Friday, 29 March 2024

"இறைநம்பிக்கையில் சிறந்த மனிதர்!!

 

தராவீஹ் சிந்தனை: 20. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 10.

"இறைநம்பிக்கையில் சிறந்த மனிதர்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 19 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 20 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "இறைநம்பிக்கையில் சிறந்த மனிதர் யார்?" என்ற கேள்விக்கு நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ( நூல்: முஸ்லிம் )

உறுதியான இறைநம்பிக்கையை யார் பெற்று இருக்கிறாரோ அவரே சமுதாயத்தில் சிறந்த நபரும் அல்லாஹ்விடத்தில் நேசத்திற்குரியவரும் ஆவார் என்கிற இந்த நபிமொழி நமக்கு இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றது.

1. இறைநம்பிக்கை கொண்ட அடியார்களில் உறுதியான இறைநம்பிக்கை கொண்டவர்களும் இருப்பார்கள்.  பலகீனமான இறைநம்பிக்கை கொண்டவர்களும் இருப்பார்கள்.

2. உலக வாழ்கையில், உலக விஷயங்களில் மனிதர்கள் எப்படி ஏற்றத் தாழ்வுடன் காணப்படுகின்றார்களோ அதே போன்று அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு இருக்கின்ற ஈமானுடைய விஷயத்திலும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருப்பார்கள் என்று இந்த நபி மொழி நமக்கு உணர்த்துகின்றது.

இந்த நபிமொழியை நம் ஈமானுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்  ஈமான் எந்த நிலையில் இருக்கின்றது. நம்முடைய ஈமான் உறுதியாக உள்ளதா? அல்லது பலகீனமான நிலையில் உள்ளதா? என்பதை பரிசோதித்து பார்த்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

1.   அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க வாழ்பவரே பலமான ஈமானுடையவராவார்!

قَالَ عُرْوَةُ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقُلْتُ لَهَا: أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158]، فَوَاللَّهِ مَا عَلَى أَحَدٍ جُنَاحٌ أَنْ لاَ يَطُوفَ بِالصَّفَا وَالمَرْوَةِ، قَالَتْ: بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أُخْتِي، إِنَّ هَذِهِ لَوْ كَانَتْ كَمَا أَوَّلْتَهَا عَلَيْهِ، كَانَتْ: لاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَتَطَوَّفَ بِهِمَا، وَلَكِنَّهَا أُنْزِلَتْ فِي الأَنْصَارِ، كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا يُهِلُّونَ لِمَنَاةَ الطَّاغِيَةِ، الَّتِي كَانُوا يَعْبُدُونَهَا عِنْدَ المُشَلَّلِ،

உர்வா அறிவிக்கின்றார்கள்:- "நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை' என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக!   ஸஃபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். 

அதற்கு ஆயிஷா(ரலி), 'என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் வலம் வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தாலே நீர் கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் இறங்கியதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்கள் வணங்கி வந்த முஷல்லல்என்னும் மலைக்குன்றிலுள்ள மனாத் என்னும் சிலைக்காக இஹ்ராம் அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர்.

எனவே, இப்போது (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா எனும் மலைக்குன்றை சஹ்யி-வலம் வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாத்தை அவர்கள் ஏற்றதும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா - மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதுகிறோம்? எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை' என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அருளினான். மேலும் நபி(ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே வலம் வருவதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். 

எனவே, அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதை விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை' எனக் கூறினார்கள். ( நூல் : புகாரி )

2.   சோதனைகளை பொறுமையோடு எதிர் கொள்பவரே பலமான ஈமானுடையவராவார்!

மிஸ்ர் நாட்டின் அரசர் யஅகூப் (அலை) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி ஒருவர் மூலமாக கொடுத்து விட்டார்கள்.

كتب عزيز مصر إلى يعقوب: أما بعد فهذا ابنك بنيامين وقد وجدت متاعي عنده واتخذته عبداً، فما ورد على يعقوب شيء أشد عليه من ذلك الكتاب فقال للرسول مكانك حتى أجيبه

அந்த கடிதத்தில் "உங்கள் மகன் புன்யாமீன் அரசவைக்கு சொந்தமான ஒரு பொருள் காணாமல் போனது. அந்த பொருளை உங்கள் மகனிடம் இருந்து அதை நான் பெற்றுக் கொண்டேன். ஆதலால், நான் உங்கள் மகன் புன்யாமீனை அரசவையின் அடிமையாக ஆக்கிக் கொண்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

 

இந்த கடிதத்தைப் படித்து முடித்ததும் யஅகூப் (அலை) அவர்கள் கவலையில் உறைந்து போனார்கள். கடிதம் கொண்டு வந்த தூதுவரை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லி யஅகூப் (அலை)  அவர்கள் மிஸ்ர் நாட்டு அரசருக்கு பதில் கடிதம் எழுதினார்கள்.

 فكتب إليه يعقوب عليه السلام بسم الله الرحمن الرحيم من يعقوب إسرائيل الله ابن إسحاق بن إبراهيم خليل الله أما بعد فقد فهمت كتابك تذكر فيه أنك اشتريت ابني واتخذته عبداً وأن البلاء موكل ببني آدم إن جدي إبراهيم ألقاه نمرود ملك الدنيا في النار فلم يحترق وجعلها الله عليه برداً وسلاماً وإن أبى إسحاق أمر الله تعالى جدي أن يذبحه بيده فلما أراد أن يذبحه فداه الله بكبش عظيم وأنه كان لي ولد لم يكن في الدنيا أحد أحب إلي منه وكان قرة عيني وثمرة فؤادي فأخرجوه أخوته ثم رجعوا إلي وزعموا أن الذئب أكله فأحدودب لذلك ظهري وذهب من كثرة البكاء عليه بصري وكان له أخ من أمه كنت آنس به فخرج مع إخوته إلى ملكك ليمتاروا لنا طعاماً فرجعوا وذكروا أنه سرق صواع الملك وأنك حبسته وإنَّا أهل بيت لا يليق بنا السرق ولا الفاحشة وأنا أسألك بإله إبراهيم وإسحاق ويعقوب إلا ما مننت علي به وتقربت إلى الله ورددته إلي

அந்த கடிதத்தில்:- "அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

மிஸ்ர் நாட்டின் அரசரே! நிச்சயமாக நாங்கள் ஒரு கண்ணியமிக்க வம்சத்தை சார்தவர்கள். எங்களுடைய குடும்பத்தை சோதனை ஆட்கொண்டுள்ளது. 

எங்களுடைய பாட்டனார் இப்ராஹீம் (அலை)  அவர்களை அல்லாஹ் நம்ரூதுடைய நெறுப்பை கொண்டு சோதித்தான். அந்த நேரத்தில் அவர்கள் பொறுமையுடன் இருந்தார்கள். 

இன்னொரு பாட்டனார் இஸ்மாயில் (அலை)  அவர்களை அல்லாஹ் அறுப்பதை கொண்டு சோதித்தான், ஆனாலும் அவர்களும் பொறுமையாக இருந்ததால் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தான். 

அதே போன்று என்னுடைய பாசமிக்க மகனான யூசுப் (அலை)  அவர்களை அவர்களின் சகோதரர்கள் மூலம் என்னை விட்டு பிரித்து விட்டான். அவர்களின் பிரியத்தால் அழுது அழுது எனது கண்களின் பார்வைத் திறன் போய்விட்டது. 

என்னுடைய உடலும் தளர்ந்து (மெலிந்து) விட்டது. தற்போது என்னுடைய மற்றொரு பாசமிக்க மகனான புன்னியாமீன் அவர்களை தற்போது நீங்கள் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தி உங்களிடம் வைத்துக் கொண்டீர்கள். 

நிச்சயம் எங்களுடைய பாரம்பரியத்தில் எவரும் இது போன்ற காரியங்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். எனவே தயவுசெய்து அவர்களை நீங்கள் லிடுதலை செய்து விடுங்கள் என்று நபிமார்களின் சோதனைகளை வரிசை படுத்தி ஏழுதினார்கள். 

அந்த கடிதத்தை படித்த மிஸ்ர் நாட்டு அரசர் அவர்கள்  பதில் ஏழுதினார்கள் : 

உங்களுடைய கடிதம் எனக்கு கிடைத்தது, நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரிந்தது. உங்களுடைய கடிதத்தில் உங்களுடைய முன்னோர்கள் அனுபவித்த சோதனைகளை சொல்லி இருதீர்கள். அப்பொழுது அவர்கள் பொறுமையை எதிர் கொண்டு அல்லாஹ்வின் உதவிக்காக காத்திருந்தார்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவி செய்து மகத்தான வெற்றியை கொடுத்தான். 

உங்கள் முன்னோர்களை சோதித்தது போன்று இப்பொழுது உங்களை அல்லாஹ் சோதிக்கிறான். நீங்கள் பொறுமையை எதிர் கொண்டு அல்லாஹ்வின் உதவிக்காக காத்திருந்தால் அல்லாஹ் உங்களுக்கும் வெற்றியை தருவான் என்று பதில் எழுதினார்கள். ( நூல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர் ) ( குறிப்பு:- இந்த கடிதத்தை எழுதியது நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தாம் என சில விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது ஆட்சியாளராக நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தான் இருந்தார்கள் என்று.)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நிகழ்வுக்கு சில மாதங்களுக்குப் பின்னர் கண்பார்வையை மீட்டுக் கொடுத்ததோடு, நீண்ட காலம் பிரிந்து வாழ்ந்த நபி யூசுஃப் (அலை) அவர்களோடும், புன்யாமீன் (அலை) அவர்கள் சகிதமாக குடும்பத்தார்களோடு மகிழ்வாக இணைந்து வாழ வைத்தான்.

3.   முற்றிலும் அல்லாஹ்வைச் சார்ந்து வாழ்பவரே பலமான இறைநம்பிக்கையாளராவார்..

وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

முஃமின்கள் அல்லாஹ் மீதே தவக்குல் வைக்கட்டும்’ (அல்குர்ஆன் 14:11)

فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

( நபியே! ) நீர் ஒரு விடயத்தில் உறுதி பூண்டுவிட்டால் அல்லாஹ் மீது பொறுப்புச் சாட்டி விடுவீராக!  ( அல்குர்ஆன் 3 : 159 )

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

நிச்சயமாக முஃமின்கள் எனப்படுவோர் எத்தகையவர்கள் என்றால் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் பெயர் குறிப்பிடப்பட்டு விட்டால் உள்ளங்கள் நடுநடுங்கிவிடும். அவனது வசனங்கள் அவர்களிடத்தில் ஓதிக் காண்பிக்கப்பட்டு விட்டால் ஈமான் அதிகரித்து விடும். மேலும் அவர்கள் தங்கள் இரட்சகன் மீது தவக்குல் வைப்பார்கள்’ ( அல் குர்ஆன் 8 : 2 )

பொறுப்புச் சாட்டுதல்என்பது தவக்குல் என்ற அரபுச் சொல்லின் நேரடிக் கருத்தாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் மீது ஒரு முஃமின் தனது காரியங்களைப் பொறுப்புச் சாட்டி விடுவதையே தவக்குல்என்பது குறிப்பிடுகின்றது.

அல்குர்ஆனில் 42 இடங்களில் தவக்குல்என்ற சொல் கையாளப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்க விஷயமாகும்.

قال سعيد بن جبير رحمه الله :"التوكل على الله جماع الإيمان" [الزهد لهناد].

இமாம் ஸஈத் பின் சுபைர் (ரஹ்) தவக்குல் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். அல்லாஹ் மீது தவக்குல் வைப்பதானது ஈமானின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாகும்’ ( நூல் : இப்னு அபீஷைபா )

وقال ابن القيم رحمه الله: "التوكل نصف الدين، والنصف الثاني الإنابة؛ فإن الدين استعانة وعبادة، فالتوكل هو الاستعانة والإنابة هي العبادة" [المدارج 2/118].

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) தவக்குல் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு சொன்னார்கள்: தவக்குல் என்பது மார்க்கத்தின் அரைவாசியாகும். மற்றைய அரைவாசி அல்லாஹ்வை நோக்கி மீள்தலாகும். ஏனெனில் மார்க்கம் என்பது அல்லாஹ்விடம் உதவி தேடுதல், இபாதத் ஆகிய இரண்டுமாகும். தவக்குல் என்பது உதவி தேடுதலாகும். அல்லாஹ்வை நோக்கி மீள்வது இபாதத்தாகும்” ( நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன்)

أحمد بن طولون أحد ولاة مصر: كان من أشد الظلمة حتى قيل: إنه قتل ثمانية عشر ألف إنسان صبراً - أي يقطع عنه الطعام والشراب حتى يموت - وهذا أشد أنواع القتل، فذهب أبو الحسن الزاهد امتثالاً لقوله عليه الصلاة والسلام: "أفضل الجهاد كلمة حق عند سلطان جائر" فدخل عليه وأخذ ينصحه في الله وقال له: إنك ظلمت الرعية وفعلت كذا وكذا وخوفه بالله فغضب ابن طولون غضباً شديداً - وأمر بأسد يجوّع ثم يطلق على أبى الحسن.

يا له من موقف رهيب.. لكن نفس أبى الحسن الممتلئة بالإيمان والثقة بالله جعلت موقفه عجيباً عندما أطلقوا الأسد عليه جعل يزأر ويتقدم ويتأخر وأبو الحسن جالس لا يتحرك ولا يبالى والناس ينظرون إلى الموقف بين باك وخائف ومشفق على هذا العالم الورعِ.. ولكن ما الذي حدث؟

تقدم الأسد وتأخر وزأر ثم سكت ثم طأطأ رأسه فاقترب من أبى الحسن فشمّه.. ثم انصرف عنه هادئاً ولم يمسسه بسوء.. وهنا تعجب الناس وكبّروا وهللوا.

ولكن في القصة ما هو أعجب: لما يئس ابن طولون وأخذته الدهشة استدعى أبا الحسن وقال له: فيما كنت تفكر والأسد عندك وأنت لا تلتفت إليه؟

قال: كنت أفكر في لعاب الأسد إن مسنى أهو طاهر أم نجس؟ قال: ألم تخف من الأسد؟ قال: لا. إن الله قد كفاني ذلك.

أليس الله قد قال: ﴿ أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ ﴾ [الزمر: 36] أليس الله قد قال: ﴿ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ﴾ [الطلاق: 3].

மிஸ்ரின் ஆட்சியாளராக இருந்த அஹ்மத் இப்னு தூலூன் என்பவர் கொடுங்கோன்மை புரியும் ஆட்சியாளராக இருந்தார்.

எப்படிப்பட்ட கொடுமை இழைத்தார் என்றால் சுமார் 18 ஆயிரம் பேரை உணவு, தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்றார்.

அந்த காலகட்டத்தில் பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த அபுல் ஹஸன் (ரஹ்) என்போர், மாநபி ஸல் அவர்கள் சொன்ன "தீய ஆட்சியாளன் முன்பாக அவனுடைய தீமைகளைச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிப்படுத்துவது பெரிய மார்க்க போராகும்" என்ற நபி மொழியின் அடிப்படையில் ஆட்சியாளரைச் சந்திக்க அரண்மனை நோக்கி புறப்பட்டார்கள்.

அரண்மனை சென்ற அபுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் "ஆட்சியாளர் செய்த மனித விரோத படுகொலையைச் சுட்டிக் காட்டி அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறு உபதேசம் செய்தார்கள்.

இது கேட்டு கொதிப்படைந்த அந்த ஆட்சியாளர் கோபத்தின் உச்சிக்கே சென்று இன்ன நாளில் இமாம் அவர்களை மக்கள் முன்பாக, ஒரு மைதானத்தில் தடுப்பு ஏற்படுத்தி சிங்கத்தை விட்டு கடித்து குதறி கொலை செய்யுமாறு தமது பணியாளர்களுக்கு ஆணையிட்டார்.

 

குறிப்பிட்ட அந்த நாளில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்த மைதானத்தில் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த இமாம் அபுல் ஹஸன் (ரஹ்) அவர்களை நோக்கி சிங்கம் ஒன்று ஏவி விடப்பட்டது.

மக்களெல்லாம் இமாம் அபுல் ஹஸன் (ரஹ்) அவர்களுக்கு என்ன நேர்ந்திடுமோ? எனப் பயந்து கொண்டு இருந்தார்கள்.

கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்கத்தை கூண்டிலிருந்து திறந்து விட்டதும் இமாம் அபுல் ஹஸன் (ரஹ்) அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

மைதானம் முழுவதும் ஒரே நிசப்தம். அனைத்து மக்களின் பிரார்த்தனையும் இமாம் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது.

பாய்ந்து வந்த சிங்கம் இமாம் அபுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் அருகில் வந்ததும் அப்படியே பம்மி, பதுங்கி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர்களுக்கு முன்பாக படுத்துக் கொண்டது.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கோடு அல்லாஹு அக்பர் என்றும், லாஇலாஹ இல்லல்லாஹ் என்றும் கரவொலி எழுப்பினார்கள்.

இதைக் கண்ட ஆட்சியாளருக்கு ஆச்சரியம். ஏதோ நீண்ட நாட்கள் பழகிய ஒருவரின் முன்பாக அடங்கி ஒடுங்கி சிங்கம் இருப்பதைப் போன்று இமாமுக்கு முன்னாள் படுத்துக் கொண்டதை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாளர் பார்வை மாடத்தில் இருந்து கீழிறங்கி மைதானத்திற்கு வந்து என் சிங்கம் இப்படி ஒரு போதும் நடந்து கொண்டது கிடையாது.

உங்களைக் கண்டதும் சிங்கம் இப்படி நடந்து கொண்டதற்கு காரணம் என்ன என்று கேட்டார் ஆட்சியாளர்.

அத்தோடு, சிங்கம் உங்களை நோக்கி சீறிப் பாய்ந்து வரும் போது எங்கேயும் திரும்பாமல் நின்ற இடத்திலேயே நின்றீர்களே? அது எப்படி? என்று கேட்டார்.

அதற்கு, இமாம் அபுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் மீது தாம் பொறுப்புச் சாட்டி விட்டதாக மிகவும் சாதாரணமாக கூறினார்.

பின்னர், ஸுமர் அத்தியாயத்தின் 36 -வது வசனத்தையும், தலாக் அத்தியாயத்தின் 3- ம் வசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் தமது அநியாயமான செயலுக்கு வருந்தி, மனந்திருந்தி வாழ ஆரம்பித்தார். தொடர்ந்து நல்ல பல சேவைகளை அவர் செய்தார். மக்களுக்கு நல்லாட்சியும் வழங்கினார். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

4. நெருக்கடியான நேரத்திலும் எவ்வித சலனமும் இல்லாமல் துணிவுடன் செயல்படுபவரே பலமான இறைநம்பிக்கையாளராவார்...

أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَ:- "أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِالْعِضَاهِ ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ، وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ : ” إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا ، فَقَالَ :مَنْ يَمْنَعُكَ مِنِّي ؟ فَقُلْتُ : اللَّهُ ” ثَلَاثًا. وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்;

அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார்.

 

அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்என்று கூறினார்கள். பிறகு அவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை மன்னித்து விட்டுவிட்டார்கள். ( நூல் : புகாரி )

ஃபிர்அனுக்கு எதிராக இறை நம்பிக்கை கொண்ட சூனியக்காரர்களின் துணிவு...

قَالَ آمَنتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَىٰ

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்என்று அவன் கூறினான்.

قَالُوا لَن نُّؤْثِرَكَ عَلَىٰ مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَٰذِهِ الْحَيَاةَ الدُّنْيَا

எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட, நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்என்று அவர்கள் கூறினார்கள். ( அல்குர்ஆன்:  20: 71, 72 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பலமான, உறுதியான இறைநம்பிக்கையைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

நஜ்ஜாஷி (ரஹ்) அவர்களும், உவைஸுல் கர்னீ (ரஹ்) அவர்களும்...

தராவீஹ் சிந்தனை: 19. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 9.
நஜ்ஜாஷி (ரஹ்) அவர்களும், உவைஸுல் கர்னீ (ரஹ்) அவர்களும்...



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 18 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 19 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "தாபியீன்களில் சிறந்த மனிதர் யார்?" என்ற கேள்விக்கு நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

பெருமானார் (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திய, கண்ணியம் செய்த மனிதர்களில், அதுவும் நபி ஸல் அவர்கள் வாழும் காலத்தில் வாழ்ந்து, நபி ஸல் அவர்களை ஈமான் கொண்டு, நபி ஸல் அவர்களைப் பார்க்கும் பாக்கியத்தை இழந்த இரண்டு மனிதர்களை இந்த உம்மத்திற்கு அடையாளம் காட்டினார்கள்.

ஒருவர் அபீசீனியாவின் நஜ்ஜாஷி மன்னர், இன்னொருவர் உவைஸுல் கர்னீ (ரஹ்) ஆகியோர் ஆவார்கள்.

عُمرُ بنُ الخطَّابِ رضِيَ اللهُ عنه عن النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ أنَّه قال: "إنَّ خيرَ التَّابعينَ رجُلٌ يُقالُ له: أُويسٌ"، وهو أُويسُ بنُ عامرٍ القَرَنيُّ، فمُروه فلْيَسْتَغْفِرْ لكم

நாயகம் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்: தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராவார்கள். அவர்களைக் கண்டால் அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக்கொள்ளுங்கள்.  ( நூல்: முஸ்லிம், மிஷ்காத் 582  ) நீண்ட ஹதீஸின் சிறு பகுதியாகும்,

صحيح مسلم - (7 / 189) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِىُّ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِى أَبِى عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ سَأَلَهُمْ أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ أَنْتَ أُوَيْسُ بْنُ عَامِرٍ قَالَ نَعَمْ . قَالَ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ قَالَ نَعَمْ.
قَالَ فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ قَالَ نَعَمْ. قَالَ لَكَ وَالِدَةٌ قَالَ نَعَمْ. قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « يَأْتِى عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ». فَاسْتَغْفِرْ لِى. فَاسْتَغْفَرَ لَهُ. فَقَالَ لَهُ عُمَرُ أَيْنَ تُرِيدُ قَالَ الْكُوفَةَ. قَالَ أَلاَ أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا قَالَ أَكُونُ فِى غَبْرَاءِ النَّاسِ أَحَبُّ إِلَىَّ. قَالَ فَلَمَّا كَانَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ حَجَّ رَجُلٌ مِنْ أَشْرَافِهِمْ فَوَافَقَ عُمَرَ فَسَأَلَهُ عَنْ أُوَيْسٍ قَالَ تَرَكْتُهُ رَثَّ الْبَيْتِ قَلِيلَ الْمَتَاعِ. قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « يَأْتِى عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ». فَأَتَى أُوَيْسًا فَقَالَ اسْتَغْفِرْ لِى. قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِى. قَالَ اسْتَغْفِرْ لِى. قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِى. قَالَ لَقِيتَ عُمَرَ قَالَ نَعَمْ. فَاسْتَغْفَرَ لَهُ. فَفَطِنَ لَهُ النَّاسُ فَانْطَلَقَ عَلَى وَجْهِهِ. قَالَ أُسَيْرٌ وَكَسَوْتُهُ بُرْدَةً فَكَانَ كُلَّمَا رَآهُ إِنْسَانٌ قَالَ مِنْ أَيْنَ لأُوَيْسٍ هَذِهِ الْبُرْدَةُ.

கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?'' என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், "உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்திய மிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித் தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு' என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறிவிட்டார்கள்.

அடுத்த ஆண்டில் "கரன்' குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள்.

அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யமன் வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற் பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்'' என்றார்கள்.

ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்'' என்றார்கள்.
"
நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர்.

பிறகு உவைஸ் அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள். தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் "உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்பார்கள். முஸ்லிம் 4971   உசைர் பின் ஜாபிர் (ரலி)

خرج أويس القرني مع سيدنا علي كرم الله وجهه في موقعة صفين، وتمنى الشهادة ودعا الله قائلاً: اللهم ارزقني شهادة توجب لي الحياة والرزق. وقاتل بين يدي سيدنا علي حتى استشهد فنظروا فإذا عليه نيف وأربعون جراحة، وكان ذلك سنة 37 هـ في وقعة صفين.

உவைஸுல் கர்னீ (ரஹ்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுடன் ஹிஜ்ரி 37 -ல் ஸிஃப்ஃபீன் போரிலே கலந்து கொண்டார்கள். போருக்கு செல்லும் முன்பாக ஷஹீதாக வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு சென்றார்கள். அவர்கள் விரும்பியது போன்றே அந்த யுத்தத்தில் 40 சொச்சம் காயங்களோடு ஷஹீதாகி இருந்தார்கள்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ أَنَّهُمَا حَدَّثَاهُ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: نَعَى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَّ صَاحِبَ الحَبَشَةِ، يَوْمَ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ»

அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1327

عن عمران بن حصين، رقم الحديث: 1039، ولفظه: «إن أخاكم النجاشي قد مات، فقوموا فصلوا عليه، قال: فقمنا، فصففنا كما يصف على الميت، وصلينا عليه كما يصلى على الميت»

நபி ஸல் அவர்கள் நஜ்ஜாஷி மன்னரின் மரணம் தொடர்பாக கூறும் போது இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். மற்ற ஜனாஸாவில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்பதைப் போன்றே அணிவகுத்து நின்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) (நூல்: புகாரி 1320, 3877 )

இன்னொரு ரிவாயத்தில்...

நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561,

நஜ்ஜாஷி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

ذكر البيهقي أيضاً عن الحاكم، عن أبي الحسن محمد بن عبد الله الفقيه - بمرو - حدثنا حماد بن احمد، حدثنا محمد بن حميد، حدثنا سلمة بن الفضل، عن محمد بن اسحاق قال‏:‏ بعث رسول الله صلى الله عليه وسلم عمرو بن أمية الضمري إلى النجاشي في شان جعفر بن أبي طالب وأصحابه، وكتب معه كتاباً‏

‏"بسم الله الرحمن الرحيم، من محمد رسول الله إلى النجاشي الأصحم ملك الحبشة، سلام عليك فاني احمد إليك الله الملك القدوس المؤمن المهيمن، واشهد أن عيسى بن مريم روح الله وكلمته ألقاها إلى مريم البتول الطاهرة الطيبة الحصينة، فحملت بعيسى فخلقه من روحه ونفخته، كما خلق ادم بيده ونفخه‏.‏

 

واني ادعوك إلى الله وحده لا شريك له، والموالاة على طاعته، وان تتبعني فتؤمن بي وبالذي جاءني، فاني رسول الله وقد بعثت إليك ابن عمي جعفراً، ومعه نفر من المسلمين فإذا جاءوك فاقرهم ودع التجبر، فاني ادعوك وجنودك إلى الله عز وجل، وقد بلغت ونصحت فاقبلوا نصيحتي، والسلام على من اتبع الهدى‏‏".‏

 

فكتب النجاشي إلى رسول الله صلى الله عليه وسلم‏:‏ بسم الله الرحمن الرحيم، إلى محمد رسول الله من النجاشي الأصحم بن ابجر، سلام عليك يا نبي الله من الله ورحمة الله وبركاته لا اله إلا هو الذي هداني إلى الإسلام، فقد بلغني كتابك يا رسول الله فيما ذكرت من أمر عيسى، فورب السماء والأرض إن عيسى ما يزيد على ما ذكرت‏.‏

 

وقد عرفنا ما بعثت به إلينا وقرينا ابن عمك وأصحابه، فاشهد انك رسول الله صادقاً ومصدقاً، وقد بايعتك وبايعت ابن عمك وأسلمت على يديه لله رب العالمين‏.‏

 

وقد بعثت إليك يا نبي الله باربحا بن الأصحم بن ابجر، فاني لا املك إلا نفسي، وان شئت أن أتيك فعلت يا رسول الله فاني اشهد أن ما تقول حق‏".‏‏

நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம் ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக் கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து, ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார். பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.

அல்லாஹ்வின் தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம் பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள் கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம்.

உங்கள் தந்தையின் சகோதரன் மகனுக்கும், உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக நீங்கள் உண்மையானவர் உண்மைப்படுத்தப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன் நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.

ஜஅஃபர் (ரழி) அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா ழம்யுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி வைத்தார். அம்ர், அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

தபூக் போர் நடைபெற்ற பின் ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் இந்த நஜ்ஜாஷி மன்னர் இறந்தார். அவர் இறந்த தினத்திலேயே அவன் மரணச் செய்தியை நபி (ஸல்) மக்களுக்கு அறிவித்தார்கள். அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இரண்டு மேன்மக்களையும் பொருந்திக் கொண்டு பெருமானார் {ஸல்} அவர்களின் சந்திப்பையும், அவர்களுடன் சுவனப் பிரவேசத்தையும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!