அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 23.
நமது சபைகளை நபி ﷺ அவர்களின் சபை போல் அமைப்போம்!!!
22 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
23 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல் வாகிஆ, அல் ஹதீத், அல் முஜாதலா,
அல் ஹஷ்ர் ஆகிய நான்கு சூராக்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அல் முஜாதலா சூராவின் 11 வது வசனத்தில்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சபை நாகரிகம் பேணுவதன் அவசியம் குறித்து பேசுகின்றான்.
یٰۤاَیُّهَا
الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قِیْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِی الْمَجٰلِسِ
فَافْسَحُوْا یَفْسَحِ اللّٰهُ لَكُمْ وَاِذَا قِیْلَ انْشُزُوْا فَانْشُزُوْا
یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ
دَرَجٰتٍ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ
இறைநம்பிக்கை
கொண்டவர்களே! சபைகளில் ”நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச்
சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு
இடங்கொடுப்பான்;
தவிர, ‘எழுந்திருங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம்
அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் – அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 58: 11 )
இஸ்லாமிய
மார்க்கம் மற்ற மதங்களை விடவும், மற்ற சித்தாந்தங்களை
விடவும் பல வகைகளில் சிறந்து விளங்கிறது.
இஸ்லாம் சிறந்து
விளங்குவதற்கான பிரதான காரணங்களில் ஒன்று, அதன் கொள்கைகள், இரண்டாவது மனித வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த வழிகாட்டல்களும் நல்ல
அறிவுரைகளும்தான்.
அந்த வகையில்
இரண்டு பேரோ அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களோ சேர்ந்து ஒன்றாக ஓரிடத்தில்
அமர்ந்து பேசவும் கேட்கவும் செய்தால் அதற்கு சபை என்று பெயர்.
அந்த சபையில்
அமர்ந்திருக்கும் நபர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நேர்த்தியான
முறையில் வழிகாட்டி இருக்கிறது. அழகிய அறிவுரைகளால் செம்மை படுத்துகிறது.
எந்த சபையாக
இருந்தாலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் அவனுக்கு அந்த சபை இம்மைக்கும்
மறுமைக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்று இஸ்லாம்
வலியுறுத்துகிறது.
இன்றைய நமது
சபைகளை நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். நாலு பேர் சேர்ந்து அமர்ந்தாலே
கேலியும் கிண்டலும் பிறரைப் பற்றிய புறமும் அடுத்தவரை அவமதிப்பு செய்வதும் என பல
பாவங்கள் கரை புரண்டோடுகிற இடமாக காட்சி தருகிறது.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ
عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ
عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا
تَنَابَزُوْا بِالْاَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ
وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
இறைநம்பிக்கையாளர்களே!
எந்த ஒரு பிரிவினரும் மற்றெந்த பிறிவினரையும் பரிகாசம் செய்யவேண்டாம், ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம், எந்தப்பெண்களும் மற்றெந்த பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை
அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாகயிருக்கலாம் ஒருவரையொருவர் குறித்துப் பேச
வேண்டாம்,
ஒருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச்சூட்டி
அழைக்கவேண்டாம்.இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர் சூட்டுவது மிகவும்
கெட்ட விஷயமாகும்.எவர்கள் இந்த நடவடிக்கையைக் கைவிடவில்லையோ அவர்கள் தான்
கொடுமைக்காரர்கள்.”
( அல்குர்ஆன்: 49: 11 )
فقال ابن عباس : نزلت في ثابت بن قيس بن شماس كان في أذنه وقر ، فإذا
سبقوه إلى مجلس النبي - صلى الله عليه وسلم - أوسعوا له إذا أتى حتى يجلس إلى جنبه
ليسمع ما يقول ، فأقبل ذات يوم وقد فاتته من صلاة الفجر ركعة مع النبي - صلى الله
عليه وسلم - ، فلما انصرف النبي - صلى الله عليه وسلم - أخذ أصحابه مجالسهم منه ،
فربض كل رجل منهم بمجلسه ، وعضوا فيه فلا يكاد يوسع أحد لأحد حتى يظل الرجل لا يجد
مجلسا فيظل قائما ، فلما انصرف ثابت من الصلاة تخطى رقاب الناس ويقول : تفسحوا
تفسحوا ، ففسحوا له حتى انتهى إلى النبي - صلى الله عليه وسلم - وبينه وبينه رجل
فقال له : تفسح . فقال له الرجل : قد وجدت مجلسا فاجلس! فجلس ثابت من خلفه مغضبا ،
ثم قال : من هذا ؟ قالوا فلان ، فقال ثابت : ابن فلانة! يعيره بها ، يعني أما له
في الجاهلية ، فاستحيا الرجل ، فنزلت
ஸாபித் இப்னு கைஸ்
(ரலி) என்கிற நபிதோழர்,
அவரின் காதில் அடைப்பு ஏற்பட்டு செவித்திறன்
பாதிக்கப்பட்டிருந்தார்கள்.எனவே, பள்ளியில் அவர்
நுழைந்தால் நபி ﷺ
அவர்களின் உரையாடலை நபி ﷺ
அவர்களின் அருகில் அமர்ந்து கேட்கும் விதமாக நபித் தோழர்கள் அவருக்கு வசதி செய்து
கொடுப்பார்கள். ஒரு நாள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கு தாமதமாக வந்தார்கள். தொழுது
முடித்ததும் நபித்தோழர்கள் தத்தமது இடங்களில் அமர்ந்து கொண்டார்கள்,
அவர்களுக்கு
பின்னால் இருந்து வழிவிடுங்கள், வழிவிடுங்கள், என்று சொல்லிக் கொண்டெ முன்னால் ஒவ்வொருவராகத் தாண்டி அமர்ந்திருந்த ஒருவரிடம்
வந்து விட்டார்கள். முன்னால் அமர்ந்திருந்த அவரிடம் ஸாபித் (ரலி) வழி விடுங்கள், என்றார்கள். அதற்கவர் இடம் தான் கிடைத்து விட்டதே! கிடைத்த இடத்தில்
உட்காருங்கள். என்று கூறிவிட்டார்
கோபத்துடன்
அவ்விடத்தில் அமர்ந்துகொண்டார்கள் ஸாபித் (ரலி) அதிகாலை நேரத்தின் இருள் விலகி
வெளிச்சம் பரவத் தொடங்கியதும், முன்னால் அமர்ந்திருவர்
யார்? என அக்கம் பக்கத்திலிருந்த்வர்களிடம் விசாரித்துவிட்டு, ஓ! நீ இன்னாருடைய மகனா?அறியாமை காலத்தில் அம்மனிதரின் தாயார் இருந்த நிலையைச் சுட்டிக்காட்டி கொஞ்சம்
சப்தமாக கேட்டு விட்டார்கள். அந்த சபையினர் அனைவரும் அம்மனிதரை நோக்க அம்மனிதர்
வெட்கத்தாலும்,
அவமானத்தாலும் தன் தலையை தாழ்த்திக்கொண்டார். அப்போது, தான் மேற்கண்ட 49:
11 வசனம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். இதன் பின்னர் ஸாபித் (ரலி) அவர்கள் இனி எப்போதும் நான் யாரையும்
அவமதிப்பு செய்யமாட்டேன்! என்று உறுதி பூண்டார்கள். ( நூல்: திர்மிதி )
தம் இயலாமையை
புரிந்து கொள்ளாத ஒருவரை,
உணர்ச்சி வசப்பட்டு சபையில் இடம் தர மறுத்தவரை, தகாத வார்த்தைகளால் பேசியதற்காக, பேசிய அந்த மனிதரை
நெறிப்படுத்தும் முகமாக அல்லாஹ் உடனடியாக அந்த சபையிலேயே வசனத்தை இறக்கியருளி
வழிகாட்டினான் என்றால் நான்கு பேர் அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் கூடுகிற ஒரு
சபை எவ்வளவு நாகரிகத்தோடு இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் உணர்த்துகிறான் என்று
நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
நமது சபைகளும்... நமது நபி ﷺ
அவர்களின் சபைகளும்...
ஒரு
சபைக்கு வரும் நபர் ஒருவர் ஒரு கவலையுடன் வருவார். வேறொருவர் நிம்மதி தேடி
வருவார். இன்னொருவர் ஏதேனும் ஒன்றை புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று
வருவார். இப்படியாக இருவருக்கும் மேல் அமர்கிற ஒரு சபையில் வரும் ஒவ்வொருவரும் ஒரு
நோக்கம் இருக்கும். நம் சபைகளில் வந்து அமர்கிற எல்லோருக்கும் அவர்களின் நோக்கம்
நிறைவேறுகிறதா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல
வேண்டும்.
ஏனெனில், நாம் சபையாக கூடி அமர்வதன் நோக்கமே தவறாக இருக்கிறது.
அல்லது எந்த நோக்கமும் இல்லாத வெட்டிச் சபையாக இருக்கிறது.
நாம்
நமக்கு முன்மாதிரியான நமது நபி ﷺ அவர்களின் சபை போன்று நம் சபைகளை
அமைத்துக் கொண்டோம் என்றால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.
ஒரு
சபை என்றால் அந்த சபை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நபி ﷺ அவர்களின் சபையே நமக்கு முன்மாதிரி
ஆகும்.
அங்கே
மகிழ்ச்சி நிலவும். அங்கே அன்பு ததும்பும். அங்கே நிம்மதி தழுவும். அங்கே அறிவு
கிடைக்கும். அங்கே சஞ்சலம் தீரும். அங்கே நன்மைகள் கிடைக்கும். அங்கே ஒழுக்கம்
ஓங்கும். அங்கே மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா மனிதவள மேம்பாடுகளும் கிடைத்தன.
அதைப் பெற்றுக் கொண்ட நபித்தோழர்கள் வாழும் காலமெல்லாம் தம் நெஞ்சங்களில் மாநபி ﷺ அவர்களின் சபையை
நினைவு கூறிக் கொண்டே இருந்தார்கள்.
தீர்வும், விடியலும் கிடைக்கும் சபையாக....
حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى
حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ
بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - إِذْ جَاءَهُ
رَجُلٌ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ . قَالَ « مَا لَكَ » . قَالَ
وَقَعْتُ عَلَى امْرَأَتِى وَأَنَا صَائِمٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله
عليه وسلم - « هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا » . قَالَ لاَ . قَالَ « فَهَلْ
تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ » . قَالَ لاَ . فَقَالَ «
فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا » . قَالَ لاَ . قَالَ فَمَكَثَ
النَّبِىُّ - صلى الله عليه وسلم - ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِىَ
النَّبِىُّ - صلى الله عليه وسلم - بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالْعَرَقُ
الْمِكْتَلُ - قَالَ « أَيْنَ السَّائِلُ » . فَقَالَ أَنَا . قَالَ « خُذْهَا
فَتَصَدَّقْ بِهِ » . فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّى يَا رَسُولَ
اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الْحَرَّتَيْنِ - أَهْلُ
بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِى ، فَضَحِكَ النَّبِىُّ - صلى الله عليه وسلم
- حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ « أَطْعِمْهُ أَهْلَكَ » .
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி ﷺ அவர்களுடன் அமர்ந்திருந்த சபைக்கு ஸுலைமான் இப்னு
ஸஃக்ர் அல்பயாளீ (ரலி) எனும் நபித்தோழர் வந்தார். வந்தவர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் “உமக்கு என்ன நேர்ந்தது?”
என்று வினவினார்கள். நான் ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு
என் மனைவியுடன் பகலில் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று ஸுலைமான் (ரலி) பதில் கூறினார்கள்.
அப்போது, மாநபி ﷺ அவர்கள் “இதற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “என்னால் இயலாது” என்றார்.
அப்படியானால், ”இரண்டு மாதங்கள் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும் உம்மால் இயலுமா?” என்று நபி ﷺ
அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறிவிட்டார்.
அப்படியென்றால், அதற்குப் பரிகாரமாக “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். உம்மால் இயலுமா?” என்று நபி ﷺ
அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறி விட்டார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கொஞ்ச நேரம் அப்படியே எங்களுடனே
அமர்ந்திருந்தார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் முன்பாக பேரீத்தம் பழங்கள் நிறைந்த “அரக்”
எனும் பெரிய கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது.
அப்போது, நபி ﷺ அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?”
என்றார்கள். ”இதோ நான்
இங்கிருக்கின்றேன்”
என்று கூறி ஓரிடத்திலிருந்து எழுந்து நபி ﷺ அவர்களின் அருகே வந்தார்.
”பேரீத்தம் பழக்கூடையை
நீர் எடுத்துச் சென்று உம்முடைய அந்தச் செயலுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்குத் தர்மம்
செய்வீராக!”
என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
அப்போது, அவர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்குத் தானே நான் தர்மம் செய்ய
வேண்டும்?”
அப்படியானால், இதோ தெரிகிற மதீனாவின்
இரு கரும்பாறைகளுக்கு –
மலைகளுக்கு இடையே வசிப்போரில் என் குடும்பத்தாரை விடப் பரம
ஏழை யாருமில்லை”
என்று கூறினார்.
இதைக் கேட்ட நபி ﷺ அவர்கள் “தங்களது கடவாய்ப் பற்கள்
தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்; பிறகு, “இதை உம் குடும்படத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்று கூறினார்கள்.
( நூல்: புகாரீ, முஸ்லிம் )
தவறை மென்மையாக சுட்டிக் காட்டும் சபையாக....
عن معاوية
بن الحكم السُّلمي، قال: بينا أنا أُصلِّي مع رسول الله - صلَّى الله عليه وسلَّم
- إذ عَطَس رجلٌ من القوم، فقلتُ: يرحمك الله، فرماني القومُ بأبصارهم، فقلت:
واثُكل أُمِّياه! ما شأنكم تنظرون إليَّ؟! فجعلوا يضربون بأيديهم على أفخاذهم،
فلمَّا رأيتهم يُصمِّتونني، لكنِّي سكت، فلمَّا صلَّى رسول الله - صلَّى الله عليه
وسلَّم - فبأبي هو وأمي، ما رأيتُ معلِّمًا قبلَه ولا بعدَه أحسنَ تعليمًا منه،
فوالله ما كَهَرني ولا ضَرَبني ولا شتمني، قال: ((إنَّ هذه الصَّلاةَ لا يصلح فيها
شيءٌ من كلام الناس، إنَّما هو التسبيحُ والتكبير، وقراءة القرآن))، أو كما قال
رسول الله - صلَّى الله عليه وسلَّم - قلت: يا رسول الله، إنِّي حديثُ عهد
بجاهلية، وقد جاء الله بالإسلام، وإنَّ منَّا رجالًا يأتون الكُهَّان؟ قال: ((فلا
تأْتِهم))، قال: ومنَّا رجال يتطيَّرون؟ قال: ((ذاك شيءٌ يجدونه في صدورهم، فلا
يَصدنَّكم))، قال قلت: ومنَّا رجال يخطُّون؟ قال: ((كان نبيٌّ من الأنبياء يخطُّ،
فمَن وافق خطَّه فذاك))، قال: وكانت لي جاريةٌ ترعى غنمًا لي قِبل أُحد والجوانية،
فاطلعتُ ذات يوم، فإذا الذِّئبُ قد ذهب بشاة من غنمها، وأنا رجلٌ من بني آدم،
آسَفُ كما يأسفون، لكنِّي صككتُها صكَّة، فأتيتُ رسولَ الله - صلَّى الله عليه
وسلَّم - فعظَّم ذلك عليَّ، قلت: يا رسولَ الله، أفلا أعتقها؟ قال: ((ائتني بها))،
فأتيتُه بها، فقال لها: ((أينَ الله؟)) قالت: في السَّماء، قال: ((مَن أنا؟))
قالت: أنت رسول الله، قال: ((أعْتِقْها، فإنَّها مؤمنة))
முஆவியா பின்
அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு நாள்)
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர்
தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்”
(அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி)
கூறினேன்.
உடனே மக்கள் என்னை
வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள்
ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள்
அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும்
நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.
அவர்களுக்கு
முன்னரோ,
பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும்
ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.
அல்லாஹ்வின்
மீதாணையாக!
அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை,
அடிக்கவுமில்லை, திட்டவுமில்லை (மாறாக,)
அவர்கள்,“இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று” “தொழுகை என்பது
இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்”என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு
நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம்
செல்கிறார்களே?”
என்றேன். அதற்கு அவர்கள் “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள்.
நான் “எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?” என்றேன். அதற்கு நபியவர்கள் “இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது “அவர்களை”
அல்லது”உங்களை” (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்” என்று கூறினார்கள்.
நான், “எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு
முறையை மேற்கொள்)கின்றனர்”
என்றேன். அதற்கு அவர்கள், “நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு
வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்” என்றார்கள்.
அடுத்து என்னிடம்
ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள)
உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து
வந்தாள்.
ஒரு நாள் நான்
சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு
சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன்.
ஆயினும்,
அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக்
கடுமையாகக் கண்டித்தார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை
என்னிடம் அழைத்துவாருங்கள்!” என்று சொன்னார்கள்.
நான் அவளை
அழைத்துச் சென்றபோது அவளிடம், “அல்லாஹ் எங்கே
இருக்கின்றான்?”
என்று நபியவர்கள் கேட்டார்கள்.
அவள், “வானத்தில்” என்று பதிலளித்தாள். .நபி அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள்.
அவர்கள்
(என்னிடம்),
“அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்” என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )
தெளிவும் அறிவும் கிடைக்கும் சபையாக....
جلسَ
رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ على المنبرِ وجلَسنا حولَهُ فقالَ
إنَّما أخافُ عليْكم من بعدي ما يُفتَحُ لَكم من زَهرةٍ وذَكرَ الدُّنيا وزينتَها
فقالَ رجلٌ أوَ يأتي الخيرُ بالشَّرِّ فسَكتَ عنْهُ رسولُ اللَّهِ فقيلَ لَهُ ما
شأنُكَ تُكلِّمُ رسولَ اللَّهِ ولا يُكلِّمُكَ قالَ ورأينا أن يُنَزَّلُ عليْهِ
فأفاقَ يمسحُ الرُّحَضاءَ وقالَ أشاهدٌ السَّائلُ أنَّهُ لا يأتي الخيرُ بالشَّرِّ
وإنَّ مِمَّا يُنبتُ الرَّبيعُ يقتُلُ أو يُلِمُّ إلَّا أكلةُ الخَضِرِ فإنَّها
أَكلت حتَّى إذا امتدَّت خاصرتَها استقبلتَ عينَ الشَّمسِ فثلِطت ثمَّ بالت ثمَّ
رتَعت وإنَّ هذا المالَ خضِرةٌ حُلوةٌ ونِعمَ صاحبُ المسلمِ هوَ إن أعطى منْهُ
اليتيمَ والمسْكينَ وابنَ السَّبيلِ وإنَّ الَّذي يأخذُهُ بغيرِ حقِّهِ كالَّذي
يأْكلُ ولا يشبعُ ويَكونُ عليْهِ شَهيدًا يومَ القيامةِ
خلاصة
حكم المحدث : صحيح
الراوي
: أبو سعيد الخدري | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم
: 2580
அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், சொற்பொழிவு மேடைமீது
அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள்
"எனக்குப் பின்,
உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும், அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர்,
"அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை, தீமையை உருவாக்குமா?"
என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள்.
அப்போது அந்த
மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட நாங்கள் அவர்களுக்கு
இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு
நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள்.
பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்)
ஒவ்வொன்றும் (கால்நடைகளை),
வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்று விடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும்
கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப்
புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப்
படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும்
கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.
இந்த (உலகின்)
செல்வம் இனிமையும்,
பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து
ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை
அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற
வழிகளில் செல்வத்தை எடுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப்
போன்றவர் ஆவார். மேலும்,
மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக
அமையும்" என்று நபி ﷺ
கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
நல்லதை அறிவுறுத்தும் சபையாக...
وعن ابن
عمر رضي الله عنه قال: بينما أنا جالسٌ عند النبي صلى الله عليه وسلم، إذ أتاه رجل
فسلَّم عليه، ثم ولَّى عنه، قلت: يا رسول الله، إني لأُحب هذا في الله، قال: ((فهل
أعلمتَه ذاك؟))، قلتُ: لا، قال: ((فأعلِمْ ذاك أخاك))، فاتَّبَعْتُه فأدركتُه،
فأخذتُ بِمَنْكِبه، فسلَّمتُ عليه، وقلتُ: والله إني لأُحبك لله، قال هو: والله
إني لأُحبك لله، قلت: لولا أن النبي صلى الله عليه وسلم أمرَني أن أُعْلِمك، لم
أفعَل؛ [أخرجه ابن حبان].
இப்னு உமர் ரலி
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ﷺ அவர்களின் சபையில் அமர்ந்திருந்த ஒரு நாள் ஒருவர்
வந்தார். நபி ﷺ
அவர்களுக்கு ஸலாம் கூறி விட்டு வெளியே சென்றார். அவர் சென்றதும் நான் அல்லாஹ்வின்
தூதரே! இந்த மனிதரை அல்லாஹ்விற்காக நேசிக்கின்றேன்” என்றேன். அப்போது நபி ﷺ
அவர்கள் இதை அவரிடம் தெரிவித்து விட்டீரா? என்று கேட்டார்கள்.
அதற்கு நான் “இல்லை”
என்றேன். அப்போது நபி ﷺ அவர்கள் அப்படியானால் அவரிடம் இதை தெரிவித்து விடுங்கள்” என்றார்கள். நான் அவர் போன திசையில் சென்றேன். சிறிது தூரத்தில் அவரைக் கண்டு
கொண்டேன். அவரின் புஜத்தை பிடித்து “அவருக்கு ஸலாம் சொல்லி “அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கின்றேன்” என்றேன். அவரும் “நானும் அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கின்றேன்” என்று கூறினார். பின்பு நான் அவரிடம் “அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மாத்திரம் உம்மிடம் வந்து இவ்வாறு
தெரிவிக்குமாறு கூறியிருக்கவில்லை என்றால் நான் ஒரு போதும் கூறியிருக்க மாட்டேன்” என்றேன். ( நூல்: இப்னு ஹிப்பான்)
வாழ்வை வளப்படுத்த வழிகூறும் சபையாக...
عن أبي
مسعود قال: ( كان رسول الله يأمرنا بالصدقة، فما يجد أحدنا شيئاً يتصدق به؛ حتى
ينطلق إلى السوق، فيحمل على ظهره، فيجيء بالمدّ، فيعطيه رسول الله ، إني لأعرف
اليوم رجلاً له مائة ألف، ما كان له يومئذ درهم! ) رواه النسائي/ صحيح
النسائي:2528
அபூ மஸ்வூத் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் எங்களிடையே நபி ﷺ அவர்கள் அமர்ந்திருந்த போது எங்களிடம் தர்மம்
செய்யுமாறு கூறினார்கள்.
அப்போது எங்களில்
எவரிடமும் தர்மம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை. எங்களில் ஒருவர் கடை
வீதிக்குச் சென்று உழைத்து,
அதன் மூலம் கிடைத்த கூலியை ஒரு முத்து அளவிற்கு பெருமானார் {ஸல்}
அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
இப்போது நான்
அவரின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கின்றேன். அவரிடம் ஒரு லட்சம் திர்ஹம்
இருக்கின்றது. ஆனால்,
அண்ணலாரிடம் அவர் வந்து கொடுக்கும் முன்பு வரை அவரிடம் ஒரு
திர்ஹம் கூட இல்லை”.
( நூல்: நஸாயி )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது சபையின் தவறுகளை மன்னித்து, நம் அனைவருக்கும் அருள்
புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

