Thursday 13 June 2013

இழந்த பெருமையை மீட்டெடுப்போம்!

ISLAM IS AN UNIVERSAL RELIGION இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம் என்கிற மாபெரும் புகழாரத்தை இந்த முஸ்லிம் சமூகம் இழந்து
ISLAM IS AN UNIVERSAL TERRORISAM இஸ்லாம் ஓர் உலகளாவிய பயங்கர வாத மார்க்கம் என்றும்  ISLAM IS AN ANTI UNIVERSAL முஸ்லிம்கள் உலக அமைதிக்கு எதிரானவர்கள் என்கிற ஒரு மாபெரும் அவமானத்தை, அவதூறு குற்றச்சாட்டை சுமந்து நிற்கிற காட்சியை உலக அரங்கில் காண முடிகிறது.
          முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டிய பொன்னான தருணம் நாம் வாழ்கிற இந்தக் காலம் தான்.
          இழந்த பெருமையை மீட்டெடுக்க இந்த முஸ்லிம் சமூகம் மூன்று வழிகளை கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
அவைகளாவன,
1.     கல்வி - விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதின் துணை கொண்டும்,
2.     மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்வதின் மூலமாகவும்
3.     பொருளாதார வலிமையை வளப்படுத்துவதின் வாயிலாகவும்
மேற்கூறப்பட்ட இவைகளின் மூலம் தான் சாத்தியமாகும் என இச்சமூகத்தின் உயர்வைப்பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மேன்மக்கள் கூறுகின்றார்கள்.
கல்வி, விஞ்ஞானம்
          இந்த சமூகம் கல்வியறிவிலும், விஞ்ஞான ஆற்றலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலங்களில் உலகத்தையே வழி நடத்துகிற ஆற்றலைக் கொண்டிருந்தது.ஆனால இன்றோ?
இந்தியாவில் வாழ்கின்ற மழைவாழ் மக்கள், பழங்குடியின மக்கள், ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களை விட இந்த சிறுபான்மை முஸ்லிம் சமூகம் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் பின் தங்கி இருப்பதாக நீதியரசர் ரஜீந்தர் சச்சார் கமிட்டியின் அறிக்கை உலக அரங்கில் வெளிப்படுத்துக்காட்டியது.
இஸ்லாம் கூறுவதென்ன?
மனிதனை உலகில் படைத்ததின் நோக்கம் படைத்த இறைவனை வணங்குவதற்காகத் தான் என்று பேசுகிற அல்குர் ஆனின் முதல் கட்டளை வணக்க வழிபாடு குறித்து பேசவில்லை. மாறாக
اقرأ باسم ربك الذي خلق

(நபியே) நீர் உம்மை படைத்த இறைவனின் பெயர்கொண்டு (ஓதுவீராக!) படிப்பீராக!என்று கல்வியறிவுகுறித்து தான் பேசுகிறது.
அல்குர் ஆன்: 90, 1, 2, 3
முதல் மனிதர் ஆதம் நபியிடம் அல்லாஹ் வணக்க வழிபாடுகள் குறித்து கற்றுக் கொடுக்கவில்லை.
மாறாக,அல்லாஹ் படைப்பினங்கள் அனைத்தின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான் என்று கூறி விஞ்ஞான அறிவின் அவசியத்தை உணர்த்திகின்றான்
 وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين

ஆக, அல்குர் ஆனின் முதல் கட்டளைகளையும், முதல் மனிதருக்கு முதலோனாம் அல்லாஹ் கற்றுக் கொடுத்த முதல் படிப்பும், கல்வியின் அவசியத்தை இந்த உம்மத்திற்கு உணர்த்திகிறது.
தற்காலத்தில் இந்த முஸ்லிம் சமூகம் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக்கல்வி என்று இரண்டாப் பிரித்தும், கல்வியாளர்களை உலகவியலாளர்கள், மார்க்க அறிஞர்கள் என்று இருவகையாகத் தரம் பிரித்தும் வைத்திருப்பதை காண முடிகிறது.
உண்மையில், இஸ்லாம் கல்வியையும், கல்வியாளார்களையும் இப்படி வேறுபடுத்தி காட்டுவதை விரும்பவில்லை.
இரண்டு கல்வியையும் ஒரு முஸ்லீம் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும் என்றும் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இன்னும் சொல்லப்போனால்,
இந்த முஸ்லிம் சமூகம் கல்வியை இரு வேறு கூறுகளாக எப்போது கையாளத்துவங்கியதோ, அப்போது தான் முஸ்லிம்கள் அடைந்திருந்த பெருமையும் வீழ்ச்சியடையத்துவங்கியது.
எனவே, உலகக் கல்வியையும், மார்க்க கல்வியும் ஒருங்கோ பெற்றிருக்கிறவர்களால் மட்டுமே இந்த சமூகம் இழந்திருக்கின்ற பெருமையை மீட்டெடுக்க முடியும்.
. நா. வில் முஸ்லிம்களின் குரல்:
இன்றைக்கு உலக நாடுகளின் தலைவர்களை பயத்திலும், கவலையிலும் ஆழ்த்தியிருக்கும் பெரும் பிரச்சனையாக அகதிகள் பிரச்சனை உருவெடுத்துள்ளது.
பெருகி வரும் போர் மோகத்தால் ஃபலஸ்தீன், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா,வடகொரியா, இலங்கை, பர்மா, மியான்மர் போன்ற நாடுகளின் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாய் தஞ்சம் புகும் அவலம் அரங்கேறி வருவதாலும், அவர்களுக்கான மறுவாழ்வு, பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாய் அமைந்திருப்பதாலும், அகதிகள் விஷயத்தில் தீர்வெடுக்க முடியாமல் ஐக்கிய சபை - .நா.சபை விழி பிதுங்கி நின்ற நேரத்தில்
எகிப்தில் உள்ள கெய்ரோ பல்கலைகழகத்தின் சட்டத்துறை தலைமைப் பேராசிரியராப் பணியாற்றும் டாக்டர் அபூ அல்வஃபா அவர்கள் .நா. அவையின் அகதிகள்  பராமரிப்பு குறித்த சர்வசட்டங்களும் ஷரீஅத் கூறும் அகதிகள் சட்டங்களும் என்கிற தலைப்பில் இஸ்லாமியச் சட்டங்களையும், இன்றைய உலக சட்டங்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி ஒரு நூலாக தொகுத்து .நா. அவயின் அகதிகள் பராமரிப்பு ஆணையத்தின் தலைவரான ஆண்டானியோ கட்ரஸ்அவர்களிடம் ஒப்படைத்தார்.
ஆய்வு நூலை ஆரம்பம் முதல் இறுதி வரை அலசி ஆராய்ந்து, வியந்து பாராட்டி ஏற்றுக்கொண்டு .நா.அவையின் அகதிகள் உரிமை ஆணையம் சமீபத்தில் அந்த ஆய்வு நூலை வெளியிட்டுள்ளது. அத்தோடு நின்று விடாமல் .நா.வின் அகதிகள் பராமரிப்பு ஆணையத்தின் தலைவரான ஆண்டானியோ கட்ரஸ் அவர்கள் இந்த ஆய்வு நூல் குறித்து பின் வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்;
இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபுகளிடமிருந்த பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பழக்க வழக்கங்களை இஸ்லாம் அப்படியே அங்கீகரித்து அவற்றிற்குச் சட்ட வடிவம் கொடுத்துஅவை மனித குலத்திற்கு நீதி நெறி சார்ந்த சட்டங்களாக இன்றளவும் திகழ்கிறது என்றார்.
மேலும்,அகதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து வழிகாண இயலாத பல சிக்கல்களுக்கு புதிய தீர்வை முன்னிலைப்படுத்தி உள்ளார் என்றும் பாராட்டியுள்ளார்
நூல்: CMN சலீம் அவர்கள் எழுதிய தீர்வு பக்கம் 7, 8
இங்கே,
அபூ அல்வஃபா அவர்கள் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முஸ்லிம் அறிஞராக உலகின் இன்றைய முக்கியப்பிரச்சனைகளில் ஒன்றான அகதிகளின் உரிமை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றில் உலக நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இஸ்லாமியத் தீர்வை முன்வைத்துள்ளார். அதை உலக அங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது.
இது எப்படி சாத்தியமானதென்றால்நுட்பமான இஸ்லாமிய ஞானம் ஷரீஆவின் சட்டங்கள் குறித்த தீர்க்கமான அறிவு, உலக சட்டங்கள், உலக அகதிகள் நிலை, .நா.சட்டங்கள் போன்றவற்றில் முழுமையான ஆற்றலும், ஆற்றலும் அறிவும் பெற்றிருந்ததன் விளைவாகத்தான் என்பதை சமூகம் ஒப்புக் கொண்டதாக வேண்டும்.
ஏனெனில்,
உலக அறிவை மட்டும் பெற்றிருப்பருப்பவர்களாலோ அல்லது மார்க்க அறிவை மட்டும் பெற்றிருப்பருப்பவர்களாலோ இது போன்ற உலகை திரும்பிப்பார்க்க வைக்கும் செயல்களில் ஈடுபடமுடியாது.
இஸ்லாமிய அறிவும் உலக அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற ஆற்றல் மிகுந்த முஸ்லிம்களால் மட்டுமே இஸ்லாம் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும்.மீண்டும் இவ்வுலகை வழிநடத்தும் ஆற்றலையும் பெறமுடியும்.
நபிகளாரும், அகதிகளும்
மாநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்ததை அடுத்து மக்கத்து நபித்தோழர்கள் மதீனாவில் நுழைந்த போது அகதிகள் என்றழைக்கப்படாமல் முஹாஜிர்கள் என்றும், மதீனாவின் மக்களால் சகோதரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
இரண்டே ஆண்டுகளில், உறவினர்களாகவும், வியாபார கூட்டாளிகளாகவும் பெண் எடுத்து பெண் கொடுத்து உறவு முறையில் மேம்பாடு கண்டவர்களாகவும் மாற்றம் கண்டார்கள்.
மாநபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் மதீனாவை தலைமையிடமாகக் கொண்டு இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்திடும் நான்கு ஆட்சியாளர்கள் மக்காவைச் சார்ந்த, மதீனாவைச் நோக்கி வந்த முஹாஜிர்களாக இருந்தும் அதை அங்கீகரிக்கும் மனோநிலைக்கு மதீனமா நகர மக்களை தயார் படுத்திச் சென்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.
சுருங்கச் சொன்னால் அகதிகளாகச் சென்றவர்கள் தான் நேர்வழி நின்ற நான்கு ஆட்சியாளர்களாய் - கலீஃபாக்களாய் வரலாற்றில் வாகாய் மிளிரச் செய்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.
இந்திய பாரளுமன்றத்தில் முஸ்லிமின் குரல்:
சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில்வந்தே மாதரம்பாடல் ஒலிக்கப்பட்டது.
நீண்ட தாடியும், உயர்ந்த தோற்றமும், ஜிப்பாவும் அணிந்த ஓர் உருவம் அங்கிருந்து அமைதியாக வெளியேறுகிறது.பாடல் ஒலிக்கப்பட்டு முடிந்ததும் அந்த உருவம் மீண்டும் பாராளுமன்றத்தில் நுழைகிறது.சபாநாயகர் அதை வன்மையாகக் கண்டிக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்திக்கிறார் வெளிநடப்புச் செய்த அந்த மனிதர் வேறு யாருமல்ல அவர்.சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.ஷஃபீக்குர் ரஹ்மான் அவர்கள்.அதுவரை அமைதியாய் நின்ற அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் சிங்கமென கர்ஜித்தார்.
எழுந்து நின்று மரியாதை செய்ய ஒலிக்கப்பட்ட பாடல் தேசிய கீதம் அல்ல
இறைவன் ஒருவனையே வணங்க வேண்டுமென்ற இஸ்லாமிய ஏகத்துவத்தின் உறுதித்தன்மையை உரசிப்பார்க்கும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பல வாசகங்கள் நிறைந்த ஓர் பாடல் தான் அது.
எது மார்க்கத்திற்கும், ஈமானிற்கும் துரோகமிழைக்கும் ஈனச்செயலில் முஸ்லிமாய் இருந்து ஒருபோதும் என்னை ஈடுபடுத்த முடியாது.அதற்காக ஒரு போதும் நான் அவை ஒழுங்கை மீறியதற்காக சபா நாயகரிடம் மன்னிப்புக்கோரவும் முடியாது என்று பாராளுமன்றத்திற்கு வெளியே ஷஃபீக்ர் ரஹ்மான் எம்.பி.செய்தியாளர்களிடம் பேட்டியளித்ததாக பத்திக்கைகளில் செய்தி வெளியானது.
இப்படி திடமான மனவலிமை அவருக்கு எப்படி ஏற்பட்டதென்றால் நுட்பமான இஸ்லாமிய அறிவும் இந்திய அரசியல் (உலக அறிவும்) அறிவும் ஒருங்கே அமையப்பெற்றதன் விளைவாகத்தான் என்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இஸ்லாமியக் கல்வி முறையையும் கூட இப்படி மார்க்க அறிவும் உலகியல் விஞ்ஞான அறிவும் ஒன்று சேர்ந்து அமையப்பெற்றிருக்க வேண்டும் என்றுதான் இந்த உம்மத்திற்கு ஆணையிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட கல்வியை பயனுள்ள கல்வி, பயன் தராத கல்வி என்று தான் குறிப்பிட்டுள்ளார்களே தவிர, இந்த உம்மத் இன்று இரண்டாகப் பிரித்து வைத்ததைப்போல அல்ல.
அல்லாஹ்வும் அல்குர் ஆனில் இருகல்வியையும் ஊக்குவிக்கும் முகமாக பல இடங்களில் பேசுகின்றான்.
உலக - விஞ்ஞான அறிவு குறித்து
GEOGRAPHY - புவியியல்,         CHEMISTRY - வேதியியல்,
GENETICS -மரபியியல்              BIOLEGY - உயிரியல்,      
PHYSICS - இயற்பியல்               BOTANY - தாவரவியல்
FORESTRY - வனவியல்            GARDENING - தோட்டவியல் 
CYTOLOGY - உயிரணுவியல்  LOGIC - தர்க்கவியல்
அல்லாஹ் பல இடங்களில் இப்படிப்புகளை மேற்கொள்ளுமாறு ஏவுகிறான்.
புவியியலைப்பற்றி         அல்குர் ஆன்: 27:60 ம்      
வேதியியலைப்பற்றி அல்குர் ஆன்: 67:30 ம் 
மரபியலைப்பற்றி   அல்குர் ஆன்: 80:24-31 ம்
உயிரியலைப்பற்றி அல்குர் ஆன்: 40:67 ம்
தாவரவியலைப்பற்றி அல்குர் ஆன்: 27:60 ம்
தர்க்கவியலைப்பற்றி அல்குர் ஆன்: 22:8, 3:190, 22:54 ம்
பேசுவதைப் பார்க்கின்றோம்.
இன்னும் வானவியல், சந்திர மண்டலம் என பல்வேறு விஞ்ஞான கல்விமுறைப்பற்றியும் அல்குர்ஆன் பல இடங்களில் பேசுவதைக் காண முடிகிறது.
மேலும் கல்வியைக் குறித்தும், கல்வியறிவை குறிப்பிடும் வார்த்தைகளையும் அல்குர் ஆனில் அதிகம் குறிப்பிடுகின்றான்.
எகிப்தில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற பல்கலைகழகமான அல் - ஜாமிவுல் அஸ்ஹர் யுனிவர்சிட்டியில் இருந்து வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில்..
விஞ்ஞான ஆய்வுகள் சம்பந்தமாக அல்குர் ஆனில் 750 இடங்களிலும்
இல்ம் - கல்வி சம்பந்தமாக அல்குர் ஆனில் 80 இடங்களிலும்
ஹிக்மத் - நுண்ணறிவு சம்பந்தமாக அல்குர் ஆனில் 20 இடங்களிலும்
இன்னும் அக்ல் - அறிவு, ஃபிக்ஹ் - மார்க்கச் சட்ட அறிவு, பிஃக்ர் - சிந்தனை அறிவு ஆகியவை சம்பந்தமாக அல்குர் ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.
ஷஃபீக்குர்ரஹ்மானும், அபூஅல் வஃபாவும் மார்க்க ஆதாரம் கிடையாதே!
நபிகளாரின் காலத்தில் நடந்த ஏதேனும் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுங்களேன் என்று.
இதோ! உங்களுக்காக ஒன்று
 كان ناس من الأسرى يوم بدر لم يكن لهم فداء فجعل رسول الله صلى الله عليه وسلم فداءهم أن يعلموا أولاد الأنصار الكتابة.

பத்ர் யுத்தம் நடைபெற்று முடிந்து இறைமறுப்பாளர்கள் கைதிகளாய் பிடிக்கப்பட்டு மஸ்ஜிதுந் நபவீயின் முன்னர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கைதிகள் தங்களை விடுவிப்பதற்காக மேற்கொள்ள வேண்டியவைகளின் ஒன்றாக கைதிகள் தாங்கள் கற்றறிந்து வைத்திருப்பதை முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு தம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்க அவர்களென்ன மார்க்க அறிஞர்களா?
ஆக, உலக அறிவும் முஸ்லி.ம்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள் என்பதை இச்சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது.
அன்றொரு நாள்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன் கிராமவாசி ஒருவர் வந்து நின்றார்.
தனக்கான சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமென வேண்டி நின்றார்.
அல்லாஹ்வின் தூதரே!
நானும் வெள்ளை, எனது மனைவியும் வெள்ளை, ஆனால், எங்களுக்குப் பிறந்த குழந்தை கருப்பு.ஆச்சர்யம் என்ன தெரியுமா? அல்லாஹ்வின் தூதரே! எங்கள் குடும்பத்திலேயே கருப்பு நிறத்தில் யாரும் இல்லை என்றார்.இது எப்படி சாத்தியம்? என்று கேட்டார்
அவரது கேள்வியில் இருவிஷயங்கள் அடங்கியிருந்தது.ஒன்று அவரது மனைவியின் மீதான சந்தேகமும், இன்னொன்று சாத்தியமானால் அது எப்படி? என்பதற்கான பதில் தெளிவாக கிடைக்க வேண்டும் என்பதாகவும்..
மாநபி (ஸல்) அவர்கள் வந்த அந்த கிராமவாசிக்கு தெளிவை எந்த வடிவில் தருவது என யோசித்தவாறு இருந்தார்கள்.
இறுதியாக உமது வீட்டில் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? என்று கேட்டார்கள்
ஆம்! என்று தலையசைத்தார் அந்த கிராமவாசி
அதன் நிறங்களை ஒவ்வொன்றாக கூறு என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.
சிகப்பு நிற ஒட்டகைகள் இருக்கின்றன என்றார் அவர்.வேறு நிறங்களிலோ அல்லது சிகப்புடன் வேறு நிறம் கலந்தவையாக இருக்கின்றதா?என்று கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.அதற்கு அந்த கிராமவாசி சிகப்புடன் சாம்பல் நிறம் கலந்த ஒட்டகையும் இருக்கிறது என்றார்.
அப்படியென்றால் அந்த சாம்பல் நிறம் எங்கிருந்து வந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்
அதுவா?அதன் மூதாதையர்களில் அது போன்ற நிறங்கள் இருந்திருக்கலாம் என்றார் அவர்.
அப்படியானால், உன்னுடைய மூதாதையர்களின் நிறங்கள் உனது குழந்தையிடம் பிரதி பலிக்கின்றது என்று கிராமவாசியின் கேள்விக்கு மாநபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். தனது மனைவியின் மீதான சந்தேகத்திலிருந்து விடுபட்டவராகவும், தனது தேடலுக்கான விடை கிடைத்த மகிழ்ச்சியினாலும் மாநபி (ஸல்) அவர்களின் சபையிலிருந்து முக மலர்ச்சியோடு விடை பெற்றுச் சென்றார்.
இந்த முறையைத்தான் இன்றைய விஞ்ஞானம் GENETICSமரபியல் என்று போற்றிக் கொண்டிருக்கின்றது.
எனவே,
காலத்தின் அருமை கருதி இந்த சமூகம் தமது எதிகால தலைமுறையினரை மார்க்க அறிவும், உலக அறிவும் ஒருங்கே பெற்றவர்களாக உருவாக்கிட முன்வர வேண்டும். இஸ்லாத்தின் உயர்வுக்கும், செழிப்புக்கும், வளர்ச்சிக்கும் முழு மூச்சாய் முன்னோர்களின் வழிநின்று பாடுபட வேண்டும்.
இஸ்லாமும், முஸ்லிம்களும் இழந்த பெருமையை மீட்டெடுப்போம்!
உயர்ந்தோனாம் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெறுவோம்!
வஸ்ஸலாம்