Friday 16 June 2017

இருபத்தி இரண்டாம் நாள் தராவீஹ் பயான்! இறுதிப் பத்து இரவை அமல்களால் அலங்கரிப்போம்!!!



இருபத்தி இரண்டாம் நாள் தராவீஹ் பயான்!
இறுதிப் பத்து இரவை அமல்களால் அலங்கரிப்போம்!!!


புனிதம் மிக்க ரமலான் மாதத்தின் நிறைவுப் பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நரக விடுதலையைப் பெற்றுத் தருகிற இறுதிப்பத்தில் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தினரையும், நம் சார்ந்தவர்களையும், உலக முஸ்லிம்கள் அனைவரையும் ரமலானின் தூய பரக்கத் கொண்டு நரகத்தின் வாடையைக் கூட நுகர விடாமல் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்!

இறுதிப் பத்து நாட்களில் வரிந்து கட்டிக் கொண்டு இபாதத்களில் ஈடுபடுவதும், அமல்களில் ஆர்வம் காட்டுவதும் மாநபி {ஸல்} அவர்களின் மீது அன்பும், நேசமும் வைத்திருப்பதாகச் சொல்லக்கூடிய ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.

ஏனெனில், இறுதிப் பத்து நாட்களில் வரிந்து கட்டிக் கொண்டு இபாதத்களில் ஈடுபடுவதும், அமல்களில் ஆர்வம் காட்டுவதும் பெருமானார் {ஸல்} அவர்களின் இயல்பாகும்.


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ” மாநபி {ஸல்} அவர்கள் மற்றெல்லா மாதங்களிலும் இபாதத்களில் காட்டும் சிரத்தையை விட ரமலானின் இறுதிப்பத்து நாட்களில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள்”. ( நூல்: புகாரி )

இன்னொரு அறிவிப்பில்….

”மாநபி {ஸல்} அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் வந்து விட்டால் வரிந்து கட்டிக் கொண்டு இபாதத்களில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். அத்தோடு, இரவு முழுவதிலும் வணக்கவழிபாடுகளால் அலங்கரிப்பார்கள். அவர்களின் குடும்பத்தார்களான எங்களையும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட இரவு நேரத்தில் எழுப்பி விடுவார்கள்”.                                               ( நூல்: புகாரி )

ஆக,  நாமும் இபாதத்களில் ஈடுபட்டு, நம்முடைய குடும்பத்தார்களையும் இபாதத்களில் ஈடுபட வைத்து இறை நெருக்கத்தைப் பெறுவதோடு மாநபி {ஸல்} அவர்களின் ஸுன்னத்தை ஹயாத்தாக்குவோம்.

பஞ்ச தந்திரக்கதைகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற மீன் கதை ஒன்று உண்டு. வருமுன் காக்கும் மீன், வந்த பின் காக்கும் மீன், வந்த பிறகும் காத்துக் கொள்ளாத மீன்.

நாளை மீன் பிடிக்க வருவார்கள் என்பதற்காக அடுத்த குளத்திற்கு ஓடி விடுவோம் என்று தப்பிச் செல்லும் மீன்கள் இவைவருமுன் காப்போம்வகையைச் சார்ந்தது. வலையில் பிடிபட்டு செத்தது போல் நடித்து கரையிலிருந்து மீண்டும் குளத்திற்குள் பாய்ந்து செல்லும் மீன்கள் இவைவந்த பின் காக்கும்வகையைச் சார்ந்தது. வலையில் பிடிபட்டு மீன் பிடிப்பவனின் கையால் நசுக்கப்படும் மீன்கள் இவைவந்த பிறகும் காத்துக் கொள்ளாதவகையைச் சார்ந்தது.

நம்மிலும் இப்படியான மூன்று வகை குணம் கொண்ட மனிதர்கள் வாழ்கின்றார்கள். இதில்வரும் முன் காப்போம்எனும் சிந்தனை கொண்ட மீன் போல் விழிப்புணர்வுடன் செயல்படுகிற மனிதர்கள் மட்டுமே வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றியாளர்களாய் வலம் வருகின்றார்கள்.

இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையும் அப்படித்தான், அவன் விழிப்புணர்வோடு செயல்படுகிற போது வெற்றி பெற்று விடுகின்றான்.

எனவே, பாக்யம் நிறைந்த ரமலானின் இறுதிப் பத்தை விழிப்புணர்வோடு கழித்து இறை நெருக்கத்தைப் பெறுவோம்.

1. இரவு வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்….

قال تعالى: { تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ}  [السجدة:16]. قال مجاهد والحسن: يعني قيام الليل.
وقال ابن كثير في تفسيره: ( يعني بذلك قيام الليل وترك النوم والاضطجاع على الفرش الوطيئة ).

وقال عبد الحق الأشبيلي: ( أي تنبو جنوبهم عن الفرش، فلا تستقر عليها، ولا تثبت فيها لخوف الوعيد، ورجاء الموعود ).

وقد ذكر الله عز وجل المتهجدين فقال عنهم:
{كَانُوا قَلِيلاً مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ * وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ } [الذاريات:18،17] قال الحسن: كابدوا الليل، ومدّوا الصلاة إلى السحر، ثم جلسوا في الدعاء والاستكانة والاستغفار.

وقال تعالى: {
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاء اللَّيْلِ سَاجِداً وَقَائِماً يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُوا الْأَلْبَابِ} [الزمر:9]. أي: هل يستوي من هذه صفته مع من نام ليله وضيّع نفسه، غير عالم بوعد ربه ولا بوعيده؟!

”மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும் ஆவலுடனும் தங்கள் இறைவனை அவர்கள் பிரார்த்திக்கின்றார்கள்”.                                       ( அல்குர்ஆன்: 32: 16 )

”அவர்கள் இரவு நேரங்களில் குறைவான நேரங்களே தூங்குபவர்களாகவும், பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்”.

                                                   ( அல்குர்ஆன்: 51: 17, 18 )

”இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா? அல்லது அந்த மனிதனின் நடத்தை சிறந்ததா? அவனோ, அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிபவனாய் இருந்தான். இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான். மேலும், ஸஜ்தாச் செய்கின்றான். மறுமையையும் அஞ்சுகின்றான். மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசையும் கொள்கின்றான். நபியே! அவர்களிடம் கேளும்: அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையோர் தாம் நல்லுரைகளை ஏற்கின்றனர்”.  ( அல்குர்ஆன்: 39: 9 )

முதல் இரண்டு வசனங்களும் இரவில் தூக்கத்தை விட்டு எழுந்து நின்று தொழுவதையும், துஆக் கேட்பதையும், பாவமன்னிப்புக் கேட்பதையும் அல்லாஹ்வின்  நெருக்கம் பெற்ற நல்லடியார்கள் பண்புகளாகக் கொண்டிருக்கின்றார்கள் என்றும், மூன்றாம் வசனம் தூக்கத்திலிருந்து விழித்து, மறுமையைப் பயந்து, அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைத்து, ஸஜ்தாவில் வீழ்ந்து, நின்று வணக்கம் புரியும் ஒருவரும் அந்த நேரத்தில் இவைகள் எதையும் செய்யாமல் தூங்கிக் கழிக்கும் ஒருவரும் எப்படி சமமாவார்கள் என்று அல்லாஹ் கேள்வி எழுப்புவதும் இரவு வணக்கம் என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துகின்றது.

இந்த மூன்று வசனங்களில் இருந்து இரவு வணக்கம் என்பது 1. நின்று நீண்ட நேரம் தொழுதல், 2. பின்னேரம் வரை பாவமன்னிப்பு தேடுதல், 3. அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைத்து, அவன் தண்டனையைப் பயந்து துஆக் கேட்குதல் தாம் என்பது தெளிவாகின்றது.

இன்றைய அமர்விலே இரவுத் தொழுகையால் ஓர் முஃமினுக்கு கிடைக்கும் நன்மைகள், கூலிகள், சோபனங்கள் குறித்து பார்ப்போம்.

இன்ஷாஅல்லாஹ்.. நாளைய அமர்வில் பாவமன்னிப்புக் குறித்தும், துஆக் கேட்பது குறித்து பேசவும், கேட்கவும் அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்!!

இரவுத் தொழுகையின் சிறப்புக்களும்... சோபனங்களும்....

فعن أبي هُرَيرةَ - رضي الله عنه - قال: قال رسولُ الله - صلَّى الله عليه وسلَّم -: ((أفضلُ الصيام بعدَ رمضان شهر الله المُحرَّم، وأفضلُ الصلاةِ بعدَ الفريضة صلاةُ اللَّيْل)؛ رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: “ரமழானுடைய நோன்புக்குப் பின்னால் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் (ஆஷூரா) நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின்னால் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                           ( நூல்:முஸ்லிம் )

1. முஃமினின் சிறப்பு.

وعن سَهْل بن سعد - رضي الله عنه - قال جاءَ جبريلُ إلى النبيِّ  - صلَّى الله عليه وسلَّم - فقال يا مُحمَّد، عِشْ ما شِئتَ فإنَّك ميِّت، واعملْ ما شئتَ فإنَّك مَجْزيٌّ به، وأحْبِبْ مَن شئتَ فإنَّك مُفارقُه، واعلمْ أنَّ شرفَ المؤمن قيامُ الليل، وعِزَّه استغناؤُه عن الناس))؛
(4278) “الترغيب والترهيب وحسَّن إسنادَه المنذريُّ في
 رواه الطبراني
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தந்து....

“முஹம்மது {ஸல்} அவர்களே! நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள்.

நீங்கள் விரும்பியவாறு அமல் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் அமல் செய்த அள்விற்கு அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள்.

நீங்கள் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களின் மீது நேசம் கொள்ளுங்கள்! ஏனெனில், ஒரு நாள் நிச்சயம் அவர்களை விட்டும் நீங்கள் பிரிந்து விடுவீர்கள்.

முஹம்மத் {ஸல்} அவர்களே! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! ஓர் இறை நம்பிக்கையாளனின் சிறப்பு என்பது இரவிலே நின்று வணங்குவதின் மூலம் தான் கிடைக்கிறது. ஓர் இறைநம்பிக்கையாளனின் கண்ணியம் என்பது பிற மனிதர்களிடம் இருந்தும் தேவையற்றவனாக வாழ்ந்திடும் போது தான் வழங்கப்படுகின்றது”. என்று கூறியதாக, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                ( நூல்: தபரானீ, அத் தர்ஃகீப் – வத் தர்ஹீப் )

2. நிம்மதியுடன் சுவனத்தில் நுழைதல்....
وعن عبدِالله بن سَلاَم - رضي الله عنه
 قال: لمَّا قَدِم رسولُ الله - صلَّى الله عليه وسلَّم - المدينةَ، انجفَل الناسُ إليه، فجئتُ في الناس لأنظرَ إليه، فلمَّا استثبتُّ وجهَ رسولِ الله - صلَّى الله عليه وسلَّم - عَرَفْتُ أنَّ وجهه ليس بوجْهِ كذَّاب، وكان أوَّل شيءٍ تَكلَّم به أن قال: ((أيُّها الناس، أفْشُوا السلام، وأطْعِموا الطعام، وصَلُّوا والناس نِيام، تَدْخلوا الجَنَّةَ بسلام))؛ رواه الترمذي وصحَّحه

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா நகருக்குள் நுழைந்த போது மக்களெல்லாம் நபிகளாரைத் தரிசிக்க சாரை சாரையாய் சென்ற வண்ணம் இருந்தனர்.

நானும், அவர்களில் ஒருவனாக இருந்தேன். அப்போது முதன் முதலாக நான் நபி {ஸல்} அவர்களைக் கண்ணுற்றேன். அவர்களின் முகம் ஒளியால் இலங்கிற்று. அப்போது நான் நன்றாக விளங்கிக் கொண்டேன். பொய்யர்களின் முகம் ஒரு போதும் ஒளிக்கற்றை போல் இலங்காது. (ஆகையால் முஹம்மத் {ஸல்} அவர்கள் பொய்யர் இல்லை. அவர் உண்மையான நபி தான் என்று)

நபி {ஸல்} அவர்கள் தன் முன் தோன்றியிருந்த மக்கள் திரள் நோக்கி முதன் முதலாகச் சொன்ன திருவாக்கியம் எது தெரியுமா? “மக்களே! அல்லாஹ்வின் சாந்தியை தரக்கூடிய ஸலாத்தைப் பரப்புங்கள்! பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும் போது கண்விழித்து எழுந்து படைத்த ரப்பை தொழுங்கள்! நீங்களெல்லாம் நிம்மதியுடன் சுவனத்தில் நுழைவீர்கள்!” என்று தான் நபி {ஸல்} கூறினார்கள்.                                                   ( நூல்: திர்மிதீ )

3. முத்தான மூன்று சோபனங்கள்....

فعَن أبي أُمامة الباهِليِّ - رضي الله عنه - عن رسولِ الله  - صلَّى الله عليه وسلَّم - قال: ((عليكم بقيامِ اللَّيل، فإنَّه دأبُ الصالحين قبْلَكم، وهو قُرْبة لكم إلى ربِّكم، ومكفرة للسيِّئات، ومنهاةٌ عن الإثم)) رواه ابنُ خزيمة

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரவில் நின்று வணங்குவதை நீங்கள் கடைபிடித்து வாருங்கள்! ஏனெனில், அது உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லோர்கள் பலரின் சிறந்த நடைமுறையாகும்.

அதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தையும், பாவங்களுக்குப் பரிகாரத்தையும், தீய செயல்கள் செய்வதிலிருந்து பாதுகாப்பையும் பெறுவீர்கள்”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு ஃகுஸைமா )

4. சுவனத்து அழகிய மாளிகை பரிசாகக் கிடைக்கும்...

وقال النبي : { في الجنة غرفة يرى ظاهرها من باطنها، وباطنها من ظاهرها } فقيل: لمن يا رسول الله؟ قال: { لمن أطاب الكلام، وأطعم الطعام، وبات قائماً والناس نيام } [رواه الطبراني والحاكم وصححه الألباني].

அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “சுவனத்தில் ஒரு மாளிகை உண்டு. அதன் சிறப்பம்சம் என்னவெனில், உள்ளே உள்ளவை வெளியேயும், வெளியில் உள்ளவை உள்ளேயும் காட்சியளிக்கும்” என்று நபிகளார் கூறியபோது...

நபித்தோழர்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இத்தகைய சிறப்பு வாய்ந்த மாளிகையை அல்லாஹ் யாருக்கு வழங்குவான்” என வினவினார்கள்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் “இந்த மாளிகையை “மக்களுக்கு மத்தியில் தூய்மையோடு பேசியும், பசித்தவர்களுக்கு உணவளித்தும், மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் விழித்தெழுந்து தொழுதும் வந்தவர்களுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளான்” என்று பதிலளித்தார்கள். ( நூல்: ஹாக்கிம் )

5. சிறப்பானவர்களின் பட்டியலில் பெயர் இடம் பெறும்...

وقال : { من قام بعشر آيات لم يُكتب من الغافلين، ومن قام بمائة آية كتب من القانتين، ومن قام بألف آية كتب من المقنطرين } [رواه أبو داود وصححه الألباني]. والمقنطرون هم الذين لهم قنطار من الأجر.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: “எவர் இரவில் தொழுகையில் ஈடுபட்டு பத்து ஆயத்துகள் ஓதுவாரோ, அவர் அவ்விரவில் (அல்லாஹ்வை மறந்த) மறதியாளர்களில் எழுதப்படமாட்டார்.

எவர் நூறு ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் வணக்கசாலிகளின் பட்டியலில் இடம் பெறுவார். எவர் ஆயிரம் ஆயத்துகளை ஓதுவாரோ அவர் (கின்தார்) குவியலுக்குச் சமமான நன்மையைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவார்”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                ( நூல்: இப்னு ஃகுஸைமா )

6. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் இன்பங்கள் காத்திருக்கின்றன....

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ () فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், (நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில்,) அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் (இறை வணக்கத்திற்காக) எழுந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

மேலும், அவர்களுக்கு நாம் வழங்கியிருப்பதிலிருந்து தாராளமாக செலவும் செய்கின்றனர். அவர்களின் செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.”                               ( அல்குர்ஆன்:32:16,17 )

7. முகப் பொழிவு கிடைக்கும்....

حدثنا أبو الفضل العباس بن يوسف الشكلي قال حدثنا أيوب بن سليمان الصغدي قال حدثنا ثابت بن موسى قال حدثنا شريك بن عبد الله عن الأعمش عن أبي سفيان عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من كثرت صلاته بالليل حسن وجهه بالنهار.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் இரவிலே அதிகமாக நின்று தொழுவாரோ பகலிலே அவரின் முகத்தை அல்லாஹ் பொழிவுடன் இலங்கச் செய்கின்றான்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

8. அல்லாஹ்வை மகிழ்வுறச் செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டுமா?

أخبرنا أبو بكر جعفر بن محمد الفريابي قال حدثنا أبو كريب محمد بن العلاء الهمداني قال حدثنا يحيى بن آدم قال حدثنا إسرائيل عن أبي إسحاق عن أبي عبيدة وأبي الكنود عن عبد الله بن مسعود قال يضحك الله عز وجل إلى رجلين رجل قام في جوف الليل وأهله نياما فتطهر ثم قام يصلي فيضحك الله إليه ورجل لقي العدو فانهزم أصحابه وثبت حتى رزقه الله عز وجل الشهادة.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ் இரு மனிதர்களின் செயல் கண்டு மகிழ்கின்றான். ஒருவர், நடுநிசி நேரத்தில் வீட்டில் உள்ளவர்களெல்லாம் உறங்கிய பின்னர் எழுந்து அல்லாஹ்வை வணங்குபவர். மற்றொருவர், போர்க்களத்தில் எதிரிகளின் பலமான தாக்குதலைக் கண்டு தம்மோடு வந்தவர்கள் புறமுதுகிட்டி ஓடியும், அஞ்சா நெஞ்சத்துடன் போராடி அல்லாஹ்விற்காக தம் இன்னுயிரைத் தந்தவர்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

9. கோடைகாலமும் வசந்தமாகும்….

حدثنا أبو عبد الله أحمد بن الحسن بن عبد الجبار الصوفي قال حدثنا هارون بن معروف قال حدثنا عبد الله بن وهب عن عمرو الحارث عن دراج عن أبي الهيثم عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن قصر نهاره فصامه وطال ليله فقامه.

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “கோடைகாலம் கூட ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு வசந்தகாலம் தான். ஓர் முஃமின் தன் பகலை நோன்பு வைப்பதன் மூலம் சுறுக்கி, இரவில் வணக்க வழிபாடுகளால் நீட்டுகிற போது”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

10. மறுமையில் சீமானாக

وأخبرنا حامد بن شعيب البلخي قال حدثنا أبو عمر المقري قال حدثنا سنيد بن داود عن يوسف بن محمد بن المنكدر عن أبيه عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم قالت أم سليمان بن داود يا بني لا تكثر النوم بالليل فإن كثرة النوم بالليل يترك الرجل فقيرا يوم القيامة.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயர் தம் மகனார் சுலைமான் (அலை) அவர்களுக்கு உபதேசம் செய்கிற போதுமகனே! இரவில் அதிக நேரம் உறங்காதே! இறைவழிபாட்டில் கழிக்காமல் நீ உறங்குவது நாளை மறுமையில் அனைவரின் முன்பாக உன்னை வறியவனாக ஆக்கிவிடும்”. என்று கூறியதாக நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மாநபித்தோழர்களின் வாழ்விலிருந்து ஓர் செய்தி…

قال عمر بن الخطاب - رضي الله عنه -: "لولا ثلاث ما أحببت العيش في هذه الدنيا: الغزو في سبيل الله، ومُكَابدة الساعات من الليل، ومُجَالسة أقوام ينتقون أطايب الكلام؛ كما يُنْتَقَى أطايب التمر".

உமர் (ரலி) அவர்கள் சொல்வார்களாம்: “மூன்று காரியம் மாத்திரம் இல்லை என்று சொன்னால் நான் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒரு போதும் விரும்பியிருக்க மாட்டேன். 1. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது. 2. இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது. 3. நல்லோர்களின் சபையில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் வாழ்வியல் தாக்கம்.” என்று.

                     ( நூல்: முஃக்தஸர் கியாமுல்லைல் லிஇமாமி மர்வஸீ )

وفي موطأ مالك عن عبدالله بن عمر - رضي الله عنهما - قال: كان عمرُ يصلِّي في الليل، حتى إذا كان من آخرِ الليل أيقَظ أهلَه وقرَأ:
﴿ وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُك
رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى[طه: 132]

உமர் (ரலி) அவர்கள் இரவிலே வணக்கவழிபாடுகளை முடித்து விட்டு, இரவின் கடைசி பகுதியில் தம் வீட்டாரை இபாதத்களை செய்ய எழுப்புவார்களாம். பின்னர்நபியே! உமது வீட்டாரை தொழுமாறு ஏவுவீராக! இன்னும், நீரும் அதை முறையாகக் கடைபிடித்து வருவீராக! ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு உம்மிடம் நாம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், நல்ல முடிவு இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது.” எனும் வசனத்தை ஓதுவார்கள்.                                  ( நூல்: முஅத்தா )

மேன்மக்களான இறை நேசர்களின் வாழ்விலிருந்து….

قال رجل لإبراهيم بن أدهم رحمه الله : إني لا أقدر على قيام الليل فصف لي دواء؟!! فقال : لا تعصه بالنهار وهو يقيمك بين يديه في الليل ، فإن وقوفك بين يديه في الليل من أعظم الشرف، والعاصي لا يستحق ذلك الشرف .

ஒரு மனிதர் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களிடம்இரவு வணக்கத்தின் மீது ஆசை இருக்கிறது. ஆனால், என்னால் இரவில் விழித்தெழ முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார்.

அதற்கு, இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள்பகலில் பாவத்தில் ஈடுபடாதே! இரவில் நீ விழித்தெழுந்து வணங்க உனக்கு உதவியாக இருக்கும். நீ இரவில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு விட்டாய் எனில் உன்னை விடச் சிறந்தவர் எவருமில்லை. ஆனால், என்ன செய்வது? பாவிகள் இதற்கு தகுதி பெறுவதில்லையே!” எனப் பதில் கூறினார்கள்.

قال سفيان الثوري رحمه الله : حرمت قيام الليل خمسة أشهر بسبب ذنب أذنبته

சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் செய்த சிறு பாவத்தால் ஐந்து மாதங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டேன்.”

قال محمد بن المنكدر رحمه الله : كابدت نفسي أربعين عاماً ( أي جاهدتها وأكرهتها على الطاعات ) حتى استقامت لي

முஹம்மத் இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் நாற்பதாண்டு காலம் என்னுடைய நஃப்ஸை இரவு வணக்கத்தில் கடும் போராட்டத்தோடு ஈடுபடுத்தினேன். இறுதியில் என் நஃப்ஸ் இபாதத்தில் முழுமையாக எனக்கு ஒத்துழைத்தது.

كان ثابت البناني يقول كابدت نفسي على القيام عشرين سنة !! وتلذذت به عشرين سنة

ஸாபித் இப்னு புனானி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “என் நஃப்ஸை நான் இருபதாண்டு காலம் கடும் போராட்டத்தோடு இரவு வணக்கத்தில் ஈடுபடுத்தினேன். இறுதியில் இருபதாண்டு காலம் என் நஃப்ஸ் அதன் இன்பத்தை அனுபவித்தது.

 كان أحد الصالحين يصلي حتى تتورم قدماه فيضربها ويقول يا أمّارة بالسوء ما خلقتِ إلا للعبادة

ஸாலிஹீன்களில் ஓர் அடியார் இரவில் தங்களின் கால்கள் மறத்துப் போகும் அளவிற்கு நின்று வணங்குவார்களாம். பின்னர் தங்களின் பாதத்தை அடித்துக் கொண்டே தீயதை ஏவும் நஃப்ஸே! நீ இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாய்!” என்று கூறுவார்களாம்.

قال معمر : صلى إلى جنبي سليمان التميمي رحمه الله بعد العشاء الآخرة فسمعته يقرأ في صلاته : {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ} حتى أتى على هذه الآية {فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا } فجعل يرددها حتى خف أهل المسجد وانصرفوا ، ثم خرجت إلى بيتي ، فما رجعت إلى المسجد لأؤذن الفجر فإذا سليمان التميمي في مكانه كما تركته البارحة !! وهو واقف يردد هذه الآية لم يجاوزها {فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا }

மஃமர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் நான் சுலைமான் அத்தமீமி (ரஹ்) அவர்களின் அருகாமையில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அது இஷாவின் பின்னேரமாக இருந்தது.

சுலைமான் (ரஹ்) அவர்கள் தொழுகையில் சூரா முல்க் ஓதிக் கொண்டிருந்தார்கள். சூரா முல்க்கின் 27 –ஆம் வசனம் வந்த போது மீண்டும், மீண்டும் ஓதினார்கள்.

பள்ளியில் இருந்த மக்களெல்லாம் சென்று விட்டிருந்தனர். நானும் செல்வதற்காக எழுந்த போதும் கவனித்தேன் அப்போதும் அதே வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

மீண்டும் நான் சுபுஹ் தொழுகைக்காக பாங்கு சொல்லும் சமயத்தில் சென்று பார்த்த போது சுலைமான் (ரஹ்) அவர்கள் அந்த வசனத்தையே ஓதிக் கொண்டிருந்தார்கள்.

இரவு வணக்கத்தின் மூலம் மிக எளிதாக இறைவனுடனான தொடர்பில் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிற பேருண்மையை பதிய வைப்போம்!

இரவுத் தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நம் ஈருலக அந்தஸ்தை உயர்த்திட அல்லாஹ் பேரருள் புரிவானாக! ஆமீன்!! வஸ்ஸலாம்!!!