Showing posts with label sahaba. Show all posts
Showing posts with label sahaba. Show all posts

Thursday 21 January 2021

 

ஆளுமைக்கு அழகு சேர்த்த அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள்!!!

 



இந்த உம்மத் எல்லா காலங்களிலும் பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்கின்றது.

 

கடந்த 20 நூற்றாண்டுகளாக சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.

 

பிரச்சினைகளின் வடிவங்களும், அதன் தாக்கங்களும் வேறுபட்டிருக்கின்றதே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

 

பிரச்சினைகளுக்கு எதிர்வினை ஆற்றுகிற நாம் அந்த பிரச்சினைகளை எதிர் கொள்கிற பயணத்தில் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றோம்? என்பதை நாம் சிந்தித்து உணர கடமைப்பட்டுள்ளோம்.

 

ஏனெனில், காலங்களில் மிகச் சிறந்த காலம் என பெருமானார் {ஸல்} அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட மூன்று பொற்காலங்களில் வாழ்ந்த மேன்மக்களும் பிரச்சினைகளை சந்தித்துள்ளனர்.

 

முதல் பொற்காலத்தில் வாழ்ந்த பூமான் நபி {ஸல்} அவர்கள் மக்காவின் நபித்துவத்தின் 13 ஆண்டுகால வாழ்வில் சந்தித்த பிரச்சினைகளை எளிதாக மறந்து விட முடியுமா?

 

ஹிஜ்ரத் பூமியான மதீனாவின் 10 ஆண்டுகால வாழ்வின் தொடர் போர்களை, எதிர் கொண்ட பிரச்சினைகளை மறந்து விட முடியுமா?

 

இரண்டாம் பொற்காலத்தில் வாழ்ந்த நாயகத்தோழர்களின் வாழ்வில் தான் எத்தனை பிரச்சினைகள்?

 

மூன்றாம் காலத்தில் வாழ்ந்த மேதகு அறிஞர்கள், இமாம்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் தான் எவ்வளவு?

 

ஆயிரமாயிரம் நிகழ்வுகளை இங்கே சுட்டிக் காட்ட முடியும்.

 

பெருமானார் {ஸல்} அவர்களின் காலம் முதற்கொண்டு மூன்று பொற்காலங்களிலும் எதிர் கொண்ட எல்லா பிரச்சினைகளுக்கும் சிலபோது உடனடியாகவோ, சில போது தாமதமாகவோ தீர்வுகளைப் பெற்று வெற்றி வாகை சூடிய பெருமை இந்த உம்மத்திற்கு உண்டு.

 

23 ஆண்டு கால வாழ்க்கையின் ஊடாக பெருமானார் {ஸல்} அவர்கள் பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான சிறப்பான 3 அம்சங்களை வகுத்துத் தந்து சென்றிருக்கின்றார்கள்.

 

1.பிரச்சினைகளின் வீரியத்தை அறிவது. 2.பிரச்சினைகளை எதிர் கொள்வது. 3.தீர்வைக் கண்டு அதை செயல்படுத்துவது.

 

அந்த வகையில் இந்த உம்மத்தில் எல்லா நிலைகளிலும் முதலாமவராகத் திகழ்ந்த அபூபக்ர் (ரலி) அவர்களே இதிலும் முதன்மையானவர்களாக திகழ்கின்றார்கள்.

 

ஏன் நாம் இப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் குறித்து நினைவு படுத்துகின்றோம்?

 

ஹிஜ்ரி 13 -ஆம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்பூவுலகை விட்டும் பிரிந்து ஈருலக சர்தார் பெருமானார் {ஸல்} அவர்களின் அருகே இடம் பெயர்ந்தார்கள்.

 

மாநபி {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் இரண்டாம் பொற்காலம் உருவானது. இரண்டாம் பொற்காலத்தின் முஸ்லிம் உம்மத்தின் முதல் கலீஃபாவாக பொறுப்பேற்றார்கள் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள்.

 

மிகச் சரியாக இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் எட்டு நாட்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக மிளிர்ந்தார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆளுமையை அடையாளப்படுத்திய நிகழ்வு..

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்ந்த பொற்காலத்தில் நபித் தோழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதுஸஹாபாக்கள் நபி {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு வந்தே நின்றனர்.

 

நபி {ஸல்} அவர்களும் அந்தப் பிரச்சனைகளை முன் நின்று தீர்த்து வைத்தார்கள். ஸஹாபாக்கள் அத்தீர்வையே முடிவாக ஏற்றுக் கொண்டார்கள்.

 

நபி {ஸல்} அவர்களின் காலத்தைத் தொடர்ந்து நபி {ஸல்} அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஏராளமான பிரச்சினைகளை நபித்தோழர்கள் சந்தித்தனர்.

 

ஏன் நபி {ஸல்} அவர்கள் வஃபாத்தாகி விட்டார்களா? இல்லையா? என்பதில் கூட நபித்தோழர்களுக்குள் முரண்பாடு நிலவியது.

 

உமர் (ரலி) அவர்கள் உருவிய வாளோடு நின்றார்கள், சில நபித்தோழர்கள் அமர்ந்த இடத்தை விட்டு எழக் கூட சக்தியில்லாதவர்களாக ஆனார்கள், இன்னும் சிலர், நா தடுமாறி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். என்கிற இதைக் கேள்விப்பட்டு அங்கு ஓடோடி வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் ”பூமான் நபி {ஸல்} அவர்கள் அழகிய வதனத்தை உற்று நோக்கினார்கள், சுந்தர நெற்றியில் முத்தமிட்டு வாழும் போதும், வாழ்க்கையை முடித்த பின்னரும் நபியே! நீங்கள் நறுமணம் கமழக்கூடியவராகவே திகழ்கின்றீர்கள்” என்று கூறி அங்கிருந்த மக்களை நோக்கி...

 

لما توفي صلى الله عليه وسلم اضطرب المسلمون، فمنهم من دهش، فخولط، ومنهم من أقعد فلم يطق القيام، ومنهم من اعتقل لسانُه، فلم ينطق الكلام، ومنهم من أنكر موته بالكلية، وقال: إنما بعث إليه كما بعث إلى موسى، وكان من هؤلاء عمر، وبلغ الخبر أبا بكر فأقبل مسرعا حتى دخل بيت عائشة ورسول الله صلى الله عليه وسلم مسجى، فكشف عن وجهه الثوب، وأكب عليه، وقبل جبهته مرارا وهو يبكي، وقال: إنا لله وإنا إليه راجعون، مات والله رسول الله صلى الله عليه وسلم، وقال: والله لا يجمع الله عليك موتتين، أما الموتة التي كتب الله عليك فقد متها.

ثم دخل المسجد وعمر يكلم الناس وهم مجتمعون عليه، فتكلم أبو بكر وتشهد وحمد الله، فأقبل الناس إليه وتركوا عمر، فقال: "من كان يعبد محمدا فإن محمدا قد مات، ومن كان يعبد الله فإن الله حي لا يموت" ، وتلا: وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ [آل عمران: 144] الآية، فاستيقن الناس كلهم بموته، وكأنهم لم يسمعوا هذه الآية من قبل أن يتلوها أبو بكر، فتلقاها الناس منه، فما يُسمع أحد إلا يتلوها "

 

உங்களில், யார் முஹம்மதை வணங்கினாரோ அவர் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான்என்று கூறி அற்புதமான இரண்டு குர்ஆன் வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள். (புகாரி 1242).

 

நாம் இங்கே சகோதர கிறிஸ்துவ சமூகத்தை நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

 

அவர்களுக்கும் இது போன்றதொரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆம்! ஈஸா {அலை} அவர்கள் வானில் உயர்த்தப்பட்டார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்ற மகத்தான ஆளுமை அவர்களுக்கு கிடைக்காத காரணத்தால் இன்று ஈஸா {அலை} அவர்களை அந்த சமூகம் எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது? அவர்கள் எங்கே நின்று கொண்டிருக்கின்றார்கள்?

 

பெருமானாரின் வஃபாத், அது சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை முதலில் அறிந்து, இன்னும் எவ்வளவு தூரம் அது அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதன் வீரியத்தை புரிந்து மிக லாவகமாக அதை எதிர் கொண்டு, உடனடியாக தயவு தாட்சண்யமின்றி தீர்வை செயல் படுத்தினார்கள்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உம்மத்தை பாதுகாத்தான். ஜஸாக்கல்லாஹு ஃகைரன் அஹ்ஸனல் ஜஸாஃ யா அபா பக்ர்!

 

 

ثم اختلفوا في المكان الذي ينبغي أن يدفن فيه رسول الله صلّى الله عليه وسلم ، فقال قائل: "ندفنه في مسجده. وقال قائل: بل ندفنه مع أصحابه. فقال أبو بكر رضي الله عنه: إني سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: "ما قبض نبي إلاّ دفن حيث يقبض " فرفع فراش رسول الله صلّى الله عليه وسلم الذي توفي عليه، فحفر له تحته "

 

அடுத்து நபி {ஸல்} அவர்களை எங்கே அடக்கம் செய்வது? என்ற பிரச்சனை எழுந்தது. சிலர் மக்காவில் என்றும், சிலர் மதீனாவில் என்றும், வேறு சிலர் ஜன்னத்துல் பகீஃயிலும் என்றனர்.

 

அப்போது அங்கே பிரசன்னமாகி இருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள்நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்எந்த ஒரு நபியும் அவரின் ஆன்மா எங்கே கைப்பற்றப்படுகின்றதோ அங்கேயே அடக்கம் செய்யப்படுவார்கள்என்று கூறி தீர்த்து வைத்தார்கள்.

 

இங்கு தான் அடுத்த பொற்காலத்தின் இந்த உம்மத்தை வழி நடத்தப் போகும் மகத்தான ஆளுமையை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.

 

يقول ابن إسحاق: "ولما قبض رسول الله صلّى الله عليه وسلم انحاز هذا الحي من الأنصار إلى سعد بن عبادة في سقيفة بني ساعدة

 

அடுத்து முஸ்லிம் உம்மாவை வழி நடத்தும் தலைவர் யார்? எனும் பிரச்சனை எழுந்தது. அன்ஸாரிகள் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும், முஹாஜிர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

 

قال عمر: فقلت لأبي بكر: انطلق بنا إلى إخواننا هؤلاء من الأنصار حتى تنظر ما هم عليه. وليدع سيدنا عمر يروي بقية ما حدث، حيث قال: … إن الأنصار خالفونا واجتمعوا بأشرافهم في سقيفة بني ساعدة فانطلقنا نؤمهم، حتى لقينا - منهم - رجلان صالحان فذكرا لنا ما تمالأ عليه القوم، وقالا: أين تريدون يا معشر المهاجرين. قلنا: نريد الأنصار. قالا: فلا عليكم ألاّ تقربوهم يا معشر المهاجرين، اقضوا أمركم. قال : قلت : والله إخواننا هؤلاء من لنأتينهم، فانطلقنا حتى أتيناهم في سقيفة بني ساعدة، فإذا بين ظهرانينا رجل مزمل، فقلت: من هذا الرجل ؟ فقالوا: سعد بن عبادة، فقلت ماله؟ فقالوا: وجع فلما جلسنا نشهد خطيبهم… ثم ذكر مآثر الأنصار وفضائلهم، وما يدل على أنهم أولى بخلافة رسول الله صلى الله عليه وسلم من غيرهم.

இப்போது இங்கே பல்வேறு விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அடுத்த தலைவர் முஹாஜிர் தான் என்று முஹாஜிர்களும், அல்ல அன்ஸார்கள் தான் என்று அன்ஸாரிகளும், அல்ல முஹாஜிர்களில் ஒருவர் அன்ஸாரிகளில் ஒருவர் என இருவர் தலைவராக இருக்கட்டும் என்றும், முஹாஜிர்கள் என்றார் முஹாஜிர்களில் யார்? என்றும், அன்ஸாரிகள் என்றால் அன்ஸாரிகளில் யார்? என்றும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

 

இன்னும் சிலர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழும் காலத்தில் அதிகமாக நபிகளாரோடு நெருக்கத்திலும், இணைத்தும் பேசப்பட்டவர்கள் உமர், அபூபக்ர் ஆகிய இருவர் தான். எனவே இருவரில் ஒருவர் தான் தலைவராக வரவேண்டும் எனவும் கூறினர்.

 

இப்படிப்பட்ட பல்வேறு முரண்களும், கருத்து வேறுபாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்ததை அறிந்த உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களையும், முஹாஜிர்களையும் கையோடு அழைத்துக் கொண்டு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களும் அன்ஸாரிகளும் குழுமியிருந்த பனூ ஸாயிதாவினரின் இல்லத்தருகே வந்தார்கள்.

 

ثم قام من الأنصار خطيب آخر يريد أن يرجع الأمر إلى الإطار الأول الذي وضعه خطيبهم الأول فيه .. فقال: "…منا أمير ومنكم أمير يا معشر قريش " قال عمر: "فكثر اللغط، وارتفعت الأصوات حتى تخوّفت الاختلاف " فقلت: "ابسط يدك يا أبا بكر فبسط يده فبايعته، ثم بايعه المهاجرون،ثم بايعه الأنصار ". وقد كاد سعد بن عبادة مرشح الأنصار رضي الله عنه أن يقتل في الزحام "فقد تدافع الناس لمبايعة أبي بكر حتى كادوا يقتلون سعداً دون أن ينتبهوا له ".

 

அங்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் எழவே, உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் பைஅத் செய்தார்கள். உடனே, மற்றெல்லா நபித்தோழர்களும் அடுத்தடுத்து வந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் கரத்தில் பைஅத் செய்தார்கள்.

 

உம்மத்தின் வழிகாட்டியாக அமர்ந்த சில மாதங்களிலேயே பெரும் பிரச்சினை ஒன்றை அபூபக்ர் (ரலி) அவர்கள் எதிர் கொள்ள வேண்டி இருந்தது.

 

1.அஸத் மற்றும் கத்பான் கோத்திரத்தார்கள்! இவர்களது தலைவன் தலீஹா பின் குவைலித் அல்அஸதி என்ற சோதிடக் காரன். 2. கன்தா மற்றும் அதையடுத்த பகுதி வாழ் மக்கள்! இவர்களின் தலைவன் அஸ்அஷ் பின் கைஸ் அல் கன்தி 3. மத்ஹஜ் மற்றும் அதையடுத்த பகுதி வாழ் மக்கள்! இவர்களது தலைவன் அஸ்வத் பின் கஃம் அல்அனஸி 4. ரபீஆ கோத்திரத்தார்! இவர்களது தலைவர் மக்ரூர் பின் நுஃமான் அல்முன்திர் 5. ஹனீஃபா கோத்திரத்தார்! இவர்களது தலைவன் பொய் நபியான முஸைலமா பின் ஹபீப் 6. சலீம் கோத்திரத்தார்! இவர்களது தலைவன் ஃபஜ்ஆ என்ற அனஸ் பின் அப்து யாலைல் 7. பனூ தமீம் கோத்திரத்தார்! இவர்களது தலைவி ஸஜாஜ் என்ற குறிகாரி இவர்கள் தான் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ச்சியும், புரட்சியும் செய்து கொண்டிருந்தார்கள்.

 

இந்தக் கட்டத்தில் தான் அஸத், கத்பான் மற்றும் தய்யி கிளையார்கள் தலீஹா பின் அல்அஸதீ தலைமையில் ஒன்று கூடி சில குழுக்களை மதீனாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்தக் குழுக்கள் மதீனாவிலுள்ள முக்கியப் பிரமுகர்களையும் புள்ளிகளையும் சந்திக்கின்றார்கள்.

 

அப்பாஸ் (ரலி) அவர்கள் மட்டும் இந்தக் குழுவினரை சந்திக்க மறுத்து விடுகின்றார்கள். இந்தப் பெரும்புள்ளிகள் வாயிலாக, தொழுகை மட்டுமே போதும் ! ஜகாத் தேவையில்லை என்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்கின்றார்கள்.

 

இந்தக் கட்டத்தில் தான், ஒரு கயிறளவு ஜகாத் தர மறுத்தாலும் அந்தக் கயவர்களை எதிர்த்துப் போர் செய்யத் தயங்க மாட்டேன் என்ற துணிச்சலான வார்த்தைகள் அபூபக்ர் (ரலி) வாயிலிருந்து கூரிய வாட்களாக சீறிப் பாய்ந்தன.

 

அந்த நிகழ்வை அபூ ஹுரைரா (ரலி) விவரிக்கின்றார்கள்: மாநபி {ஸல்} அவர்கள் புனித மறைவுக்குப் பின்னர் அரபுகளில் சிலர் குஃப்ரை நோக்கி நகர்ந்தார்கள். அவர்களுக்கு எதிராக போர்ப்பிரகடனத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

 

قال أبوهريرة (رضى الله عنه): «لما توفى رسول الله (صلى الله عليه وسلم

واستخلف أبوبكر بعده، كفر من كفر من العرب، فقال عمر بن الخطاب لأبى بكركيف تقاتل الناس، وقد قال رسول الله (ص): «أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله، ومن قال لا إله الله عصم منى ماله ونفسه إلا بحقه، وحسابه على الله؟ قال أبوبكر: والله لأقاتلن من فرّق بين الزكاة والصلاة وأن الزكاة حق المال.. والله لو منعونى عقالا - أو عناقا - كانوا يؤدونه إلى رسول الله (ص) لقاتلتهم على منعه.. فقال عمر بن الخطاب: فوالله ما هو إلا أن رأيت أن الله قد شرح صدر أبى بكر للقتال فعرفت أنه الحق». (رواه البخارى، ومسلم، والترمذى، والإمام أحمد، وابن حبان)..

 

அப்போது, உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தனது செல்வத்திற்கும், உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே!'' என்று கேட்டார்கள்.

 

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில் ஜகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செலுத்தி வந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்'' என்று சொன்னார்கள்.

 

 இதைக் கேட்ட உமர் (ரலி), "அல்லாஹ்வின் மீதாணையாக! (ஜகாத் வழங்க மறுத்தவர்கள் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கி விட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்து கொண்டேன்'' என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 7285) அபூபக்ர் (ரலி)

 

மேலும் கூறியதாவது: "நாம் அறியாமைக் காலத்தில் ஆர்ப்பரிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தோம். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின்பு அடங்கிப் போய், அஞ்சி ஆட்டம் காணும் கோழைகளாகி விட்டோமா? இந்த மார்க்கம் முழுமை பெற்ற நிலையில் இறை அறிவிப்பு (வஹீ) நின்று போனது. (முழுமை பெற்ற அந்த மார்க்கம்) நான் .உயிருடன் இருக்கும் போதே குறைவு பட வேண்டுமா?'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நெஞ்சுரம் நிறைந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினார்கள். (நூல்: ரஸீன்)

 

எதிர்ப்பாளர்களோடு போரிடுவேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் சொல்வதற்கான காரணமும் மிகத் தெளிவாகவே இருந்தது.

 

ஏனெனில், இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த நேரத்தில், உஸாமா  (ரலி) தலைமையில் ஒரு படை வெளியே போருக்குச் சென்றிருந்ததை அறிந்து வைத்திருந்த கலகக்காரர்கள் மதீனாவில் படைபலம் குறைவாகவே இருக்கின்றது என்ற தகவலை தங்கள் ஆதரவாளர்களிடம் தெரிவித்து இருந்தனர்.

 

மதீனா காலியாக உள்ளது என்று அம்மக்களிடம் தெரிவித்து, மதீனாவை நோக்கி அவர்களைப் போர் தொடுக்கும் படி தூண்டினர். இவர்களின் வஞ்சத் தன்மையை உளவு மூலம் தெரிந்து வைத்திருந்ததால் மதீனாவில் எல்லைகளில் காவல் படையினரை அபூபக்ர் (ரலி) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.

 

இவ்வாறான நிலை ஓரிரு நாட்கள் நீடித்திருந்த நிலையில் மதீனாவின் மக்களை பள்ளியில் ஒன்று கூட்டி அவர்களிடம் அபூபக்ர் (ரலி) உரையாற்றினார்கள்.

 

நம்மை சுற்றி உள்ள மக்கள் இறை நிராகரிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். வந்து சென்ற தூதுக்குழுவினர், உங்களிடம் படைபலம் குறைவாகவே உள்ளதுஎன்று நம்மை எச்சரிக்கும் தொணியில் கூறிச் சென்றுள்ளனர்.

 

அதனால் மதீனாவைத் தாக்கலாம் என்று நினைக்கின்றனர். அவர்கள் இரவில் வருவார்களா? அல்லது பகலில் வருவார்களா? என்று தெரியாது. அவர்கள் கிட்டத்தட்ட 12 மைல்கள் தொலைவில் தான் இருக்கின்றனர். நாம் அவர்களது கோரிக்கையை ஏற்று நல்ல முறையில் நல்வாழ்த்து சொல்லி அவர்களை வழியனுப்பி வைப்போம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நாம் அவர்களது கோரிக்கையை அடியோடு தடுத்து விட்டோம். எனவே நீங்கள் ஆயத்தமாக இருங்கள்; ஆயுதத்துடன் இருங்கள்'' என்று தமது உரையில் எச்சரிக்கை செய்தார்கள்.

 

மூன்று நாட்கள் தான் கழித்திருக்கும். அபூபக்ர் (ரலி) எச்சரித்தது போலவே கலகக்காரர்கள் மதீனாவைத் தாக்க படையுடன் வருகின்றார்கள். தங்களுக்கு உதவியாக பாதிப் படையை "தீ ஹுசைன்' என்ற இடத்தில் கலகக் காரர்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.

 

அவர்கள் மதீனாவைத் தாக்க வரும் தகவலை, மதீனாவின் எல்லைகளில் நின்ற காவலர்கள் உடனடியாக ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கின்றார்கள். "நீங்கள் அந்த இடத்திலேயே இருங்கள்'' என்று ஆட்சித் தலைவர் பதில் செய்தி அனுப்புகின்றார்கள்.

 

பள்ளியில் இருந்த தோழர்களை - இராணுவ வீரர்களை ஒட்டகங்களில் ஏற்றிக் கொண்டு மதீனாவில் எல்லைக்கு விரைந்தார்கள். எதிரிகள் தோற்று, துவண்டு ஓடுகின்றார்கள். அவர்களது உதவிப் படை தயார் நிலையில் நின்ற "தீ ஹுசைன்' பகுதி வரை அவர்களை ஓட ஓட விரட்டிச் சென்றார்கள். எதிரிகளின் உதவிப்படையினர் ஓடி வந்து அவர்களுக்கு உதவ வந்த போது, போர் தொடங்கியது.

 

போர் செய்யவும் தயங்க மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) முழங்கியது போல் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிச் சென்ற மக்களுக்கும் மத்தியில் போர் நடந்தது.

 

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அபூபக்ர் (ரலி) அவர்களின் முயற்சியின் பலனாக அந்தப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.

 

இரண்டாவது பிரச்சினை...

 

لما مات رسول الله صلى الله عليه وسلم بعث أبو بكر الصديق السرايا إلى المرتدين، أرسل عكرمة بن أبي جهل في عسكر إلى مسيلمة، وأتبعه شرحبيل بن حسنة، فاستعجل وانهزم، وأقام شرحبيل بالطريق حين أدركه الخبر، وكتب عكرمة إلى أبي بكر بالخبر، فكتب إليه أبو بكر: "يا بن أُمِّ عِكْرِمَةَ، لا أَرَيْنَكَ وَلا تَرَانِي! لا تَرْجِعْ فَتُوهِنَ النَّاسَ، امْضِ عَلَى وَجْهِكَ حَتَّى تُسَانِدَ حُذَيْفَةَ وَعُرْفُجَةَ فَقَاتِلْ مَعَهُمَا أَهْلَ عُمَانَ وَمهْرَةَ، وَإِنْ شُغِلا فَامْضِ أَنْتَ، ثم تسير وتسير جندك تستبرئون مَنْ مَرَرْتُمْ بِهِ، حَتَّى تَلْتَقُوا أَنْتُمْ وَالْمُهَاجِرَ بْنَ أَبِي أُمَيَّةَ بِالْيَمَنِ وَحَضْرَمَوْتَ".

وكتب إلى شرحبيل بالمقام إلى أن يأتي خالد بن الوليد فإذا فرغوا من مسيلمة يلحق بعمرو بن العاص يعينه على قضاعة. فلما رجع خالد من البطاح -بعد قضائه على مالك بن نويرة- إلى أبي بكر واعتذر إليه فقبل عذره، وأوعب معه المهاجرين والأنصار، وعلى الأنصار ثابت بن قيس بن شماس، وعلى المهاجرين أبو حذيفة وزيد بن الخطاب، وأقام خالد بالبطاح ينتظر وصول البعث إليه، فلما وصلوا إليه سار إلى اليمامة بجيشه لملاقاة العدو.

يوم عقرباء
ولما بلغ مسيلمة دنو خالد ضرب عسكره بعقرباء، وخرج إليه الناس وخرج مُجَّاعَةُ بنُ مِرَارَةَ في سرية يطلب ثأرا لهم في بني عامر، فأخذه المسلمون وأصحابه وقتلهم خالد واستبقى مجاعة لشرفه في بني حنيفة، وكانوا ما بين أربعين إلى ستين، وترك مسيلمة الأموال وراء ظهره.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் சிலர் தங்களை நபியாக அறிவித்துக் கொண்டு மக்களை மடை மாற்றும் வேலையில் ஈடுபட்டனர்.

 

இது அபூபக்ர் (ரலி) அவர்கள் சந்தித்த இரண்டாவது பெரும் பிரச்சினை ஆகும்.

 

நபி என்று வாதிட்டவர்களில் துலைஹா, முஸைலமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் துலைஹா மட்டும் பின் நாளில் தவ்பா செய்து மீண்டு இஸ்லாத்தை அழகாக்கிக் கொண்டு உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த நஹாவந்த் யுத்தத்தில் பங்கு கொண்டு ஷஹீத் ஆனார்.

அதுவும் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் அபூபக்ர் (ரலி) அனுப்பிய படை துலைஹாவின் பகுதியில் முகாமிட்டு, அந்த யுத்தத்தில் துலைஹா தோற்று பின்னர் அவர் இஸ்லாத்தைப் புதுப்பித்துக் கொண்டார் என்கிறது வரலாறு.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் முஸைலமா எனும் மகாப் பொய்யன் (யமாமாவிலிருந்து) வந்தான். அவன், "முஹம்மத் தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன்'' என்று கூறலானான்.

 

அவன் தன் சமுதாயத்து மக்கள் பல பேருடன் மதீனா வந்திருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தமது பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள்.

 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது. முஸைலமா தன் தோழர்களுடன் இருந்தான். 

 

நபி (ஸல்) அவர்கள் அவனருகே சென்று நின்று கொண்டு, "இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை நான் காண்கிறேன். இதோ, இவர் தாம் ஸாபித். என் சார்பாக இவர் உனக்குப் பதிலளிப்பார்'' என்று சொல்லி விட்டு அவனிடமிருந்து திரும்பி விட்டார்கள்.  ( அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி: 4373 )

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவனுடைய அதிகாரப் பங்கீடு கோரிக்கை சுக்கு நூறாக நொறுங்கிப் போனதால் இனிமேல் இவரிடம் பேசிப் பயனில்லை என்று எண்ணி யமாமா திரும்பினான் முஸைலமா! யமாமா சென்று, தான் ஒரு இறைத் தூதர் என்ற பொய்ப் பிரச்சாரத்தை விடாது செய்து கொண்டிருந்தான். 

 

குறைஷிக் குலத்தில் ஓர் இறைத் தூதர் தோன்றும் போது, பனீ ஹனீஃபா குலத்தில் ஏன் ஓர் இறைத் தூதர் தோன்றக் கூடாது என்ற இன வாதத்தை முஸைலமா எழுப்பினான். இந்த ஆயுதம் நல்ல ஆதாயத்தை கொடுத்தது.

 

முஸைலமா ஒரு பொய்யன் என்பது பனூ ஹனீஃபா கிளையாருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவனுக்குப் பின்னால் நிற்பதற்குரிய சரியான காரணம் அவர்களுடைய தலைகளில் ஏறிப் போயிருந்த இந்த இனவெறி தான். 

 

இந்தத் தருணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவுகின்றார்கள். அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்கின்றார்கள்.

 

அடுத்த கட்ட பிரச்சினையாக நஜ்த் தேசத்தின் முஸைலமா தன்னை நபியென்று அறிவித்து பெருங்கூட்டத்தை சேர்த்துக் கொண்டு மக்களை வழி கெடுத்துக் கொண்டிருந்தான். யமாமாவில் மதமாற்றம் உச்சக்கட்டத்தை அடைகின்றது. 

 

இந்நிலையில் "தாம் கொண்டு வந்த தூதுச் செய்தியில் முஸைலமாவுக்கும் பங்குண்டு'' என்று முஹம்மத் (ஸல்) அவர்களே சொன்னதாக நஹார் என்றழைக்கப்படும் ரஜ்ஜால் பின் அன்ஃபுவா என்பவன் பொய் சான்று பகர்ந்தான். இதுவும் முஸைலமாவுக்குக் கை கொடுத்தது. 

 

            ரஜ்ஜால் பின் அன்ஃபுவா யார்?

 

15 பேர் கொண்ட பனூ ஹனீஃபா கிளையினர் குழு ஒன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவினர். இவர்களில் ரஜ்ஜால் பின் அன்ஃபுவாவும் ஒருவனாவான். 

 

இவனது பெயர் நஹார் என்பதாகும். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த பனூ ஹனீஃபா குழுவினரில் இவனும் ஒருவன். இவன் குர்ஆனை நன்கு கற்றிருந்தான். முஸைலமா தன்னை நபியென்று வாதிட்டதும், முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவத்தில் முஸைலமாவைக் கூட்டாக்கிக் கொண்டார்கள் என்று சாட்சி கூறினான். (நூல்: அல்இக்மால் லிபனி மாகூலா, அல்ஜரஹ் வத்தஃதீல், அல்இஸாபா )

 

       இத்தகைய சூழலில் அபூபக்ர் (ரலி) முஸைலமாவை எதிர் கொள்வதற்காக இக்ரிமா பின் அபீஜஹ்ல் தலைமையில் ஒரு படையை அனுப்புகின்றார்கள். 

 

இவ்வாறு முஸைலமாவை எதிர் கொள்வதற்கு முதல் படை கிளம்புகின்றது. அந்தப் படை சென்று கொண்டிருக்கும் அதே வேளையில், முஸைலமாவை எதிர்க்க அந்தப் படையினரின் எண்ணிக்கை போதாது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் முடிவெடுத்து, அதற்குப் பின்னால் ஷர்ஹபீல் பின் ஹஸனாவின் (ரலி) தலைமையில் இன்னொரு படையை அனுப்பி வைக்கின்றார்கள். 

 

இக்ரிமா (ரலி) அவர்களோ ஷர்ஹபீலின் படையை எதிர் பார்க்காமல் முஸைலமாவை எதிர் கொண்டு போர் தொடுத்து விடுகின்றார்கள். இக்ரிமாவின் படையால் முஸைலமாவின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. காரணம், முஸைலமாவின் படையில் இருந்தவர்கள் நாற்பதாயிரம் பேர் ஆவார்கள்.

 

இதனால் இக்ரிமாவின் படை தோல்வியைத் தழுவுவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. சொற்ப நேரத்திலேயே அவரது படை முஸைலமாவின் படையால் முறியடிக்கப்படுகின்றது. இவருக்கு உதவுவதற்காகப் பின்னால் வந்து கொண்டிருந்த ஷர்ஹபீல் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மேலும் முன்னேறிச் செல்லவில்லை. அவ்வாறு அவர் முன்னேறினால் இக்ரிமாவுக்கு ஏற்பட்ட சோதனை தனக்கும் ஏற்படும் என்று கருதியே தன் படையை நிறுத்தி விடுகின்றார். 

 

இந்நிலையில் ஷர்ஹபீல் உடைய படைக்குப் பின்னால் கூடுதல் பலமாக காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் ஒரு படையை அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கின்றார்கள். காலித் (ரலி) அவர்கள் துலைஹா என்பவன் அவனுடைய பகுதியில் தன்னை நபி என்று அறிவித்து மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கின்றான. அவனை கொன்று விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்திருந்தார்கள்.

 

அவர்கள் துலைஹாவின் கதையை முடித்து விட்டு அடுத்த ஆணைக்காக காத்திருக்கும் போது தான் யமாமா நோக்கி செல்லுமாறு கடிதம் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கட்டளை இட்டார்கள்.

 

அனுப்பி வைத்த இந்த தகவலை ஷர்ஹபீல் இப்னு ஹஸனா (ரலி அவர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்து விடுகின்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

 

காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வருகைக்காக ஷர்ஹபீல் காத்திருக்கின்றார். அவர் எதிர்பார்த்தது போல் யமாமா போருக்காக நியமிக்கப்பட்ட காலித் தனது படையை யமாமா நோக்கி நடத்தி வருகின்றார்கள். 

 

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களது தலைமையில் அன்ஸார்களையும், ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களது தலைமையில் முஹாஜிர்களையும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது படைகளுடன் சேர்ந்து கொள்ளும்படி கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

 

முஸைலமா தனது படைகளை மேலும் அதிகரித்ததோடு, இப்பொழுது 40 ஆயிரம் படை வீரர்களுடன் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகத் தனது படையைத் தயாராக்கி, அந்தப் படைகளை அக்ரபா என்ற இடத்தில் நிலை நிறுத்தினான்.

 

போர் ஆரம்பமாகி இரு புறங்களிலும் உயிரிழப்புகள், காயங்கள் என சென்று கொண்டிருக்க, சிறிது நேரத்தில் இஸ்லாமிய படை வீரர்கள் புறத்திலிருந்து தாக்குதல் அதிகமானது.

 

ஒரு கட்டத்தில் படைத்தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், முஸைலமா இருக்கின்ற இடத்தினருகே வந்து விட்டார். அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவன் எதிர்பாராத வகையில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்திய காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், அந்த அதிரடித் தாக்குதலின் காரணமாக நிலைகுலைந்தான் முஸைலமா.

 

பின் தனது தோழர்களைப் பார்த்து, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். தோழர்களே..! நீங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். உறுதியாக நின்று நீங்கள் தாக்கினீர்கள் என்றால், அதனைச் சமாளிக்கும் சக்தி அவர்களுக்குக் கிடையாது, எதிரியைச் சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று ஆர்வமூட்டினார்.

 

ஒரு தாக்குதலையே சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விட்டான். ஒரு தாக்குதலையே, தலைவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கூறிக் கொண்டு, முஸைலமாவின் ஆட்கள் இப்பொழுது கலைந்து ஓட ஆரம்பித்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் முஸைலமாவின் ஆதரவாளர்கள் கேட்டார்கள்.

 

முஸைலமாவே..உனக்கு அருளப்பட்டிருப்பதாக வாதிட்டாயே, அந்த வேத வாக்குறுதிகள் என்னவாயிற்று இப்பொழுது? முஸைலமா பதில் கூறினான் : எதனைப் பாதுகாப்பதற்காக நீங்கள் அணி திரண்டிருக்கின்றீர்களோ, அது உங்களது கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்இந்த வார்த்தைகளை அவன் முழுவதுமாகச் சொல்லி முடித்திருக்கவில்லை,

 

ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற அதே வஹ்ஷி (ரலி) அவர்கள், தான் இஸ்லாத்திற்கு முன்னிருந்த பொழுது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதனை ஈடு செய்யும் பொருட்டு, தன் கையிலிருந்த வேல் கம்பை முஸைலமாவை நோக்கி வீசினார். அதனை சமாளிக்க இயலாத முஸைலமா கீழே வீழ்ந்த பொழுது, அன்ஸாரிகளில் உள்ள இளைஞரொருவர், அவனது கழுத்தை வெட்டி சாய்த்தார்.

 

அபீசீனியா அடிமையான வஹ்ஷி (ரலி) அவர்களின் கரங்களால், முஸைலமா கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி காட்டுத் தீ போல போர்க்களத்தில் பரவ ஆரம்பித்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முஸைலமாவின் ஆட்கள் நாலா பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். இத்துடன், முஸ்லிம் படை முஸைலமாவிற்கு எதிரான போரில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

 

بعد قتل مسيلمة الكذاب وهنت نفوس المرتدين، وخارت عزائمهم، فلم يقووا على فعل شيء، فأعلنوا تسليمهم وقبل أن يعلنوا تسيلمهم كان المسلمون قد أوسعوهم قتلاً، وبلغ عدد قتلى المرتدين في معركة اليمامة واحدًا وعشرين ألف مرتد، وكان جيش المسلمين اثني عشر ألف مجاهد، قتل منهم ألف ومائتا شهيد سقطوا من المسلمين.

ولما أخبر خالد بقتل مسيلمة خرج بمجاعة يرسف في الحديد ليدله على مسيلمة، وأخذ يكشف له عن جثث القتلى حتى عثر عليه، فقال مجاعة لخالد: "وَاللَّهِ مَا جَاءَكَ إِلا سَرْعَانُ النَّاسِ، وَإِنَّ جَمَاهِيرَ النَّاسِ لَفِي الْحُصُونِ"، فقال خالد: "ويلك ما تقول؟"، قال: "هُوَ وَاللَّهِ الْحَقُّ، فَهَلُمَّ لأُصَالِحُكَ عَلَى قَوْمِي".

وبعد معركة اليمامة ذهب وفد من بني حنيفة إلى أبي بكر رضي الله عنه وقص عليه ما كان من أمر مسيلمة، وسألهم عن بعض أسجاع مسيلمة فقالوا له شيئًا منها، فقال: "سُبْحَانَ اللَّهِ! وَيْحَكُمْ! إِنَّ هَذَا لَكَلامٌ مَا خَرَجَ مِنْ إِلٍّ وَلا برٍّ، فَأَيْنَ يَذْهَبُ بِكُمْ؟!".

 

இந்தப் போரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான எதிரிகள் கொல்லப்பட்டார்கள் என்று தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் காரணமாக, இந்தப் பகுதியை ஹதீகத்துல் மவ்த் 'மரணப் பூங்கா' என்றழைக்கப்படுவதும் உண்டு.

 

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், முஸைலமாவின் உடலை முஜாஆ அவர்களின் துணையுடன் அடையாளம் கண்டு கொண்டார்கள். இந்தப் போரில் முஹாஜிர்களும், அன்ஸாரிகளுமாக 300 பேர்களும், இன்னும் அவர்களல்லாத மற்ற பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட முஸ்லிம்கள் 900 பேர்களும், மொத்தம் 1200 பேர்கள் உயிர்த்தியாகிகளானார்கள்.

 

மேலும், உயிர்த்தியாகிகளானாவர்களில் குர்ஆனை மனனம் செய்த 70 ஹாஃபிழ்களும் அடங்குவார்கள்.

 

வெற்றியை கலீபா அவர்களுக்கு அறிவிக்கு முகமாக, பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரையே தனது பிரதிநிதியாக காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

 

தன்னிடம் வந்த பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த அந்தப் பிரதிநிதியிடம், பாவச்சுமைகளுடன் உங்களது கோத்திரத்தாரின் உயிர்கள் பிடுங்கப்பட்டது குறித்து நான் வருத்தமடைகின்றேன், அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமானது என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 

நீங்கள் கேள்விப்பட்டதும், சொல்வதும் அனைத்தும் உண்மையே என்று அந்தப் பிரதிநிதியானவர், அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்.

 

ஆரம்பத்தில் பொய்த்தூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் போது சில நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தைரியம் இழந்தாலும், அபூபக்ர் (ரலி) அவர்களின் தீர்வுகளை நோக்கிய சமரசமில்லாப் போக்கு பொய்த்தூதர்களை வேரறுத்து புதை குழிக்கு அனுப்பியது.

 

 ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில், பொய்த்தூதர்கள் வேரறுக்கப்பட்ட செய்தி அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது, குறுகிய 9 மாத கால அவகாசத்தில், மதீனா விலிருந்து பஹ்ரைன் வரைக்கும் மற்றும் அம்மான் ஆகிய பகுதிகளும் இப்பொழுது முஸ்லிம்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

 

( நூல்: தபரி, 3ம் பாகம், பக்.254 )

 

இன்ஷா அல்லாஹ்… அடுத்த வாரமும் இந்த தலைப்பு தொடரும்…