Wednesday, 27 March 2024

சூரியன் உதயமாகும் நாளில் சிறந்த நாள்!!

 

தராவீஹ் சிந்தனை:- 18. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 8.

சூரியன் உதயமாகும் நாளில் சிறந்த நாள்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 17 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 18 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "சூரியன் உதயமாகும் நாளில் சிறந்த நாள் ஜுமுஆ உடைய நாளாகும்" என்ற நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:-

خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الجُمُعَةِ ، فِيهِ خُلِقَ آدَمُ ، وَفِيهِ أُدْخِلَ الجَنَّةَ ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا ، وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الجُمُعَةِ

சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப்பட்டார்கள். உலக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ( நூல்: திர்மிதீ )

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(9)

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ( அல்குர்ஆன் 62 : 9 )

முஸ்லிம் சமூகத்தின் நாள்...

حَدَّثَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبٌ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو الزِّنَادِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الْأَعْرَجَ ‏ ‏مَوْلَى ‏ ‏رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا ثُمَّ هَذَا يَوْمُهُمْ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ فَهَدَانَا اللَّهُ فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ ‏ ‏الْيَهُودُ ‏ ‏غَدًا ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏بَعْدَ غَدٍ ‏

இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )

ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய முக்கிய அமல்கள்...

1.   ஜும்ஆத் தினத்தில் நபிகளார் சுபஹுத் தொழுகையில் ஓதிய சூராக்கள்....

في فجر يوم الجمعة، روى مسلم في صحيحه من حديث ابن عباس: أَنَّ النبي صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ ﴿ الم * تَنْزِيلُ ﴾ [السجدة: 1، 2]، وَ﴿ هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ ﴾ [الإنسان: 1][

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:- “நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் ஸஜ்தாவையும் ஹல்அதா அலல் இன்ஸான்என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.ஸஹீஹ் புகாரி : 891.

2.   ஜும்ஆ நாளில் கஹ்ஃப்  ஓதுவது

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

إِنَّ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அபூஸயீது (ரலி) ( நூல் : ஹாகிம் )

3.   தூய்மையாகுதல்...

روى الإمام أحمد في مسنده من حديث أبي سعيد الخدري وأبي هريرة: أن النبي صلى الله عليه وسلم قال: "مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَاسْتَاكَ وَمَسَّ مِنْ طِيبٍ إِنْ كَانَ عِنْدَهُ، وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ ثُمَّ خَرَجَ حَتَّى يَأْتِيَ الْمَسْجِدَ فَلَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ حَتَّى رَكَعَ مَا شَاءَ أَنْ يَرْكَعَ، ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ الإِمَامُ فَلَمْ يَتَكَلَّمْ حَتَّى يَفْرُغَ مِنْ صَلاَتِهِ، كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي قَبْلَهَا

ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸி (ரலி), நூல்: புகாரி )

4. முன் கூட்டியே வருகை தருதல்...

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “” مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ

ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி 881 )

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَالأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “” إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ باب مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ الْمَلاَئِكَةُ، يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ “”.

ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )

5. நபி (ஸல்) அவர்களின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுதல்..

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، …… فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ…….» سنن أبي داود

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும், எனவே அதில் என் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள், உங்களது ஸலாத் எனக்கு எடுத்துக்காட்டப்படும்.” ( நூல்: அபூ தாவுத், நஸாஈ )

6. துஆ செய்தல்...

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهْوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டுஎன்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லைஎன்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி )

7. ஜும்ஆ உரையை கேட்பதன் முக்கியத்துவமும்... அவசியமும்...

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ، وَابْتَكَرَ وَغَدَا، وَدَنَا مِنَ الْإِمَامِ وَأَنْصَتَ، ثُمَّ لَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ كَأَجْرِ سَنَةٍ صِيَامِهَا وَقِيَامِهَا

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), ( நூல்: நஸயீ )

1.   இமாம் உரையாற்றும் போது பேசுதல்...

2.          عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ: "إِذَا قُلْتَ لِصَاحِبِكَ: أَنْصِتْ، يَوْمَ الْجُمُعَةِ، وَالْإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ" (مُتَّفَقٌ عَلَيْه

இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடுஎன்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி )

3.   இமாம் உரையாற்றும் போது விளையாடுதல்...

யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )

ஜும்ஆவில் பலன் பெறுபவர்களும்...நன்மைகளை பாழாக்குபவர்களும்....

يَحْضُرُ الْجُمُعَةَ ثَلَاثَةُ نَفَرٍ، رَجُلٌ حَضَرَهَا يَلْغُو وَهُوَ حَظُّهُ مِنْهَا، وَرَجُلٌ حَضَرَهَا يَدْعُو، فَهُوَ رَجُلٌ دَعَا اللَّهَ عَزَّ وَجَلَّ إِنْ شَاءَ أَعْطَاهُ، وَإِنْ شَاءَ مَنَعَهُ، وَرَجُلٌ حَضَرَهَا بِإِنْصَاتٍ وَسُكُوتٍ، وَلَمْ يَتَخَطَّ رَقَبَةَ مُسْلِمٍ، وَلَمْ يُؤْذِ أَحَدًا فَهِيَ كَفَّارَةٌ إِلَى الْجُمُعَةِ الَّتِي تَلِيهَا، وَزِيَادَةِ ثَلَاثَةِ أَيَّامٍ، وَذَلِكَ بِأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: {مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا} [الأنعام: 160]

மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப்படுவார்என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: அபூதாவூத் 939

ஜும்ஆ தொழுகையின் மூலம் ஒரு அடியார் அடையும் நன்மை...

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ

الصَّلاَةُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ

ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகள், அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும்பாவங்களாக அவை இருக்கலாகாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அபூஹுரைரா (ரலி) ( நூல் : முஸ்லிம் )

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ

مَنِ اغْتَسَلَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَصَلَّى مَا قُدِّرَ لَهُ ثُمَّ أَنْصَتَ حَتَّى يَفْرُغَ مِنْ خُطْبَتِهِ ثُمَّ يُصَلِّىَ مَعَهُ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى وَفَضْلَ ثَلاَثَةِ أَيَّام

ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவுனமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றனஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அபூஹுரைரா (ரலி) ( நூல் : முஸ்லிம் ) 

முதல் ஜும்ஆ தொழுகை...

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ تَرَحَّمْتَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لِأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضَمَاتِ قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ رواه أبو داود

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் வயது முதிர்ந்து கண் பார்வை அற்றவராக இருந்த போது அவருடைய மகன் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தையான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லக் கூடியவாரக இருந்தார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். நான்அவர்களிடம், "நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச்செவியுறும் போது அஸ்அத் பின்

ஸுராராவுக்காகப் பிரார்த்தனைசெய்கின்றீர்களே? என்று கேட்டேன். அதற்குஅவர்கள், "ஹஸ்முன் நபீத்" என்ற இடத்தில் எங்களைஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர் தான்.அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் களமாத் என்று அழைக்கப்படக்கூடிய தண்ணீர் நிறைந்த பகுதியாகும்'' என்று பதில் கூறினார்கள்.

"அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்'' என்றுகேட்டேன். அதற்கு "நாற்பது பேர்'' என்று பதில் சொன்னார்கள். ( நூல் : அபூதாவுத் (903) )

அஸ்அத் இப்னு ஸர்ராரா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு..

قال أبو العباس الدغولي : قيل : إنه لقي النبي - صلى الله عليه وسلم - بمكة قبل العقبة الأولى بسنة مع خمسة نفر من الخزرج ، فآمنوا به ، فلما قدموا المدينة تكلموا بالإسلام في قومهم ، فلما كان العام المقبل ، خرج منهم اثنا عشر رجلا ، فهي العقبة الأولى ، فانصرفوا معهم ، وبعث النبي - صلى الله عليه وسلم - ، مصعب بن عمير يقرأهم ويفقههم .

 

நபி (ஸல்) அவர்களுடைய ஐம்பதாவது வயதில் மதீனாவில் இருந்து ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு ஹஜ் செய்வதற்காக வேண்டி வருகை தந்தார்கள். அந்த ஆறு பேர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதித்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போதனையைக் ஆறு பேர்களும் கேட்ட போது அவர்களுக்கு ஒரு மன மாற்றம் ஏற்பட்டு இவர் கூறுவது சரியாகத் தோன்றுவதாக அவர்களுக்குள் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் அந்த நேரம்; இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நபி (ஸல்) அவர்களை சந்தித்து விட்டு மதீனாவிற்குச் சென்ற இவர்கள் அடுத்த ஆண்டு வரும் போது இந்த ஆறு பேர்களுடன் சேர்ந்து பனிரெண்டு பேர்கள் மதீனாவில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வேண்டி நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மக்காவிற்கு வருகிறார்கள்.

இந்த பனிரெண்டு பேர்களும் நபி (ஸல்) அவர்களை தனித் தனியாக சந்தித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும் ஏற்றுக் கொண்டதோடு இஸ்லாத்தை வாழ்க்கை நெரியாகவும் ஏற்றுக் கொண்டு உயிருள்ள வரை இஸ்லாத்தை உயிருள்ள வரை பின்பற்றுவதாகவும்  இன்னும் பல உடன் படிக்கைகளையும் எடுத்துக் கொண்டு நாங்கள் எங்கள் ஊராகிய மதீனாவிற்குச் சென்று அங்கு இந்த சத்தியப் பிரச்சாரத்தை செய்வதாகவும் நபி (ஸல்) அவர்களுக்கு உறுதி மொழி கொடுத்தார்கள். இவர்கள் ஹஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் பின் ஸுர்ராரா (ரலி) அவர்களின் தலைமையில் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள்.

இஸ்லாத்தை எற்றபின் நீங்கள் உங்கள் ஊருக்குச்சென்று ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் ஏனென்றால் மக்காவில் ஜும்ஆ நடத்த இயலாது. அதனால் நீங்கள் மதீனாவிற்கு சென்று அங்கு ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் என்று அந்த பன்னிரெண்டு பேரில்  அஸ்அத் பின் சுராரா அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அவர் அங்கு சென்று ஜும்ஆவை நடத்தினார். இது நபி (ஸல்) அவர்களின் 52 வது வயதில் நடந்தது.

பன்னிரண்டு நபித்தோழர்கள் பெயர்கள்...

فكان أسعد مقدم النقباء الاثني عشر ، فهو نقيب بني النجار ، وأسيد بن الحضير نقيب بني عبد الأشهل ،  عبد الأشهل وأبو الهيثم بن التيهان البلوي من حلفاء بني عبد الأشهل ، وسعد بن خيثمة الأوسي أحد بني غنم بن سلم ، وسعد بن الربيع الخزرجي الحارثي قتل يوم أحد ، وعبد الله بن رواحة بن ثعلبة الخزرجي الحارثي قتل يوم مؤتة وعبد الله بن عمرو بن حرام أبو جابر السلمي نقيب بني سلمة ، وسعد بن عبادة بن دليم الخزرجي الساعدي رئيس ، نقيب ; والمنذر بن عمرو الساعدي النقيب قتل يوم بئر معونة ، والبراء بن معرور الخزرجي السلمي ، وعبادة بن الصامت الخزرجي من القواقلة ورافع بن مالك الخزرجي الزرقي - رضي الله عنهم

 

 

ஜும்ஆ தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்திய நிகழ்வு..

حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ حُصَيْنٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ قَالَ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَتْ عِيرٌ تَحْمِلُ طَعَامًا فَالْتَفَتُوا إِلَيْهَا حَتَّى مَا بَقِيَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا رواه البخاري

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள்: நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், "அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்.'' (62:11) என்ற வசனம் இறங்கியது. ( நூல் : புகாரி 936 )

இன்றைய நம்முடைய ஜும்ஆ உடைய தினமும், ஜும்ஆ உடைய அமல்களும் எப்படி இருக்கின்றது என்பதை நம் மனசாட்சியை நோக்கி நாமே கேட்டுக் கொள்வோம்!

Tuesday, 26 March 2024

தனித்துவம் வாய்ந்த பத்ர் ஸஹாபாக்கள்!!

 

தராவீஹ் சிந்தனை: 17. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 7.

தனித்துவம் வாய்ந்த பத்ர் ஸஹாபாக்கள்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 16 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 17 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வு மகத்தான ஒரு நினைவு தினத்தை தாங்கி நிற்கிறது. ஆம்! பத்ர் வெற்றி நினைவு தினம்! "காலத்தால் சிறந்தவர்கள் நான் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள்" என்ற நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு "தனித்துவம் வாய்ந்த பத்ர் ஸஹாபாக்கள்" என்ற தலைப்பில் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ "". قَالَ إِبْرَاهِيمُ وَكَانُوا يَضْرِبُونَا عَلَى الشَّهَادَةِ وَالْعَهْدِ وَنَحْنُ صِغَارٌ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்". இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:- நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, “அஷ்ஹது பில்லாஹ்” (அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்) என்றோ, “அலய்ய அஹ்துல்லாஹ்” (அல்லாஹ்வுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ சொன்னால் பெரியவர்கள் எங்களை(க் கண்டித்து) அடிப்பார்கள். ( நூல்: புகாரி )

قوله: (خير الناس) دليل على أن قرنه خير الناس، فصحابته صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أفضل من الحواريين الذين هم أنصار عيسى ، وأفضل من النقباء السبعين الذين اختارهم موسى وخير من أصحاب سائر الأنبياء -عليهم الصلاة والسلام

மனிதர்களில் சிறந்தவர்கள் என்ற நபிகளாரின் இந்த வார்த்தை மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. 

 

இதன் மூலம் ஈஸா அலை அவர்களின் ஹவாரிய்யீன்கள், வேதத்தை வாங்கச் சென்ற போது தம்மோடு மூஸா அலை அழைத்துச் சென்ற 70 நுகபாக்கள், ஏனைய நபிமார்கள் அனைவரின் தோழர்களை விடவும் சிறந்தவர்கள் நபித்தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

أما فضل الصحبة ، فلا يناله أحد غير الصحابة ولا أحد يسبقهم فيه ، وأما العلم والعبادة ، فقد يكون فيمن بعد الصحابة من هو أكثر من بعضهم علما وعبادة " .

நபித்தோழர்களின் அந்தஸ்தை அவர்கள் காலத்தில் வாழ்ந்த சக நபித்தோழர்களைத் தவிர வேறு எவராலும் அடைய முடியாது. பின்னர் வந்தவர்கள் மார்க்க ஞானத்தாலும், வணக்க வழிபாடுகளாலும் உச்சத்தை எட்டியிருந்தாலும் சரியே.

حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُو جَمْرَةَ قَالَ سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ قَالَ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ قَالَ عِمْرَانُ لَا أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلَاثَةً قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ وَيَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ وَيَنْذِرُونَ وَلَا يَفُونَ وَيَظْهَرُ فِيهِمْ السِّمَنُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும். ( நூல் : புகாரி 2651 )

فيصح هذا بهذا الاعتبار، خير الناس قرني، خير أمتي قرني، خيركم قرني، هذه ثلاث روايات.

என் உம்மத்தார்களில் சிறந்தவர்கள் நான் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும், 

மனிதர்களில் சிறந்தவர்கள் நான் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும், 

 

உங்களில் சிறந்தவர்கள் நான் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும்,  இந்த மூன்று வகையான வார்த்தை அமைப்புக்களில் நபி ஸல் அவர்கள் கூறியதாக நபி மொழிக் கிரந்தங்களில் காணப்படுகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் வாழ்ந்ததாலும், வஹீ இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்ததாலும், நாள் தோறும் வானவர்கள் வந்து செல்லும் சபைகளில் அமர்ந்து இருந்ததாலும், பல்வேறு வகையான சோபனங்களைப் பெற்றவர்களைக் கண்டதாலும், பூமியிலே தாம் வாழும் காலத்திலேயே சுவனவாசிகள், ஷுஹதாக்கள் ஆகியோரின் நடமாட்டங்களை நாள் தோறும் அவதானித்ததாலும் நபித்தோழர்கள் காலத்தால் மிகவும் சிறந்தவர்கள்.

நபித்தோழர்களின் பரக்கத் இந்த உம்மத்திற்கு விசாலமாகவே கிடைக்கும் என்ற நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு!!

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيَقُولُونَ فِيكُمْ مَنْ صَاحَبَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ. ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ "".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார்மீது படை யெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?” என்று கேட்பார்கள். ஆம் (இருக்கிறார்கள்)என்று அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் அறப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார் களா?” என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், “ஆம், இருக்கிறார்கள்என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம், இருக்கின்றார்கள்என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சிறந்த காலத்தில் வாழ்ந்த அந்த நபித்தோழர்களில் தனித்துவம் வாய்ந்தவர்கள் பத்ர் ஸஹாபாக்கள்.

இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போரில் பங்கேற்ற ஒவ்வொரு நபித்தோழர்களையும் அல்லாஹ் பல்வேறு வகைகளில் அவர்கள் வாழும் போதும் அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு அவர்களின் சந்ததிகளுக்கும் சங்கையும் சிறப்பும் படுத்தினான்.

பத்ர் போரில் பங்கேற்ற நபித்தோழர்களில் சொர்க்கத்தை கொண்டு பெருமானார் (ஸல்) அவர்களின் அமுத வாயால் நேரடியாக சோபனம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்கள் அடங்குவர். ஹுதைபிய்யாவுக்குப் பின்னர் நடைபெற்ற பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்று அல்லாஹ்வின் சோபனத்தைப் பெறும் பாக்கியத்தை பெற்ற பலரும் பத்ர் ஸஹாபாக்கள். பின்னர் நடைபெற்ற போர்களில் கலந்து கொண்டு ஷஹீத் அந்தஸ்தை அடைந்தவர்களும் உண்டு. 

பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு பரந்து விரிந்த இப்பாருலகில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை கண்டு மகிழும் பாக்கியம் பெற்றவர்களும் உண்டு.

இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்களாக, கலீஃபாக்களின் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்களும் உண்டு.

இன்னும் சொல்லப்போனால் பின்னோர்களின் நெகிழ்வான நினைவுகளாக, இஸ்லாமிய எழுச்சியின் வடிவமைப்பை முதலில் கட்டமைத்தவர்கள் எனும் அடையாளத்தோடு காலம் முழுவதும் கௌரவப்படுத்தப்பட்டார்கள்.

வரலாற்றில் பல இடங்களில் "இந்த இடத்தில், இந்த நிகழ்வில், இந்த போரில், இன்ன நேரத்தில், இது நடைபெறும் போது " இன்ன பத்ர் ஸஹாபி, இன்னின்ன பத்ர் ஸஹாபிகள் இருந்தனர். பங்கேற்றனர், கலந்து கொண்டனர் என்று வாழ்க்கை முழுவதும் கொண்டாடப்பட்டனர்.

பத்ரில் கலந்து கொண்ட 313 நபித்தோழர்கள் மற்றும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின்  நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.

பத்ரில் கலந்து ஒவ்வொருவருக்கும் உத்வேகம் இருந்தது..

ولما ندب النبي - صلى الله عليه وسلم - المسلمين يوم بدر فأسرعوا ، قال خيثمة لابنه سعد : آثرني بالخروج ، وأقم مع نسائك . فأبى وقال : لو كان غير الجنة ، آثرتك به . فاقترعا ، فخرج سهم سعد فخرج ، واستشهد ببدر واستشهد أبوه خيثمة يوم أحد .

நபி (ஸல்) அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது கைஃஸமா (ரலி)  அவர்கள் தன்னுடைய மகனான ஸஅது இப்னு கைஃஸமா (ரலி) அவர்களிடம் மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்என வேண்டினார்கள்.

அதற்கு ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி)அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே!இது சாதாரணமான ஒன்றல்ல. சொர்க்கத்தை நிர்ணயம் செய்யும் விஷயமாகும். சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்கள் பெயரே வந்தது.

இவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை இறைவன் அவர்களுக்கு வழங்கினான்.

அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்களின் தந்தை உஹதிலே பங்கு கொண்டு ஷஹீத் ஆனார்கள்.

குறிப்பாக பத்ரில் கலந்து கொண்ட இரண்டு நபித்தோழர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின்  நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.

பத்ர் போரின் வெற்றியில் அல்லாஹ்வின் மகத்தான உதவி, வானவர்களின் வருகை, பத்ர் இடம் தேர்வு செய்யப்படுதல் என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றது.

அதில் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக  பெருமானார் (ஸல்) அவர்கள் கூட்டிய ஆலோசனை கூட்டமும் அதில் நான்கு நபித்தோழர்களின் வீர தீரம் நிறைந்த உரையும் குறிப்பாக முஹாஜிர்களில் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களும் ஆற்றிய உரை திருப்புமுனையாகும்.

மிக்தாத் இப்னு அம்ர் (ரழி)எழுந்து பேசினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டியவழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீதுசத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,

‘‘மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.'' (அல்குர்ஆன் 5:24)

என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு பர்குல் ஃகிமாது”*(*மக்காவிற்கு அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத் துணிவுடன் வருவோம்.'' இவ்வாறு மிக்தாத் (ரழி)கூறிமுடித்தார்.

அவரின் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு ‘‘மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்றுபொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்)அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே'' என்றார். அதற்கு நபி (ஸல்) ‘‘ஆம்!'' என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:

‘‘நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவி மடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.''

மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டி விடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை கிம்தான்' பகுதியில் உள்ள பர்க்' என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்'' என்று ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

ஸஅதின் பேச்சையும் அவரின் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு ‘‘நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போதுபார்ப்பதைப் போன்று இருக்கின்றது'' என்று கூறினார்கள்.

1. மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்...

உலகில் வாழும் நாம் தான் சுவனத்தை நேசிப்போம். சுவனத்தில் பிரவேசிக்க விரும்புவோம். சுவனத்தின் இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுவோம். சுவனத்தை தந்து விடு யாஅல்லாஹ்! என்று பிரார்த்திப்போம்! சுவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உலகில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

ஆனால், சுவர்க்கமே நேசித்த, தன்னில் பிரவேசிக்க வேண்டும் என்று விரும்பிய, தன்னில் உள்ள இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட உலகின் நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி (ஸல்) அவர்களை நேசிப்பதை கடமையாக்க்கி இருக்கின்றான். ஆனால், அந்த நபி (ஸல்) அவர்களை அழைத்து நீங்கள் நான்கு மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று தமது விருப்பத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெரிவித்தான்.

அப்படி அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.

இதை விட வேறென்ன சிறந்த பாக்கியம் இருக்கப் போகிறது ஒரு இறைநம்பிக்கையாளருக்கு?!!

روى الترمذي (3718)، وابن ماجه (140)، وأحمد (22968)، والحاكم (4649) من طريق شَرِيك، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ ) . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ سَمِّهِمْ لَنَا، قَالَ: (عَلِيٌّ مِنْهُمْ -يَقُولُ ذَلِكَ ثَلَاثًا - وَأَبُو ذَرٍّ، وَالمِقْدَادُ، وَسَلْمَانُ، أَمَرَنِي بِحُبِّهِمْ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ) .

அல்லாஹ்வின் துதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்  நான்கு நபர்களை நேசிக்குமாறு எனக்கு  கட்டளை பிறப்பித்தான்.மேலும்,  அல்லாஹ்வும் அவ்ர்களை நேப்பதாக  என்னிடம் தெரிவித்தான் அவர்கள் இவர்கள் தான்”: 1. அலீ (ரலி),  2. அபூதர் (ரலி), 3. மிக்தாத் (ரலி),  ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள். ( நூல்: அஹ்மத்: பாகம்: 5 பக்கம்: 351, திர்மிதீ )

قد جاء في معجم الطبراني الكبير مرفوعا أن الجنة تشتاق إلى أربعة علي بن أبي طالب، وعمار بن ياسر، وسلمان الفارسي، والمقداد بن الأسود رضي الله عنهم.

وفي مسند أبي يعلى: أن الجنة لتشتاق إلى ثلاثة وهم: علي, وأبوذر, والمقداد.

فأما حديث الطبراني فلم نجد من حكم عليه بضعف أو تصحيح, وأما حديث أبي يعلى فقد قال الشيخ حسين أسد: إسناده ضعيف

அல்லாஹ்வின் துதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: நான்கு நபர்களை சொர்க்கம் விரும்புகிறது. 1. அலீ (ரலி),  2. அம்மார் இப்னு யாஸிர்  (ரலி), 3. மிக்தாத் (ரலி),  ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள்.

திர்மிதீ ஷரீஃபின் ஷரஹ் நூலான துஹ்ஃபதுல் அஹ்வதீயின் இன்னொரு அறிவிப்பில் மூவரை சுவனம் விரும்புகின்றது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

1. அலீ (ரலி),  2. அபூதர்  (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஆகியோர் ஆவார்கள்.

2. ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَاقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُ ‏ ‏أُهْدِيَتْ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُلَّةُ حَرِيرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنْ لِينِهَا فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ ‏ ‏لَمَنَادِيلُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏خَيْرٌ مِنْهَا ‏ ‏أَوْ أَلْيَنُ ‏ ‏رَوَاهُ ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَالزُّهْرِيُّ ‏ ‏سَمِعَا ‏ ‏أَنَسًا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்என்று கூறினார்கள். அறி: அல்பர்ராஉ (ரலி).( நூல்: புகாரி : 3802 )

عن جابر، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அர்ஷ் அசைந்தது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது:

ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள் என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்)   அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அளவில்லா கருணையாளனின் அரியணை அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்என்று பதிலளித்தார்கள். நூல்: ஸஹீஹுல் புகாரி 3803

விளக்கம்: இந்த நபி மொழி சஅத் (ரலி)  அவர்களின் சிறப்பை கூறும் நபிமொழியாகும் மறுக்க முடியாத அளவிற்கு முதவாத்திரான தரத்துடன் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியை ஸஹாபாக்களில் ஜாபிர் (ரலி) அனஸ் (ரலி) உஸைத் பின் ஹுளைர் (ரலி) இப்னு உமர் (ரலி) அபு ஸஈது (ரலி) ஆயிஷா (ரலி) இன்னும் பலரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் தஹபி  (ரஹ்) அவர்கள் கூறினார்கள் இது முதவாத்திரான ஹதீஸாகும் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் தான் கூறினார்கள் என்று நான் சான்றளிக்கிறேன்.அல் உலுவ்வுலிஅலீயில் கஃப்ஃபார் 89

மேற்கூறிய ஹதீஸின் விளக்கமாக ஃபவாயிதுத் தமாம் என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர்  (ஸல்)  அவர்கள் கூறினார்கள்;  மேன்மையும் மகத்துவமும் மிக்க றப்பின் மகிழ்ச்சியால்  சஅத் (ரலி) அவர்களின் மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது.அறிவிப்பாளர் அபு ஸஈதுல் குத்ரி (ஸல்) (நூல்: :ஃபவாயிதுத் தமாம்16 )

حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط. فقال رسول الله: "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச் செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும் செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

சுவனத்தின் நான்கு தலைவர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள்..

وأخرج ابن عساكر عن عبد الرحمن بن يزيد عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم " سادات السودان أربعة: لقمان الحبشي. والنجاشي. وبلال. ومهجع ".

பத்ரு போரில் முதன் முதலாக ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாவார். உமர் (ரலி) அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில் நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள்.  என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.1.எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி,  2.  லுக்மானுல் ஹகீம் (அலை), 3. பிலால் (ரலி), 4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான மிஹ்ஜஃ (ரலி) ஆகியோர் எனக் கூறினார்கள்.  ( நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் )

பத்ர் ஷுஹதாவின் மகளுக்கு அல்லாஹ் வழங்கிய பாதுகாப்பு…

أخبرنا أبو الحسين بن بشران قال: أخبرنا أبو علي الحسين بن صفوان البردعي قال: أخبرنا عبد الله بن محمد بن أبي الدنيا قال: أخبرنا محمد بن قدامة، قال: حدثنا عمر بن يونس اليمامي الحنفي، قال: حدثنا عكرمة بن عمار، قال: حدثنا إسحاق بن عبد الله بن أبي طلحة، قال: حدثنا أنس بن مالك قال: كانت ابنة عوف ابن عفراء مستلقية على فراشها، فما شعرت إلا بزنجي قد وثب على صدرها، ووضع يده في حلقها، فإذا صحيفة صفراء، تهوي بين السماء والأرض، حتى وقعت على صدري.

فأخذها - تعني - : الزنجي فقرأها، فإذا فيها: من رب لكين إلى لكين: اجتنب ابنة العبد الصالح، فإن لا سبيل لك عليها؛ فقام وأرسل يده من حلقي، وضرب بيده على ركبتي، فاسودت، حتى صارت مثل رأس الشاة، قالت: فأتيت عائشة، فذكرت ذلك لها.

فقالت: " يا ابنة أخي إذا حضت، فاجمعي عليك ثيابك، فإنه لن يضرك إن شاء الله - قال: فحفظها الله بأبيها، إنه علي كان قتل يوم بدر شهيدا كذا في كتابي بنت عوف ابن عفراء وروي من وجه آخر عن الربيع بنت معوذ ابن عفراء، وهي صاحبة القصة.

முஅவ்விது இப்னு அஃப்ராவு (ரலி) அவர்கள் பத்ரு போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களில் ஒருவராகும். இவர்களின் மகள் ருபைய்யி உபின்த் முஅவ்விது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:- ஒரு நாள் லுஹருக்கு முன்பு கைலூலாதூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன்.

அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை தொந்தரவு செய்தது. என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு பேப்பர் துண்டு பறந்து வந்து என் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவத்தின் அருகில் விழுந்தது. அதை அந்த உருவம் படித்துப் பார்த்தது.

அதில் பிஸ்மி எழுதப்பட்டு அதன்பின் இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமையின் பக்கம் எழுதப்பட்டதாகும். ஸாலிஹான (பத்ரு ஸஹாபியின்) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு எந்த உரிமையுமில்லைஎன எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

இதைப் படித்துப் பார்த்ததும் கோபத்தில் என் முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன் வேதனையை நான் மரணிக்கும் வரை அனுபவித்து வந்தேன் எனக் கூறுகிறார்கள்.

இந்த செய்தியை  இமாம் பைஹகீ (ரஹ்)  தம்முடைய நூலில் குறிப்பிட்டு, பிறகு தான் எழுதிய அடிக்குறிப்பில் மேல் கூறிய நிகழ்ச்சியில் பத்ரு ஸஹாபியுடைய பரக்கத்தினால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது எனக் கூறுகிறார்கள். ( நூல்: பைஹகீ 115/7  )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பத்ர் ஸஹாபாக்களை வழ்நாளெல்லாம் நேசிக்கிற, நினைவு கூறுகின்ற, கண்ணியம் செய்கின்ற நற்பேற்றினை தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!