Tuesday 30 May 2017

ஐந்தாம் நாள் தராவீஹ் பயான்! தொழுகை எனும் நிகரில்லா அருட்கொடை!!!



ஐந்தாம் நாள் தராவீஹ் பயான்!
தொழுகை எனும் நிகரில்லா அருட்கொடை!!!



ஐந்தாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், நான்காம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்றின் ஊடாக தொழுகையின் மகத்துவம் குறித்து அல்லாஹ் பேசும் போது...

وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ

”திண்ணமாக, நான் உங்களுடன் இருக்கின்றேன்! நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தி வந்தால்....”                                          ( அல்குர்ஆன்: 5: 12 )

ஆம்! அல்லாஹ்வோடு நெருக்கத்தையும், அண்மையையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட நிகரில்லா அருட்கொடை தொழுகையாகும்.

ஏகத்துவத்திற்குப் பின்னால் அனைத்து நபிமார்களுக்கும், அனைத்து நபிமார்களின் சமூகத்தினருக்கும் அல்லாஹ் ஏவிய மாபெரும் கட்டளை ஒன்று இருக்குமானால் அது தொழுகை தான்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான்.
وكان يقول في مرض موته الذي قبض فيه صلّى الله عليه وسلم
الصلاة وما ملكت أيمانكم

நபி {ஸல்} அவர்கள் உயிர் பிரியும் கடைசி தருவாயில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள்.

தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது....

وقد شبه النبي صلّى الله عليه وسلم كما في الحديث الصحيح – الصلاة ب(( نهرغمر جارٍ بباب أحدكم يغتسل منه العبد كل يوم خمس مرات هل يبقى من درنه شىء . قالوا :لا يارسول الله قال : فذلك مثل الصلوات الخمس يمحوا الله بهن الخطايا والذنوب

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

தொழுகை தீய காரியங்களை அழித்து விடும்.....

عن عبد الله قال: جاء رجل إلى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال:: إني عالجت امرأة في أقصى المدينة وإني أصبت منها ما دون أن أمسها وأنا هذا فاقض في ما شئت. فقال له عمر: لقد سترك الله! لو سترت على نفسك، فلم يرد عليه رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شيئا فانطلق الرجل فأتبعه رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رجلا فدعاه، فتلا عليه:" أَقِمِ الصَّلاةَ طَرَفَيِ النَّهارِ وَزُلَفاً مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَناتِ يُذْهِبْنَ السَّيِّئاتِ ذلِكَ ذِكْرى لِلذَّاكِرِينَ" إلى آخر الآية، فقال رجل من القوم: هذا له خاصة؟ قال:" [لا] بل للناس كافة". قال الترمذي: حديث حسن صحيح. وخرج أيضا عن ابن مسعود أن رجلا أصاب من امرأة قبلة حرام فأتى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فسأله عن كفارتها فنزلت:" أَقِمِ الصَّلاةَ طَرَفَيِ النَّهارِ وَزُلَفاً مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَناتِ يُذْهِبْنَ السَّيِّئاتِ" فقال الرجل: ألي هذه يا رسول الله؟ فقال:" لك ولمن عمل بها من أمتي". قال الترمذي

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கின்றார்கள்: ”ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் அனைத்திற்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

                                                            ( நூல்: புகாரி )
மானக்கேடானவைகளைத் தடுக்கிறது..

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ

”(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக! அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். ( அல்குர்ஆன்: 29: 45 )

தொழுபவர்கள் மார்க்கத்தில் சகோதரர்கள்...

فإن تابوا وأقاموا الصلاة وأتوا الزكاة فإخوانكم في الدين

ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.         ( அல்குர்ஆன் 9: 11 )

தொழுகையை விட்டவர் ஷஃபாஅத்தின் உரிமையை இழந்து விடுவார்…

فالصلاة عهد .. قال الله تعالى
  ونسوق المجرمين إلى جهنم ورداً .لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهداً  .و قال صلّى الله عليه وسلم كما في السنن : - (( العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر)) فمن حُرم الصلاة فقد حُرم الشفاعة يوم الحساب

“குற்றவாளிகளையோ, தாகித்த மிருகங்களைப் போன்று நரகத்தின் பக்கம் விரட்டிச் செல்வோம். அந்நாளில் அவர்களால் எவ்விதப் பரிந்துரையும் செய்ய இயலாது”. ( அல்குர்ஆன்: 19: 86, 87 )

இந்த இறைவசனத்தில் கூறப்படும் அல் அஹ்த் எனும் வார்த்தைக்கு பின் வரும் ஹதீஸில் வரும் அல் அஹ்த் எனும் வார்த்தையின் பொருளே விளக்கமாகும் என்று முஃபஸ்ஸிரீன்கள் விளக்கம் தருகின்றார்கள்.

புரைதா (ரழி) அறிவிக்கின்றார்கள்: “நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( நூல்கள்: திர்மிதி, அபுதாவுத், அஹமத், இப்னுமாஜா )

எனவே, எவர் தொழுகையை தொழுவதில்லையோ அவருக்கு மறுமையில் ஷஃபாஅத் செய்யும் உரிமை தடுக்கப்பட்டு விடும்.

தொழுகையில் இன்பம் கண்ட மேன்மக்கள்….

وقد ورد معناه في حديث رواه إسحاق بن بشر في كتابه " المبتدأ " حيث قال : أنبأنا يعقوب الكوفي ، عن عمرو بن ميمون ، عن أبيه ، عن ابن عباس ، أن رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به رأى زكريا في السماء ، فسلم عليه وقال له : يا أبا يحيى ،
 خبرني عن قتلك ; كيف كان ؟ ولم قتلك بنو
 ص: 412  إسرائيل ؟ قال : يا محمد ، أخبرك أن يحيى كان خير أهل زمانه ، وكان أجملهم ، وأصبحهم وجها
، وكان كما قال الله تعالى
سيدا وحصورا وكان لا يحتاج إلى النساء ، فهويته امرأة ملك بني إسرائيل ، وكانت بغية ، فأرسلت إليه ، وعصمه الله ، وامتنع يحيى وأبى عليها ، وأجمعت على قتل يحيى ، ولهم عيد يجتمعون في كل عام ، وكانت سنة الملك أن يوعد ولا يخلف ولا يكذب . قال : فخرج الملك إلى العيد فقامت امرأته فشيعته ، وكان بها معجبا ، ولم تكن تفعله فيما مضى ، فلما أن شيعته قال الملك : سليني ، فما سألتني شيئا إلا أعطيتك . قالت : أريد دم يحيى بن زكريا . قال لها : سليني غيره . قالت : هو ذاك . قال : هو لك . قال : فبعثت جلاوزتها إلى يحيى ، وهو في محرابه يصلي ، وأنا إلى جانبه أصلي . قال : فذبح في طست وحمل رأسه ودمه إليها . قال : فقال رسول الله صلى الله عليه وسلم : فما بلغ من صبرك ؟ قال : ما انفتلت من صلاتي . قال : فلما حمل رأسه إليها ، فوضع بين يديها ، فلما أمسوا خسف الله بالملك وأهل بيته وحشمه ، فلما أصبحوا قالت بنو إسرائيل : قد غضب إله زكريا لزكريا ، فتعالوا حتى نغضب لملكنا ، فنقتل زكريا . قال : فخرجوا في طلبي ليقتلوني ، وجاءني النذير فهربت منهم ، وإبليس أمامهم يدلهم علي ، فلما تخوفت أن لا أعجزهم ، عرضت لي شجرة فنادتني وقالت : إلي إلي . وانصدعت لي فدخلت فيها . قال : وجاء إبليس حتى أخذ بطرف ردائي ، والتأمت الشجرة ، وبقي طرف ردائي  خارجا من الشجرة ، وجاءت بنو إسرائيل فقال إبليس : أما رأيتموه دخل هذه الشجرة ؟ هذا طرف ردائه ، دخلها بسحره . فقالوا : نحرق هذه الشجرة . فقال إبليس : شقوه بالمنشار شقا . قال : فشققت مع الشجرة بالمنشار . قال له النبي صلى الله عليه وسلم : هل وجدت له مسا أو وجعا ؟
 قال : لا ، إنما وجدت ذلك الشجرة جعل الله روحي فيها
 هذا سياق غريب ، وحديث عجيب

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மிஃராஜ் சென்றிருந்த போது ஜகரிய்யா (அலை) அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

உரையாடலின் இடையே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நீங்கள் எவ்வாறு எதற்காக கொலை செய்யப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள்எனது மகன் யஹ்யா (அலை) அவர்கள் ஸாலிஹான, அழகுமிக்க, நல்லொழுக்கமுள்ள, தெளிவான சிந்தனையும், பெண்களின் மீதான மோகமும் இல்லாத சிறந்த இளைஞராக இருந்தார்.

இஸ்ரவேலர்களைச் சார்ந்த ஓர் அரசனின் மனைவி ஒருத்தி என் மகன் யஹ்யாவின் மீது மோகம் கொண்டு, அவருடன் தவறான உறவு கொள்ள விரும்பி, தன்னுடைய பணிப்பெண் ஒருவரை தூதனுப்பினாள். பல முறை அவள் தூதனுப்பினாள்.

ஆனால், என் மகன் யஹ்யா மறுத்து விட்டார். அல்லாஹ் என் மகனை அத்தீய செயலிலிருந்து காப்பாற்றினான்.

இதனால் என் மகன் மீது சினங்கொண்ட அவள் என் மகன் யஹ்யாவை கொலை செய்ய திட்டமிட்டாள்.

இவ்வாறிருக்க ஆண்டு தோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் அவர்களின் பண்டிகை நாளும் வந்தது. ஒவ்வொரு ஆண்டும் அரசன் தன் மனைவிக்கு அவள் விரும்புகிற பரிசில்களை வழங்குவான்.

இந்நிலையில், எல்லா நாட்களையும் விட அன்று மிகவும் அழகாக தன் மனைவி இருப்பதைக் கண்டு இவ்வாண்டு உனக்கு மிக உயர்ந்த ஓர் பரிசை, அதுவும் நீ எதை விரும்பினாலும் உனக்கு தர வேண்டுமென விரும்புகின்றேன்என்றான் அரசன்.

அதற்கவள், ”யஹ்யா (அலை) அவர்களின் தலை தான் வேண்டும்என்று கூறினாள். இது அல்லாத வேறெதைக் கேட்டாளும் தருகின்றேன்என்றான் அரசன். ஆனால், அவளோ எனக்கு யஹ்யாவின் தலை தான் வேண்டும்என்றாள்.

மனைவியின் அழகில் அடிமைப் பட்டுக்கிடந்த அரசன் யஹ்யா (அலை) அவர்களின் தலையைக் கொய்து வருமாறு தன் சேவகர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.

அரசனின் சேவகர்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கி வந்தார்கள். நானும், யஹ்யாவும் மிஹ்ராபின் அருகே சற்று இடைவெளி விட்டு நின்று தொழுது கொண்டிருந்தோம்.

அரசனின் சேவகர்கள் யஹ்யாவின் தலையை வெட்டி அவரது தலையையும், இரத்தத்தையும் ஒரு தட்டில் ஏந்தியவர்களாக அரசனின் மனைவியிடம் கொண்டு சென்றார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள் நான் என் ரப்போடு உரையாடிக் கொண்டிருந்தேன். தொழுது கொண்டிருந்தேன். நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. தொழுது முடித்த பின்னர் தான் இந்த விவரமெல்லாம் எனக்குத் தெரிந்தது என்று பதில் கூறிவிட்டு

யஹ்யா (அலை) அவர்கள் கொலை செய்யப்பட்ட அன்று மாலை நேரத்தில் அரசனும், அவன் மனைவியும், குடும்பத்தார்களும், அவனின் சேவகர்களும் அரண்மனையோடு அல்லாஹ்வின் கோபத்தால் இருந்த இடத்திலேயே பூமிக்குள் இழுக்கப்பட்டார்கள்.

இதை அறிந்து கொண்ட இஸ்ரவேலர்கள்ஜகரிய்யாவின் இறைவன் ஜகரிய்யாவிற்காக கோபப்பட்டான். இஸ்ரவேலர்களே! ஒன்று படுங்கள்! நாம் நம் அரசருக்காக கோபப்படுவோம். நாமும் ஜகரிய்யாவை ஒன்று திரண்டு கொல்வோம்என சபதமிட்டுப் பழிவாங்க திட்டமிட்டார்கள்.

இச்செய்தி எனக்கு எட்டியதும் நான் அவர்கள் கண்ணில் படாதிருக்க காட்டு வழியே ஓடினேன். ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். அப்போது, எனக்கு முன்பாக இருந்த ஓர் மரம் அல்லாஹ்வின் நபியே! என்னுள் ஒளிந்து கொள்ளுங்கள்! உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்என்றது.

நான் அதனுள் சென்று ஒளிந்து கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு இப்லீஸ் வழிகாட்டிக் கொண்டு வந்தான். ஆனால், மிக விரைவாக என்னைப் பின் தொடர்ந்த அவன் மரத்தின் உள்ளே நான் ஒளியும் போது எனது ஆடையின் சிறிய ஒரு பகுதியைப் பிடித்து இழுத்துக் கொண்டான். பிளந்த மரம் மூடிய போது என் ஆடையின் சிறிய பகுதி வெளியே தெரிந்தது.

இஸ்ரவேலர்கள் மரத்தை நெருங்கியதும் இப்லீஸ் அடையாளம் காட்டிக் கொடுத்தான். கடும் கோபத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் என்னை மரத்தோடு வைத்து தீயிட்டுக் கொளுத்திட முனைந்தார்கள்.

ஆனால், இப்லீஸோ ரம்பத்தால் இரு கூறாக என் உடல் பிளக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினான். அதன் பின்னர் ரம்பத்தால் மரத்தையும், என்னையும் இரண்டாகப் பிளந்தார்கள்என்று கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்அறுக்கப்பட்ட போது உங்களுக்கு அதன் வேதனை தெரியவில்லையா?” என்று வினவியதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ் தான் எனது உயிர் இவ்வாறு பிரிய வேண்டும் என நாடியுள்ளான்; அவ்வாறிருக்கையில், எனக்கு எப்படி அது வேதனையாக தெரியும். இல்லை, எனக்கு அப்படியொரு உணர்வு அப்போது ஏற்படவில்லைஎன்று பதில் கூறினார்கள்.

        ( நூல்: அல்பிதாயா வன் நிஹாயா லி இமாமி இப்னு கஸீர் (ரஹ்)….. )

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு நடை பெற்ற படையெடுப்புக்கு தாதுர் ரிகாவுஎனும் பெயர். இந்த யுத்தத்தில் தான் யுத்த கால தொழுகை முறை அறிமுகம் ஆனது.

நபித்தோழர்களின் ஈமானை பரிசோதிக்கும் முகமாக அமைந்து விட்டதோ எனும் எண்ணுமளவிற்கு பல்வேறு சோதனைகள் அங்கே நடைபெற்றன.

முறைவைத்து தான் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மொத்த படை வீரர்கள் 700 நபர்கள். ஆறு நபருக்கு ஒரு ஒட்டகம் வீதம் பயணத்திற்கு பயன் படுத்தப் பட்டது.

எந்த அளவுக்கெனில், நபித்தோழர்களின் பலருடைய நகங்களெல்லாம் கிழிந்து விழுந்து விட்டன.

பாறைகளையும், பாலைகளையும் கடந்து சென்றதால் பலருக்கு காயம் ஏற்பட்டு தங்களது துணிகளை கிழித்து காயத்திற்கு ஒட்டுப்போட்டுக்கொண்டனர்.

ஆதலால், அந்தப் போருக்கே தாதுர் ரிகாவு ஒட்டுத்துணிப்போர் என பெயர் வழங்கப்பட்டது.

பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே அந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முஸ்லிம்கள் திரும்பி விட்டனர்.

بعد أن فرغ رسول الله والمسلمين من غزوة ذات الرقاع نزلوا مكانا يبيتون فيه، واختار الرسول للحراسة نفرا من الصحابة يتناوبونها وكان منهم عمار بن ياسر وعباد بن بشر في نوبة واحدة.
ورأى عباد صاحبه عمار مجهدا، فطلب منه أن ينام أول الليل على أن يقوم هو بالحراسة حتى يأخذ صاحبه من الراحة حظا يمكنه من استئناف الحراسة بعد أن يصحو.
ورأى عباد أن المكان من حوله آمن، فلم لا يملأ وقته اذن بالصلاة، فيذهب بمثوبتها مع مثوبة الحراسة..؟!
وقام يصلي..
واذ هو قائم يقرأ بعد فاتحة الكتاب سور من القرآن، احترم عضده سهم فنزعه واستمر في صلاته..!
ثم رماه المهاجم في ظلام الليل بسهم ثان نزعه وأنهى تلاوته..
ثم ركع، وسجد.. وكانت قواه قد بددها الاعياء والألم، فمدّ يمينه وهو ساجد الى صاحبه النائم جواره، وظل يهزه حتى استيقظ..
ثم قام من سجوده وتلا التشهد.. وأتم صلاته.
وصحا عمار على كلماته المتهدجة المتعبة تقول له:
" قم للحراسة مكاني فقد أصبت".
ووثب عمار محدثا ضجة وهرولة أخافت المتسللين، ففرّوا ثم التفت الى عباد وقال له:
" سبحان الله..
هلا أيقظتني أوّل ما رميت"؟؟
فأجابه عباد:
" كنت أتلو في صلاتي آيات من القرآن ملأت نفسي روعة فلم أحب أن أقطعها.
ووالله، لولا أن أضيع ثغرا أمرني الرسول بحفظه، لآثرت الموت على أن أقطع تلك الآيات التي كنت أتلوها"..!!

வழியில் ஓரிடத்தில் இளைப்பாருவதற்காக நபிகளார் படையினரை அனுமதித்தார்கள். இந்த இரவில் நமக்காக காவல் காற்பது யார்? என்று நபி {ஸல்} அவர்கள் வினவிய போது, முஹாஜிர்களில் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் முன் வந்தனர்.

நபிகளாரும், நபித்தோழர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவின் ஒரு பகுதி கழிந்ததும் அப்பாத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் நீங்கள் தூங்கிக் கொள்ளுங்கள். நான் காவல் காக்கின்றேன். பின்னர் நான் உறங்குகின்றேன் நீங்கள் காவல் காத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்ச நேரம் போனது அவர்களின் மனம் முழுவதும் இந்த ரம்மியமான இரவு வீணாகி விடக்கூடாது. பேசாமல் சிறிது நேரம் தொழுது விடுவோம் என ஆசை கொண்டிருந்தது.

தொழுகைக்கு தக்பீர் கட்டி நின்றார்கள். ஃபாத்திஹா வுக்குப் பின்னர் சூரா கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார்கள்.

பின்னால், வேவு பார்த்து வந்த எதிரி ஒருவன் அப்பாத் அவர்களின் மீது அம்பொன்றை எய்தான். பிடுங்கி தூர எறிந்து விட்டு தொழுகையை தொடர்ந்தார்கள்.

மீண்டும் ஒரு அம்பு, மீண்டும் ஒரு அம்பு என மூன்று அம்புகள் எய்யப்பட்டது. ஆனாலும் அசராமல் பிடுங்கி எறிந்து விட்டு தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு அம்மார் (ரலி) அவர்களை எழுப்பினார்கள்.

எழுந்து பார்த்த அம்மார், அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.

ஏன் முதல் முறை நீங்கள் தாக்கப்படும் போதே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? எனக் கேட்டார்கள்.

தொழுகையில், குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். இடையில் நிறுத்த என் மனம் விரும்ப வில்லை.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன் அம்மாரே! நான் குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதை விட மரணித்து போவதையே விரும்புனேன். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் படைக்கு காவலாக இருக்கும் படி கட்டளை இட்டிருந்ததால், என் மரணம் படைக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என அஞ்சினேன்என்றார்கள்.

       ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல்மஃகாஸீ லில் வாகிதீ )

فلما خرجوا به ليقتلوه وقد نصبوا خشبة ليصلبوه فانتهى إلى التنعيم, فقال: إن رأيتم أن تدعوني أركع ركعتين: فقالوا: دونك, فصلى ثم قال: والله لولا أن تظنوا إنما طولت جزعًا من القتل لاستكثرت من الصلاة فكان أول من سن الصلاة عند القتل.

குபைப் (ரலி) அவர்களைக் கொல்வதற்காக - மக்காவின் புனித எல்லைக்கு வெளியே எதிரிகள் கொண்டு வந்தபோது, 'இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்" என்று குபைப் (ரலி) கேட்டார்கள். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள்.

பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, ”நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்" என்று கூறினார்கள்.

ولست أبالي حين أقتل مسلمًا *** على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشأ *** يبارك على أوصال شلو ممــزع

அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவராவார். பிறகு 'இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வயாக!" என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு, 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே).

நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்" என்று (கவிபாடிக்) கூறினார்கள். பிறகு, உக்பா இப்னு ஹாரிஸ் என்பவன் குபைப்(ரலி) அவர்களின் அருகில் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான்.            ( நூல்: உஸ்துல் ஃகாபா )

ஆக, தொழுகை என்கிற நிகரில்லா அருட்கொடையை வழங்கி அல்லாஹ் இந்த உம்மத்தை மேன்மை படுத்தி இருக்கின்றான்.

தொழுகையோடு நாம் எப்படி இருக்கின்றோம் என்பதை நன்கு சீர்தூக்கி சிந்தித்துப் பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்!

அல்லாஹ் நம் அனைவரையும் மவ்த் வரையிலும் பேணுதலோடு தொழுகிற தொழுகையாளிகளாக ஆக்குவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


ஆறாம் நாள் தராவீஹ் பயான் தலைப்பு: மஃக்ஃபிரத் (மன்னிப்பு) எனும் அளவிலா அருட்கொடை!!!

Monday 29 May 2017

முஹம்மத் {ஸல்} அவர்கள் எனும் அகிலத்தின் அருட்கொடை!!!



நான்காம் நாள் தராவீஹ் பயான்

முஹம்மத் {ஸல்} அவர்கள் எனும் அகிலத்தின் அருட்கொடை!!!



நான்காம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், மூன்றாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!


இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்று மா நபி {ஸல்} அவர்களின் மகத்துவம் குறித்து பேசுகின்றது...

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا (64)

ஆகவே, இன்றைய தினம் மா நபி {ஸல்} அவர்கள் குறித்த சில தகவல்களை நாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ ()

திண்ணமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருபகாரம் புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைபடுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில் தான் இருந்தார்கள்.  ( அல்குர்ஆன்: 3: 164 )

அல்லாஹ் கூறுகின்றான்:

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا (6)
நபியே! இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை யானால், இவர்களின் பின்னே சென்று, கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக் கொள்வீர் போல் இருக்கிறதே! ( அல்குர்ஆன்: 18: 6 )


மாற்றுக்கருத்து கொண்டவர்களோடு மாநபியின் அருட்கொடை!!!

سفانة بنت حاتم الطائي
الكريمة بنت الكريم
كان أبوها مضرب الأمثال في الكرم في الجاهلية، فلما ظهر الإسلام وانتشرت الفتوح، غزت خيلُ رسول اللَّه صلى الله عليه وسلم قبيلتها “طَـيِّئ”، وأخذوها بين مَنْ أخذوا من السبايا. وكانت امرأة بليغة عاقلة، مرّ عليها النبي صلى الله عليه وسلم فقالت له: يا رسول اللَّه! امْـنُنْ عَلَي، مَنَّ اللَّه عليك، فقد هلك الوالد، وغاب الوافد (تَنَصَّرَ أخوها وفرّ حتى كان قريبًا من أرض الروم، وكان ذلك قبل أن يُسلم ويَحْسُنَ إسلامه) ولاتُشَمِّتْ بى أحياء العرب، فإنى بنتُ سيد قومي، كان أبى يفك الأسير ويحمى الضعيف، ويَقْرِى (يكرم) الضيف، ويشبع الجائع، ويفرّج عن المكروب، ويطعم الطعام، ويفشى السلام، ولم يرد طالب حاجة قط، أنا بنت حاتم الطائي.
فقال لها رسول اللَّه صلى الله عليه وسلم: “يا جارية، هذه صفة المؤمن، لو كان أبوك مسلمًا لترحمنا عليه”. ثم قال لأصحابه: “خلوا عنها، فإن أباها كان يحب مكارم الأخلاق”. ثم قال لها: “فلا تعجلي حتى تجدي ثقة يبلغك بلادك، ثم آذنيني” [ابن هشام].
فلما قدم ركب من أهلها، أرادت الخروج معهم، وذهبت إلى رسول اللَّه صلى الله عليه وسلم تستأذنه، فأذن لها وكساها من أحسن ما عنده من الثياب، وجعل لها ما تركبه، وأعطاها نفقة تكفيها مؤنة السفر وزيادة.

ஸஃபானா நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஸஃபானாவோடு, அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின் சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை அறிந்ததும், ஸஃபானா வையும், தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அண்ணலார், மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதரே! எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள் அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்தார் ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டுவான்! என்று கூறி முடித்தார்.

நபிகளார் மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும் ஸஃபானா அழைக்க, அருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.

ஸஃபானா, அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும், கஷ்டத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும், பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும், குடும்ப உறவுகளை பலப்படுத்தியும், பிரயாணிகளுக்கு உணவளித்தும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்என்று வேண்டி நின்றார்கள்.

ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் உண்மையில் நீ உம் தந்தை செய்ததாகச் சொன்ன அனைத்து நற்காரியங்களும், இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! அவை அனைத்தும் ஒரு முஃமின் செய்ய வேண்டிய காரியங்களே! உம் தந்தை மாத்திரம் முஸ்லிமாக இருந்திருப்பாரேயானால் இன்னும் பேருபகாரம் வழங்கப்பட்டிருப்பார்! உனக்கு எம் கருணையுண்டு! என்று கூறி விட்டு, தோழர்களை நோக்கி தோழர்களே! இவரின் தந்தை நற்குணங்களின் பிறப்பிடமாக இருந்து, நற்குணங்களை அதிகம் நேசித்து வாழ்ந்திருக்கின்றார்! ஆகவே, இவரை விடுதலை செய்து விடுங்கள்என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில், ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.

வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் குடிமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர் ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும்? என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும்என்று ஸஃபானா கூறினார்.

இது கேட்ட அண்ணலார், சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

மேலும், ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும், பயணிக்க வாகனமும், வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள்.

                          ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:272 )

இறைநம்பிக்கையாளர்களோடு மாநபியின் அருட்கொடை!!


حَدَّثَنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، وأَبُو كُرَيْبٍ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ ، قَالَا : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ ، فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ ، وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ، فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ ، مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا " .

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் உடனே பதிலளிக்கும் ஒரு துஆவை நல்கியிருக்கின்றான். அனைத்து நபிமார்களும் அதை பயன் படுத்திவிட்டனர். ஆனால், நான் நாளை மறுமை நாளில் என் உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டவர்களுக்கு பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தி வைத்திருக்கின்றேன்என்றார்கள்.   ( நூல்: மிர்காதுல் மஃபாதீஹ், 9/1523 )

قال الله تعالى :( يا جبريل ما فعل العاصون من امة محمد صلي الله عليه وسلم )
فيقول جبريل:' اللهم انت اعلم بهم فيقول انطلق فانظر ما حالهم '...
·- فينطلق جبريل عليه السلام الي مالك وهو علي منبر من نار في وسط جهنم .... فاذا نظر مالك علي جبريل عليه السلام قام تعظيما له.
فيقول له جبريل:' ما ادخلك هذا الموضع ؟'
فيقول:' ما فعلت بالعصابه العاصيه من أمة محمد (صلى الله عليه وسلم))؟'
فيقول مالك:' ما اسوء حالهم ... واضيق مكانهم ... قد احرقت اجسامهم ... واكلت لحومهم ... وبقيت وجوههم وقلوبهم يتلالاء فيها الايمان '
فيقول جبريل:' ارفع الطبق عنهم حتي انظر اليهم ' ...
·- قال فيأمر مالك الخزانه فيرفعون الطبق عنهم ... فاذا نظروا الي جبريل والي حسن خلقه .. علموا انه ليس من ملائكه العذاب .
فيقولون: ' من هذا العبد الذي لم نرا احدا قط احسن منه ؟'
فيقول مالك: ' هذا جبريل الكريم الذي كان ياتي محمدا بالوحي'
- فاذا سمعوا ذكر محمد صاحوا بأجمعهم:'أقرئ محمدا منا السلام وأخبره ان معاصينا فرقت بيننا وبينك .. وأخبره بسوء حالنا '..
فينطلق جبريل حتي يقوم بين يدي الله تعالي ..
فيقول الله تعالى: (كيف رايت امة محمد ؟)
فيقول جبريل: ' يا رب ما اسوء حالهم وأضيق مكانهم ' ..
فيقول الله تعالى :(هل سألوك شيئا ؟ ) ...
فيقول جبريل:' يا رب نعم سألوني ان اقرئ نبيهم منهم السلام وأخبره بسوء حالهم ..'
فيقول الله تعالى :( أنطلق فاخبره ) ..
·فينطلق جبريل الي النبي وهو في خيمه من درة بيضاء لها اربعه الاف باب لكل باب مصراعان من ذهب ..
فيقول جبريل: 'يا محمد قد جئتك من عند العصابه العصاه الذين يعذبون من أمتك في النار .. وهم يقرئونك السلام .. ويقولون ما اسوء حالنا واضيق مكاننا ..'
·فيأتي النبي الي تحت العرش فيخر ساجدا ويثني علي الله تعالي ثناء لم يثن عليه احد مثله ..
فيقول الله تعالي : (ارفع راسك .. وسل تعط .. واشفع تشفع )
فيقول صلى الله عليه وسلم)' الاشقياء من امتي قد انفذت فيهم حكمك وانتقمت منهم فشفعني فيهم '
فيقول الله تعالى : (قد شفعتك فيهم .. فأت النار فأخرج منها من قال لا الله الا الله)
·فينطلق النبي فاذا نظر مالك النبي صلي الله عليه وسلم قام تعظيما له
فيقول صلى الله عليه وسلم): ' يا مالك ما حال امتي الاشقياء ؟ '
فيقول مالك: ' ما اسوء حالهم .. واضيق مكانهم ..'
فيقول محمد :' افتح الباب وارفع الطبق '
·فاذا نظر اصحاب النار الي محمد صلي الله عليه وسلم .. صاحوا بأجمعهم فيقولون ... يا محمد احرقت النار جلودنا واحرقت اكبادنا ..
* فيخرجهم جميعا وقد صاروا فحما قد اكلتهم النار فينطلق بهم الي نهر بباب الجنه يسمي نهر الحيوان فيغتسلون منه فيخرجون منه شبابا جردا مردا مكحلين وكأن وجوههم مثل القمر مكتوب علي جباههم
(الجهنميون عتقاء الرحمن من النار) ...
فيدخلون الجنه فاذا رأي اهل النار قد اخرجوا منها قالو :يا ليتنا كنا مسلمين وكنا نخرج من النار ..
وهو قوله تعالي ((ربما يود الذين كفروا لو كانو مسلمين)) (صوره الحجر 2)

முஹம்மது {ஸல்} அவர்களின் உம்மத்தில் பெரும்பாவம் செய்து தவ்பாச் செய்யாமல் இருந்தவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படுவர். அவர்கள் வேதனை தாங்கமுடியாமல் நரகத்தின் காப்பாளர் மாலிக் (அலை) அவர்களிடம் தாங்கள் இன்னுமா எங்களை வேதனைச் செய்ய நாடுகின்றீர்களா?” எங்கள் மீது இரக்கம் கொள்ளக்கூடாதா? என்று ஓலமிட்டுக் கதறுவார்கள்.

அப்போது, மாலிக் (அலை) அவர்கள் உங்கள் இறைவன் உங்கள் மீது இரக்கமாக இல்லையே!?” கோபமாக அல்லவா இருக்கின்றான். நான் எப்படி உங்கள் மீது கருணை காட்ட முடியும்என்பார்கள்.

அப்போது, அவர்கள் யாஅர்ஹமர் ராஹீமீன்! என்று அழைப்பாளர்கள். அது கேட்ட மாலிக் (அலை) அவர்கள் நீங்கள் ஷஹாதாவைக் கூறுங்கள்!என்பார். உடனே எல்லோரும் பெரும் சப்தமாக ஷஹாதாவைக் கூறுவார்கள்.

இந்தச் சப்தம் அதிகமாகவே, அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து முஹம்மத் {ஸல்} அவர்களின் சமுதாயம் நரகிலிருந்து தவ்ஹீத் கலிமாவை மொழிந்து கொண்டிருக்கின்றார்கள். நீர் சென்று மாலிக் (அலை) அவர்களிடம் வேதனையை இலகுவாக்கச் சொல்லுங்கள்என்பான்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், மாலிக் (அலை) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் கட்டளையை தெரியப்படுத்துவார்கள். உடனே, அவர்களுக்கு வேதனை இலகுவாக்கப்படும்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நரகின் வாசலில் வந்து நிற்கும் போது முஃமினான பாவிகள் அவர்களைப் பார்ப்பார்கள். முஃமினான பாவிகளைப் பார்த்ததும், நரகின் வேதனையால் கருகிய கொள்ளிக் கட்டைகளைப் போல் இருக்கிற நிலையைப் பார்த்ததும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அழுவார்கள்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தான் தங்களுடைய வேதனையை குறைத்ததாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வர், பின்னர், ஜிப்ரயீல் அவர்களிடம் தெரிவித்து விட்டு, “உங்கள் வருகைக்குப்பின்னரே எங்களின் வேதனை இலகுவாக்கப்பட்டுள்ளதுநீங்கள் யார்?” என்று கேட்பார்கள் முஃமினான பாவிகள்.

அப்போது தான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தாம் யார் என்பதைத் தெரிவிப்பார்கள்.  உடனே, அந்தப் பாவிகள் எங்களின் வேதனையைப் பார்த்தீர்களா?” நீங்கள் பெருமானார் {ஸல்} அவர்களிடம் சென்றால் எங்களின் ஸலாத்தை எத்தி வையுங்கள்! எங்களை நரகில் இருக்கிற காஃபிர்கள் ஏளனம் செய்கிறார்கள், எங்களின் வேதனையையும், நாங்கள் படும் பாட்டையும் தெரிவித்து விடுங்கள்! என்பார்கள்.

நீங்கள் இங்கு படுகிற அவஸ்தைகள் உங்களுடைய நபிக்கு தெரியாது; தெரிந்தால் அவர்கள் சுவனத்தில் தரித்திருக்க மாட்டார்கள். எனவே, நான் சென்று இதை எத்திவைக்கிறேன் என்று சொல்லி ஜிப்ரயீல் (அலை) அங்கிருந்து விடை பெற்றார்கள்.

அல்லாஹ்வின் அனுமதியோடு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அண்ணலாரைத் தேடி சுவர்க்கத்திற்கு வருவார்கள். அங்கே அண்ணலார் {ஸல்} அவர்கள் தூபா எனும் மரத்தடியில் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் வீற்றிருப்பார்கள்.

அங்கே, நின்று கொண்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அழுது கொண்டு நிற்பார்கள். பெருமானார் {ஸல்} அவர்கள் ஜீப்ரயீல் (அலை) அவர்களைப் பார்த்து ஜிப்ரயீலே! ஏன் அழுகின்றீர்?” என்று கேட்பார்கள்.

அப்போது, நடந்தவற்றை நபிகளாரிடத்திலே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறுவார்கள். நரகிலிருந்து எழும் ஷஹாதா சப்தத்தை நபி {ஸல்} காது தாழ்த்தி கேட்டு விட்டு யாஉம்மத்தீ, யாஉம்மத்திஎன்று கண்ணீர் தாரை, தாரையாய் வடித்தவர்களாக அர்ஷை நோக்கி ஓடிவருவார்கள்.

அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள். அல்லாஹ் நபிகாளாரின் துஆவைக் கபூல் செய்து அந்தப் பாவிகளை விடுதலை செய்வான்.                ( நூல்: தபரானீ )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஷஃபாஅத்துக்கு உரியவர்களாக ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!