Thursday, 27 September 2018

பொறுப்புணர்ந்து பேசுவோம்!!!


பொறுப்புணர்ந்து பேசுவோம்!!!
 



                சமீப நாட்களாக பொதுவெளியில் பேசுகிற பொறுப்பு மிக்கவர்களின் பேச்சு சமூகத்தில் சர்ச்சைகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவதை ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம்.

ஆளும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் தஞ்சையில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில்ஆளும் அதிமுக அரசை குறை கூறினால் நாக்கை அறுப்போம்என்று சூளுரைக்கின்றார்.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிகின்றது.

நடந்த கலவரத்தில் போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறிய தெலுங்கு தேச கட்சியைச்சார்ந்த எம். பி திவாகர் ரெட்டி என்பவர் விமர்சனத்தின் உச்சமாககாவல் துறையினர் திருநங்கைகள் போல் ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள்என்று ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கின்றார்.

இதற்கு, பதில் கொடுக்கும் முகமாக ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் கதிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மாதவ் என்கிற அதிகாரிபோலீஸை தவறாக பேசும் எம். பி, எம். எல். க்களின் நாக்கை அறுப்பேன்என்று ஊடகத்தை கூட்டி வைத்து எச்சரிக்கின்றார்.

மதக்கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஹைகோர்ட்டின் ஆர்டரை கையில் வைத்துக் கொண்டு மேடை போட்டு பேச அனுமதி மறுத்த திருமயம் காவல்துறை அதிகாரிகளை தேசிய கட்சி ஒன்றின் தேசிய செயலாளரான எச். ராஜா ஒருமையில் பேசியதோடுஹைகோர்ட்டாவது மயிராவது…” என்று ஏக வசனம் பேசுகின்றார்.

கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றில் திருவாடானை தொகுதி எம். எல். , கருணாஸ் என்பவர் காவல்துறை மேலதிகாரி அரவிந்தன் என்பவரைக் குறித்து விமர்சிக்கும் போதுகாக்கிச்சட்டையை கழற்றிப் போட்டு விட்டு நேருக்கு நேர் வந்து பார், நீயா? நானா? என்று ஒரு கை பார்க்கலாம்என்று கொக்கரிக்கின்றார்.

சட்டமன்ற உறுப்பினர், மாநிலத்தின் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரி, ஒரு கட்சியின் தேசிய செயலாளர் என்று மக்களோடு சார்ந்திருக்கும் துறைகளில் பொறுப்பு வகிக்கும் முக்கியமான நபர்கள் பொதுவெளியில் இப்படி தடித்த வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சாமானியனும், பாமரனும் தங்களின் கோபத்தை, உணர்ச்சிப்பிழம்பை இதை விட பன்மடங்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகி நாட்டில் அசாதாரண சூழல் உருவாகி விடும் என்பது மறுப்பதற்கில்லை.

சாதாரணமானவர்களே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த யோசிக்கும் வேளையில் சட்டம் தெரிந்தவர்களும், படித்தவர்களும், அதிகார வரம்பு உள்ளவர்களும் பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்? என்று வெகுஜன மக்கள் வெகுவாகப் பேசிக்கொள்கின்றார்கள்.

வாருங்கள்! பொதுவாகவே, பொறுப்பு வகிக்கும் பொறுப்புதாரிகள் பொதுவெளியிலும் சரி, வாழ்வின் இதர பகுதிகளிலும் சரி வார்த்தைகளை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும்? பேச்சுக்களை எவ்வாறு பேச வேண்டும்? என்பதை இஸ்லாம் கூறும் வழிகாட்டு முறையில் பார்த்துவிட்டு வருவோம்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனின் முதல் பிரதிநிதியான ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மலக்குமார்களின் சபையில் வைத்து மனித சமூகத்தின் மாண்பு குறித்து மலக்குமார்களுக்கு விளங்க வைக்க வழங்கிய முதல் அருட்கொடையேபேசும் ஆற்றல் தான்”.

ஆம்! வானவர்களிடம் அல்லாஹ் தன் பிரதிநிதியாக பூமியில் மனிதனை படைக்க இருப்பதை தெரிவித்தபோது வானவர்கள் அல்லாஹ்விடம் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ததும், அதற்கு அல்லாஹ் ஆதம் அவர்களை மனித சமூகத்தின் முதல் பிரதிநிதியாகப் படைத்து, அனைத்து வஸ்துக்களையும் அவைகளின் பெயர்களையும் கற்றுக் கொடுத்து வானவர்களின் முன்பாக பேசுமாறு கூறினான்.

قَالَ يَاآدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (33)

பின்னர், இறைவன் கூறினான்! ஆதமே! இவற்றின் பெயர்களை நீர் அவர்களுக்கு அறிவியும்!” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும்வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு மறைந்திருக்கக்கூடிய உண்மைகள் அனைத்தையும் நிச்சயம் நான் நன்கறிவேன். மேலும், நீங்கள் வெளிப்படுத்தக் கூடியவற்றையும், மறைக்கக்கூடியவற்றவையும் நான் நன்கறிவேன்என்று நான் உங்களிடம் கூறவில்லையா?”.                                ( அல்குர்ஆன்: 2: 33 )

எனவே, அல்லாஹ் மனித சமூகத்திற்கு முதன் முதலாக வழங்கிய பேசும் ஆற்றலான அருட்கொடையை அழகான முறையில் பயன்படுத்த வேண்டும். அது தான் அந்த அருட்கொடைக்கு நாம் செலுத்துகிற நன்றியாகும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் பேசுவதின் ஒழுங்கு குறித்து பேசியது போன்று மனித வாழ்வின் வேறெந்த அம்சங்கள் குறித்தும் மிக அதிகமாகப் பேசியதில்லை.

உறவுகள் மேம்பட நல்லதைப் பேசுங்கள்...

وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا

அவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்.” (அல்குர்ஆன்:4:5)

நீதி விவகாரங்களில் நீதியோடு பேசுங்கள்..

وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا
இன்னும் பேசும் போது நீதியுடன் பேசுங்கள்! (அல்குர்ஆன்:6:152)

பல்சமூக மக்களோடு பழகும் போது அழகிய முறையில் பேசுங்கள்

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا

அனைத்து மனிதர்களிடமும் அழகிய முறையில் பேசுங்கள்” (அல்குர்ஆன்:2:83 )


பாவங்கள் மன்னிக்கப்பட, செயல்கள் சீராக.. நேர்மையாகப் பேசுங்கள்..

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70) يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்! மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள்! அதன் மூலம் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீராக்குவான்; மேலும், உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான்.” (அல்குர்ஆன்:33:71)


எப்போதும் கவனமாகப் பேசுங்கள்

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ (17) مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ (18)
இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். அவன் மொழிகிற எந்த ஒரு வார்த்தையையும் அவர்கள் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.” (அல்குர்ஆன்:50:17,18)

இன்னும் ஏராளமான வசனங்கள் இவ்வாறு பேச்சின் ஒழுங்குகள் குறித்து நமக்கு வழிகாட்டுகின்றன.

பொறுப்பையும், பொறுப்பின் கணத்தையும் உணர்ந்து பேச வேண்டும்

ஸபா நாட்டு அரசிக்கு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை ஹுத் ஹுத் பறவையிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

அது கொண்டு சென்று அரசியின் மாளிகையில் கொண்டு போட்டது. அதைப் பிரித்துப் படித்து விட்டு அந்த அரசி உடனடியாக தம் அரசவைக் கூட்டத்தைக் கூட்டி தம் அரசவைப் பிரதானிகளிடம் விவாதிக்க ஆரம்பித்த போது

قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ (29) إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (30) أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ

அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான, கண்ணியம் நிறைந்த கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமான் என்பவரிடமிருந்து வந்துள்ளது. மேலும், அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாய்பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்எனும் வாசகம் அதில் உள்ளது.”

قَالَتْ يَاأَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32)

சமுதாயத்தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு நல்லதொரு ஆலோசனையை வழங்க வேண்டும்!”    (அல்குர்ஆன்:27:27-32)    என்று கூறினார்.

قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ (33)

அப்போது அந்த அவையில் இருந்த அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்து நாம் வல்லமை மிக்கவர்களாகவும், கடுமையாகப் போரிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்!” என்றனர்.

இதைக் கேட்டதும் அந்த அரசியார் அவர்கள் மிகவும் பொறுப்புணர்வோடு சொன்ன பதில்..

قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ (34) وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُونَ (35)

அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்து விடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத் தான் அவர்கள் செய்கின்றார்கள்.

இதற்கு மாற்றாக நான் அவரு (ஸுலைமானு) க்கு ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர் என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்என்று அந்த அரசி அமைச்சர்களிடம் கூறினார்.                                                ( அல்குர்ஆன்: 27: 33, 34 )

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்களில் சிலர்அந்த அரசி பேசிய பொறுப்புணர்வு நிறைந்த இந்த பேச்சு தான் அவருக்கும், அவரின் நாட்டு மக்களுக்கும் இஸ்லாம் எனும் நற்பேற்றை வழங்கியதுஎன்று கூறுகின்றார்கள்.

சில நேரம்சில பொழுது..

خرج بهم "يوشع بن نون" عليه السلام، أو بمن بقي منهم وبسائر بني إسرائيل من الجيل الثاني، فقصد بهم بيت المقدس فحاصرها، فكان فتحها يوم الجمعة بعد العصر، فلما تَضَيَّفَتِ الشمس للغروب، وخَشي دخول السبت عليهم قال "إنك مأمورة وأنا مأمور، اللهم احبسها عليَّ"، فحبسها الله تعالى حتى فتحها.

في الحديث الصحيح عن أبي هريرة عن رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (غزا نبي من الأنبياء) الحديث أخرجه مسلم وفية قال: (فغزا فأدنى للقرية  حين صلاة العصر أو قريبا من ذلك فقال للشمس أنت مأمورة وأنا مأمور اللهم أحبسها  على شيئافحبست عليه حتى فتح الله عليه


வசிப்பதற்கு நாடின்றி நாடோடிகளாய் அலைந்து திரிந்த பனூ இஸ்ரவேலர்களை ஒன்றிணைத்து அமாலிக்காவினரை எதிர்த்துப் போராட ஓர் உன்னதமான வலிமையை ஏற்படுத்தினார்கள் நபி யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

குறிப்பிட்ட நாளில் போராடக் கிளம்பிய அவர்களுக்கு அல்லாஹ் ஒரு சோதனை ஏற்படுத்தினான். அதாவது சனிக்கிழமை அவர்களின் ஜும்ஆ நாள் அந்த நாளில் அவர்கள் இறை வணக்கத்தைத் தவிர வேறெதிலும் ஈடுபடக்கூடாது.

ஆகவே, போரில் வெற்றியை வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சோதனை.

வெற்றியின் சமீபத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் சூரியனும் அஸ்தமிக்க நெருங்கிக்கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் நபி யூஷஃ இப்னு நூன் {அலை} அவர்கள் சூரியனின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

அல்லாஹ்வும் அவர்கள் வெற்றி பெறும் வரை சூரியனின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி, பின்னர் சூரியனை அஸ்தமிக்க வைத்தான்.                                    

   ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

நீண்ட கால கனவாகிய சொந்த பூமி என்கிற கனவையும், அதற்கான வெற்றி வாகையையும் பனூ இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் ஏன் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலைமையை தேர்ந்தெடுத்தான் என்றால் அதற்கும் ஒரு வரலாற்று எடுத்துக்காட்டு உண்டு.

ஃபிர்அவ்னின் கொடுங்கோன்மையில் இருந்து காப்பாற்றிய இறைவன் அடுத்த படியாக பனூ இஸ்ரவேலர்களுக்கு வசிக்க ஓர் இடத்தை பைத்துல் முகத்தஸை தேர்வு செய்து அங்குள்ள மக்களோடு போர் செய்து வெற்றி கொண்டு ஸஜ்தா செய்தவாறு நுழைய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான்.

ஆனால், அவர்களோ போர் செய்ய மறுத்ததோடு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு விவாதம் செய்தனர்.

قَالُوا يَامُوسَى إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَنْ نَدْخُلَهَا حَتَّى يَخْرُجُوا مِنْهَا فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ (22) قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (23)

மூஸாவே! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாதவரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும், அவர்கள் அதிலிருந்து வெளியேறி விட்டால் நிச்சயமாக, நாங்கள் நுழையத் தயாராகவே உள்ளோம் என்று கூறினார்கள்.

அவ்வாறு நுழைய அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் அம்மக்களை நோக்கிவலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் அந்த ஊரின் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு நீங்கள் நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள் தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!” என்று கூறினார்கள்.

( அல்குர்ஆன்: 5: 22, 23 )

القول في تأويل قوله جل ثناؤه : { قَالَ رَجُلانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا }
قال أبو جعفر: وهذا خبر من الله عز ذكره عن الرجلين الصَّالحين من قوم موسى:"يوشع بن نون" و"كالب بن يافنا"

இந்த இறைவசனத்தில் கூறப்பட்டுள்ளஅல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர்என்பதற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் ஒருவர் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள். இன்னொருவர் காலிப் இவர் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உதவியாளராய், வலக்கரமாய்த் திகழ்ந்தவர் ஆவார்கள்.                                             ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ )

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வஃபாத்திற்குப் பிறகு அல்லாஹ் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பனூ இஸ்ரவேலர்களுக்கு நபியாக தேர்ந்தெடுத்து, நழுவிப்போன வெற்றியையும் நல்கினான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிக நெருக்கமான உதவியாளராக இருக்கும் போது, அந்த பொறுப்பின் கணம் உணர்ந்து அவர்கள் மறுதலித்த அந்த சமூகத்தை நோக்கிப் பேசிய அந்தப் பேச்சை அல்லாஹ் கபூலாக்கி அந்த வெற்றியின் நாயகராக யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

சில நேரம்.. சில பொழுது அல்லாஹ் நம்முடைய பேச்சுக்களையே நம்முடைய வாழ்க்கையின் போங்குகளுக்கு காரணமாக அமைத்து விடுகின்றான்.

எதிரியின் முன்பாக பேசும் சூழல் வந்தாலும்

மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார். இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.

இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள். தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.

இக்ரிமா கேட்டார்: இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.?                                
فقال رسول الله
 ( لا تسألني اليوم شيئا أعطيه أحدا إلا أعطيتكه
 ، فقال عكرمة
 فإني أسألك أن تستغفر لي كل عداوة عاديتكها ، أو مسير وضعت فيه ، أو مقام لقيتك فيه ، أو كلام قلته في وجهك أو وأنت غائب عنه ، فقال رسول الله - صلى الله عليه وسلم
( اللهم اغفر له كل عداوة عادانيها ، وكل مسير سار فيه إلى موضع يريد بذلك المسير إطفاء نورك ، فاغفر له ما نال مني من عرض في وجهي أو أنا غائب عنه ) ..
فقال عكرمة : رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

قال : " .. لما قدم عكرمة بن أبي جهل المدينة
 اجتمع الناس ، فجعلوا يقولون : هذا ابن أبي جهل ، هذا ابن أبي جهل ! ، فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ : ( لا تؤذوا الأحياء بسبِّ الأموات ) ..

وفي قصة إسلام عكرمة ـ رضي الله عنه ـ بيان لحكمة النبي ـ صلى الله عليه وسلم ـ وسمو خلقه ، ورحمته وسماحته ..
فرغم أن عكرمة كان أحد الذين عادوا الرسول ـ صلى الله عليه وسلم ـ قبل ذلك وآذوه إيذاء شديدا ، فقد كان لعفوه وسماحته ـ صلى الله عليه وسلم ـ ، وكلماته وترحيبه في استقباله ، وأمره لأصحابه بعدم إيذائه بسبهم لأبيه ، ومعانقته عند قدومه ، الأثر الكبير في إزالة ما على قلبه من ركام الجاهلية ، وكان كافيا لتغيير حياته ، واجتذابه إلى الإسلام ..

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.என்றார்கள்.

இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்:      அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள். 

அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடுஎன்று துஆ செய்தார்கள்.           

இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்:   அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன். இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  

மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும். என்றார்கள்.                       ( நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்: 269, 270, 271 )   

காலம் கடந்தும் ஆழ்மனதை ரணமாக்கும் சில பேச்சுகள்…

حديث ابن عباس رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال لأصحابه يومئذ: ((إني قد عرفت أن رجالاً من بني هاشم وغيرهم قد أخرجوا كرهاً، لا حاجة لهم بقتالنا؛ فمن لقي منكم أحداً من بني هاشم؛ فلا يقتله، ومن لقي أبا البختري بن هشام بن الحارث بن أسد؛ فلا يقتله، ومن لقي العباس بن عبد المطلب عم رسول الله صلى الله عليه وسلم؛ فلا يقتله؛ فإنه إنما أخرج مستكرهاً)) . قال: فقال أبو حذيفة (ابن عتبة بن ربيعة) : أنقتل آباءنا وأبناءنا وإخواننا وعشيرتنا ونترك العباس؟! والله؛ لئن لقيته؛ لألحمنه السيف. قال: فبلغت رسول الله صلى الله عليه وسلم، فقال لعمر بن الخطاب: ((يا أبا حفص! (قال عمر: والله؛ إنه لأول يوم كناني فيه رسول الله صلى الله عليه وسلم بأبي حفص) أيضرب وجه عم رسول الله صلى الله عليه وسلم بالسيف؟!)) . فقال عمر: يا رسول الله! دعني؛ فلأضرب عنقه بالسيف، فوالله؛ لقد نافق. فكان أبو حذيفة يقول: ما أنا بآمن من تلك الكلمة التي قلت يومئذ، ولا أزال منها خائفاً؛

பத்ர் யுத்தத்திற்கான தயாரிப்புகளை சரி செய்து முடித்த பின்னர் நபித்தோழர்களை நோக்கி மாநபி (ஸல்) அவர்கள் ”நாளை நடைபெறும் யுத்தத்தில் உங்கள் எதிரே பனூ ஹாஷிம் கிளையார்களில் யாரையும் கண்டால் அவர்களை கொன்று விட வேண்டாம். அவர்கள் நிர்பந்தமாக அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

மேலும், அப்பாஸ் அவர்களையும், அபுல் புக்தரி அவர்களையும் கொன்று விட வேண்டாம்” இவர்கள் இருவரும் வற்புறுத்தல் மற்றும் நிர்பந்த்ததின் அடிப்படையில் அழைத்து வரப்ட்டுள்ளனர். கண்ணில் படுகின்ற எந்த ஒரு இறைவிரோதியையும் விட்டுவிடக் கூடாது என்கிற தீர்மானத்தோடு இருந்த தோழர்களிடையே இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.

குறைஷிகளின் மாபெரும் தலைவர்களில் உத்பா இப்னு ரபீஆவும் ஒருவன் பத்ரில் குறைஷிப் படையை வழிநடத்தி வந்திருப்பதில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.

ஆச்சர்யம் என்னவென்றால் உத்பாவின் மகன் அபூஹுதைஃபா முஸ்லிம்கள் அணியில் இருக்கிறார். அவர்களால் இந்த அறிவிப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உணர்ச்சி வசப்பட்ட அவர் இப்படிச் சொன்னார்! “எங்கள் தந்தையரையும், சகோதரர்களையும், சொந்த பந்தங்களையும் நாங்கள் போரில் கொல்ல வேண்டும்”
ஆனால், அப்பாஸை கண்டால் மட்டும் விட்டுவிட வேண்டுமா?

படைத்த ரப்பின் மீது ஆணை! அவரைப் போர்க்களத்தில் எங்கு கண்டாலும் என் வாளால் முகம் சிதைக்க வெட்டுவேன்” என்றார் ஆவேசமாக.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறிய விபரம் தெரிய வந்த போது, உமர் (ரலி) அவர்களை அழைத்து ஹஃப்ஸாவின் தந்தையே” நாளை நடக்கும் போரில் அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையின் முகம் வாளால் வெட்டப்படுமா?“ – என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள்: அனுமதி மட்டும் தாருங்கள் நயவஞ்சகனாக மாறிவிட்ட அபூஹுதைஃபாவின் தலையை இந்த இடத்திலேயே கொய்து விடுகிறேன்” என்றார்கள். வேண்டாம் என மாநபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை தடுத்து விட்டார்கள். ( நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 132 )

அபூஹுதைஃபா ஒன்றும் சாமானியர் அல்ல, நபித் தோழர்களில் மிகச் சிறப்பு பெற்றவர். இரண்டு ஹிஜ்ரத்திலும் கலந்து கொண்டவர், இரண்டு கிப்லாவிலும் தொழும் பாக்கியம் பெற்றவர், என்ற போதிலும், குடும்பப்பாசம், உணர்வு அவரை இவ்வாறு பேசத்தூண்டியது.

ஆனாலும், அவர் அந்த உணர்ச்சி வெளிபாட்டிற்குப் பின் பெரிதும் வருத்தப்பட்டார். சந்திக்கும் நபர்களிடத்திலும் சந்தப்பம் கிடைக்கும் போதிலும்
அபூஹுதைஃபா (ரலி) இப்படிச் சொல்வார்களாம்: பத்ரில் நான் சொன்ன அந்த வார்த்தை என் நிம்மதியை சீர்குலைத்துவிட்டது. அப்பாஸ் அவர்கள் குறித்து நான் அன்று கூறிய வார்த்தைகளை நினைத்து சதா பயந்து கொண்டே இருந்தேன்.
அதற்கு பரிகாரம் போர்க்களத்தில் நான் ஷஹீத் ஆவது தான் என்று உறுதிகொண்டேன்”.

இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ”பத்ருக்குப்ப பின் நடந்த அனைத்து யுத்த களங்களிலும் கலந்து கொண்டார்கள். இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்த யமாமா போர்க்களத்தில் ஷஹீத் வீர மணரம் அடைந்தார்கள்.                                      ( நூல் : இஸ்தீஆப்: பாகம்: 3 )

நாம் பேசும் சில பேச்சுக்கள் காலம் கடந்தும் நம் ஆழ்மனதை குடைந்து கொண்டே இருக்கும். நம் நிம்மதியை அது கெடுத்து விடும்.

அல்லாஹ்வின் முன் மாதிரியும்... அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன் மாதிரியும்...

விமர்சனங்களைக் கடக்காமல் இந்த உலகில் எவராலும் வாழ்ந்து விட்டு போக முடியாது. அப்படியான தருணங்களின் போது நாம் நடந்து கொள்கிற முறைகள், நாம் பேசும் பேச்சுக்கள் சமூக, சமுதாய மக்களால் மிகவும் கவனிக்கப்படும்.

எனவே, விமர்சனங்களுக்கு பதில் தருகிறேன் என்று புறப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு நாம் பேசுகிற பேச்சுக்கள் நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ, சமூகத்திற்கோ இடையூறு தருமானால் அது நம் ஈருலக வாழ்விலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

அல்லாஹ்வை அளவு கடந்து விமர்சித்தவர்கள் யஹூதிகள் அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்றும், அவன் ஏழை என்றும் கூறியதோடல்லாமல், தங்களை ஒரு போதும் நரகம் தீண்டாது என்றும், தாங்கள் தான் சத்தியத்தில் நிலைத்திருப்பதாகவும் கூறி வந்தார்கள்.

அல்லாஹ் இவர்களின் விமர்சனங்களைக் கடந்து போகும் போது மிகவும் எளிமையாக கடந்து போவான்.

لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ سَنَكْتُبُ مَا قَالُوا

“அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள்! என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை அவர்களின் செயலேட்டில் நாம் பதிவு செய்திருக்கின்றோம்”.

                                                      ( அல்குர்ஆன்: 3: 181 )

وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ

“குறிப்பிட்ட சில நாட்களைத்தவிர நரக நெருப்பு எங்களை ஒரு போதும் தீண்டாது” என அவர்கள் கூறுகின்றார்கள். ( நபியே! ) நீர் அவர்களிடம் கேளும்! அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது உறுதி மொழியை நீங்கள் பெற்றுள்ளீர்களா? அப்படியானால் அல்லாஹ் ஒரு போதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்!”

 ( அல்குர்ஆன்: 2: 80 )

அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக பாரதூரமான விஷயங்களை விமர்சனங்களாக வைத்த போதும் கூட அல்லாஹ் மிகச் சாதாரணமான ஒரு பதிலை அவர்களுக்கு கொடுத்து விட்டு நகர்ந்து விடுகின்றான்.

பெருமானார் {ஸல்} அவர்கள் மக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஹிஜ்ரத் செய்து மதீனாவின் அந்த துவக்க நேரப்பொழுதில் முதல் உரையை ஆற்ற மாநபி {ஸல்} முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் இடையே எழுந்து நின்ற போது சபையில் அப்படி ஒரு நிசப்தம்.

மாநபி {ஸல்} அவர்கள் என்ன கூறப்போகின்றார்கள்? என்ன கூறினாலும் அடுத்த கணமே உயிர் போனாலும் கூட பரவாயில்லை அதை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவலோடு விழியை விரித்து மாநபி {ஸல்} அவர்களின் வதனத்தை நோக்கி வைத்திருந்த தருணம் அது.

وَعن عبدِاللَّهِ بنِ سَلاَمٍ
، أَنَّ النَّبِيَّ ﷺ قالَ
أَيُّهَا النَّاسُ أَفْشوا السَّلامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا باللَّيْل وَالنَّاسُ نِيامٌ، تَدخُلُوا الجَنَّةَ بِسَلامٍ.
رواهُ الترمذيُّ وقالَ: حديثٌ حسنٌ صحيحٌ.

“உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்புங்கள்! உங்களில் பசித்திருப்பவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் நீங்கள் விழித்தெழுந்து உங்களைப் படைத்த இறைவனை தொழுங்கள்! நிம்மதியோடு சுவனம் புகுவீர்கள்!”

எப்படியான நேரமும், தருணமும் அது ஆனால், மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து பேசிய பேச்சால் மகத்தான பல விளைவுகள் வெறும் 10 ஆண்டுகளில் நடந்தேறியது.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை எமனுக்கு ஆளுநராக அனுப்பி வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாநபி {ஸல்} அவர்கள் முஆத் (ரலி) அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

يا معاذ
أمسك عليك لسانك

அதில் பிரதானமானது ”முஆதே! உம் நாவைப் பேணிக் கொள்வீராக!

சாதாரணமான ஒருவர் நாவைப் பேணுவதை விட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட ஒருவர் நாவை மிகவும் பேண வேண்டும் என்பதை இந்த உம்மத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் மாநபி {ஸல்} அவர்கள் அப்படி அறிவுரை வழங்கினார்கள்.

ஆகவே, நாவைப் பேணுவதோடு பொறுப்பின் கணம் உணர்ந்தும், பொறுப்புணர்வோடும் பொதுவெளியில் பேசுவோம்!

உணர்ச்சிவசப்படுதலைக் கட்டுப்படுத்தி உயர் குணங்களோடு வாழ்வோம்!!!