர்களின் வணிக வெற்றிக்கும், அபாரமான வளர்ச்சிக்கும் பின்புலனாக இருந்தது வணிகத்தில் நபி அவர்கள் சொன்ன இந்த அடிப்படை தத்துவமும், துஆவும் தான்.

 

எனவே, இன்றைய நம் சமூகத்து வணிகர்கள் வியாபாரத்தில் தாரளத்தன்மையை கடைபிடித்து வியாபாரத்திலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலும் பரக்கத்தைப் பெற்று பெருமானார்   அவர்களின் துஆவின் பரக்கத்தை அனுபவிக்கட்டும்!!!