Wednesday 15 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 12 ரிஸ்க் (வாழ்வாதாரம்) எனும் இன்றியமையாத அருட்கொடை!!!


ரமழான் சிந்தனை, தொடர் – 12
ரிஸ்க் (வாழ்வாதாரம்) எனும் இன்றியமையாத அருட்கொடை!!!



பதினொன்றாம் நோன்பை நிறைவு செய்து, 12 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் இஸ்ராஃ, அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு, அல் கஹ்ஃப்  அத்தியாயத்தின் பெரும் பகுதி ஓதப்பட்டிருக்கின்றது.

இரண்டு அத்தியாயங்களிலும் பல இடங்களில் மனித குலத்திற்கு தேவையான அற்புதமான வழிகாட்டல்கள், இம்மை, மறுமை சார்ந்த பல்வேறு கட்டளைகள் என அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேசுவான்.

 அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் 46 –ஆவது இறை வசனத்தில் அல்லாஹ் வாழ்வாதாரத்தில் ஒரு பகுதியான பொருளாதாரம் குறித்தும் வாழ்வாதாரத்தின் இன்னொரு பகுதியான மழலைச் செல்வங்கள் குறித்தும் பேசுகின்றான்.

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا

“பொருளாதாரமும், மழலைச் செல்வங்களும் உலக வாழ்க்கையின் அழகிய அலங்காரமே!”.                                             ( அல்குர்ஆன்: 18: 46 )

வாழ்வாதாரத்தில் ஒரு பகுதியான பொருளாதாரம் என்பது அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கிய இன்றியமையாத அருட்கொடை என்பதையும் பறைசாற்றும் விதமாக அமைந்திருப்பதை உணர முடிகின்றது.

வாழ்வாதாரம் குறித்தான கண்ணோட்டம்

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا شُعْبَةُ أَنْبَأَنِى سُلَيْمَانُ الأَعْمَشُ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ « إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِى بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ، ثُمَّ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعٍ بِرِزْقِهِ ، وَأَجَلِهِ ، وَشَقِىٌّ ، أَوْ سَعِيدٌ ،

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் கருவாக உருவாக்கம் பெறுகின்றார். பிறகு அதைப் போன்றே நாற்பது நாட்கள் கரு ஒரு கட்டியாக மாற்றம் பெறுகின்றார். பிறகு, அதைப் போன்றே நாற்பது நாட்களில் ஒரு சதைப் பிண்டமாக மாற்றம் பெறுகின்றார்.

பிறகு, கருவறையினுள் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகின்றார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், ஆயுட்காலம், அவன் துர்பாக்கியசாலியா? அல்லது நற்பாக்கியசாலியா? ஆகியவைகளை அவர் எழுதுகின்றார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்….. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:


حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِى بَكْرِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « وَكَّلَ اللَّهُ بِالرَّحِمِ مَلَكًا فَيَقُولُ أَىْ رَبِّ نُطْفَةٌ ، أَىْ رَبِّ عَلَقَةٌ ، أَىْ رَبِّ مُضْغَةٌ . فَإِذَا أَرَادَ اللَّهُ أَنْ يَقْضِىَ خَلْقَهَا قَالَ أَىْ رَبِّ ذَكَرٌ أَمْ أُنْثَى أَشَقِىٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ فَمَا الأَجَلُ فَيُكْتَبُ كَذَلِكَ فِى بَطْنِ أُمِّهِ » .

அல்லாஹ், தாயின் கருவறையில் ஒரு வானவரை நியமிக்கின்றான். அவர்இறைவா! இது ஒரு துளி விந்து. இறைவா! இது பற்றித் தொங்கும் கருக்கட்டி, இறைவா! இது சதைத்துண்டுஎன்று கூறிக்கொண்டிருப்பார்.

அதன் படைப்பை அல்லாஹ் முழுமையாக்கிட விரும்பும் போதுஇறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? இது துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? இதன் வாழ்வாதாரம் எவ்வளவு? இதன் ஆயுள் எவ்வளவு?” என்று வானவர் கேட்பார்.

அவ்வாறே இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு அது தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எழுதப்படுகிறதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                         ( நூல்: புகாரி, கிதாபுல் கத்ர் )

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ ()
வாழ்வாதாரம் - ரிஸ்க் வழங்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும், அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளன”.                                                    ( அல்குர்ஆன்: 11: 6 )

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ ()

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க்வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடியவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும், இவர்கள் உலக வாழ்வில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மன நிறைவு அடைகின்றார்கள். ஆனால், மறுமையைக் கவனிக்கும் போது இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை”. ( அல்குர்ஆன்: 13: 26 )

إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ ()

திண்ணமாக, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் வாழ்வாதாரத்தை கணக்கின்றி வழங்குகின்றான்”.                                ( அல்குர்ஆன்: 3: 37 )

وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ

மேலும், (சிந்தித்துப் பாருங்கள்!) அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரை விட ரிஸ்க்வாழ்வாதாரத்தில் சிறப்பு அளித்துள்ளான்”. ( அல்குர்ஆன்: 16:71 )

وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَا يَشَاءُ إِنَّهُ بِعِبَادِهِ خَبِيرٌ بَصِيرٌ ()

அல்லாஹ் தன் அடிமைகள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் போக்கை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே, அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் குறித்து நன்கு தெரிந்தவனாகவும், அவர்களைக் கண்காணிப்ப்வனாகவும் இருக்கின்றான்”.
                                                      ( அல்குர்ஆன்: 42: 25 )

ஒரு மனிதனை அவன் உயிரோடு இருக்கும் போதும், இறந்தபின்னரும் சமூகத்திற்கு சிறந்தவனாய், நல்லவனாய் அடையாளப்படுத்திக் காட்டுவது இந்தப் பொருளாதாரம்.

ஒரு மனிதர் நபிகளாரின் வையில் வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! இரு தந்தையர்களில் யார் சிறந்தவர்? ஒருவர் மார்க்க விழுமியங்களோடு வாழ்கிறார், அத்தோடு தமது சந்ததியினருக்கு விசாலமான பொருளாதாரத்தை விட்டுச் செல்கிறார்.

இன்னொருவர், மார்க்க விழுமியத்தோடு வாழ்கிறார். ஆனால் தமது சந்ததியினருக்கு தேவையான அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்தாமல் செல்கிறார்.

இருவரில் முதலாமவரே சிறந்த தந்தை என மாநபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மரண தருவாயில் இருக்கும் போது நபிகள் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களைச் சந்திக்க சென்றார்கள். தமது பொருளாதாரத்தை முழுவதுமாக அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிப்பு செய்யத்தாம் தயாராக இருப்பதாகச் சொன்னபோது,
     
வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிப்புச் செய்வீராக. ஏனெனில், உம்முடைய மக்களை சந்ததியை பிற மக்களிடம் யாசிப்பவர்களாக விட்டுச் செல்வதை விட, அவர்களை பிற மக்களிடம் தேவையற்றவர்களாக செல்வந்தர்களாக விட்டிச் செல்வது தான் மிகச் சிறந்த அறச் செயலாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  ( நூல்: புகாரி )

இஸ்லாத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் முக்கியப் பங்கும் பெரும்பங்கும் வகிப்பது பொருளாதாரம் தான். உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுவார்களாம்
     
எங்களின் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களின் தலைவர்களை - பிலால், அம்மார், கப்பாப் போன்றவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுத்தார்கள்

இவ்வகையிலும் இன்னும் பல வகையிலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் 80,000 தீனார்களை இஸ்லாத்திற்காக வாரி வழங்கினார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்களின் கணக்கிலடங்கா செல்வங்களும், சொத்துக்களும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது.
ஹிஜ்ரத் செய்து வந்த பின்னர்,

உஸ்மான் (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஆகிய இரு செல்வந்தர்களின் பொருளாதாரமும்கணக்கில்லாமல் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், இது அவர்கள் வாழும் காலங்களில் தொடர்ந்ததை வரலாற்றில் நிரம்பவே காண முடிகிறது.
     
நபி (ஸல்) அவர்களின் வஃபாத்திற்குப்பிறகு நான்கு கலீஃபாக்களும், ஹிஜ்ரி 100ல் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களும் வேறு சில ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக தமது பொருளாதாரத்தை தாராளாமாக அற்பணித்ததை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.

பொருளாதாரம் என்பது மார்க்கத்திற்கும், ஏழைகளுக்கும், எளியோர்களுக்கும், சமூகத்திற்கும் தொண்டு செய்வதற்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற அற்புதமான துணைச் சாதனமாகும்.

பொருளாதாரம் இருந்தால் தான் ஜகாத் கொடுக்க முடியும், ஹஜ், உம்ராக்கள் செய்ய முடியும், தான தர்மங்கள் செய்ய முடியும்.


உஸ்மான் தின் நூரைன், உஸ்மானில் கனீ என்றழைக்கப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்களின் சமூகத்தொண்டு அளப்பரியது.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. அருகிலிருக்கும் ஒரு யூதனின் பிஃர-ரூமா எனும் கிணற்றிலிருந்து தான் முஸ்லிம்கள் ஒரு முத்து விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் பெற்றுக் கொண்டிருந்தனர்.

في صحيح البخاري قَالَ عُثْمَانُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَشْتَرِي بِئْرَ رُومَةَ فَيَكُونُ دَلْوُهُ فِيهَا كَدِلَاءِ الْمُسْلِمِينَ فَاشْتَرَاهَا عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ)
وفي صحيح البخاري بَاب مَنَاقِبِ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَبِي عَمْرٍو الْقُرَشِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَحْفِرْ بِئْرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ فَحَفَرَهَا عُثْمَانُ

விலையில்லாமல் அந்த தண்ணிரை மக்களுக்கு யாராவது பெற்றுத் தர மாட்டார்களா? என நபி (ஸல்) தமது விருப்பத்தை தெரிவித்தபோது, ஹல்ரத் உஸ்மான் (ரலி) 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்றுத்தந்தார்கள்.

மீண்டும் நெருக்கடி ஏற்படவே மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் விலைக்கு வாங்கி மதினமாநகர் முழுவதுமுள்ள மக்களெல்லாம் பயன்பெறுமளவுக்கு அதை அர்ப்பணித்தார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கத்தில் சாரை சாரையாய் மக்கள் இணைந்து கொண்டிருந்த தருணம், மஸ்ஜித் நவபி நெருக்கடியில் திக்குமுக்காடியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகிலிருக்கும் இடத்தை யாராவது பெற்றுத்தந்தால் மஸ்ஜித் நவபீயை இன்னும் விஸ்தரித்து இடநெருக்கடியை குறைத்து கொள்ளலாமே?என தமது விருப்பத்தை வெளிப்படுத்திய போதும் உஸ்மான் (ரலி) அவர்களே15,000 தீனார் கொடுத்து மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருந்த இடத்தை வாங்கி அர்ப்பணித்தார்கள்.

மாபெறும் வெற்றியான ஃபத்ஹ்-மக்காவிற்குப்பின் இஸ்லாமிய எழுச்சி ஹரம் ஷரீஃபிலும் எதிரொலித்தது! ஆம் அங்கும் இட நெருக்கடி 10,000 தீனார் விலை கொடுத்து அருகே இருந்த இடத்தை வாங்கி (விஸ்தரிக்க) அற்பணித்தார்கள்.

முஸ்லிம்களின் தேவைகள் அதிகமான போதெல்லாம் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு முறையும் உஸ்மான் (ரலி) அவர்கள் இறை திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமது செல்வத்தின் மூலம் பல சமூக சேவைகள் புரிந்துள்ளார்கள்.                   ( நூல்: குலஃபாவுர்ரஸுல் (ஸல்) பக்கம் 185, 186 )


وذكر أهل التاريخ أنه في عهد الخليفة أبي بكر الصديق - رضي الله عنه - أصاب الناس جفاف وجوع شديدان، فلمّا ضاق بهم الأمر ذهبوا إلى الخليفة أبي بكر - رضي الله عنه - وقالوا: يا خليفة رسول الله، إنّ السّماء لم تمطر، والأرض لم تنبت، وقد أدرك الناس الهلاك فماذا نفعل؟ قال أبو بكر - رضي الله عنه -: انصرفوا، واصبروا، فإني أرجو ألاّ يأتي المساء حتّى يفرج الله عنكم. وفي آخر النهار جاء الخبر بأنّ قافلة جمالٍ لعثمان بن عفّان - رضي الله عنه - قد أتت من الشّام إلى المدينة. فلمّا وصلت خرج النّاس يستقبلونها، فإذا هي ألف جمل محملة سمناً وزيتاً ودقيقاً، وتوقّفت عند باب عثمان - رضي الله عنه - فلمّا أنزلت أحمالها في داره جاء التجار. قال لهم عثمان - رضي الله عنه - ماذا تريدون؟ أجاب التجار: إنّك تعلم ما نريد، بعنا من هذا الذي وصل إليك فإنّك تعرف حاجة النّاس إليه. قال عثمان: كم أربح على الثّمن الذي اشتريت به؟ قالوا: الدّرهم درهمين. قال: أعطاني غيركم زيادة على هذا. قالوا: أربعة! قال عثمان - رضي الله عنه -: أعطاني غيركم أكثر. قال التّجار: نربحك خمسة. قال عثمان: أعطاني غيركم أكثر. فقالوا: ليس في المدينة تجار غيرنا، ولم يسبقنا أحد إليك، فمن الذي أعطاك أكثر مما أعطينا؟! قال عثمان - رضي الله عنه -:إن الله قد أعطاني بكل درهم عشرة، الحسنة بعشرة أمثالها، فهل عندكم زيادة؟ قالوا: لا. قال عثمان: فإني أشهد الله أني جعلت ما جاءت به هذه الجمال صدقة للمساكين وفقراء المسلمين. ثم أخذ عثمان بن عفان يوزّع بضاعته، فما بقي من فقراء المدينة واحد إلاّ أخذ ما يكفيه ويكفي أهله.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், பஞ்சம் எனும் பேரிடர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடும் பஞ்சத்தால் மக்கள் உண்ண உண்வின்றி, குடிக்க நீரின்றி கடும் சோதனைக்கு உள்ளாகினர். அனுதினமும் ஆட்சியாளரின் வீட்டு வாசலின் முன்பாக ஆயிரமாயிரம் மக்கள் வருவதும், போவதுமாக தங்களின் சிரமங்களை முறையிட்டவர்களாக இருந்ததை தவிர்க்க முடியவில்லை.

அல்லாஹ்வால் எங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஆட்சியாளரே! வானம் பொய்த்து விட்டது! பூமி மலடாகி காய்ந்து விட்டது! நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் என்ன செய்வது?” என்று கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி கேட்டனர்.

கண்ணீர் மல்க, கலீஃபா அபூபக்ர் (ரலி) கூறினார்கள் மக்களே! உங்களின் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்! பொறுமை காத்திடுங்கள்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களின் கஷ்டங்களை எல்லாம் மிக விரைவில் நீக்கி, சுகத்தோடு வாழ வைப்பான்என ஆதரவு வைக்கின்றேன்என்று.

இப்படியாக நாட்கள் பல உருண்டோடியது. திடீரென ஒரு நாள் மதீனா நகரெங்கும் புளுதிப் படலம், மக்கள் என்னவோ ஏதோவென்று பதறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி மதீனாவின் முக்கிய வீதியில் ஒன்று கூடி தூரத்தில் தெரிந்த புளுதி கொஞ்சம், கொஞ்சமாக மதீனா நகரை நெருங்கி வருவது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

இப்போது புளுதி சிறிது விலகி ஓர் ஒட்டகக் கூட்டம் தங்களின் அருகே வருவதை உணர்ந்தனர்.

அவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அந்த ஒட்டகக் கூட்டத்தினரைக் கண்டு

ஆம்! அந்த ஒட்டகக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்களின் வியாபாரக் கூட்டம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஷாமுக்கு சென்றிருந்த வியாபாரக் கூட்டம். பெருமளவு தானியங்களோடும், ஜைத்தூன் எண்ணெய் பீப்பாய்களோடும், கொழுப்புகளோடும் ஆயிரம் ஒட்டகைகளில் வந்து உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக நின்றது.

வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக் கூட கூறுவார்கள் முதல் ஒட்டகம் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன் நின்றது என்றால் ஆயிரமாவது கடைசி ஒட்டகம் ஷாமின் எல்லையில் நின்றதுஎன்று.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மதீனா மற்றும் அதன் சுற்று வட்டார வியாபாரிகள் அனைவரும் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக கூடிவிட்டனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் வியாபாரிகளின் முற்றுகையையும், மக்களின் முகத்தில் தெரிந்த சோக ரேகைகளின் பிண்ணனியையும் ஒரே நேரத்தில் புரிந்து கொண்டார்கள்.

ஏனெனில், வருகிற வழியிலேயே மதீனாவில் நிகழ்கிற பேரிடர், அதனால் ஏற்பட்டிருக்கிற பசி, பஞ்சம் ஆகியவற்றைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள்.

உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளின் சார்பாக ஒருவர் முன் வந்து மக்களின் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே, மொத்த சரக்குகளையும் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளாகிய எங்களிடமே நீங்கள் விலைக்கு தர வேண்டும். வெளியூர் வியாபாரிகளுக்கு நீங்கள் விற்பனை செய்யக் கூடாதுஎன்று கோரிக்கை வைத்தார்.

அது கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள்என்னிடம் இருந்து நீங்கள் வாங்கும் பொருளுக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு, வியாபாரிகள் ஒரு திர்ஹம் மதிப்புள்ள பொருளுக்கு இரண்டு திர்ஹம்கள் தருகின்றோம்என்றார்கள். அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்என்று கூறினார்கள்.

அதற்கு, வியாபாரிகள் இரண்டுக்கு மூன்று திர்ஹம்என்றார்கள். அதற்கு  , உஸ்மான் (ரலி) அவர்கள் வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்என்று கூறினார்கள்.

அதற்கு, வியாபாரிகள் மூன்றுக்கு நான்கு திர்ஹம்என்றார்கள். அப்போதும் முன்பு போன்றே உஸ்மான் (ரலி) அவர்கள் கூற, இப்போது வியாபாரிகள் கடைசியாக நான்குக்கு ஐந்து திர்ஹம் தருகின்றோம்என்றார்கள்.

அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள்வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட வியாபாரிகள்எங்களுக்குத் தெரிந்து உள்ளூரின், சுற்றுபுறத்தின் அனைத்து வியாபாரிகளும் இங்கே தான் குழுமியிருக்கின்றோம். அத்தோடு இதுவரை உங்களிடம் தான் நாங்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருக்கின்றோம், எங்களை விட கூடுதல் விலைக்கு, கூடுதல் லாபத்திற்கு வியாபாரம் பேசிய அந்த வியாபாரி யார்? இப்பொழுதே எங்களுக்குத் தெரிய வேண்டும்? என்று கேட்டனர்.

அது கேட்ட உஸ்மான் (ரலி) அப்படியே மௌனித்து நிற்கின்றார்கள். மக்கள் ஏக்கத்தோடு நிற்கின்றார்கள். வியாபாரிகள் புருவத்தை உயர்த்தி யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் நான் வியாபாரம் பேசியுள்ளேன்அவன் தான் உங்களை விட அதிக விலைக்கு, லாபத்திற்கு வியாபாரம் பேசிய வியாபாரியாவான்என்று கூறி மௌனத்தைக் கலைத்தார்கள்.

அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் பத்து திர்ஹம் தருவதாக திருக் குர்ஆன் மூலம் வாக்களித்திருக்கின்றான். எவர் அழகிய ஒன்றை நம்மிடம் கொண்டு வருகின்றாரோ அது போன்று அவருக்கு பத்து நன்மைகளை வழங்குவோம்அல்அன்ஆம் அத்தியாயத்தின் 160 –ஆவது வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இதை விட கூடுதலாக நீங்கள் யாரும் தருவீர்களா? இறைவனை விட கூடுதலாக வழங்க யாருக்குத் தான் இயலும்? என்று கேட்டார்கள்.

அதற்கு, வியாபாரிகள் எங்களால் ஒருபோதும் அப்படித் தர இயலாதுஎன்று கூறினார்கள்.

அப்போது, உஸ்மான் (ரலி) அவர்கள் என் ஒட்டகைகள் ஆயிரமும் சுமந்து வந்த அத்துனை பொருட்களையும் வறட்சியாலும், பசி பஞ்சத்தாலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிற இந்த மக்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்குகின்றேன்! அல்லாஹ்வே இதற்கு உன்னையே சாட்சியாகவும் ஆக்குகின்றேன்என்று கூறினார்கள்.

மதீனாவில் இருக்கிற எல்லா குடும்பத்தினர்களும் அவரவர்களின் தேவைக்கு ஏற்ப அதில் இருந்து எடுத்துக் கொண்டார்கள். இறுதியில் எதுவும் மிஞ்சவில்லை”.
 
 ( நூல்: ஃபிக்ஹுத் தாஜிருல் முஸ்லிம் )

ரிஸ்க்வாழ்வாதாரத்தை அதிகமாக்கும் இபாதத்களும், நற்பண்புகளும்..

1. இஸ்திஃக்ஃபாரும், தவ்பாவும் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்..

قال الله تعالى: فَقُلْتُ ٱسْتَغْفِرُواْ رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً يُرْسِلِ ٱلسَّمَاء عَلَيْكُمْ مُّدْرَاراً وَيُمْدِدْكُمْ بِأَمْوٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَاراً

அல்லாஹ்விடம் இறைத்தூதர் நூஹ் (அலை) பிரார்த்திக்கும் போது, “நான் ( என் சமூக மக்களிடம் ) அவர்களிடம் கூறினேன்: உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்களுக்காக மழையை பொழியச் செய்வான், செல்வத்தையும், சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களையும் உருவாக்குவான், உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”.               ( அல்குர்ஆன்: 71: 10-12 )

قال القرطبي رحمه الله: "هذه الآية دليل على أن الاستغفار يُستنزل به الرزق والأمطار"، وقال ابن كثير رحمه الله: "أي إذا تبتم واستغفرتموه وأطعتموه كثر الرزق عليكم".

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற முஃபஸ்ஸிரீன்களான இமாம்கள் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும், குர்துபீ (ரஹ்) அவர்களும் இந்த ஆயத்தில் அல்லாஹ் இஸ்திஃக்ஃபார், தவ்பாவின் மூலமாக ஓர் அடியானின் ரிஸ்க் வாழ்வாதாரம் விஸ்தீரணமாகும் என்று வாக்குறுதி தருகின்றான்என்று கூறுகின்றார்கள்.

جاء رجل إلى الحسن فشكا إليه الجَدْب، فقال: استغفر الله، وجاء آخر فشكا الفقر، فقال له: استغفر الله، وجاء آخر فقال: ادع الله أن يرزقني ولداً، فقال: استغفر الله، فقال أصحاب الحسن: سألوك مسائل شتى وأجبتهم بجواب واحد وهو الاستغفار، فقال رحمه الله: ما قلت من عندي شيئاً، إن الله يقول: فَقُلْتُ ٱسْتَغْفِرُواْ رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً يُرْسِلِ ٱلسَّمَاء عَلَيْكُمْ مُّدْرَاراً  وَيُمْدِدْكُمْ بِأَمْوٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَاراً .

இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து தாம் பஞ்சத்தில் வாடுவதாக முறையிட்டார். அதற்கு இமாமவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! பஞ்சம் தீரும் என்றார்கள். இன்னொருவர் வந்து தாம் ஏழ்மையில் இருப்பதாக முறையிட்டார். அவரிடமும் இமாமவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! ஏழ்மை நீங்கும் என்றார்கள். இன்னொருவர் வந்து எனக்கு குழந்தை பாக்கியம் இல்லைஎன்று முறையிட்டார். அவரிடமும் இமாமவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! குழந்தை பாக்கியம் கிடைக்கும்!என்றார்கள்.

அருகிலிருந்த இமாம் ஹஸன் (ரஹ்) அவர்களின் மாணவர் வெவ்வேறான மூன்று நபர்கள், வெவ்வேறான மூன்று கோரிக்கைகளை முறையிட்ட போதும் அவர்களுக்கான தீர்வாக ஒரே விஷயத்தைக் கூறினீர்களே? எப்படி?” என்று கேட்டார்.

அதற்கு, இமாமவர்கள்  நான் ஒன்றும் சுயமாக கூறவில்லை, அல்லாஹ் கூறியதைத்தான் நான் கூறினேன் என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

2. வலுவான இறைநம்பிக்கை வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்….

روى الإمام أحمد والترمذي وغيره، بسند صحيح قول النبي
لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير، تغدو خماصاً وتروح بطاناً

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது எப்படி தவக்குல்நம்பிக்கை வைக்க வேண்டுமோ, அத்தகைய உண்மையான நம்பிக்கையை வைப்பீர்களாயின் அவன் உங்களுக்கு பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உணவளிப்பான்.

பறவைகள் கூட்டை விட்டு காலியான வயிறோடு சென்று, கூட்டுக்குத் திரும்பும் போது வயிறு நிரம்பியவாறு திரும்புகின்றது”.    ( நூல்: அஹ்மது, திர்மிதீ )

3. இபாதத்தைக் கொண்டு மனநிறைவு பெறுதல் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

أخرج الترمذي وابن ماجه وابن حبان بسند صحيح عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن الله يقول: يا ابن آدم تفرَّغ لعبادتي أملأ صدرك غنى، وأَسُد فقرك، وإن لا تفعل ملأت يديك شغلاً، ولم أَسُد فقرك)).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓ ஆதமின் மகனே! என் இபாதத்தைக் கொண்டு உன் காரியங்களை நீ நிறைவு செய்தால் உன் உள்ளத்தை செல்வத்தை தருவதன் மூலமாக நிரப்புவேன். உன் ஏழ்மையை விரட்டி விடுவேன். நீ அப்படிச் செய்யவில்லை என்றால், உன்னை நான் எப்போதும் ஏதாவது வேலையை செய்து கொண்டிருக்கும் படி செய்து விடுவேன். உன் ஏழ்மையை உன்னை விட்டும் நீக்கமாட்டேன்என்று அல்லாஹ் கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                             ( நூல்: இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், திர்மிதீ )


4. இரத்த உறவுகளை சேர்ந்து வாழ்வது வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحب أن يبسط له في رزقه ويُنْسَأ له في أثره، فليصل رحمه)) رواه البخاري. وفي رواية: ((من سره أن يُعظم الله رزقه وأن يمد في أجله فليصل رحمه)) رواه أحمد.

யார் தன் வாழ்வாதரம் விசாலமாகவேண்டும், தன் ஆயுள் நீண்டதாக அமைய வேண்டும் என விரும்புகின்றாரோ, அவர் இரத்த உறவுகளைச் சேர்ந்து வாழட்டும்என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.   ( நூல்: அஹ்மத், புகாரி )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் இரத்த உறவுகள் என்பது, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, தாய் வழிச் சொந்தம், தகப்பன் வழிச் சொந்தங்கள் ஆகியவைகளும் அடங்கும் என பொருள் தருகின்றனர்.

5. அடுத்து, அடுத்து செய்யும் உம்ராவும் ஹஜ்ஜும் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

عن ابن عباس رضي الله عنهما قال: قال صلى الله
عليه وسلم
 ((تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب، كما ينفي الكير خبث الحديد)) رواه النسائي وغيره بسند صحيح.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

உம்ராவையும் ஹஜ்ஜையும் இடைவெளி இன்றி தொடர்படியாகச் செய்யுங்கள்; ஏனெனில், அவைகள் வறுமையையும், பாவங்களையும் போக்கிவிடும். இரும்பின் துருவை நெருப்பு போக்கி விடுவதைப் போலஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                     ( நூல்: நஸாயீ )

6. அழகிய முறையில் செலவு செய்வது வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

قال الله تعالى: وَمَا أَنفَقْتُمْ مّن شَىْء فَهُوَ يُخْلِفُهُ وَهُوَ خَيْرُ ٱلرَّازِقِينَ سبأ:39. أنفقْ يا بلال ولا تخشَ من ذي العرش إقلالاً صححه الألباني. روى مسلم في صحيحه عن النبي
 يقول الله تعالى: يا ابن آدم أنفِقْ أُنفِقُ عليك

 நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பிலாலே! நீர் தாராளமாக செலவு செய்வீராக! அர்ஷின் அதிபதி உம் வாழ்வாதாரத்தை குறைத்து விடுவானோ என்கிற பயம் வேண்டாம்”.                   ( ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா லில் அல்பானீ )

அல்லாஹ் கூறுவதாக நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஓ ஆதமின் மகனே! நீ செலவு செய், உமக்கு செலவு செய்யப்படும்”.                  ( நூல்: முஸ்லிம் )

7. ஏழைகளுக்கு உதவுவது வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

((أبغوني في ضعفائكم فإنما ترزقون وتنصرون بضعفائكم)) رواه النسائي وأبو داود والترمذي.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ என்னைத் தேடுங்கள்! உங்களில் பலகீனமானவர்களோடு இருப்பதிலேயே நான் விரும்புகின்றேன்.  ஏனெனில், நீங்கள் உங்கள் பலகீனமானவர்களுக்கு உதவுவதின் மூலமாகத்தான் வாழ்வாதாரமும், உதவியும் பெறுகின்றீர்கள்”.                            ( நூல்: அபூதாவூத், நஸாயீ )

8. தொழுவதும், தொழ ஏழுவதும் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى ()

நபியே! உம்முடைய குடும்பத்தாரை தொழுமாறு ஏவுவீராக!, நீரும் அதில் நிலைத்திருப்பீராக! நாம் உம்மிடத்தில் வாழ்வாதாரத்தைக் கேட்பதில்லை. நாமே வாழ்வாதாரம் அளிக்கிறோம். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே.”

9. தர்மம் செய்வது வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

والنبي عليه الصلاة والسلام يقول اسْتمطِر والرزق بالصدقة

நீங்கள் வாழ்வாதாரத்தையும், மழையையும் தர்மம் செய்வது கொண்டு தேடிக்கொள்ளுங்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.      ( நூல்: தப்ரானீ )

10. பாவத்தை விடுவது வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

والنبي عليه الصلاة والسلام يقول قد يُحْرَمُ المرء بعض الرِّزْق بالمَعْصِيَة

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஓர் அடியான் செய்கிற சில பாவங்களால் அவனுடைய வாழ்வாதாரங்களின் விஸ்தீரணம் தடைபடுகின்றது”.

11. இறையச்சமும், ஈமானும் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தும்

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ

மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவண்ணம் வாழ்வாரேயானால், அவருக்கு சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழியை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் அவருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்குவான்”.                              (அல்குர்ஆன்: 65: 2,3 )

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ

மேலும், எந்த ஊர் மக்கள் ஈமான் கொண்டு, இறையச்சமுள்ள வாழ்க்கையை மேற்கொள்கின்றார்களோ அவர்களுக்காக வானம், பூமி ஆகியவற்றின் அருள் வளங்கள் அனைத்தையும் நாம் திறந்து விடுவோம்”.            ( அல்குர்ஆன்: 7: 96 )

ஆகவே, மேற்கூறிய இறைவசங்கள், நபிமொழிகள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவைகளின் துணை கொண்டு நாம் பொருளாதார மேம்பாட்டைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்வோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பொருளாதாரத்தை நிரப்பமாக வழங்கி, அவனுக்கு பிடித்தமான வழிகளில் செலவு செய்திடும் நற்பேற்றினை தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!