Thursday 16 January 2020

ஈமானிய வலிமையே ஈடேற்றம் தரும்!!!


ஈமானிய வலிமையே ஈடேற்றம் தரும்!!!



 மாற்றங்களை சந்திக்காத எந்தவொரு சமூகமும் இந்தப்பூமிப் பந்தில் வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.

மாற்றங்களால் தன் மரபுகளை, தன் இயல்புகளை இழந்த எந்தவொரு சமூகமும் இந்த நிலப்பரப்பில் நீடித்ததாய் வரலாறும் இல்லை.

அந்த வகையில் முஸ்லிம் சமூகம் இந்த உலகில் வாழத்துவங்கிய காலம் முதற்கொண்டு பல்வேறு மாற்றங்களை சந்தித்தும், எதிர் கொண்டும் வருகின்றது.

எல்லா காலத்திலும் அந்த மாற்றங்களை எதிர் கொள்ள தகுந்த ஆற்றலோடும், வலிமையோடும் வாழ்ந்ததை வரலாற்றின் வாசிப்பில் உணரவும் முடிகின்றது.

அந்த வகையில் நாம் வாழ்கிற இந்த தேசத்தில் சுதந்திர இந்தியாவுக்கு முன்பும் சுதந்திர இந்தியாவிற்கு பின்னிருந்து தற்போது வரையிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு மாற்றங்களை எதிர் கொண்டு வருகின்றது.

எனினும், கடந்த கால வரலாற்றுச் சிறப்பு மிக்க முஸ்லிம் சமூகம் போன்று எதிர் கொண்ட மாற்றங்களில் வெற்றி வாகை சூட முடிகின்றதா? என்றால் பதில் சொல்ல எதுவும் இல்லை என்கிற நிலையே தற்போது வரை நீடிக்கின்றது.

நாட்டு மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி கொள்கை மாறுபட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுடன் கைகோர்த்தும், கருத்து வேறுபாடுகளால் பிரிந்து போய் இருந்த சொந்த சமூகத்தின் அரசியல், இயக்க சகோதரர்களோடு ஒற்றுமையாய் ஓரணியில் ஒன்று திரண்டும் கடந்த ஒருமாத காலமாக போராட்ட களத்தில் நின்று அசராமல் போராடி வருகின்றது.

சர்வதேச அளவிலும், இந்திய தேச அளவிலும் பல்வேறு வடிவிலான பலத்த எதிர்ப்புகளை குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் கண்கூடாக கண்ட பிறகும் கூட மத்திய அரசு சட்டத்தை நடைமுறை படுத்தியே தீரும் என்பதில் மும்முரமாக இருப்பதை தொடர்ந்து அறிக்கைகளின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றது.

கடந்த ஒரு மாத காலமாக, 5 ஜும்ஆ உரைகளின் ஊடாக, உலமா சமூகத்தின் துணை கொண்டு சன்மார்க்கத்தின் வழிகாட்டுதலோடு வீரியத்தோடும், போர்க்குணத்தோடும் போராட்டக்களங்களில் கால் பதித்து வெற்றியை, இறை உதவியை எதிர் நோக்கி காத்து நிற்கும் முஸ்லிம் சமூகம் தற்போது அச்சமும் சோர்வும் சற்று தளர்வும் அடைந்திருக்கின்றது.

இந்த நேரத்தில் முஸ்லிம் சமூகத்தை உத்வேகப்படுத்துகிற பொறுப்பும், கடமையும் உம்மத்தின் வழிகாட்டிகளான உலமா சமூகத்திற்கு இருக்கிறது என்பதை உணர்ந்து இந்த வார ஜும்ஆ உரையின் வாயிலாக சில முக்கிய அம்சங்களை நினைவு படுத்துகின்றேன்.

1.   நிராசை அடைந்து விடக்கூடாது…

முதலில் இந்த உம்மத் அல்லாஹ்வின் அருளின் மீதும், கருணையின் மீதும் நிராசை அடைந்து விடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், நிராசை என்பது இறைநிராகரிப்பாளனின் பண்பாக இறைமறை எச்சரிக்கின்றது.

وَلَا تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ (87)

“அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும் மக்கள் தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள்”.

                                                      ( அல்குர்ஆன்: 12: 87 )

قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ

“ நபியே! நீர் கூறுவீராக! தங்களின் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடாதீர்கள்”.                                                ( அல்குர்ஆன்: 39: 53 )

இந்த அரசை கண்டித்து சட்டத்தை எதிர்த்து வேலைகளை விட்டு விட்டு, நேரங்களை விட்டு விட்டு பெருமளவில் செலவுகள் செய்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே ஆர்ப்பாட்டம், பேரணி, கண்டனம் என அலைந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நமக்கு ஏற்படும் நிராசையை அதன் துவக்கத்திலேயே நாம் கிள்ளி எறிந்திட வேண்டும்.

2.   அசைக்க முடியாத தவக்குல், அஞ்சா நெஞ்சம் வேண்டும்…

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

அல்லாஹ் கூறுகின்றான்:  (நபியே) நீர் அவர்களை அழைத்து அறிவித்து விடுவீராக! ”(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் எங்களை வந்து அணுகாது. அவன் தான் எங்களின் பாதுகாவலன். மேலும், இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருக்க வேண்டும்.”                        ( அல்குர்ஆன்: 39: 53 )

3.   பொறுமை வேண்டும்….

إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ (10)

“பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்”

                                                      ( அல்குர்ஆன்: 39: 10 )

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ».

சுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்பிற்குரியது! அவன் எந்த நிலையிலிருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான். இந்த நற்பேறு இறை நம்பிக்கையாளனைத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பதில்லை. அவன் வறுமை, நோய், துன்பம், சோதனை ஆகிய நிலைகளின் போது பொறுமையைக் கைகொள்கிறான். மகிழ்ச்சியான தருணங்களில், அவன் விரும்பியவை நடக்கிற போது இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாக அமைகின்றனஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                        ( நூல்: முஸ்லிம் )

4.   மனத்தூய்மையோடு பாவமன்னிப்பு தேட வேண்டும்…

وروي أنه لحق بني إسرائيل قحط على عهد موسى عليه السلام ، فاجتمع الناس إليه ، فقالوا : يا كليم الله ، ادع لنا ربك أن يسقينا الغيث ، فقام معهم ، وخرجوا إلى الصحراء وهم سبعون ألفا أو يزيدون ، فقال موسى عليه السلام : إلهي اسقنا غيثك ، وانشر علينا رحمتك ، وارحمنا بالأطفال الرضع ، والبهائم الرتع ، والمشايخ الركع ، فما زادت السماء إلا تقشعا ، والشمس إلا حرارة ، فقال موسى : إلهي إن كان قد خلق جاهي عندك ، فبجاه النبي الأمي محمد صلى الله عليه وسلم الذي تبعثه في آخر الزمان ، فأوحى الله إليه : ما خلق جاهك عندي ، وإنك عندي وجيه ، ولكن فيكم عبد يبارزني منذ أربعين سنة بالمعاصي، فناد في الناس حتى يخرج من بين أظهركم ، فبه منعتكم ، فقال موسى : إلهي وسيدي أنا عبد ضعيف ، وصوتي ضعيف ، فأين يبلغ وهم سبعون ألفا أو يزيدون ، فأوحى الله إليه منك النداء ، ومني البلاغ ، فقام مناديا ، وقال : يا أيها العبد العاصي الذي يبارز الله منذ أربعين سنة ، اخرج من بين أظهرنا ، فبك منعنا المطر ، فقام العبد العاصي ، فنظر ذات اليمين وذات الشمال ، فلم ير أحدا خرج ، فعلم أنه المطلوب ، فقال في نفسه : إن أنا خرجت من بين هذا الخلق افتضحت على رءوس بني إسرائيل ، وإن قعدت معهم منعوا لأجلي ، فأدخل رأسه في ثيابه نادما على فعاله ، وقال : إلهي وسيدي عصيتك أربعين سنة ، وأمهلتني وقد أتيتك طائعا ، فاقبلني فلم يستتم الكلام حتى ارتفعت سحابة بيضاء ، فأمطرت كأفواه القرب ، فقال موسى : إلهي وسيدي ، بماذا سقيتنا وما خرج من بين أظهرنا أحد ؟ فقال : يا موسى ، سقيتكم بالذي به منعتكم ، فقال موسى : إلهي أرني هذا العبد الطائع ؟ فقال : يا موسى ، إني لم أفضحه وهو يعصيني ، أأفضحه وهو يطيعني.

மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா (அலை) அவர்கள்.

ஆனால், துஆச் செய்து வெகு நேரமாகியும் துஆவிற்கான பதில் ரப்பிடமிருந்து வராததை உணர்ந்த மூஸா ( அலை ) அவர்கள் இறைவா! எப்பொழுதும் என் பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதிலளிக்கும் நீ இன்று ஏன் பதிலளிக்கவில்லைஎன்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் மூஸாவே! இங்கு கூடியிருக்கும் ஜனத்திரளில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக எனக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே நான் பதில் தரவில்லை. அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்! உங்கள் துஆவை ஏற்று உங்களுக்கு நான் மழை பொழிவிக்கிறேன்என்றான்.

உடனே, மூஸா (அலை) அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம்இங்கு கூடியிருக்கிற மக்களில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே அல்லாஹ் மழையைத் தராமல் தடுத்து வைத்திருக்கின்றான். ஆகவே, அவர் இங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்லவும். இல்லையெனில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுவோம்என்று கூறினார்கள்.

உடனே, கூட்டத்தில் இருந்த அந்த மனிதர் தன்னைத்தான் மூஸா (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். இங்கிருந்து இப்போது வெளியேறினால் தம்மை அடையாளம் கண்டு சமூக மக்கள் கேவலமாகக் கருதுவார்கள் என்று எண்ணிய அவர் தான் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதியைக் கொண்டு தன் தலைக்கு முக்காடிடுக் கொண்டு

அல்லாஹ்வே! இதோ இந்த இடத்தில் உன்னிடம் நான் ஒரு உறுதி மொழியைத் தருகின்றேன்! இனி எப்போதும் ஒரு கணமேனும் உனக்கு நான் மாறு செய்யமாட்டேன்! என் காரணத்தால் என் சமூக மக்களை நீ தண்டித்து விடாதே!என்று பிரார்த்தித்தார்.

அடுத்த நொடியில் மழை பொழியத்தொடங்கியது. மூஸா (அலை) அவர்களுக்கு ஆச்சர்யம் கூட்டத்தை விட்டு எவரும் வெளியேற வில்லை, ஆனால், மழை பொழிகிறது.

அல்லாஹ்விடம் கையேந்தினார் மூஸா (அலை) அவர்கள்.அல்லாஹ்வே! எவரும் தான் வெளியேற வில்லையே! பின் ஏன் மழையைப் பொழிவித்தாய்!”.

அதற்கு, அல்லாஹ் மூஸாவே! எந்த மனிதரின் காரணத்தால் நான் மழையைத் தடுத்து வைத்திருந்தேனோ, அவர் இப்போது மனம் திருந்தி என்னிடம் மன்னிப்புக் கோரிவிட்டார். அவரின் காரணத்தினாலேயே நான் இப்போது இந்த மழையை உங்களுக்கு தந்திருக்கின்றேன்என்று பதில் கூறினான்.

அப்போது, மூஸா (அலை) அவர்கள் அப்படியென்றால் நீ எனக்கு அவரை அடையாளம் காட்டுஎன்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ் மூஸாவே! 40 ஆண்டுகளாக எனக்கு மாறு செய்து கொண்டிருந்த போது அவரைப் பிறரிடம் காட்டிக்கொடுத்து அவமானப் படுத்தாத நான்.. தற்போது மனம் திருந்தி என் அருள் வாசலுக்கு வந்த பின்னரா பிறருக்கு நான் காட்டிக் கொடுப்பேன்என்று பதில் கூறினான்.                                                             ( நூல்: இப்னு கஸீர் )

5.   அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் நிலையாக இருக்க வேண்டும்…

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் இரண்டு வகையான சொல்லாடல்களை உபயோகப்படுத்துவான்.

ஒன்று “இன் குன்த்தும் ஸாதிக்கீன்” இன்னொன்று “இன் குன்த்தும் முஃமினீன்” இதில் முந்தைய சொல்லாடல் பெரும்பாலும் இறைமறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள், நயவஞ்சகர்கள் தொடர்பான செய்திகளின் நிறைவாக எச்சரிக்கை செய்யும் முகமாக அல்லாஹ் பயன்படுத்துவான்.

இரண்டாவது சொல்லாடலை 16 இடங்களில் இறைநம்பிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களின் நிறைவாக ஆறுதல் படுத்தும் முகமாக, வாக்களிக்கும் முகமாக சோபனம் சொல்லும் அமைப்பில் அல்லாஹ் பயன்படுத்துகின்றான்.

அந்த அடிப்படையில் பார்க்கும் போது வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியைச் சந்தித்த உஹதின் போராளிகளுக்கு உத்வேகமளிக்கும் முகமாக பின் வரும் வசனத்தில் அல்லாஹ் அந்த சொல்லாடலை பயன்படுத்தி இருப்பதை பார்க்க முடியும்.
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139)

“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்! நீங்கள் இறை நம்பிக்கையுடையோராக இருப்பின் நீங்களே (இந்த உலகில்) மேலோங்குவீர்கள்! வெற்றி பெறுவீர்கள்!”.                                        ( அல்குர்ஆன்: 3: 139 )

இந்த இறைவசனம் இறக்கியருளப்பட்ட சில மணித்துளிகளிலேயே அல்லாஹ் அவர்களின் ஈமானிய வலிமையை பரிசோதித்தான். உண்மையில் உஹத் போராளிகளின் ஈமான் பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேருண்மையை அல்லாஹ் உலகுக்கு பறைசாற்றினான்.

உஹதிலிருந்து முஸ்லிம் படைகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தது. இடையில் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் மீண்டும் படையை ஹம்ராவுல் அஸத் எனும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

ஹம்ராவுல் அஸத் என்பது மதீனாவிலிருந்து எட்டு மைல் தூரத்தில் இருந்த ஓர் இடமாகும்.

காரணம் இது தான், உஹதிலிருந்து அபூசுஃப்யான் தமது படையுடன் மக்கா திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது, ரவ்ஹா எனும் இடத்தை அடைந்ததும்நமக்கு முழுமையான வெற்றி வேண்டுமானால், (நஊது பில்லாஹ்..) முஹம்மது {ஸல்} அவர்களை ஏன் நாம் கொல்லக்கூடாது? வாருங்கள்! முஸ்லிம்களையும், நபி {ஸல்} அவர்களையும் பூண்டோடு அழித்து வருவோம்!” என்று கூறி மீண்டும் படையை நடத்தி வந்தார்.

அல்லாஹ் இந்தச் செய்தியை மாநபி {ஸல்} அவர்களுக்குத் தெரியப் படுத்தினான். ஆகவே தான் அண்ணலார் ஊர் திரும்பிய தமது படையை மீண்டும் இன்னொரு யுத்தகளம் நோக்கி அழைத்து வந்தார்கள்.

தூரத்தில் இருந்து ஒற்றர்களின் மூலம் நபிகளாரும், நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸதில் முகாமிட்டிருந்ததை தெரிந்து கொண்ட அபூசுஃப்யான் தமது படையை வாபஸ் வாங்கி மக்காவிற்கு அழைத்துச் சென்று விட்டார்.

மாநபி {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் மூன்று நாட்கள் அங்கே முகாமிட்டு பின்னர் நிம்மதியாக மதீனா திரும்பினார்கள்.

உஹத் தோல்விக்கு அடுத்த நாளில் இந்த சம்பவம் நடைபெறுகின்றது. தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்பதை அல்லாஹ் உணர்த்திய அடுத்த நாளே இன்னொரு போருக்கு தயாராகி, தங்களை இயல்பான நிலைக்கு கொண்டு வந்தனர் நபித்தோழர்கள்.

அல்லாஹ் இந்த அரிய செயலைப் பாராட்டி சோபனத்துடன் கூடிய மகத்தான கூலியுண்டு என்று இறை வசனத்தை இறக்கியருளி கௌரவித்தான்.

يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ () الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால் அவர்கள் (போரில்) தங்களுக்கு காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடைய அழைப்புக்கும், தூதருடைய அழைப்புக்கும் மறுமொழி பகர்ந்தார்கள்.

அவர்களில் யார் பாவங்களிலிருந்து விலகி, நற்செயல் புரிந்து வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அகமகிழ்வு தரும் மகத்தான கூலியுண்டு.”

இறை உதவி தாமதமாகுவதைப் பற்றி பெரிதாகப் பேசுகிற நாம் உடனடியாக அதிலிருந்து பாடம் பெற்று, சரிசெய்து, ஈமானை வலிமையான நிலைக்கு திருப்பும் இந்தப் பண்பைக் கொண்டோராக மாற வேண்டும்.

ஈமானிய வலிமையும்… அசாத்தியமான உதவிகளும்....
قال ابن كثير رحمه الله:
" روينا من طريق ابن لهيعة عن قيس بن الحجاج عمن حدثه قال : لما افتتحت مصر أتى أهلها عمرو بن العاص - حين دخل بؤونة من أشهر العجم – فقالوا : أيها الأمير ، لنيلنا هذا سنة لا يجري إلا بها . قال: وما ذاك ؟ قالوا: إذا كانت اثنتي عشرة ليلة خلت من هذا الشهر عمدنا إلى جارية بكر من أبويها ، فأرضينا أبويها وجعلنا عليها من الحلي والثياب أفضل ما يكون، ثم ألقيناها في هذا النيل .
فقال لهم عمرو : إن هذا مما لا يكون في الإسلام ، إن الإسلام يهدم ما قبله .
قال : فأقاموا بؤونة وأبيب ومسرى والنيل لا يجري قليلا ولا كثيرا ، حتى هموا بالجلاء ، فكتب عمرو إلى عمر بن الخطاب بذلك ، فكتب إليه : إنك قد أصبت بالذي فعلت ، وإني قد بعثت إليك بطاقة داخل كتابي ، فألقها في النيل .
فلما قدم كتابه أخذ عمرو البطاقة فإذا فيها " من عبد الله عمر أمير المؤمنين إلى نيل أهل مصر : أما بعد ، فإن كنت إنما تجري من قبلك ومن أمرك فلا تجر فلا حاجة لنا فيك ، وإن كنت إنما تجري بأمر الله الواحد القهار ، وهو الذي يجريك فنسأل الله تعالى أن يجريك "
قال : فألقى البطاقة في النيل ، فأصبحوا يوم السبت وقد أجرى الله النيل ستة عشر ذراعا في ليلة واحدة ، وقطع الله تلك السنة عن أهل مصر إلى اليوم " انتهى من "البداية والنهاية" (7 /114-115)
وهكذا رواه ابن عبد الحكم في "فتوح مصر" (ص165) واللالكائي في "شرح اعتقاد أهل السنة" (6/463) وابن عساكر في "تاريخ دمشق" (44 /336) وأبو الشيخ في "العظمة" (4/1424) من طريق ابن لهيعة به .

ஹிஜ்ரி 20-ல் முஸ்லிம்கள் எகிப்தைக் கைப்பற்றினர். அதன் கவர்னராக இருந்த அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் அங்குள்ள கிறஸ்தவத் தலைவர்கள் வந்தனர். ஒரு முக்கியப் பிரச்னையைக் கவர்னரிடம் கூறினர்.

எகிப்தின் பொருளாதாரம் பெருமளவு நைல் நதியைச் சார்ந்துள்ளது. நதியைத் திருப்திப் படுத்துவதற்காகவும், அதன் நீர் வற்றாமலிருக்கவும் அங்குள்ள மதச் சம்பிராதாயப்படி ஒவ்வொரு வருடமும் நைல் நதிக்கு ஒரு மனிதப் பலி கொடுக்கப்படும்.

ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஒரு கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பர். மணப்பெண் போல் அவளை அலங்கரிப்பர். அதன்பின் அவளை அந்த நதியில் வீசி எறிந்து விடுவர். இப்படிச் செய்யவில்லையெனில், அந்த நதி வற்றிக் காய்ந்து விடும் என்று கவர்னரிடம் அந்தக் கிறிஸ்தவக் குழுவினர் கூறினர்.

கவர்னர் அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக மறுமொழி பகிர்ந்தார்கள்: இந்த மூடப்பழக்கப் பலியை நீங்கள் விட்டு விட வேண்டும். நான் ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டேன்!

ஏமாற்றத்தோடு அந்தக் கிறிஸ்தவர்கள் திரும்பினர். நாட்கள், வாரங்கள், மாதங்கள் கழிந்தன! நைல் நதியின் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வந்தது. ஆனாலும் அந்தப் புதிய ஆட்சியாளர்கள் மனிதர்களைப் பலியிடும் அந்தக் கொடூரப் பழக்கத்தை அனுமதிக்கவில்லை.

நைல் நதியைத் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக நம்பி வாழ்பவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிலர் பிழைப்புக்காக அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்தனர்.

கவர்னர் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் இதனால் சற்றே கலக்கமுற்றார்கள். இதனை விவரித்து அன்றைய கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு மடல் வரைந்து அனுப்பினார்கள்.

நீங்கள் சரியானதையே செய்துள்ளீர்கள்!என்று கலீஃபாவிடமிருந்து பதில் வந்தது. இஸ்லாம் அறியாமையால் செய்யப்படும் சடங்குகளை அழிக்கவே இவ்வுலகில் முகிழ்த்தது. நான் இத்துடன் ஒரு குறிப்பை அனுப்புகிறேன். அதனை நைல் நதியில் போட்டு விடவும்என்று கலீஃபா அவர்கள் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.

நைல் நதிக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமே அந்தக் குறிப்பு. அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது: உமரிடமிருந்து எகிப்தின் நைல் நதிக்கு. நீ உனது சொந்த முயற்சியில் ஓடிக் கொண்டிருந்தால், இப்பொழுதே நீ ஓடுவதை நிறுத்தி விடு. ஆனால் அது தனியோன், தம்பிரான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து என்றால் நாங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்வோம்: யா அல்லாஹ்! நீ இந்த நதியை ஒலித்தோடச் செய்வாயாக!’’

அந்தக் கடிதத்தை அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி) அவர்கள் நைல் நதியில் போட்டார்கள். என்னே ஆச்சரியம்…! அடுத்த நாளிலிருந்து நைல் நதி ஒலித்தோடத் துவங்கிற்று. இன்று வரை வற்றாமலும் ஓடிக் கொண்டிருக்கின்றது. ( நூல்: தாரீகே திமிஷ்க், அல் அள்மா )
العلاء بن الحضرمي - السير على بحر الخليج العربي:

وقعت تلك الحادثة حينما بعث العلاء بن الحضرمي إلى البحرين فسار مع حوالي 4000 من الجند على البحر ، حيث قال أبو هريرة الذي كان معه: "فمشينا على الماء، فوالله فما ابتلت قدم ولا خف بعير ولا حافر دابة، وكان الجيش أربعة آلاف "،  كما روى الطبراني في المعجم الكبير :
وذكر ابن كثير في كتابه "البداية " تفاصيل عن الحادثة الخارقة:
" وقد بعث النبي صلى الله عليه و سلم العلاء بن الحضرمي إلى المنذر بن ساوي ملك البحرين ، ثم و لاه عليها أميراً حين افتتحها وأقره عليها الصديق ، ثم عمر بن الخطاب ، و لم يزل بها حتى عزله عمر بن الخطاب و ولاه البصرة  فلما كان في أثناء الطريق توفي و ذلك في سنة 21   ،و قد روى البيهقي عنه كرامات كثيرة منها أنه سار بجيشه على وجه البحر ما يصل إلى ركب خيولهم ، و قيل إنه ما بل أسافل نعال خيولهم ، و أمرهم كلهم فجعلوا يقولون : يا حليم يا عظيم ، و أنه كان في جيشه فاحتاجوا إلى ماء، فدعا الله فأمطرهم قدر كفايتهم ، و أنه لما دفن لم ير له أثر بالكلية ، و كان قد سأل الله ذلك " .
2- سعد بن أبي وقاص  - السير على نهر دجلة:

حدث الأمر الخارق عندما سار سعد بن أبي وقاص وحوالي 600 من الجند على نهر دجلة في معركة القادسية ضد الفرس وقد ورد ذكر تلك الحادثة في كتاب "البداية" لـ الحافظ ابن كثير في "فتح المدائن" :
" لما فتح سعد نهرشير و استقر بها، و ذلك في صفة لم يجد فيها أحدا و لا شيئا مما يغنم، بل قد تحولوا بكماهم إلى المدائن و ركبوا السفن و ضموا السفن إليهم، و لم يجد سعد رضي الله عنه شيئا من السفن و تعذر عليه تحصيل شيء منها بالكلية، و قد زادت دجلة زيادة عظيمة و اسود ماؤها، و رمت بالزبد من كثرة الماء بها، و أخبر سعد بأن كسرى يزدجر عازم على أخذ الأموال و الأمتعة من المدائن إلى حلوان، و انك إن لم تدركه قبل ثلاث فات عليك و تفارط الأمر. فخطب سعد المسلمين على شاطئ دجلة، فحمد الله و أثني عليه و قال إن عدوكم قد اعتصم منكم بهذا البحر فلا تخلصون اليهم معه، و هم يخلصون إليكم إذا شاؤا فينا و شونكم في سفنهم، و ليس وراءكم شييء تخافون أن تؤتوا منه، و قد رأيت أن تبادروا جهاد العدو بنياتكم قبل أن تحصركم الدنيا، ألا إني قد عزمت على قطع هذا البحر إليهم. فقالوا جميعا: عزم الله لنا و لك على الرشد فافعل. فعند ذلك ندب سعد الناس إلى العبور و يقول : من يبدأ فيحمي لنا الفراض - يعني ثغرة المخاضة من الناحية الأخرى - ليجوز الناس إليهم آمين، فانتدب عاصم بن عمرو و ذو البأس من الناس قريب من ستمائة، فأمرَ سعد عليهم عاصم ابن عمرو فوقفوا على حافة دجلة فقال عاصم : من ينتدب معي لنكون قبل الناس دخولا في هذا البحر فنحمي الفراض من الجانب الآخر ؟ فانتدب له ستون من الشجعان المذكرون - و الأعاجم و قوف صفوفا من الجانب الآخر - فتقدم رجل من المسلمين و قد أحجم الناس عن الخوض في دجلة، فقال : أتخافون من هذه النطفة ؟ ثم تلا قوله تعالى { وَ مَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إلاَ بِإذْنِ اللهِ كِتَابَاً مُؤَجَّلاً} ثم أقحم فرسه فيها و اقتحم الناس، و قد افترق الستون فرقتين أصحاب الخيل الذكور : و أصحاب الخيل الإناث. فلما رآهم الفرس يطفون على وجه الماء قالوا : ديوانا ديوانا. يقولون مجانين مجانين. ثم قالوا و الله ما تقاتلون إنسا بل تقاتلون جنا. ثم أرسلوا فرسانا منهم في الماء يلتقون أول المسلمين ليمنعوهم من الخروق من الماء، فأمر عاصم بن عمر و أصحابه أن يشرعوا لهم الرماح و يتوخوا الأعين، ففعلوا ذلك بالفرس فقلعوا عيون خيولهم، فرجعوا أمام المسلمين لا يملكون كف خيولهم حتى خرجوا من الماء. و اتبعهم عاصم و أصحابه فساقوا و راءهم حتى طردوهم عن الجانب الآخر، و وقفوا على حافة الدجلة من الجانب الآخر و نزل بقية أصحاب عاصم من الستمائة في دجلة فخاضوها حتى و صلوا إلى أصحابهم من الجانب الآخر فقاتلوا مع أصحابهم حتى نفوا الفرس عن ذلك الجانب و كانوا يسمون الكتيبة الأولى كتيبة الأهوال، و أميرها عاصم بن عمر، و الكتيبة الثانية الكتيبة الخرساء و أميرها القعقاع بن عمرو. و هذا كله و سعد و المسلمون ينظرون إلى ما يصنع هؤلاء الفرسان بالفرس، و سعد واقف على شاطيء دجلة. ثم نزل سعد ببقية الجيش، و ذلك حين نظروا إلى الجانب الآخر قد تحصن بمن حصل فيه من الفرسان المسلمين، و قد أمر سعد المسلمين عند دخول الماء أن يقولوا : نستعين بالله و نتوكل عليه، حسبنا الله و نعم الوكيل، و لا حول و لا قوة إلا بالله العلي العظيم. ثم اقتحم بفرسه دجله و اقتحم الناس لم يتخلف عنه أحد، فساروا فيها كأنما يسيرون على وجه الأرض حتى ملؤا ما بين الجانبين، فلا يري وجه الماء من الفرسان و الرجالة، و جعل الناس يتحدثون على وجه الماء كما يتحدثون على وجه الأرض، و ذلك لما حصل لهم من الطمأنينة و الأمن، و الوثوق بأمر الله و وعد ه و نصره و تأييده، و لأن أميرهم سعد بن أبي و قاص أحد العشرة المشهود لهم بالجنة، و قد توفي رسول الله صلى الله عليه و سلم و هو عنه راض، و دعا له. فقال : " اللهم أجب دعوته، و سدد رميته " و المقطوع به أن سعدا دعا لجيشه هذا في هذا اليوم بالسلامة و النصر، و قد رمى بهم في هذا اليم فسددهم الله و سلمهم، فلم يفقد من المسلمين رجل واحد غير أن رجلا واحدا يقال له غرقدة البارقي، زل عن فرس له شقراء، فأخذ القعقاع ابن عمرو بلجامها، و أخذ بيد الرجل حتى عدله على فرسه، و كان من الشجعان، فقال : عجز النساء أن يلدن مثل القعقاع بن عمرو ".
3- أبومسلم الخولاني - السير على نهر  دجلة:

أبو مسلم الخولاني وهو تابعي نقل عنه العديد من الكرامات  (النجاة من النار ، السير على الماء ، ومخاطبة غراب) وعندما غزا أرض الروم مروا بنهر وقال لأصحابه: "أجيزوا بسم الله "،  ومر بين أيديهم فمروا خلفه على الماء، فلم يبلغ من الدواب إلا إلى الركب، وكان يدعو ويقول: "اللهم أجزت بني إسرائيل البحر، وإنا عبادك في سبيلك فأجزنا هذا النهر "،  ثم قال: "اعبروا بسم الله ".
وقد ذكر الإمام النووي العديد من " كرامات "أبي مسلم الخولاني ومنها ما رواه الإمام أحمد في كتاب "الزهد" أن أبا مسلم الخولاني مر بنهر دجلة وهي ترمي الخشب من برها فمشى على الماء ثم التفت إلى أصحابه فقال هل تفقدون من متاعكم شيئاً فندعو الله عز وجل ؟ قال: ورواه الإمام أحمد من طريق آخر وفيه أن أبا مسلم وقف على دجلة ثم حمد الله تعالى وأثنى عليه ثم ذكر آلاءه ونعماءه وذكر سير بني إسرائيل في البحر ثم نهز دابته فانطلقت تخوض في دجلة واتبعها الناس حتى قطعها الناس إلى الجانب الآخر.
وقال ابن كثير:
" و قد ذكر الحافظ الكبير أبو القاسم بن عساكر، في ترجمة أبي عبد الله بن أيوب الخولاني هذه القصة بأبسط من هذه من طريق بقية بن الوليد : حدثني محمد بن زياد عن أبي مسلم الخولاني أنه كان إذا غزا أرض الروم فمروا بنهر قال : أجيزوا بسم الله قال : و يمر بين أيديهم فيمرون على الماء فما يبلغ من الدواب إلا إلى الركب، أو في بعض ذلك، أو قريبا من ذلك، قال : و إذا جازوا قال للناس : هل ذهب لكم شيء ؟ من ذهب له شيء فأنا ضامن، قال : فألقى مخلاة عمداً، فلما جاوزوا قال الرجل : مخلاتي وقعت في النهر، قال له : اتبعني، فإذا المخلاة قد تعلقت ببعض أعواد النهر، فقال : خذها ".
و قد رواه ابن عساكر من طريق أخري عن عبد الكريم بن رشيد عن حميد بن هلال العدوي : حدثني ابن عمي أخي أبي قال : خرجت مع أبي مسلم في جيش فأتينا على نهر عجاج منكر، فقلنا لأهل القرية : أين المخاضة ؟ فقالوا: ما كانت ههنا مخاضة و لكن المخاضة أسفل منكم على ليلتين، فقال أبو مسلم: اللهم أجزت بني إسرائيل البحر، و إنا عبيدك و في سبيلك، فأجزنا هذا النهر اليوم، ثم قال : اعبروا بسم الله قال ابن عمي : و أنا على فرس فقلت : لأدفعنه أول الناس خلف فرسه، قال : فواللَّه ما بلغ الماء بطون الخيل حتى عبر الناس كلهم، ثم وقف و قال : يا معشر المسلمين،هل ذهب لأحد منكم شيء فأدعو الله تعالى ي

காதிஸிய்யா யுத்தம் பாரசீகத்தை நோக்கி உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற யுத்தமாகும். இஸ்லாமிய வரலாற்றில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த யுத்தமும் கூட. வரலாற்றாசிரியர்கள் இரண்டாவது பத்ர் என்று குறிப்பிடுவதும் உண்டு.

பாரசீகத்தை நோக்கி உமர் (ரலி) அவர்கள் சிறிய சிறிய இடைவெளியில் படைப்பிரிவை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

ஒரு படைபிரிவுக்கு அபூ உபைதா (ரலி) தளபதி, இன்னொரு படைப்பிரிவுக்கு காலித் இப்னு வலீத் (ரலி) தளபதி, இன்னொரு படைப்பிரிவுக்கு ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) தளபதி, இன்னுமொரு படைப்பிரிவுக்கு முகர்ரின் (ரலி) தளபதி.

இப்படியாக ஸஅத் (ரலி) அவர்கள் தலைமையில் பாரசீகம் சென்ற படைப்பிரிவு வெள்ள நீரால் சூழப்பட்ட நதியைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால், நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல எந்த வழியும் இல்லாத போது பிஸ்மில்லாஹ் என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி தளபதி ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) ஒட்டு மொத்த படைப்பிரிவையும் தண்ணீரின் மீது நடத்திக் கூட்டிப் போனார். அந்த படைப்பிரிவில் வீரராக பங்கு கொண்ட அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்ய பயன்படுத்தும் என் கூஜா கீழே விழுந்தது நான் வாகனத்தில் இருந்து இறங்கி எடுத்தேன். நான் நீரின் மீது தான் நிற்கிறோம் என்கிற எந்த உணர்வையும் பெறவில்லை. மாறாக, ஏதோ ஒரு பாதையில் பயணிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்றார்கள். ( நூல்:

இதே போன்று அபூமுஸ்லிமுல் கவ்லானி (ரஹ்) அவர்கள் ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அழைத்துச் செல்கிற போது நதி குறிக்கிட்ட போது “பிஸ்மில்லாஹ் கூறி பனூ இஸ்ரவேலர்களை நதியைப் பிளந்து அழைத்துச் சென்றவனே! இதோ உன்னுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்ய நாங்கள் போருக்கு சென்று கொண்டிருக்கின்றோம். எங்களையும் நீ இந்த நீரின் மீது அழைத்துச் செல்” என்று துஆச் செய்து நீரின் மீது நடந்து சென்று படைப்பிரிவை அக்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.

இதே போன்றே அலாஅல் ஹள்ரமீ (ரலி) அவர்களும் நான்காயிரம் படை வீரர்களோடு பிஸ்மில்லாஹ் என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி நதியைக் கடந்து சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். ( நூல்: இப்னு கஸீர், தாரீகே திமிஷ்க், பிதாயா வன் நிஹாயா )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய ஈமானை வலிமையாக ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!