Thursday 20 June 2019

உலகின் தண்ணீர்த் தேவைகளும்... முஸ்லிம் சமூகம் உலகிற்கு ஆற்ற வேண்டிய சேவைகளும்...


உலகின் தண்ணீர்த் தேவைகளும்...
முஸ்லிம் சமூகம் உலகிற்கு ஆற்ற வேண்டிய சேவைகளும்...




கிட்டத்தட்ட கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே தண்ணீர் என்பது தேடியலையும் ஒரு பொருளாகவே மாறிவிட்டதைப் பார்க்க முடிகின்றது.

தமிழகத்தில் சமீபத்தில் தண்ணீருக்காக நடைபெற்ற இரண்டு கொலைகள் யாரோ ஒரு கவிஞர் சொன்னமூன்றாம் உலகப் போர் அது தண்ணீருக்காகத் தான்என்பதை நினைவு படுத்துவதாய் அமைந்திருக்கின்றது.

தலைநகர் சென்னையில் உணவகங்களில் மதிய உணவு இல்லை என்ற அறிவிப்பும், அரசு மற்றும் தனியாரின் கட்டணக் கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளது என்கிற தகவல்களும் விடுதிகள் மூடப்படுதல் என்கிற அறிவிப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் தண்ணீரின் தேவை

உலகில் 19 நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேலான தண்ணீர் தேவையை அண்டை நாடுகளையே நம்பியுள்ளன. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஐ.நா மன்றம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் தண்ணீர் தேவை..

உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச் செல்வதிலேயே கழிகிறது.

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. கடலில் வீணாகும் தண்ணீரை சேமிக்க புதிய அணைகள் கட்டுவதில் மத்திய அரசுக்கும் போதிய அக்கறை இல்லை. இதைப் பற்றி மத்திய பட்ஜெட்டிலோ, மாநில பட்ஜெட்டிலோ சரியான அறிவிப்பு இல்லை.

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

தமிழகத்தின் தண்ணீர் தேவை

தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரு புறம் அண்டை மாநிலங்களால் தண்ணீர் நமக்கு கிடைப்பது தடுக்கப்படுகிறது. இன்னொரு புறம் நகரம் விரிவடைவதால் அதை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

இன்னொரு புறம் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் நீர் வள நிபுணர்கள்.

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.

தண்ணீர் தொடர்பான ஐ.நா., ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.

உலகில் 85 சதவீத மக்கள் வறட்சியான பகுதியில் வாழ்கின்றனர். 78 கோடி பேருக்கு குடி தண்ணீர் வசதி இல்லை. 250 கோடி பேருக்கு, அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர், போதுமானதாக இல்லை.

தற்போதிருக்கும் தண்ணீர் தேவைக்கான அளவு, உலகளவில் 2050 -ஆம் ஆண்டுக்குள், 19 சதவீதம் அதிகரிக்கும்.

அரேபிய நாடுகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடல்நீரைத் தான் சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர். அரேபிய நாடுகளில் 66 சதவீதம், வேறு நாடுகளில் இருந்து தண்ணீரை பெறுகின்றன.

வளர்ந்த நாடுகள், அதிகளவில் தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் பயன்படுத்திய தண்ணீர், 90 சதவீதம் அப்படியே வீணாக ஏரி, கடலில் கலக்கிறது. இதனாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்….
 
மற்ற எந்த கிரகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு நம் பூமிக்கு மட்டும் உண்டெனில் தண்ணீரால் தான் என்றால் அது மிகையாகாது.

நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. எனினும், இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

மனிதனின் உடலிலும் 75% நீர் தான் உள்ளது. நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் , கழிவை கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு மனிதனின் உடலில் 42 லிட்டர் தண்ணீர் உள்ளது. அதில் 2.7 லிட்டர் என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் (Dehydration)  உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.

அது போல நம் சுற்றுப்புறம் தூய்மையாக அமையவும் நீர் அவசியமாகிறது. நீர் எனும் அமுதம் பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கியமான மூலப்பொருளாகும்.

ஒரு நபருக்கு குடிக்க, சமைக்க நாளொன்றுக்கு ஆறுலிட்டர் தண்ணீர் வேண்டும். நான்குபேர் உள்ள குடும்பத்திற்கு ஒருநாளைக்கு 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனில், ஆண்டுக்கு குறைந்தது 9000 லிட்டர் தண்ணீர் வேண்டும்.

நீர் மரணங்கள்...

சுற்றுச்சுழல் மாசுபாட்டால் உலகில் உள்ள மக்கள் அசுத்தமான நீரை குடித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 2.1 மில்லியன் மக்கள் மாசுபட்ட நீரை பயன்படுத்துகின்றனர்.

ஆண்டுதோறும் 60 - 80 லட்சம் பேர், தண்ணீர் தொடர்பான நோயினால் இறக்கின்றனர்.

நாள் தோரும் எட்டு வினாடிக்கு ஒரு குழந்தை தண்ணீர் தொடர்பான காரணங்களால் இறப்பெய்துகின்றது.

ஒரு கோடியே ஐம்பது லட்சம் குழந்தைகள் பாதுகாப்பற்ற குடிநீரால் மரணிக்கின்றனர்.

தண்ணீர் தேவைகளுக்கான தீர்வுகளின் பிரதானமான இரண்டு அம்சங்கள்..

1.   தண்ணீரை சேமித்து வைத்து தேவை ஏற்படும் காலங்களில் பயன்படுத்துவது.
2.   தண்ணீரை பகிர்ந்து கொள்வது.

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 136.23 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

உலகிலுள்ள ஆறுகளில் 276 ஆறுகள் (ஆப்ரிக்காவில் 64, ஆசியா 60, ஐரோப்பியா 68, வட அமெரிக்கா 46, தென் அமெரிக்கா 38), ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் செல்கிறது. இதில் 185 ஆறுகளை இரண்டு நாடுகளும், 20 ஆறுகளை 5 நாடுகளும் பங்கிடுகின்றன. அதிகபட்சமாக மத்திய ஐரோப்பாவில் "தன்யூப்' என்ற ஆறு, 18 நாடுகளால் பங்கிடப்படுகிறது. உலகில் 46 சதவீத நிலப்பரப்பு, எல்லை கடந்த ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.

இரண்டையுமே மேற்கொள்ள வேண்டியது மக்களை வழி நடத்துகிற அரசுகளின் கடமையாகும்.

சர்வதேச அளவில் இந்த இரண்டு அம்சங்களும் மிகச் சீராக நடைபெற்று வருவதால் பெரும்பான்மையான நாடுகளில் தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதில்லை.

இந்தியாவைப் பொறுத்த வரை மாநிலத்தின் கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி தொடர்கிறது. எதிர்வரும் காலங்களில் அது மேலும் தீவிரம் கூட அடையலாம்.

இனி தண்ணீர்த் தேவைகளுக்கான விஷயத்தில் இஸ்லாம் கூறும் தீர்வுகளை நாம் பார்ப்போம்.

இஸ்லாம் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதை விட ஒரு பிரச்சனை ஏன் ஏற்படுகின்றது? என்ற காரணிகளையும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையுமே அதிகமாக பேசும்.

ஏனெனில், இஸ்லாம் அல்லாஹ்வால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட ஓர் அழகான மார்க்கம்.

1.   தண்ணீர் உயிரினங்கள் அனைத்திற்குமானது..

தண்ணீர் மனிதனுக்கு மாத்திரமல்ல உயிரினங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என படைப்பினங்கள் அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த தண்ணீரை மழை நீர் எனும் நன்னீர் மூலம் அல்லாஹ் வழங்கி உயிரினங்களை வாழ வைக்கின்றான்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமானால் உயிரினங்கள் அனைத்தும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இஸ்லாம்.

وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ

உயிரினங்கள் அனைத்தையும் நாம் தண்ணீரைக் கொண்டே உருவாக்கினோம்”. (அல்குர்ஆன்: 21: 30 )

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் அனைத்துப் பிராணிகளையும் தண்ணீரிலிருந்தே படைத்தான்”. ( அல்குர்ஆன்: 24: 45 )

மழையிலிருந்து பெறப்படுகிற நீரை பரக்கத் அபிவிருத்தி என்கிறது அல்குர்ஆன்….

وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ () وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ () رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ ()

மேலும், நாம் வானத்திலிருந்து அபிவிருத்திகள் நிறைந்த மழை நீரை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும், கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான அழகிய ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். இறந்து விட்ட மனிதர்கள் பூமியிலிருந்து வெளிப்படுவதும் இவ்விதமேயாகும்”.        ( அல்குர்ஆன்: 50: 9 – 11 )

மழையிலிருந்து பெறப்படுகிற நீரை ரஹ்மத் - அருள்வளம் என்கிறது அல்குர்ஆன்…..

وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ()

மேலும், அவனே தன்னுடைய அருள்வளத்திற்கு ( மழைக்கு ) முன்பாக நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான்”.      ( அல்குர்ஆன்: 7: 57 )

நீரை தஹூர் - தூய்மை என்கிறது அல்குர்ஆன்….

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا

மேலும், வானிலிருந்து தூய்மையான ( மழை ) நீரை நாம் இறக்கி வைக்கின்றோம்”.                                            ( அல்குர்ஆன்: 25: 48 )

மழையிலிருந்து பெறப்படுகிற நீரை ரிபாத்துல் குலூப் - இதயங்களை வலுப்படுத்தும் உயரிய அம்சம் என்கிறது அல்குர்ஆன்….

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ

இதையும் நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும், அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான்”.                           ( அல்குர்ஆன்: 8: 11 )

பத்ரில் அல்லாஹ் முஃமின்களுக்கு மட்டும் வழங்கிய பிரத்யேகமான மழையை நினைவு கூறச் சொல்கின்றான்.

மழையிலிருந்து பெறப்படுகிற நீர் வாழ்க்கைக்கான சாதனங்களை வழங்கும் மாபெரும் கொடை என்கிறது அல்குர்ஆன்….

يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا (11) وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12)

உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! சந்தேகமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”.                          ( அல்குர்ஆன்: 71: 10 – 12 )

மழைநீர் உலகத்தோடு முடிந்து விடும் ஒன்றல்ல....

قال رسول الله
صلى الله عليه و سلم أن جسد الأنسان يبلى كله فيما عدا "عجب الذنب" فإذا أراد الله تعالى بعث الناس أنزل مطراً من السماء فينبت كل فرد من عجب ذنبه كما تنبت البقلة من بذرتها رواه مسلم كتاب الفتن و أشراط الساعة

மஹ்ஷர் மைதானம் அமையப் பெற்ற பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு மழையை பொழியச் செய்வான். உடனே இறந்தவர்கள் பச்சைப்புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று மண்ணறையிலிருந்து உயிர்த்தெழுவார்கள். ஆதமுடைய மகனின் உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் மண் தின்று விடும். அவனுடைய முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும் குத எழும்பின் நுனியைத்தவிர, அதை வைத்தே அல்லாஹ் மீண்டும் மனித சமூகத்தை உயிர்த்தெழுப்புவான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: முஸ்லிம் )

2.   தண்ணீர் என்பது ஓர் மகத்தான அருட்கொடை

وقال الترمذي: حدثنا عبد بن حميد، حدثنا شبابة، عن عبد الله بن العلاء، عن الضحاك بن عبد الرحمن بن عرزم الأشعري قال: سمعت أبا هريرة يقول: قال النبي صلى الله عليه وسلم: "إن أول ما يسأل عنه -يعني يوم القيامة-العبد من النعيم أن يقال له: ألم نُصِحّ لك جسمك، ونُرْوكَ من الماء البارد؟ ".

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உனக்கு உடல் ஆரோக்கியத்தை நான் தரவில்லையா? குளிர்ந்த நீரைக்கொண்டு நான் உன் தாகம் தீர்க்கவில்லையா? என்று தான் மனிதர்களிடம் அல்லாஹ் முதன்முதலில் விசாரிப்பான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.               ( நூல்: திர்மிதி )


وقال ابن أبي حاتم: حدثنا أبو زُرْعَة، حدثنا مُسَدَّد، حدثنا سفيان، عن محمد بن عمرو، عن يحيى بن حاطب، عن عبد الله بن الزبير قال: قال الزبير: لما نزلت: { ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ } قالوا: يا رسول الله، لأي نعيم نسأل عنه، وإنما هما الأسودان التمر والماء؟ قال: "إن ذلك سيكون". وكذا رواه الترمذي وابن ماجة، من حديث سفيان -هو ابن عيينة-به

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தமது தந்தை ஜுபைர் (ரலி) வாயிலாக அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்-தகாஸூர் 102 -வது அத்தியாயம் இறங்கிய போது நபித்தோழர்களிடையேஓதிக்காண்பித்தார்கள்.

அதில் 8ம் வசனத்தை ஓதிகாண்பித்த போது சுற்றியிருந்த நபித்தோழர்கள் எந்தெந்த அருட்கொடைகள் குறித்தெல்லாம் நாங்கள் மறுமை நாளில் கேள்வி கேட்கப்படுவோம்? என்று கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் பேரித்தம் பழம் ஆகியவை குறித்தும் கேள்வி கேட்கப்படுவீர்கள்”என்று பதிலளித்தார்கள்.                          ( நூல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம்:708 )

3.   தண்ணீரின் விலை என்ன?..

دخل ابن السماك يوماً، على أمير المؤمنين هارون الرشيد، فوافق أن وجده يرفع الماء إلى فمه ليشرب فقال:‏ ‏ ناشدتك الله يا أمير المؤمنين أن تنتظر به قليلاً. فلما وضع الماء قال له:‏ ‏ أستحلفك بالله تعالى، لو أنك مـُنعت هذه الشربة من الماء، فبكم كنت تشتريها؟ قال:‏ ‏ بنصف ملكي، قال:‏ ‏ اشرب هنأك الله، فلما شرب قال:‏ ‏ أستحلفك بالله تعالى، لو أنك منعت خروجها من جوفك بعد هذا، فبكم كنت تشتريها؟ قال:‏ ‏ بملكي كله
 فقال
 ‏ يا أمير المؤمنين إن ملكا تربو عليه شربة ماء، وتفضله بولة واحدة، لخليق ألا يـُنافس فيه، فبكى هارون الرشيد، حتى ابتلت لحيته.

இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஷீத் பாதுஷா ரஹிமஹுல்லாஹு அலைஹி அவர்களைச் சந்திக்க வருகை தந்தார்கள்.

அப்போது அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தண்ணீர் பருகுவதற்காக தங்களின் வாயருகே தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு சென்று ஒரு மிடரு குடித்தார்கள்.

குடித்து முடிக்கும் வரை காத்திருந்த இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வை முன்னிருத்தி உங்களிடம் கேட்கிறேன். “ நீங்கள் குடிக்கும் இந்த ஒரு மிடரு நீர் உங்களுக்கு கிடைக்காமல் போனால் என்ன விலை கொடுத்து இந்த நீரை நீங்கள் வாங்குவீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்என் அரசாட்சியின் பாதி இடங்களை விலையாகக் கொடுத்து இந்த ஒரு மிடரு நீரை வாங்குவேன்என்று பதில் கூறினார்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அன்பளிப்பாய் தந்திருக்கும் இந்த நீரை பருகுவீராக! என்று இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்.

மீண்டும் ஒரு மிடரை அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் குடித்து முடித்ததும்அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வை முன்னிருத்தி உங்களிடம் கேட்கிறேன். “ நீங்கள் குடித்த இந்த ஒரு மிடரு நீர் உங்களின் வயிற்றுக்குள் சென்று, சிறுநீராக வராமல் தடைபட்டு போனால் என்ன விலை கொடுத்து சிறுநீரை நீங்கள் வெளியேற்றுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்என் முழு அரசாட்சியையும்  விலையாகக் கொடுத்து இந்த சிறுநீரை வெளியேற்றுவேன்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்ட இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்அமீருல் முஃமினீன் அவர்களே! பார்த்தீர்களா? உங்கள் அரசாட்சி என்பது ஒரு மிடர் குடிநீருக்கும், ஒரு முறை கழிக்கிற சிறுநீருக்கும் கூட பொறுமதியாக இல்லை. ஆனால், நீங்கள் பொறுமதி பெறாத இந்த ஆட்சியதிகாரத்திலேயே அனுதினமும் மூழ்கிப்போய் கிடக்கின்றீர்கள்என்றார்களாம்.

அது கேட்ட, அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஷீத் பாதுஷா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் தாடி நனையும் அளவுக்கு அழுதார்களாம். ( நூல்: வஃப்யாத்தில் அஃயான், ஸியரு அஃலாமின் நுபலா )

தண்ணீர் தேவைகளின் போது முஸ்லிம் சமூகம் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்து பார்க்கும் முன்பாக இஸ்லாம் சொல்கிற சில தீர்வுகளை பார்த்து விட்டுச் செல்வோம்.

1.   தண்ணீருக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்!

அல்லாஹ் வழங்கியிருக்கின்ற எந்தவொரு அருட்கொடையும் நம்மிடம் இருந்து பிடுங்கப்படாமல் இருக்க வேண்டுமானால் படைத்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், அப்பொழுது தான் அந்த அருட்கொடைகள் தங்கு, தடையில்லாமல் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ

நீங்கள் நன்றியுணர்வோடு நடந்து கொள்வீர்களானால் நாம் (நமது அருட்கொடைகளை) இன்னும் அதிகப்படுத்தி தருவோம்    ( அல்குர் ஆன்: 14: 7 )

هذا الحديث رواه ابن أبي الدنيا في "الشكر" (70)، والطبراني في "الدعاء
 (899)، وأبو نعيم في "الحلية" (8/ 137)، والبيهقي في "الشعب" (4162)
من طريق جابر بن يَزِيد الْجُعْفِيّ عَنْ أَبِي جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَرِبَ الْمَاءَ قَالَ
   الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا عَذْبًا فُرَاتًا بِرَحْمَتِهِ، وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَاجًا بِذُنُوبِنَا  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்திய பின் பின்வரும் துஆவை ஓதுவார்கள் என இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,

இறைவா! நீயே புகழுக்குறியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால் தான் நீ எங்களுக்கு சுவையான, மதுரமான தண்ணீரை வழங்குகின்றாய்! எங்கள் பாவங்களை நீ மனதில் கொண்டிருப்பாயேயானால் நீ இந்த நீரை உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்” ( நூல்:

எனவே, மாபெரும் அருட்கொடையான தண்ணீரை நாம் ஒவ்வொரு முறை பருகும் போதும், பயன் படுத்தும் போதும் அது நம்மை விட்டும் நீங்காமலிருக்க வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்துவோம்.

2.   நீரை வீண்விரயம் செய்யக் கூடாது

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)

உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் (உணவையும், நீரையும்) வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 7: 32 )
روى الإمام أحمد (6768) وابن ماجة(419) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما (أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ : مَا هَذَا السَّرَفُ يَا سَعْدُ ؟ قَالَ : أَفِي الْوُضُوءِ سَرَفٌ ؟ قَالَ : نَعَمْ ، وَإِنْ كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ) .

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்ள் “ஒரு சமயம் ஸஅத் (ரலி) எனும் நபித்தோழர் உளூ செய்து கொண்டிருக்கையில் அவரைக் கடந்து சென்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம்ஸஅதே! இது என்ன? இப்படி நீரை வீண் விரையம் செய்கின்றீர்!?” எனக்கேட்டார்கள்.

அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உளூ செய்வதில் என்ன வீண் விரையம் இருக்கிறது? என்று கேட்கவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்ஓடும் நதியில் நீர் உளூச் செய்தாலும் விரயம் செய்யாதீர்என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். ( நூல்: இப்னு மாஜா )

عمرو بن شعيب عن أبيه عن جده قال

அம்ர் இப்னு ஷுஐபு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாட்டுப்புற அரபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உளூவிற்கான செயல் முறை விளக்கம் குறித்து கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூவை எப்படி செய்ய வேண்டும் என செய்து காட்டினார்கள். அதில் உளூவில் ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுகினார்கள். பின்னர் இறுதியாக, அவரிடம்இது தான் உளூ! இப்படித்தான் உளூ செய்ய வேண்டும்! இதை விட யார் அதிகப்படுத்துகின்றாரோ அவர் தீயவராவார், அநியாயக்காரர் ஆவார், வரம்புகளைக் கடந்தவராவார்என எச்சரித்து அனுப்பினார்கள்.    ( நூல்: நஸாஈ )

உளூ என்பது இபாதத் ஆகும். பல இபாதத்கள் நிறைவேறுவதற்கான அடிப்படை அம்சமும் ஆகும். அது விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளும், கண்டித்த விதமும் கவனத்தில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும்.

அப்படியென்றால் மற்ற விஷயங்களில் நாம் செய்கிற வீண் விரையங்களை என்னவென்று சொல்வது?.

உதாரணத்திற்கு பல் துலக்குவது, குளிப்பது இவ்விரண்டும் அன்றாடம் நாம் செய்கிற மிக முக்கியமான காரியங்களாகும். இவ்விரண்டிலும் நாம் செய்யும் விரையங்களை ஆய்வுகள் இப்படிச் சொல்கின்றது.

பல் துலக்கும் போது ஒவ்வொருவரும் வீணடிக்கும் தண்ணீர் வருடத்திற்கு ஐந்தாயிரம் லிட்டர் ஆகும்.

நீர்த்தூவி (ஷவர்) பயன்படுத்தி குளிக்கும் போது ஒவ்வொருவரும் வீணாக்கும் தண்ணீர் வருடத்திற்கு இருபதாயிரம் லிட்டர் ஆகும்.

இது போக துணி துவைப்பது, வாகனங்கள் கழுவுவது, இதர நீர் விரையங்களைக் கணக்கிட்டால் நாம் வீணடிக்கும் தண்ணீரின் விரையங்கள் நமக்கு வியப்பைத் தரும்.

3.   நீரை மாசுபடுத்துதல் கூடாது

وهو ما رواه مسلم من حديث جابر عن النبي صلى الله عليه وسلم " أنه نهى عن البول في الماء الراكد "
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், குளம், ஏரி, குட்டை போன்ற் நீர் நிலைகளில் சிறுநீர் கழிப்பதையும், அசுத்தம் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلّى الله عليه وسلّم قَالَ: "لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ".
وفي رواية: "الَّذِي لاَ يَجْرِي". وفي رواية البخاري: "ثُمَّ يَغْتَسِلُ فِيْهِ".

அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில், மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிலைகளில் (ஆறு, குளம்) போன்றவற்றில் சிறுநீர் கழிக்கவும், மாசுபடுத்தவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.              

                                ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்; பக்கம் 667 )

4.   தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்


عن أنس بن مالك رضي الله عنه رضي الله عنه قال: (كان رسول الله صلى الله عليه وسلم يتوضأ بالمُدِّ، ويغتسل بالصاع إلى خمسة أمداد
 متفق عليه.
والصاع يساوي (2.75 لتر ماء)
 والمد يساوي (687 ملليلتر ماء).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முத் அளவு தண்ணீரில் உளூ செய்வார்கள். ஐந்து முத் அளவு உள்ள தண்ணீரில் குளிப்பார்கள்என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

وعن عبد الله بن محمد بن عقيل بن أبي طالب، عن أبيه، عن جده، قال: قال رسول الله صلى الله عليه وسلم: “يجزئ من الوضوء مدٌّ، ومن الغسل صاع، فقال رجل: لا يجزئنا، فقال: قد كان يجزئ من هو خير منك، وأكثر شعرًا، يعني النبي صلى الله عليه وسلم

முஹம்மது இப்னு அகீல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  ஒரு முறை எங்களிடம்உளு செய்வதற்கு ஒரு முத் அளவு உள்ள நீர் ஒருவருக்கு போதுமாகும். குளிப்பதற்கு ஒரு ஸாவு (ஐந்து முத்) அளவு உள்ள நீர் ஒருவருக்கு போதுமாகும்என்றார்கள். அப்போது, ஒருவர்எங்களுக்கு அந்த அளவு போதுமாகாது?” என்றார்.

அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்உம்மை விட சிறந்த ஒருவருக்கு, முடி அடர்த்தியாக வைத்துள்ளவருக்கு ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களைக் குறிப்பிட்டு ) போதுமானதாக இருக்கின்றதே!” என்று பதில் கூறினார்கள்.                                    ( நூல்: இப்னுமாஜா )

உலகின் தண்ணீர் தேவைக்கு முஸ்லிம் சமூகம் ஆற்ற வேண்டிய சேவைகள்

1.   சந்ததிகளுக்கு தண்ணீரை விட்டுச் செல்வோம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளும், அங்கீகாரங்களும், வாழ்க்கை வழிமுறைகளும் தான் ஹதீஸ்நபிமொழி என்று அழைக்கப்படுகின்றது.

அந்த நபிமொழி தான் இறுதி நாள் வரை உள்ள மக்களுக்கான வாழ்வியல் கோட்பாடாகும்.

அப்படியான அந்த நபிமொழிகள் நாம் வாழ்கிற எல்லா காலத்திற்கும் தேவையான வாழ்வியல் வழிகாட்டலை வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

நாம் சந்திக்கும், எதிர் வருகிற காலத்தில் சந்திக்க இருக்கும் சவாலான தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு நபிமொழிகளில் தீர்வுகள் வழங்கப் பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளும் போது மூன்று நபிமொழிகள் மிக அழகிய தீர்வை வழங்குவதைப் பார்க்க முடியும்.

எப்போதுமே நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகள் உள்ளார்ந்த பல அர்த்தங்களைக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.

அந்த அடிப்படையில் கீழ்காணும் ஹதீஸை நோக்கினால் அழகான தீர்வை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தந்திருப்பதைப் பார்க்க முடியும்.

في حجة الوداع، كان هناك مع رسول الله صلى الله عليه وسلم، وأصابه المرض، وذهب الرسول يعوده، فساله سعد قائلا:
"يا رسول الله، اني ذو مال ولا يرثني الا ابنة، أفأتصدّق بثلثي مالي..؟
قال النبي: لا.
قلت: فبنصفه؟
قال النبي: لا.
قلت: فبثلثه..؟
قال النبي: نعم، والثلث كثير.. انك ان تذر ورثتك أغنياء، خير من أن تذرهم عالة يتكففون الناس، وانك لن تنفق نفقة تبتغي بها وجه الله الا أجرت بها، حتى اللقمة تضعها في فم امرأتك"..

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் நோய் வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கொண்டிருந்த வேளையில் மாநபி {ஸல்} அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை நலம் விசாரிக்க வருகை தருகின்றார்கள்.

ஸஅத் (ரலி) அவர்களின் அருகே அமர்ந்த அண்ணலார் நோயின் தீவிரம் குறித்து விசாரித்து விட்டு ஆறுதல் கூறியாஅல்லாஹ் ஸஅதை நோயின் தீவிரத் தன்மையில் இருந்து மீட்டெடுப்பாயாக! ஸஅதிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவாயாக! என்று துஆச் செய்தார்கள்.

நபிகளாரின் இந்தச் செய்கைகளால் உணர்ச்சிவசப்பட்ட ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் முழுவதையும் இறைவழியில் அர்ப்பணித்திட விரும்புகின்றேன்!” என்றார்.

அதற்கு, நபிகளார் வேண்டாம் ஸஅதேஎன்றார்கள்.

மீண்டும் ஸஅத் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தில் சரி பாதியை இறைவழியில் அர்ப்பணித்திட விரும்புகின்றேன்!” என்றார்.

அதற்கும் அண்ணலார் மறுத்து விட்டார்கள். மூன்றாவது முறையாக ஸஅத் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியை இறைவழியில் அர்ப்பணித்திட நான் விரும்புகின்றேன்! என்றார்.

அது கேட்ட அண்ணலார் ஆம்! என்று ஆமோதித்து விட்டுஇது கூட அதிகம் தான் என்று கூறி ஸஅதே! நீர் உம் சந்ததியை பிறர் தயவில் வாழும் நிலையில் விட்டுச் செல்வதை விட செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே மேல். அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செய்யும் சின்னதொரு அர்ப்பணிப்பிற்கும் அல்லாஹ்விடத்தில் சிறந்த நற்கூலியுண்டு. நீர் உம் மனைவியின் வாயில் ஓர் கவள உணவை ஊட்டினாலும் அதற்கும் கூலி உண்டு.” என்று கூறினார்கள்.

                                 ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}…)

ஏனெனில், எதிர்காலத்தில் தண்ணீரின் விலை தங்கத்தின் விலையை விட விற்கப்படலாம் என நிபுணர்களும், ஆய்வாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் அர்ஜெண்டினாவில் . நா சபை சார்பாக நடைபெற்ற நீரியல் தின மாநாட்டின் போதுஒரு சொட்டு தண்ணீருக்கான விலை ஒரு சொட்டு பெட்ரோலுக்கான விலையை விட அதிகரிக்கலாம்என நீரியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, மக்களுக்கு எதிர்காலத்தில் சொத்து, வீடு, வாசல், பொருளாதாரம் என்பதோடு சேர்த்து தண்ணீர்த் தேவையை பூர்த்தியாக்கும் மழை நீர் சேகரிப்பு தொட்டி, மரங்கள் வளர்ப்பு போன்றவற்றையும் கொடுத்து விட்டு போவது நலம் பயக்கும்.

இனிவரும் காலங்களில் தண்ணீர் என்பது உலகில் மனிதனால் வாங்க முடியாத பொருளாக மாறும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே, வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், வீட்டைச் சுற்றி, வசிக்கும் பதிகளில், தெருவில், மஹல்லாவில், பள்ளிவாசலில் இப்படி அனைத்துப் பகுதிகளிலும் மரங்களை நட்டு, அவைகளை பராமரித்து நீர் ஆதாரங்கள் பெருக வழி வகை செய்வோம்.

2.   நீர் ஆதாரங்களை உருவாக்குவோம்!…

முஸ்லிம் சமூகம் அதிகம் கண்டு கொள்ளாத லட்சியமே செய்யாத நபிமொழிகள் பல இருக்கின்றன.

அவைகளில் ஒன்று பின் வரும் நபிமொழிகளில் இடம் பெற்றுள்ள மூன்று முக்கியமான விஷயங்களாகும்.

மனிதன் இறந்த பிறகு அவனுக்கு நிரந்தரமாக நன்மைகளை அள்ளித் தருகிற அம்சங்களை முஸ்லிம் சமூகத்திற்கு அழகாக அடையாளப்படுத்தினார்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
 (( سبع يجري للعبد أجرهن وهو في قبره بعد موته :من عَلّم علماً, أو أجرى نهراً , أو حفر بئراً , أو غرس نخلاً , أو بنى مسجداً , أو ورّث مصحفاً , أو ترك ولداً يستغفر له بعد موته ))
حسنه الألباني رحمه الله في صحيح الجامع برقم :3596].

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஏழு  அம்சங்கள் ஒரு மனிதனின் மரரணத்திற்குப் பிறகு அவனுடைய மண்ணறைக்கு நன்மைகளை வழங்கிக் கொண்டே இருக்கும்.

1.கற்றுக் கொடுத்த கல்வி, 2.மக்கள் பயன்பாட்டிற்கு நதிகளை (ஆறுகளை) அமைத்தல், 3.மக்கள் பயன்பாட்டிற்கு கிணறுகளை அமைத்தல், 4.மரங்களை நடுதல், 5.பள்ளிவாசல்களை கட்டுதல், 6.குர்ஆனை வழங்குதல், 7.ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.

இதில் கிட்டத்தட்ட 4 அம்சங்களை முஸ்லிம் சமூகம் ஓரளவு செய்து வருகின்றது.

பிராதான மூன்று விஷயங்கள் மரம் நடுதல், ஆறு, கிணறுகளை அமைத்தல் ஆகியவைகளில் முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த தவறி விட்டது என்றே சொல்லலாம்.

நீரோடும் ஆற்றை அமைப்பது, கிணறுகளை அமைப்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை என்றாலும் நாம் வசிக்கிற பகுதியில் தூர்ந்த நிலையில் உள்ள ஆறு, குளம், கண்மாய், ஏரி, குட்டை, வாய்க்கால் போன்றவைகளை நேரடியாக களம் கண்டு தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டாலும் மேற்கூறிய நிரந்தர நன்மைகளைப் பெற முடியும்.

அல்லது தூர்வார்வதற்கு பயன்படுகிற சாதனங்களை வாங்கிக் கொடுப்பது, தூர்வாரும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உணவு, ஊதியம் வழங்குவது போன்ற அது தொடர்பான பணிகளில் தங்களையும் தங்கள் பொருளாதாரத்தையும் ஈடுபடுத்துவதும் மேற்கூறிய நிரந்தர நன்மைகளைப் பெற்றுத்தரும்.

அதே போன்று கிணறு அமைக்க சாத்தியமுள்ள இடங்களில் கிணறு அமைப்பது அல்லது போர் போட்டு தண்ணீர் தொட்டிகளை அமைப்பது.

பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், தன்னார்வ அமைப்புகளையும், இயக்கங்களையும் கொண்டிருக்கிற, மருத்துவம், இரத்ததானம், பேரிடர் மீட்பு போன்ற மனித நேயப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகிற தமிழ் முஸ்லிம் சமூகம்,

11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலிம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை,

பல்லாயிரக்கணக்கான மஸ்ஜித்களை அங்கமாகக் கொண்டிருக்கிற அனைத்து ஸுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு,

இதர சங்கங்கள், கூட்டமைப்புகள், என முஸ்லிம் சமூகம் ஓரணியில் ஒண்றிணைந்து அரசின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியோடும் இப்பணியில் ஈடுபட்டால் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில் ஏற்படும் தண்ணீர்ப் பற்றாக்குறையை பெரும் துணிவோடு ஒட்டு மொத்த மக்களோடும் எதிர் கொள்ளலாம்.

ஏனெனில், தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் கனத்த பருவ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.

பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மற்றும் உபரி நீர் தூர்வாரப்பட்ட ஆறு குளம், கிணறு, கண்மாய், ஏரி, குட்டை ஆகியவற்றில் சேமிப்பாகும்.

கடல்களில் வீணாக கலக்கும் நீர் தடுக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, தண்ணீர்த் தேவை நிறைவேறும்.

நம் மரணத்திற்குப் பின்னரும் மண்ணறைக்கு இதன் பலன்கள் நன்மைகளாக, நிரந்தரமாக எழுப்பப்படும் நாள் வரை வந்து கொண்டே இருக்கும். நாளை மறுமையிலும் நிறைவான நற்கூலிகளைக் பெற்று சுவனத்தின் சோபனத்தைப் பெறலாம்.

3.   தண்ணீர் தர்மம் செய்வோம்...

عن أبي هريرة قال النبي
" ليس صدقة أعظم أجراً من ماء "

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “தண்ணீர் தர்மத்தை விட இறைவனிடம் பெரும் கூலியைப் பெற்றுத் தரும் தர்மம் வேறெதுவும் இல்லைஎன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

                                                          ( நூல்: பைஹகீ )

أتى سعد بن عبادة فقال : يا رسول الله : إن أمي توفيت ، و لم توص أفينفعها أن أتصدق عنها ؟..
٤- قال الرسول : " نعم ، و عليك بالماء"
رواه الطبراني في الأوسط.
و صححه الألباني في صحيح الترغيب،

ஸஅத் இப்னு உப்பாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்எனது தாயார் இறந்து விட்டார்கள், அவர்களுக்காக நான் தர்மம் ஏதாவது செய்யலாமா? என வினவினார்கள்.

அதற்கு, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தாராளமாக தர்மம் செய்யலாம்என்றார்கள். அப்படியென்றால், சிறந்த தர்மம் ஒன்றைக் கூறுங்கள். என் தாயாருக்காக நான் செய்கிறேன்என்றார்கள்.

அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தண்ணீர் வழங்குவதுஎன்று கூறினார்கள்.                                 ( நூல்: அஹ்மத் )

سئل ابن عباس : أي الصدقة أفضل؟
فقال :ا لماء،
ألم تروا إلى أهل النار حين استغاثوا بأهل الجنة:
"أن أفيضوا علينا من الماء أومما رزقكم الله"

٦- قال الإمام القرطبي (في هذه الآية دليل على أن سقي الماء من أفضل الأعمال.)

இமாம் குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 7 –ஆம் அத்தியாயத்தின் 50 –ஆம் வசனத்திற்கு விளக்கம் தருகிற போதுஅல்லாஹ்விடம் நம்மை நெருக்கிற வைக்கிற அமல்களில் சிறந்த அமல், அமல்களிலெல்லாம் சிறந்த அமல் தண்ணீர் தர்மம் செய்வதாகும்என்கிறார்கள்.                    ( நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ )

தண்ணீர் தர்மம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகளில் சில

1.   ரஹீக்குல் மஃக்தூமின் மதுரமான நீர் கிடைக்கும்..

وروى أحمد في المسند، والترمذي في السنن عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم
 أيما مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله يوم القيامة من ثمار الجنة، وأيما مؤمن سقى مؤمنا على ظمأ سقاه الله يوم القيامة من الرحيق المختوم، وأيما مؤمن كسا مؤمن على عري كساه الله من خضر الجنة

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் பசித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு உணவளிக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து கனிகளை மறுமையில் வழங்குவான்.

எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் தாகித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு தண்ணீர் கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு ரஹீக்கில் மஃதூமின் நீரை  மறுமையில் புகட்டுவான்.

எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் ஆடையில்லாதிருந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அணிய ஆடை கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து பட்டாடையை மறுமையில் அணிவிப்பான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                  ( நூல்: திர்மிதீ )

2.   சுவனம் கிடைக்கும்...

وعن البراء بن عازب رضي الله عنه قال :جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، علمني عملا يدخلني الجنة. قال :«أعتق النسمة وفك الرقبة، فإن لم تطق ذلك
فأطعم الجائع واسق الظمآن

பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்!என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அடிமையை விடுவிப்பீராக! ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்போரை காப்பாற்றுவாயாக! அல்லது அகதிகளை ஆதரிப்பீராக! இவற்றைச் செய்திட உம்மால் இயலவில்லை எனில் பசித்தவருக்கு உணவளிப்பீராக! அல்லது தாகித்தவருக்கு தண்ணீர் வழங்குவீராக!என்று கூறினார்கள். (நூல்:இப்னு ஹிப்பான்) 

3.   மன்னிப்பு கிடைக்கும்

وعَنْ أَبِي هُرَيْرَةَ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :¬«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ إِذْ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، وَخَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ». فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟ فَقَالَ: «فِي كُلِّ ذِي كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»[البخاري ومسلم].

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குக் கடுமையாக தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி நீர் அருந்தினான். தாகம் தீர நீர் அருந்திய பின்னர் மேலே வந்தான். அங்கே நாயொன்று தாகத்தின் கொடுமையால் தரையை நக்கிக் கொண்டிருந்தது.

அப்போது அந்த மனிதன் நாம் எவ்வாறு தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தோமோ அவ்வாறு தானே இந்த நாயும் தாகத்தால் துடித்துக் கொண்டிருக்கின்றதுஎன்று தன் மனதினுள் எண்ணினான்.

உடனே, கிணற்றுக்குள் இறங்கி தனது காலுறைக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வெளியே வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனது இந்தச் செயலை மிகவும் மதித்தான். அதன் விளைவாக அவனது பாவங்களை மன்னித்தான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! பிராணிகளுக்குச் சேவை செய்தாலும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் ஈரமான ஈரலுடைய எந்த ஒன்றுக்கும் அதாவது எந்த ஓர் உயிர் பிராணிக்கும் சேவை செய்தாலும் நன்மை கிடைக்கும் என்று பதில் கூறினார்கள்.                                        ( நூல்: புகாரி )

4.   நோய் நிவாரணம் கிடைக்கும்..
جاء في ( سير أعلام النبلاء ، 8 / 407 )
أن رجلاً سأل عبد الله بن المبارك عن قرحة خرجت في ركبته منذ سبع سنين وقد عالجها بأنواع العلاج ....

 فقال له ابن المبارك :( اذهب واحفر بئراً في مكان يحتاج الناس فيه إلى الماء فإني أرجو أن تنبع هناك عين )
ففعل الرجل ذلك فشفاه الله تعالى.

இப்னு ஷகீக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: ஹதீஸ் கலை வல்லுனர் இப்னுல் முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒருவர், தாம் சுமார் ஏழு ஆண்டுகளாக கால் மூட்டில் ஏற்பட்ட புண்ணால் உண்டான காயத்தால் அவதிப்பட்டு வருவதாகவும், பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டும் இன்னும் குணமாகவில்லை என்று முறையிட்டார்.

அதற்கு, இப்னுல் முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்மக்களின் தாகம் தீர்க்க, தண்ணீர் தேவை அதிகம் இருக்கிற மக்களுக்கு நீரையோ, நீரூற்றையோ, கிணறையோ ஏற்படுத்துவீராக! உம் நோய் விரைவில் குணமாகும்என்றார்கள். அது போன்றே அவரும் செய்தார் அல்லாஹ்வின் அருளால் குணமும் பெற்றார்.                                                        ( நூல்: பைஹகீ )

جاء في ( صحيح الترغيب والترهيب ، 964 ) أصابت الامام الحاكم قرحة في وجهه ، قريباً من سنة ، فتصدق على المسلمين بوضع سقاية على باب داره ..

١٣- فشرب منها الناس، فما مر عليه أسبوع إلا وظهر الشفاء وعاد وجهه أحسن ما كان.

இமாம் ஹாக்கிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டு புண்ணாக மாறி அவர்களின் முகத்தையே அலங்கோலமாக மாற்றியது. சுமார் ஓராண்டு காலமாக இந்நிலை நீடிக்கவே, இமாமவர்கள் தங்கள் வீட்டு வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்த்தார்கள். ஒரு வாரத்திலேயே பூரண குணம் அடைந்து, முன்பை விட முகப்பொலிவையும் அடைந்தார்கள்.                                     ( நூல்: அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் )

தமிழக அமைச்சர் எஸ். பி வேலுமணி அவர்கள்சென்னை நகர மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் நெருக்கடியான நிலை ஏற்படும் போது வெளிமாவட்டங்களில் இருந்து இரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதுஎன்று கூறியுள்ளார். ( நன்றி: தினத்தந்தி, 19/06/19 )

இது போன்ற திட்டங்களுக்கு முஸ்லிம் சமூகம் பொருளாதார உதவிகளை வழங்கலாம்.

அல்லது தண்ணீர் அதிகம் தேவை இருக்கிற குறிப்பிட்ட பகுதிகளை, கிராமங்களை, அல்லது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், நூலகங்கள் என தத்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி தண்ணீர் தர்மம் வழங்கலாம்.

இது போன்ற சேவைகள் மூலம் நிறைவான நன்மைகளைப் பெற்று, இந்த உலகிலும், மண்ணறையிலும், மறுமையிலும் இறைவனின் தனிப் பெரும் கருணையை அடையலாம்.

இந்த அரிய சேவைகளின் மூலம் பிற சமூக மக்களின் இதயங்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட, ஹிதாயத் பெற காரணமாக அமையும்.

நிறைவாக,

ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்பாகவும் இறைவன் கூறும் இந்த சிந்தனையை பாடமாக, படிப்பினையாகப் பெறுவோம்.

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَى طَعَامِهِ (24) أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا (25) ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا (26) فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا (27) وَعِنَبًا وَقَضْبًا (28) وَزَيْتُونًا وَنَخْلًا (29) وَحَدَائِقَ غُلْبًا (30) وَفَاكِهَةً وَأَبًّا (31) مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ (32)

மனிதன் தன் உணவின் பக்கம் நோட்டமிட்டு சிந்தித்து பார்க்கட்டும்! நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம். பின்னர் வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம். பிறகு, அதில் தானியங்களையும், திராட்சைகளையும், காய்கறிகளையும், ஆலிவ் மற்றும் பேரீச்ச மரங்களையும், அடர்ந்த தோட்டங்களையும், விதவிதமான கனிகளையும், புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரம் ஆகும் பொருட்டாக!”.                                           ( அல்குர்ஆன்: 80: 24 – 32 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தண்ணீர் தேவைகளை நிறைவேற்ற மழையை இறக்கி மகத்தான உதவியை செய்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!