வாழ்நாளெல்லாம் போதாது!!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த உலகத்தில்
நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடைகள்
ஏராளம்.
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
“அல்லாஹ்வின் அருட்கொடைகளை
நீங்கள் எண்ணிவிட முயன்றால்
அவற்றை உங்களால் எண்ணவே
முடியாது”. ( அல்குர்ஆன்:
16: 18 )
ஒன்றுமே இல்லாமல்
இருந்த நம்மை நம்
தந்தையின் இந்திரியத்துளியாக, பின்னர்
நம் தாயின் கருவறையில்
இரத்தமாக, சதைக்கட்டியாக அதன்
பின்னர் அழகிய மழலையாக
என்று இன்று வரை
பல்வேறு அருட்கொடைகளை வழங்கி
அனுபவிக்க வைத்திருக்கின்றான்.
மணம் முடித்த
மனைவிக்காக உழைக்கிறோம். பெற்றெடுத்த
பெற்றோருக்காக பாடுபடுகிறோம். நமக்கு
பிறந்த பிள்ளைச் செல்வங்களுக்காக சேமிக்கிறோம்.
ஆனால், உலகில்
நாம் வாழ நமக்காக
எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்து
காத்து வருகிற இறைவனுக்காக
நாம் என்ன செய்திருக்கிறோம்?
அருட்கொடைகள் அனுபவிப்பதற்கு மாத்திரமல்ல, அதை
அனுபவித்ததற்காக அக
மகிழ்வோடு நன்றி செலுத்தவும்
தான் என்று இறைமறையில்
அல்லாஹ் பல இடங்களில்
தெளிவு படுத்துகிறான்.
நன்றி செலுத்துமாறு
இறைவன் வலியுறுத்தும் இறைவசனங்களில்
பின்வரும் வசனங்கள் மிகவும்
கவனிக்கத்தக்கதாகும்.
هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ
شَيْئًا مَذْكُورًا (1) إِنَّا خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ
نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا (2) إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ
إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا (3) إِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ
سَلَاسِلَ وَأَغْلَالًا وَسَعِيرًا (4)
“மனிதன் மீது,
அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே
இல்லாதிருந்த ஒரு நீண்ட
காலகட்டம் செல்லவில்லையா?
நாம் மனிதனை
கலக்கப்பட்ட ஓர் இந்திரியத்துளியிலிருந்து படைத்தோம். நாம்
அவனைச் சோதிக்க வேண்டும்
என்பதற்காக!
மேலும், இந்நோக்கத்திற்காக நாம் அவனைச்
செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
மேலும், நாம் அவனுக்கு
(வாழ்வதற்கான) வழியையும் காட்டினோம்.
இனி அவன்
நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம்
அல்லது நன்றி கொன்றவனாகவும்
இருக்கலாம்.
ஆனால், நன்றி
கொல்பவர்களுக்கு திண்ணமாக!
நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும்,
கொழுந்து விட்டெரியும் நெருப்பையும்
தயார் செய்து வைத்திருக்கின்றோம்”. ( அல்குர்ஆன்:
76: 1 – 4 )
எனவே, அல்லாஹ்
வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி
செலுத்தி வாழ வேண்டும்
என்கிற உண்மையை மேற்கூறிய
வசனங்களின் வாயிலாக நாம்
விளங்கிக் கொண்டோம்.
ஒரு
அருட்கொடைக்கே இவ்வளவா?..
روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال
رحمه الله:" أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي
ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل
ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن
المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه
وسلم فقال:" خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن
لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله
ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج
الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة
رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك
الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن
لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر
عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي
الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب
أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة
برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه
وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه
ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த
சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை
நோக்கி “தோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு
முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில்
ஆழ்த்திப்போனார்” என்று கூறி விட்டு..
எங்களிடம் “என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை)
அவர்கள் “முஹம்மத் {ஸல்}
அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக
அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில்
ஒரு நல்லடியார் இருந்தார்.
அந்த அடியார்
நாற்புறமும் கடலால் சூழப்பட்ட தீவு ஒன்றில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து
வந்தார்.
கடல் சூழ்ந்த – உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு
மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை
மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.
தினமும் மாலை
நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து
ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி
விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில்
ஈடுபட்டு விடுவார்.
ஒரு நாள் அந்த
நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது “யாஅல்லாஹ்!
என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும்
நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும்,
என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ
பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய
இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரினார்.
அல்லாஹ்வும்
அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.
வானவர்களாகிய
நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே
நிலையிலேயே கண்டோம்.
தொடர்ந்து
ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
கூறினார்கள்: “ நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு
மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.
அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கி
“இதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள்” என்பான்.
அதற்கு, அவர் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச்
செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன்.
ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு
சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால்,
என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?”
என்று வினவுவார்.
அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்கு “இந்த
அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான்
செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்” என்று
கட்டளையிடுவான்.
அப்போது வானவர்கள் “இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும்
நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.
நீ வழங்கிய
மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை” என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.
فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي
رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك
شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من
قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج
لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة
وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك
برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله
الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد". هذا
حديث صحيح الإسناد
அது கேட்ட அல்லாஹ்
வானவர்களிடம் “இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச்
செல்லுங்கள்” என்பான்.
அவர் நரகத்திற்கு
இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர் “இறைவா!
உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.
அந்த அலறலைக்
கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம் “அந்த அடியானை என்
முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!” என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.
அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த
உரையாடல் இதோ….
அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த
உன்னை படைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால
ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து
உன்னை வாழ வைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: கடலும் –உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில்
மதுரமான நீரூற்றையும், புற்பூண்டுகளே முளைத்திடாத
பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தா – சிரம் பணிந்த நிலையில்
பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
இந்த உரையாடலை
முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் “என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின்
மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ
என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்!
அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனே” என்று
கூறி விட்டு வானவர்களை நோக்கி “இதோ இந்த என் அடியானை என்
அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.
இதைக் கூறி விட்டு
ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
என்னிடம் “முஹம்மத் {ஸல்} அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும்
அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது”
என்று கூறி விடை பெற்றுச் சென்றார்” என்று நபி
{ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )
வாழ்நாளெல்லாம் நன்றி
செலுத்தினாலும் வல்லோன் நமக்களித்த
அருட்கொடைகளில் ஒரு அருட்கொடைக்கு
நாம் செலுத்தும் நன்றி
ஈடாகாது என்பதை நம்
மனதினில் நிலை நிறுத்த
வேண்டும்.
அப்படியானால் அல்லாஹ்விற்கு நன்றி
செலுத்துவது எப்படி?..
أركان الشكر
أ- الاعتراف بالنعمة بقلبه
நன்றி செலுத்துவதில்
மூன்று ஒழுங்குகள் இருக்கின்றன.
அவை மூன்றும் மிகவும்
முக்கியமாகும்.
1.
ஒரு
அருட்கொடையை அனுபவிக்கிற போது அல்லாஹ் தான் அதை
அனுபவிப்பதற்கு தந்திருக்கின்றான் என்று
உளமாற எண்ணுவது.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
“மேலும், உங்களுக்கு கிடைத்திருக்கிற வாழ்க்கை வசதிகள்
எல்லாமுமே அல்லாஹ்வின் அருட்கொடைகள்
தாம்”.
( அல்குர்ஆன்: 16: 53 )
جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم
فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ
عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ
يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ
فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ
يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ
اللَّهِ: قَدْ سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ
سَلَامِكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟» قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ
يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ، ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ
لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ
وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ
تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا،
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا
الْهَيْثَمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ
رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ، ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ،
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ
الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ
لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ
وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ
وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ
بَيْنَ أَيْدِيهِمْ فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو
الْهَيْثَمِ بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى
الله عليه وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ
لَنَا فَقَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ
الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:
“ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் வருகை தந்திருக்கின்றார்கள்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் “அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?”
என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் வரவைத்தது” என்று பதில் கூறினார்கள்.
சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்” என்று கூறினார்கள்.
கொஞ்ச நேரம் அண்ணலார் {ஸல்} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலி –அன்ஹுமா) ஆகியோரோடு உரையாடிவிட்டு “தோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!” என்று கூறினார்கள்.
நபி {ஸல்} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி {ஸல்} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது, “வஅலைக்குமுஸ்ஸலாம்… யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்களின் குரல் கொடுத்தார்கள்.
உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம் நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.
நபி {ஸல்} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வினவினார்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்” உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ஸல்} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வரவேற்றார்கள்.
உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டு “அல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது” என்று கூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.
மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்கள்.
நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ஸல்} அவர்கள் “இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்” இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.
மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு வைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.
கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால் முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக துஆ செய்யுங்கள்!” என்று கூறினார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்! ஆகையால், இறைவன் தன் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்”
என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ, தஃப்ஸீர்
இப்னு கஸீர் )
கடுமையான பசி,
நாட்பட்ட பசி அந்த
நேரத்தில் வழங்கப்பட்ட குளிர்ந்த
நீர் வயிறையும், மனதையும்
எவ்வளவு குளிரூட்டி இருக்கும்.
அபூபக்ர், உமர்
ரலியல்லாஹு அன்ஹுமா அந்த
நீரின் குளுமையை ரசித்து,
மெய்மறந்து இருக்கும் போது
இந்த குளிர்ந்த நீரும்
அல்லாஹ்வின் அருட்கொடை தான்
இதற்காக அல்லாஹ்விடம் பதில்
சொல்ல வேண்டி வரும்
என்று அந்த நேரத்திலும்
கூட அல்லாஹ்வின் அருட்கொடை
என்று உளமாற உறுதி
கொள்ளுமாறு தூண்டினார்கள் மாநபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்.
2. ஒரு அருட்கொடையை அனுபவிக்கிற
போது இது என்
இறைவன் தந்தான் என
வாயால் சொல்வது.
ب- التحدث بها والثناء على المنعم
قال تعالى: {وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ} [الضحى: 11
قال تعالى: {وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ} [الضحى: 11
“மேலும், உம் இறைவன் உமக்களித்திருக்கிற அருட்கொடைகளைப்
பற்றி எடுத்துரைப்பீராக!” ( அல்குர்ஆன்:
93: 11 )
كان عبد
الرحمن صائماً فوضعت مائدة الإفطار بين يديه، فلما رأى فيها ألواناً بكى، فقال له
الناس: يا أبا المنذر ما يبكيك؟ فقال: إنا كنا أهل كفر وجاهلية، فبعث الله إلينا
رسوله صلى الله عليه وسلم فآمنا واتبعنا وجاهدنا، فمنا من مات ولم يتعجل شيئاً من
أجره، منهم أخي مصعب بن عمير، قتل يوم قتل -أي يوم أحد- وليس له إلا سيفه وبردة
عليه!! إن نحن غطينا بها رأسه بدت رجلاه!! وإن نحن غطينا رجليه بدا رأسه!! فأمرنا
رسول الله صلى الله عليه وسلم أن نغطي رأسه وأن نجعل على رجليه من الإذخر، فماتوا
ولم يتعجلوا شيئاً من أجرهم، وبقينا وراءهم ففتحت علينا الدنيا أبوابها فنحن
نهدبها فخشينا أن يقال لنا يوم القيامة: {أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم
بها}، هؤلاء أصحاب محمد صلى الله عليه وسلم، لا يأمنون مكر الله ويخافون عقوبته
سبحانه وتعالى، وإذا أنعم الله عليهم بنعمة كان حالهم هكذا
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
நோன்பு நோற்றிருந்தார்கள். இஃப்தாருடைய நேரம் நெருங்கவே பல்வேறு வகையான உணவுகளும்,
குடிபானங்களும் அவர்களின் முன்பாக பாத்திரங்களிலும், தட்டுகளிலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன.
அவர்களின் பார்வை அவைகளைக் கடந்து சென்ற போது தேம்பித்
தேம்பி அழுதார்கள்.
அருகிலிருந்தவர்கள், “அபூ முன்திர் அவர்களே! ஏன்
இவ்வாறு தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் “ நாங்கள் இறை நிராகரிப்பிலும், மடமைத்தனத்திலும் மூழ்கியிருந்தோம்.
அல்லாஹ் எங்களுக்கு ஓர் இறைத்தூதரை { முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை }
அனுப்பினான். அவர்களை நாங்கள் ஈமான் கொண்டோம். அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என
அனைத்தையும் பின்பற்றி நடந்தோம். சன்மார்க்கப் போர்களிலும் பங்கெடுத்தோம்.
எங்களில் பலர் எவ்வித உலக சுகங்களையும் அனுபவிக்காமலேயே
மரணித்துப் போயினர்.
அவர்களில் உஹதில் வீரமரணம் அடைந்த என் சகோதர முஸ்லிம்
முஸ்அப் இப்னு உமைரும் ஒருவர்.
அவர் மரணித்த போது அவரிடம் அவர் அணிந்திருந்த மேலாடை,
அவர் போரில் பயன்படுத்திய வாள் இவ்விரண்டையும் தவிர வேறொன்றும் இல்லை.
அவருக்கு நாங்கள் அவரின் மேலாடையையே கஃபனாக அணிவிக்கும்
போது, தலையை மறைத்தால், கால்களின் பகுதிகளும், இரு கால்களை மறைத்தால் தலைப் பகுதியும்
தெரிந்தது.
இறுதியாக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் ஆணைக்கிணங்க இத்கிர் புல்லைப் போட்டு கால்களின் பகுதியை மறைத்து நல்லடக்கம்
செய்தோம்.
அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த நானும், இன்னும்
பலரும் இன்று சுக போகமாக வாழ்ந்து வருகின்றோம். அல்லாஹ் எங்களுக்கு உலகின் எட்டுத்
திக்குகளின் அருட்கதவுகளையும் திறந்து விட்டிருக்கின்றான். நாங்கள் அருட்கொடைகள் அனைத்தையும்
அனுபவித்து வருகின்றோம்.
எனினும், எங்களுக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கின்றது.
அது அல்லாஹ்வைப் பற்றிய, மறுமையைப் பற்றிய பயம், நாளை மறுமையில் சிலரைப்பார்த்து அல்லாஹ்
சொல்வானே..
“நீங்கள் உங்கள் பங்கில் உள்ள அருட்கொடைகளை உங்கள்
உலக வாழ்க்கையிலேயே அனுபவித்து விட்டீர்கள். அவற்றால் நன்கு பயனும் அடைந்து விட்டீர்கள்”
( அல்குர்ஆன்: 46: 20 ) அவர்களாக நாங்கள் ஆகி விடக்கூடாது என்கிற அந்தப் பயம் தான்
இவ்வாறான நேரங்களில் அழுகையைக் கொண்டு வந்து விடுகின்றது” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம்
)
3.
ஒரு அருட்கொடையை அனுபவிக்கும்
போது அதற்காக அதை வழங்கிய ரப்புக்கு வணக்க வழிபாட்டின் வாயிலாக நன்றி தெரிவிப்பது.
ت- تسخيرها في طاعة مسديها والمنعم بها
قال تعالى: {اعملوا آل داود شكر} [سبأ: 13]
ومعنى الآية: يا آل داود: اعملوا شكرًا لله على ما أعطاكم، وذلك بطاعته وامتثال أمره
قال تعالى: {اعملوا آل داود شكر} [سبأ: 13]
ومعنى الآية: يا آل داود: اعملوا شكرًا لله على ما أعطاكم، وذلك بطاعته وامتثال أمره
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும்,
அவர்களின் சந்ததிகளுக்கும், அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் ஏராளமான அருட்கொடைகளை
வாரி வழங்கிய பிறகு அவர்களை நோக்கி இவ்வாறு கூறினான்.
“தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில்
செயலாற்றுங்கள்! என்னுடைய அடியார்களில் மிகச் சிலர் தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்”.
( அல்குர்ஆன்: 34: 13
)
وعن
عائشة رضي الله عنها قالت: { كان النبي يقوم من الليل حتى تتفطر قدماه. فقلت له:
لِمَ تصنع هذا يا رسول الله، وقد غُفر لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال: أفلا
أكون عبداً شكوراً؟ } [متفق عليه].
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் இரு பாதங்கள் வீங்க நின்று தொழுவார்கள். நான் ”அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தான் அல்லாஹ்வால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக இருக்கின்றீர்களே! ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றீர்கள்?” என்று கேட்டேன்.
அப்போது, அண்ணலார் “நான் அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?” என்று பதில் கூறினார்கள்.
وعن
حذيفة قال: { صليت مع النبي ذات ليلة، فافتتح البقرة، فقلت: يركع بها، ثم افتتح
النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسلاً، إذا مرّ بآية فيها
تسبيح سبّح، وإذا مرّ بسؤال سأل، وإذا مر بتعوّذ تعوذ... الحديث } [رواه مسلم].
ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் இரவு நான் நபி {ஸல்} அவர்களுடன் இரவில் தொழுதேன். அப்போது, அண்ணலார் ஒரே ரக்அத்தில் சூரா பகரா, அந்நிஸா, ஆலுஇம்ரான் ஆகிய சூராக்களை ஓதினார்கள்.
ஒவ்வொரு வசனங்களைக் கடந்து செல்லும் போது அதில் தஸ்பீஹ் சம்பந்தமான ஆயத் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள். துஆவுடைய வசனம் வந்தால் துஆ கேட்பார்கள். பாதுகாப்பு சம்பந்தமான வசனம் வந்தால் பாதுகாப்பு கேட்பார்கள்.
وعن ابن
مسعود قال: { صليت مع النبي ليلة، فلم يزل قائماً حتى هممت بأمر سوء. قيل: ما
هممت؟ قال: هممت أن أجلس وأَدَعَهُ ! } [متفق عليه].
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் இரவு நான் நபிகளாருடன் இரவுத் தொழுகையில் ஈடுபட்டேன். நீண்ட நேரம் நின்று தொழுதார்கள். அப்போது நான் சீக்கிரமாக தொழுகையை அண்ணலார் முடித்து விட மாட்டார்களா?” என நினைத்தேன்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம், நீண்ட பல சூராக்களை ஓதி பாதங்களும், கால்களும் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். காரணம் கேட்ட அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன பதில் “அல்லாஹ்வுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்பது தான்.
மெய் சிலிர்க்க வைக்கும் நன்றியுணர்வு…
حدثني بقصة موته
محمد بن المنذر بن سعيد قال ثنا يعقوب بن إسحاق بن الجراح قال ثنا الفضل بن عيسى
عن بقية بن الوليد قال: ثنا الأوزاعي, عن عبد الله بن محمد قال
خرجت الى ساحل البحر مرابطاً, وكان رابطنا يومئذ عريش مصر, قال: فلما انتهيت إلى الساحل؛ فإذا أنا ببطيحه, وفى البطيحه خيمة فيها رجل؛ قد ذهب يداه, ورجلاه, وثقل سمعه, وبصره, وما له من جارحة تنفعه إلا لسانه
خرجت الى ساحل البحر مرابطاً, وكان رابطنا يومئذ عريش مصر, قال: فلما انتهيت إلى الساحل؛ فإذا أنا ببطيحه, وفى البطيحه خيمة فيها رجل؛ قد ذهب يداه, ورجلاه, وثقل سمعه, وبصره, وما له من جارحة تنفعه إلا لسانه
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத்
(ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் அவ்ஜாயீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் நெகிழ்ச்சியான
சம்பவத்தை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களின் “அஸ் – ஸிகாத்” எனும் நூலில்
பதிவு செய்திருக்கின்றார்கள்.
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத்
(ரஹ்) அவர்கள் மேற்கொண்ட கடல் பயணம் அது.
அவர்கள் பயணம் செய்த கப்பல்
மிஸ்ருக்கு அருகேயுள்ள தீவு ஒன்றில் கரை ஒதுங்கியது.
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத்
(ரஹ்) அவர்கள் கூறுவதை நாம் கேட்போம்.
தீவில் இறங்கி நான் நடந்து
சென்றேன். தூரத்தில் ஓர் கூடாரம் தெரிந்தது. அதன் அருகே செல்லச் செல்ல அங்கிருந்து
ஒருவர் முனகும் சப்தம் ஒன்று கேட்டது.
கூடாரத்தின் அருகே சென்று
சப்தத்திற்கு சொந்தக்காரர் யார்? என்று பார்த்தேன்.
கால்களும், கைகளும், பார்வையும்
முற்றிலும் செயலிழந்து போன நிலையில் ஒருவர் கூனிக்குருகி படுத்துக் கொண்டிருப்பதையும்,
அவர் ஏதோ ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பதையும் கண்டேன்.
அவரின் வாயருகே என் காதுகளைக்
கொண்டு சென்று என்ன சொல்கின்றார்? என்று கேட்டேன். விக்கித்துப்போனேன்.
وهو يقول: "اللهم أوزعنى أن أحمدك حمداً أكافىء به شكر نعمتك التي
أنعمت بها عليّ, وفضلتنى على كثير ممن خلقت تفضيلاً"
قال الأوزاعي: قال عبد الله قلت: والله لآتين هذا الرجل ولأسألنه أنَّى له هذا الكلام! فهم أم علم أم إلهام ألهم؟
فأتيت الرجل فسلمت عليه فقلت: سمعتك وأنت تقول: اللهم أوزعنى أن أحمدك حمدا أكافىء به شكر نعمتك التي أنعمت بها على وفضلتنى على كثير من خلقت تفضيلاً !
فأي نعمة من نعم الله عليك تحمده عليها, وأي فضيله تفضل بها عليك تشكره عليها. ؟
قال: وما ترى ما صنع ربي, والله لو أرسل السماء علي ناراً فأحرقتنى وأمر الجبال فدمرتنى وأمر البحار فغرقتنى وأمر الأرض فبلعتنى ما ازددت لربى إلا شكراً؛ لما أنعم على من لساني هذا.
قال الأوزاعي: قال عبد الله قلت: والله لآتين هذا الرجل ولأسألنه أنَّى له هذا الكلام! فهم أم علم أم إلهام ألهم؟
فأتيت الرجل فسلمت عليه فقلت: سمعتك وأنت تقول: اللهم أوزعنى أن أحمدك حمدا أكافىء به شكر نعمتك التي أنعمت بها على وفضلتنى على كثير من خلقت تفضيلاً !
فأي نعمة من نعم الله عليك تحمده عليها, وأي فضيله تفضل بها عليك تشكره عليها. ؟
قال: وما ترى ما صنع ربي, والله لو أرسل السماء علي ناراً فأحرقتنى وأمر الجبال فدمرتنى وأمر البحار فغرقتنى وأمر الأرض فبلعتنى ما ازددت لربى إلا شكراً؛ لما أنعم على من لساني هذا.
ஆம்! அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்
கொண்டிருந்தார். “அல்லாஹ்வே! என்னை எல்லாவற்றையும் கொண்டு போதுமாக்கி வைத்திருக்கின்றாய்,
அதற்காக காலமெல்லாம் உன்னைப் புகழ்ந்து கொண்டே இருக்கும் தவ்ஃபீக்கை எனக்கு நீ வழங்கியருள்வாயாக!
நீ படைத்த படைப்புகள் எல்லாவற்றையும்
விட என்னை மேன்மையாக்கி வைத்து, எனக்கு உன் புறத்திலிருந்து உன் அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றாய்
அதற்காக, காலமெல்லாம் உனக்கு நன்றி செலுத்தும் தவ்ஃபீக்கைத் தந்தருள்வாயாக!” என்று
அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, நான் ஸலாம் சொல்லி,
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “ நீங்கள் இன்னின்னவாறு துஆச் செய்ய நான் என் செவியால்
கேட்டேன்.
“அல்லாஹ் உங்களுக்கு என்ன
நிஃமத்தை வழங்கி விட்டான்? என்று அவனிடம் அவனைப் புகழ்வதற்கு தவ்ஃபீக்கையும், என்ன
மேன்மையை வழங்கி விட்டான்? என்று நன்றி செலுத்துவதற்கு தவ்ஃபீக்கையும் கேட்கின்றீர்கள்”
என்றேன்.
அதற்கவர், “அல்லாஹ் என்னோடு
நடந்து கொண்டிருக்கும் முறையை நீர் அறிய மாட்டீர்! அவன் நினைத்திருந்தால் வானத்தில்
இருந்து என் மேல் நெருப்பை இறக்கி கரித்திருக்கலாம். அவன் நாடியிருந்தால் அருகில் இருக்கிற
மலையில் இருந்து ஒரு பாறையை உருளச் செய்து என்னை நசுக்கி இருக்கலாம். அவன் நினைத்திருந்தால்
இந்த கடல் நீரால் என்னை மூழ்கடிக்க வைத்திருக்கலாம். அவன் நாடியிருந்தால் இந்த பூமியைக்
கொண்டு என்னை விழுங்கச் செய்திருக்கலாம். ஆனால், இப்படியெல்லாம் அவன் செய்யவில்லையே!
அதற்காக நான் எவ்வளவு அதிகமாக நன்றி செலுத்த வேண்டும்.
ஏன்? என் உடல் உறுப்புக்கள்
எல்லாம் செயலிழந்து போனாலும் இந்த நாவை எவ்வித சேதாரமும் இன்றி தந்திருக்கின்றானே?
இது என் மீது என் ரப்பு செய்த மகத்தான அருட்கொடை இல்லையா? என்று கேட்டார்.
ولكن يا عبد الله؛ إذ أتيتني! لي إليك حاجة؟ قد تراني على أي حالة أنا.
أنا لست أقدر لنفسى على ضرّ ولا نفع, ولقد كان معي بُني لي يتعاهدني في وقت صلاتي
فيوضيني, وإذا جعت أطعمني وإذا عطشت سقاني, ولقد فقدته منذ ثلاثة أيام؟ فتحسّسه لي
رحمك الله؟
فقلت: والله ما مشي خلق في حاجة خلق كان أعظم عند الله أجرا ممن يمشي في حاجة مثلك.
فمضيت في طلب الغلام فما مضيت غير بعيد حتى صرت بين كثبان من الرمل, فإذا أنا بالغلام قد افترسه سبع وأكل لحمه, فاسترجعت, وقلت: أنّي لي وجه رقيق! آتى به الرجل؟
فبينما أنا مقبل نحوه؛ إذ خطر على قلبي ذكر أيوب النبي صلى الله عليه و سلم,
فقلت: والله ما مشي خلق في حاجة خلق كان أعظم عند الله أجرا ممن يمشي في حاجة مثلك.
فمضيت في طلب الغلام فما مضيت غير بعيد حتى صرت بين كثبان من الرمل, فإذا أنا بالغلام قد افترسه سبع وأكل لحمه, فاسترجعت, وقلت: أنّي لي وجه رقيق! آتى به الرجل؟
فبينما أنا مقبل نحوه؛ إذ خطر على قلبي ذكر أيوب النبي صلى الله عليه و سلم,
பின்னர், அவர் என்னிடம் என்
பெயரைக் கூறி எனக்கு ஓர் உதவி செய்வீரா? என்று கேட்டு விட்டு,
நான் எந்த நிலையின் இருக்கின்றேன்
என்பது உமக்கு தெரியும். என்னால் எந்த ஒன்றையும் சுயமாக செய்ய இயலாது. எனக்கு ஒரு பணியாள்
இருந்தார். அவர் தான் எனக்கு பசிக்கும் போது உணவு கொடுப்பார். நான் தாகித்தால் தண்ணீர்
கொடுப்பார். தொழுகை நேரம் வருகிற போது உளூ செய்யவும், தொழுகைக்காக என்னை நிற்க, அமர
வைக்கவும் உதவி செய்வார்.
மூன்று நாட்களாக அவரைக் காணவில்லை.
அவரைக் கொஞ்சம் தேடி கண்டு பிடித்து என்னிடம் அழைத்து வருவீரா?” என்று கேட்டார்.
அதற்கு நான், அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியைப் பெற்றுத்தருகிற ஒரு காரியத்தை
எம்மைச் செய்யுமாறு கூறியிருக்கின்றீர்! நிச்சயம் இந்த உதவியை நான் செய்கின்றேன் என்று
கூறி விடை பெற்று அவரை தேடி அருகில் இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் நுழந்தேன்.
சிறிது தூரம் கூட சென்றிருக்கமாட்டேன்.
அங்கே, காட்டு விலங்குகளால் ஒருவரின் உடல் சின்னா பின்னமாகி கிடப்பதைப் பார்த்தேன்.
அநேகமாக அவரின் பணியாளராகத் தான் இருப்பார் என முடிவு செய்தேன்.
அங்கிருந்து திரும்பும் போது
ஏனோ எனக்கு அய்யூப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையும், அவர்கள் காத்த
பொறுமையும் நினைவுக்கு வந்தது.
فلما
أتيته سلّمت عليه, فردّ عليّ السلام. فقال: ألست بصاحبي؟ قلت
بلى. قال: ما فعلت في
حاجتي؟
فقلت: أنت أكرم على الله أم أيوب النبي؟
قال بل أيوب النبي. قلت: هل علمت ما صنع به ربه! أليس قد ابتلاه بماله وآله وولده؟
قال: بلى. قلت: فكيف وجده؟ قال: وجده صابراً شاكراً حامداً.
قلت: لم يرض منه ذلك؛ حتى أوحش من أقربائه وأحبائه؟ قال: نعم. قلت: فكيف وجده ربه؟ قال: وجده صابراً شاكراً حامداً. قلت: فلم يرض منه بذلك حتى صيّره عرضاً لمارّ الطريق.
هل علمت! قال: نعم. قلت: فكيف وجده ربه؟ قال: صابراً شاكراً حامداً أوجز رحمك الله. قلت: له إن الغلام الذي أرسلتني في طلبه وجدته بين كثبان الرمل وقد افترسه سبع, فأكل لحمه؛ فأعظم الله لك الأجر, وألهمك الصبر.
فقال المبتلى: الحمد لله الذي لم يخلق من ذريتي خلقا يعصيه فيعذبه بالنار, ثم استرجع, وشهق شهقة؛ فمات.
فقلت: أنت أكرم على الله أم أيوب النبي؟
قال بل أيوب النبي. قلت: هل علمت ما صنع به ربه! أليس قد ابتلاه بماله وآله وولده؟
قال: بلى. قلت: فكيف وجده؟ قال: وجده صابراً شاكراً حامداً.
قلت: لم يرض منه ذلك؛ حتى أوحش من أقربائه وأحبائه؟ قال: نعم. قلت: فكيف وجده ربه؟ قال: وجده صابراً شاكراً حامداً. قلت: فلم يرض منه بذلك حتى صيّره عرضاً لمارّ الطريق.
هل علمت! قال: نعم. قلت: فكيف وجده ربه؟ قال: صابراً شاكراً حامداً أوجز رحمك الله. قلت: له إن الغلام الذي أرسلتني في طلبه وجدته بين كثبان الرمل وقد افترسه سبع, فأكل لحمه؛ فأعظم الله لك الأجر, وألهمك الصبر.
فقال المبتلى: الحمد لله الذي لم يخلق من ذريتي خلقا يعصيه فيعذبه بالنار, ثم استرجع, وشهق شهقة؛ فمات.
நேராக, அவரிடம் வந்தேன். அவர்
என்னிடம் அவரின் பணியாளர் குறித்து கேட்டார்.
நான் அவரிடம் “அல்லாஹ்விடத்தில்
நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் சிறந்தவரா? அல்லது நீர் சிறந்தவரா? என்று கேட்டேன்.
அதற்கவர், சந்தேகமற நபி அய்யூப்
(அலை) அவர்களே மிகச் சிறந்தவர் என்றார்.
அய்யூப் (அலை) அவர்களோடு ரப்பு
எப்படி நடந்து கொண்டான்? என்பதை நீர் அறிவீரா? அவர்களின் பொருளாதாரத்திலும், அவர்களின்
குடும்பத்திலும், பிள்ளைச் செல்வத்திலும் அல்லாஹ் சோதனையை ஏற்படுத்த வில்லையா? என்று
கேட்டேன்.
அதற்கவர், ஆம்! என்றார். அப்போது
நான், அந்த நேரத்தில் அய்யூப் அலை அவர்கள் ரப்போடு எப்படி நடந்து கொண்டார்கள்? என்று
கேட்டேன்.
அதற்கவர், அல்லாஹ்வுக்கு நன்றி
செலுத்துபவராகவும், அல்லாஹ்வைப் புகழ்ந்தவராகவும், பொறுமையாளராகவும் நபி அய்யூப் அலை
அவர்கள் நடந்து கொண்டார்கள்” என்றார்.
மீண்டும் நான் அவரிடம் “அய்யூப்
அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் உறவுகளும், சமூகமும் உறவைத் துண்டித்து, பாதைகளில்
நடமாடும் போது கேலியும் கிண்டலும் செய்தார்களே! அதை நீர் அறிவீரா? என்றேன்.
அதற்கவர், ஆம்! என்றார். அப்போது
நான், அந்த நேரத்தில் அய்யூப் அலை அவர்கள் ரப்போடு எப்படி நடந்து கொண்டார்கள்? என்று
கேட்டேன்.
அதற்கவர், அல்லாஹ்வுக்கு நன்றி
செலுத்துபவராகவும், அல்லாஹ்வைப் புகழ்ந்தவராகவும், பொறுமையாளராகவும் நபி அய்யூப் அலை
அவர்கள் நடந்து கொண்டார்கள்” என்றார்.
அப்போது நான், அல்லாஹ் உமக்கு
நிரப்பமாக அருள் புரிவானாக! உம்முடைய பணியாளரை காட்டு விலங்குகள் கடித்துக் குதறி கொன்று
விட்டன. அவரின் உடல்களை தின்று விட்டன.
அல்லாஹ் உமக்கு மகத்தான நற்கூலியை
வழங்குவானாக! அல்லாஹ் உமக்கு பொறுமையை வழங்குவானாக! என்றேன்.
அப்போது அவர், இரு கைகளையும்
வானை நோக்கி உயர்த்தி “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவனுக்கு மாறு செய்து நரகத்தை தண்டனையாக
பெறுகிற எந்த ஒருவரையும் என் சந்ததியில் படைக்காமல் காத்தருளினானே அத்தகைய அல்லாஹ்வுக்கே!
என்று துஆச் செய்து விட்டு இறந்து போன அவரின் பணியாளருக்காக இரங்கல் (இன்னா லில்லாஹ்..)
கூறிவிட்டு, உடலை ஒரு உலுக்கு உலுக்கி இறந்து போனார்.
فقلت:
انا لله وانا اليه راجعون, عظمت مصيبتي. رجل مثل هذا إن تركته أكلته السباع, وإن
قعدت لم أقدر على ضرّ ولا نفع. فسجّيته بشملة كانت عليه, وقعدت عند رأسه باكياً.
فبينما أنا قاعد؛ إذ تهجم على أربعة رجال! فقالوا: يا عبد الله ما حالك وما قصتك؟
فقصصت عليهم قصتي وقصته! فقالوا لي: اكشف لنا عن وجهه فعسى أن نعرفه؟ فكشفت عن وجهه؛ فانكبّ القوم عليه, يقبّلون عينيه مرّة ويديه أخرى, ويقولون: بأبي؛ عين طال ما غضّت عن محارم الله. وبأبي؛ وجسمه طال ما كنت ساجداً والناس نيام.
فقلت: من هذا يرحمكم الله؟
فقالوا: هذا أبو قلابه الجرمي صاحب ابن عباس؛ لقد كان شديد الحب لله, وللنبيّ صلى الله عليه وسلم فغسّلناه وكفناه بأثواب كانت معنا وصلينا عليه ودفناه.
فانصرف القوم وانصرفت إلى رباطى؛ فلما أن جنّ عليّ الليل, وضعت رأسي, فرأيته فيما يرى النائم في روضة من رياض الجنة وعليه حلّتان من حلل الجنّة وهو يتلو الوحي: {سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار}.
فقلت: ألست بصاحبي؟ قال: بلى! قلت: أنَّى لك هذا؟ قال: إن لله درجات لا تنال إلا بالصبر عند البلاء
فقصصت عليهم قصتي وقصته! فقالوا لي: اكشف لنا عن وجهه فعسى أن نعرفه؟ فكشفت عن وجهه؛ فانكبّ القوم عليه, يقبّلون عينيه مرّة ويديه أخرى, ويقولون: بأبي؛ عين طال ما غضّت عن محارم الله. وبأبي؛ وجسمه طال ما كنت ساجداً والناس نيام.
فقلت: من هذا يرحمكم الله؟
فقالوا: هذا أبو قلابه الجرمي صاحب ابن عباس؛ لقد كان شديد الحب لله, وللنبيّ صلى الله عليه وسلم فغسّلناه وكفناه بأثواب كانت معنا وصلينا عليه ودفناه.
فانصرف القوم وانصرفت إلى رباطى؛ فلما أن جنّ عليّ الليل, وضعت رأسي, فرأيته فيما يرى النائم في روضة من رياض الجنة وعليه حلّتان من حلل الجنّة وهو يتلو الوحي: {سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار}.
فقلت: ألست بصاحبي؟ قال: بلى! قلت: أنَّى لك هذا؟ قال: إن لله درجات لا تنال إلا بالصبر عند البلاء
والشكر عند الرخاء
مع خشية الله عز و جل
في السر والعلانية".
நானும் இன்னா லில்லாஹ்.. சொல்லி
விட்டு எனக்கு பெரிய சோதனை ஏற்பட்டு விட்டதாக நான் கருதினேன். ஆம்! ஆள் அரவம் இல்லாத
தீவு ஒன்றின் காட்டுக்குள் இறந்து போன ஒரு ஜனாஸாவை எப்படி விட்டுச் செல்வது? என்ன செய்வது?
என்று தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் என் நிலையை நினைத்து
நான் தலை மேல் கை வைத்து அழுது கொண்டிருந்தேன்.
அப்போது, அங்கே நான்கு நபர்கள்
அங்கே வந்தார்கள். ஏன் அழுகின்றீர்? என்று விசாரித்தார்கள்.
நான் நடந்த சம்பவத்தை ஒன்று
விடாமல் கூறினேன். அப்போது அவர்கள் ஆச்சர்யத்தோடு அந்த நல்ல மனிதரின் முகத்தை ஒரு தடவை
திறந்து காட்டுங்களேன்!” என்றார்கள்.
நானும் திறந்து காட்டினேன்.
வந்த நால்வரும் அவரின் நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டார்கள். இந்தக் கண்கள் அல்லாஹ்
ஹராமாக்கியதை விட்டும் தாழ்த்திக் கொண்ட கண்கள். இந்த உடல் மக்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்த
போது அல்லாஹ்வை வணங்கி வழிபட்ட உடல் என்று வாழ்த்துக் கூறினார்கள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
என்ன நடக்கிறது இங்கே? யார் இவர்கள்? இறந்து போன அந்த மனிதர் யார்? என்ற கேள்விகள்
என்னை துளைத்துக் கொண்டே இருக்க, ஒருவாராக இயல்பு நிலைக்கு திரும்பி அந்த நால்வரிடமும்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்! முதலில் இவர் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்?!”
என்றேன்.
அதற்கவர்கள், “இவர் அபூகிலாபா
அப்துல்லாஹ் இப்னு ஜைத் அல் ஜுர்மீ (ரஹ்) அவர்கள் ஆவார்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு
அன்ஹு அவர்களின் மாணவரும், பணியாளரும் ஆவார்கள்.
அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அளவு கடந்த நேசமும், காதலும் கொண்டவர்கள்
பஸராவின் மிகப்பெரிய வணக்கசாலியும், உலகப்பற்றற்றவரும் ஆவார்” என்று கூறினார்கள்.
பின்னர், நாங்கள் ஐவரும் சேர்ந்து
அவர்களைக் குளிப்பாட்டினோம். நாங்கள் கொண்டு வந்திருந்த எங்களின் ஆடையில் கஃபன் செய்தோம்.
பின்னர் ஜனாஸா தொழுகை தொழுவித்தோம். பின்னர் நல்லடக்கமும் செய்தோம்.
அதன் பின்னர் அந்த நால்வரும்
சென்று விட்டார்கள். நானும் என்னுடைய கூட்டத்தார்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து
விட்டேன்.
இரவில் என்னுடைய கனவில் நான்
அவரைக் கண்டேன். அவர் சுவனத்தில் இருக்கின்றார். அவர் சுவனத்து பட்டாடைகள் இரண்டு அணிந்திருக்கக்
கண்டேன். மேலும், அவர் “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உலகில் நீங்கள் பொறுமையுடன்
வாழ்ந்து வந்த காரணத்தால் இன்று இதற்குத் தகுதி பெற்றிருக்கின்றீர்கள்” என்ற ( அல்குர்ஆன்:
13: 24 ) வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
நான் அவரிடம் “நீங்கள் இன்ன
நபர் தானே? என்று கேட்டேன். அவர் ஆம்! என்றார். இந்த அந்தஸ்துகள் எவ்வாறு உங்களுக்கு
கிடைத்தது? என்று கேட்டேன்.
அதற்கவர், “திண்ணமாக! அல்லாஹ்விடத்தில்
சில அந்தஸ்துகள் இருக்கின்றன. அவைகளை “சோதனைகளின் போது பொறுமை காப்பதன் மூலமும், நல்ல
நிலையில் இருக்கும் போது ரப்புக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், அந்தரங்கத்திலும்,
வெளிரங்கத்திலும் அல்லாஹ்வைப் பயப்படுவதன் மூலமும் தவிர பெற்றுக் கொள்ள முடியாது” என்று
கூறினார்.
( நூல்: கிதாப் அஸ் ஸிகாத்
லிஇமாமி இப்னு ஹிப்பான், பாகம், 5, பக்கம் 2 – 5, அல் ஜன்னத்து வன் நார் வ ஃபக்துல்
அவ்லாத் லிஇமாமி சுயூத்தீ, பக்கம் 85 – 87 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனது
அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துகிற நஸீபை வாழும் காலமெல்லாம் தந்தருள் புரிவானாக!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!