Thursday, 9 August 2018

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்த்ரும் அற்புதமான வாய்ப்பே துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்!!!


அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்த்ரும் அற்புதமான வாய்ப்பே துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்!!!

 

 
وَالْفَجْرِ  وَلَيَالٍ عَشْرٍ   الفجر: 1-2

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். காலத்தின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாகஎன்று 89 அல் ஃபஜ்ர் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.

எனவே, படைத்த இறைவனே சத்தியமிட்டுக்கூறி இந்த நாட்களின் கண்ணியத்தை உணர்த்துகின்றான்.

பத்து இரவுகள் என்று இங்கு குறிப்பிடுவது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு சுபைர் (ரஹ்), முஜாஹித் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றை ஆதாரமாக குறிப்பிடுகின்றார்கள்.  ( இப்னு கஸீர் : 8 / 413 )

وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ

அல்லாஹ்வின் பெயரை குறிப்பிட்ட  நாட்களில் அவர்கள் கூறுவதற்காகவும் …. 22:28 என்ற வசனத்திற்கு விளக்கம் தருகிற போது இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: ”குறிப்பிட்ட நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும்.

( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: (ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام ـ يعني أيام العشر ـ قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله، إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء) [رواه البخاري].

இந்த பத்து நாட்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்:ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த  நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தோழரே! அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவும்  அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர” என்று கூறினார்கள்.    ( நூல்: புகாரி )  

فعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: (ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد) [رواه أحمد]..

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (துல் ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை.

ஆகவே, தஹ்லீல் லாஇலாஹா இல்லல்லாஹ்,  தக்பீர்  அல்லாஹ் அக்பர்,  தஹ்மீத் -அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( நூல்: அஹ்மத் 5575 )

قال الحافظ ابن حجر في الفتح: والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ”துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் அனைத்து முக்கிய வணக்கவழிபாடுகளும் இந்நாட்களில்ஒருங்கே அமைந்திருப்பதாகும்.

தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்பாகும்.                                      ( நூல்: ஃபத்ஹுல் பாரி : 2 / 534 )

وقال البخاري كان ابن عمر وأبو هريرة رضي الله عنهما يخرجان إلى السوق في أيام العشر يكبران ويكبر الناس بتكبيرها. وقال: وكان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد فيكبرون، ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً. وكان ابن عمر يكبر بمنى تلك الأيام وخلف الصلوات وعلى فراشه، وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), அபூஹுரைரா (ரழி) ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்)பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ( நூல்: புகாரி :  1/ 339 )

உமர் (ரழி) அவர்கள்  மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும்,  கடைத்தெருக்களில் உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.

இப்னு உமர் (ரழி) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123.

எனவே, மேற்கூறிய குர்ஆன் வனத்தின் மூலமும், ஹதீஸின் மூலமும், நபித்தோழர்கள், இமாம்கள் ஆகியோருடைய விளக்கங்களின் மூலமும்  துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாட்களில் அமல்கள் செய்வதை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

இந்த முதல் பத்து நாட்களும் சிறப்புக்குரியவை என்று சிறப்பித்துக் கூறிய நபி (ஸல்) அவர்கள் இந்த நாட்களில் செய்வதற்கென்று விசேஷமாக எந்தஅமல்களையும் சுட்டிக்கா ஹதீஸ்களில் கிடையாது.

விசேஷமான அமல்கள் இல்லா விட்டாலும் வழமையாக நாம் செய்து வரும் அமல்களை பூரணமாகவும், சரியாகவும் செய்து வர முயற்சி செய்ய வேண்டும்.

பர்ளான தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுது வருவது. பர்ளுடைய முன்-பின் ஸுன்னதுக் களை பேணித் தொழுது வருவது, தொழுகைக்குப் பின் ஓதக் கூடிய அவ்ராதுகளை சரியாகத் தொடராக ஓதி வருவது, காலை-மாலை நேரங்களிலும், ஓய்வு கிடைக்கும் போதும் குர்ஆனை ஓதிக் கொள்வது நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துகளை ஓதிக் கொள்வது, தான தர்மங்கள் செய்வது, ஏழைக்கு உணவளிப்பது, நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்வது இன்னும், குறிப்பாக அந்த பத்து நாட்களிலும் பாவமான சிந்தனைகளை, செயல்பாடுகளை விட்டும் தூரமாகி நல்லறங்கள், வணக்க, வழிபாடுகள் செய்வதில் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.

மேலும், அரஃபா நாளன்று (துல்ஹஜ் பிறை 9 அன்று) நோன்பு வைப்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அழகிய நடைமுறையாகும்.

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:- ”அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து, இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான்” என்று நபி {ஸல்} கூறினார்கள்.        ( நூல்: முஸ்லிம் )

                فقال
الرسول صلى الله عليه وسلم
 (صيامُ يومِ عرفةَ، أَحتسبُ على اللهِ أن يُكفِّرَ السنةَ التي قبلَه. والسنةَ التي بعده) [رواه مسلم

அபூ கத்தாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்:- அரஃபா நாளன்று நோன்பு வைப்பவருக்கு அந்நாளுக்கு முன் வருட பாவங்களையும், பின் வருட பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொள்கிறேன்என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                  ( நூல் : முஸ்லிம் )

இது போன்ற சிறப்பு தினங்கள் என்பது அல்லாஹ் அடியார்களின் மீது பொழிகிற அளப்பெரும் அன்புக்கு சான்றாகும்.

இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நம் ஈமானையும், இறை நெருக்கத்தையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாய்ப்புகளை பயன்படுத்திய மேன்மக்கள்!!

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு நடை பெற்ற படையெடுப்புக்கு தாதுர் ரிகாவுஎனும் பெயர். இந்த யுத்தத்தில் தான் யுத்த கால தொழுகை முறை அறிமுகம் ஆனது.

நபித்தோழர்களின் ஈமானை பரிசோதிக்கும் முகமாக அமைந்து விட்டதோ எனும் எண்ணுமளவிற்கு பல்வேறு சோதனைகள் அங்கே நடைபெற்றன.

முறைவைத்து தான் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மொத்த படை வீரர்கள் 700 நபர்கள். ஆறு நபருக்கு ஒரு ஒட்டகம் வீதம் பயணத்திற்கு பயன் படுத்தப் பட்டது.

எந்த அளவுக்கெனில், நபித்தோழர்களின் பலருடைய நகங்களெல்லாம் கிழிந்து விழுந்து விட்டன.

பாறைகளையும், பாலைகளையும் கடந்து சென்றதால் பலருக்கு காயம் ஏற்பட்டு தங்களது துணிகளை கிழித்து காயத்திற்கு ஒட்டுப்போட்டுக்கொண்டனர்.

ஆதலால், அந்தப் போருக்கே தாதுர் ரிகாவு ஒட்டுத்துணிப்போர் என பெயர் வழங்கப்பட்டது.

பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே அந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முஸ்லிம்கள் திரும்பி விட்டனர்.

بعد أن فرغ رسول الله والمسلمين من غزوة ذات الرقاع نزلوا مكانا يبيتون فيه، واختار الرسول للحراسة نفرا من الصحابة يتناوبونها وكان منهم عمار بن ياسر وعباد بن بشر في نوبة واحدة.

ورأى عباد صاحبه عمار مجهدا، فطلب منه أن ينام أول الليل على أن يقوم هو بالحراسة حتى يأخذ صاحبه من الراحة حظا يمكنه من استئناف الحراسة بعد أن يصحو.
ورأى عباد أن المكان من حوله آمن، فلم لا يملأ وقته اذن بالصلاة، فيذهب بمثوبتها مع مثوبة الحراسة..؟!
وقام يصلي..

واذ هو قائم يقرأ بعد فاتحة الكتاب سور من القرآن، احترم عضده سهم فنزعه واستمر في صلاته..!

ثم رماه المهاجم في ظلام الليل بسهم ثان نزعه وأنهى تلاوته..
ثم ركع، وسجد.. وكانت قواه قد بددها الاعياء والألم، فمدّ يمينه وهو ساجد الى صاحبه النائم جواره، وظل يهزه حتى استيقظ..
ثم قام من سجوده وتلا التشهد.. وأتم صلاته.
وصحا عمار على كلماته المتهدجة المتعبة تقول له:
" قم للحراسة مكاني فقد أصبت".

ووثب عمار محدثا ضجة وهرولة أخافت المتسللين، ففرّوا ثم التفت الى عباد وقال له:
" سبحان الله..
هلا أيقظتني أوّل ما رميت"؟؟
فأجابه عباد:

" كنت أتلو في صلاتي آيات من القرآن ملأت نفسي روعة فلم أحب أن أقطعها.
ووالله، لولا أن أضيع ثغرا أمرني الرسول بحفظه، لآثرت الموت على أن أقطع تلك الآيات التي كنت أتلوها"..!!

வழியில் ஓரிடத்தில் இளைப்பாருவதற்காக நபிகளார் படையினரை அனுமதித்தார்கள். இந்த இரவில் நமக்காக காவல் காற்பது யார்? என்று நபி {ஸல்} அவர்கள் வினவிய போது

முஹாஜிர்களில் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் முன் வந்தனர்.

நபிகளாரும், நபித்தோழர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவின் ஒரு பகுதி கழிந்ததும் அப்பாத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் நீங்கள் தூங்கிக் கொள்ளுங்கள். நான் காவல் காக்கின்றேன். பின்னர் நான் உறங்குகின்றேன் நீங்கள் காவல் காத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்ச நேரம் போனது அவர்களின் மனம் முழுவதும் இந்த ரம்மியமான இரவு வீணாகி விடக்கூடாது. பேசாமல் சிறிது நேரம் தொழுது விடுவோம் என ஆசை கொண்டது.

தொழுகைக்கு தக்பீர் கட்டி நின்றார்கள். ஃபாத்திஹா வுக்குப் பின்னர் சூரா கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார்கள்.

பின்னால், வேவு பார்த்து வந்த எதிரி ஒருவன் அப்பாத் அவர்களின் மீது அம்பொன்றை எய்தான். பிடுங்கி தூர எறிந்து விட்டு தொழுகையை தொடர்ந்தார்கள்.

மீண்டும் ஒரு அம்பு, மீண்டும் ஒரு அம்பு என மூன்று அம்புகள் எய்யப்பட்டது. ஆனாலும் அசராமல் பிடுங்கி எறிந்து விட்டு தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு அம்மார் (ரலி) அவர்களை எழுப்பினார்கள்.

எழுந்து பார்த்த அம்மார், அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.

ஏன் முதல் முறை நீங்கள் தாக்கப்படும் போதே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? எனக் கேட்டார்கள்.

தொழுகையில், குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். இடையில் நிறுத்த என் மனம் விரும்ப வில்லை.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன் அம்மாரே! நான் குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதை விட மரணித்து போவதையே விரும்பினேன்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் படைக்கு காவலாக இருக்கும் படி கட்டளை இட்டிருந்ததால், என் மரணம் படைக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என அஞ்சினேன்என்றார்கள்.

       (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல்மஃகாஸீ லில் வாகிதீ)

كان عبدالله بن المبارك
يحج عاماً ويغزو في سبيل الله
 عاماً آخر، وفي العام الذي أراد فيه الحج.. خرج ليلة ليودع أصحابه قبل سفره..
 وفي الطريق وجد منظراً ارتعدت له أوصاله. واهتزت له أعصابه
وجد سيدة في الظلام تنحني على كومة أوساخ وتلتقط منها دجاجة ميتة.. تضعها تحت ذراعها.. وتنطلق في الخفاء.. فنادى عليها وقال لها: ماذا تفعلين يا أمة الله؟
فقالت له: يا عبد الله – اترك الخلق للخالق فلله تعالى في خلقه شؤون، فقال لها ابن المبارك: ناشدتك الله أن تخبريني بأمرك.. فقالت المرأة له: أما وقد أقسمت عليّ بالله.. فلأخبرنَّك

فأجابته دموعها قبل كلماتها : إن الله قد أحل لنا الميتة..أنا أرملة فقيرة وأم لأربع بنات غيب راعيهم الموت واشتدت بنا الحال ونفد مني المال وطرقت أبواب الناس فلم أجد للناس قلوبا رحيمة فخرجت ألتمس عشاء لبناتي اللاتي أحرق لهيب الجوع أكبادهن فرزقني الله هذه الميتة .. أفمجادلني أنت فيها؟

وهنا تفيض عينا ابن المبارك من الدمع وقال لها: خذي هذه الأمانة وأعطاها المال كله الذي كان ينوي به الحج.. وأخذتها أم اليتامى، ورجعت شاكرة إلى بناتها
وعاد ابن المبارك إلى بيته، وخرج الحجاج من بلده فأدوا فريضة الحج، ثم عادوا، وكلهم شكر لعبد الله ابن المبارك على الخدمات التي قدمها لهم في الحج.

يقولون: رحمك الله يا ابن المبارك ما جلسنا مجلسا إلا أعطيتنا مما أعطاك الله من العلم ولا رأينا خيرا منك في تعبدك لربك في الحج هذا العام
فعجب ابن المبارك من قولهم، واحتار في أمره وأمرهم، فهو لم يفارق البلد، ولكنه لايريد أن يفصح عن سره

وفي المنام يرى رجلا يشرق النور من وجهه يقول له: السلام عليك يا عبدالله ألست تدري من أنا؟ أنا محمد رسول الله أنا حبيبك في الدنيا وشفيعك في الآخرة جزاك الله عن أمتي خيرا
يا عبد الله بن المبارك، لقد أكرمك الله كما أكرمت أم اليتامى.. وسترك كما سترت اليتامى، إن الله – سبحانه وتعالى – خلق ملكاً على صورتك.. كان ينتقل مع أهل بلدتك في مناسك الحج.. وإن الله تعالى كتب لكل حاج ثواب حجة وكتب لك أنت ثواب سبعين حجة
.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப்பெரிய வல்லுநர். ஒரே நேரத்தில் அவருடைய வகுப்பிலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹதீஸ் பாடம் பயில அமர்ந்திருப்பார்கள்.

ஒரு ஆண்டும் ஹஜ் மற்றும் நபிகளாரை ஜியாரத் செய்யவும் அடுத்த ஆண்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்காக செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறெ அந்த ஆண்டு ஹஜ் செய்ய முடிவெடுத்து, தம் தோழர்களோடு பயணம் செய்ய ஆயத்தமானார்கள்.

பயணம் செய்வதற்காக ஒரு வாகனத்தை வாங்க சந்தைக்கு வருகின்றார்கள். வழியில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி) அவர்கள் கண்ட காட்சி அவர்களின் இதயத்தை ரணமாக்கி, இரு விழிகளில் இருந்தும் கண்ணீரை வரவழைத்து விட்டது.

அங்கே ஒரு பெண்மணி செத்துப் போன ஒரு வாத்து, அல்லது கோழியின் இறக்கைகளை உறித்துக் கொண்டும், அதன் இறைச்சியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.

அப்பெண்மணியின் அருகே சென்ற இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அப்பெண்மனியை நோக்கிஓ அல்லாஹ்வின் அடிமையே! என்ன காரியம் செய்து கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அப்பெண்மணிபடைத்தவனுக்கும், படைக்கப்பட்ட ஒரு படைப்புக்கும் தொடர்பான விவகாரம் இது! இதில் தலையிட உமக்கு அதிகாரமில்லை, உம் வேலையைப் பார்த்து விட்டுச் செல்லும்!” என்றார்.

அதற்கு, அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள்அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன்! உம்மைப் பற்றி எமக்கு நீங்கள் அவசியம் சொல்ல வேண்டும்என்றார்கள்.

அப்பெண்மணி வாயைத் திறந்து வார்த்தைகளைக் கொட்டும் முன்பாக, அவர்களின் கண்கள் கண்ணீரை கொண்டு வந்து கொட்டியது.

தழுதழுத்த குரலில் அப்பெண்மணிஅல்லாஹ் என் போன்ற ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு இந்த செத்துப்போன பிராணிகளை ஹலாலாக ஆக்கியிருக்கின்றான்.

நானோ கணவன் இல்லாத விதவைப்பெண், அங்கே என் வீட்டிலோ என்னுடைய நான்கு பெண்மக்களும் உண்ண உணவில்லாமல் பசியால் குடல் வெந்து துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நானும், என்னைச் சுற்றியிருக்கிற மனிதர்கள் அனைவரிடத்திலும் உதவி கேட்டு மன்றாடி விட்டேன். ஒருவரின் இதயத்தில் கூட இரக்கம் சுரக்கவில்லையே!?”

ஏதோ, அல்லாஹ்வாவது எங்களின் இந்த பரிதாப நிலை கண்டு, அருள் புரிந்து இந்த செத்தப் பிராணியை தந்திருக்கின்றான்.

ஆனால், நீரோ இப்போது என்னிடம் வந்து தர்க்கித்துக் கொண்டிருக்கின்றீர்என்று கூறினாள்.

இதைக் கேட்டதும் தான் தாமதம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.

ஒரு வழியாக, நிதானித்து விட்டு தம் கையிலிருந்த பணப்பையை அந்தப் பெண்மணியிடத்திலே கொடுத்து விட்டு உடனடியாக திரும்பி விட்டார்கள்.

அப்பெண்மணியோ நன்றிப் பெருக்கோடும், மகிழ்ச்சியோடும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் செல்லும் திசை நோக்கி அவர்களின் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் குழு நீண்ட நேரமாகியும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் வராததால் வழியில் வந்து சேர்ந்து கொள்வார் எனக் கருதி ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர்.

ஹஜ்ஜுடைய காலம் முடிந்து ஹஜ்ஜுக்குச் சென்ற அவர்களின் நண்பர்கள் ஊர் திரும்பினர்.

வீட்டில் இருந்த அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைச் சந்தித்த நண்பர்கள் ஒவ்வொருவரும்அப்துல்லாஹ்வே! அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்! உம்முடைய வழிகாட்டலால் தான் நாங்கள் எங்களின் ஹஜ்ஜை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள முடிந்தது.

கஅபாவில் வைத்து நீர் எங்களோடு நடந்து கொண்ட அந்த அழகிய பண்பாடுகள் இருக்கிறதே இப்போது நாங்கள் நினைத்தாலும் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

அல்லாஹ் உமக்கு வழங்கிய கல்வியறிவைக் கொண்டு எங்களின் எல்லோருடைய ஹஜ்ஜையும் மிகச் சரியாக அமைத்துக் கொள்ள உதவி புரிந்தீர்!

அதே நேரத்தில், ஹஜ்ஜுடைய காலத்தில் நீர் உம்முடைய ரப்பை வணங்கிய அந்த முறை, வணக்க வழிபாட்டில் காட்டிய ஈடுபாடு, ஹஜ்ஜுடைய கிரியைகளில் நீர் செலுத்திய கவனத்தைப் போன்று வேறெவரும் செலுத்தியதை நாங்கள் பார்த்ததில்லை.

மொத்தத்தில் உம்மைப் போன்று ஓர் சிறந்த மனிதரை இந்த உலகத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை!” என்று கூறி நன்றி சொல்லிக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? நான் எங்கே ஹஜ்ஜுக்கு சென்றேன்? வந்தார்கள், வாழ்த்தினார்கள், நன்றி கூறினார்கள் என்ன நடக்கிறது?” என்று தமக்குத் தாமே பேசிக் கொண்டார்கள்.

அன்றைய இரவு கனவில் பெருமானார் {ஸல்} அவர்களைக் கனவில் காணும் அரும்பாக்கியத்தை, பெரும்பேற்றை பெற்றார்கள் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள்.

கனவில் வந்த பெருமானார் {ஸல்} அவர்கள்அப்துல்லாஹ்வே உமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! நான் யார் என்று நீர் அறிவீரா? நான் தான் முஹம்மது {ஸல்} இந்த உலகத்தில் நீர் நேசிக்கின்ற, நாளை மறுமையில் உமக்கு பரிந்துரை செய்யவிருக்கின்ற உம்முடைய நபி!

ஆரம்பமாக, என் உம்மத்தினரின் சார்பாக உமக்கு அல்லாஹ் நல்ல நலவுகளைத் தர வேண்டுமென நான் துஆ செய்கிறேன்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களே! நீர் ஓர் ஆதரவற்ற குடும்பத்திற்கு சந்தோஷத்தை வழங்கியது போன்று அல்லாஹ் உமக்கும் சந்தோஷத்தை வழங்குவான்! நீர் அவர்களின் நிலையைக் கண்டு, அவர்களுக்கு உதவியதை மறைத்தது போன்று அல்லாஹ் நாளை மறுமையில் உம்முடைய குறைகளையும் மறைப்பான்!

நீர் செய்த காரியம் அல்லாஹ்வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பலனாக அல்லாஹ் உம்முடைய தோற்றத்தில் ஒரு வானவரை அனுப்பி, உமக்குப் பகரமாக ஹஜ் கிரியைகளைச் செய்ய வைத்தான்.

மேலும், நீர் ஒரு முஸ்லிமின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, தவறான பாதையில் செல்ல இருந்த ஒரு முஸ்லின் குடும்பத்தை நேர்வழியின் பால் திருப்பி விட்டதால் அல்லாஹ் உமக்கு எழுபது ஹஜ் செய்த நன்மையை சன்மானமாக வழங்கி கௌரவிக்கின்றான்!” என்று கூறினார்கள்.

 ( நூல்: அல் பிதாயா வந் நிஹாயா லி இமாமி இப்னு கஸீர், பாகம்:13, பக்கம்:611 )

வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆர்வத்தோடு செய்கிற அமல் தான் மௌத் வரை நம்மிடம் இடம் பெற்றிருக்கும்…

وذكر عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: " نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا قالوا صوت حارثة بن النعمان " . فقال رسول الله صلى الله عليه وسلم: " كذلك البر كذلك البر " . وكان أبر الناس بأمه.

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் ஆயிஷாவே! எனக்கு உறக்கத்தில் சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின் ஓர் பகுதியிலிருந்து ஒருவர் அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக் கேட்டேன்.

அப்போது, நான் யார் இவர்? இங்கே குர்ஆன் ஓதுகின்றாரே? என்று ஆச்சர்யத்தோடு வினவினேன்.

அப்போது, என்னிடம் இந்த சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டதுஎன்று கூறிய அண்ணலார் தொடர்ந்து, “ நன்மை செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء " .


இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி வாழ்ந்தார்கள்.

தான் தொழுகிற இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை வைத்திருப்பார்கள்.

வீட்டு வாசலில் எவராவது வந்து யாசகம் கேட்டால், கையில் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில் கொடுத்து விட்டு மீண்டும் தாங்கள் அமரும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.

ஒருவர் அல்ல இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.

ஹாரிஸா (ரலி) அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், சிரமங்களையும் பார்த்து விட்டு அவர்களின் குடும்பத்தினர் ஓர் யாசகருக்கு இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு கொடுப்போமே?” என்று கூறினார்கள்.

அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள் ஏழை எளியோரை தேடிச் சென்று, அவர்களின் கரங்களில் கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.
ஆதலால், தான் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்என்றார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் லி இப்னி அப்தில் பர் )

பாக்கியம் நிறைந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை அமல்களால் அலங்கரித்து, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்வதோடு, அவனுடைய மேலான ரஹ்மத்திற்கும், மஃக்ஃபிரத்திற்கும் சொந்தக்காரராகி, சுவனத்தை அனந்தரமாக்கிக் கொள்ளும் நல்ல நஸீபை பாக்கியத்தை நம் எல்லோருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் தந்தருள் பாளிப்பானாக!

ஆமீன்! ஆமீன்! யரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!