Monday 29 May 2017

முஹம்மத் {ஸல்} அவர்கள் எனும் அகிலத்தின் அருட்கொடை!!!



நான்காம் நாள் தராவீஹ் பயான்

முஹம்மத் {ஸல்} அவர்கள் எனும் அகிலத்தின் அருட்கொடை!!!



நான்காம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், மூன்றாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!


இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்று மா நபி {ஸல்} அவர்களின் மகத்துவம் குறித்து பேசுகின்றது...

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا (64)

ஆகவே, இன்றைய தினம் மா நபி {ஸல்} அவர்கள் குறித்த சில தகவல்களை நாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ ()

திண்ணமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருபகாரம் புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைபடுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில் தான் இருந்தார்கள்.  ( அல்குர்ஆன்: 3: 164 )

அல்லாஹ் கூறுகின்றான்:

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا (6)
நபியே! இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை யானால், இவர்களின் பின்னே சென்று, கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக் கொள்வீர் போல் இருக்கிறதே! ( அல்குர்ஆன்: 18: 6 )


மாற்றுக்கருத்து கொண்டவர்களோடு மாநபியின் அருட்கொடை!!!

سفانة بنت حاتم الطائي
الكريمة بنت الكريم
كان أبوها مضرب الأمثال في الكرم في الجاهلية، فلما ظهر الإسلام وانتشرت الفتوح، غزت خيلُ رسول اللَّه صلى الله عليه وسلم قبيلتها “طَـيِّئ”، وأخذوها بين مَنْ أخذوا من السبايا. وكانت امرأة بليغة عاقلة، مرّ عليها النبي صلى الله عليه وسلم فقالت له: يا رسول اللَّه! امْـنُنْ عَلَي، مَنَّ اللَّه عليك، فقد هلك الوالد، وغاب الوافد (تَنَصَّرَ أخوها وفرّ حتى كان قريبًا من أرض الروم، وكان ذلك قبل أن يُسلم ويَحْسُنَ إسلامه) ولاتُشَمِّتْ بى أحياء العرب، فإنى بنتُ سيد قومي، كان أبى يفك الأسير ويحمى الضعيف، ويَقْرِى (يكرم) الضيف، ويشبع الجائع، ويفرّج عن المكروب، ويطعم الطعام، ويفشى السلام، ولم يرد طالب حاجة قط، أنا بنت حاتم الطائي.
فقال لها رسول اللَّه صلى الله عليه وسلم: “يا جارية، هذه صفة المؤمن، لو كان أبوك مسلمًا لترحمنا عليه”. ثم قال لأصحابه: “خلوا عنها، فإن أباها كان يحب مكارم الأخلاق”. ثم قال لها: “فلا تعجلي حتى تجدي ثقة يبلغك بلادك، ثم آذنيني” [ابن هشام].
فلما قدم ركب من أهلها، أرادت الخروج معهم، وذهبت إلى رسول اللَّه صلى الله عليه وسلم تستأذنه، فأذن لها وكساها من أحسن ما عنده من الثياب، وجعل لها ما تركبه، وأعطاها نفقة تكفيها مؤنة السفر وزيادة.

ஸஃபானா நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஸஃபானாவோடு, அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின் சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை அறிந்ததும், ஸஃபானா வையும், தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அண்ணலார், மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதரே! எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள் அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்தார் ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டுவான்! என்று கூறி முடித்தார்.

நபிகளார் மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும் ஸஃபானா அழைக்க, அருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.

ஸஃபானா, அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும், கஷ்டத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும், பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும், குடும்ப உறவுகளை பலப்படுத்தியும், பிரயாணிகளுக்கு உணவளித்தும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்என்று வேண்டி நின்றார்கள்.

ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் உண்மையில் நீ உம் தந்தை செய்ததாகச் சொன்ன அனைத்து நற்காரியங்களும், இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! அவை அனைத்தும் ஒரு முஃமின் செய்ய வேண்டிய காரியங்களே! உம் தந்தை மாத்திரம் முஸ்லிமாக இருந்திருப்பாரேயானால் இன்னும் பேருபகாரம் வழங்கப்பட்டிருப்பார்! உனக்கு எம் கருணையுண்டு! என்று கூறி விட்டு, தோழர்களை நோக்கி தோழர்களே! இவரின் தந்தை நற்குணங்களின் பிறப்பிடமாக இருந்து, நற்குணங்களை அதிகம் நேசித்து வாழ்ந்திருக்கின்றார்! ஆகவே, இவரை விடுதலை செய்து விடுங்கள்என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில், ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.

வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் குடிமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர் ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும்? என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும்என்று ஸஃபானா கூறினார்.

இது கேட்ட அண்ணலார், சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

மேலும், ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும், பயணிக்க வாகனமும், வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள்.

                          ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:272 )

இறைநம்பிக்கையாளர்களோடு மாநபியின் அருட்கொடை!!


حَدَّثَنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، وأَبُو كُرَيْبٍ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ ، قَالَا : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ ، فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ ، وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ، فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ ، مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا " .

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் உடனே பதிலளிக்கும் ஒரு துஆவை நல்கியிருக்கின்றான். அனைத்து நபிமார்களும் அதை பயன் படுத்திவிட்டனர். ஆனால், நான் நாளை மறுமை நாளில் என் உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டவர்களுக்கு பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தி வைத்திருக்கின்றேன்என்றார்கள்.   ( நூல்: மிர்காதுல் மஃபாதீஹ், 9/1523 )

قال الله تعالى :( يا جبريل ما فعل العاصون من امة محمد صلي الله عليه وسلم )
فيقول جبريل:' اللهم انت اعلم بهم فيقول انطلق فانظر ما حالهم '...
·- فينطلق جبريل عليه السلام الي مالك وهو علي منبر من نار في وسط جهنم .... فاذا نظر مالك علي جبريل عليه السلام قام تعظيما له.
فيقول له جبريل:' ما ادخلك هذا الموضع ؟'
فيقول:' ما فعلت بالعصابه العاصيه من أمة محمد (صلى الله عليه وسلم))؟'
فيقول مالك:' ما اسوء حالهم ... واضيق مكانهم ... قد احرقت اجسامهم ... واكلت لحومهم ... وبقيت وجوههم وقلوبهم يتلالاء فيها الايمان '
فيقول جبريل:' ارفع الطبق عنهم حتي انظر اليهم ' ...
·- قال فيأمر مالك الخزانه فيرفعون الطبق عنهم ... فاذا نظروا الي جبريل والي حسن خلقه .. علموا انه ليس من ملائكه العذاب .
فيقولون: ' من هذا العبد الذي لم نرا احدا قط احسن منه ؟'
فيقول مالك: ' هذا جبريل الكريم الذي كان ياتي محمدا بالوحي'
- فاذا سمعوا ذكر محمد صاحوا بأجمعهم:'أقرئ محمدا منا السلام وأخبره ان معاصينا فرقت بيننا وبينك .. وأخبره بسوء حالنا '..
فينطلق جبريل حتي يقوم بين يدي الله تعالي ..
فيقول الله تعالى: (كيف رايت امة محمد ؟)
فيقول جبريل: ' يا رب ما اسوء حالهم وأضيق مكانهم ' ..
فيقول الله تعالى :(هل سألوك شيئا ؟ ) ...
فيقول جبريل:' يا رب نعم سألوني ان اقرئ نبيهم منهم السلام وأخبره بسوء حالهم ..'
فيقول الله تعالى :( أنطلق فاخبره ) ..
·فينطلق جبريل الي النبي وهو في خيمه من درة بيضاء لها اربعه الاف باب لكل باب مصراعان من ذهب ..
فيقول جبريل: 'يا محمد قد جئتك من عند العصابه العصاه الذين يعذبون من أمتك في النار .. وهم يقرئونك السلام .. ويقولون ما اسوء حالنا واضيق مكاننا ..'
·فيأتي النبي الي تحت العرش فيخر ساجدا ويثني علي الله تعالي ثناء لم يثن عليه احد مثله ..
فيقول الله تعالي : (ارفع راسك .. وسل تعط .. واشفع تشفع )
فيقول صلى الله عليه وسلم)' الاشقياء من امتي قد انفذت فيهم حكمك وانتقمت منهم فشفعني فيهم '
فيقول الله تعالى : (قد شفعتك فيهم .. فأت النار فأخرج منها من قال لا الله الا الله)
·فينطلق النبي فاذا نظر مالك النبي صلي الله عليه وسلم قام تعظيما له
فيقول صلى الله عليه وسلم): ' يا مالك ما حال امتي الاشقياء ؟ '
فيقول مالك: ' ما اسوء حالهم .. واضيق مكانهم ..'
فيقول محمد :' افتح الباب وارفع الطبق '
·فاذا نظر اصحاب النار الي محمد صلي الله عليه وسلم .. صاحوا بأجمعهم فيقولون ... يا محمد احرقت النار جلودنا واحرقت اكبادنا ..
* فيخرجهم جميعا وقد صاروا فحما قد اكلتهم النار فينطلق بهم الي نهر بباب الجنه يسمي نهر الحيوان فيغتسلون منه فيخرجون منه شبابا جردا مردا مكحلين وكأن وجوههم مثل القمر مكتوب علي جباههم
(الجهنميون عتقاء الرحمن من النار) ...
فيدخلون الجنه فاذا رأي اهل النار قد اخرجوا منها قالو :يا ليتنا كنا مسلمين وكنا نخرج من النار ..
وهو قوله تعالي ((ربما يود الذين كفروا لو كانو مسلمين)) (صوره الحجر 2)

முஹம்மது {ஸல்} அவர்களின் உம்மத்தில் பெரும்பாவம் செய்து தவ்பாச் செய்யாமல் இருந்தவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படுவர். அவர்கள் வேதனை தாங்கமுடியாமல் நரகத்தின் காப்பாளர் மாலிக் (அலை) அவர்களிடம் தாங்கள் இன்னுமா எங்களை வேதனைச் செய்ய நாடுகின்றீர்களா?” எங்கள் மீது இரக்கம் கொள்ளக்கூடாதா? என்று ஓலமிட்டுக் கதறுவார்கள்.

அப்போது, மாலிக் (அலை) அவர்கள் உங்கள் இறைவன் உங்கள் மீது இரக்கமாக இல்லையே!?” கோபமாக அல்லவா இருக்கின்றான். நான் எப்படி உங்கள் மீது கருணை காட்ட முடியும்என்பார்கள்.

அப்போது, அவர்கள் யாஅர்ஹமர் ராஹீமீன்! என்று அழைப்பாளர்கள். அது கேட்ட மாலிக் (அலை) அவர்கள் நீங்கள் ஷஹாதாவைக் கூறுங்கள்!என்பார். உடனே எல்லோரும் பெரும் சப்தமாக ஷஹாதாவைக் கூறுவார்கள்.

இந்தச் சப்தம் அதிகமாகவே, அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து முஹம்மத் {ஸல்} அவர்களின் சமுதாயம் நரகிலிருந்து தவ்ஹீத் கலிமாவை மொழிந்து கொண்டிருக்கின்றார்கள். நீர் சென்று மாலிக் (அலை) அவர்களிடம் வேதனையை இலகுவாக்கச் சொல்லுங்கள்என்பான்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், மாலிக் (அலை) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் கட்டளையை தெரியப்படுத்துவார்கள். உடனே, அவர்களுக்கு வேதனை இலகுவாக்கப்படும்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நரகின் வாசலில் வந்து நிற்கும் போது முஃமினான பாவிகள் அவர்களைப் பார்ப்பார்கள். முஃமினான பாவிகளைப் பார்த்ததும், நரகின் வேதனையால் கருகிய கொள்ளிக் கட்டைகளைப் போல் இருக்கிற நிலையைப் பார்த்ததும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அழுவார்கள்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தான் தங்களுடைய வேதனையை குறைத்ததாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வர், பின்னர், ஜிப்ரயீல் அவர்களிடம் தெரிவித்து விட்டு, “உங்கள் வருகைக்குப்பின்னரே எங்களின் வேதனை இலகுவாக்கப்பட்டுள்ளதுநீங்கள் யார்?” என்று கேட்பார்கள் முஃமினான பாவிகள்.

அப்போது தான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தாம் யார் என்பதைத் தெரிவிப்பார்கள்.  உடனே, அந்தப் பாவிகள் எங்களின் வேதனையைப் பார்த்தீர்களா?” நீங்கள் பெருமானார் {ஸல்} அவர்களிடம் சென்றால் எங்களின் ஸலாத்தை எத்தி வையுங்கள்! எங்களை நரகில் இருக்கிற காஃபிர்கள் ஏளனம் செய்கிறார்கள், எங்களின் வேதனையையும், நாங்கள் படும் பாட்டையும் தெரிவித்து விடுங்கள்! என்பார்கள்.

நீங்கள் இங்கு படுகிற அவஸ்தைகள் உங்களுடைய நபிக்கு தெரியாது; தெரிந்தால் அவர்கள் சுவனத்தில் தரித்திருக்க மாட்டார்கள். எனவே, நான் சென்று இதை எத்திவைக்கிறேன் என்று சொல்லி ஜிப்ரயீல் (அலை) அங்கிருந்து விடை பெற்றார்கள்.

அல்லாஹ்வின் அனுமதியோடு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அண்ணலாரைத் தேடி சுவர்க்கத்திற்கு வருவார்கள். அங்கே அண்ணலார் {ஸல்} அவர்கள் தூபா எனும் மரத்தடியில் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் வீற்றிருப்பார்கள்.

அங்கே, நின்று கொண்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அழுது கொண்டு நிற்பார்கள். பெருமானார் {ஸல்} அவர்கள் ஜீப்ரயீல் (அலை) அவர்களைப் பார்த்து ஜிப்ரயீலே! ஏன் அழுகின்றீர்?” என்று கேட்பார்கள்.

அப்போது, நடந்தவற்றை நபிகளாரிடத்திலே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறுவார்கள். நரகிலிருந்து எழும் ஷஹாதா சப்தத்தை நபி {ஸல்} காது தாழ்த்தி கேட்டு விட்டு யாஉம்மத்தீ, யாஉம்மத்திஎன்று கண்ணீர் தாரை, தாரையாய் வடித்தவர்களாக அர்ஷை நோக்கி ஓடிவருவார்கள்.

அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள். அல்லாஹ் நபிகாளாரின் துஆவைக் கபூல் செய்து அந்தப் பாவிகளை விடுதலை செய்வான்.                ( நூல்: தபரானீ )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஷஃபாஅத்துக்கு உரியவர்களாக ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Sunday 28 May 2017

இஸ்லாம் எனும் மகத்தான அருட்கொடை!!!



மூன்றாம் நாள் தராவீஹ் பயான்

இஸ்லாம் எனும் மகத்தான அருட்கொடை!!!



மூன்றாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், இரண்டாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இதர இபாதத்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!

நேற்று துவங்கப்பட்ட  ஆலுஇம்ரான் அத்தியாயம் இன்று ஓதி நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. ஹிஜ்ராவிற்குப் பின்னர் மதீனாவில் இறக்கியருளப்பட்ட முக்கியமான ஓர் அத்தியாயமாகும்.

இன்று ஓதப்பட்ட ஒன்னேகால் ஜுஸ்வில் பல்வேறுபட்ட வரலாற்றுச் செய்திகள், பத்ர், உஹத், குறித்த நிகழ்வுகள், சமூக ஒற்றுமை, நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல், மாநபி {ஸல்} அவர்களின் அந்தஸ்து, ஷஹீத்களின் அந்தஸ்து, மரணம், இஸ்திஃக்ஃபார், முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம் என பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளது. 

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்று இஸ்லாம் மார்க்கத்தின் மகத்துவம் குறித்து பேசுகின்றது...

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி ( மார்க்கம்தீன் ) ஆகும்”. ( அல்குர்ஆன்: 3: 19 )

உலக மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியைத் தந்ததாகும்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்தும் விட்டேன். இன்னும், உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.                                    ( அல்குர்ஆன்: 5: 3 )

மனிதனை மனிதனாகவும், புனிதனாகவும் மாற்றுகிற, பண்படுத்துகிற மகத்தான ஆற்றல் இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு. ஏனெனில், இஸ்லாம் மாத்திரமே படைத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மாதமாகும்.

உலகில் மனித சமூகத்தின் எல்லா வகையான உயர் சிந்தனைகளும், அழகிய செயல்பாடுகளும் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அங்கே இஸ்லாம் நிச்சயம் இடம் பெற்றாக வேண்டும்.

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ()

இஸ்லாத்தை விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒரு போதும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும், மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்”.                                                  ( அல்குர்ஆன்: 3: 85 )

பஞ்சாபின் சுற்றுலாத்துறையின் அமைச்சரும் (காங்கிரஸ் எம். எல். ஏ) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் அவருடைய முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியை வாட்ஸ்அப்பில் படிக்க நேர்ந்தது. அதில்….

“இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு நாள் 10,000 ரூபாயை எடுத்துக் கொண்டு அன்னை தெரசாவைச் சந்தித்து நன்கொடை அளிக்க அவரின் ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன்.

என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, நான் வந்த நோக்கத்தை அங்கிருந்தவர் களிடம் தெரிவித்துக் கொண்டு அன்னை தெரசா அவர்களை நேரில் காண வேண்டும் எனக் கூறினேன்.

அங்கிருந்தவர்கள் ஒரு வழியைக் காண்பித்து இப்படிச் செல்லுங்கள், அங்கே ஒரு ப்ளாக்கில் அன்னை இருப்பார்கள் என்று அடையாளம் காட்டினார்கள்.

நான் அங்கே ஒவ்வொரு ப்ளாக்காக கடந்து இறுதியாக அன்னை இருந்த ப்ளாக்கை அடைந்தேன். ஆனால், அந்த ப்ளாக்கில் என்னால் நிற்க கூட முடியவில்லை. மனித உடலின் துர்நாற்றம் என் குடலைக் குமட்டிக் கொண்டு வந்தது.

அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியுற வைத்தது. உடல் முழுவதும் புண்ணால் பாதிக்கப்பட்ட, குடும்பத்தினரால் முழுவதுமாக கைவிடப்பட்ட ஒரு நோயாளி புண்ணில் இருந்து சீழ், சலம் வடிய ஒரு படுக்கையில் படுத்திருக்க அவர் அருகே அமர்ந்து அந்த புண்ணில் வடியும் சீலை எந்த சலனமும் இல்லாமல் ஒரு தாய் தன் மகனுக்கு செய்வதைப் போன்று துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னால் அதற்கும் மேலாக அங்கே நிற்க முடியாமல் ஓடோடி வெளியே வந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். இறுதியாக, நான் அன்னையைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்தி என்னுடைய நன்கொடையைக் கொடுத்தேன்.

அதைப் பெற்றுக் கொண்டு, இதையெல்லாம் விட நீங்கள் வந்து இங்கு அடைக்கலம் ஆகி இருக்கிற இவர்களுக்கு ஒரு நாளாவது, ஒரு நேரமாவது பணிவிடை செய்தால் மிக நன்றாக இருக்கும்” என்றார்கள்.

அன்னை தெரசா மட்டும் இல்லை உலகில் மனித நேய மிக்க எத்தனையோ நல்லுள்ளம் கொண்டவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அவர்கள் செய்கிற காரியம் எவ்வளவு புனிதமானதாக இருக்கிறது என்பதை நாம் விளங்கியும் வைத்திருக்கின்றோம்.

ஆனால், அவர்கள் இவ்வுலகில் இஸ்லாம் அல்லாத வாழ்க்கை நெறியை தேர்வு செய்து வாழ்கிற போது அதற்கு நாளை மறுமையில் எவ்வித பலனும் இல்லாமல் போய்விடுகின்றது. நாளை மறுமையில் நரகின் வேதனையில் இருந்து இந்த மகத்தான செயல்கள் ஒரு போதும் காப்பாற்றப் போவதில்லை.

இஸ்லாத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும்…..

சற்றேறக்குறைய 120 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர். இறைநிராகரிப்பில் சரியாக 60 ஆண்டுகளும், தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று 60 ஆண்டுகளும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

அவர் தான் ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகன் ஆவார்கள்.

மக்கா வெற்றியின் போது தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ள மாநபி {ஸல்} அவர்களின் கரங்களைப் பற்றி தழுதழுத்த குரலில், கண்களில் ஏக்கத்தோடு இப்படிக் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்லாத்திற்கு வரும் முன்னர் பல நல்லறங்களை செய்திருக்கின்றேன். அதன் நன்மைகள் எனக்கு கிடைக்குமா?” என்று...

ஆம்! இஸ்லாத்திற்கு வரும் முன் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார். (அந்த அடிமைகளில் ஒருவர் தான் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அவரை அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்கள்.) நூறு ஒட்டகைகளை அறுத்து ஏழைகளுக்கு உணவாகவும், இறைச்சியாகவும் தர்மம் செய்திருந்தார்கள்.

மேலும், மக்காவில் ஹரமிற்கு ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களுக்கு (இலவசமாக) உணவு வழங்கும் உயர்வான, உன்னதமான பொறுப்பையும் செய்து வந்தார்கள்.

فقال رسول الله أسلمت على ما سلف لك من خير

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், கீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களிடம் ”நீர் இஸ்லாத்திற்குள் நுழையும் போதே அவையனைத்தையும் சேர்த்தே தான் கொண்டு வந்து விட்டீர்” என பதில் கூறினார்கள்.

தங்களின் வாழ்க்கையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாம் இஸ்லாத்திற்கு தாமதமாக வந்ததை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள்.

فلقد رآه ابنه بعد إسلامه يبكي، فقال: "ما يبكيك يا أبتاه؟

قال: "أمور كثيرة كلها أبكاني يا بني

أولها بطء إسلامي مما جعلني أسبق إلى مواطن كثيرة صالحة حتى لو أنني أنفقت ملء الأرض ذهبا لما بلغت شيئا منها

ثم إن الله أنجاني يوم "بدر" و "أحد" فقلت يومئذ في نفسي:

لا أنصر بعد ذلك قريشا على رسول الله – صلى الله عليه و سلم – و لا أخرج من مكة، فما لبثت أن جررت إلى نصرة "قريش" جرا

ثم إنني كنت كلما هممت بالإسلام، نظرت إلى بقايا من رجالات قريش لهم أسنان و أقدار متمسكين بما هم عليه من أمر الجاهلية، فأقتدي بهم و أجاريهم

و ياليت أني لم أفعل

فما أهلكنا إلا الاقتداء بآبائنا و كبرائنا

فلم لا أبكي يا بني؟

அப்படி ஒரு நாள் அவர்கள் அழுது கொண்டிருந்த போது அவர்களின் மகனார் தந்தையே! ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்.

ஒன்றா? இரண்டா? மகனே! எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றது நான் அழுவதற்கு… என்று கூறிவிட்டு தொடர்ந்தார்கள்.

ஆரம்பமாக நான் இஸ்லாத்தை மிகவும் தாமதமாக ஏற்றுக் கொண்டதை நினைத்தும், எத்தனையோ தருணங்கள் அப்பொழுதெல்லாம் நான் இணைந்திருந்தால் மகத்தான நன்மைகளையும், கூலியையும் பெற்றிருப்பேனே!? நான் இழந்த அந்த நன்மைகளை பூமி முழுவதையும் செலவழித்தாலும் பெற்றுக் கொள்ள முடியாதே! என்பதற்காகவும் அழுகின்றேன்.

பின்னர், அல்லாஹ் என்னை பத்ரிலும், உஹதிலும் நான் கொல்லப்படாமல் பாதுகாத்தான். அப்போது, நான் எனக்குள் கூறிக் கொண்டேன் “இனி ஒரு போதும், குறைஷிகளுக்கு உதவக் கூடாது என்று” என்ன செய்ய அதன் பின்னரும் குறைஷிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் இசைந்தேன்.

பின்னர், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என் உள் மனம் கூறும் போதெல்லாம் குறைஷி குலத்தின் மேன்மக்களை பார்த்தேன், அவர்கள் தங்களின் கொள்கையில் பிடிப்போடு இருந்ததோடு மாத்திரமல்லாமல் மக்களிடம் செல்வாக்கோடும் இருந்தார்கள்.

நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது! என் அழிவுக்கும், நாசத்திற்கும் காரணம் மூதாதையர்களின் கொள்கையும், மேன்மக்களின் வழிமுறைகளும் தான்!.

மகனே! இப்போது சொல்! நான் எப்படி அழாமல் இருக்க முடியும்! என்று பதில் கூறினார்கள்.  ( நூல்: தஹ்தீபுல் கமால் லி இமாமி அபுல் ஹஜ்ஜாஜுல் முஸ்னீ (ரஹ்).. )

கிட்டத்தட்ட 60 ஆண்டு கால இஸ்லாமிய வாழ்க்கையில் போட்டி போட்டு இபாதத்கள் செய்தார்கள்.

ஒருமுறை ஹஜ் செய்ய வரும் போது தன்னுடன் 100 ஒட்டகைகளை அழைத்து வந்து, குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு வினியோகித்தார்களாம்.

மற்றொரு முறை ஹஜ் செய்ய வரும்போது தன்னுடன் நூறு அடிமைகளை அழைத்து வந்தார்கள். அவர்களின் கழுத்துகளில் அல்லாஹ்விற்காக ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களால் விடுவிக்கப்படுவர்கள்” என வெள்ளியால் ஆன பட்டைகளில் பொறிக்கப்பட்டு இருந்ததாம். பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.

وقيل إن حكيما باع دار الندوة من معاوية بمئة ألف

உச்சபட்சமாக, இழந்த நன்மைகளை அடையும் பொருட்டு இஸ்லாத்திற் கெதிராகவும், மாநபிக்கும், உம்மத்திற்கும் எதிராகவும் சதா தீய பல திட்டம் தீட்ட உதவிய தாருன் நத்வாவை ஒரு லட்சம் திர்ஹம் விலை கொடுத்து வாங்கி முஆவியா (ரலி) ஆட்சி காலத்தில் முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

يا رسول الله لا أدع شيئا صنعته في الجاهلية إلا صنعت لله في الإسلام مثله وكان أعتق في الجاهلية مئة رقبة وأعتق في الإسلام مثلها وساق في الجاهلية مئة بدنة وفي الإسلام مثلها

இன்னொரு, அறிவிப்பின் படி ”இஸ்லாத்திற்கு முன்பாக எதையெல்லாம் நான் விரும்பி செய்தேனோ அல்லாஹ்வின் தூதரே! அவற்றை போன்று இஸ்லாமிய வாழ்விலும் நான் செய்வேன்” என்று ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களிடம் உறுதியோடு கூறினார்கள்.

பின்னர், அது போன்றே ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள்.

حدثنا عبد الحميد بن سليمان سمعت مصعب بن ثابت يقول بلغني والله أن حكيم بن حزام حضر يوم عرفة ومعه مئة رقبة ومئة بدنة ومئة بقرة ومئة شاة فقال الكل لله وعن أبي حازم قال ما بلغنا أنه كان بالمدينة أكثر حملا في سبيل الله من حكيم

இன்னொரு அறிவிப்பின் படி, ஒரு ஹஜ்ஜின் போது அரஃபாவில் 100 ஆடுகள், 100 மாடுகள், 100 ஒட்டகங்கள் 100 அடிமைகள் ஆகியவற்றை கொண்டு வந்து இதை நான் அல்லாஹ்விற்காக தர்மம் செய்கின்றேன் என்றார்கள்.

மதீனாவில் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கப்படுகிற செல்வங்களில் பெரும்பான்மையானவை ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களுடையதாகத்தான் இருக்கும் என அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபதில் அஸ்ஹாப், ஸியரு அஃலா மின் நுபலா,  )

இஸ்லாத்தின் நிழலில் ஒரு நாள் வாழ்வதன் மகத்துவம் குறித்து நபித்தோழர் ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களின் வாழ்வும் வாக்கும் நம்மை உணரத் தூண்டுகின்றது.

நாம் சில தலைமுறைகளாக முஸ்லிம்களாக இருப்பதால் இஸ்லாம் எவ்வளவு பெரிய மகத்தான அருட்கொடை என்பதை நம்மால் விளங்க முடிவதில்லை.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

நான்காம் நாள் தராவீஹ் பயான் தலைப்பு: முஹம்மத் { ஸல் – அவர்கள் } எனும் அளவிலா அருட்கொடை!!