Thursday, 10 January 2019

இளைஞனே! விழி! எழு! இறையன்பு பெற போராடு!!


இளைஞனே! விழி! எழு! இறையன்பு பெற போராடு!!



1985 –ஆம் ஆண்டு முதல் ஜனவரி 12 –ஆம் தேதியைஇந்திய தேசிய இளைஞர் தினமாகநாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

இளமைப்பருவத்தின் முக்கியத்துவம், இளைஞர்களின் ஆற்றல், வலிமை குறித்தான விழிப்புணர்வை இளைஞர் சமூகம் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக இளைஞர்களில் சற்றேறக்குறைய 20 சதவீத இளைஞர்கள் இந்திய இளைஞர்கள் என்கிறது ஓர் புள்ளி விவரம்.

2020 –ஆண்டில் இந்திய மக்கட் தொகையில் 64% சதவீதம் பேர் 29 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள் என்கிறது யுனெஸ்கோவின் புள்ளிவிவரம்.

அப்படியென்றால், கணிசமான இளைஞர்களின் எண்ணிக்கையை இந்திய இஸ்லாமிய சமூகமும் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபகாலமாக முஸ்லிம் சமூகத்து இளைஞர்கள் & இளைஞிகளின் பெயர்கள் பரவலாக ஊடகங்களில் ( காதல், கள்ளக்காதல், மது, போதை, அடிதடி, ஆள்கடத்தல், தற்கொலை, விபத்தில் உயிரிழப்பது போன்ற விவகாரங்களில் ) அங்கொன்றும் இங்கொன்றுமாய் இடம் பெறுவதை பார்த்து வருகின்றோம்.

முன்மாதிரியாய் வாழ வேண்டிய ஓர் சமூகத்தின் நிலை கண்டு நாம் உண்மையில் அதிகம் வேதனையும், கவலையும் கொள்கின்றோம்.

இளைஞர் சமூகத்தின் கவனத்தை சீர்படுத்துவதும், அவர்களின் செயல்பாடுகளை சரிபடுத்துவதும் இந்த சமூகத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவரின் தார்மீக கடமையாகும்.

இளமையின் முக்கியத்துவமும், அருமையும்...

اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ ()

 நீங்கள் பலவீனமான நிலையிலிருந்த போது உங்களைப் படைத்தவன் அல்லாஹ் தான்! பிறகு அந்தப் பலவீனத்தை அடுத்து உங்களுக்கு வலிமையைத் தந்தான். பின்னர், அந்த வலிமையை அடுத்து உங்களைப் பலவீனர்களாகவும், முதியவர்களாகவும் ஆக்கினான். அவன் எதை நாடுகின்றானோ அதைப் படைக்கின்றான். மேலும், அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும், அனைத்து வஸ்துக்களின் மீது ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.”   ( அல்குர்ஆன்: 30:54 )

இங்கே, இளமைப்பருவத்தை வலிமை என்றும் ஆற்றல் என்றும் அல்லாஹ் குறிப்பிடுவதன் மூலம் அதன் மகத்துவத்தையும், உள்ளார்ந்த சிறப்புக்களையும் உணர முடிகின்றது.


عن بن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه : " اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك "
أخرجه الحاكم في المستدرك رقم ( 7846 ) 4 / 341 وقال : هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه ، وابن أبي شيبة رقم ( 34319 )

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: நீர் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிய வாய்ப்புக்களாய்க் கருதுவீராக!

1.            நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையயும், 2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும், 3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும், 4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும், 5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும் நீர் அரிய வாய்ப்புக்களாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக!

لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما
أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به

நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது. அவைகள்: “ 1. வாழ்நாளை எப்படி கழித்தாய்? , 2. வாலிபத்தை எப்படி அழித்தாய்?,  3. பொருளை எப்படி சேர்த்தாய்?, எப்படி செலவு செய்தாய்?, 4.கற்ற கல்வியைக் கொண்டு என்ன அமல் செய்தாய்? “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில்  ஒட்டு மொத்த வாழ்நாளுக்கு விசாரணை இருப்பது போன்றே   அல்லாஹ் வாலிபத்தையும்  தனியாக விசாரிப்பான் என்பது தெரிய வருகின்றது.


عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ صحيح البخاري

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் வளர்ந்த வாலிபர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்" என இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் ( நூல்: புஹாரி )

எனவே, இளைமைப் பருவத்தின் அருமையை அதன்  முக்கியத்துவத்தை இதை விட கூடுதலாக யாரும் சொல்லித் தந்திட இயலாது.

1.   தீனுக்காக பணிவிடை செய்து வாழ வேண்டும்..

1.   முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் செய்த பணிவிடை.

நபித்துவத்தின் 11-ஆம் ஆண்டு, மக்காவிற்கு ஹஜ் செய்ய வந்த கஜ்ரஜ் கோத்திரத்தைச் சார்ந்த சிலரிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஏகத்துவ அழைப்பை எத்திவைக்கின்றார்கள்.

அல்லாஹ் அவர்களின் இதயத்தில் ஏகத்துவ ஜோதியை ஏற்றிவைத்தான். அவர்கள் மதீனா சென்றதும் இஸ்லாத்தைப் பற்றியுண்டான விளக்கத்தை பரவலாக, மதீனா நகரெங்கும் வியாபித்துக் கூறினார்கள்.

இதன் விளைவாக, அடுத்த ஆண்டு ஹஜ் செய்ய வரும் போது புதிதாக ஏழு நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். முந்தைய ஆண்டு 5 நபர்கள், தற்போது 7 நபர்கள் என மொத்தம் 12 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
سفير الإسلام في المدينة
وبعد أن تمت البيعة وانتهى الموسم بعث النبي صلى الله عليه وسلم مع هؤلاء المبايعين أول سفير في يثرب؛ ليعلم المسلمين فيها شرائع الإسلام، ويفقههم في الدين، وليقوم بنشر الإسلام بين الذين لم يزالوا على الشرك، واختار لهذه السفارة شابًا من شباب الإسلام من السابقين الأولين، وهو مُصْعَب بن عُمَيْر العبدرى رضي الله عنه .

                       ( நூல்: ரஹீக் அல் மக்தூம், பாடம் அகபதுல் ஊலா, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:94 )

قال ابن اسحاق فلما انصرف عنه القوم بعث رسول الله صلى الله عليه وسلم معهم مصعب بن عمير بن هاشم بن عبد مناف بن عبد الدار بن قصي وأمره ان يقرئهم القرآن ويعلمهم الإسلام ويفقههم في الدين فكان يسمى المقرىء

இன்னும் இதை விட இஸ்லாத்தை மதீனாவிலே விரிவடையச் செய்ய விரும்பிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்}, முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு அனுப்பினார்கள்.

மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த முஸ்அப் (ரலி) அவர்கள் அடுத்த முறை 60 முஸ்லிம்களை தயார் செய்து அனுப்பினார்கள்.

அதற்கடுத்த முறை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது. தமது தஃவா எனும் மார்க்க அழைப்பால் உஸைத் பின் ஹுளைர் (ரலி), ஸஅத் இப்னு முஆத் (ரலி) அஸ்அத் இப்னு ஸர்ராரா (ரலி) போன்ற உன்னதமான மேன்மக்களை வென்றெடுத்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, மதீனாவின் எல்லையில் திரண்டு வந்து வரவேற்கும் இதயப்பூர்வமான ஒரு கூட்டத்தை உருவாக்கினார்கள்.

எத்தனையோ நபித்தோழர்கள் இருந்தும், உமர், உஸ்மான், அபூபக்ர் (ரலி-அன்ஹும்) போன்ற பெரிய நபித்தோழர்கள் இருந்தும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்அப் (ரலி) அவர்களை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதற்கான விடை இதோ….

அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கஅபாவின் நிழலில் அமர்ந்திருக்கும் போது, முஸ்அப் (ரலி) அவர்கள் அங்கே வருகை தருகின்றார்கள்.

முஸ்அப் (ரலி) அவர்கள் அணிந்திருந்த மேலாடை முரட்டு கம்பளியால் ஆனதாக இருந்தது. பல இடங்களில் கிழிந்து ஏராளமான இடங்களில் ஒட்டுப் போடப்பட்டு இருந்தது. ஓரிடத்தில் ஒட்டுப்போட துணியில்லாததால் தோலையோ, அல்லது இலை தளையையோ வைத்து ஒட்டுப்போட்டு இருந்தார்கள்.

அதைக்கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள், அப்படியே கண்ணீர் வடிக்கின்றார்கள்.

فدخلت على رسول الله صلي الله عليه وسلم وهو مضطجع على حصير، فجلست فأدنى عليه إزاره وليس عليه غيره، وإذا الحصير قد أثر في جنبه، فنظرت ببصري في خزانة رسول الله صلي الله عليه وسلم فإذا أنا بقبضة من شعير نحو الصاع، ومثلها قرظا في ناحية الغرفة، وإذا أفيق «3» معلق- قال- فابتدرت عيناي. قال: (ما يبكيك يا بن الخطاب)؟ قلت يا نبي الله، وما لي لا أبكى وهذا الحصير قد أثر في جنبك، وهذه خزانتك لا أرى فيها إلا ما أرى! وذاك قيصر وكسرى في الثمار والأنهار وأنت رسول الله صلي الله عليه وسلم
وصفوته، وهذه خزانتك! فقال: (يا ابن الخطاب ألا ترضى أن تكون لنا الآخرة ولهم الدنيا) قلت: بلى.

தொடர்ந்து அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைச் சந்திக்க உமர் (ரலி) வருகின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஈச்சமர நாரினால் வேயப்பட்ட கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

எழுந்து அமர்ந்த நபிகளாரின் முதுகில் ஈச்சமர நாரின் தடங்கலால் ஏற்பட்டிருந்த வடுவைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! கைஸர் கிஸ்ரா போன்ற மன்னர்களெல்லாம் பஞ்சு மெத்தைகளில் உறங்கிற போது, நீங்கள் அல்லாஹ்வின் தூதராயிற்றே! இவ்வாரெல்லாம் துன்பம் அனுபவிக்க வேண்டுமா? என்று கேட்டார்கள்.

அது கேட்ட மாநபி {ஸல்} அவர்கள்கத்தாபின் மகனே! இந்த நிலை கண்டு நீர்பொருந்திக் கொள்ள மாட்டீரா? அல்லாஹ் அவர்களுக்கு இந்த உலகத்தின் சுகபோகங்களையும், நமக்கு மறுமையின் அழியா இன்பங்களையுமல்லவா தருவதாக வாக்களித்திருக்கின்றான்.

ஆகவே, நான் மறுமையின் சுகபோகத்தையும் இன்பத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளேன்என்று கூறினார்கள்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள்ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நான் பொருந்திக்கொள்கின்றேன்என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் வடித்த கண்ணீர் அது அல்லாஹ்வின் தூதர் மேல் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாகும்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வடித்த கண்ணீரோ, “தாம் உயிரோடு வாழ்கிற போதே தாம் எத்தகைய வாழ்வைத் தேர்ந்தெடுத்தோமோ அந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்கிற ஒரு மனிதரை அல்லாஹ் நம் கண் முன்னால் நடமாட விட்டிருக்கின்றானே! எனும் நன்றிப் பெருக்கில் வெளியான ஆனந்தக் கண்ணீராகும்என அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்.

( நூல்: தஃப்ஸீர் அல் குஷைரீ, தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:9, பக்கம்:483 )

முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் விரும்பியவாறு வாழ்வதற்கு வசதிகள் இருந்தும் அவர்கள் இப்படியான ஓர் வாழ்வை தேர்ந்தெடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் மதீனாவிற்கான முதல் அழைப்பாளராக, நபி வாழ்கிற காலத்திலேயே நபி அல்லாத ஒருவர் அழைப்புப் பணி செய்யும் சிறப்பு வாய்ந்த முதல் நபராக தேர்ந்தெடுத்தார்கள்.

2.   முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களின் பணிவிடை.

மதீனாவில் இஸ்லாம் அடியெடுத்து வைத்திருந்த ஆரம்ப கால தருணம் அது. ஒரு சில இளைஞர்கள் ஒன்று கூடி மதீனாவை சிலை வணக்கமில்லா தூய பூமியாக ஆக்க வேண்டும் என தீர்மானமெடுத்தார்கள்.

தங்களின் தலைவராக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.

ஒரு நாள் இரவுப் பொழுதில் ஓரிடத்தில் ஒன்று கூடிய இந்த இளைஞர்கள் எங்கிருந்து இந்தப் பணியை ஆரம்பிப்பது என்று ஆலோசித்த போது, தங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த பனூ ஸலமா கோத்திரத்தைச் சார்ந்த முஆத் இப்னு அம்ர் (ரலி), முஅவ்வித் இப்னு அம்ர் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அம்ர் (ரலி) இம்மூவரின் தந்தையான அம்ர் இப்னுல் ஜமூஹ் (ரலி) அவர்களின் வீட்டில் இருந்து துவங்குவதாக முடிவெடுத்தார்கள்.

ஏனெனில், அவர் தான் பனூ ஸலமா கோத்திரத்தார்களின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். அவர் சன்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் ஒட்டு மொத்த கோத்திரமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் என்று இளைஞர்கள் குழு கருதினர்.

அதன் தொடக்கமாக காலையில் விடிந்ததும் சத்திய மார்க்கத்தின் அழைப்பாளர் முஸ்அப் (ரலி) அவர்களிடம் அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களை அவர்களின் மூன்று ஆண் மக்களும் அழைத்துச் சென்று இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுத்தனர்.

பேசியபடி முஸ்அப் (ரலி) அவர்களின் சபையில் மகன்கள் மூவரும் தந்தை அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களை ஆஜர்படுத்தினர்.

رَوَى ثَابِتٌ البُنَانِيُّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ:
قَدِمَ مُصْعَبُ بنُ عُمَيْرٍ المَدِيْنَةَ يُعَلِّمُ النَّاسَ، فَبَعَثَ إِلَيْهِ عَمْرُو بنُ الجَمُوْحِ: مَا هَذَا الَّذِي جِئْتُمُوْنَا؟
قَالُوا: إِنْ شِئْتَ جِئْنَاكَ، فَأَسْمَعْنَاكَ القُرْآنَ.
قَالَ: نَعَمْ.
فَقَرَأَ صَدْراً مِنْ سُوْرَةِ يُوْسُفَ، فَقَالَ عَمْرٌو: لست فاعلاً حتى أستشير مناة، يعني صنمه، فأنظر ما يقول؟   
وَدَخَلَ عَلَى مناة ، فَقَالَ: يَا مناة ! تَعْلَمُ -وَاللهِ- مَا يُرِيْدُ القَوْمُ غَيْرَكَ، فَهَلْ عِنْدَكَ مِنْ نَكِيْرٍ؟

 ثم قال  :يا مناة, لا ريب أنك قد علمت بأن هذا الداعية الذي وفد علينا من مكة لا يريد أحداً بسوء سواك، وأنه إنما جاء لينهانا عن عبادتك، وقد كرهت أن أبايعه على الرغم مما سمعت من جميل قوله، حتى أستشيرك، فأشر عليَّ، فلم يردّ عليه مناة بشيء،

 فقال: لعلك قد غضبت، وأنا لم أصنع شيئاً يغضبك بعد، ولكن لا بأس فسأتركك أياماً حتى يسكت عنك الغضب.
முஸ்அப் (ரலி) அவர்கள் ஏகத்துவ அழைப்பை அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களிடம் எடுத்தியம்பினார்கள். பின்பு, அம்ர் அவர்களிடம் சூரா யூஸுஃபின் ஒரு சில வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

அதைக் கேட்டதும் அம்ர் அவர்கள்நான் இது விஷயமாக எங்கள் குல தெய்வம் (பனூ ஸலமா கோத்திரத்தார் வழிபடும் சிலை) மனாத்திடம் ஆலோசனை செய்து விட்டுத் தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்என்று கூறி அங்கிருந்து விடை பெற்றார்.

நேராக, மனாத்தின் முன் வந்து நின்ற அம்ர் அவர்கள்மக்கள் உன் அல்லாத ஒருவனை கடவுளாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நீ அறிந்திருப்பாய் என நான் கருதுகின்றேன்.

அது சம்பந்தமாக உன் அபிப்பிராயமென்ன? அது தவறென்று நீ மறுப்பேதும் கூற விரும்புகின்றாயா? உன்னை வணங்குவது தவறென்கிறார் மக்காவில் இருந்து வந்த அவர். அது சம்பந்தமாகத் தான் உன்னிடம் ஆலோசனைக் கேட்க வந்திருக்கின்றேன் என்று மனாத் சிலை முன்பு நின்று பேசினார்.

எங்கே கல் பேசியிருக்கின்றது? சில நிமிட மௌனத்திற்குப் பின் அம்ரே தொடர்ந்தார். “எனக்குத் தெரியும்! இந்த விஷயங்களால் நீ சினமுற்று இருப்பாய் என்று.. மேலும், மேலும் உன்னைச் சீண்டிப்பார்க்க எனக்கு விருப்பமில்லை. கொஞ்ச நாள் நீ நிம்மதியாக ஓய்வெடு! இன்னொரு நாள் இது குறித்து நான் கேட்டுக் கொள்கிறேன்என்றார்.

فكان معاذ بن عمرو بن الجموح بعد إسلامه ومعاذ بن جبل يدخلان ليلاً إلى الدار فيأخذان هذا الصنم ويلقيانه في مكان مخلفاتهم منكساً على رأسه, فلما يصبح عمرو يذهب فيأتي به ويغسله ويعطره, وهو يتوعد من فعل به ذلك, وكل ليلة يحدث هذا المشهد. وذات يوم وضع عمرو سيفاً في رقبة صنمه الذي يعبده وقال له:((لأني لا أعلم من يفعل بك هذا, فإن كنت تستطيع الدفاع عن نفسك فهذا السيف معك فافعل)). وبالليل جاء الفتيان فأخذا السيف من عنقه ثم أحضرا كلباً ميتاً فقرنوه به بحبل وألقوه في بئر من الآبار فيها يقضي الناس حاجتهم حيث لم يكونوا قد اتخذ الناس مكانا لقضاء الحاجة في بيوتهم. وفي الصباح قام عمرو يبحث عنه قلما وجده كذلك, علم أنه لا نفع

وقال  : واللـه لو كنت إلها لم لمثل
أنـت وكلب وسط بئر في قرن
أف لمثــواك إلهـا مسـتدن   
فالآن فتشناك عن شر الغبـن

இது தான் நல்ல சந்தர்ப்பம் எனக் கருதிய இளைஞர் குழு அன்றிரவே அங்கிருந்து மனாத்தை முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் தலைமையில் சென்று கடத்தி வந்து பனூ ஸலமாவினரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஓர் பாழடைந்த கிணற்றுப் பகுதியில் வீசியெறிந்தனர்.

காலையில் மனாத்தை காணாது அதிர்ச்சியடைந்த அம்ர் ஊர் முழுக்க தேடி அலைந்து ஒருவாராக அங்கிருந்து எடுத்து வந்து குளிப்பாட்டி, உயர் ரக அத்தர் பூசி மீண்டும் அதே இடத்தில் மனாத்தை வைத்தார்.

இரண்டாம் நாளும் முன்பு போலவே கடத்திச் சென்று இப்போது வேறு ஒரு குப்பை மேட்டில் வீசினர்.

மறு நாளும் அம்ர் தேடி எடுத்து வந்து குளிப்பாட்டி, அத்தர் பூசி அதே இடத்தில் மனாத்தை வைத்து விட்டு அருகே ஒரு வாளை நட்டு வைத்துசத்தியமிட்டுச் சொல்கிறேன்! யார் இதை செய்கிறார் என்று தெரியவில்லை. இனி உன்னை நீயே பாதுகாத்துக் கொள். உன்னைத் தூக்கிச் செல்ல யாராவது வந்தால் இந்த வாளைக் கொண்டு உன்னை தற்காத்துக் கொள்!” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

மூன்றாம் நாள் இரவும் சிலையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் மனாத்தை ஒரு செத்த நாயின் கழுத்தில் கட்டி வீட்டு, வாளை வேறொரு குழியில் போட்டு விட்டனர்.

மூன்றாம் நாளும் அதைத் தேடிச் சென்ற அவர் மனாத் கிடந்த கோலத்தைப் பார்த்து விட்டு நீ மட்டும் உண்மையான கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் குப்பை மேட்டில் வந்து கிடக்கமாட்டாய்என்று சொல்லி விட்டு அங்கிருந்து சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்ற உணர்வோடு திரும்பினார்கள். ( நூல்:ஸியரு அஃலாமின் நுபலா, உஸ்துல் காபா, அல் இஸ்தீஆப் )

3.   ஷைத்தானின் சூழ்ச்சிக்கெதிராக போராட வேண்டும்..


في حديث رواه إسحاق بن بشر في كتابه  المبتدأ
 حيث قال : أنبأنا يعقوب الكوفي ، عن عمرو بن ميمون ، عن أبيه ، عن ابن عباس ، أن رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به رأى زكريا في السماء ، فسلم عليه وقال له : يا أبا يحيى ،
 خبرني عن قتلك ; كيف كان ؟ ولم قتلك بنو
 ص: 412  إسرائيل ؟ قال : يا محمد ، أخبرك أن يحيى كان خير أهل زمانه ، وكان أجملهم ، وأصبحهم وجها
، وكان كما قال الله تعالى
سيدا وحصورا وكان لا يحتاج إلى النساء ، فهويته امرأة ملك بني إسرائيل ، وكانت بغية ، فأرسلت إليه ، وعصمه الله ، وامتنع يحيى وأبى عليها ، وأجمعت على قتل يحيى ، ولهم عيد يجتمعون في كل عام ، وكانت سنة الملك أن يوعد ولا يخلف ولا يكذب . قال : فخرج الملك إلى العيد فقامت امرأته فشيعته ، وكان بها معجبا ، ولم تكن تفعله فيما مضى ، فلما أن شيعته قال الملك : سليني ، فما سألتني شيئا إلا أعطيتك . قالت : أريد دم يحيى بن زكريا . قال لها : سليني غيره . قالت : هو ذاك . قال : هو لك . قال : فبعثت جلاوزتها إلى يحيى ، وهو في محرابه يصلي ، وأنا إلى جانبه أصلي . قال : فذبح في طست وحمل رأسه ودمه إليها . قال : فقال رسول الله صلى الله عليه وسلم : فما بلغ من صبرك ؟ قال : ما انفتلت من صلاتي . قال : فلما حمل رأسه إليها ، فوضع بين يديها ، فلما أمسوا خسف الله بالملك وأهل بيته وحشمه ، فلما أصبحوا قالت بنو إسرائيل : قد غضب إله زكريا لزكريا ، فتعالوا حتى نغضب لملكنا ، فنقتل زكريا . قال : فخرجوا في طلبي ليقتلوني ، وجاءني النذير فهربت منهم ، وإبليس أمامهم يدلهم علي ، فلما تخوفت أن لا أعجزهم ، عرضت لي شجرة فنادتني وقالت : إلي إلي . وانصدعت لي فدخلت فيها . قال : وجاء إبليس حتى أخذ بطرف ردائي ، والتأمت الشجرة ، وبقي طرف ردائي  خارجا من الشجرة ، وجاءت بنو إسرائيل فقال إبليس : أما رأيتموه دخل هذه الشجرة ؟ هذا طرف ردائه ، دخلها بسحره . فقالوا : نحرق هذه الشجرة . فقال إبليس : شقوه بالمنشار شقا . قال : فشققت مع الشجرة بالمنشار . قال له النبي صلى الله عليه وسلم : هل وجدت له مسا أو وجعا ؟
 قال : لا ، إنما وجدت ذلك الشجرة جعل الله روحي فيها
 هذا سياق غريب ، وحديث عجيب

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மிஃராஜ் சென்றிருந்த போது ஜகரிய்யா (அலை) அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

உரையாடலின் இடையே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நீங்கள் எவ்வாறு எதற்காக கொலை செய்யப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள்எனது மகன் யஹ்யா (அலை) அவர்கள் ஸாலிஹான, அழகுமிக்க, நல்லொழுக்கமுள்ள, தெளிவான சிந்தனையும், பெண்களின் மீதான மோகமும் இல்லாத சிறந்த இளைஞராக இருந்தார்.

இஸ்ரவேலர்களைச் சார்ந்த ஓர் அரசனின் மனைவி ஒருத்தி என் மகன் யஹ்யாவின் மீது மோகம் கொண்டு, அவருடன் தவறான உறவு கொள்ள விரும்பி, தன்னுடைய பணிப்பெண் ஒருவரை தூதனுப்பினாள். பல முறை அவள் தூதனுப்பினாள்.

ஆனால், என் மகன் யஹ்யா மறுத்து விட்டார். அல்லாஹ் என் மகனை அத்தீய செயலிலிருந்து காப்பாற்றினான்.

இதனால் என் மகன் மீது சினங்கொண்ட அவள் என் மகன் யஹ்யாவை கொலை செய்ய திட்டமிட்டாள்.

இவ்வாறிருக்க ஆண்டு தோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் அவர்களின் பண்டிகை நாளும் வந்தது. ஒவ்வொரு ஆண்டும் அரசன் தன் மனைவிக்கு அவள் விரும்புகிற பரிசில்களை வழங்குவான்.

இந்நிலையில், எல்லா நாட்களையும் விட அன்று மிகவும் அழகாக தன் மனைவி இருப்பதைக் கண்டு இவ்வாண்டு உனக்கு மிக உயர்ந்த ஓர் பரிசை, அதுவும் நீ எதை விரும்பினாலும் உனக்கு தர வேண்டுமென விரும்புகின்றேன்என்றான் அரசன்.

அதற்கவள், ”யஹ்யா (அலை) அவர்களின் தலை தான் வேண்டும்என்று கூறினாள். இது அல்லாத வேறெதைக் கேட்டாளும் தருகின்றேன்என்றான் அரசன். ஆனால், அவளோ எனக்கு யஹ்யாவின் தலை தான் வேண்டும்என்றாள்.

மனைவியின் அழகில் அடிமைப் பட்டுக்கிடந்த அரசன் யஹ்யா (அலை) அவர்களின் தலையைக் கொய்து வருமாறு தன் சேவகர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.

அரசனின் சேவகர்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கி வந்தார்கள். நானும், யஹ்யாவும் மிஹ்ராபின் அருகே சற்று இடைவெளி விட்டு நின்று தொழுது கொண்டிருந்தோம்.

அரசனின் சேவகர்கள் யஹ்யாவின் தலையை வெட்டி அவரது தலையையும், இரத்தத்தையும் ஒரு தட்டில் ஏந்தியவர்களாக அரசனின் மனைவியிடம் கொண்டு சென்றார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள் நான் என் ரப்போடு உரையாடிக் கொண்டிருந்தேன். தொழுது கொண்டிருந்தேன். நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. தொழுது முடித்த பின்னர் தான் இந்த விவரமெல்லாம் எனக்குத் தெரிந்ததுஎன்று பதில் கூறிவிட்டு

யஹ்யா (அலை) அவர்கள் கொலை செய்யப்பட்ட அன்று மாலை நேரத்தில் அரசனும், அவன் மனைவியும், குடும்பத்தார்களும், அவனின் சேவகர்களும் அரண்மனையோடு அல்லாஹ்வின் கோபத்தால் இருந்த இடத்திலேயே பூமிக்குள் இழுக்கப்பட்டார்கள்.

இதை அறிந்து கொண்ட இஸ்ரவேலர்கள்ஜகரிய்யாவின் இறைவன் ஜகரிய்யாவிற்காக கோபப்பட்டான். இஸ்ரவேலர்களே! ஒன்று படுங்கள்! நாம் நம் அரசருக்காக கோபப்படுவோம். நாமும் ஜகரிய்யாவை ஒன்று திரண்டு கொல்வோம்என சபதமிட்டுப் பழிவாங்க திட்டமிட்டார்கள்.

இச்செய்தி எனக்கு எட்டியதும் நான் அவர்கள் கண்ணில் படாதிருக்க காட்டு வழியே ஓடினேன். ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். அப்போது, எனக்கு முன்பாக இருந்த ஓர் மரம் அல்லாஹ்வின் நபியே! என்னுள் ஒளிந்து கொள்ளுங்கள்! உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்என்றது.

நான் அதனுள் சென்று ஒளிந்து கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு இப்லீஸ் வழிகாட்டிக் கொண்டு வந்தான். ஆனால், மிக விரைவாக என்னைப் பின் தொடர்ந்த அவன் மரத்தின் உள்ளே நான் ஒளியும் போது எனது ஆடையின் சிறிய ஒரு பகுதியைப் பிடித்து இழுத்துக் கொண்டான். பிளந்த மரம் மூடிய போது என் ஆடையின் சிறிய பகுதி வெளியே தெரிந்தது.

இஸ்ரவேலர்கள் மரத்தை நெருங்கியதும் இப்லீஸ் அடையாளம் காட்டிக் கொடுத்தான். கடும் கோபத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் என்னை மரத்தோடு வைத்து தீயிட்டுக் கொளுத்திட முனைந்தார்கள்.

ஆனால், இப்லீஸோ ரம்பத்தால் இரு கூறாக என் உடல் பிளக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினான். அதன் பின்னர் ரம்பத்தால் மரத்தையும், என்னையும் இரண்டாகப் பிளந்தார்கள்என்று கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்அறுக்கப்பட்ட போது உங்களுக்கு அதன் வேதனை தெரியவில்லையா?” என்று வினவியதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ் தான் எனது உயிர் இவ்வாறு பிரிய வேண்டும் என நாடியுள்ளான்; அவ்வாறிருக்கையில், எனக்கு எப்படி அது வேதனையாக தெரியும். இல்லை, எனக்கு அப்படியொரு உணர்வு அப்போது ஏற்படவில்லைஎன்று பதில் கூறினார்கள்.

            ( நூல்: அல்பிதாயா வன் நிஹாயா லி இமாமி இப்னு கஸீர் (ரஹ்)….. )

3. குடும்பத்தின் மீது பொறுப்புணர்வும், சமூகத்தின் மீது அக்கறையும் இருக்க வேண்டும்..


عن جابر بن عبد الله قال: خرجت مع رسول الله صلى الله عليه وسلم إلى غزوة ذات الرقاع من نخل على جمل لي حفيف فلما قفل رسول الله صلى الله عليه وسلم قال: جعلت الرفاق تمضي وجعلت أتخلف حتى أدركني رسول الله صلى الله عليه وسلم فقال: ما لك يا جابر؟ قال: قلت: يا رسول الله أبطأ بي جملي هذا قال: أنخه قال: فأنخته وأناخ رسول الله صلى الله عليه وسلم ثم قال: أعطني هذه العصا من يدك أو اقطع لي عصا من شجرة قال: ففعلت قال: فأخذها رسول الله صلى الله عليه وسلم فنخسه بها نخسات ثم قال: اركب فركبت فخرج والذي بعثه بالحق يواهق ناقته مواهقة.
قال: وتحدثت مع رسول الله صلى الله عليه وسلم فقال لي: أتبيعني جملك هذا يا جابر؟ قال: قلت: يا رسول بل أهبه لك قال: لا ولكن بعنيه قال: قلت: فسمنيه يا رسول الله قال: قد أخذته بدرهم قال: قلت: لا إذن تغبنني يا رسول الله! قال: فبدرهمين قال: قلت: لا قال: فلم يزل يرفع لي رسول الله صلى الله عليه وسلم في ثمنه حتى بلغ الأوقية قال: فقلت: أفقد رضيت يا رسول الله؟ قال: نعم قلت: فهو لك قال: قد أخذته قال: ثم قال يا جابر هل تزوجت بعد؟ قال: قلت: نعم يا رسول الله قال: أثيباً أم بكراً؟ قال: قلت: لا بل ثيباً قال: أفلا جارية تلاعبها وتلاعبك! قال: قلت: يا رسول الله إن أبي أصيب يوم أحد وترك بنات له سبعاً فنكحت امرأة جامعة تجمع رءوسهن وتقوم عليهن

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், ஜாபிர் (ரலி) அவர்களும் உரையாடிய நெகிழ்ச்சியான சம்பவம்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களின் தனிப்பெரும் நேசத்திற்குரிய இளம் நபித்தோழர்களில் ஒருவர்.

தாதுர் ரிகாஃ ஹிஜ்ரி நான்கில் பனூ ஃகத்ஃபான் கிளையாரை எதிர்த்துப் போரிட மாநபி {ஸல்} அவர்களின் தலைமையில் நபித்தோழர்கள் சென்றனர்.                                                                                                                                                                 
பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. முஸ்லிம்கள் வெற்றியோடு திரும்பினார்கள். போர் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர்.
                                                                                                                                               
இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் ஜாபிர் {ரலி} அவர்களும் எஞ்சியிருந்தனர்.                                                                                                     

மெதுவாகப் பேச்சை துவக்கினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள் என்ன ஜாபிர்? ஏன் இவ்வளவு தாமதம்?” அதுவா? அல்லாஹ்வின் தூதரே!? கிழட்டு ஒட்டகம் ஆதலால் தான் தாமதம் என்றார்கள் ஜாபிர் {ரலி}.                                                                                                                                  
கீழிறங்கி என்னிடம் தாருங்கள் என்று ஜாபிரிடம் கூறிவிட்டு, அதை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒட்டகத்தின் மீதேறி, பிஸ்மில்லாஹ் கூறி தடவிக்கொடுத்தார்கள்.                                                  

ஒட்டகம் வேகமாகச் செல்ல ஆரம்பிக்கின்றது. அதன் பின்னர் அல்லாஹ்வின் ரஸூல் ஜாபிர் அவர்களிடம் ஒட்டகத்தைக் கொடுத்தார்கள்.                                                                                                                                                          
அதன் மீதேறி அமர்ந்த ஜாபிர் {ரலி} ஒட்டகம் வேகமாகச் செல்வதைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.                                                           
                                                               
மீண்டும் பேச்சைத் தொடர்கின்றார்கள் நபி {ஸல்} அவர்கள் ஜாபிர் திருமணம் முடித்து விட்டீர்களா?”                                                                                                
                                                                                               
ஆம்! என்றார் ஜாபிர் {ரலி}. ”கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?”  என்று நபிகளார் கேட்டார்கள்.  அதற்கவர் விதவைப் பெண்ணை திருமணம் செய்திருக்கின்றேன்என்றார்கள்.                                                          
               
ஏன் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாமே? மண வாழ்வு மகிழ்ச்சி மிக்கதாய் அமைந்திருக்குமே? “ என்று மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                                                                                                                                                                                           
ஜாபிர் {ரலி} சொன்னார்கள் இல்லை அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு ஒன்பது சகோதரிகள். தந்தை உஹதில் ஷஹீதாகி விட்டார். கடனும் ஏராளமாய் இருக்கின்றது.                                                                          
               
இந் நிலையில் நான் என் என் சகோதரிகளின் ஒத்த வயதினில் உள்ள ஒரு கன்னிப் பெண்ணை  திருமணம் செய்தேனென்றால் அது நன்றாக இருக்காது, மேலும், என் சகோதரிகள் விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் விதவைப் பெண்னை மணம் முடித்திருகின்றேன்”. என்று கூறினார்கள்.                                                                             ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )

எவ்வளவு பொறுப்பான ஓர் பதிலை ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

أخبرنا محمد بن عمر حدثني بن أبي حبيبة عن داود بن الحصين عن عكرمة عن بن عباس قال: إن عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة، فلما قدم رسول الله كلم علي النبي، فقال: علام تترك ابنة عمنا يتيمة بين ظهري المشركين ، فلم ينهه النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي حمزة وكان النبي آخى بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي. فلما سمع بذلك جعفر بن أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها عندي أسماء بنت عميس. فقال علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من بين أظهر المشركين وليس لكم إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله: " أنا أحكم بينكم، أما أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي وصاحبي، وأما أنت يا جعفر فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها ولا تنكح المرأة على خالتها ولا على عمتها"، فقضى بها لجعفر.

ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களும், ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும் மக்காவில் வாழ்ந்து வந்தார்கள்.

அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரேயொரு மகள் இப்போது அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள். நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள்.

அமாராவை யார் பொறுப்பேற்பது? என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான் எடுப்பேன் என சண்டையிட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த மூவரும்.

அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு அபூதாலிப் அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அமாரா என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும், எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள். ஆகவே, இரு தகுதிகள் இருப்பதால் நானே அதிகத்தகுதியுடையவன்என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார், மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம் முடித்திருக்கின்றேன். அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

மூவரின் உரிமை கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து அலீயே! நீர் என் சகோதரரும், என் சுவனத்து தோழரும் ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை அழைத்து ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!, ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து ஜஅஃபரே! நீர் என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து இருக்கின்றீர்!என்று கூறி விட்டு, அமாராவின் சின்னம்மாவை நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்! நீர் அமாராவை உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!என்று தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )

இளைஞனே! விழிப்புணர்வு பெறு! எழுந்து வா! இறைவனின் அன்பைப் பெற்றிட போராடு!!

அல்லாஹ் கேட்கும் கேள்வியை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்!!

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ (115)

“நாம் உங்களை வீணாக படைத்துள்ளோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? நம்மிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களா?”.       ( அல்குர்ஆன்: 23: 115 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் சமூகத்து இளைஞர்களை வழிகேட்டிலிருந்தும், தீய பழக்க வழக்கங்களிலிருந்தும், கெட்ட குணங்களிலிருந்தும் பாதுகாப்பானாக!

தீனுக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பணிவிடை செய்கின்றவர்களாக ஆக்கியருள்புரிவானாக!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!