நாம் மாற்றப்பட வேண்டுமா?..
நம் நிலை மாற்றப்பட வேண்டுமா?..
உலகளவில் 730 கோடிக்கும்
மேற்பட்ட மக்கள் வாழ்ந்து
வருவதாக மக்கள் தொகை
கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன. 15 க்கும் மேற்பட்ட
பெரிய சமயங்கள் & மதங்கள்
உலகில் வாழும் பல்வேறுபட்ட
மக்களால் பின்பற்றப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. லட்சங்களுக்கும் மேலான மக்கள்
பின்பற்றும் 7 மதங்களும், கோடிக்கும்
மிகுதமான மக்கள் பின்பற்றும்
3 மதங்களும், 35 கோடி முதல்
105 கோடிக்கும் மேலான மக்களால்
பின்பற்றப்படும் 3 சமயங்களும், 110 கோடி
முதல் 210 கோடிக்கும் மேலான
மக்களால் பின்பற்றப்படும் 2 சமயங்களும்
இருப்பதாக புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.
இது போக
பல நூறு மரபுவழி
நம்பிக்கை கொண்ட மக்களும்,
நூற்றுக்கும் மேற்பட்ட இஸங்கள்,
கொள்கை கோட்பாடுகளை பின்பற்றும்
மக்களும், இறை நம்பிக்கையில்
நம்பிக்கையில்லாத நாத்திக
சிந்தனை கொண்ட மக்களும்
வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
எனவே, உலகில்
வாழும் மக்களால் நாள்
தோறும் ஏதாவது பண்டிகைகள்,
கொண்டாட்டங்கள், சிறப்பு தினங்கள்,
விசேஷ நாட்கள் என
கொண்டாடப்படுகின்றன.
அந்த வகையில்
உலகில் பெரும்பாலான மக்களால்
புதுவருட பிறப்பு, ஜனவரி
1 –ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
சமீபகாலங்களாக இந்த
புத்தாண்டு கொண்டாட்டத்தில் உலகில்
வாழும் பெருவாரியான முஸ்லிம்களும்
பங்கேற்று வருவது, வாழ்த்துக்களை
பகிர்ந்து கொள்வது, கேளிக்கைகளில்
ஈடுபடுவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது அதிகரித்து வருவதை
நாம் அறிகின்றோம்.
பொதுச்சமூகத்தோடு இணங்கி
வாழ்வதும், கலந்து வாழ்வதும்
தவிர்க்க முடியாது எனும்
போது அவர்களின் கொண்டாட்டங்களில் பங்கேற்று நல்லிணக்கத்தை
வெளிப்படுத்துகின்றோம் என
சிலரும், வாயளவில், எழுத்தளவில்
வாழ்த்துச் சொல்வதும் பாவமல்லாத
கேளிக்கைகளில் ஈடுபடுவதும் தவறேதும்
இல்லையே என சிலரும்
வியாக்கியானம் சொல்லி வருவதை,
அவர்கள் செய்யும் செயலுக்கு
நியாயம் கற்பிப்பதையும் நாம்
பார்த்து வருகின்றோம்.
இஸ்லாம் இந்த
உலகில் அதிக மக்களால்
பின்பற்றப்படும் இரண்டாவது
பெரிய மார்க்கம் ஆகும்.
அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட,
முழுமைபடுத்தப்பட்ட மார்க்கமும்
ஆகும். இது குறித்தான
மார்க்கத்தின் வழிகாட்டலை நாம்
அறிந்து கொள்வதும் செயல்படுத்துவதும் நம் மீது
தார்மீக கடமையும் ஆகும்.
لِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوهُ
“ஒவ்வொரு
சமுதாயத்தவருக்கும் ஒரு
வழிபாட்டு முறையை நாம்
ஏற்படுத்தி இருந்தோம். அதனை
அவர்கள் செய்கின்றவர்களாக இருக்கின்றனர்”.
( அல்குர்ஆன்:
22: 67 )
لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا
“உங்களில் ஒவ்வொரு
சமூகத்தாருக்கும் ஒவ்வொரு
வாழும் வழிமுறையையும், வழிபாட்டு
முறையையும் நாம் ஏற்படுத்தி
இருக்கின்றோம். ( அல் குர்ஆன்:
5: 48 )
كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
“ஒவ்வொரு சமூகத்தினரும்
தங்களிடமிருப்பதைக் கொண்டு
மகிழ்ச்சி கொள்கின்றனர்”. ( அல்குர்ஆன்:
23: 53 )
وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ
لِيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ إِلَى اللَّهِ
مَرْجِعُكُمْ جَمِيعًا
“அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும்
ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான்.
எனினும் அவன் உங்களுக்கு
அருளியவற்றில் எவ்வாறு நீங்கள்
நடந்து கொள்கின்றீர்கள் என்று
சோதித்திடவே இவ்வாறு செய்துள்ளான்.
ஆகவே, நன்மைகளின் பால்
நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் பக்கமே நீங்கள்
திரும்பிச் செல்ல வேண்டி
இருக்கின்றது”. ( அல்குர்ஆன்:
5: 48 )
أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي
السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
”அல்லாஹ்வின் மார்க்கம்
அல்லாததையா அவர்கள் தேடுகின்றார்கள்?
வானங்களிலும், பூமியிலும் உள்ள
அனைத்துப்படைப்பினங்களும் விரும்பியும்,
நிர்பந்தத்தின் பெயரிலும் அவனுக்கே
பணிந்து நடக்கின்றன. மேலும்,
அவர்கள் அவனிடமே மீட்கப்படுவார்கள்”.
( அல்குர்ஆன்:
3: 83 )
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ
وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
“அன்றியும் இஸ்லாம்
அல்லாத வேறு மார்க்கத்தை
எவரேனும் தேடினால் அவரிடம்
இருந்து அவர் தேடியது
ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும், அவர் மறுமையில்
நஷ்டவாளிகளில் இருப்பார்”. ( அல்குர்ஆன்:
3: 85 )
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
“உங்களுக்கு உங்களது
மார்க்கம்; எனக்கு என்னுடைய
மார்க்கம்” என்று நபியே!
நீர் அம்மக்களை அழைத்துக்
கூறுவீராக!”
( அல்குர்ஆன்:
109: 6 )
உலகில் வாழும் ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர்களின் வழியே வாழ்வார்கள். இறை மார்க்கமான இஸ்லாத்தில் இருக்கும் நீங்கள் இஸ்லாமியராகவே வாழ வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டை ஆரம்பமாக நாம் நம் உள்ளத்தில் அழுத்தமாக பதிய வைப்போம்.
புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது துவங்கியது?..
புத்தாண்டு
கொண்டாட்டம் என்பது உலகில் எப்படி அறிமுகமானது. எதை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்டது என்பதை சற்று யோசித்துப் பார்க்கலாம். பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
பாபிலோன் நாட்டில்
கி.மு 2000 வது ஆண்டில் வசந்த
காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
இலையுதிர்காலம் முடிந்து பூமியில் புதிய இலைகள் பசுமையை மலரச்செய்யும் வசந்தத்தை
வரவேற்கும் விதமாக பாபிலோனிய மக்கள் புத்தாண்டு கொண்டாடினர். 11 நாட்கள் அவர்களின் கொண்டாட்டம் களை கட்டும்.
சூரியனின்
நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்களின் காலண்டரில் ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. அந்த
காலண்டரில் 7 வது மாதமாக செப்டம்பரும், 8 வது மாதமாக அக்டோபரும், 9 வது மாதமாக நவம்பரும், 10 வது மாதமாக டிசம்பரும்
இருந்தது. அதில் மார்ச் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது.அந்த
அடிப்படையில் மார்ச் 1 ம் தேதியை புத்தாண்டு
தினமாக கொண்டாடத் தொடங்கினர்.
ஏசு கிருஸ்து
பிறந்த தினம் என்று சொல்லப்படும் “டிசம்பர்-25”க்கு பிறகு தான் கி.பி. துவங்குகின்றது. அன்றைய தினத்தை புத்தாண்டு என
யூதர்கள் ஆரம்பத்தில் கொண்டாடி வந்தார்கள். பிரான்சின் ஒரு சில பகுதிகள் மற்றும்
ஐரோப்பிய நாடுகளில் “மார்ச்-25 முதல் ஏப்ரல்-1" வரை” உள்ள தினத்தினை புத்தாண்டு தினமாக கொண்டாடியுள்ளனர். கடைசி நாளான “ஏப்ரல்-1”ல் புத்தாண்டு பிறப்பதாகவும் ஒரு வாரத்திற்கு முன்பே புத்தாண்டினை வரவேற்க
மக்கள் தயாராக இருக்க விடுமுறை விடப்பட்ட வரலாறும் உண்டு.
பிரான்சின் (Edit of Roussillion) ரோசோலியன் என்பவர் தான் இந்த புத்தாண்டு குழப்பத்திற்கு
தீர்வு கண்டவர். மக்கள் அனைவரும் புத்தாண்டினை பொதுவாக ஒரே தினத்தில் தான் கொண்டாட
வேண்டும் என , “ஆகஸ்ட் 9, 1564”ல் ஒரு முடிவினை தெரிவிக்கின்றார்.
அந்த முடிவு தான் புது ஆங்கில புத்தாண்டு தினமாக இன்று வரை பெரும்பாலான மக்களால்
கொண்டாடப்படும் “ஜனவரி 1”.
அதன் பிறகு
யூதர்கள் “டிசம்பர்-25”னை கிருஸ்து பிறந்த தினமாகவும் “ஜனவரி 1”னை கிருஸ்துவுக்கு பெயரிடப்பட்ட தினமாகவும் கொண்டாடி ஆறுதல்
அடைகின்றனர்.உலகில் குறிப்பாக கிறிஸ்தவர்கள் புத்தாண்டிற்கு அதிக முக்கியத்துவத்தை
தருவார்கள்.
கிருஸ்துமஸ், புனித வெள்ளி, ஈஸ்டர் என வரிசையாக விழாக்கள் வருவதை ஒட்டி கிருஸ்துவர்கள் புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ( நன்றி: http://shafiwahidhi.blogspot.com/ )
புத்தாண்டும்.. இஸ்லாமும்..
ஈஸா (அலை) அவர்கள்
எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது
பெயர் வைக்கப்பட்டது என்றோ, எப்போது (ஃகத்னா) விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ
அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் என்பது கிறித்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டுள்ளதால் அதை நாம் கொண்டாடுவதும், வாழ்த்துச் சொல்வதும் கூடாது.
தவிர்ந்து கொள்ளவதும் கடமையாகும்.
இன்று பிற
கலாச்சாரங்களை பாராட்டுவதும், பின்பற்றுவதும், ஆதரிப்பதும் முஸ்லிம் சமூகத்தில்
அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் சவூதி அரசு மிகப்பெரிய இன்னிசை நிகழ்ச்சி
நடத்தியதும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு
ஆடிப்பாடியதும் நாம் அறிந்ததே. மேலும், மாநபி {ஸல்} அவர்களின் புனித ரவ்ளா
அமைந்திருக்கும் மதீனாவில் சினிமா தியேட்டர் கட்டப்படும் எனும் சவூதியின்
அறிவிப்பும் அதிர்ச்சியைத் தருகின்றது.
மேலும், இன்றைய நமது அன்றாட செயல்கள் பலதில் பண்பாடுகள் பலதில் பிற சமய, சமூகத்தவர்களின் கலாசாரங்கள் புகுந்து விட்டதையும் மறுக்க முடியாது. சிறார்கள், இளைஞர்கள் தலைமுடியில் இஸ்லாம் இல்லை, பெண்கள் அணியும் புர்காவில் இஸ்லாம் இல்லை, நமது திருமண வைபவங்களில் இஸ்லாம் இல்லை, நமது வீடு, வாகனம், கொடுக்கல், வாங்கல், பேச்சு, எழுத்து என அனைத்திலும் ஏனைய சமூக, சமய மக்களின் கலாச்சாரங்களையும் பின்பற்றக் கூடியவர்களாக நாம் மாறிப்போயிருக்கின்றோம்.
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ
عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه
أبو داود
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“ஒரு
சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார் என்று நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: ((لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ
الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا
رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ
அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார். நபி {ஸல்} அவர்கள், “என் சமுதாயத்தார்
தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது“ என்று கூறினார்கள். உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச்
சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு
நபி {ஸல்} அவர்கள்,
“அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (
நூல்: புகாரி )
எனவே, பெருமானார்
{ஸல்} அவர்களின் இந்த எச்சரிக்கையை நாம் கவனத்தில் இருத்த வேண்டும்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அல்குர்ஆனின் மூன்று இடங்களில் கடுமையான எச்சரிக்கையை விடுக்கின்றான்.
மூன்றும் நேரடியாக இந்த முஸ்லிம் உம்மத்தைப் பார்த்து தான் எனும் போது மிகவும்
எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டியது நம் மீது கடமையாகும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ ؕ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
முஃமின்களே! உங்களில்
எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும்
நேசிப்பார்கள்;
அவர்கள்
முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக
இருப்பார்கள்;
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக்
கொடுக்கின்றான்;
அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக
இருக்கின்றான்.
( அல்குர்ஆன்:
5: 54 )
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا مَا لَـكُمْ اِذَا قِيْلَ لَـكُمُ انْفِرُوْا فِىْ سَبِيْلِ
اللّٰهِ اثَّاقَلْـتُمْ اِلَى الْاَرْضِ ؕ اَرَضِيْتُمْ بِالْحَيٰوةِ الدُّنْيَا
مِنَ الْاٰخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا
قَلِيْلٌ
ஈமான்
கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று
உங்களுக்குக் கூறப்பட்டால்,
நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு
என்ன நேர்ந்து விட்டது?
மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து
விட்டீர்களா?
மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின்
இன்பம் மிகவும் அற்பமானது.
اِلَّا تَـنْفِرُوْا يُعَذِّبْكُمْ عَذَابًا اَلِيْمًا
ۙ وَّيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَيْـٴًــــا
ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 9: 38, 39 )
هَا أَنتُمْ
هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ
وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ
وَأَنتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ
ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم
அறிந்துகொள்க!
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே
கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள
தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள்
புறக்கணிப்பீர்களாயின்,
உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு
வருவான் பின்னர்,
உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். ( அல்குர்ஆன்:
47: 38 )
மார்க்கத்தை விட்டும் வெளியேறியவர்களைக் குறித்தும்,
மார்க்கப்போரில் பங்கேற்காதவர்கள் குறித்தும், மார்க்கக் காரியங்களுக்காக செலவு செய்யாதவர்கள்
குறித்தும் பேசுகிற போது “உங்களை மாற்றிவிட்டு, உங்களுக்குப் பகரமாக உங்களை விட சிறந்தவர்களை”
இந்த உலகில் கொண்டு வருவேன் என்று அல்லாஹ் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நமக்களித்திருக்கிற ஷரீஆவின் படி வாழ நாம்
மறுக்கும் போது அல்லது தயங்கும் போது ( நவூது பில்லாஹ்… ) அல்லாஹ் நம்மை மாற்றத் தயங்க
மாட்டான் என்பதை ஒருபோதும் நாம் மறந்து விடக்கூடாது.
அல்லாஹ் இத்தகைய மாற்றுதலை தன்னுடைய ஒரு நடைமுறையாகவே
வைத்திருப்பதாக அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
பனூ இஸ்ரவேலர்கள் இந்த உலகில் அருள் செய்யப்பட்ட
சமுதாயத்தில் முதன்மையானவர்கள் என்று அல்லாஹ் சிறப்பித்துக் கூறுவான். வேறெந்த சமுதயத்தின்
பெயர்களை விட அந்த சமுதாயத்தின் பெயரையே அல்லாஹ் அதிகம் குறிப்பிடுகின்றான்.
يٰبَنِىْ اِسْرَاءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْ اَنْعَمْتُ
عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். ( அல்குர்ஆன்: 2: 47 )
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ
عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْـبِيَاءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا
وَّاٰتٰٮكُمْ
مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ்
உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும்
ஆக்கினான்;
உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக்
கொடுத்தான்”
என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும். (
அல்குர்ஆன்: 5: 20 )
இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியான யஅகூப் (அலை)
அவர்களின் சந்ததியினரிடம் இருந்து நபித்துவப் பயணத்தை துவக்கிய அல்லாஹ் சுமார் மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட நபிமார்களை அந்த சமூகத்திற்கு கொடையாக வழங்கினான். வேதங்களை அருளினான். பல
அரசர்களை, பேரரசுகளை ஆட்சியதிகாரத்தை வழங்கி கௌரவித்தான். பல அற்புதங்களை அனுபவிக்கச்
செய்தான். இறைவனுக்கு எதிரான கடும் போக்கும், அவர்களின் புறக்கணிப்பும் அதிகரித்த போது
ஈஸா (அலை) அவர்களைக் கொண்டு நபித்துவப் பயணத்தை நிறுத்தி இஸ்மாயீல் (அலை) அவர்களின்
சந்ததியினரான அரபுகளைத் தேர்ந்தெடுத்து இறுதித்தூதர் முஹம்மது முஸ்தஃபா {ஸல்} அவர்களையும்,
குர்ஆனையும், சிறந்த உம்மத்தாக நம்மையும் தேர்ந்தெடுத்தான்.
அப்படித் தேர்ந்தெடுத்த நம்மை நோக்கித் தான் அல்லாஹ்
மேற்கூறிய மூன்று எச்சரிக்கைகளையும் விடுக்கின்றான்.
எனவே, நம்முடைய நிலைகளை நாம் சரி செய்து கொண்டோம் என்றால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலகத்தின் நம் நிலைகளை சீராக்குவான். சரியாக்குவான். மாற்றித் தருவான்
لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ
يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ
حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ
سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ
மனிதனுக்கு
முன்னாலும்,
பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்)
இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே
மாற்றிக் கொள்ளாத வரையில்,
அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும்
இல்லை. ( அல்குர்ஆன்: 13: 11 )
நமது
முன்னோர்களான, மேன்மக்களான நபித்தோழர்கள் வாழ்வின் நிலைகளில் அல்லாஹ் ஏற்படுத்திய
பல்வேறு மாற்றங்கள் குறித்து அல்குர்ஆனில் பேசுகின்றான். ஹுனைன் யுத்தம் குறித்து
பேசுகையில்...
لَـقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِىْ مَوَاطِنَ كَثِيْرَةٍ ۙ وَّيَوْمَ
حُنَيْنٍ ۙ اِذْ اَعْجَبَـتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ
شَيْـٴًـــا وَّضَاقَتْ عَلَيْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّـيْتُمْ
مُّدْبِرِيْنَۚ
நிச்சயமாக அல்லாஹ்
உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி
கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும்
அளிக்கவில்லை,
(மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது)
சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
ثُمَّ
اَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ
وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا ۚ وَعَذَّبَ الَّذِيْنَ كَفَرُوْا ؕ وَذٰ
لِكَ جَزَآءُ الْـكٰفِرِيْنَ
பின்னர் அல்லாஹ்
தன்னுடைய தூதர் மீதும்,
முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்)
நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
ثُمَّ
يَتُوْبُ اللّٰهُ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ عَلٰى مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ
غَفُوْرٌ رَّحِيْمٌ
அல்லாஹ் இதற்குப்
பின்னர்,
தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக்
கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க
மன்னிப்பவனாகவும்,
கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 9: 25
27 )
பெரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட
பின்னர் மகத்தான வெற்றியை வழங்கிய அஹ்ஸாப் யுத்தம் குறித்து அல்லாஹ் பேசுகையில்…
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ
عَلَيْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا
وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ۚ
முஃமின்களே!
உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம்
ஏவினோம்;
மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ்
உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
اِذْ
جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ
الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ
الظُّنُوْنَا ؕ
உங்களுக்கு
மேலிருந்தும்,
உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து)
வந்த போது,
(உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து
(நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம்
(அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூறுங்கள்.
هُنَالِكَ
ابْتُلِىَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا
அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். ( அல்குர்ஆன்: 33: 9-11 )
இஸ்லாத்தில் அன்றி வேறெந்த கலாச்சாரத்திலும் முஸ்லிம்களுக்கு
கண்ணியம் இல்லை…
ஹிஜ்ரி 15 –ஆம் ஆண்டு பைத்துல் முகத்தஸ் வெற்றி
சாத்தியம் ஆனது. முஸ்லிம்களின் வசம் பைத்துல் முகத்தஸ் நகரத்தின் திறவுகோல்
ஒப்படைக்கப்பட்டது.
அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் வெற்றியின் அடையாளமாக
அந்த புனித தலத்தின் திறவு கோலை ஆண்டாண்டு காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த, பாரம்பர்யமாய் ஆண்டு கொண்டிருந்த மன்னர்களின் கையில் இருந்து பெறுகின்றார்கள்.
இந்த வெற்றி எப்படி சாத்தியமானது? இதன் பின்னர் எவ்வளவு பெரிய அதிகாரப் பிரயோகம் நடந்திருக்கும்? என்றெல்லாம் எண்ணியவர்களாக வரலாற்றின் பக்கங்களை திறந்து பார்ப்போமேயானால் வியப்பின் விளிம்பிற்கே வந்து விடுவோம்
ஆம்! திமிஷ்க்கை வெற்றி கொண்ட கையோடு ஃபலஸ்தீனை நோக்கி, பைத்துல் முகத்தஸை நோக்கி தங்களின் படையை திருப்பினார்கள் அபூ உபைதா
அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள்.
வந்த நோக்கத்தை விளக்கி கடிதம் ஒன்றை எழுதி வீரர் ஒருவரின்
மூலமாக அனுப்பினார்கள் படைத்தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள்.
நாங்கள் போரிட விரும்பவில்லை,
அதே நேரத்தில்
உங்கள் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை எங்களோடு உங்கள்
ஆட்சித்தலைவர் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து
பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார் ஈலியா – ஃபலஸ்தீனை உள்ளடக்கிய நகரத்தை மையமாகக்
கொண்டு தலைமையிடமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அரசர்.
விவரத்தை அறிக்கையாக தயார் செய்து மதீனாவிற்கு அனுப்பி
வைத்தார்கள் தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள்.
இதோ நான் புறப்பட்டு விட்டேன் என தங்களுக்கு முன்னால் பதில்
கடிதத்தை தளபதி கையில் சேர்க்கும் வகையில் வந்த வீரரிடமே கொடுத்து அனுப்பினார்கள்
உமர் (ரலி) அவர்கள்.
2400
கிலோ மீட்டர்
தூரம் கொண்ட நீண்ட பயணம் ( தற்போதைய தொலை தூரத்தின் கணக்குப்படி ) தங்களின்
பணியாளர் ஸாலிம் (ரலி) அவர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு ஒரேயொரு ஒட்டகத்தை
வாகனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, வழித்துணைக்கு தேவையான சில சாதனங்களை
மட்டும் எடுத்துக் கொண்டு மதீனாவில் இருந்து புறப்பட்டார்கள் கலீஃபா உமர் (ரலி)
அவர்கள்.
ஸாலிம் (ரலி) அவர்களின் பலத்த மறுப்புக்கு பின்னர் முறை
வைத்து பயணம் செய்வது என்ற முடிவெடுத்து பயணம் துவங்கப்பட்டது.
சிறிது தூரம் உமர் (ரலி) ஒட்டகத்தின்
மீது பயணிப்பார்கள் ஸாலிம் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து
வருவார். பின்னர் ஸாலிம் (ரலி) ஒட்டகத்தின் மீது பயணிப்பார்கள், உமர் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து
வருவார்கள். பின்னர் இருவரும் ஓய்வெடுத்து, ஒட்டகத்துக்கும் ஓய்வு கொடுப்பார்கள்.
இப்படியே முறை வைத்து பயணம் செய்து ஃபலஸ்தீனின் எல்லையை
அடைகிற போது ஸாலிம் (ரலி) அவர்களின் முறை ஆரம்பிக்கும்.
ஊரின் எல்லையைத் தொட்டதும் அங்கே தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
ஸாலிம் (ரலி) அவர்கள் பயணிக்க மறுக்கவே, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பெயரால் பயணிக்கக் கேட்டுக் கொள்வார்கள். இப்படி முறை மாற்றி பயணிப்பது அநீதம், அல்லாஹ்வின் திருமுன் கேள்வி கேட்கப்படுவேன் எனக் கூறி ஸாலிம் (ரலி) அவர்களை ஒட்டகத்தின் மீது பயணிக்க வைத்து, ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றை பிடித்து நடந்து வருவார்கள்.
وعندما
علمت جيوش المسلمين بمقدم أمير المؤمنين، هب قائدها أبو عبيدة مع قواده الأربعة
ليستقبلوه استقبالا يليق بمقام خليفة المسلمين، حين شاهد ابو عبيدة ما ناب ساقي
أمير المؤمنين من الوحل قال له عن طيب نية، والحرص على أمير المؤمنين عمر رضي الله
عنه:" يا أمير المؤمنين لو أمرت بركوب، فإنهم ينظرون إلينا".
غضب عمر بعد مقولة أبي عبيدة هذه غضبته التاريخية
الشهيرة، وصاح بوجه هذا القائد الذي هزم الدولة
" والله لو غيرك قالها يا أبا عبيدة لجعلته عبرة لآل محمد صلى الله عليه وسلم!!! لقد كنا أذلة فأعزنا الله بالاسلام، فإذا ابتغينا عزاً بغير الاسلام أذلنا الله".
சற்று தொலைவில், உமர் (ரலி) அவர்களின் இந்த நிலையைக் கண்ட
அபூஉபைதா (ரலி) அவர்கள் அங்கே அரசர்களும், அரசப் பிரதானிகளும், உங்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர். நீங்கள் நடுவில் வாருங்கள்! நாங்கள்
இருபுறமும் அணிவகுத்து உங்களை அழைத்துச் செல்கின்றோம்!” என்றார்கள்.
முகம் சிவக்க, உமர் (ரலி) அவர்கள் “அபூஉபைதாவே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித வாயால் சுவனத்தைக்
கொண்டு சோபனம் சொல்லப்பட்ட உம்மைத்தவிர இந்த வார்த்தையை வேறு எவர்
கூறியிருந்தாலும் இந்த உம்மத்துக்கே பாடமாக அமையும் ஓர் தண்டனையைக்
கொடுத்திருப்பேன்!
அபூஉபைதாவே! நாம் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப்
பாரும்! நாம் கேவலப்பட்டவர்களாக இருந்தோம்! அல்லாஹ் நமக்கு இஸ்லாம் எனும்
இம்மார்க்கத்தின் மூலம் கண்ணியத்தைக் கொடுத்தான்.
நாம் இம்மார்க்கம் காடித்தராத வேறெந்த வழியின் மூலம் கண்ணியத்தைப் பெற முயற்சி செய்தோம் எனில் விளங்கிக் கொள்ளும்! அடுத்த கனமே அல்லாஹ் நம்மை கேவலப்படுத்தி விடுவான்!” என்று கூறினார்கள்
ஃபலஸ்தீனின் தலைநகரை அடையும் போது வழிநெடுகிலும் ஒரு புறம்
முஸ்லிம் வீரர்களும், இன்னொரு புறம் எதிரிப்படையினரின்
வீரர்களும் அணிவகுத்து நிற்கின்றார்கள்.
எதிர் பார்த்துக் காத்திருந்த அரசரும், அரசப் பிரதானிகளும் அங்கே ஸாலிம் அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து வருவதைப்
பார்த்து ஆட்சியாளர் அவர் தாம் என பார்வையை மேல் நோக்கி பார்க்கும் போது அருகில்
நின்ற அபூஉபைதா (ரலி) மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து வரும் உமர் (ரலி)
அவர்கள் தாம் ஆட்சியாளர் என்று கூறினார்கள்.
ஒட்டகம் அருகே வந்ததும், உமர் (ரலி) அவர்களை உற்று நோக்கிப்
பார்க்கின்றார்கள் முகத்தில், தலையில்,
ஆடையில்
பிரயாணக் காற்றின் புழுதிகள் நிரம்பி இருந்தது.
கந்தலான ஒரு ஆடை, ஆட்சியாளர் என்று அடையாளப்படுத்திக்
கொள்ள எந்த ஒரு அடையாளமோ உமர் (ரலி) அவர்களிடம் இல்லை.
படோடாபத்தடுடனும், ஆடம்பரத்துடனும் வாழ்ந்து பழகிய
அவர்களுக்கு உமர் (ரலி) அவர்களை ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மாசில்லாத் தலைவரை
இப்படிப் பார்ப்போம் என்று அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
இறுதியாக, உமர் (ரலி) அவர்களைப் பார்த்து ”நீங்கள் தான் அரபுலகத்தின் அரசரா? என்று கேட்க, இல்லை, இறைநம்பிக்கை கொண்ட மக்களின் ஆட்சியாளர்
என்று பதில் கூறினார்கள் உமர் (ரலி) அவர்கள்.
அப்படியானால், இதோ ஒட்டகத்தின் மீதமர்ந்து வரும் இவர்
யார்? என்று கேட்க, இவர் என் பணியாளர் என்று கூறி பயண விவரத்தைக் கூறினார்கள் உமர் (ரலி) அவர்கள்.
எந்தவொரு ஆடம்பரமும், தம்பட்டமும் இல்லாத ஓர் ஆட்சியாளரிடம்
தம் பகுதியை ஒப்படைப்பதில் மிகுந்த ஆசையும் ஆவலும் கொண்டார்கள் அந்த அரசரும், அரசப் பிரதானிகளும்.
இறுதியாக, உமர் (ரலி) அவர்களின் கரங்களின்
அம்மாநரத்தின் திறவு கோல் வழங்கப்பட்டது.
இதன் பின்னர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க சில நிகழ்வுகளும், சில கையெழுத்துகளும்
அங்கே நிகழ்ந்தன.
( நூல்: முக்ததஃபாத் மின் ஸியரத்தி உமர் இப்னுல் ஃகத்தாப் (ரலி)… )
தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதில் இருந்து நாம்
விலகிக் கொள்வோம்!!
தேவையற்ற
காரியங்களில் ஈடுபடுவதில் இருந்து நாம் விலகி வாழும் போது நம்முடைய இஸ்லாம் அழகு
பெறுகின்றது.
أن النبي صلى الله عليه وسلم قال
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا
يَعْنِيهِ
حَدِيثٌ حَسَنٌ،
رَوَاهُ التِّرْمِذِيُّ وَغَيْرُهُ عن أبي هريرة رضي الله عنه،
ஓர் அடியானின் இஸ்லாம் அவனுக்கு தேவை இல்லாத காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளும் போது அழகு பெறுகின்றது” என்பதாக மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்:திர்மிதீ )
أخرج الإمام مسلم عن أبي هريرة رضي الله عنه عن
النبي صلى الله عليه وسلم قال
« إِذَا
أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلَامَهُ فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِعَشْرِ
أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ
بِمِثْلِهَا
உங்களில் எவருடைய இஸ்லாம் அழகு பெறுமோ அப்போது அவர் செய்கிற ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை நன்மைகள் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு தீமைக்கும் அது போன்ற பாவம் மட்டுமே எழுதப்படும்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )
( للذين أحسنوا الحسنى وزيادة ) والحسنى هي الجنة والزيادة النظر إلى وجه الله تعالى
“எவர்கள் அழகிய முறையில் நன்மைகள் புரிகின்றனரோ, அவர்களுக்கு கூலி நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப்புழுதியும் இழிவும் படியமாட்டாது! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர், அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள்”. ( அல்குர்ஆன்: 10: 26 )
இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்களில் சிலர் “الحسنى என்பது சுவனத்தையும், زيادة என்பது அல்லாஹ்வை பார்ப்பதையும் குறிக்கும் என்று விளக்கம் தருகின்றார்கள்.
எனவே, பாவங்களின் பக்கம் நம்மை அழைத்துச் செல்கிற
புத்தாண்டு கொண்டாட்டங்களில் இருந்து நாம் விலகிக் கொள்வோம்!