நாம் எந்த வகை மனிதர்கள்?
வரலாற்றில் சில மனிதர்கள் ஆற்றலால் அறியப்படுகின்றார்கள்,
புகழப்படுகின்றார்கள்.
இன்னும் சிலர் அழகால், இன்னும் சிலர் அறிவால், இன்னும்
சிலர் ஆட்சி, அதிகாரத்தால், இன்னும் சிலர் குடும்பப் பாரம்பர்யத்தால், இன்னும் சிலர்
செல்வத்தால், இன்னும் சிலர் மக்கட் செல்வத்தால் அறியப்படுகின்றார்கள், புகழப்படுகின்றார்கள்.
மேற்கூறிய அடையாளங்களும், தகுதிகளும் தான் ஓர் மனிதன்
அறியப்படுவதற்கும், புகழப்படுவதற்கும் அளவுகோலா என்றால் இல்லை என்றே இஸ்லாம் இயம்பும்.
மாறாக,
எந்த மனிதர் அழகிய முறையிலும், ஆச்சர்யத்தக்க வகையிலும் இறை திருப்தியை நோக்கமாகக்
கொண்டு வாழ்கின்றாரோ அவரையும், அவரின் வாழ்க்கையையும் உலகம் உள்ள வரையிலும் நினைவு
கூரத்தக்க வகையில் ”வாழ்ந்தால் இவர் போன்று வாழ வேண்டும், இறந்தால் இவர் போன்று இறக்க
வேண்டும்” என்று உலக மாந்தர்களின் மனங்களில் நீங்காத ஓர் இடத்தை பெற்றுத் தருகின்றான்
இறைவன்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் 11 இடங்களில்
வமினன் நாஸி மனிதர்களில் இப்படியும் சிலர் இருக்கின்றார்கள் என்று கூறி மனிதர்களின்
குணங்களில் பலதை பட்டியலிடுகின்றான்.
அதில், ஒரேயொரு குணத்தை மட்டுமே, ஒரேயொரு குணத்தை
கொண்டிருப்போரை மட்டுமே அல்லாஹ் உயர்த்திக் குறிப்பிடுகின்றான்.
وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ
وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
காரணம் அத்தகைய மனிதர்கள் அதியசத்தக்க வாழ்க்கையை
வாழ்ந்திருக்கின்றார்கள். ஆச்சர்யத்தக்க வகையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்.
ஆற்றலால் அறியப்பட்ட சிலரின் முடிவு அலங்கோலமாய்
போனதாக இறை மறை கூறுகின்றது. ( ஆது சமூகமும், அவர்களின் முடிவும் )
அறிவால் அறியப்பட்ட சிலரின் முடிவு தண்டனையாய் அமைந்ததாக
வான் மறை எச்சரிக்கின்றது. ( ஷைத்தான், காரூண், பல்ஆம் இப்னு பாவூரா )
ஆட்சி, அதிகாரத்தால் அறியப்பட்ட சிலரின் முடிவு
உலக மாந்தருக்கு படிப்பினையாய் அமைந்ததாக அல்குர்ஆன் அறிவுறுத்துகின்றது. ( ஃபிர்அவ்ன்,நம்ரூத்
)
செல்வம், செல்வாக்கு, மக்கட்செல்வம் ஆகியவற்றால்
அறியப்படும் சிலரின் முடிவு நாளை மறுமையில் கடுமையாய், நரகமாய் இருக்கும் என திருமறை
இயம்புகின்றது.
எனவே, ஒருமுறை மட்டுமே வாழப்போகிற வாழ்க்கையை அழகிய
முறையில், அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்திட ஆசைப்படுவோம்.
வாழும் போதே புகழோடும், வாழ்ந்து மரணித்த பின்னரும் அப்புகழ்
என்றென்றும் நிலைத்திருக்கும் அளவுக்கான வாழ்க்கை அமைய வேண்டும் என ஆசை வேண்டும்.
இப்ராஹீம் {அலை}
அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது….
وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
“இறைவா! பிற்கால மக்களிடையே
எனக்கு உண்மையான புகழை வழங்குவாயக!” என்று பிரார்த்தித்ததை
அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மேலும், மறுமை நாளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும் போது….
يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
“அந்த
நாளில் மனிதனுக்கு அவன் மரணத்திற்கு முன் செய்த, அவன்
மரணத்திற்கு பின் தனக்காக செய்து வைத்து விட்டு வந்த அனைத்துச் செயல்களும்
எடுத்துக் காட்டப்படும்”
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ
“ஒவ்வொரு
மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் நன்கு அறிந்து கொள்வான்”.
என்று கூறுகின்றான். மேற்கூறிய இறைவசனங்களுக்கு விரிவுரை தருகிற அறிஞர்
பெருமக்கள் ஒரு மனிதன் மரணத்திற்கு பின்னரும் அவனுக்காக நாளை மறுமையில் அவனை
ஈடேற்றம் பெறச் செய்கிற நல்லறங்களை மேற்கொண்டு, புகழ்மிக்க வாழ்க்கையை வாழவேண்டும் என்று”
விளக்கம் தருகிறார்கள்.
1.
ஒரு நாளாகினும்… ஒரு பொழுதாகினும்…
மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த அந்த நபித்தோழரைச் சுற்றிலும் மனைவி, மக்கள் உறவுகள் நின்று கொண்டு நபித்தோழரின் ஸக்ராத் வேதனையைக் கண்டு மனம்
தாளாமல் அழுது கொண்டிருந்தனர்.
قال أبو إسحاق السبيعي: لما
احتضر أبو سفيان بن الحارث بن عبد المطلب قال: لا تبكوا علي، فإني لم أتنطف بخطيئة منذ أسلمت.
أبو سفيان بن الحارث هو ابن
عم النبي صلى الله عليه وسلم المغيرة بن الحارث بن عبد المطلب بن هاشم الهاشمي.
ஸக்ராத்தின் வேதனையின் உச்சத்தில் உழன்று கொண்டிருந்த அந்த நபித்தோழர் மனைவி, மக்கள், உறவுகளை நோக்கி “என் அருகாமையில் நின்று எவரும் அழாதீர்கள்! ”நான் இஸ்லாத்தை ஏற்ற நொடிப்பொழுதில்
இருந்த இப்போது இந்த நொடிப்பொழுது வரை என் ரப்பின் கட்டளைக்கு மாற்றமான எந்தவொரு
பாவத்தையும் நான் செய்ததில்லை!” என்று கூறினார்கள்.
இப்படியான ஒரு உயரிய, உத்திரவாதமான பதிலை இந்தச் சபையில்
இருக்கும் என்னாலோ, உங்களாலோ தர முடியுமா? சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கின்றோம்.
அந்த நபித்தோழர் வேறு யாருமல்ல, மாநபி
{ஸல்} அவர்களின் பெரிய தந்தை ஹாரிஸ் அவர்களின் மகனார் அபூ ஸுஃப்யான் முகீரா இப்னு
ஹாரிஸ் (ரலி) அவர்கள்.
2. மலக்குமார்களின்
ஸலாத்தையும், உரையாடலையும்…
عمران بن حصين
أسلم عام خيبر، وغزا مع رسول الله صلى الله عليه وسلم غزوات، بعثه
عمر بن الخطاب إلى البصرة، ليفقه أهلها وكان من فضلاء الصحابة، واستقضاه عبد الله
بن عامر على البصرة، فأقام قاضياً يسيراً، ثم استعفي فأعفاه.
قال محمد بن سيرين: لم نر في البصرة أحداً من أصحاب النبي صلى الله
عليه وسلم يفضل على عمران بن حصين.
وكان مجاب الدعوة وكان في مرضه تسلم عليه الملائكة، فاكتوى ففقد
التسليم، ثم عادت إليه، وكان به استسقاء فطال به سنين كثيرة، وهو صابر عليه، وشق
بطنه، وأخذ منه شحم، وثقب له سرير فبقي عليه ثلاثين سنة، ودخل عليه رجل فقال: يا
أبا نجيد، والله إنه ليمنعني من عيادتك ما أرى بك! فقال: يا ابن أخي، فلا تجلس،
فوالله إن أحب ذلك إليّ أحبه إلى الله عز وجل.
وحقق ايمان عمران بن حصين أعظم نجاح، حين أصابه مرض موجع لبث معه
ثلاثين عاما، ما ضجر منه ولا قال: أفّ..
بل كان مثابرا على عبادته قائما، وقاعدا وراقدا..
وكان اذا هوّن عليه اخوانه وعوّاده أمر علته بكلمات مشجعة، ابتسم
لها وقال:
" ان أحبّ الأشياء الى نفسي، أحبها الى الله"..!!
وكانت وصيته لأهله واخوانه حين أدركه الموت:
" اذا رجعتم من دفني، فانحروا وأطعموا"..
இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின்
தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
கைபருக்குப்
பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி
இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம்
அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத
காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.
ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த
ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன
போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.
அப்போது,
இம்ரான் பின்
ஹஸீன் (ரலி) அவர்கள்
“தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என
விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக
பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.
فدخل عليه بعض الصحابة
فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا
الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم
تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما
اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح
الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي
عنه،
இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள்
அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்
பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன்
திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான்
விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை
சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன்,
நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை
நான் கருத வில்லை, மாறாக, அவனிம்
முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை
வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.
( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்
ரஸூல் {ஸல்}....,
உஸ்துல் ஃகாபா )
3. இப்படி இறந்து போகும் பாக்கியமாவது?....
وفي ليلة من الليالي نام هو
والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -:
قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه،
فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه،
فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر،
فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة،
وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه
وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».
فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟
قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.
قال ابن مسعود: فوددت والله أني أنا الميت.
فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟
قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.
قال ابن مسعود: فوددت والله أني أنا الميت.
இப்னு மஸ்வூத் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார்
அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.
முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப்
பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.
உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.
அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று
தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.
மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின்
எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்}
அவர்களும், அபூபக்ர்(ரலி)
மற்றும் உமர் (ரலி) அவர்களும்
நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.
அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன்
அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்
இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.
அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன்
(ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு
கூறினார்கள்.
பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ்!
இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன்
அவர்கள் வாழ்வை நான்
பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக்
கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ்
நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ
செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.
அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாதா என
ஏங்கினேன்.”
( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா
)
4. கல்புக்கும்
கண் இருந்தால்…
கலீஃபா உமர் {ரலி}
அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து
வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார்.
நேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்?”
எனக் கேட்டார்கள்.
அதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் தான் தவறொன்றும்
செய்ய வில்லையே?
பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள்
செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். என்று கேட்டார்.
உடனே, உமர் {ரலி}
அவர்கள் சற்றேரக்குறைய 12 வயதே ஆன அச் சிறுவரை தம் அருகே அழைத்து, உமர் {ரலி}
அவர்கள் ”தலையை தடவிக் கொடுத்து, முதுகை தட்டிக் கொடுத்து இப்படித்தான் உண்மையை, சத்தியத்தை யார் எதிரிலும் சொல்லத் தயங்கிடக் கூடாது. துணிவுடன் கூற வேண்டும். என்று பாராட்டிக் கூறினார்கள்.
அச் சிறுவர் வேறுயாருமல்ல அபூபக்ர் {ரலி} அவர்களின் மகள் அஸ்மா {ரலி}
அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி}
அவர்கள் தான்.
பின் நாளில்
கொடுங்கோன்மை
புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை மிகத் துணிவோடு எதிர் கொண்டு
போராடிட,
உமர் {ரலி} அவர்களின்
பாராட்டல் தான் உந்து சக்தியாக இருந்ததோ என்னவோ ஹஜ்ஜாஜின்
எந்தவொரு உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் பயப்படாமல் “அஞ்சா நெஞ்சத்துடன்”
தொடர்ந்து போராடினார்கள்.
வரலாற்றில் அடக்கு
முறையாளர்களை நடுங்கவைத்தவர்கள் எனும் ஒரு சிறப்பியலே
இருக்கிறது.
அதில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு தனியோரு புகழுக்குச் சொந்தக் காரராக மிளிர்கிறார்கள்.
ஹஜ்ஜாஜ் ஹரம்
ஷரீஃபை முற்றுகையிட்டிருந்த வரலாற்றின் மிக மோசமான தருணம் அது.
ودخل عبد الله
بن الزبير على أمه فشكا إليها خذلان الناس له، وخروجهم إلى الحجاج حتى أولاده
وأهله، وأنه لم يبق معه إلا اليسير، ولم يبق لهم صبر ساعة، والقوم يعطونني ما شئت
من الدنيا، فما رأيك؟
فقالت: يا بني
أنت أعلم بنفسك إن كنت تعلم أنك على حق وتدعو إلى حق فاصبر عليه فقد قتل عليه
أصحابك، ولا تمكن من رقبتك يلعب بها غلمان بني أمية، وإن كنت تعلم أنك إنما أردت
الدنيا فلبئس العبد أنت، أهلكت نفسك وأهلكت من قتل معك، وإن كنت على حق فما وهن
الدين وإلى كم خلودكم في الدنيا؟ القتل أحسن.
فدنا منها فقبّل
رأسها وقال: هذا والله رأيي، ثم قال: والله ما ركنت إلى الدنيا ولا أحببت
الحياة فيها، وما دعاني إلى الخروج إلا الغضب لله أن تستحل حرمته، ولكنني أحببت أن
أعلم رأيك، فزدتيني بصيرة مع بصيرتي.
فانظري يا إماه
فإني مقتول في يومي هذا فلا يشتد حزنك، وسلمي لأمر الله، فإن ابنك لم يتعمد إتيان
منكر، ولا عمل بفاحشة قط، ولم يَجُرْ في حكم الله، ولم يَغْدُرْ في أمان، ولم
يتعمد ظلم مسلم ولا معاهد، ولم يبلغني ظلم عن عامل فرضيته بل أنكرته، ولم يكن عندي
آثر من رضى ربي عز وجل.
اللهم إني لا
أقول هذا تزكية لنفسي، اللهم أنت أعلم بي مني ومن غيري، ولكني أقول ذلك تعزية لأمي
لتسلو عني.
فقالت أمه:
إني لأرجو من الله أن يكون عزائي فيك حسناً، إن تقدمتني أو تقدمتك، ففي نفسي اخرج
يا بني حتى أنظر ما يصير إليه أمرك.
فقال: جزاك
الله يا أمه خيراً فلا تدعي الدعاء قبل وبعد.
فقالت: لا
أدعه أبداً لمن قتل على باطل فلقد قتلت على حق، ثم قالت: اللهم ارحم طول ذلك
القيام وذلك النحيب والظمأ في هواجر المدينة ومكة، وبره بأبيه وبي، اللهم إني قد
سلمته لأمرك فيه ورضيت بما قضيت فقابلني في عبد الله بن الزبير بثواب الصابرين
الشاكرين.
ثم أخذته إليها
فاحتضنته لتودعه واعتنقها ليودعها -وكانت قد أضرت في آخر عمرها - فوجدته لابساً
درعاً من حديد.
فقالت: يا بني
ما هذا لباس من يريد ما نريد من الشهادة !!
فقال: يا أماه
إنما لبسته لأطيب خاطرك وأسكن قلبك به. (ج/ص: 8/365)
فقالت: لا يا
بني ولكن انزعه فنزعه، وجعل يلبس بقية ثيابه ويتشدد وهي تقول: شمر ثيابك، وجعل
يتحفظ من أسفل ثيابه لئلا تبدو عورته إذا قتل.
وجعلت تذكره
بأبيه الزبير، وجده أبو بكر الصديق، وجدته صفية بنت عبد المطلب، وخالته عائشة زوج
رسول الله صلى الله عليه وسلم، وترجيه القدوم عليهما إذا هو قتل شهيداً.
எப்படியும் தாம் ஷஹீதாகி விடுவோம் என்பதை விளங்கியிருந்த அப்துல்லாஹ் {ரலி},
நடுநிசியில் தம் தாயார் அஸ்மா {ரலி}
அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள்.
தாயாரிடம் அவர் ” நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா {ரலி}
அவர்கள் “மகனே! என்னை விட உன்னைப் பற்றி நீயே
நன்கறிவாய்! நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய்!
ஆதலால் தான் மக்களையும் சத்தியத்தின் மீது ஒன்றினைத்து இருக்கின்றாய்!
எனவே எதை நீ சத்தியமென நீ உறுதி கொண்டுள்ளாயோ, அதில் மரணம் வரும் வரை
நிலைத்திரு. எதைக்
கண்டும் அஞ்சாதே! பனீ உமைய்யாக்களின் சிறுவர்கள்
முட்டுக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்று நீயும் இருந்து விடாதே!
ஹஜ்ஜாஜ் இப்னு
யூஸுஃப் –
க்கு எதிரான உன் போராட்டம் உலகாதாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமேயானால், மகனே நன்றாக
விளங்கிக் கொள். பூமியில் நடமாடுபவர்களில் நீயே மிக மிகக்
கெட்டவன்.
உன்னையும் அழித்து,
உன்னை நம்பி உன் பின்னால் அணிதிரண்டு உனக்கு ஆதரவாய்
நிற்கிற நம் மக்களையும் கொன்றொழித்த மாபாவியாகி விடுவாய்!” என்று கூறினார்கள்.
அமைதியாய்
கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் {ரலி}
அவர்கள் தம் தாயார் அஸ்மா {ரலி] அவர்களை நோக்கி “
எனதருமைத் தாயே! நான் மரணத்தைக் கண்டு பயந்தோ, உலகில் வாழ வேண்டும் என
ஆசைப் பட்டோ உம்மைக் காண வர வில்லை.
மாறாக, ”ஒரு வேளை இந்த அநீதிக்கு
எதிரான போராட்டத்தில் நான் இறந்து போய் விட்டால் உங்களின்
நிலை என்னவாகுமோ?
நீங்கள் தைரியம் இழந்து விடக்கூடாது என்பதற்காக,
ஆறுதல் வார்த்தைக் கூறிச் சென்றிடவே வந்தேன்.
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாயே! இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் உலகாதாயம்
எனக்கில்லை. எனக்கு இந்த உலக சொகுசின் மீது எப்போதுமே
பற்றிருந்ததில்லை.
அல்லாஹ்வின் சட்ட
திட்டங்களை மீறிடும் துணிவு ஒருக்காலத்திலும் எனக்கு
ஏற்பட்டதில்லை. ஒரு போதும் என்னை நம்பி என் பின்னால் அணி திரண்டு நிற்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றிடவோ, துரோகமிழைத்திடவோ
மாட்டேன்! என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே!”
என்றார்.
தம் மகன் சத்தியத்தின் மீது வார்க்கப்பட்ட இரும்பு கோட்டையாய் நிலைத்திருப்பதை
உணர்ந்த
அஸ்மா {ரலி} அவர்கள் “
மகனே! சத்தியமாக நான் உன்னை குறித்து நல்ல முடிவையே
ஏற்றிருக்கின்றேன்.
ஒன்று நான் உனக்கு முன் இறந்து போவேன், அல்லது எனக்கு முன் நீ
இறந்து போவாய்! பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா! என் மகனுக்கு அருள் செய்வாயாக! அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக!”
”அவர் என்னிடமும் என்
கணவரிடமும் எப்படி
கருணையுடன் நடந்து கொண்டாரோ, அது போன்றே நீயும் அவருக்கு கருணை புரிவாயாக!”
”யாஅல்லாஹ்! உன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நான் முழுமையாக நம்புகின்றேன்!
அவர் விஷயத்தில்
நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக்
கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக!”
என் மகன் விஷயத்தில் நான் மேற்கொள்ளும் பொறுமைக்கு பகரமாக, நன்றியாளர்களுக்கும்,
பொறுமையாளர்களுக்கும் நீ கொடுக்கும் நற்கூலியை வழங்குவாயாக!” என்று கண்ணீர் மல்க
பிரார்த்தித்தார்கள்.
தன் மகனை அருகே
அழைத்த அஸ்மா {ரலி}
அவர்கள் உச்சி முகர்ந்து
வழியனுப்புகிற போது தம் மகன் கவசம் அணிந்திருப்பதை உணர்ந்தார்கள்.
உடனே அஸ்மா {ரலி}
அவர்கள் “மகனே! கோழைகளைப் போல கவசம் அணிந்து
இருக்கிறாயே! உன் பாரம்பரியம் என்ன? உன் தந்தை சுபைர் {ரலி}
அவர்களின் வீரம் என்ன? உன் தாயின் தந்தையான அபூ
பக்ர் {ரலி}
அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன? ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ? கழற்றி தூர எறி! என்றார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் {ரலி}
அவர்கள் “சாவிற்கு அஞ்சி நான் கவசம் அணியவில்லை
தாயே! நான் எதிரிகளின் கையில் சிக்குண்டால் என்னை சல்லடையாக
ஆக்கி விடுவார்கள்.
அதை ஏற்றுக்
கொள்கிற மன நிலை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. தள்ளாத வயதில் என் மரணத்தின் மூலம் உங்களை ரணப்படுத்த
விரும்பவில்லை.
இதோ! உங்களின்
விருப்பப்படியே
கவசம் இன்றி களம் காண்கிறேன் தாயே! உங்களது கையால் நீங்களே
தூக்கி எறிந்து விடுங்கள்.”
என்று கூறி கவசத்தை கழற்றி தாயாரிடம் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றார்கள்.
அதிகாலையில் நடந்த சண்டையில் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் உட்பட அவரின் ஆதரவாளர்கள் 240 பேர்
ஷஹீதாக்கப்பட்டார்கள். அப்துல்லாஹ் {ரலி}
அவர்கள் சொன்னது போலவே அவரின் உடலை சல்லடையாக உருக்குலைத்திருந்தார்கள்.
{வரலாறு மிக நீண்டது
அவசியம் கருதி இதோடு நிறுத்திக் கொள்கின்றேன்.}
ஒரு நாள் உமர்
இப்னு அப்துல் அஜீஸ் {ரஹ்] அவர்கள்
இப்னு அபீ முலைக்கா {ரஹ்} அவர்களைச் சந்தித்து,
அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி}
அவர்களைப் பற்றி கொஞ்சம்
சொல்லுங்களேன் என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அபீ முலைக்கா {ரஹ்}
அவர்கள் “ அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! பூமியில் நடப்பவர்களில் அப்துல்லாஹ் {ரலி}
அவர்களை விடச் சிறந்த ஒரு மனிதரை என்
வாழ்நாளில் பார்த்ததே இல்லை” அவர் தொழுகைக்குள்
நுழைந்து விட்டார்
என்றால், அவர் தன்னிடம் உள்ள அத்துனை
உணர்வுகளையும் வெளியேற்றிடுவார்.
எந்த அளவுக்கெனில், அவர் தொழும் போது அவரின் தோள் புஜங்கள், தலையின் மீது பறவைகள்
வந்து
அமர்ந்திருக்கும். அப்படியே ஆடாமல், அசையாமல் தன்னிலை மறந்து தொழுகையில் ஈடுபட்டிருப்பார். நீண்ட ருகூவுகள்,
நீண்ட சுஜூதுகளில் ஈடுபடுவார். மொத்தத்தில் இறை வணக்கத்தில்
ஈடுபட்டால்
இறை இன்பத்தில் மூழ்கிவிடுவார்கள்.” என்றார்கள்.
இப்னு அப்பாஸ் {ரலி] அவர்கள்
கூறுகின்றார்கள்: “அப்துல்லாஹ்
இப்னு சுபைர் {ரலி] அவர்கள் “சிறு வயது
முதற் கொண்டே அல்லாஹ்வின் வேதத்தை அதிகமதிகம்
ஓதக்கூடியவர்களாகவும்,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சுன்னத்தை அப்படியே பின் பற்றுபவராகவும், அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை அமுல் படுத்துவதில் அதிக
அக்கறை கொண்டவர்களாகவும்,
அநீதிக்கு எதிராக ஆர்த்தெழக்கூடியவராகவும் திகழ்ந்தார்கள்.” ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}, பக்கம்,559 to 567, இஸ்தீஆப், 2/57,58,59,60,61.,
3/183,184. )
ஆகவே, நம்முடைய வாழ்வை அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக்
கொண்டு அழகிய முறையில் அதிசயிக்கத்தக்க வகையில் அமைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!