Thursday 16 May 2013

அணணல் நபி (ஸல்) அவர்களின் அரசியல் பண்புகள் !


அணணல் நபி (ஸல்) அவர்களின் அரசியல் பண்புகள் !
ஒரு வேளை ஜனநாயகத்தில் நாம் விரும்புகின்றவன் ஆட்சிக்கு வரலாம். ஆனால் ஒரு போதும் நம்மை விருன்புகின்றவன் ஆட்சிக்கு வரமாட்டான்!என்று ஒரு அறிஞன் சொன்னான்.
அது எவ்வளவு பெரிய உண்மை! என இன்று நடைபெறுகிற ஆட்சியினால் உணர முடிகிற்து
ஊழல் செய்பவன், கொளை &கொள்ளையில் ஈடுபடுபவன், ஜாதி வெறியை தூண்டுதுபவன்.என்று அரசியல் வதிக்கான இலக்கணங்கள் மாறிக் கொண்டிருக்கிற காலம்.
குழம்பிய குட்டையில் மீன் தேடிய கதையாய் முஸ்லிம்களும் அரசியல் பிரவேசம் கொண்டிருக்கும் இவ்வேளையில்...
அனைத்திற்கும் முன் மாதிரியான அல்லாஹ்வின் தூதரிடத்தில் அரசியலுக்கான முன் மாதிரியை எடுத்து நடப்பதுதான் உண்மையான ஒர் முஸ்லிமின் அடையாளம்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மதினாவில் அடியேடுத்து வைத்தஅடுத்தகணமே அகதிகள் பிரச்சனையை அடியேடு மாற்றியமைத்தார்கள். பல்வேறு இனத்தவரோடும், பல்வேறு கொள்ககை கொண்டோரோடும் இணக்கமான ஒப்பந்தங்களை ஏற்படுத்திசமய நல்லினக்கத்தை உருவாக்கினார்கள். பல்வேறு யுத்தங்களை சந்தித்ததின் முலம் முஸ்லிம்களின் ஆளுமைதிறனை வலுப்படுத்தினார்கள், பொருளாதார மேம்பாடு, வறுமைஒழிப்பு, தீமைக் கெதிரான போராட்டம், எனசமூக அக்கறையில் கவனம் செலுத்தினார்கள். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம்  என்கிற கொள்கை முழக்கத்தோடு, ஏகத்துவ எழுச்சியோடு, அல்லாஹ்வின் சட்டங்களுக்கே கட்டுபடுதல் என்கிறவலுவான கோட்பாட்டோடு அரசியல் பண்புகளை வகுத்துத்தந்து முதல் ஆட்சியாளராய், முன்மாதிரி ஆட்சியாளராய் வாழ்ந்துகாட்டினார்கள்.
அதன் பின்பு அமைந்தநேர்வழி நின்று நான்கு கலீஃபாக்களின் ஆட்சிமுறைமாநபி (ஸல்) அவர்களின் அரசியல் பண்புகளை Political Culture                    அரசியல் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியது.
எந்த சமூகம் அண்ணலாரின் அரசியல் பண்புகளை, கலாசாரத்தை புறந்தள்ளுகிறதோ,
நேர்வழியில் ஆட்சிபுரிந்த மாட்சிமை பொருந்திய கலீஃபாக்களின் அரசியல் மாண்புகளை புறந்தள்ளுமோ
அந்த சமூகம் அரசியலில் வீறுநடை போடமுடியாது, அதுமுஸ்லிம் சமுகமாக இருந்தாலும் ஜொலிக்கமுடியாது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.பனூ உமைய்யாக்கள் முதற்கொண்டு 469 ஆண்டு கால ஸ்பெயினின் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வீழ்ச்சி, உதுமானிய்ய பேரரசின் வீழ்ச்சி,
800 ஆண்டுகளாக மொகலாயர்களின் இஸ்லாமிய ஆட்ச்சியாளர்களின் வீழ்ச்சி
துருக்கி கமால் முஸ்தFபா வரை
அண்ணலாரின் அரசியல் கலாச்சாரத்தை விட்டும் மெல்ல விலகி, மாற்றாரின் கலாச்சாரத்தை நுகர்ந்து, பின்புதனதாக்கி அதன் பின் ஆட்சிமுறைமையாக்கியதனால் தான்.
அண்ணலார் ஒர் அரசியல் பண்பாளர்:
மதீனா தான் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர், மஸ்ஜிதுத் நபவீதான் தலைமைச் செயலகம், அதற்கு அருகாமையில் ஈத்த மர நாரினால் வேயப்பட்டிருந்த குடிசை வீடுதான் ஆட்சித்தலைவரின் வீடு குறுகளான வீடு, வயிறு நிறம்ப சாப்பிட்டதில்லை, மூன்று நாட்கள் கூடதொடர்ந்து அண்ணலாரின் வீட்டில் அடுப்பு எரிந்ததில்லை, விளக்குக்கு எண்ணை இல்லை, ஆதலால் வெளிச்சம் இல்லை, பைத்துல்மால் - எனும் பொது சொத்தில் தங்களுக்கும், தமது குடும்பத்தாருக்கும் எவ்விததொடர்பும் இல்லை. அதை அனுபவிக்க ஆயூட் காலதடை.எளிமை, ஆனால் கம்பீரம், வறுமை ஆனால் நிதானம், கட்டளை பிறப்பித்தல்.செவிமடுத்து.ஏற்றுநடத்திட ஆயிரமாயிரம் தொண்டர்கள்.ஆனால், ஒருபோதும் தாங்கள் சுய நலத்திற்காக அவர்களை பயன்படுத்தியதில்லை.வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை யாரையும் புண்படுத்தியதில்லை.ஆனால் இஸ்லாத்திற்கெதிரான நிலைபாடு கொண்டோர்களிடத்தில் இரக்கம் காட்டியதில்லை.மொத்ததில்.மனிதராக,மனிதப்புனிதராக, இஸ்லாமிய ஆட்சியாளராக வலம் வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜிரி 11 ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 12-ல் இப்பூலகை விட்டுப்பிரிந்தார்கள். அடுத்த தலைவர் யார் ?
அண்ணலாரின் செயல் வடிவின் படி அபூபக்கர் ஸித்தீக் (ரலி) ஆட்சியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமைச் செயலகத்தில் அமர்ந்தார்.தொடர்ந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வகுத்துதந்த அரசியல் பன்புகளின் அடிப்படையில்.முதல் ஆட்சியாளரின் ஆட்சி. ஹிஜிரி 13 - ஜமாத்துல்  ஆகிர் பிறை 22 ல் அன்னார் வாழ்வு நிறைவுற்றது.
இரண்டு ஆண்டுகால ஆட்சியால் சில சோதனைகள் வந்த போதும் துணிந்து போராடி நபிகளாரின் அரசியல் கலாச்சாரத்தை தூக்கிநிறுத்தினார்கள்.
சாந்தமே உருவான அபூபக்கர் (ரலி) சினமுற்று ஜக்காத் தர மறுப்பவர்களோடு போர்புரிவேன் எனகூறியது.
யமாமாவில், முஸைலமா எனும் பொய்யன் தன்னைநபியென வாதிட்டபோது அதை எதிர்கொள்ள இஸ்லாமிய படைகளை அனுப்பியது.
ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் ஆட்சியாளர் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் சொத்தான குமுஸ்-ல் இருந்து பங்கு தரவேண்டும் என கோரி நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குபின் வாரிசுரிமை இல்லை என கூறியிருக்கிறார்கள் ஆகவே தரமுடியாது என அனுப்பிவிடுகிறார்கள்.
அவர்களுக்கு பின் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறர்கள்.அவர்களது ஆட்சியில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது ஆளுகையின் எல்லை பரந்து விரிந்து கொண்டே சென்றது.புதிய புதிய பிரச்சனைகள் எழுகிறது.
அங்கெல்லாம் சமர் (ரலி) அவர்கள் மாநபி (ஸல்) அவர்களின் அரசியல் விழுமியங்களைக் கொண்டு தீர்த்து வைக்கிறார்கள்.அவர்களின் ஆட்சிகாலத்தில் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வகுத்துத்தந்த பல அரசியல் பண்புகள் உலகிற்கு வெளிவரத் துவங்கியது எனலாம்.
ஒருநள் கடைவீதிக்கு செல்கிறார்கள்.அங்கே ஒரு மந்தை அந்த மந்தையில் ஏராளமான ஒட்டகைகள் இருந்தும் ஒரு ஒட்டகைக்கு மற்றும் ஏக உபசரிப்பு, அருகே வந்த உமர் (ரலி) அவர்கள் மந்தை உரிமையாளரிடம் இது யாருடைய ஒட்டகம்?எனக் கேட்டார்கள் இது அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்களின் ஒட்டகம் என பதில் கூறினார் உரிமையாளர்.
தடுக்கிட்ட உமர் (ரலி) அழைத்து வாருங்கள் அப்துல்லாஹ் (ரலி) வை! என்றார்கள். எங்கிருந்தோ கூட்டிவந்த உமர் (ரலி) அவர்கள் முன் நிறுத்தப்பட்டார்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தன் மகன் ஏதோ மாபெரும் குற்றத்தை செய்தது போல் உணர்ந்த உமர் (ரலி) அப்துல்லாஹ்வே! என்ன இது? யாருடைய ஒட்டகம் ?
என்னுடைதுதான்!நான் தான் வாங்கினேன்! மேய்ச்சலுக்காக விட்டிருக்கிறேன் என பதில் அளித்தார்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் உன்னுடைய ஒட்டாகத்தை பார்க்கும் மக்கள்
அமீருல் முஃமினீன்மகன் ஒட்டகத்தை நன்றாக மேய்!
அமீருல் முஃமினீன்மகன் ஒட்டகத்திற்கு நன்றாக தண்ணீர் புகட்டு!வார்த்தைக்கு வார்த்தை அமீருல் முஃமினீன் மகனுடையது எனக் கூறுவது உனக்கு தெரியவில்லையா?
என இப்னு உமர் (ரலி) அவர்களை பார்த்து கேட்டு விட்டு, பணத்தை பைத்துல்மாலிலே சேர்த்துவிட்டு, என ஆணையிட்டார்கள்.
இன்று சாதாரன வட்டம், நகரம், மாவட்டம், என பொறுப்பிலிருப்பவர்களின் பெயரை எங்கெல்லாம், எப்படியெல்லாம் யாரெல்லாம் பயன்படுத்து கிறார்கள்.
ஆனால், தம் மகனுக்கு கூட அந்த உரிமையை தராமல் அதை முறை தவறிய செயலாக கண்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.
                     நுல்:குலFபாவுர் ரசூல் (ஸல்), பக்கம்:121
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கயில் இந்த கூஃபா நகர மக்கள் மென்மையான சுபாவாம் கொண்ட ஒருவரை அதிகாரியாக நியாமித்தால் அவரை பலகீனமானவர் என குறைபட்டுக் கொள்கிறார்கள். நல்ல திடகாத்திரமான, வலுவான சுபாவம் கொண்ட ஒருவரை அதிகாரியாக நியாமித்தால் அவரை கடுமையானவர் என முறையிடுகிறார்கள்.நல்ல, நம்பிக்கையானஇறை நம்பிக்கையுள்ள ஒருவரை அந்நகர மக்களுக்கு அதிகாரியாக நியாமிக்க விரும்புகிறேன்.எனக் கூறியபோது அங்கிருந்த ஒருவர் அப்படியொருவர் இருக்கிறார் சொல்லட்டுமா?எனக் கூற மிக ஆர்வத்தோடு யார் அவர்?என உமர் (ரலி) அவர்கள் ஆவேசமாக உம்மிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை, அல்லாஹ்வின் மீது சதியமாக ஒரு போதும் நான் அவ்வாரு செய்யமாட்டேன் எனக் கூறினார்கள்.
                             நுல்:குலFபாவுர் ரசூல் (ஸல்) பக்கம்:122
இன்று தனக்குபின் தம்மகன் கட்சியை வழிநடத்த தகுதியானவர் என்று கூறும் ஆட்சியாளர்கள் மாநிலத்திலும், தேசியத்திலும் இருப்பதைக்காணும் போது தன் வாரிசை அதிகாரியாகக் கூட நியாமிப்பதை விரும்பாத அரசியல் கோட்பாட்டை எந்தளவு உமர் பேணினார்கள்?

ஹிம்ஸ் மாகான மக்களின் பிரதிநிதிகள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்.
தமது நகர கவர்னர் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்களை ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களிடம் சமர்பித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட கவர்னர் வரவழைக்கப்பட்டார் ஹிம்ஸ் மாகாண பிரதிநிதிகள் எதிரே அமரவைக்கப்பட்டனர்.
ஹிம்ஸ் மாகாண பிரதிநிதிகள்: நன்கு வெளிச்சமான பின்பு தான் மக்களை சந்திக்க வருகை தருகிறார்
ஸயீத் (ரலி) : அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர்கள் இப்படி குற்றம் சுமத்துவதை நன் வெறுக்கிறேன்.ஏனெனில், என் வீட்டில் பணியாளர்கள் கிடையாது, என் மனைவியோடுவேலை பார்த்துக் கொள்கிறேன்.அவர்களோடு காலை உணவை தயார் செய்வதில் ஈடுபடுவேன்பின்பு காலை உணவை சாப்பிடுவேன்.பிறகு உளு செய்வேன்,பின்பு அவர்களிடம் வருகை புரிவேன்.என்றார்கள்.
ஹிம்ஸ் பிரதிநிதிகள் : இரவில் சென்று முறையிட்டால் எங்களின் முறையீட்டிற்கு பதில் தருவதில்லை.
ஸயீத் (ரலி) : இந்தக்குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். ஏனெனில், பகலை மக்களின் சேவைக்காகவும், இரவைஅல்லஹ்வின் வணக்கத்திற்காகவும் பயன் படுத்துகிறேன்.
ஹிம்ஸ் பிரதிநிதிகள் : மாதத்தில் ஒரு நாள் எங்களின் எந்த அலுவல்களையும் கவனிப்பதில்லை.
ஸயீத் (ரலி) : என் ஆடைகளை சுத்தம் செய்யும் பணியாள் என்னிடம் இல்லை. என் ஆடைகளை துவைத்து, காயப் போட்டு அது உலர்வது வரை காத்திருப்பேன், மறுநாள் அந்த ஆடைகளை அணிந்து கொண்டு மக்களின் சேவைகளில் ஈடுபடுவேன் என்றார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக ஸயீத் (ரலி) அவர்களை மகிழ்ச்சிப் பொங்க பார்த்து புன்னகைத்தார்கள்.
                             நுல்:குலஃபாவுர் ரசூல், பக்கம்:131
வாக்கு கேட்கும் போது இருக்கும் பணிவு, மக்கள் பிரதி நிதியாக வலம் வரும் போது இருப்பதில்லை.
நபிகளார் அமைத்த அரசியல் மாண்புகளில்...
ஆள்வோரும், ஆளப்படுவோரும் சமமானவர்களே! எனும் சமத்துவப் பண்பாடும்,
ஆண்டானுக்கும், அடிமைக்கும் நீதி ஒன்றே! எனும் சமநீதியும் ஜொலிப்பதை காணமுடியும்.
அன்றொரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிதை பிய்யா எனும் உடன் படிக்கையில் இணைவைப்பாளர்கள் முன்மொழிந்த அத்தனை நிபந்தனைகளையும்ஏற்று கையொப்பமிட்டார்கள்.ஆனால் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றுநாம் சத்தியத்தின் உண்மையின் மீது இல்லையா? என்று கேட்க, ஆம் நாம் சத்தியத்தில் தாம் இருக்கிறோம் என (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவர்க்கத்திலும், அவர்களில், கொல்லப்ப்ட்டவர்களும் நரகத்தில் இருப்பார்கள் சரிதானே?எனக்கேட்டார்கள் ஆம்!என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.பிறகு நாம் ஏன் விட்டுக்கொடுத்து, செல்லவேண்டும்? எனக்கேட்க! கத்தாபின் மகனே! நான் அல்லஹ்வின் தூதர்! அவனுக்கு மாறு செய்ய என்னால் முடியாது. நிச்சயமாக! அவன் எனக்கு உதவி செயவான்.ஒருபோதும் அவன் என்னைகைவிடமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பின்பு உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடமும் இது போன்றே ஆவேசமடைந்து கேள்வி கேட்டார்கள்.நபி (ஸல்) அவர்கள் போலவே, அபூபக்கர் (ரலி) அவர்களும் பதிலளித்தார்கள்.அன்றைய நிகழ்ச்சிக்குபிறகு அல்குர் ஆனின் 48 வது அத்தியாத்தின் முதல் இரண்டு வசனங்கள் அருளப்பட்டன.இந்த இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களையே ஓதிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்கள்.
                                      நுல் : ரஹீக்
அன்று நபி (ஸல்) அவர்கள் இட்டகையொப்பம் தான் இஸ்லாமிய அரசு உலகாளும் மகுடத்தை பெற அஸ்திவாரமிட்டது.அதிலும், குறிப்பாக உமர் (ரலி) அவர்களின் பத்தாண்டுகால அரசியல் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அரசியல் பண்புகளை உல்கெங்கும் பிரதிபலிக்க செய்தது என்றால் அது மிகையாகது.
சுமார் 90 ஆண்டுகளுக்குப்பிறகு புனித பைத்துல் முகத்தஸ் நகரை சுல்தான் ஸலாஹித்தீன் அய்யூபி (ரஹ்) தலைமையில் 1187 செப்டம்பர் 20 அன்று முஸ்லிம்கள் வலம் வந்தனர்.தக்பீர் முழக்கம், தஹ்லீல் முழக்கம் விண்ணை அதிரவைத்தன.பெரும் மார்க்க அறிஞர்கள், வர்த்தகர்கள் சாமானிய மக்கள் என அனைவரும் திரண்டு வந்து வெற்றி வீரர் ஸலாஹீத்தீன் (ரஹ்) அவர்களை பாராட்டப்புறப்பட்டு வந்திருந்தனர்.அன்று ஜிம்ஆ நாளாக இருந்தது 90 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பைத்துல் முகதஸில் ஜீம்ஆத்தொழுகை நடைபெற்றது.அதன் பின் சுல்தான் ஸலாஹீதீன் (ரஹ்) அவர்கள் நடந்துகொண்ட முறை எப்படி இருந்தது என்பதைபற்றி அறியும் பின்பு கி.பி. 1099 ல் சிலுவைப் படையினர் இந்நகரை கைப்பற்றியபோது முஸ்லிம்களிடம் சிலுவைப்படையினர் நடந்து கொண்ட முறையை மிகாட் என்ற வரலாற்றாசிரியர் Histories Croisades சிலுவை யுத்த வரலாறு எனும் நுலில்
v வீடுகளுக்குள்ளும், விதிகளிலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள்
v அடைக்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது
v தப்பி யோர்களை தேடிச்சென்று கொன்றனர்
v கோபுரங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்களில் ஒளிந்து கொண்டோர்களையும் விட்டு வைக்கவில்லை.
ஜெருஸ்ஸலம் நகரெங்கும் உயிரை இழக்கும் மனிதர்களின் அழுகைகளும், முனகல்களும் தான் எதிரொலித்தன.
பிரிட்டானியா கலைக்களசியம் பின்வருமாறு வர்ணிக்கிறது
அல்  அக்ஸா பள்ளி வளாகமெங்கும் ரத்தவெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது. பச்சிளங்குழந்தைகள் பிடுங்கப்பட்டு சுவற்றில் அடித்தோ, அல்லது போர் நடக்கும் இடத்திற்கும் மத்தியில் வீசப்பட்டோ கொல்லப்பட்டனர்.
ஆனல், ஸலாஹீத்தீன் (ரஹ்) ஜெருஸ்ஸலத்தைக் கைப்பற்றியபோது நடந்து கொண்ட விதம் ஸலாஹீத்தீன் (ரஹ்) வரலாற்றை எழுதிய ஸ்டான்லி லேன் பூல் எனும் எழுத்தாளர் குறிப்பிடும் போது
ஜெருஸ்ஸலம் தன்னிடம் சரணடைந்த போது காட்டியதை விட உச்சக்கட்டமான கருணையைஸலாஹீத்தீன் வேறு எப்போதும் காட்டியதில்லை.பொறுப்புணர்வுமிகுந்த தளபதிகளின் தலைமையில் ஸலாஹீத்தீனின் படைகள் ஒவ்வொரு வீதியையும் காத்து அத்துமீறல்கள் நிகழ்வதைத் தடுத்தனர்.கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக எந்தவொரு தகவலும் எங்கிருந்தும் வரவில்லை.நகரத்தின் அனைத்து நுழைவாயிலும் ஸலாஹீத்தீன் வசம் தான் இருந்தது.
தனது சகோதரர் மாலிக் அல் அதில், இப்லீனைச் சேர்ந்த இரு பாதிரிகள் ஆகியோருக்கு பிணைக் கைதிகளில் தலா ஆயிரம் பேரை விடுவிக்க அனுமதி வழங்கினார் ஸலாஹீத்தீன்.
மேலும், தனது அதிகாரிகளிடம் பிணைத்தொகை செலுத்த முடியாத முதியோர்களெல்லாம் சுதந்திரமாக வெளியேறலாம் என்று பிரகடனம் செய்யுமாறு ஒர் உத்தரவை பிறப்பித்தார்.
இந்த அறிவிப்பை கேட்டவுடன் செயிண்ட் லாஸரஸ் பகுதியிலிருந்து அணி அணியாக கிறிஸ்தவர்கள் தமது இருப்பிடத்திலிருந்து ஜெருஸ்ஸலம் நகரை விட்டு வெளியேறினார்.சூரிய உதயத்தில் தொடங்கிய இந்த வெளியேற்றம் இரவு வரை நீடித்து.எண்ணற்ற ஏழை மக்கள் ஸலாஹீத்தீனின் கருணையால் பயனடைந்தனர்.
தங்களிடம் வீழ்ந்த நகரத்தில் வாழ்ந்த எதிர்தரப்பு மக்களுக்கு இவ்வரு முஸ்லிம்கள் கருணை காட்டினார்கள்.
மேலும், ஜெருஸ்ஸலம் நகரைக் கைப்பற்றிய விதம் ஒன்று மட்டுமே அவரை ஒரு தலை சிறந்த வீரராக கருணை நெஞ்சம் படைத்த தலைவராக கருதுவதற்கு போதுமான சான்றாக விளங்குகிறது என தனது  Saladin (P230-234)                எனும் நூலில் ஸ்டான்லி - லேன் - பூல் கூறுகிறார்.
                      நூல் :பாலஸ்தீன வரலாறு.பாகம் 1. பக்கம் 90-93
இந்த மாபெரும் புகழாரத்திற்குப்பின்னால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கையாண்ட அரசியல் பண்பாடுகளும், மாண்புகளும் மறைந்திருக்கின்றன. சுல்தான் ஸலாஹீத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! ஆமீன்.
ஆக, அரசியல் மாண்புகளையும், பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் சமூகம்.அதனால் உலக சமுதயத்திற்கு வாழ்வளித்த ஓர் சமுதாயம்.அரசியல் விழிப்புணர்வு தேடி அலைந்து கொண்டிருப்பதை காணும் போதும், அதற்காக ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை பார்க்கும், போதும் நிரம்பவே மனது வலிக்கிறது.
அண்ணலாரின் அரசியல் முன் மாதியை முன்னெடுத்துச் சென்று அரசியல் முத்திரை பதிக்கும் ஓர் உன்னத சமுதயமாக வலம் வர அல்லாஹ் அருள் புரிவானாக!
ஆமீன்!
வஸ்ஸலாம்