Thursday 8 November 2018

தாஹா நபி {ஸல்} அவர்களின் தனித்தன்மைகள்!!!


தாஹா நபி {ஸல்} அவர்களின் தனித்தன்மைகள்!!!




போற்றும் வகையில் வாழ்ந்த பல மனிதர்கள், அறிவு ஞானத்தில் சிறந்து விளங்கிய ஆய்வாளர்கள், வியத்தகு கண்டுபிடிப்புகளைத் தந்த விஞ்ஞானிகள், மாற்றத்தை விதைத்த தத்துவவாதிகள், நீண்ட எல்லைகளை ஆண்ட ஆட்சியாளர்கள், உளம் சார்ந்த முன்னேற்றம் தந்த ஆன்மீகவாதிகள், உயிர் காக்கும் மருத்துவத்துறையில் அரியபல சாதனைகளை நிகழ்த்திய மருத்துவவியலாளர்கள் என நீண்ட பட்டியலையும், பாரம்பர்யத்தையும் கொண்டது தான் வரலாறு.

அவ்வாறான போற்றுதலுக்குரிய வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களை வாசித்துப் பார்த்தால் சில உண்மைகள் நமக்கு புலப்படும்.

ஆன்மீகத்தில் உச்சத்தில் இருந்தவர் ஒழுக்க வாழ்வில் அதல பாதாளத்தில் வீழ்ந்திருப்பார்.

அரசியல் வாழ்வில் ஆளுமை செலுத்தியவர் ஆன்மீக வாழ்வில் ஆரம்ப நிலையைக் கூட கடந்திருக்க மாட்டார்.

கல்வியறிவின் முகட்டில் இருந்தவர் தனிப்பட்ட வாழ்வில் கடைக்கோடியில் இருப்பார்.

இப்படியாக, சிலஇல்லைகளும், சிலஆமாம்களும் அவர்களின் வாழ்க்கையில் அங்கொன்றும், இங்கொன்றும் என்றில்லாமல் எங்கும் நிறைந்திருப்பதைக் காணமுடியும்.

ஆனால், மனித வாழ்க்கையின் ஒட்டு மொத்த துறைகளிலும் நின்று, பயணித்து, வாழ்ந்து, தடமும் பதித்துமனித வாழ்வியலின் முன்மாதிரியாக மகத்தான சாதனையை இப்பூவுலகில் பதிவு செய்தவர்கள் தாஹா நபி {ஸல்} அவர்கள்.

இப்படியெல்லாம் வாழ முடியுமா? என்ற வியப்போடு பெருமானார் {ஸல்} அவர்களின் வாழ்க்கைத் தரவுகளை வாசிக்கத் தொடங்கும் பலரும்வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும்என்ற முடிவுக்கு வந்து விடுகின்றார்கள் புரிதலோடும், புத்துணர்ச்சியோடும்.

அப்படித்தான் முடிவுக்கு வந்தார் பொருளாதார மேதை, பொதுவுடமைவாதி, மெய்யியலாளர் என்று போற்றப்பட்ட, 19 –ஆம் நூற்றாண்டு கொண்டாடிய காரல் மார்க்ஸ்.

அப்படியான முடிவுக்கு வந்ததோடு மட்டுமின்றி MUHAMMED IS THE MOST SUCCESSFUL LEADER IN THE WORLD “முஹம்மத் இஸ் மோஸ்ட் சக்ஸஸ்ஃபுல் லீடர் இன் வேர்ல்ட்என்று மாநபி {ஸல்} அவர்களுக்கு புகழார மகுடத்தையும் சூட்டினார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைத்தூதர்களின் மேன்மையை குறித்து ஒரு வசனத்தில் இப்படிக் குறிப்பிடுவான்.

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ

“மனித குலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக நாம் அனுப்பிய அந்தத் தூதர்களில் சிலரை, சிலரை விடச் சிறப்புடையோராக ஆக்கினோம். அல்லாஹ் நேரடியாகப் பேசிய சிலரும் இவர்களில் உண்டு. மேலும், சிலருக்கு வேறு பல உயர்ந்த அந்தஸ்துகளை வழங்கினோம்”.                              ( அல்குர்ஆன்: 2: 253 )

இன்னும் சில இடங்களில் சில நபிமார்களிடம் இடம் பெற்றிருந்த சில நற்பண்புகளைக் குறிப்பிட்டு அல்லாஹ் புகழ்ந்து கூறுகின்றான்.

குறிப்பாக, யூஸுஃப் {அலை} அய்யூப் {அலை}, யஅகூப் {அலை} ஆகியோரிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருந்ததாக அடையாளப்படுத்துவான்.

நூஹ் {அலை}, தாவூத் {அலை}, ஸுலைமான் {அலை} ஆகியோரிடம் ரப்பின் அருட்கொடைகளுக்கு உடனடியாக நன்றி செலுத்தும் பண்பு இருந்ததாக புகழ்ந்து பேசுவான்.

இஸ்மாயீல் {அலை} அவர்களிடம் நேர்மையும், இத்ரீஸ் {அலை}, இப்ராஹீம் {அலை} ஆகியோரிடம் வாய்மையும், மூஸா {அலை} அவர்களிடம் உளத்தூய்மையும் இடம் பெற்றிருந்ததாக சிலாகித்துக் கூறுவான்.

இறைத்தூதர்களில் இறுதித்தூதரான தாஹா நபி {ஸல்} அவர்கள் குறித்து கூறும் போது எல்லா விதமான நற்பண்புகளிலும் முழுமை பெற்று தனித்தன்மையோடு விளங்கினார்கள் என்பதை இப்படிச் சுட்டிக் காட்டுவான்.

وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ (4)

“மேலும், திண்ணமாக! நபியே! நீர் நற்பண்வுகளில் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்!”.                                  ( அல்குர்ஆன்: 68: 4 )

பெருமானார் {ஸல்} அவர்களிடம் காணப்பட்ட உயர் பண்புகளில் ஒன்று “உண்மையை உடைத்துப் பேச வேண்டிய இடத்தில் உடைத்துப் பேசுவது. உண்மையை உரக்கப்பேச வேண்டிய நேரத்தில் பேசுவது.

மனைவியிடமா? மாநபி உரைத்திடத் தயங்கியதில்லை. தோழர்களிடமா? தாஹா நபி யோசித்ததில்லை. பொறுப்பாளர்களிடமா? பூமான் நபி ஒதுங்கியதில்லை.

நேர் எதிரான சிந்தனை கொண்டவர்களிடமா? பெருமானார் {ஸல்} ஓடி ஒளிந்ததில்லை.

சொல்ல வேண்டிய விஷயத்தை, சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில் முகத்திற்கு நேராக போட்டு உடைத்து விடுவார்கள்.

எந்தத் தயக்கமும், எந்தப் பயமும் மாநபி {ஸல்} அடைந்ததில்லை.

இன்று நம் நட்பு வட்டத்தில், குடும்பத்தில், மஹல்லாவில், சமூகத்தில், சர்வதேச அளவில் நிகழ்கிற எல்லா வகையான தீமைகளுக்கும், தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணம் உண்மையை உரத்துப் பேச வேண்டிய நேரத்தில், உடைத்துக் கூற வேண்டிய இடத்தில் நமக்கேன் வம்பு? என்று மௌனிகளாக இருப்பது தான்.

ஆகவே, தாஹா நபி {ஸல்} அவர்களின் தனித்தன்மைகளில் ஒன்றான இந்தப் பண்பியலை நம் வாழ்வில் கொண்டு வருவோம்.

தீமைகளைத் தடுத்து, தவறுகளைத் திருத்தி, குற்றங்களை இல்லாமல் ஆக்கி ஒப்பற்ற ஓர் சமூகத்தை நாம் உருவாக்குவோம்.

தாஹா நபி {ஸல்} அவர்களின் வாழ்க்கைத் தரவுகளில் இருந்து சில எடுத்துக் காட்டுகள் உங்கள் கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.

உயிர் பயம் காட்டிய எதிரிகள் முன்பாக….

قال ابن إسحاق-رحمه الله-: "وحدثنى يعقوب بن عتبة بن المغيرة بن الأخنس أنه حُدِّث: أن قريشًا حين قالوا لأبي طالب هذه المقالة (1)، بعث إلى رسول الله -صلى الله عليه وسلم- فقال له: يا ابن أخي، إن قومك قد جاؤوني فقالوا لي: كذا وكذا، للذي كانوا قالوا له، فأبق عليّ وعلى نفسك، ولا تحملنى من الأمر مالا أطيق. فظن رسول الله -صلى الله عليه وسلم- أنه قد بدا لعمه فيه أنه خاذله ومسلمه، وأ. قال رسول الله -صلى الله عليه وسلم-: يا عمّ، والله لو وضعوا الشمس في يمينى والقمر في يساري على أن أترك هذا الأمر حتى يظهره الله، أو أهلك فيه ما تركته نه قد ضعف عن نصرته والقيام معه.
قال: ثم استعبر رسول الله -صلى الله عليه وسلم- فبكى ثم قام، فلما ولى ناداه أبو طالب، فقال: أقبل يابن أخي، قال: فأقبل عليه رسول الله -صلى الله عليه وسلم-، فقال: اذهب يا بن أخي، فقل ما أحببت، فوالله لا أسلمك لشيء أبدًا (2)".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ அழைப்பை எத்திவைத்த ஆரம்ப காலம் விரல் விட்டு எண்ணிடும் அளவிற்கே முஸ்லிம்கள் இருந்தனர்.
மெல்ல, மெல்ல பிரச்சாரம் விரிவடைந்தது பெரிய குடும்பத்து மனிதர்களும் இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.

பெரிய மனிதர்களிடத்தில் அடிமை பட்டுக்கிடந்த பிலால், கப்பாப், ஸுஹைப் போன்ற ஏழை அடிமைகளும் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இன்னும் சற்று விரிவடைந்து வெளியூர்களிலிருந்து வியாபார விஷயமாக வரும் வியாபார பெருமக்களும்,

மக்காவை ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களும், இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.

இந்த ஏகத்துவக் கொள்கை” யை இத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனும் முனைப்பில் 25 பேர் கொண்ட மக்கத்து பெரும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில், இப்படியே முஹம்மதை விட்டுவிட்டால் நம் மக்களையும், குடும்பத்தாரையும் நம்மை விட்டு பிரித்துவிடுவார்.

நம்மிடமிருந்து அதிகாரத்தையும், அந்தஸ்தையும் பறித்துவிடுவார். எனவே, அவரது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். அவரைப்பற்றி மக்களிடையே அவதூறான செய்திகளை பரப்ப வேண்டும்.

அவர் ஓதிக் காட்டுகிற இறை வசனங்களை பொய் படுத்த வேண்டும்.
-எனும் தீர்மானத்தை முதன் முதலாக நிறைவேற்றினர். அதை மிகத் தீவிரமாக கடை பிடிக்கவும் ஆரம்பித்தனர்.

ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த அவர்கள் அனைவரும், அபூதாலிபிடம் சென்று உமது சகோதரன் மகன் முஹம்மத் எமது கடவுளர்களை ஏசுகிறார், எனது கொள்கைகளை விமர்சிக்கின்றார், எங்கள் மக்களை மடமைத்தனத்தின் பால் அழைத்துச் செல்கிறார், எமது மூதாதையர்களை வழிகேடர்கள் என்கிறார்.

இதை நீங்கள் தடுத்து நிறுத்துங்கள், அல்லது அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று முறையிட்டனர். அதற்கு அபூதாலிப் குறைஷித் தலைவர்களிடம் மென்மையான குறையிலும், அழகான முறையிலும் பதில் கூறி” அனுப்பி வைத்தார்கள்.

இரண்டாம் முறையாக சில மாதங்கள் கழித்து குறைஷித் தலைவர்கள் அபூதாலிபைச் சந்தித்து அபூதாலிபே! உங்களை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். ஆதலால் தான் முன்பொருமுறை உம்மிடம் வந்து உமது சகோதரன் மகன் குறித்து எச்சரித்துச் சென்றோம்.

ஆனால், முஹம்மத் தன் போக்கை மாற்றிக் கொள்பவராய் இல்லை.
இனிமேலும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். அவர் தமது கொள்கையையும், பிரச்சாரத்தையும் விட்டுவிடவில்லையென்றால் உங்களையும் அவரையும் நாங்கள் சும்மா விட மாட்டோம், போர் செய்வோம்”

இது தான் எங்களது இறுதி எச்சரிக்கையாகும் என்று உரத்த குரலில் சொல்லி விட்டு வந்தனர். இதன் பின்னர், அபூ தாலிப், ”நபி (ஸல்) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை விளக்கி கூறி என்னால் இயன்றவரை உமக்கு உறுதுணையாய் இருப்பேன் அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்று கூறினார்கள்.

. قال رسول الله -صلى الله عليه وسلم-: يا عمّ، والله لو وضعوا الشمس في يمينى والقمر في يساري على أن أترك هذا الأمر حتى يظهره الله، أو أهلك فيه ما تركته

அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதாலிப் அவர்களிடம் இருந்து வந்த இந்த பதிலைக் கண்டு எதிரிகள் புதுயுக்தியை கையாள முயற்சிக்கின்றனர்” என்பதை விளங்கிக் கொண்டு ”பெரிய தந்தையே! என் வலக்கரத்தில் சூரியனையும், என் இடக் கரத்தில் சந்திரனையும் வைத்தாலும், என்னுடைய இந்த கொள்கையையும், பிரச்சாரத்தையும் ஒரு போதும் விடப்போவதில்லை!

அல்லாஹ் இந்த மார்க்கத்தை எழுச்சியடைச் செய்யும்வரை, அல்லது நான் உயிரை விடும்வரை இதை விடப் போவதில்லை! என்று கூறிவிட்டு, மாநபி (ஸல்) அவர்கள் அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள்.

திரும்பிச் சென்ற நபியவர்களை அபூதாலிப் அழைத்து என் சகோதர்ர் மகனே! நீ விரும்பிய படி வாழ்ந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணை!
எந்த நிலையிலும் யாரிடமும் உம்மை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.                          ( நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்: 54,55,56 )

பிரபல்யமாக இருந்த கோத்திரத்தார்களின் முன்பாக....


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பரீரா (ரலி) என்னிடம் வந்து, நான் என் உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு ஓர் "ஊக்கியா" வீதம் ஒன்பது ஆண்டுகளில் ஒன்பது "ஊக்கியா"க்களை (விடுதலைத் தொகையாக)ச் செலுத்திவிட வேண்டும் எனும் நிபந்தனையை ஒப்புக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்; ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள்" என்று கேட்டார்.

நான், "உன் உரிமையாளர்களுக்கு அந்த "ஊக்கியா"க்களை நான் ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்கிறேன். (ஆனால்,) உன் வாரிசுரிமை எனக்கே உரியதாக இருக்கும். இதற்கு அவர்கள் இசைந்தால், நான் அவ்வாறே செய்கிறேன்" என்று சொன்னேன்.

பரீரா தன் உரிமையாளர்களிடம் அதைக் கூறியபோது, (பரீராவின்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தால் தவிர அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என அவர்கள் மறுத்துவிட்டனர். பரீரா என்னிடம் வந்து அதைத் தெரிவித்தார். நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறாயின் முடியாது" என்று கூறி, பரீராவைத் துரத்திவிட்டேன்.

இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அதைப் பற்றி) என்னிடம் வினவ, நான் அவர்களுக்கு விவரத்தைச் சொன்னேன். அப்போது, "அவளை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. அவர்களுக்கே வாரிசுரிமை உரியது என அறிவித்துவிடு. (பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.)

ஏனெனில், (சட்டப்படி) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.

பிறகு (அன்று) மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, "இறைவாழ்த்துக்குப் பின்! மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை அவர்கள் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும்; அது நூறு (முறை மொழியப்பட்ட) நிபந்தனையாயினும் சரியே! அல்லாஹ்வின் சட்டமே (ஏற்று) பின்பற்றத் தகுந்ததாகும்.

அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும். உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர், (என் அடிமையாகிய) இன்ன மனிதனை விடுதலை செய்துவிடு! ஆனால், (அவனுக்கு) வாரிசாகும் உரிமை எனக்கே உரியது" என்று கூறுகிறாரே! (உண்மையில்) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.                                  ( நூல்: புகாரி )

பொறுப்பாளரின் முன்பாக….

روى الشيخان عن أبي حميدٍ الساعدي: أن النبي صلى الله عليه وسلم استعمل ابن الأُتْبيَّة على صدقات بني سليمٍ، فلما جاء إلى رسول الله صلى الله عليه وسلم وحاسبه، قال: هذا الذي لكم، وهذه هديةٌ أهديت لي، فقال رسول الله صلى الله عليه وسلم: ((فهلا جلستَ في بيت أبيك وبيت أمك حتى تأتيك هديتك إن كنت صادقًا؟!))، ثم قام رسول الله صلى الله عليه وسلم فخطب الناس وحمد الله وأثنى عليه، ثم قال: ((أما بعد، فإني أستعمل رجالًا منكم على أمورٍ مما ولاني الله، فيأتي أحدكم فيقول: هذا لكم، وهذه هديةٌ أهديت لي، فهلا جلس في بيت أبيه وبيت أمه حتى تأتيه هديته إن كان صادقًا؟! فوالله لا يأخذ أحدكم منها شيئًا - قال هشامٌ: بغير حقه - إلا جاء اللهَ يحمِلُه يوم القيامة، ألا فلأعرفن ما جاء اللهَ رجلٌ ببعيرٍ له رغاءٌ أو ببقرةٍ لها خوارٌ أو شاةٍ تَيْعر))، ثم رفع يديه حتى رأيت بياض إِبْطيه: ((ألا هل بلغتُ؟!))؛ (البخاري حديث 7197 / مسلم حديث 1832).

 

முஸ்லிம் ஷரீஃபில் அபூ ஹூமைத் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஅதிஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் வாயிலாக ஒரு செய்தியை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.


நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியைச் சேர்ந்த் இப்னுல் உத்ஃபிய்யா என்பவரை ஜகாத் வசூலிக்க அனுப்பினார்கள். சிறிது நாட்களில் திரும்பி வந்த அவர் ஒரு பையை நீட்டி இது உங்களுக்குறியது; ஜகாத் வசூலித்த பணம், இன்னொரு சிறிய பை போன்ற பொட்டலத்தைக் காட்டி இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது எனக்குறியது என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.

உடனே, முகம் மாறிய நிலையில் கோபமாக மிம்பரின் மீது ஏறிய மாநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள், பின்பு நிச்சயமாக அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக நியமித்த பணிகளில் ஒரு பணியினை (ஜகாத் வசூலிப்பதை) நிறைவேற்ற நான் ஒருவரை நியமித்தேன். அவர் வந்து கூறுகிறார்.இது உங்களுக்கு;மற்றொன்று தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று.

அவர் கூறுவது உண்மையாக இருந்தால் அவர் தன் தந்தையின் வீட்டிலோ, தாயின் வீட்டிலோ அமர்ந்திருக்கட்டும் (அவர் சொன்ன அந்த அன்பளிப்பு அவரது வேலைக்காக கொடுக்கப்பட்டதாகும்) அவருக்காக கொடுக்கப்பட்டதல்ல. ஆகவே அவர் அதை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்கள்.

இங்கே நேர்மையை பாதிக்கிற ஒரு காரியத்தை செய்த அந்த நபித்தோழரை கண்டித்ததோடு, ஏனைய முஸ்லிம்களும் இதுபோன்று நேர்மையை பாதிக்கிற எந்த ஒரு காரியத்திலும் இறங்கிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே மாநபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

ஒரு நாட்டு அரசரின் முன்பாக….

قال عُدي: بُعِثَ رسول الله حين بُعث فكرهته أشدّ ما كرهت شيئاً قط، فانطلقتُ حتى إذا كنت في أقصى الأرض ممّا يلي الروم، فكرهتُ مكاني ذلك مثلما كرهته أو أشدّ، فقلتُ:(لو أتيتُ هذا الرجل، فإن كان كاذباً لم يخفَ عليّ، وإن كان صادقاً اتبعته )فأقبلتُ فلمّا قدمتُ المدينة استشرفني الناس وقالو:( عُدي بن حاتم! عُدي بن حاتم )
فأتيته فقال لي:( يا عديّ بن حاتم أسلمْ تسلمْ )
فقلتُ:( إنّ لي دين!)
قال:( أنا أعلم بدينك منك )
قلتُ:( أنت أعلم بديني مني؟!)
قال:( نعم )مرّتين أو ثلاثاً
قال:( ألست ترأس قومك؟)
قلتُ:( بلى )
قال:( ألستَ رُكوسيّاً -فرقة مترددة بين النصارى والصابئين- ألستَ تأكل المرباع؟)
قلتُ:( بلى )
قال:( فإن ذلك لا يحلّ في دينَك!) فنضنضتُ لذلك

ஸஃபானா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு நின்று விடாமல் தமது சகோதரர் அதீ இப்னு ஹாத்திமிடம் நீர் விரும்பியோ விரும்பாமலோ நபி {ஸல்} அவர்களைச் சந்தித்தே ஆக வேண்டும்என்று அறிவுரைக் கூறினார். தனது சகோதரியின் இந்த யோசனைக்குப் பின் தனக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையென்றாலும் துணிவுடன் நபியவர்களை சந்திக்க அவர் பயணமானார்.

நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து அவர்களுக்கருகில் அமர்ந்தவுடன், அவர் யார் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் நபி (ஸல்) பேசினார்கள். அல்லாஹ்வை புகழ்ந்ததற்கு பின் நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன? ‘லாஇலாஹஇல்லல்லாஹ்என்று கூறுவதற்கு பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை தவிர வேறொர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் அப்படி ஒன்றுமில்லைஎன்றார். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அல்லாஹு அக்பர் என்று சொல்வதற்குப் பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை விட மிகப்பெரியவன் ஒருவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் அவ்வாறு இல்லைஎன்று பதிலளித்தார்.

யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள், கிறிஸ்தவர்கள் வழிதவறியவர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். இதனைக் கேட்ட அதிய் நான் இணைவைப்பிலிருந்து முற்றிலும் விலகிய முஸ்லிமாக இருக்கிறேன்என்று கூறினார். அவன் இப்பேச்சைக் கேட்ட நபி (ஸல்) முகம் மலர்ந்தவர்களாக அன்சாரி ஒருவன் வீட்டில் விருந்தாளியாக, அவரைத் தங்க வைத்தார்கள். அவர் அங்கு தங்கி ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து வந்தார். (ஜாதுல் மஆது)

தான் முஸ்லிமானதைப் பற்றி அதிய் கூறியதை இப்னு இஸ்ஹாக் (ரஹ்)அறிவிக்கிறார்: என்னை நபி (ஸல்) தங்கள் இல்லத்தில் அவர்களுக்கு முன்பாக அமர வைத்தார்கள். நபி (ஸல்) என்னிடம்ஹாத்திமின் மகன் அதியே! நீ ரகூஸியாக இருந்தாய் அல்லவா?” (ம்ரகூஸிஎன்பது கிறிஸ்துவம் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்.)

அதிய்: ஆம்! அப்படித்தான்.

நபி (ஸல்): உமது கூட்டத்தினருக்குச் சொந்தமான கனீமா பொருட்களின் 1ழூழூ4 பங்கை அனுபவித்து வந்தாயல்லவா?

அதிய்: ஆம்! அவ்வாறுதான் செய்தேன்.

நபி (ஸல்): அது உமது மார்க்கத்தில் ஆகுமான செயலாக இல்லையே?

அதிய்: ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொல்வது சதான்.

மக்களுக்கு தெரியாதவை அவருக்குத் தெரிகிறது. எனவே, நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று அறிந்து கொண்டேன்.) (இப்னு ஹிஷாம்)

அதிய் தொடர்பாக முஸ்னது அஹ்மதில் மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது.

நபி (ஸல்): அதிய்யே! நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றமடைவாய்!

அதிய்: நானும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுபவன்தானே?

நபி (ஸல்): நான் உம்மைவிட உமது மார்க்கத்தை நன்கறிவேன்.

அதிய்: அது எப்படி என் மார்க்கத்தை என்னைவிட நீங்கள் நன்கறிவீர்கள்?

நபி (ஸல்): நீர் ரகூஸியா கூட்டத்தை சேர்ந்தவர்தானே? உமது கூட்டத்தில் கனீமத்தில் 1ழூழூ4 பங்கை அனுபவித்து வந்தீரே?

அதிய்: நீங்கள் கூறுவது உண்மைதான்.

நபி (ஸல்): நிச்சயமாக உமது இந்தச் செயல் உமது மார்க்கத்தில் ஆகுமானதல்லவே.

அதிய் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களின் இந்தப் பேச்சுக்கு முன் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். (முஸ்னது அஹ்மது)

மனைவியின் முன்பாக....

حدثنا مُسَدَّد، حدثنا يحيى، عن سفيان، حدثني علي بن الأقمر، عن أبي حذيفة، عن عائشة قالت: قلت للنبي صلى الله عليه وسلم: حسبك من صفية كذا وكذا! -قال غير مسدد: تعني قصيرة-فقال: "لقد قلت كلمة لو مُزِجَتْ بماء البحر لمزجته".

அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி {ஸல்} அவர்களிடம் ஒரு முறை கூறினேன்:ஸஃபிய்யா இப்படிஇருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.” {அதாவது ஸஃபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்} என்றேன்.

அது கேட்ட நபி {ஸல்} அவர்கள் ஆயிஷாவே! நீஎவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்திவிட்டாய் எனில், அதனை கடலில் கரைத்து விட்டால் அது கடல் நீர் முழுவதையும் அசுத்தப்படுத்தி இருக்கும்என்று என்னிடம் கூறினார்கள்.                                                                   (  நூல்:மிஷ்காத், பக்கம்:414 )

இளைஞனுக்கு முன்பாக

   
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَلَا تَفْعَلْ صُمْ وَأَفْطِرْ وَقُمْ وَنَمْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَيَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ فَصُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام وَلَا تَزِدْ عَلَيْهِ قُلْتُ وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام قَالَ نِصْفَ الدَّهْرِ فَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்களும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடம் சென்றோம். அவர்களை அழைத்துவருமாறு ஆளனுப்பிவிட்டு, அவர்கள் எங்களிடம் வரும்வரை அவர்களது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பள்ளிவாசலில் நாங்கள் (காத்து) இருந்தோம்.

அவர்கள் எங்களிடம் வந்தபோது, "நீங்கள் நாடினால் (என் வீட்டுக்குள்) வரலாம்; நீங்கள் நாடினால் இங்கேயே அமரலாம்" என்றார்கள். நாங்கள், "இல்லை, இங்கேயே அமருகிறோம். எங்களுக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் பகலெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதியும் வந்தேன். அப்போது "என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது" அல்லது "(என்னை அழைத்து வருமாறு) அவர்கள் என்னிடம் ஆளனுப்பினார்கள்." நான் அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள் என்னிடம், "நீர் (பகற்)காலமெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதிவருவதாக எனக்குச் செய்தி வந்ததே (அது உண்மையா)?" என்று கேட்டார்கள்.

நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! இதன் மூலம் நான் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை" என்றேன். அவர்கள், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமே!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன்.

அவர்கள், "உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன. உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன. உமது உடலுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உண்டு. எனவே, இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களைப் போன்று நோன்பு நோற்பீராக! ஏனெனில், தாவூத் (அலை) அவர்கள் மக்களிடையே மாபெரும் வணக்கசாலியாக இருந்தார்கள்" என்று கூறினார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) அவர்களின் நோன்பு என்ன?" என்று கேட்டேன். "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவதே அவர்களது நோன்பாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், "மாதத்திற்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்று கூறினார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்" என்றேன். "அவ்வாறாயின் இருபது நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன். "அப்படியானால், பத்து நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்!" என்றேன். "அவ்வாறாயின் வாரத்துக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம். ஏனெனில், உம் துணைவிக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன;உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "உமக்குத் தெரியாது; உமது வயது நீளக்கூடும் (அப்போது தொடர்நோன்பும் தொடர்வழிபாடும் உம்மால் முடியாமல் போகலாம்)" என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று நான் ஆனேன். முதுமை அடைந்த பின், நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று நான் விரும்பினேன். (அந்த அளவிற்கு நான் பலவீனப்பட்டு விட்டேன்).                                           ( நூல்: புகாரீ )

தாம் நேசித்த, தம்மை நேசித்த தோழர்களுக்கு முன்பாக...

நபி (ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்… (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ ح و حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ قَالَ مُحَمَّدُ بْنُ شِهَابٍ وَزَعَمَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ مَرْوَانَ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَاهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعِي مَنْ تَرَوْنَ وَأَحَبُّ الْحَدِيثِ إِلَيَّ أَصْدَقُهُ فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْيَ وَإِمَّا الْمَالَ وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِكُمْ وَكَانَ أَنْظَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنْ الطَّائِفِ فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلَّا إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمُسْلِمِينَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ إِخْوَانَكُمْ قَدْ جَاءُونَا تَائِبِينَ وَإِنِّي قَدْ رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ فَقَالَ النَّاسُ قَدْ طَيَّبْنَا ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّا لَا نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِي ذَلِكَ مِمَّنْ لَمْ يَأْذَنْ فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرُوهُ أَنَّهُمْ قَدْ طَيَّبُوا وَأَذِنُوا هَذَا الَّذِي بَلَغَنِي عَنْ سَبْيِ هَوَازِنَ

ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் புளுங்கிக்கொண்டிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் முன்னிலை வகிக்க இன்னும் சிலரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.

இறுதியில், நபிகளாரின் தலைமையில் சென்ற முஸ்லிம்கள் மாபெரும் வெற்றிவாகை சூடினார்கள்.

ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில் பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ஹவாஸின் கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.

இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த் என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும் இடத்தில் இருக்கும் போது வந்தனர்.

அந்தக் குழுவில் நபி {ஸல்} நபி {ஸல்} அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.

நபிகளாரிடம் அவர்கள் பைஅத் செய்த பின்னர் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.

ஆகவே, எங்களின் போர்க் கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.

எனவே, நான் என் தனிப்பட்ட முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று நாங்கள் அல்லாஹ்வின் தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகின்றோம்” என்று கூறுங்கள்” என கூறி அனுப்பி வைத்தார்கள்.

ஹவாஸின் குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.

இவர்களில் (நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.

 அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

பின்பு, ”எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து விடுகின்றேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்! நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்” என்றார்கள்.

ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் (ரலி) அவர்கள் நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள்.

இது போன்றே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி) அவர்கள் நானும் பனூ ஸுலைம் கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள் இடைமறித்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்” என்றனர்.

மீண்டும் அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா பங்கீட்டை தாமதம் செய்தேன்.

நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் எங்களின் குடும்பம் தான் வேண்டும்” என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக அவர்கள் எதையும் கருதவில்லை.

எனவே, யார் கைதிகளை எவ்வித பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்” என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக அல்லாஹ்வின் தூதரே! எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர் யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.

உங்களின் தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!” என்று கூறி அமர்ந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

(நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:241,242.  ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்...)

தாஹா நபி {ஸல்} அவர்களிடம் காணப்பட்ட இந்த தனித்துவம் வாய்ந்த இந்த பண்பால் மாநபி {ஸல்} அவர்கள் கட்டுக் கோப்பான ஓர் உம்மத்தை உருவாக்கினார்கள்.

அந்த சமூகம் சென்ற இடங்களில் எல்லாம் இஸ்லாம் நிலைபெற்றது. உலகமே நீதியான நேர்மையான ஆளுமைகளால் நிறைந்திருந்தது.

ஆகவே, சமூகத்தில் நமக்கு முன்னால் நிலவுகிற அசாதாராண சூழ்நிலை கண்டு மௌனிகளாக நடமாடாமல், தீமைகளை தீமை என்றும், அசத்தியத்தை அசத்தியம் என்றும், தவறை தவறென்றும், குற்றத்தை குற்றமென்றும் உடைத்துப் பேசுவோம்.

உரக்கப் பேசுவோம்! உண்மையை உடைத்துப் பேசுவோம்!! யாருடைய முன்பாக என்றாலும்!!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் மாநபி {ஸல்} அவர்களிடம் காணப்பட்ட பண்புகளை நம்மிடமும் ஏற்படுத்தி அருள்வானாக!

ஆமீன்!   ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!