Thursday 12 September 2019

தற்கொலை.. தீர்வல்ல!


தற்கொலை.. தீர்வல்ல!



உலகில் சாமானிய மனிதர்கள் முதல் சாதனை நிகழ்த்தியவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியல் நீளமானது.

எனவே தான்தற்கொலை என்பது தனிப்பட்ட விஷயம் புரிந்து கொள்ளவே முடியாததுஎன்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர், கே. ரெட்ஃபீல்ட் ஜேமிஸன்.

தற்கொலை எண்ணங்கள் உருவாகுவதற்கான காரணங்கள் நபர்களைப் பொறுத்து வேறுபட்டாலும், நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாகவே தற்கொலை முடிவுகள் நம்பப்படுகின்றனஎன்கிறது உளவியல் ஆய்வுகள்.

வேலைபளுவால் ஏற்படுகிற அழுத்தம் ஒருவரின் தற்கொலைக்கு காரணமாக அமைகிறது என்றால், வேலையில்லாத விரக்தி இன்னொருவரின் தற்கொலைக்கு காரணமாக அமைவதை பார்க்க முடிகின்றது.

தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியல் எவ்வளவு நீண்டதோ, அது போன்றே தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களின் பட்டியலும் நீண்டது.

மன அழுத்தம், குற்ற உணர்வு, விபத்து, விவாகரத்து, உடல் நலக்குறைவு, பாலியல் வன்புணர்வு, நிதிச் சிக்கல்கள், தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, வீட்டில் உள்ளவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டி பேசுவது, அறிவுரை கூறுவது உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரை தற்கொலைக்கு தூண்டுவதாக கருதப்படுகின்றன.

. நாவின் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பு (IASP) ஆகியவை வெளியிட்ட (2018 –ஆம் ஆண்டிற்கான) புள்ளி விபரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இது வினாடி கணக்கில் எடுத்துக் கொண்டால் 40 நாற்பது வினாடிக்கு ஒருவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றார் என்கிறது.

15 முதல் 30 வயதிற்குள்ளானவர்களே தற்கொலையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர் என்கிறது அந்த புள்ளி விவரம்.

நடப்பு ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் மரணங்களுக்கான முக்கிய காரணங்களில், தற்கொலை 15-ம் இடத்தில் இருக்கிறது. மொத்த மனித உயிரிழப்புகளில் 1.4 சதவீதம், தற்கொலைதான்!

மக்கள்தொகை அடிப்படையில் தற்கொலைவீதம் ஒரு லட்சம் பேருக்கு 11.4 என்கிற அளவில் உள்ளது. ஆண், பெண் எனத் தனித்தனியாகப் பார்த்தால், ஒரு லட்சம் ஆண்களுக்கு 15 ஆகவும் ஒரு லட்சம் பெண்களுக்கு 8 ஆகவும் தற்கொலைவீதம் உள்ளது.

உலகில் நடக்கும் தற்கொலைகளை தடுக்கும் முகமாக செப்டம்பர் 10 –ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாக . நா அறிவித்து ஆண்டு தோறும் மனித உயிர், உயிர்வாழ்வதன் அவசியம் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏனெனில், தற்கொலை என்பது ஒற்றை இழப்பு அல்ல. ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அவரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறது ஆய்வறிக்கைகள்.

ஒரு தற்கொலையில் ஒருவரே இறந்துபோகிறார் என்றாலும், ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் 25 பேர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, உயிர் தப்புகிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

மேலும், தற்கொலை செய்துகொள்ளும் ஒருவருடன் அந்தத் துயரம் முடிந்துவிடுவதில்லை; அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

2019 - ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு தற்கொலையால் 135 பேர் இப்படிப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உலக அளவில் மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வோர் ஆண்டும் மொத்தம் 10.8 கோடி பேர் தற்கொலை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2013ஆம் ஆண்டில் கூடிய உலக சுகாதாரப் பேரவையில், உலக சுகாதார நிறுவனமானது மனநலச் செயல்பாட்டுத் திட்டத்தை முன்வைத்தது.

அதில், தற்கொலைத்தடுப்பை முக்கியப் பணியாக முன்னிறுத்தியது. அந்தத் திட்டத்தின்படி, உலக சுகாதாரப் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டுக்குள் தற்கொலைகளின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வளவுதான் திட்டங்களும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சொல்லிக் கொள்ளும்படியாக முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

அரசு அளவில், மருத்துவத்துறை அளவில், சமூக அளவில், தனிநபர் அளவில் இன்னும் கூடுதலான கவனமும் அக்கறையும் செலுத்தப்படவேண்டும் என்பது தான் தற்கொலை தொடர்பான விவகாரங்களின் நமக்கு கிடைத்திருக்கும் சமிக்ஞை ஆகும்.

பிற உயிர்களைக் கூட எளிதில் கொன்று விடத் தயங்கும் மனித சமூகம் தன்னுடைய உயிரை அவ்வளவு எளிதாக எடுத்து விட ஏன் தயங்குவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

தற்கொலைக்கு எதிரான உலகச் சட்டம்...

இந்திய தண்டனை சட்டத்தின் படி (309) தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குரிய குற்றம்' நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் படி, ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையும், அதிகாரமும் அவருக்கு வழங்கப்படுவதில்லை. அதனால் தற்கொலை முயற்சி என்பது நம் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம். அதன்படி ஓராண்டு வரை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது சட்டம்

ஆனால், பஞ்சாப்பில் தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றில்,  'தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கச் சொல்லும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 நம் அரசியலமைப்புக்கு எதிரானது' என சொன்னது நீதிமன்றம். இது உச்ச நீதிமன்றத்தால் ஏற்கபடவில்லை.

இதன் அடுத்தக்கட்டமாக 'தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்படமாட்டாது'என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது. தற்கொலை முயற்சிக்கு சிறைத் தண்டனை விதிக்கும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 இயற்கைக்கு பொருந்தாத சட்டம். அந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

"பொதுவாக மன வேதனையில் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு மேலும் தண்டனை விதிப்பது என்பது சரியாகாது. அவர்களின் துயரை துடைக்க வேண்டுமே தவிர, தண்டனை தரக்கூடாது. எனவே இது பொருந்தாத சட்டம். இதை நீக்க வேண்டும்" என தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

"ஏற்கனவே தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலை முயற்சிகளுக்கு தண்டனை இல்லை என்றால் அது தற்கொலைகளை அதிகரிக்குமே என்று சிலர் கேட்கக்கூடும். நிச்சயம் இல்லை. ஏனென்றால் தண்டனை ஒருவரை தற்கொலை முயற்சியில் இருந்து நிச்சயம் தடுக்காது. ஒருவர் மனரீதியாக சிக்கலுக்கு உள்ளாவது தான் தற்கொலை முயற்சிகளுக்கு காரணம்.

தன் உயிரையே இழக்க துணிந்து விட்டவர், நிச்சயம் தண்டனைக்கு பயந்து தற்கொலை முயற்சியை தள்ளிப்போட வாய்ப்பில்லை. எனவே இந்த சட்டம் நீக்கப்படுவது வரவேற்கத்தக்கது," என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட கமிஷனே கடந்த 2008ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவை நீக்க பரிந்துரைத்தது. இந்த கோரிக்கைகளும், பரிந்துரைகளும்தான் இப்போது சட்டப்பிரிவு 309 நீக்கப்பட உள்ளதற்கு முக்கிய காரணம். மத்திய அரசின் இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏதாவது ஒரு காரணத்திற்காக தற்கொலை முயற்சி செய்து கொள்கிறார்கள். இதில் உயிர் பிழைப்பவர்கள் மீது சட்டப்பிரிவு 309ன்படி ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். தற்கொலைக்கு முயற்சி செய்துகொள்ள முயற்சிப்பது குற்றமல்ல என இந்திய தண்டனை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர உள்ளது.

தற்கொலை முயற்சி குற்றமல்ல, அதற்கான சட்டப்பிரிவு 309-ஐ நீக்கிவிட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான கருத்துக்களை தெரிவிக்குமாறு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இக்கருத்திற்கு 18 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்படியும் ஒரு நாடு...

சுவிட்சர்லாந்து நாட்டில்தான் தற்கொலை சுற்றுலா எனும் முறை உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகருக்கு சென்று தற்கொலை செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். அங்கு தற்கொலை கிளினிக் என ஒன்று உண்டு. அங்கு சென்று நீங்கள் தற்கொலை செய்து கொள்ளலாம். இதுபோன்ற தற்கொலைகளை அந்நாட்டின் சட்டம் தடுப்பதில்லை. இதைத்தான் தற்கொலை சுற்றுலா என அழைக்கிறார்கள்.

தற்கொலை பற்றி இஸ்லாம்

இஸ்லாம் தற்கொலை பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்பாக பின் வரும் இந்த ஆய்வை நாம் உலக சமூகத்தின் முன் சமர்ப்பிக்கின்றோம்.

கேரளாவில் தற்கொலை செய்பவர்கள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், படித்தவன் படிக்காதவன் என்ற அடிப்படையிலும் தற்கொலை செய்வோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் முஸ்லிம்கள் மட்டுமே மிகக் குறைந்த விகிதத்தில் இருந்தனர்.

இதற்கான காரணத்தை அந்த ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தபோது, எந்தத் துன்பம் ஏற்பட்டாலும், "இறைவனின் நாட்டம்" என்று கூறி சாதாரணமாக முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வதால் தற்கொலைக்கு அவர்கள் தூண்டப்படுவதில்லை என்று கண்டறிந்தனர்.

உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான அர்த்தத்தை இஸ்லாம் சொல்வது போன்று உலகில் வேறெந்த இஸங்களும், மதங்களும் சொன்னதில்லை.

மனித வாழ்க்கையின் கோட்பாடுகளை இஸ்லாம் விவரித்தது போன்று உலகின் வேறெந்த சமயங்களும் சொன்னதில்லை.

இங்கே நாம் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கானவர்களின் முடிவுகளை பற்றி விவாதிக்கப்போவதில்லை மாறாக, தற்கொலை முடிவுகளை நோக்கி பயணிப்பவர்களின் மனோநிலைக்கு மாற்று குறித்தே விளக்கமாக சொல்லப்போகிறோம்.

வாழ்க்கையின் அடிப்படை கோட்பாடுகள் என்ன?

1.   அல்லாஹ் எந்த ஒரு மனிதனையும் கொடுமைப்படுத்துவதில்லை

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே! அவர் சம்பாதித்த தீமையின் பலனும் அவருக்கே!”                    ( அல்குர்ஆன்: 2:286 )

2.   அல்லாஹ் நிர்ணயித்ததைத் தவிர வேறெதும் அணுகுவதில்லை

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ()

நன்மையோ, தீமையோ அல்லாஹ் எங்களுக்கு விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அணுகாது. அவன் தான் எங்களது பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டும்.”

3.   சோதனைகள் எல்லை தாண்டுவதில்லை...

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()

மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்                                          ( அல்குர்ஆன்: 2:155 )

மனித சக்திக்கு மீறிய சோதனைகளை இறைவன் தருவதில்லை, அந்த சோதனைகள் எவையுமே அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி எதையும் விளைவிக்கப் போவதில்லை, அப்படியே சோதனைகள் வந்தாலும் அதற்கென உள்ள எல்லைகளில் தான் சோதனை உண்டாகும் என்பதை மேற்கூரிய இறைவசனத்தில் அல்லாஹ் உணர்த்துகின்றான்.

இம்மூன்றும் தான் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையின் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களாகும். இவைகளை முற்றிலுமாக நம்பி வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் போது அவன் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விஷயத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ () أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ()

தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போதுநிச்சயமாக, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!”                  ( அல்குர்ஆன்: 2:156,157 )

அல்லாஹ் கூறுகின்ற இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளைப் பின்பற்றுகிற ஒரு மனிதனின் வாழ்க்கையே நிச்சயம் நிம்மதியும், அமைதியும் தவழ்வதாய் அமைந்திருக்கும்.

யதார்த்த வாழ்க்கைக்குள் பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும்..

1.   விதியைக் குறித்தான புரிதல்

مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ (22) لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (23)

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தி யுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57: 22, 23)

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا شُعْبَةُ أَنْبَأَنِى سُلَيْمَانُ الأَعْمَشُ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ « إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِى بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ، ثُمَّ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعٍ بِرِزْقِهِ ، وَأَجَلِهِ ، وَشَقِىٌّ ، أَوْ سَعِيدٌ ،

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் கருவாக உருவாக்கம் பெறுகின்றார். பிறகு அதைப் போன்றே நாற்பது நாட்கள் கரு ஒரு கட்டியாக மாற்றம் பெறுகின்றார். பிறகு, அதைப் போன்றே நாற்பது நாட்களில் ஒரு சதைப் பிண்டமாக மாற்றம் பெறுகின்றார்.

பிறகு, கருவறையினுள் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகின்றார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், ஆயுட்காலம், அவன் துர்பாக்கியசாலியா? அல்லது நற்பாக்கியசாலியா? ஆகியவைகளை அவர் எழுதுகின்றார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்….. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِى بَكْرِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « وَكَّلَ اللَّهُ بِالرَّحِمِ مَلَكًا فَيَقُولُ أَىْ رَبِّ نُطْفَةٌ ، أَىْ رَبِّ عَلَقَةٌ ، أَىْ رَبِّ مُضْغَةٌ . فَإِذَا أَرَادَ اللَّهُ أَنْ يَقْضِىَ خَلْقَهَا قَالَ أَىْ رَبِّ ذَكَرٌ أَمْ أُنْثَى أَشَقِىٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ فَمَا الأَجَلُ فَيُكْتَبُ كَذَلِكَ فِى بَطْنِ أُمِّهِ » .

அல்லாஹ், தாயின் கருவறையில் ஒரு வானவரை நியமிக்கின்றான். அவர்இறைவா! இது ஒரு துளி விந்து. இறைவா! இது பற்றித் தொங்கும் கருக்கட்டி, இறைவா! இது சதைத்துண்டுஎன்று கூறிக்கொண்டிருப்பார்.

அதன் படைப்பை அல்லாஹ் முழுமையாக்கிட விரும்பும் போதுஇறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? இது துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? இதன் வாழ்வாதாரம் எவ்வளவு? இதன் ஆயுள் எவ்வளவு?” என்று வானவர் கேட்பார்.

அவ்வாறே இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு அது தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எழுதப்படுகிறதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                         ( நூல்: புகாரி, கிதாபுல் கத்ர் )

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ ()

வாழ்வாதாரம் - ரிஸ்க் வழங்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும், அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளன”.                                                    ( அல்குர்ஆன்: 11: 6 )

2.      வாழ்வாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்தான புரிதல்

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ ()

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க்வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடியவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும், இவர்கள் உலக வாழ்வில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மன நிறைவு அடைகின்றார்கள். ஆனால், மறுமையைக் கவனிக்கும் போது இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை”. ( அல்குர்ஆன்: 13: 26 )

إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ ()

திண்ணமாக, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் வாழ்வாதாரத்தை கணக்கின்றி வழங்குகின்றான்”.                                ( அல்குர்ஆன்: 3: 37 )

وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ

மேலும், (சிந்தித்துப் பாருங்கள்!) அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரை விட ரிஸ்க்வாழ்வாதாரத்தில் சிறப்பு அளித்துள்ளான்”. ( அல்குர்ஆன்: 16:71 )

وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَا يَشَاءُ إِنَّهُ بِعِبَادِهِ خَبِيرٌ بَصِيرٌ ()

அல்லாஹ் தன் அடிமைகள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் போக்கை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே, அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் குறித்து நன்கு தெரிந்தவனாகவும், அவர்களைக் கண்காணிப்ப்வனாகவும் இருக்கின்றான்”.
                                                      ( அல்குர்ஆன்: 42: 25 )
3.   சோதனை குறித்தான புரிதல்

الم () أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ () وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ ()

அலிஃப், லாம், மீம். “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்என்று மட்டும் கூறுவதனால் விட்டுவிடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படமாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக்கொண்டார்களா, என்ன?”

உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்து இருக்கின்றோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை!”         ( அல்குர்ஆன்: 29: 1-3 )

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ ()

உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளை பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றான்.                                        ( அல்குர்ஆன்: 42: 30 )

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()

மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்                                          ( அல்குர்ஆன்: 2:155 )

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ ()

ஒவ்வோர் உயிரினமும் மரணத்தை சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டே இருப்போம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”.      ( அல்குர்ஆன்: 21: 35 )

4.   வெற்றி தோல்வியை சகஜமாக பார்க்கும் பார்வை வேண்டும்..

உஹத் யுத்தம் முஸ்லிம் உம்மத்திற்கு எல்லா காலத்திற்கும் தேவையான பல்வேறு பாடங்களையும், படிப்பினைகளையும் மறைத்து வைத்திருக்கிற மாபெரும் புதையலாகும்.

ஹிஜ்ரி 3 –ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 15 –இல் சனிக்கிழமை அன்று நடைபெற்ற யுத்தமாகும்.

ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டு விட்ட வெற்றி, நபித்தோழர்களின் சிலரின் செயல்பாடுகளால் எதிரிகளின் வசம் மாறிப்போனது.

பத்ரில் எதிரிகள் அடைந்திருந்த அதே உயிரிழப்பு இப்போது முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஏற்பட்டிருந்தது.

மாபெரும் மாண்பாளர்களாய் அறியப்பட்டிருந்த ஹம்ஸா (ரலி), முஸ்அப் (ரலி), அபுத்தஹ்தாஹ் (ரலி) ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) போன்ற முக்கிய நபித்தோழர்கள் உட்பட 70 பேர் வீர மரணம் அடைந்திருந்தனர்.

முஸ்லிம்கள் தடுமாறிப்போய், செய்வதறியாது திகைத்து நின்ற தருணமும் கூட.

அல்லாஹ்விற்காக போராடுகிற நாம் ஏன் தோற்றுப் போனோம்? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்படும்? என்பது போன்ற கேள்விகள் அவர்களின் ஆழ்மனதை துளைத்தெடுத்தன.

அல்லாஹ் அவர்களின் தோல்விக்கான காரணங்களையும், தோல்வியிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும், அவர்களின் மனதை சாந்தப்படுத்துகிற ஆறுதல்களையும் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 139 முதல் 179 வரை தொடர்ச்சியான இறைவசனங்களின் மூலம் தெளிவு படுத்தினான்.

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ () إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ()
அல்லாஹ் கூறினான்: “நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.

இப்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்.

(உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்றுபகர்கின்றவர்களை உங்களிலிருந்து வேறுபடுவதற்காகத்தான்!

5.இன்ப, துன்பங்களை சமமாக பார்க்கும் புரிதல் வேண்டும்

وعن أبي يحيى صهيب بن سنانٍ - رضي الله عنه - ، قَالَ : قَالَ رسولُ الله - صلى الله عليه وسلم - :
(( عَجَباً لأمْرِ المُؤمنِ إنَّ أمْرَهُ كُلَّهُ لَهُ خيرٌ ولَيسَ ذلِكَ لأَحَدٍ إلاَّ للمُؤْمِن : إنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكانَ خَيراً لَهُ ، وإنْ أصَابَتْهُ ضرَاءُ صَبَرَ فَكانَ خَيْراً لَهُ )) رواه مسلم .

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளனின் நிலை குறித்து நான் வியப்படைகின்றேன். அவனுடைய அனைத்துக் காரியங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைகின்றது.

இந்த நிலை ஓர் இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறெவருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை!

அவனுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிற நிலை வந்தால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது!

அவனுக்கு துக்கமும், கஷ்டமும் தருகிற நிலை வந்தால் பொறுமையை மேற் கொள்கின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றது!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.            ( நூல்: முஸ்லிம், ரியாளுஸ் ஸாலிஹீன் )

6. தவறுகளை கண்டறிந்து அவைகளை திருத்த வேண்டும்


أَوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّى هَذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ()

உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும் போது இது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கின்றீர்கள். இது போன்ற இருமடங்கு துன்பம் உங்கள் கரங்களால் எதிரிகளுக்கு (பத்ரு போரில்) ஏற்பட்டிருந்ததே!

நபியே! நீர் அவர்களுக்கு கூறிவிடும்! இத்துன்பம் உங்களால் தான் வந்தது. திண்ணமாக! அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்”.   ( அல்குர்ஆன்: 3: 165 )

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ () ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَنْزَلَ جُنُودًا لَمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِينَ كَفَرُوا وَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ ()

இதற்கு முன்னர் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். இப்போது, ஹுனைன் போர் நடைபெற்ற நாளிலும் அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்.

அன்று உங்களின் படையினரின் எண்ணிக்கை உங்களை இறுமாப்பில் ஆழ்த்தி இருந்தது. ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனும் அளிக்கவில்லை. மேலும், பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் உங்களுக்கு குறுகிப் போய் விட்டது. பின்னர், நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.

பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வையில் தென்படாத படைகளை இறக்கி இறைமறுப்பாளர்களைத் தண்டித்தான்”.      ( அல்குர்ஆன்: 9: 25 )

ஹுனைன் யுத்தத்தில் எதிரிகளை விட இருமடங்கு எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருந்தனர். அது முஸ்லிம்களிடம் ஒரு வித தற்பெருமையை ஏற்படுத்தியது.

ஆதலால், அல்லாஹ் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு தோல்வியைக் கொடுத்து, இறுதியில் முஸ்லிம்களுக்கு வெற்றியை நல்கினான். இதைத் தான் அல்லாஹ் மேற்கூறிய இறைவசனத்தில் குறிப்பிடுகின்றான்.

முஸ்லிம்களிடம் ஏற்பட்ட சிறு தவறான நடத்தை அல்லாஹ்வின் உதவி தாமதமாக காரணமாக அமைந்து விட்டதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

7. மனவலிமை வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பலகீனமான இறை நம்பிக்கையாளரை விட மனதிடமும், பலமும் நிறைந்த இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு அதிக விருப்பமானவரும் ஆவார்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                            ( நூல்: திர்மிதீ )

8. பொறுமை காத்து, பிரார்த்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும்...

الإمام أحمد يروى حديثًا عن أم سلمة رضى الله عنها قالت: أتانى أبو سلمة يومًا من عند رسول الله صلى الله عليه وسلم فقال: "لقد سمعت من رسول الله صلى الله عليه وسلم قولاً سُرِرْت به، قال: "لا يصيب أحدًا من المسلمين مصيبة فيسترجع عند مصيبته ثم يقول: اللهم أجرنى فى مصيبتى واخلف لى خيرًا منها إلا فعل ذلك به"، قالت أم سلمة: فحفظت ذلك منه، فلما تُوفِّى أبو سلمة استرجعت، وقلت: "اللهم أجرنى فى مصيبتى واخلف لى خيرًا منها"، ثم رجعت إلى نفسى، فقلت: من أين لى خير من أبى سلمة؟ فلما انقضت عدتى استأذن علىّ رسول الله صلى الله عليه وسلم وأنا أدبغ أهابًا لى، فغسلت يدى من القرظ وأذنت له، فوضعت له وسادة أدم حشوها ليف، فقعد عليها فخطبنى إلى نفسى، فلما فرغ من مقالته، قلت: يا رسول الله ما بى أن لا يكون بك الرغبة، ولكنى امرأة فىّ غيرة شديدة، فأخاف أن ترى منى شيئًا يعذبنى الله به، وأنا امرأة قد دخلت فى السن وأنا ذات عيال، فقال صلى الله عليه وسلم: "أما ما ذكرت من الغيرة فسوف يذهبها الله عز وجل عنك، وأما ما ذكرت من العيال، فإنما عيالك عيالى"، قالت: فقد سلمت لرسول الله صلى الله عليه وسلم، فقالت أم سلمة بعد: أبدلنى الله بأبى سلمة خيرًا منه؛ رسول الله صلى الله عليه وسلم.

ஒரு இழப்பு ஏற்படும் போது அதற்காக பொறுத்திருந்து, துஆ செய்து வந்தால் அவனுக்கு ஏற்பட்ட இழப்பை சரி கட்டி அல்லாஹ் வேறொரு சிறந்த பரிகாரத்தையும் வழங்கி விடுகின்றான்.

சங்கடம் ஏற்படும் போது ஒருவர், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா (பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சங்கடத்தில் எனக்குப் பகரமாக ஆக்குவாயாக!) என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்த போது, "முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்? நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார்’ (என எண்ணினேன்)

பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு ரசூல் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 1525)

9. முடிவு எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்..

حديث مرفوع) نا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ ، نا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعَضْبَاءُ وَكَانَتْ لا تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قُعُودٍ فَسَبَقَهَا فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَلَمَّا رَأَى مَا فِي وُجُوهِهِمْ قَالُوا : يَا رَسُولَ اللَّهِ سُبِقَتِ الْعَضْبَاءُ فَقَالَ
 " إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لا يَرْفَعَ مِنَ الدُّنْيَا شَيْئًا إِلا وَضَعَهُ "

அள்பாஃ இது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஒட்டகைகளில் ஒன்று. நபி {ஸல்} அவர்கள் தங்களது இருதிப் பேருரையை இதன் மீது அமர்ந்து தான் ஆற்றினார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.

அன்றைய அரபுலகத்தின் அனைத்துப் பந்தயங்களிலும் பங்கு கொண்டு முதல் இடத்தை தட்டிச் செல்லும் செல்வாக்கும் துடிப்பும் நிறைந்த ஒட்டகம் அது.

ஒரு சந்தர்ப்பத்தில்  கிராமவாசி ஒருவரின் ஒட்டகையிடம் தோற்றுப் போய் இரண்டாமிடத்திற்கு வந்தது அள்பாஃ, நபித்தோழர்களால் இதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உணர்ச்சிவசப்பட்டார்கள் நபித்தோழர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களின் முகங்களில் காணப்பட்ட கவலை ரேகைகளை அறிந்து கொண்டு, என்ன? எல்லோரும் முகம் வாடியவர்களாக இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒரு கிராமவாசியின் ஒட்டகம் தங்களது அள்பாஃவை முந்திவிட்டது. அது தான் தங்களின் முக வாட்டத்திற்கு காரணம் என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்கள்.

அப்போது, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தோழர்களை நோக்கிஉலகில் தோற்றுப் போகிற எந்த ஒன்றையும் அல்லாஹ் உயரிய வெற்றிக்கு சொந்தமானதாக ஆக்காமல் இருப்பதில்லை. இது அல்லாஹ் தன் மீது விதியாக்கிக் கொண்ட ஒன்றாகும். இப்போது அந்த கிராமவாசியின் ஒட்டகம் வெற்றி பெரும் முறையாகும்.” என்று பதில் கூறினார்கள்.

வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை ஒற்றை வார்த்தையில் சொன்னார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

10. இறைநம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை வேண்டும்…

மாநபி {ஸல்} அவர்களை விட இந்த உலகில் தொடர் தோல்விகளைச் சந்தித்தவர் எவருமில்லை.

ஆனால், மாநபி {ஸல்} அவர்களிடம் இருந்த இறைநம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை அசாதாரணமான பல வெற்றிகளை குவிக்க காரணமாய் அமைந்தது.

தோல்வியிலிருந்து மீண்டெழ விரும்புபவர்களுக்கான முன்மாதிரி மாநபி {ஸல்} அவர்களிடம் இருக்கிறது.

அஹ்ஸாப் யுத்தம், 10000 பேர் எதிரிகள், பன்னாட்டுப்படை, அதுவும் மதீனாவை நோக்கி அமைந்திருந்தது.

படையின் தாக்குதல்களிலிருந்து மதீனாவையும், மக்களையும் காத்திட பத்து, பத்து பேர் கொண்ட குழுவாக சேர்ந்து இரவு பகலாக, பசி பட்டினியோடு அகழ் வெட்டிக் கொண்டிருக்கும் போது மாநபி {ஸல்} அவர்களின் புனித வதனங்களில் இருந்து உதிர்ந்த வார்த்தைகளே மாநபி {ஸல்} அவர்களின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரும் சான்றாகும்.

இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் மண் சுமந்தார்கள்.  உடைக்க முடியாத பாறை தென்பட்ட போது அதை உடைத்தும் தந்தார்கள். நாங்கள் அகழ்ப்போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம்.  அப்போது கெட்டியான பாறாங்கல் ஒன்று வெளிப்பட்டது. 

(எவ்வளவோ முயன்றும் எங்களால் அதை உடைக்க முடியவில்லை.  உடனே இது பற்றித் தெரிவிக்க)  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களிடம் சென்று இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகின்றதுஎன்று கூறினோம்.  அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள்நான் இறங்கிப் பார்க்கிறேன்என்று கூறி விட்டு எழுந்தார்கள். 

அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது.  (ஏனெனில்) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம்.  பிறகு இறைத்தூதர்  அவர்கள் குத்துக் கோடாரி   எடுத்து பாறை மீது அடித்தார்கள்.  அது குறுமலைகளாக மாறியது.

அகழ் வெட்டும் போது இன்னொரு சம்பவமும் நடந்தது.  முஹாஜிரீன்கள் (அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்) மற்றும் அன்சார்கள் (சஅத்பின் உபாதா) கலந்திருந்த ஒரு குழுவின் ஸல்மான் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  பெரும் பாறையொன்று எதிர்ப்பட்டது.  தகர்க்கவே இயலவில்லை. 

கோடாரிகளின் கூர் மழுங்கிப் போனது தான் மிச்சம்.  பாறையைச் சுற்றிக் கொண்டு அகழை வெட்டிக் கொண்டு செல்லவும் மனமில்லை.  இறைத்தூதர் வகுத்துத் தந்த பாதை ஆயிற்றே!  எனவே, ஓடோடிச் சென்று இறைத்தூதரையே உதவிக்கு அழைத்து வந்தனர். 

அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வந்து பார்த்தார்கள்.  கோடாரியை கையில் வாங்கி (உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மை….. முழுமையாக உள்ளது”) என்று கூறிக் கொண்டே ஒரே போடாய் போட்டார்கள். 

மின்னலென ஓர் ஒளிக்கீற்று தெறித்தது.  பாறையின் கால்பாகம் பிளந்து போனது.  (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் உள்ளது”) என்று கூறியவாறு மீண்டும் அடித்தார்கள்.  இன்னொரு பாகம் கழன்று போனது.  பிறகு மூன்றாம் முறையாக (“உம்முடைய இறை வனின் வாக்கில் உண்மையும் நீதியும் உள்ளன.  அவனுடைய வார்த்தை களை மாற்றக் கூடியவர் யாரும் இல்லை!”) என்று கூறினார்கள்.  பாறை முழுவதுமாய் தூள் தூளானது. 

பிறகு, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹு) இறைத்தூதரை அணுகி, ‘அண்ணலே! தாங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் ஓர் ஒளிக் கீற்று வெளிப்பட்டதே! என்ன அது?’ என்று கேட்டார்.  அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,

ஸல்மானே!நீங்கள் கவனிக்கவில்லையா?  முதல் ஒளிக் கீற்றில் யமன், மாளிகைகளை நான் பார்த்தேன்.  (அவற்றை முஸ்லிம்கள் வெற்றி கொள்வர்!)  இரண்டாவது ஒளிக்கீற்றில் ரோமானியர்களின் சிவப்பு அரண்மனையைக் கண்டேன்.  (அவற்றையும் வெற்றி கொள்வர்!)  மூன்றாவது ஒளிக்கீற்றில் மதாயின் (கிஸ்ராவின்) மாளிகைகளைக் கண்டேன்!என்று கூறினார்கள்.  என்று ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்.  புஃகாரி கிதாபுல் மகாஸி.)

இறைவனுடைய, இறைத் தூதருடைய வாக்குறுதியாகும் இது!  இவை உண்மையென காலம் நிரூபித்தது.

வாழ்ந்து காட்டும், வாழ்வின் எல்லா நிலைகளையும் துணிவோடு எதிர் கொள்ளும் ஒப்பற்ற ஓர் மனித சமூகத்தை உருவாக்குவோம்.

தற்கொலையை நாடாத சமூகம் தழைக்க பாடுபடுவோம்!!!

வஸ்ஸலாம்!!!