Thursday, 12 July 2018

ஹஜ் செய்ய ஆசைப்படுவோம்!!

ஹஜ் செய்ய ஆசைப்படுவோம்!!



துல் கஅதா அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் புனிதமாக்கியிருக்கிற நான்கு மாதங்களில் ஒன்றாகும். ஹஜ்ஜுடைய அமல்களுக்கான நாட்களும் அங்கிருந்து தான் ஆரம்பமாகும்.

ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்கிற புனித பயணாளிகள் பயண அறிவிப்பை சொந்த, பந்தம், அண்டை அயலார், உறவுகள் நட்புகள் மஹல்லா வாசிகள் என அனைவரிடமும் சொல்லத் துவங்குகிற மாதமும் கூட.

விருந்துகள், பிரிவுபச்சாரங்கள், ஹஜ் விளக்க கூட்டங்கள் என இப்போதே நாம் ஹஜ் தொடர்பான பல சபைகளை அலங்கரிக்கத் தொடங்கி இருப்போம்.

இந்த சபைகளைக் கடக்கிற போதோ அல்லது அவைகளில் அமர்கிற போதோ, புனித பயணாளிகளைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிற போதோ மறக்காமல் அல்லாஹ்விடம் நாம் வைக்க வேண்டிய முக்கிய வேண்டுகோளில் ஒன்று “அல்லாஹ்வே எனக்கும், என் மனைவி மக்களுக்கும், என் குடும்பத்தார்களுக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவாயாக! உன்னுடைய உயர்தர ஆலயத்தை தரிசிக்கும் வாய்ப்பை இந்த எளியோனுக்கும் இந்த எளியோனின் மனைவி மக்களுக்கும், இந்த எளியோனின் குடும்பத்தார்களுக்கும் வழங்கி கௌரவிப்பாயாக! என்று மனமுருகி நம்முடைய ஆசையை வெளிப்படுத்த வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நஸீபை வழங்குவானாக! ஆமீன்!.

இந்த உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஏதாவது ஆசை இருக்கும். ஆசைகள் இல்லாத எந்த மனிதனும் இந்தப் பூமிப்பந்தில் இல்லை.

 அல்லாஹ்வால் வழிகாட்டப்படுகிற மகத்தான சமூகமாக வாழக்கூடிய இந்த சமூகத்தில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக ஆசைகள் இருக்கும். 

அந்த ஆசை மறுமையோடு, மறுமையின் வெற்றிகளோடு இம்மையோடு, இம்மையின் வெற்றிகளோடு இணைந்திருக்கலாம். ஆனால், நாம் ஆசைப்படாமல் ஒரு போதும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.

ஆசைப்படுவதை அல்லாஹ்வும், அவன் தூதரும் ஆகுமாக்கியிருக்கின்றார்கள், அதை வெளிப்படுத்துமாறு தூண்டுகின்றார்கள். அதற்காக முயற்சி செய்யுமாறு வலியுறுத்துகின்றார்கள்.

அல்லாஹ் நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தார்களின் சிறப்புக்களை கூறும் போது…

إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ (90)

“இவர்கள் யாவரும் நற்பணிகளில் முனைந்து செயற்படுவோராகவும், ஆசைகளோடும், அச்சத்தோடும் நம்மிடம் இறைஞ்சக்கூடியவர்களாகவும், நம்முன் பணிந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள்.                          ( அல்குர்ஆன்: 21: 90 )

ஆசைப்படு!, அதை வெளிப்படுத்து!

عن أبي هريرة – رضى الله عنه - قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا تمنى أحدكم فلينظر ما يتمنى فإنه لا يدري ما يكتب له من أمنيته ) رواه احمد

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”உங்களில் ஒருவர் ஆசைப்பட்டால் அவர் எதை ஆசைப்படுகிறார் என்பதை நன்கு சிந்தனை செய்து கொள்ளட்டும். ஏனெனில், அவரின் ஆசைக்கும் கூலி எழுதப்படுகிறது. கூலியை அவர் அறியமாட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.            ( நூல்: அஹ்மத் )

وعن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم : ( إِذَا تَمَنَّى أَحَدُكُم فَلْيُكثِر ، فَإِنَّمَا يَسأَلُ رَبَّهُ عَزَّ وَجَلَّ
 رواه ابن حبان (2403) والطبراني في "الأوسط" (2/301)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் அதிகமாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவர் தன் ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்கப்போவது தன்னைப் படைத்த ரப்பிடம் தான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: இப்னு ஹிப்பான் )

உன் ஆசை எவ்வளவு பெரிதாக இருப்பினும்…

நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் வெளிப்படுத்திய ஆசையை அல்லாஹ் குறிப்பிடும் போது…

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

“பிறகு அவர் “என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே மகத்தான கொடையாளன் ஆவாய்”.         ( அல்குர்ஆன்: 38: 35 )

احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ  رواه مسلم

உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் நீ ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்து போய்விடாதே! நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய் விட்டால் நான் இப்படி, இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                        ( நூல்: முஸ்லிம் )


ஆசைப்படுகிற போது இரண்டு நிபந்தனைகளை கடைபிடிக்குமாறு இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகின்றது.

1.   அந்த ஆசைகள் நிறைவேற அல்லாஹ்விடம் உதவி தேடிக் கொண்டே இருப்பது.
2.   ஆசைகளை அடைந்திடும் வரை சோர்ந்து போகாமல் இருப்பது.


மேன்மக்களின் ஆசைகளிலிருந்து….


اجتمع في الحجر عبد الله، ومصعب، وعروة – بنو الزبير – وابن عمر، فقال ابن عمر: تمنوا، فقال ابن الزبير: أتمنى الخلافة، وقال عروة: أتمنى أن يؤخذ عني العلم، وقال مصعب: أتمنى إمرة العراق، فقال ابن عمر: أما أنا فأتمنى المغفرة. قال أبو الزناد: فنالوا ما تمنوا، ولعل ابن عمر قد غُفر له. الذهبي

அபுஸ்ஸினாத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “ஹிஜ்ர் எனும் இடத்தில் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் மூன்று ஆண் மக்களான அப்துல்லாஹ் (ரலி) முஸ்அப் (ரலி) உர்வா (ரலி) ஆகியோரும் உமர் (ரலி) அவர்களின் மகனாரான அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி, ஆகிய நான்குபேர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் மற்ற மூவரை நோக்கிஉங்களின் ஆசைகளை கூறுங்கள்! என்றார்கள். அதற்கு, ”நான் கலீபாவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களும்,
”நான் கல்வியில் தேர்ச்சி பெற்று மக்களுக்கு கல்வி போதிக்க ஆசைப்படுகிறேன்” என்று உர்வா (ரலி) அவர்களும்,நான் ஈராக் தேசத்தின் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என முஸ்அப் (ரலி) அவர்களும் கூறினார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் மகத்தான மன்னிப்பை ஆசைப்படுகிறேன்” என்றாகள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அபுஸ்ஸினாத் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜுபைர் (ரலி) அவர்களின் மூன்று ஆண்மக்களும் ஆசைப்பட்டது போலவே அல்லாஹ் அவர்களுக்கு கல்வி, அதிகாரம், அரசியல் தலைமை ஆகியவற்றைக் கொடுத்தான். இன்ஷா அல்லாஹ், இப்னு உமர் ரலி அவர்கள் ஆசைப்பட்ட மஃபிரத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான் என்று நம்பிக்கை கொள்கிறோம்.                         ( நூல்: ஃபவாத்துல் வஃபிய்யாத் )

சில நேரங்களில் நம் ஆசை உயர்வானதாகவும், உளப்பூர்வமானதாகவும் இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் அதை ஆசிக்கின்றான்.

உமர் (ரலி) அவர்களின் ஆசையை அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் ஆசித்ததை பின்வரும் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகின்றது.

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، " وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى، فَنَزَلَتْ: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125] وَآيَةُ الحِجَابِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ البَرُّ وَالفَاجِرُ، فَنَزَلَتْ آيَةُ الحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَيْرَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُنَّ: (عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ)، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:  மூன்று விஷயங்களில் என் ஆசைக்கு ஏற்ப ரப்பும் இறை வசனங்களை இறக்கியருளினான்.  

1..அல்லாஹ்வின் தூதரே! மகாமு இப்ராஹீமை தொழுமிடமாக நாம் ஆக்கலாமே என்று கேட்டேன். அப்போது, "மகாமு இப்ராஹீமில் ஒரு பகுதியை தொழும் இடமாக்கிக் கொள்ளுங்கள்'' எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

2. பர்தா (சட்டம்) குறித்த இறைவசனமும் இவ்வாறே இறங்கியது. "அல்லாஹ்வின் தூதரே! தங்களின் மனைவியரிடம் நல்லவரும் கெட்டவரும் உரையாடுகின்றனர். எனவே தங்கள் மனைவியரை ஹிஜாபைப் பேணுமாறு தாங்கள் பணிக்கலாமே! '' என்று சொன்னேன். அப்போது ஹிஜாப் குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.

3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது நான் அவர்களிடம், "இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச்  சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்'' என்று சொன்னேன். அப்போது இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

( அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  நூல் : புகாரி 402 )

முஸ்லிமுடைய அறிவிப்பில் மேலும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّىُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ أَخْبَرَنَا عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّى فِى ثَلاَثٍ فِى مَقَامِ إِبْرَاهِيمَ وَفِى الْحِجَابِ وَفِى أُسَارَى بَدْرٍ.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று விஷயங்களில் என் ஆசைக்கு ஏற்ப ரப்பும் இறை வசனங்களை இறக்கியருளினான்.  
அவை: 1. மகாமு இப்ராஹீம் விஷயத்தில், 2. பர்தா விஷயத்தில், 3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில்.  ( நூல் : முஸ்லிம் 6359 )
இதில் பத்ருப்போரில் கைது செய்யப்பட்டவர்கள் விஷயம் மூன்றாவது விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ»، فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟ فَقَالَ: " أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80] " فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84]

முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயன்ற போது அதை உமர் (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அதையும் மீறி நபி {ஸல்} அவர்கள் அவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இனிமேல் இவ்வாறு செய்யக் கூடாது என்று அதைத் தடை செய்து அல்லாஹ் வசனத்தை அருளினான்.

وأخرج ابن أبي حاتم في تفسيره عن أنس قال: قال عمر: وافقت ربي في… هذه الآية: (وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ). الآية فلما نزلت قلت أنا: فتبارك الله أحسن الخالقين. فنزلت: (فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ).

”முஃமினூன் 12 முதல் 14 வரையிலான இறைவசனங்களை நான் ஓதும் போது அல்லாஹ்வின் படைப்பாற்றலையும், மனிதனின் அழகிய தோற்றத்தையும் கண்டு வியந்து “அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்” என்று நினைத்தேன். என் உள்ளக்கிடங்கின் ஆசைக்கு தக்கவாறு அல்லாஹ்வும் இறக்கியருளினான் என உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: இப்னு அபீ ஹாத்தம் )

قوله للنبي  صلى الله عليه وسلم : يا رسول الله، لو اتخذنا من مقام إبراهيم مصلى: فنزلت الآية (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى )[البقرة: 125]. أخرجه الشيخان.
– وقوله: يا رسول الله، إن نساءك يدخل عليهنَّ البر والفاجر، فلو أمرتهن أن يحتجبن، فنزلت آية الحجاب: (وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ) [الأحزاب: 53.]. أخرجه الشيخان.
– وقوله لنساء النبي  صلى الله عليه وسلم  وقد اجتمعن عليه في الغيرة: ( عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ) [ التحريم: 5] فنزلت في ذلك. أخرجه الشيخان.
– وفي التهذيب للنووي: نزل القرآن بموافقته في أسرى بدر. أخرجه مسلم
– وأخرج ابن أبي حاتم في تفسيره عن أنس قال: قال عمر: وافقت ربي في… هذه الآية: (وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ). الآية فلما نزلت قلت أنا: فتبارك الله أحسن الخالقين. فنزلت: (فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ).
– وفي كتاب فضائل الإمامين لأبي عبد الله الشيباني قال: في قصة عبد الله بن أُبَيّ وحديثه في الصحيح عنه قال عمر رضي الله عنه: لما توفي عبد الله بن أُبي دُعي رسول الله  صلى الله عليه وسلم  للصلاة عليه فقام إليه، فقمتُ حتى وقفتُ في صدره فقلت: يا رسول الله، أو على عدوِّ الله ابن أُبَيّ القائل يوم كذا كذا. فواللهِ، ما كان إلا يسيراً حتى نزلت: (وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا).
– وفي تحريم الخمر أنه قال: اللهم بيِّنْ لنا في الخمر بياناً شافياً فأنزل الله تحريمها: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى). فكان منادي رسول الله  صلى الله عليه وسلم  إذا أقيمت الصلاة ينادي: ألا لا يقربنَّ الصلاة سكران. فدعي عمر فقرئت عليه فقال: اللهم بيِّن لنا بياناً شافياً. فنزلت: (إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ). قال عمر: انتهينا، انتهينا. أخرجه مسلم.
– لما أكثر رسول الله صلى الله عليه وسلم من الاستغفار لقوم: قال عمر: سواء عليهم، فأنزل الله: (سَوَاء عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ). قلت: أخرجه الطبراني عن ابن عباس.
– لما استشار صلى الله عليه وسلم الصحابة في الخروج إلى بدر أشار عمر بالخروج فنزلت:  (كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِن بَيْتِكَ بِالْحَقِّ) الآية.
– عن ابن مسعود رضي الله عنه قال؛ قال: لما كان يوم بدر جيء بالأسرى؛ فقال رسول الله صلى الله عليه وسلم: “ما تقولون في هؤلاء؟” فقال أبو بكر: يا رسول اللّه، قومك وأهلك، استبقهم واستأمْن بهم، لعل الله أن يتوب عليهم، وخُذْ منهم فديةً تكون لنا قُوّةً على الكفار. وقال عمر رضي الله عنه: يا رسول الله كذَّبُوك وأخْرَجُوك، قَدِّمْهُم نضرب أعناقهم، مَكِّنْ علياً من عقيل يضرب عنقه، ومكنِّي من فلان نسيب لعمر فأضرب عنقه، فإنَّ هؤلاء أئمة الكفر. وقال عبد اللّه بن رواحة: يا رسول الله انظر وادِياً كثيرَ الحطب فأدخلهم فيه ثم أضرم عليهم ناراً. فقال له العباس: قطعتَ رَحِمَك. فسكتَ رسول الله صلى الله عليه وسلم فلم يجبهم وأنزل اللّه تعالى: (مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الْأَرْضِ) إلى قوله:(فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا).
– لما استشار الصحابة في قصة الإفك قال عمر: من زوجكها يا رسول الله؛ قال: الله، قال: أفتظن أن ربك دلَّس عليك فيها، سبحانك هذا بهتان عظيم؟ فنزلت الآية وفيها (سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ).
– قصته في الصيام، لما جامع عمر زوجته بعد الانتباه وكان ذلك محرماً في أول الإسلام فنزل: (أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَآئِكُمْ) الآية. أخرجه أحمد في مسنده.
– قوله تعالى: (قُلْ مَن كَانَ عَدُوًّا لِّجِبْرِيلَ). الآية، قلت: أخرجه ابن جرير وغيره من طرق عديدة وأقرَّ بها للموافقة ما أخرجه ابن أبي حاتم عن عبد الرحمن بن أبي ليلى أن يهودياً لقي عمر فقال: إن جبريل الذي يذكره صاحبكم عدو لنا، فقال له عمر: (مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ).
–  قوله تعالى: (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّىَ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ). الآية، أخرج قصتها ابن أبي حاتم وابن مروديه عن أبي الأسود قال: اختصم رجلان إلى النبي  صلى الله عليه وسلم  فقضى بينهما، فقال الذي قضى عليه: ردَّنا إلى عمر بن الخطاب، فأتَيا إليه فقال الرجل: قضى لي رسول الله  صلى الله عليه وسلم  على هذا، فقال: ردَّنا إلى عمر، فقال: أكذاك؟ قال: نعم، فقال عمر: مكانكما حتى أخرج إليكما فخرج إليهما مشتملاً على سيفه، فضرب الذي قال: ردَّنا إلى عمر فقتله، وأدبر الآخر. فقال: يا رسول الله، قتل عمر واللهِ صاحبي، فقال: “ما كنت أظن أن يجترئ عمر على قتل مؤمن”، فأنزل الله: (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ) الآية. فأهدر دم الرجل، وبرئ عمر من قتله.
– في الاستئذان في الدخول، وذلك أنه دخل عليه غلامه وكان نائماً فقال: اللهم حرِّم الدخول فنزلت آية الاستئذان: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ)الآية.
– لما أنزل اللّه على رسوله: (ثُلَّةٌ مِنَ الأوَّلينَ وَقَلِيلٌ مِنَ الآخِرِين). بكى عمر رضي الله عنه فقال: يا نَبِيّ الله، آمنا برسول اللّه  صلى الله عليه وسلم  وصدَّقناه، ومن ينجو منا قليل؟ فأنزل اللّه عز وجل: (ثلة مِنَ الأوَّلينَ وَثُلَّةٌ مِنَ الآخِرِين)فدعا رسول الله  صلى الله عليه وسلم  عمر رضي الله عنه فقال: “قد أنزل الله عز وجلّ فيما قلت” فقال عمر رضي الله عنه: “رضينا عن ربنا وتصديق نبينا”.


இன்னும் சில இறைவசங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உமர் (ரலி) அவர்கள் ஆசைப்பட்டதற்கிணங்க இறக்கியருளினான் என்பதை திருக்குர்ஆன், ஹதீஸ்களின் விரிவுரை நூற்களில் காணமுடிகின்றது.

மரணத்திற்குப் பின்னர் ஆசைப்பட்ட ஒருவரின் ஆசை..

فعَنْ طَلْحَةَ بْنِ خِرَاشٍ ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ:لَمَّا قُتِلَ عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ ، يَوْمَ أُحُدٍ ، لَقِيَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقَالَ : يَا جَابِرُ ، أَلاَ أُخْبِرُكَ مَا قَالَ اللهُ لأَبِيكَ ؟ (وَقَالَ يَحْيَى فِي حَدِيثِهِ : فَقَالَ : يَا جَابِرُ ، مَا لِي أَرَاكَ مُنْكَسِرًا ؟ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، اسْتُشْهِدَ أَبِي وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا ، قَالَ : أَفَلاَ أُبَشِّرُكَ بِمَا لَقِيَ اللهُ بِهِ أَبَاكَ ؟) قَالَ : بَلَى ، يَا رَسُولَ اللهِ ، قَالَ : مَا كَلَّمَ اللهُ أَحَدًا قَطُّ إِلاَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ، وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا ، فَقَالَ : يَا عَبْدِي ، تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ ، قَالَ : يَا رَبِّ ، تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً ، فَقَالَ الرَّبُّ سُبْحَانَهُ : إِنَّهُ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لاَ يَرْجِعُونَ ، قَالَ : يَا رَبِّ ، فَأَبْلِغْ مَنْ وَرَائِي ، قَالَ : فَأَنْزَلَ اللهُ ، تَعَالَى : (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ).أخرجه ابن ماجة (190) الألباني :حسن الظلال ( 602 ) ، التعليق الرغيب ( 2 / 190 - 191 ).

ஹழ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”என் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் உஹது போரில் கொல்லப்பட்ட போது நபி {ஸல்} அவர்கள் என்னை சந்தித்துஜாபிரே! ஏன் கவலையாக இருக்கிறீர்?” என விசாரித்தார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தை உஹதில் ஷஹீதாகிவிட்டார். அவர் குடும்பங்களையும் சில கடன்களையும் விட்டுச்சென்றுள்ளார். அவரின் கடனை அடைத்து, குடும்பத்தை எப்படி நடத்துவது? என யோசனை செய்து  கொண்டிருக்கிறேன் என்று நான் கூறினேன்.

அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அல்லாஹ் உன் தந்தையை எப்படி சந்தித்தான் என்று கூறட்டுமா? என கேட்டார்கள்.
அவசியம் கூறுங்கள் என்றேன்.

அல்லாஹ் யாருடனும் திரையின்றி பேசமாட்டான். ஆனால் உன் தந்தையுடன் நேரடியாக திரையின்றி பேசினான்: ”என் அடியானே!உனக்கு என்ன வேண்டும்?.நீ ஆசைப்படு. அதை உனக்கு நான் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான்.

அதற்கு, உன் தந்தை-ரப்பே! எனக்கு மீண்டும் உயிர் கொடு, அதை உனக்காக (நான் கொல்லப்பட்டு) திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றார்கள்.
அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன்,  இங்கு வந்தவர்கள் யாரும் திருப்பி உலகுக்கு அனுப்பபடமாட்டார்கள் என்ற என் தீர்ப்பு முந்திவிட்டது.என்று கூறியபோது-

அப்படியானால் என்னைப்பற்றிய செய்திகளையாவது என்னை பிரிந்துவாடும் என் குடும்பத்திற்கு எத்திவைப்பாயாக என கூறினார்கள். அப்போது அல்லாஹ்...

وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம். அவர்கள் உயிருள்ளவர்கள். அவர்கள் ரப்பிடம் உணவளிக்கப்படுகிறார்கள் என்ற ஆயத்தை இறக்கினான்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                ( நூல்: இப்னு கஸீர் )

எனவே, ஈருலகிலும் பயன் தருகிற அனைத்தையும் ஆசைப்படுவோம்!

அல்லாஹ்வே! எங்கள் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நஸீபைத் தந்தருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Thursday, 5 July 2018

உறவுகள்… அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை!!


உறவுகள்அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை!!



இரத்த உறவை தூக்கியெறிந்து நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்றைய சமூகத்தில் நிலவுவதை நாம் பார்க்கின்றோம்.

நட்புகளுக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் கால நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட ஒதுக்கத் துணிவதில்லை.

ஒன்றை நாம் மிகச்சரியாக விளங்கிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தேர்வு செய்து கொண்டவைகளாகும். இரத்த உறவு  என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தேர்வாகும்.

இன்னார் உன் தந்தை, இன்னார் உன் சிறிய தந்தை (அ) பெரிய தந்தை , இன்னார் மாமா, இன்னார் உன் சகோதரன் (அ) சகோதரி என்பது அல்லாஹ் செய்த தேர்வாகும்.

இந்தத் தேர்வுக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அதற்கான உரிமைகளை வழங்கி வாழ்வதும் ( இபாதத் ) மார்க்கக் கடமையாகும்.

இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் குடும்ப உறவுகள் என்பது அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கிய மகத்தான அருட்கொடையாகும்.

குர்ஆன் கூறும் உறவுகள்….

وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا

”மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்”                                              ( அல்குர்ஆன்: 25: 54 )

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

“திண்ணமாக! இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே! உங்கள் சகோதர உறவுகளை உங்களுக்கிடையே சரி செய்து கொள்ளுங்கள்”                                              ( அல்குர்ஆன்: 49: 10 )

1.   இரத்த உறவுகள் ( தந்தை, தாய் வழி உறவுகள்.
2.   திருமணத்திற்கு பிந்தைய ( மனைவியின் மூலம் வருகிற ) உறவுகள்.
3.   ஈமானிய ( சகோதரத்துவ உறவுகள்.

இந்த உறவுகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் என்பது அல் அர்ஹாம் எனும் இரத்த உறவுகளே!

وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ()

“அந்த அல்லாஹ்வுக்கே நிங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்த பந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்”.   ( அல்குர்ஆன்: 4: 1 )

உறவுகள்! அதன் மாண்பும்… மகத்துவமும்…

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِنَّ اللَّهَ خَلَقَ الخَلْقَ، حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ، قَالَتِ الرَّحِمُ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: نَعَمْ، أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَهُوَ لَكِ ” قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} (محمد: 22)” (صحيح البخاري : 5987)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்று கூறி(மன்றாடி)யது. அல்லாஹ்'ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்று கூறியது. அல்லாஹ் இது உனக்காக நடக்கும்' என்று சொன்னான். 

அதன்பின்னர் நபி (ஸல்) அவர்கள் 'நீங்கள் விரும்பினால் ”'(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

        
             عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، قَالَ: لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْجَفَلَ النَّاسُ عَلَيْهِ، فَكُنْتُ فِيمَنِ انْجَفَلَ، فَلَمَّا تَبَيَّنْتُ وَجْهَهُ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ، فَكَانَ أَوَّلُ شَيْءٍ سَمِعْتُهُ يَقُولُ: «أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصِلُوا الْأَرْحَامَ، وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ» مسند أحمد

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வந்த போது மக்கள் விரைந்தனர் விரைந்தோர்களில் நானும் ஒருவர் அப்பொழுது அவர்களின் முகம் எனக்கு தென்பட்டதும் நிச்சயமாக அவர்களின் முகம் பொய்யனின் முகம் இல்லை என்று நான் அறிந்து கொண்டேன். அப்பொழுது முதலில் அவர்கள் சொல்ல நான் கேட்டது ஸலாமை பரப்புங்கள், உணவளியுங்கள், உறவை பேணுங்கள்,மக்கள் உறங்குகையில் நீங்கள் தொழுங்கள் ஸலாமத்துடன் சுவனத்தில் நுழைவீர்கள் என்பதாகும். (அஹ்மத்: 23784)

        عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: ، وَكُلُّ رَحِمٍ آتِيَةٌ يَوْمَ الْقِيَامَةِ أَمَامَ صَاحِبِهَا، تَشْهَدُ لَهُ بِصِلَةٍ إِنْ كَانَ وَصَلَهَا، وَعَلَيْهِ بِقَطِيعَةٍ إِنْ كَانَ قَطَعَهَا  (الأدب المفرد للإمام البخاري : 73) قال الشيخ الألباني : صحيح الإسناد وصح مرفوعا

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்……. ”ஒவ்வொரு உறவும் மறுமையில் உறவுக்காரன் முன்னால், அவன் அவ்வுறவை பேணி இருந்தால் பேணினான் என்றும், முறித்திருந்தால் முறித்தான் என்றும் சாட்சி சொல்லும்" என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                 ( நூல்: அல்அதபுல் முஃப்ரத் : 73)


 யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) நூல் : புகாரி.

عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ، فَقَالَ القَوْمُ: مَا لَهُ مَا لَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَبٌ مَا لَهُ» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ، ذَرْهَا» قَالَ: كَأَنَّهُ كَانَ عَلَى رَاحِلَتِهِ. (صحيح البخاري : 5983)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து விடக் கூடிய ஒரு அமலை சொல்லித் தாருங்கள் என்றார். அப்போது மக்கள் 'இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?' என்று கூறினார்கள். அதற்கு. நபி(ஸல்) அவர்கள் நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்துவீராக, ஸகாத்தும் கொடுத்துவருவீராக!, குடும்ப உறவைப் பேணிக்கொள்வீராக! என்று கூறிவிட்டு 'உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) நூல் : புகாரி)
 
        
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»

யார் தனக்கு ரிஸ்கி (வாழ்வாதாரத்தி) ல் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக் கொள்ளட்டும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ( நூல் : புகாரி )

عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ ح فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بِمِثْلِهِ سَوَاءً قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامٍ فِي حَجْرِي مِنْ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ عَلَى الْبَابِ حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي فَمَرَّ عَلَيْنَا بِلَالٌ فَقُلْنَا سَلْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لَا تُخْبِرْ بِنَا فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ مَنْ هُمَا قَالَ زَيْنَبُ قَالَ أَيُّ الزَّيَانِبِ قَالَ امْرَأَةُ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவாகள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள்.

நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும்  அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.

அதற்கு, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்'  எனக் கூறிவிட்டார்.

எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது, நபி {ஸல்} அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது.

அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் ”எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்! நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்” எனக் கூறினோம்.

உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்?எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.    

உறவுகளைப் பேணுவதன் எல்லைகள்…

           
عن أبي هريرة رضي الله عنه أن رجل جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن لي قرابة أصلهم ويقطعوني وأحسن إليهم ويسيئون إليَّ وأحلم عنهم ويجهلون عليَّ، فقال صلى الله عليه وسلم: « لئن كنت قلت فكأنما تسفهم المل، ولا يزال معك من الله ظهير عليهم ما دمت على ذلك» رواه مسلم.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதர் நபி {ஸல்} அவர்களின் திருமுன் வந்து நின்றுஅல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவுகள் இருக்கின்றார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் மிகச் சரியாக நிறை வேற்றி வருகின்றேன். ஆனால், அவர்களோ என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்கின்றேன்.

ஆனால், அவர்களோ என்னுடன் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர்.நான் அவர்களோடு பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் நடந்து கொள்கின்றேன். ஆனால், அவர்களோ என்னுடன் மிகவும் அறிவீனமாக நடந்து கொள்கின்றனர்என்று முறையிட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால், அது அவர்களின் முகத்தில் கரி பூசுவதைப் போன்றதாகும்.

அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான்; இதே பண்பில் நீர் நிலைத்திருக்கும் வரை!” என்று பதில் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)
                       
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ وَالْحَسَنِ بْنِ عَمْرٍو وَفِطْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ سُفْيَانُ لَمْ يَرْفَعْهُ الْأَعْمَشُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கின்றார்கள் ”பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                ( நூல் : புகாரி )

நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பும்  நபித்துவம் வழங்கப்பட்டதற்கு பின்பும் மாநபி {ஸல்} அவர்கள் உயர் குணங்களில் ஒன்று உறவுகளை அரவணைப்பது.....

قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ وَيَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ

அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்திருந்த முஸ்லிம் (ஸஹாபாக்) களிடம் ஹிர்கல் மன்னர் ”நபிகளாரின் நபித்துவத்தைப் பற்றியும், நபிகளாளின் பிரச்சாரத்தைப் பற்றி ”அவர் உங்களுக்கு என்ன செய்யும்படி கட்டளையிடுகிறார்?” என்று கேட்டார்.

அதற்கு, முஸ்லிம் (ஸஹாபாக்) கள் முஹம்மத் {ஸல்} அவர்கள் ”அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்! அவனுக்கு எதனையும், யாரையும் இணையாக்காதீர்கள்! உங்கள் மூதாதையர்களின்  (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள்!” எனக் கூறுகின்றார்கள். தொழுகையை நிறைவேற்றும் படியும், ஸகாத் கொடுக்கும் படியும், உண்மை பேசும் படியும், சுயமரியாதையுடன் வாழும் படியும், உறவுகளைப் பேணி வாழும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார்கள்” என்று சொன்னேன்” என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                                ( நூல்: புகாரி )                   
فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الْخَبَرَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ

ஹிராவில் இருக்கும் போது இறங்கிய இறைவசங்களை இதயத்தில் சுமந்தவாறு இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர்) கதீஜா  (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள்! எனக்குப் போர்த்திவிடுங்கள்! என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திட இதயத்தின் படபடப்பு அவர்களை விட்டும் அகன்றது.

பின்னர், கதீஜா (ரலி) அவர்களிடம் நடந்தவற்றை விவரித்துவிட்டு எனக்கேதும் நடந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று நபி {ஸல்} அவர்கள் சொன்னார்கள்.

அது கேட்ட கதீஜா (ரலி) அவர்கள் அப்படியெல்லாம் உங்களுக்கேதும் நேராது.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான்! (ஏனெனில்) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்ந்து வருகின்றீர்கள்! (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்! வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்! விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் சிக்கிக் கொண்டோருக்கு உதவி செய்கின்றீர்கள்! ( அதனால் நீங்கள் உங்களுக்கேதும் நடந்து விடுமோ என அஞ்ச வேண்டியதில்லை )'' என்று ஆறுதல் கூறினார்கள்.   ( நூல்: புகாரி )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்விலிருந்து....

ذكر الهيثمي في "مجمع الزوائد" عن أنس بن مالك رضي الله عنه قال: لما ماتت فاطمة بنت أسد بن هاشم أم علي رضي الله عنهما، دخل عليها رسول الله صلى الله عليه وسلم فجلس عند رأسها فقال: "رحمك الله يا أمي، كنت أمي بعد أمي، تجوعين وتشبعيني، وتعرين وتكسيني، وتمنعين نفسك طيباً وتطعميني، تريدين بذلك وجه الله والدار الآخرة".
 ثم أمر أن تغسل ثلاثاً فلما بلغ الماء الذي فيه الكافور سكبه رسول الله صلى الله عليه وسلم بيده، ثم خلع رسول الله صلى الله عليه وسلم قميصه فألبسها إياه، وكفنها ببرد فوقه، ثم دعا رسول الله صلى الله عليه وسلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاماً أسود يحفرون، فحفروا قبرها،  فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه وسلم بيده وأخرج ترابه بيده، فلما فرغ دخل رسول الله صلى الله عليه وسلم فاضطجع فيه فقال: "الله الذي يحيي ويميت، وهو حي لا يموت، اغفر لأمي فاطمة بنت أسد، ولقنها حجتها، ووسِّع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين". وكبر عليها أربعاً، وأدخلوها اللحد هو والعباس وأبو بكر الصديق رضي الله عنهم. (رواه الطبراني والحاكم وابن ابي خيثمة وابن حبان)
وذكر السمهودي في كتابه "وفاء الوفا" أن رسول الله صلى الله عليه وسلم قد دفن فاطمة بنت أسد بن هاشم بالروحاء في المدينة المنورة.


அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!என்று துஆ செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )

عن نافع عن ابن عمر قال: لما توفي عبد الله بن أبي بن سلول جاء ابنه عبد الله إلى رسول الله صلى الله عليه وسلم وسأله أن يعطيه قميصه ليكفنه فيه فأعطاه، ثم سأله أن يصلي عليه فقام رسول الله صلى الله عليه وسلم يصلي عليه فقام عمر بن الخطاب فأخذ بثوبه فقال: يا رسول الله تصلي عليه وقد نهاك الله عنه، فقال رسول الله " إن ربي خيرني فقال استغفر لهم أو لا تستغفر لهم، إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم وسأزيد على السبعين " فقال إنه منافق أتصلي عليه ؟ فأنزل الله عز وجل  وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ وفي رواية للبخاري وغيره قال عمر: فقلت يا رسول الله تصلي عليه وقد قال في يوم كذا وكذا، وقال في يوم كذا وكذا وكذا ! ! فقال " دعني يا عمر فإني بين خيرتين، ولو أعلم أني إن زدت على السبعين غفر له لزدت " ثم صلى عليه فأنزل الله عز وجل وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ الآية.قال عمر: فعجبت من جرأتي على رسول الله صلى الله عليه وسلم

நயவஞ்சகர்களின் தலைவராகச் செயல்பட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் இறந்த போது, அவருடைய மகனார் அப்துல்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தைக்கு கஃபனாக தாங்கள் அணிந்திருக்கும் ஆடையைத் தரவேண்டும் என்றும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் தான் என் தந்தைக்கு தொழ வைக்க வேண்டும் எனவும் வேண்டி நின்றார்.

நபி {ஸல்} அவர்கள் அவரின் வேண்டுகோளுக்கு இசைவு தந்தார்கள். நபி {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழுகைக்காக தொழ வைக்க நின்ற போது உமர் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டாமென தடுத்தார்கள்.

وقال سفيان بن عيينة عن عمرو بن دينار سمع جابر بن عبد الله يقول: أتى رسول الله صلى الله عليه سلم قبر عبد الله بن أبي بعدما أدخل حفرته فأمر به فأخرج فوضعه على ركبتيه - أو فخذيه -ونفث عليه من ريقه وألبسه قميصه. فالله أعلم. في صحيح البخاري هذا الاسناد مثله وعنده لما كان يوم بدر أتي بأسارى، وأتي بالعباس ولم يكن عليه ثوب، «فنظر النبي صلى الله عليه وسلم له قميصا، فوجدوا قميص عبد الله بن أبي يقدر عليه، فكساه النبي صلى الله عليه وسلم إياه، فلذلك نزع النبي صلى الله عليه وسلم قميصه الذي ألبسه» قال ابن عيينة كانت له عند النبي صلى الله عليه وسلم يد فأحب أن يكافئه
 رواه البخاري، كتاب الجهاد والسير، باب الكسوة للأسارى

ஆனாலும், நபி {ஸல்} அவர்கள் தொழவைத்தார்கள். வரலாற்று ஆசிரியர்கள் நபி {ஸல்} அவர்கள் ஏன் தொழ வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் காரணத்தை கூறுகின்றார்கள்.

பத்ரில் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த கைதிகள் ஒரு நாள் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். நபி {ஸல்} அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களும் அப்போது கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் முஸ்லிமாக இருக்கவில்லை.

நபி {ஸல்} அவர்கள் கைதிகளுக்கு குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு போர்வை வழங்குமாறு ஸஹாபாக்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். எல்லா கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஆனால், அப்பாஸ் அவர்களுக்கு வழங்க போர்வை ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி அப்பாஸ் அவர்களுக்கு கொடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரம் செய்யும் முகமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.                                                       ( நூல்: புகாரி )

قال ابن إسحاق: ومر رسول الله صلى الله عليه وسلم بدار من دور الأنصار من بني عبد الأشهل وظفر فسمع البكاء والنوائح على قتلاهم فذرفت عينا رسول الله صلى الله عليه وسلم فبكى ثم قال: لكن حمزة لا بواكي له! فلما رجع سعد بن معاذ وأسيد ابن خضير إلى دار بني عبد الأشهل أمر نساءهم أن يتحزمن ثم يذهبن فيبكين على عم رسول الله صلى الله عليه وسلم.
قال ابن إسحاق: حدثني حكيم بن حكيم عن عباد بن حنيف عن بعض رجال بني عبد الأشهل قال: لما سمع رسول الله صلى الله عليه وسلم بكاءهن على حمزة خرج عليهن وهن على باب مسجده يبكين عليه فقال: ارجعن يرحمكن الله فقد آسيتن بأنفسكن.

உஹத் 70 ஷுஹதாக்களைத் தந்த யுத்தகளம். அண்ணலாரும், அருமைத் தோழர்களும் மதீனாவின் எல்கையைத் தாண்டி ஊருக்குள் பிரவேசித்த தருணம் அது.

ஷஹீத்களின் குடும்பத்தார்கள் தங்களின் குடும்பத்தினர் சகிதமாக வந்து உஹதில் ஷஹீதானவர்களின் நிலை கேட்டு அழுத வண்ணம் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புகழ்பெற்ற பனூ அப்துல் அஷ்ஹல், ளஃபர் கோத்திரத்தாரைக் கடந்து செல்கின்றார்கள். உஹதில் அதிக உயிர்களை அல்லாஹ்விற்காகத் தந்த கோத்திரம் அது.

பனூ அப்துல் அஷ்ஹல், ளஃபர் குலத்துப் பெண்கள் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்களில் சிலர் தங்களின் கணவன்மார்களை, சிலர் தங்களின் தந்தைமார்களை, சிலர் தங்களின் சகோதரர்களை, சிலர் தங்களின் வாரிசுகளை இழந்திருந்தனர்.

இளகிய மனம் படைத்த அண்ணல் நபி {ஸல்} அவர்களால் அழுகையை அடக்க முடியவில்லை. அண்ணலாரின் இரு கண்களும் கண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தன.

ஒரு கணம் அப்படியே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழுகையை நிறுத்தி விட்டு எம் பெரிய தந்தையின் இழப்பு எவ்வளவு பெரிய இழப்பு, அவருக்காக அழ இங்கு ஒருவரும் இல்லையே!?” என நபி {ஸல்} அவர்கள் கூறிவிட்டு அங்கிருந்து மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி சென்று விடுகின்றார்கள்.

பனூ அப்துல் அஷ்ஹல் குலப் பெண்கள் இந்த வார்த்தையை தங்களின் குலத்தலைவர்களில் இருவரான ஸஅத் இப்னு முஆத் (ரலி), உஸைத் இப்னு ஹுளைர் (ரலி) ஆகியோரிடம் தெரிவித்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்படியா கூறினார்கள்? என்று கேட்ட இருவரும் தங்களின் குடும்பப் பெண்களையும், குலப்பெண்களையும் அழைத்துக் கொண்டு மாநபியின் மஸ்ஜிதுக்கு வருகை தந்து, மஸ்ஜிதின் வாயிலில் நின்று, “என் குலப் பெண்களே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களுக்காக நீங்கள் அழுங்கள்!என்று கூறினார்கள்.

மஸ்ஜிதுக்கு முன் நின்று அன்ஸாரிப் பெண்கள் அழுகின்றார்கள் என்பதைக் கேள்வி பட்ட அண்ணலார் ஓடி வருகின்றார்கள்.

அன்ஸாரிப் பெண்களே! பனூ அப்துல் அஷ்ஹல் குலப் பெண்களே! ஏன் அழுகின்றீர்கள்? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! தங்களின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக நாங்கள் அழுகின்றோம்என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். பெண்களே! நீங்கள் உங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள்! இந்த நபியின் குடும்ப இழப்பிற்காக அழுத உங்கள் வாழ்க்கையில் அல்லாஹ் அருள் புரிவான்!என துஆ செய்து அனுப்பி வைத்தார்கள்.           ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )

روى مُحَمَّد بن إسحاق عن نافع وزيد بن أسلم، عن ابن عُمر، وعن سعيد بن أبي المقبري، وابن المنكدر عن أبي هريرة، وعن عَمَّار بن ياسر، قالوا: قد قدمت دُرَّة بِنْت أبي لهب المدينة مهاجرةً، فنزلت في دار رافع بن المعلّي الزرقيّ، فقال لها نسوة جلسْنَ إليها من بني زريق: أنتِ ابِنة أبي لهب الذي يقول الله له: " تبّت يدا أبي لهب وتبّ " فما يغني عنكِ مهاجرتكِ؟ فأتت دُرَّة النَّبِيّ صلّى الله عليه وسلّم فذكرت له ما قلن لها فسكّنها وقال: " اجلسي " . ثم صلى بالناس الظهر، وجلس على المنبر ساعةً ثم قال: " أيها الناس، ما لي أُوذى في أهلي؟ فوالله إن شفاعتي لتنال بقرابتي حتى إن صُداءَ وحكماً وسلهماً لتنالها يوم القيامة وسِلْهَمُ في نسب اليمن " .
அண்ணல் நபிகளாரின் அவைக்கு அழுத வண்ணமாக ஓடோடி வருகின்றார் துர்ரா பின்த் அபூலஹப் (ரலி) என்ற பெண்மணி.

மிகவும் ஆர்வத்தோடு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்மணிகளில் அவரும் ஒருவர்.

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணத்தின் பதிவேட்டில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அந்தப் பெண்மணியின் அழுகையைப் பார்த்து அண்ணலாரின் திரு முகம் கூட மாறிப் போனது.

காரணம் கேட்கின்றார்கள் நபிகளார். அந்தப் பெண்மணி அன்ஸாரிப் பெண்மணிகளில் பனீ ஸரீக் குடும்பப் பெண்கள் தன்னை சுடு வார்த்தைகளால் காயப் படுத்தி விட்டதாகஅழுது கொண்டே கூறினார்கள்.

அவர்களின் கரம் பற்றிப் பிடித்து, ஆறுதல் கூறி அமர வைத்தார்கள். அப்போது ளுஹர் தொழுகைக்கான நேரமாக அது இருந்தது.

துர்ரா (ரலி) அவர்கள் வேறு யாருமல்ல. அண்ணலாரின் மிக நெருங்கிய உறவினரான அபூ லஹபின் மகள் தான்.

இப்போது நமக்கு புலப்பட்டிருக்கும் பனூ ஸரீக் பெண்மணிகள் எத்தகைய வார்த்தைகளால் துர்ரா (ரலி) அவர்களைக் காயப் படுத்தியிருப்பார்கள் என்று.

ஆம்! இப்படிச் சொன்னார்களாம்: உமது தந்தை அபூலஹபின் கேட்டினாலும், உமது தாயின் தகாத செயலினாலும், அண்ணலாரின் மீது கொண்டிருந்த தீராத பகமையினாலும் அல்லாஹ் உமது தாயையும், தந்தையையும் சபித்து ஒரு சூராவையே தனது குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளான். நீ ஹிஜ்ரத் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லை என்று.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ளுஹர் தொழுகைக்குப் பின்னர், மிம்பரின் மீதேறிமக்களே! என் குடும்பத்தார்களின் விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் நோவினைப் படுத்தாதீர்கள்.என்று கூறினார்கள்.

பின்னர், துர்ரா (ரலி) அவர்களை தமதருகே அழைத்து எவர் உம்மை கோபப்படுத்துவாரோ, அவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னைச் சார்ந்தவள். நான் உன்னைச் சார்ந்தவன்.என்று கூறினார்கள்.

பின்னர், இது பற்றி அறிந்த அப்பெண்மணிகள் தமது தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள். ( நூல்: உஸ்துல் ஃகாபா, தபகாத் இப்னு ஸஅத், அல் இஸ்தீஆப். )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் உறவுகளுடைய உரிமைகளையும், கடமைகளையும் பேணி நடக்கிற, உறவுகளுக்கு உபகாரம் செய்து வாழ்கிற, உறவுகளோடு இணைந்தே வாழ்கிற நல்ல தௌஃபீக்கை வழங்குவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!